Wednesday, July 14, 2010

வேனுமா கம்ப்யூ டிரிக்ஸ் -1


           பொதுவா நம்முடைய கம்ப்யூட்டரில டெஸ்க்டாப்பில முதல்லயோ இல்ல ரெண்டாவதோ ஒரு ஹோல்டர் இருக்கும். பேரு மை கம்ப்யூட்டர். அது என் கிட்ட இருக்கும் வரை மை கம்ப்யூட்டர் . அதை யாராவது திருடிகிட்டு போனாலோ இல்ல வித்துட்டாலோ அப்பவும் அது அவங்க கிட்ட போனா அது அவங்ககிட்ட  சொல்றது இது மை கம்ப்யூட்டர். என்ன கொடுமை சார் இது ... ஓக்கே..!!
           அதுல வலது கிளிக் செஞ்சு வரும் பிராப்பர்டியை கிளிக் பண்ணினா  அதுல நம்ம பேர் இல்ல . கொடுமையின் உச்சம் யார் யாரோ பேர் இருக்கு .என்னங்கடா இது காசு குடுத்து வாங்கியது நானு .பேர் என்னுது இல்ல ,என் தாத்தாதான் இல்ல போனா போகுது என் பாட்டி பேராவது இருக்கான்னு பார்த்தால் அதுவும் இல்ல அப்புறம் என் போட்டோ கூட அதில இல்லை .இதை நினைச்சு நினைச்சு அழுவாச்சியா வந்துச்சி. மவனே இதை இப்பிடியே விட்டிட கூடாதுன்னு ராத்திரி பூரா கொட்டகொட்ட முழிச்சிருந்து யோசிச்சதுல கடைசியா விடை கிடைச்சுது. அப்ப மணி 5.45 ஒரு ஜோக்கும்  நினைவுக்கும் வந்துது
           நம்ம ஆள் என்னை மாதிரி பசியோட ஹோட்டலுக்கு போய் 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு அழ அரம்பிச்சான் அவன். முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு அது மாதிரி என் நிலைமை சரி மேட்டருக்கு போகலாம்..


                      முதல்ல ஒரு நோட் பேட் புதுசா ஒன்னு திறங்க .அதில கீழே உள்ள மாதிரி டைப் பன்னுங்க .பெரும்பாலும் நோட் பேடில் தமிழ் வேலை செய்யாது அதனால் ஆங்கிலத்தில டைப் பண்ணுங்க..ஓக்கேவா..? போடவேண்டிய இடத்தில தமிழ்ல குடுத்திருக்கேன். அப்ப ஈஸியா புரியம்

 [General]

Manufacturer=" உங்களுக்கு பிடிச்ச பேரு    "

Model= அது உங்க வீட்டு குதிரை வண்டியாகூட இருக்கலாம்

[Support Information]

Line1= உங்க தாத்தா பேரு
Line2= உங்க தாத்தாக்கு பாட்டியோட அம்மா  பேரு
Line3=உங்க பாட்டிக்கு கொழுந்தியாள் சித்தப்பா  பொண்னோட பேரு
Line4=உங்க வண்டவாளம் தண்டவாளம் எல்லாம்
Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா
LINE6=
Line7=இல்ல அடி வாங்கி இருக்கீங்கலா
Line8=நீங்க சமத்தா  இல்ல அசடா
 Line9=நாய பாத்து பயந்து ஓடி இருக்கீங்கலா
Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா
Line11=பாத்திரம் கழுவி இருக்கீங்கலா
Line12= எப்பவும் அழுது வடியும் சீரியல் நடிகை யார் பேர் என்ன
Line13=உங்களுக்கு பிடித்த வில்லன் பிடிக்காத ஹீரோ யார்

           இப்பிடி ஒரு நம்பர் குடுத்து அதில இங்கிலீஷல ஏதாவது உங்களுக்கு பிடித்ததை டைப் பண்ணி பாருங்க . இப்படி டைப்பன்னிய நோட் பேடுக்கு oeminfo.iniன்னு பேர குடுத்து அதை C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் .

           இப்ப உங்களுக்கு பிடிச்ச படத்தை உங்க மனைவி , குழந்தை , இல்லை அது ஒரு நடிகையா கூட இருக்கலாம் . அந்த படத்தை உங்க பெயிண்ட் புரோமிராமில் திறந்து அந்த படத்தை .bmp (பிட் மேப் படமாக ) ஃபைலாக சேமிக்கவும் . அதுக்கு  oemlogo.bmpன்னு பேர் குடுத்து திரும்பவும் , C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் .

            இப்ப உங்க டெஸ்க்டாப்பில் மை கம்ப்யூட்டரை வலது கிளிகிள் வரும் பிராப்பரைடிஸ் திறந்து பாருங்க . அதில் உங்க கம்பெனி மேனுஃபேக்‌ஷர் , படமும் தெரியும் .சப்போட் இன்ஃபெர்மேஷன் பெட்டியை கிளிக்கினால் அதில் நீங்கள் எழுதிய மேட்டர் எல்லாம் கிடைக்கும்..பாத்து சந்தோஷ படுங்க

டிஸ்கி..!!! கொஞ்சம்  ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல  இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிறேன் ( ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி )  

101 என்ன சொல்றாங்ன்னா ...:

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஆ..... இண்டைக்கு நாந்தான் 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஆ...... ரெண்டாவதும் நான் தான்ன்ன்ன்ன்.. இனிமேல்தான் படிக்கப்போறேன். அதுவரை என்னை யாரும் டிஸ்ரேப் பண்ணப்பூடாதூஊஊஊஊஉ.

athira said...

புரிஞ்சமாதிரித்தான் இருக்கு ஆனா இல்லை:). 5வது இட்டலி சூப்பர் ஜோக்.

///டிஸ்கி..!!! கொஞ்சம் ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர வர எங்கட ஜலீலாக்கா மாதிரியே வாறீங்க..:))))))

Anonymous said...

///டிஸ்கி..!!! கொஞ்சம் ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர வர எங்கட ஜலீலாக்கா மாதிரியே வாறீங்க..:))))))

REPEATTU!!!!!!!!!

ஹேமா said...

ஜெய்...நல்ல தேவையான விஷயமாத்தான் இருக்கும்போல.புரியிறவங்களுக்குப் புரியும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சாச்சுபுட்டையே மக்கா.. கலக்கல்

Unknown said...

நல்லா இருக்குங்க...கலக்கல்.

எல் கே said...

////ஹோல்டர் இருக்கும்//

போல்டர்

/முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு///
அவ்


appuram thala, itha computer on pannitu seyyanama illa oru notepadla veruna eluthina pothumaa

Prasanna said...

ஆணிகளை வென்று சூறாவளியாக மீண்டும் வருக வருக :)

ஹைஷ்126 said...

//நம்ம ஆள் என்னை மாதிரி பசியோட ஹோட்டலுக்கு போய் 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு அழ அரம்பிச்சான் அவன். முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு அது மாதிரி என் நிலைமை//***சரி மேட்டருக்கு போகலாம்..*** இது ஏதோ ஜோக்கை மொழி பெயர்ச்சி செய்தமாதிரி இருக்கு :)

வாழ்க வளமுடன்

Unknown said...

நல்ல தான் இருக்கு.......

ஜில்தண்ணி said...

நமக்கு எங்க கம்பெணி பேர் கேட்டாலும் "மன்னார் அண்ட் கம்பெணி" தான் ஹா ஹா

இது வேற இருக்கா,செய்து பார்த்துடுவோம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது வேற இருக்கா,செய்து பார்த்துடுவோம் :)naanum

kavisiva said...

வெயில் ஜாஸ்தின்னு புரியுது :)

சீமான்கனி said...

ஆஹா...சுவாரசியமா இருக்கு நானும் செய்து பார்கிறேன்...நன்றி..."ஆணி" ரெம்ப முக்கியம்...

Vidhya Chandrasekaran said...

ஒழுங்கா வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க.

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌ம்... ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன்..

ஜெய்லானி said...

@@@athira--//ஆ..... இண்டைக்கு நாந்தான் 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்//

ஹா..ஹா..நீண்ட நாள் முயற்ச்சி. வடை உங்களுக்கே..!!
//ஆ...... ரெண்டாவதும் நான் தான்ன்ன்ன்ன்.. இனிமேல்தான் படிக்கப்போறேன். அதுவரை என்னை யாரும் டிஸ்ரேப் பண்ணப்பூடாதூஊஊஊஊஉ.//

ஹா..ஹ..வடையுடன் சட்னியும் சேர்த்து இன்னைக்கு உங்களுக்குதான் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//புரிஞ்சமாதிரித்தான் இருக்கு ஆனா இல்லை:). 5வது இட்டலி சூப்பர் ஜோக்.//

அது ஒன்னுமில்லைங்க ,சில நமக்கு பிடிச்ச வார்தைகளை சேர்க்க முடியாத இடத்தில சேர்கலாம்.அதான் கான்செப்ட். இப்ப புரியுதா...

///டிஸ்கி..!!! கொஞ்சம் ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர வர எங்கட ஜலீலாக்கா மாதிரியே வாறீங்க..:))))))//

அவ்வளவு இல்லை .கொஞ்சமா ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெயந்தி said...

தாத்தாவுக்கு பாட்டி பேராம். மகனே உங்க தாத்தாவோட அப்பா பேரு தெரியுமா?

மங்குனி அமைச்சர் said...

நல்ல விஷயம் தான் , ஆனா ஆபீசுல ஒத்துக்க மாட்டேன்கிரானுகளே

Anonymous said...

ஹோட்டல் ஜோக் சூப்பர்..
அது சரி ஜெய்லானி..
அதென்ன ஆணிகள் தொல்லை??

ப்ரியமுடன் வசந்த் said...

//உங்க பாட்டிக்கு கொழுந்தியாள் சித்தப்பா பொண்னோட பேரு//

ஏலேய் லொல்லு தாங்கலைடா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு..?? சூப்பர், ஜெய்லானி..
ஆமா.. எனக்கு சில பல டவுட்-டு..கேக்கலாமா??

///இப்ப உங்களுக்கு பிடிச்ச படத்தை உங்க மனைவி , குழந்தை , இல்லை அது ஒரு நடிகையா கூட இருக்கலாம் ///

நீங்க யாரு படம் சார், போட்ருக்கீங்க?? :D :D

///கொஞ்சம் ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிறேன் ( ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி ) ////

சரி நம்பிட்டோம், நீங்க பிஸி தான்.. :-)))

Adirai khalid said...

///ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி///

பதிவு ஆரம்பத்திலேயே நென‌ச்சேன்., பிறகு இடையிலும் சொரிஞ்சேன்...கடசியா நீங்கலே சொல்லிட்டீர் .. அப்புரமென்ன?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அப்புறம் நீங்க பொறுமையா இவ்ளோ கேள்வி கேட்ருக்கீங்க..?
சில கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டாமா..?

///Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா
................இனி தான் ஒருத்தர அடிக்கணும்..
LINE6=
................என்னங்க சார்? கேள்வியே இல்ல? சரி நா கேக்குறேன்..
................உங்களுக்கு சுடு தண்ணி வைக்க தெரியுமா?

Line7=இல்ல அடி வாங்கி இருக்கீங்கலா
............... இல்ல வாங்கல
Line9=நாய பாத்து பயந்து ஓடி இருக்கீங்கலா
...............எஸ், எஸ்.. எனக்கு நாயென்றால் பயம்.. :-)) (தெனாலி ஸ்டைல்-ல படிங்க)

Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா
............ ஹலோ, இது சரியில்ல.. ஆண்களை மட்டுமே மையமாக வைத்து இந்த கேள்வி இருப்பதால்.. நான் வெளிநடப்பு செய்கிறேன்..

Line12= எப்பவும் அழுது வடியும் சீரியல் நடிகை யார் பேர் என்ன
...............வெரி சாரி.. சீரியல் பிடிக்காது..

அப்போ நா கிளம்பட்டுங்களா...?
கேள்வி பதில், சொன்னதுக்கு ஏதும், பரிசு இருந்த... மெயில் பண்ணிருங்க.. தேங்க்ஸ்.. :-))

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்...நல்ல தேவையான விஷயமாத்தான் இருக்கும்போல.புரியிறவங்களுக்குப் புரியும்.

இல்லங்க குழந்தை நிலா .இது கம்ப்யூட்டர பத்தி மட்டும் இருக்கும் பக்கத்தில சில நமக்கு பிடிச்ச படமோ அல்லது தகவலோ போடரது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//சாச்சுபுட்டையே மக்கா.. கலக்கல் //

ஹா..ஹா..பின்ன இதெல்லாம் விடற சமாச்சாரமா என்ன . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--// நல்லா இருக்குங்க...கலக்கல்.//

வாங்க ..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jey said...

///முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....///

ஜெய்னானி, என்னோட ரொம்ப நால் ஃபீலிங்ஸ சொல்லிட்டேயா..:)

(Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா ///

உனக்கு ஜல்லி கரண்டி அனுபவமா..:)? , நான் பூரிகட்டைனு மாத்திகிறேன், எனக்கு பொய்சொல்ல பிடிக்காது மச்சி.

///Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா ///

இப்பதான் , ஜெலானின்னு, ஒருத்தருக்கு மன்சத்தண்ணி ஊத்திருக்கு, ஒரு போடு போட்டுட்டு , அப்புரம் அந்த பேர சேத்துக்குறேன்

///(பிட் மேப் படமாக )//

என்னயா பிட்டு கிட்டுனு ஆபாசமா, அம்மனிககிட்ட அடிவாங்கம திருந்த மாட்ட போல.


//C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் ///

சேவ் செஞ்சதுக்கு அப்புறம் அஃப்டர் சேவ் லோஷன் யூஸ் பண்ணனுமா? சொல்லவே இல்லை?.

---------------------------------------------

சரி சரி, நல்ல தகவல் நன்றி:)

NADESAN said...

குழப்பமாஇருக்கு ஆனால் ஏதோ விஷயம் மட்டும் இருக்கு.

கொஞ்சம் வெயில் அதிகம் தான்

வாழ்க வளமுடன்
நெல்லை நடேசன்
துபாய்
அமீரகம்

ஜெய்லானி said...

@@@LK////ஹோல்டர் இருக்கும்//

போல்டர் //

வாங்க தல. ராத்திரி நேரத்துல டைப் பண்ணீனாலே இந்த கதிதான் போல . மாத்திடரேன்

//முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு///
அவ் //

நானும்தான் என்ன செய்ய...அவ்வ்வ்வ்வ்


// appuram thala, itha computer on pannitu seyyanama illa oru notepadla veruna eluthina pothumaa //


ஓ அதுவா.. சும்மா நோட் பேடில எழுதிட்டு அதை சுவத்துல 6 இஞ்ச் ஆனி அடிச்சி மாட்டினாகூட போதும் .ஹா..ஹா.. ((இப்பதான் ஒரு ஃபாம்ல வரீங்க டிரை பன்னுங்க மொக்கை நல்லா வரும் )). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Btc Guider said...

கலக்குறீங்க............

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//ஆணிகளை வென்று சூறாவளியாக மீண்டும் வருக வருக :) //

வாங்க..!! வாழ்த்துக்கு மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126 --

வாங்க..!! அப்ப அப்ப மொக்கை போட்டு பழகிப்போச்சியில்ல அதான் ஒரு ஃப்ளோவில வருது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

SUPER KANNU!!

ஜெய்லானி said...

@@@R. Ranjith Kumar--//நல்ல தான் இருக்கு.......//

வாங்க ..!! உங்களுக்கு பிடிச்ச மாதிரி போட்டு பாருங்க..நல்லா வரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--// நமக்கு எங்க கம்பெணி பேர் கேட்டாலும் "மன்னார் அண்ட் கம்பெணி" தான் ஹா ஹா //

கம்பெனிங்கிறது சும்மா அந்த இடத்தில வேர எதாவது கூட போடலாம்...

//இது வேற இருக்கா,செய்து பார்த்துடுவோம் :) //

செஞ்சி பாருங்க .ஃபிரன்ஸ் பார்த்தா ஆச்சிரியப்படுவாங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//இது வேற இருக்கா,செய்து பார்த்துடுவோம் :)naanum //

ம்.. இது மாதிரி நிறைய இருக்கு. முயற்ச்சி பண்ணீ பாருங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva --//வெயில் ஜாஸ்தின்னு புரியுது :) //

அவ்வ்வ்வ்வ்வ்வ். இருங்க அடுத்த பதிவில சந்தேகத்தோட வரேன்..:-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@seemangani--//ஆஹா...சுவாரசியமா இருக்கு நானும் செய்து பார்கிறேன்...நன்றி..."ஆணி" ரெம்ப முக்கியம்... //

செஞ்சி பாருங்க ரசனையா இருக்கும் .ஆமாம் கனி ”ஆணி” ரொம்பவும் முக்கியம்தானே..!! .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வடுவூர் குமார் said...

அப்ப‌ அந்த‌ original oeminfo.inஇ கோப்பு என்ன‌வாகும்?

ஜெய்லானி said...

@@@வித்யா--//ஒழுங்கா வேலையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. //

கொஞ்சம் லேட் ஆகுது அதான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

ஜெய்லானி ஆணிகள் உங்களைத்தொல்லை பண்ணுமா?அல்லது ஆணிகளை நீங்கள் தொல்லை பண்ணுவீர்களா?

ஸாதிகா said...

/// நம்ம ஆள் என்னை மாதிரி பசியோட ஹோட்டலுக்கு போய் 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு அழ அரம்பிச்சான் அவன். முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு // இபடியெல்லாம் சொல்வதற்கு ஜெய்லானியை அடிச்சுக்க வேறு ஆள் கிடையாது.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ விச‌ய‌ம்... ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன்..//

பாருங்க வித்தியாசமா இருக்கும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

ஒரு காலத்துல இதை தெரிஞ்சிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெடரியுமா. அப்பவே ஏன் பதிவு போடலை :)

அதே மேட்டரை உங்கள் ஸ்டைல்ல கொடுத்தீங்க பாருங்க. அங்க நிற்கிறீங்க.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//தாத்தாவுக்கு பாட்டி பேராம். மகனே உங்க தாத்தாவோட அப்பா பேரு தெரியுமா?//

ஹா..ஹ..ஆங்..இருங்க தாத்தாவோட சிக்னல் வீக்கா இருக்கு கேட்டுட்டு சொல்ரேன் . மேலோகத்துக்கு இன்னும் பிராட்பேண்ட் 3ஜி கனெக்‌ஷன் கிடைகல..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--// நல்ல விஷயம் தான் , ஆனா ஆபீசுல ஒத்துக்க மாட்டேன்கிரானுகளே //

அடப்பாவி சோதனை எலி ஆப்பீசிலயா ?அப்ப அதுல வைரஸ் எப்படி விடனும் சொல்றேன் . அப்புறம் கம்ப்யூட்டர் உனக்குதான் .ஹா..ஹ.. இஷ்டம் போல விளையாடு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இந்திராவின் கிறுக்கல்கள்--//ஹோட்டல் ஜோக் சூப்பர்..அது சரி ஜெய்லானி..அதென்ன ஆணிகள் தொல்லை?? //

ஹய்யோ..ஹய்யோ..அதுக்காக இப்பிடியா அப்பாவியா இருப்பீங்க..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன் வசந்த்--//உங்க பாட்டிக்கு கொழுந்தியாள் சித்தப்பா பொண்னோட பேரு//

ஏலேய் லொல்லு தாங்கலைடா சாமீய்ய்ய்ய்ய்ய்ய்ய் //

ஹா..ஹா..என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீகளே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi--//ஆஹா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு..?? சூப்பர், ஜெய்லானி..ஆமா.. எனக்கு சில பல டவுட்-டு..கேக்கலாமா??//


நானே சில பல டவுட் கேக்குர ,குட்டைய கொழப்புற ஆளு ம் கேளுங்க

///இப்ப உங்களுக்கு பிடிச்ச படத்தை உங்க மனைவி , குழந்தை , இல்லை அது ஒரு நடிகையா கூட இருக்கலாம் ///

நீங்க யாரு படம் சார், போட்ருக்கீங்க?? :D :D//

இன்னைக்கு காலையில ஜோசியம் பலன் சரியாதான் வேலைச் செய்யும் போல ( வாய திறந்தா குடும்பத்தில கொல பட்டினி ) அவ்வ்வ்வ்வ்வ் எஸ்கேப்

///கொஞ்சம் ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிறேன் ( ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி ) ////

சரி நம்பிட்டோம், நீங்க பிஸி தான்.. :-))) //

ஹா..ஹா.. அது ஒன்னுமில்லீங்க.. ஆணிக்கும் என்னை பிடிக்குது எனக்கும் ஆனியை பிடிக்குது. அதான்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன் மாலை பொழுது said...

புரிஞ்சிகினமாதிரீகீது ஆனா இல்ல.
வெயிலு ஜாஸ்தியா கீதுன்னு தான் தெரியுதே
அண்ணாத்த உங்க ப்ளாக படிசிகினா!!

ஜெய்லானி said...

@@@மு.அ. ஹாலித்--///ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி///

பதிவு ஆரம்பத்திலேயே நென‌ச்சேன்., பிறகு இடையிலும் சொரிஞ்சேன்...கடசியா நீங்கலே சொல்லிட்டீர் .. அப்புரமென்ன? //

ஹா..ஹா. கரெக்டா கண்டு பிடிசிச்சிடீங்களே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

chelas said...

comedy edum panala illai?

முஹம்மது மபாஸ் said...

irunthaalum neenga kotta kotta muzhichchirukka koodaathu... yaarayaachchum kotta vittu muzhichchirukkanum....

super thakaval... thanks.

ஜெய்லானி said...

@@@Ananthi--//அப்புறம் நீங்க பொறுமையா இவ்ளோ கேள்வி கேட்ருக்கீங்க..? சில கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டாமா..? //

ஒரு வேளை ஜோசியம் இன்னைக்கு பலிச்சிடுமோ..? அவ்வ்வ்வ்

///Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா
................இனி தான் ஒருத்தர அடிக்கணும்.. //

ஹா..ஹா..பாத்து கடிச்சிடாதீங்க ..பாவம்..விட்டுடுங்க..

// LINE6=
................என்னங்க சார்? கேள்வியே இல்ல? சரி நா கேக்குறேன்..//

இதுல ஒன்னும் போடாட்டி அதில சின்னதா ஒரு கேப் கிடைக்கும் அதாவது நெக்ஸ்ட் லைன் காலியா வரும்

// ................உங்களுக்கு சுடு தண்ணி வைக்க தெரியுமா? //

ஹா..ஹா.. அப்படின்னே..??யார் அவரு.?

// Line7=இல்ல அடி வாங்கி இருக்கீங்கலா
............... இல்ல வாங்கல //

ஓக்கே..ஓக்கே... புரியுது..புரியுது...

// Line9=நாய பாத்து பயந்து ஓடி இருக்கீங்கலா
...............எஸ், எஸ்.. எனக்கு நாயென்றால் பயம்.. :-)) (தெனாலி ஸ்டைல்-ல படிங்க) //

பயந்து ஓடி அப்ப எத்தனை மரம் ஏறி இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா..ஹி..ஹி..

//Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா
............ ஹலோ, இது சரியில்ல.. ஆண்களை மட்டுமே மையமாக வைத்து இந்த கேள்வி இருப்பதால்.. நான் வெளிநடப்பு செய்கிறேன்..//

ஆமா இல்ல ... அடி வாங்குற ஆட்களை பத்திதானே கவலை..ஹும்.. பெரு மூச்சி விட வேண்டி இருக்கு

//Line12= எப்பவும் அழுது வடியும் சீரியல் நடிகை யார் பேர் என்ன
...............வெரி சாரி.. சீரியல் பிடிக்காது..//

அப்ப 102 வயசுக்கு நான் கேரண்டி..கண்டினியூ..

அப்போ நா கிளம்பட்டுங்களா...?
கேள்வி பதில், சொன்னதுக்கு ஏதும், பரிசு இருந்த... மெயில் பண்ணிருங்க.. தேங்க்ஸ்.. :-))//

ஓ மெயிலா ..? அப்பிடின்னா சரக்கு ரயிலா.க்கி..க்கி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jey--//முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....///

ஜெய்னானி, என்னோட ரொம்ப நால் ஃபீலிங்ஸ சொல்லிட்டேயா..:)//

ஆமாயா ஆமாம் நமக்கு புத்தி எப்பவும் பின்னாடிதான் வேலை செய்யுது ஹூம்..

//(Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா ///

உனக்கு ஜல்லி கரண்டி அனுபவமா..:)? , நான் பூரிகட்டைனு மாத்திகிறேன், எனக்கு பொய்சொல்ல பிடிக்காது மச்சி. //

எப்படிய்யா இன்னும் உயிரோட இருக்கே..?எத்தனை தையல் ..? எத்தனை விரல் மடங்கி ச்சே.. ஒடஞ்சி இருக்கு. ஆனா நீ ரொம்ம்ம்ம் ப நல்லவன்யா..

///Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா ///

இப்பதான் , ஜெலானின்னு, ஒருத்தருக்கு மன்சத்தண்ணி ஊத்திருக்கு, ஒரு போடு போட்டுட்டு , அப்புரம் அந்த பேர சேத்துக்குறேன்//

மாம்ஸ் ஏற்கனவே மஞ்ச தண்ணி ஊத்தின மாதிரிதான் ஒடிகிட்டிருக்கேன்..

///(பிட் மேப் படமாக )//

என்னயா பிட்டு கிட்டுனு ஆபாசமா, அம்மனிககிட்ட அடிவாங்கம திருந்த மாட்ட போல.//

யோவ் நீயே போட்டு குடுத்துடுவே போலிக்கே.. பாவம்யா நான்


//C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் ///

சேவ் செஞ்சதுக்கு அப்புறம் அஃப்டர் சேவ் லோஷன் யூஸ் பண்ணனுமா? சொல்லவே இல்லை?.//

இல்ல பினாயிலு ஊத்தி கழுவனும் .

---------------------------------------------

சரி சரி, நல்ல தகவல் நன்றி:)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NADESAN--//குழப்பமாஇருக்கு ஆனால் ஏதோ விஷயம் மட்டும் இருக்கு.//

இல்லைங்க இது ஈஸிதான் திரும்ப படிச்சி பாருங்க

//கொஞ்சம் வெயில் அதிகம் தான்

வாழ்க வளமுடன்
நெல்லை நடேசன்
துபாய்
அமீரகம் //

ஆமாங்க 48 டிகிரி அடிக்குது. தாங்கல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரஹ்மான்--// கலக்குறீங்க............//

வாங்க..!! ###ரஹ்மான்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆர்.கே.சதீஷ்குமார்--// SUPER KANNU!! //

வாங்க ..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வடுவூர் குமார்--//அப்ப‌ அந்த‌ original oeminfo.inஇ கோப்பு என்ன‌வாகும்? //

ஒன்னும் ஆகாது. அதில இடது பக்கம் படமும் ரெண்டு வரி யும் வரும் / சப்போட் இன்ஃபேர்மேஷனில் நீங்க டைப் பண்னிய வரிகள் இருக்கும் . சந்தேகம் இருந்தால் அந்த ஒரிஜினல் ஃபைலை தனியா காப்பி செய்து விட்டு போட்டு பாருங்கள. பிடித்திருந்தால் தொடருங்கள். இது எக்ஸ் பியில் சரியாக வந்தது . விஸ்டா பிடிகாத்தால் டிரை பன்ன வில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சசிகுமார் said...

சூப்பர் மேட்டர்ப்பா கலக்கிடீங்க போங்க அருமை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஜெய்லானி ஆணிகள் உங்களைத் தொல்லை பண்ணுமா?அல்லது ஆணிகளை நீங்கள் தொல்லை பண்ணுவீர்களா? //

ரெண்டுமே பிரிக்க முடியாத சொந்த பந்தமாச்சே ஹி..ஹி..

//// நம்ம ஆள் என்னை மாதிரி பசியோட ஹோட்டலுக்கு போய் 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு அழ அரம்பிச்சான் அவன். முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு // இபடியெல்லாம் சொல்வதற்கு ஜெய்லானியை அடிச்சுக்க வேறு ஆள் கிடையாது. //


ஹா..ஹா.. நேரம் அப்படி இருக்கு ஸாதிகாக்கா என்ன செய்ய,, சும்மா இருந்த மூளை வரண்டு போயிடும் அதான் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--//ஒரு காலத்துல இதை தெரிஞ்சிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெடரியுமா. அப்பவே ஏன் பதிவு போடலை :) //

ஹா.ஹா.எப்பங்க ..!!லீவு ஒரு நாள் நல்லா போவட்டு மேன்னுதான் இதை போட்டது

//அதே மேட்டரை உங்கள் ஸ்டைல்ல கொடுத்தீங்க பாருங்க. அங்க நிற்கிறீங்க.//

மொக்கை போடாட்டி சரி வருமா அக்பர் என்னை மாதிரி..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//புரிஞ்சிகினமாதிரீகீது ஆனா இல்ல.வெயிலு ஜாஸ்தியா கீதுன்னு தான் தெரியுதே
அண்ணாத்த உங்க ப்ளாக படிசிகினா!! //

சொம்மா இன்னெரு தபா பட்சிக்கோ நயீனா .சுலுவா இருக்கம். அக்காங் சூடு சொம்மா சுலுன்னு அடிக்குது. அடுத்த பதிலில பெரிசா சந்தேகத்தோட வர்ரேன் இப்பாலிக்கா விடு ஜூட்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@chelas--//comedy edum panala illai? //

ச்சே..ச்சே அடுத்த பதிவு காமடியா வரும் பாருங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

எல்லாரும் ஆணியை ------ சொல்லுறீங்களே அதை தவிர வேறு வார்தையில்லையா அண்ணாத்தே!

இருந்தாலும் அந்த வேலையிலும் இப்படி அறிவான பதிவப்போட்டு கலக்குறீங்களே. உங்களுக்கு தங்கக்குழந்தை விருதுகொடுக்கனும்.

GEETHA ACHAL said...

//அதை யாராவது திருடிகிட்டு போனாலோ இல்ல வித்துட்டாலோ அப்பவும் அது அவங்க கிட்ட போனா அது அவங்ககிட்ட சொல்றது இது மை கம்ப்யூட்டர். என்ன கொடுமை சார் இது ... ஓக்கே..!!///உண்மை தான்...ஜெய்லானி நல்லாவே வேள்வியும் கேட்டிகின்றிங்க...அதே போல பதிலும் சொல்லிறிங்களே....ரொம்ப நல்லவாங்க...பயனுள்ள பதிவு...

எம் அப்துல் காதர் said...

// 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு//

அது எப்படி பாஸ் வது 5-வது இட்லி என்று நமக்கு தெரியும். இட்லியில் நம்பர் ஏதும் போட்டிருக்குமா? அது எந்த கடையில் கிடைகும்ங்க?? க்கி..க்கி..

எம் அப்துல் காதர் said...

//நீங்க யாரு படம் சார், போட்ருக்கீங்க?? :D :D //

வேற யாரு!! தலைவி அனுஷ்கா தானே.. ஹி..ஹி.. நா இத யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் பாஸு. ரகசியம்னா அது பெரிய கான்பிடன்சியல்னு தெரியாதா!!

எம் அப்துல் காதர் said...

//முதல்ல ஒரு நோட் பேட் புதுசா ஒன்னு திறங்க.//

-- சரி திறந்துட்டேன்!

//அதில கீழே உள்ள மாதிரி டைப் பன்னுங்க//

பாஸ் நோட் பேட் டைப் ரைடரில் நுழைய மாட்டேங்குதே. பின்னே எப்படி டைப் அடிக்கிறது. அவ்வ்வ்வவ்வ்வ்வ்..

r.v.saravanan said...

ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன் ஜெய்லானி

செல்வா said...

இப்பூடி எல்லாம் இருக்குதா ....????

Riyas said...

என்ன பிளாக் கீழே கழுகு பறக்குது பார்க்க பயமாக்கீது..

பதிவ மூனு முறை வாசிச்சேன் இன்னும் புரியல்ல நாலாவது முறை வாசிக்கிறேன்..புரியாட்டி உங்கள் நேரில் சந்திக்கிறேன் ஓக்கேவா..

இட்லி ஜோக் சூப்பர்.....

vanathy said...

ஜெய், நல்ல பதிவு. இந்த கம்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் என் ஆத்துக்காரரே பார்த்துக் கொள்வதால் நான் பெரிதாக மெனக்கெடுவதில்லை.

இனிமேல் என்ன பதிவு போடப்போறீங்க??? ( சீனி ஏன் இனிக்குது, புளி ஏன் புளிக்குது ...சும்மா ஐடியா குடுத்தேன். அவ்வளவு தான்!!! )

ஜெய்லானி said...

@@@முஹம்மது மபாஸ்--//irunthaalum neenga kotta kotta muzhichchirukka koodaathu... yaarayaachchum kotta vittu muzhichchirukkanum....

super thakaval... thanks.//

வாங்க மபாஜ்..!!!ஏன் இந்த கொலவெறி.என் மண்டை என்ன காலிங் பெல் சுவிட்ஜா தட்டிதட்டி விளையாட. எதுவா இடுந்தாலும் உடகார்ந்து நமக்குள்ள பேசி தீர்த்துக்கலாம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//சூப்பர் மேட்டர்ப்பா கலக்கிடீங்க போங்க அருமை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.//

டிரை பன்னி பாருங்க ,நல்லா இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//எல்லாரும் ஆணியை ------ சொல்லுறீங்களே அதை தவிர வேறு வார்தையில்லையா அண்ணாத்தே! //

அந்த அளவுக்கு குத்துவதுக்கு வேர வார்த்தை கிடைக்கலயே கவிஞரே நீங்களே ஒரு புதிய வார்த்தை சொல்லுங்களேன்

//இருந்தாலும் அந்த வேலையிலும் இப்படி அறிவான பதிவப்போட்டு கலக்குறீங்களே. உங்களுக்கு தங்கக்குழந்தை விருதுகொடுக்கனும்.//

ஹி..ஹி.. அப்ப அடுத்த மொக்கய சீக்கிரமா போட்டுட வேண்டியதுதான்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//அதை யாராவது திருடிகிட்டு போனாலோ இல்ல வித்துட்டாலோ அப்பவும் அது அவங்க கிட்ட போனா அது அவங்ககிட்ட சொல்றது இது மை கம்ப்யூட்டர். என்ன கொடுமை சார் இது ... ஓக்கே..!!///உண்மை தான்...ஜெய்லானி நல்லாவே வேள்வியும் கேட்டிகின்றிங்க...அதே போல பதிலும் சொல்லிறிங்களே....ரொம்ப நல்லவாங்க...பயனுள்ள பதிவு...///

ஹா..ஹ.. அப்ப பில கேட்ஸ் கிட்ட கேட்டுட வேண்டியதுதான்.நாட்டான்மை தீர்ப்ப மாத்துன்னு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pinkyrose said...

ஜெய்லானி சாஆஆஆஆஅர்...

ஓ பி அடிக்கலாம்னு ப்ளாக் வந்தா இங்கியுமாஆஆஆஅ

http://rkguru.blogspot.com/ said...

படிச்சு தெரிஞ்சுபுட்டேன்...நன்றிங்கோ

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//அது எப்படி பாஸ் வது 5-வது இட்லி என்று நமக்கு தெரியும். இட்லியில் நம்பர் ஏதும் போட்டிருக்குமா? அது எந்த கடையில் கிடைகும்ங்க?? க்கி..க்கி..//

அது வந்து பாஸ் இந்த சந்தேகத்தை ஒரு பதிவா போடுறேன் அப்ப புரியும் போதுமா ( மவனே மாட்டின நல்லா )
//வேற யாரு!! தலைவி அனுஷ்கா தானே.. ஹி..ஹி.. நா இத யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் பாஸு. ரகசியம்னா அது பெரிய கான்பிடன்சியல்னு தெரியாதா!!//

ச்சே..அடப்பாவி போட்டு குடுக்கிறதுக்குன்னே அலையிறாங்களே என்ன செய்ய .குடும்பத்தில குழப்பத்தை உண்டாக்காம விடமாட்டாய்ங்க போலிருக்கே..( இருஇரு ஒருநாளைக்கு மாட்டாமலயா போவ )

//அதில கீழே உள்ள மாதிரி டைப் பன்னுங்க//

பாஸ் நோட் பேட் டைப் ரைடரில் நுழைய மாட்டேங்குதே. பின்னே எப்படி டைப் அடிக்கிறது. அவ்வ்வ்வவ்வ்வ்வ்..//

அதுல இருக்கிற கீய ஒன்னு ஓன்னா முதல்ல பிடிங்கி கீழே வையுங்க அப்புறம் நுழைச்சி பாருங்க சரியா வரும் .. எங்கிட்டெயே வா.. ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன் ஜெய்லானி //

பாருங்க சந்தோஷமா இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--// இப்பூடி எல்லாம் இருக்குதா ....???? //

ஆமாங்க செஞ்சி பாருங்க வித்தியசமா இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ் அருமையான பகிர்வு. நன்றி ஜெய்லானி

ஜெய்லானி உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் தொடரவும்.

தாராபுரத்தான் said...

ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்...ஒண்ணும் சொல்லாம போகலை..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

ஆர்வா said...

முடியலை... இப்பவே கண்ணை கட்டுது... உங்க திறமைக்கு நீங்க எங்க இருக்கணும் தெரியுமா?? நித்யானந்தா கிட்ட சிஷ்யரா இருந்திருக்கணும்.

Jey said...

தல, உன்னப்பாத்தா, ரொம்ப மூளைக்காரனத்தெரியுது, நான் போட்ட புது பதிவு, ட்டேஷ்போர்டுல டிஸ்பிளே ஆகல, எப்படி சரி செய்ரதுனு கொஞம் சொறயா ராசா.

தீர்த்துவகாலைனா, மங்குனி செஞ்ச அரளி விதை டீப் ப்ரை பார்சல் அனுப்பப்படும்.

ஜெய்லானி said...

@@@Riyas--//என்ன பிளாக் கீழே கழுகு பறக்குது பார்க்க பயமாக்கீது.. //

அதை காவலுக்கு வச்சி மாசம் ஆகப்போகுது. பயப்படாதீங்க ..

//பதிவ மூனு முறை வாசிச்சேன் இன்னும் புரியல்ல நாலாவது முறை வாசிக்கிறேன்..புரியாட்டி உங்கள் நேரில் சந்திக்கிறேன் ஓக்கேவா..

இட்லி ஜோக் சூப்பர்.....//

அப்ப இன்னும் நாலு வாட்டி வாசிங்க சரியாகிடும் . இல்லாட்டி நேரே பஸ் பிடிச்சு வந்துடுங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், நல்ல பதிவு. இந்த கம்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் என் ஆத்துக்காரரே பார்த்துக் கொள்வதால் நான் பெரிதாக மெனக்கெடுவதில்லை. //
அப்ப இதை அவரை செஞ்சி பாக்க சொல்லுங்க . நமக்கு விருப்பப்பட்டு அடிக்கும் பேர் அதில வருவதும் போடோ வருவதும் ஒரு சந்தோஷம்தானே..!!

//இனிமேல் என்ன பதிவு போடப்போறீங்க??? ( சீனி ஏன் இனிக்குது, புளி ஏன் புளிக்குது ...சும்மா ஐடியா குடுத்தேன். அவ்வளவு தான்!!! ) //

வரும் , கைவசம் நிறைய இருக்கு. ஆனா போடதான் நேரம் வரமாட்டேங்குது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@pinkyrose--//ஜெய்லானி சாஆஆஆஆஅர்...ஓ பி அடிக்கலாம்னு ப்ளாக் வந்தா இங்கியுமாஆஆஆஅ //

வாங்க பிங்கி ஏன் என்ன ஆச்சு..? கடி அதிகமா தெரியுதா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@rk guru--//படிச்சு தெரிஞ்சுபுட்டேன்...நன்றிங்கோ //

டிரை பண்ணி பாருங்க ஆர் கே..சரியா வரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//வாவ் அருமையான பகிர்வு. நன்றி ஜெய்லானிஜெய்லானி உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் தொடரவும். //

வாங்க ஷேக்..!! தாராளமா போட்டுடலாம் அதுக்கென்ன ..!!ஆனா படிச்சிட்டு திட்டகூடாது..ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான்-//ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்...ஒண்ணும் சொல்லாம போகலை..//


வாங்கய்யா உங்களை நா ஒன்னுமே சொல்லலியே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi--//உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html //

வாங்க வாங்க ..!!நட்பே, அப்பவே தள்ளிகிட்டு வந்து செவுத்துல மாட்டி வச்சுட்டேனே பாருங்க. எப்படி நல்லா இருக்கா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

ஜெய்லானி வழக்கம் போல் கலக்கலான இடுகை.எப்பவும் உங்க ப்ளாக் ஜே ஜேன்னு இருக்கு.பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

@@@கவிதை காதலன்--//முடியலை... இப்பவே கண்ணை கட்டுது... உங்க திறமைக்கு நீங்க எங்க இருக்கணும் தெரியுமா?? நித்யானந்தா கிட்ட சிஷ்யரா இருந்திருக்கணும்.//

அப்ளிகேஷன் போட்டேனே அந்த பண்ணாடை பரதேசி .என்னை சேத்துக்கல ஹும் என்ன செய்ய தல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jey--//தல, உன்னப்பாத்தா, ரொம்ப மூளைக்காரனத்தெரியுது, நான் போட்ட புது பதிவு, ட்டேஷ்போர்டுல டிஸ்பிளே ஆகல, எப்படி சரி செய்ரதுனு கொஞம் சொறயா ராசா.//

உன் பதிவு உனக்கே தெரியுன்னுன்னா அதுக்கு நீயே ஃபாலோயராகனும் . அப்படி வராட்டா இந்த மாசமே நா போட்ட பிளாகர் டிப்ஸ் பதிவ படிச்சா புரியும்

//தீர்த்துவகாலைனா, மங்குனி செஞ்ச அரளி விதை டீப் ப்ரை பார்சல் அனுப்பப்படும்.//

ஒரு டன்னுக்கு ஏற்கனவே எல்லாரும் அனுப்பியது ஸ்டாக் இருக்கு மாம்ஸ் . ஆனா டேஸ்ட் பண்ணதான் டைம் இல்ல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//ஜெய்லானி வழக்கம் போல் கலக்கலான இடுகை.எப்பவும் உங்க ப்ளாக் ஜே ஜேன்னு இருக்கு.பாராட்டுக்கள்.//

வாங்க ..!! வாங்க.!!பாராட்டுக்கு நன்றி. விடுமுறை நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))