Friday, July 23, 2010

கண்களா ஒரு சந்தேகம்-4


       மனித  உணர்ச்சிகளில் பல வகைகள இருந்தாலும் .அதில் சந்தோஷத்தை அடுத்து அழுகைதான் அதிகம் இடம் பிடிக்குது. நாம் பார்த்தும் நமக்கும் சில நேரம் அதன் பாதிப்பு வந்து மனசு கஷ்டமாகி விடுகிறது. சிலதை படிக்கும் போதும் அப்படியே..

       அதிக உணர்ச்சி வசப்படுவது ஒரு மனுஷனுக்கு நல்ல தில்லை. அது இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வரை போய் விடும் அபாயமும் இருக்கு  .அதே நேரம் வெளிக்காட்ட பயந்தோ அல்லது வெட்கப்பட்டோ அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மன அழுத்தம் வந்து சில லூசுத்தனமான கேள்விகளும் (ஹி..ஹி.. என்ன மாதிரி இல்ல ) செயல்களும் (ஹிஸ்டீரியா) கூடவே வந்து விடுகிறது.. இது நா சொல்லல்ல பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். அதனால அளவோட வெளிப்படுத்தனும் சந்தோஷத்தையும் துக்கத்தையும்


     அதுப்போலவே சிரிப்பும் அதிக அளவு போனால் ரெண்டுமே கஷடம். என்ன ஒன்னு பக்கத்தில இருப்பவங்க ஒரு மாதிரியா பாப்பாங்க .. சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க  அவ்வ்வ்வ்வ்.

    எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும் .அனுப்பினாலும் சாப்பாடு கட், அந்த கிச்சன் ரகசியத்தை நாமே ஆராய வேண்டி வரும் அப்படி அனுப்பாட்டியும் சாப்பாடு கட் . உப்பிலிருந்து மிளகாய் வரை தாறுமாரா இருக்கும் .சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். கேட்டா சாரி கை தவறிடுச்சி.. நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க...


      கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு . பயபுள்ளைக்கு எதை நம்பறது எதை நம்ப கூடாதுன்னே தெரிய மாட்டேங்குது. . சின்ன பிறந்த குழந்தைகள கூட அழுவுது ஆனா கண்ணீர் வரதில்லை .  

    இப்ப இதில எனக்கு வர சந்தேகம் என்னன்னா ( உஸ்..யப்பா ஒரு வழியா வந்தாச்சு ) மழை வரதுக்கு முன்னே ஒரு காத்து அடிக்குமே அது மாதிரி மூக்கு சிலருக்கு துடிக்கும்.. எங்கேயே இடி இடிக்கிற மாதிரி ஒரு சவுண்ட் மூக்கு உறிஞ்சுற சத்தம் வரும் . அப்ப கன்ஃபாமா அழுகை ரெடி ஆகுதுன்னு அர்த்தம். அதை கேட்டு உஷாரா ஆகிட வேண்டியதுதான்.


     என்ன ஏதுன்னு கேட்டே ஆகனும் . கண்டும் கானாம மாதிரி இருந்தா உயிருக்கு உத்திர வாதமில்ல . இந்த அழுகைக்கும் இல்ல ,  கண்ணீருக்கும் ,  மூக்குக்கும் என்ன சம்பந்தம் .இது ஏன் முந்திரி கொட்டை கனக்கா முன்னால சவுண்ட் விடுது .ஏன் இந்த கொலவெறி . சரி சமாதனமா போனாலும் அரை மனிநேரத்துக்கு இந்த மூக்கு மட்டும் ஓவர் டைம் ஏன் பாக்குது.  

        கண்ணுக்கு கண்ணாடி வாங்கி போட்டாலும் மூக்கு கண்ணாடின்னு சொல்லிடறாங்க .அதுக்குதான் வளையத்தை தூக்கி போட்டுட்டு காண்டாட் லென்ஸ்ன்னு சொல்லிடரோம். அழுதாழும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது . அப்புறம் கோவம் வந்தாலும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது.. அது என்ன மூக்கு மேல கோவம் .அப்ப மூக்கு கீழே சமாதனமா..?  

    ஒரு வேளை முகத்துல முக்கு முன்னால இருப்பதாலா .யாருகாவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.. இந்த மூக்குக்கு ஒரு நோஸ் கட் வச்சிடலாம் 


113 என்ன சொல்றாங்ன்னா ...:

இமா க்றிஸ் said...

தூங்கப் போறேன். கண்ணு தெரியணும் அதான். ;)

இமா க்றிஸ் said...

ஹை! வடையா!!

ஜெய்லானி said...

@@@இமா--//தூங்கப் போறேன். கண்ணு தெரியணும் அதான். ;) //

சந்தோஷமா போய் தூங்குங்க . நல்ல கனவுகளா வரட்டும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

//சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்.// ம். ;)

இமா க்றிஸ் said...

//அப்ப மூக்கு கீழே சமாதனமா..?// ;)

இமா க்றிஸ் said...

//சந்தோஷமா போய் தூங்குங்க.//ஓகே!

இருந்தாலும் சரியான 'மக்குப் பூசணிக்காய்' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ;))

Anonymous said...

எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வருது..
என்னமோ போங்க..
மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!eppoodi

r.v.saravanan said...

ஆகா இப்படிலாமா யோசிப்பீங்க

athira said...

எனக்குது பிடிக்கேல்லை, வர வர ஜெய்..லானி வீட்டு வரவேற்பு குறைஞ்சுகொண்டே வருது:). உங்கட வரவேற்புக்காகவே அடிக்கடி வரவேண்டும் என நினைப்பதுண்டு.

ஆனால் இப்பவெல்லாம், வாறாக்களுக்கு ஒரு பிளேன்ன்ன்ன்ன் ரீ கூடக் கொடுக்காமல் புதுத் தலைப்பைப் போட்டுவிடுறீங்க.... இது நல்லாவே இல்லை:((, சொல்லிட்டேன்... பழக்கத்தை மாத்திடாதீங்க, நான் வரவேற்கும் பயக்கத்தைச் சொன்னேன்....

உஸ் அப்பா.... உள்ளே இருந்ததைக் கொட்டிட்டேன் இப்பத்தான் நிம்மதி....:)).

athira said...

ஆங்.......... இண்டைக்கு இட்சாப் பிட்சா போச்சே.... ஆ.... அதுவும் ஆருக்குப் போயிருக்கு..... முடியல்லே மக்கள்ஸ்ஸ்... இட்ஸ் ஓக்கை... அடுத்தமுறை பார்த்திடலாம்....

//சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க அவ்வ்வ்வ்வ்./// இரண்டுமே வாணாம் என்றால், அப்ப எப்பூடித்தான் காரியத்தைச் சாதிக்கச் சொல்றீங்க....:)).

இருந்தாலும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒபாமாவின் அழுகின்ற படம்தான் கிடைத்துதா உங்களுக்கு?:)..... புஸ்ஸ்ஸ்(பூஸ் அல்ல:), மேலே இருப்பவர்)அழுகிறமாதிரிப் போட்டிருந்தால்கூட ஓக்கை.

அப்ப மூக்கு கீழே சமாதனமா..? /// ஆங் இது கரெக்ட்டு:), மூக்குக்கு கீழ தானே “அவர்” இருக்கிறார்.... அதை அயகா ஓபின் பண்ணி, ஒரு ஸ்மைல் விட்டாலே... சமாதானம்தேஏஏஏஏஏஏஎன்....

Priya said...

ம்ம்.. முடியல:)

//அப்ப மூக்கு கீழே சமாதனமா..?//.... அதேதான். ஏன்னா மேலை நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கண்ணங்களில் முத்தமுட்டு கொள்கிறார்களே:)

kavisiva said...

சமீபத்துல வூட்டுல அடி வாங்குனீங்களா ஜெய்லானி?! ஓஹ் அது தினம் தினம் வாங்குறீங்களோ. இந்தவாட்டி மூக்கு ஒடஞ்சி போச்சோ அதான் இப்படி சந்தேகம் வந்துட்டுதோ?!
மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏஎப்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு .
//

ஆனந்தக்கண்ணீர் இனிக்கும்...
முதலை கண்ணிர் துவர்க்கும்...

வேணா try பண்ணிப்பாருங்களேன்..ஹி..ஹி

Menaga Sathia said...

//சமீபத்துல வூட்டுல அடி வாங்குனீங்களா ஜெய்லானி?! ஓஹ் அது தினம் தினம் வாங்குறீங்களோ. இந்தவாட்டி மூக்கு ஒடஞ்சி போச்சோ அதான் இப்படி சந்தேகம் வந்துட்டுதோ?!// ha ha super kavi..iyoo jailani mudiyala..naan appurama varen...

Jey said...

///பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்.///

யோவ், உனக்கே இது ஓவரா தெரியலே...., கால்ல தவறி விழுந்ததுக்கு ரொம்பத்தான் ஃபீல் பண்ணிக்கிறே...

பூரிக்கட்டையால, தலையில அடிவங்கிட்டிருக்கிற நாங்கல்லாம், வெளில ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா... போய்யா// போ போ..

ப்ரியமுடன் வசந்த் said...

//எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும் .அனுப்பினாலும் சாப்பாடு கட், அந்த கிச்சன் ரகசியத்தை நாமே ஆராய வேண்டி வரும் அப்படி அனுப்பாட்டியும் சாப்பாடு கட் . உப்பிலிருந்து மிளகாய் வரை தாறுமாரா இருக்கும் .சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். கேட்டா சாரி கை தவறிடுச்சி.. நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க...//

மச்சி சிரிப் ...

இமா அடிச்சு ஆடுறாங்க ஏதாவது பாடிகார்ட் வாங்கிக்கங்க ஜெய்லானி...

நாடோடி said...

என்ன‌வோ போங்க‌... வ‌ர‌லாற்றுல‌ முக்கிய‌ இட‌த்தை புடிக்க‌ போறிங்க‌..அவ்வ்வ்வ்

எல் கே said...

mudiyala thala

Chitra said...

ஒரு வேளை முகத்துல முக்கு முன்னால இருப்பதாலா .யாருகாவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.. இந்த மூக்குக்கு ஒரு நோஸ் கட் வச்சிடலாம்


.....ENT - Ear, Nose, Throat எல்லாமே ஒரே உணர்ச்சி ரேகைகளால் connected என்று எங்க பக்கத்து ஊரு ENT Specialist டாக்டர் அய்யா சொல்லிட்டாங்கப்பா.... பெண்களுக்கு, மூக்கு குத்தி அணிகலன் அணிவித்தது கூட, கோபரேகையை கட் செய்து, கூட்டு குடித்தன குடும்ப சூழலில் பொறுமை காக்க வைப்பதற்காக என்று ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்.... என்ன கொடுமை டா, சாமி. மாட்டுக்கும், மூக்கில் துவாரம் போட்டு விடுவதை போல.... அவ்வ்வ்வ்....

ஹேமா said...

ஓ...வெள்ளிக்கிழமை சந்தேகமா..நான் வெள்ளிக்கிழமைல விரதம்.பதில் சொல்லக்கூடாதாம் !

vanathy said...

ஜெய், இது என்ன எங்கள் தலீவர் அழுவாச்சிப் படமா போட்டிருக்கிறீங்க??? நல்லாவே இல்லை. இதில் என்ன சந்தேகம்? எனக்கு கேள்வியே விளங்கவில்லை ( அப்பாடா தப்பிச்சாச்சு..... ).

சீமான்கனி said...

//எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும் .அனுப்பினாலும் சாப்பாடு கட், அந்த கிச்சன் ரகசியத்தை நாமே ஆராய வேண்டி வரும் அப்படி அனுப்பாட்டியும் சாப்பாடு கட் .//

ஜெய்லானி விளக்கம் இதுலே இருக்கு கண்டு பிடிச்சுக்கவும்...ஏதோ என்னால முடிஞ்சது...

pinkyrose said...

//ஓ...வெள்ளிக்கிழமை சந்தேகமா..நான் வெள்ளிக்கிழமைல விரதம்.பதில் சொல்லக்கூடாதாம்//
எனக்கும் வெள்ளிக்கிழமை ஸ்பெசல் ஸோ கப்சிப்!

Karthick Chidambaram said...

//கோவம் வந்தாலும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது.. அது என்ன மூக்கு மேல கோவம் .அப்ப மூக்கு கீழே சமாதனமா..? //
எப்படி இப்படி ?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சரி சமாதனமா போனாலும் அரை மனிநேரத்துக்கு இந்த மூக்கு மட்டும் ஓவர் டைம் ஏன் பாக்குது. //

அதானே...?? நல்லா வருதுய்யா டவுட்டு...! :D :D

//எங்கேயே இடி இடிக்கிற மாதிரி ஒரு சவுண்ட் மூக்கு உறிஞ்சுற சத்தம் வரும் . அப்ப கன்ஃபாமா அழுகை ரெடி ஆகுதுன்னு அர்த்தம். அதை கேட்டு உஷாரா ஆகிட வேண்டியதுதான்///

எப்படி ரெடி ஜூட்-டுன்னு ஓடிர்ரதுக்கா????? :-))

///உப்பிலிருந்து மிளகாய் வரை தாறுமாரா இருக்கும் .சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். //

யாரு சொன்னா... தெரியாமன்னு????
அது தாங்கோ பிளானே..!! இது கூட தெரியல... ஐயோ ஐயோ...!!

///கேட்டா சாரி கை தவறிடுச்சி.. ///

அப்படி தான் சமாளிக்கறது.... பின்னே வேணும்னு தான் போட்டேன்னா சொல்லுவாங்க..

///நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க///

நல்லா கோஷம் போடுறீங்க.... வாழ்க..!!

இமா க்றிஸ் said...

//ஆ.... அதுவும் ஆருக்குப் போயிருக்கு..... முடியல்லே மக்கள்ஸ்ஸ்... // ஏதோ அதிசயமாக ஒரு முறை. எதுக்கு இப்பிடிப் புகையுறீங்கோ அதீஸ். ;)

ப.கந்தசாமி said...

//அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மண அழுத்தம் வந்து சில//

ஆமாங்க, அதென்னங்க "மண அழுத்தம்", கல்யாணமானவங்களுக்கெல்லாம் வரலாமுங்களா?

சும்மா ஒரு தமாசுக்கு. "ண,ன" வித்தியாசம் கவனியுங்க.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படியெல்லாம் கூடவா சந்தேகம் வரும்..

இமா க்றிஸ் said...

எனக்கும் வந்துது. ;)))
ஓட்டினது போதும், பாவம் ஜெய்லானி என்று விட்டு விட்டேன்.

Unknown said...

நல்லா கேக்குராகையா டீடைலு....

சாந்தி மாரியப்பன் said...

:-))))))))))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

யாரங்கே.. டைகரக் கூப்பிடுங்க... டைகர் வந்த பின்னாடிதான் படிக்கவே ஆரம்பிப்பேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//மண அழுத்தம்//

:))))))))))))

//அதே நேரம் வெளிக்காட்ட பயந்தோ அல்லது வெட்கப்பட்டோ அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மண அழுத்தம் வந்து//

தங்க்ஸ் கிட்ட அடி வாங்குனா வெக்கத்த விட்டு அழுதுடோனும்.. ஓக்கை??

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். //

பெட்ஷீட்டா?

//.சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். கேட்டா சாரி கை தவறிடுச்சி.. நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க//

ஹாஹ்ஹா.. பாத்து, ஏமாந்த சமயத்துல மிக்சிக்குள்ளாற கையக் கொண்டுபோய் விட்டுறப் போறாங்க :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//கண்ணீருக்கும் , மூக்குக்கும் என்ன சம்பந்தம்//

கண் ஓரமா இருக்கற தண்ணி டாங்க்ல யிருந்து மூக்குக்கு தண்ணி பைப் போவுது (சத்தியமா..).. அதான்..

//இந்த மூக்குக்கு ஒரு நோஸ் கட் வச்சிடலாம்//

ஜெய்லானி மூக்குக்குத் தானே? கண்டிப்பா :) டைகர்.. இந்தா, இந்தக் கத்தியப் புடி..

இமா க்றிஸ் said...

Lsss. ;) x 25

Vidhya Chandrasekaran said...

ஸப்பா. இப்பவே கண்ண கட்டுதே.

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது.

மங்குனி அமைச்சர் said...

.சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்////


உன் கஷ்டம் புரியுது ஜெய்லானி

சசிகுமார் said...

//இது நா சொல்லல்ல பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். //

இது தான் ஹைலைட்

தூயவனின் அடிமை said...

இது இதுக்கு தான் முன்னாடிய டாக்டர் பட்டம் கொடுத்தேன்.

தூயவனின் அடிமை said...

இந்த கண்ணீரை எப்படி கண்டு பிடிப்பது,அனுபவம் பட்ட ஆட்களிடம் கேட்டு கொள்ள வேண்டும்.
தெரியாததி தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று யாரோ சொன்ன நினைவு.

எம் அப்துல் காதர் said...

//சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க அவ்வ்வ்வ்வ்.//

அதாரு அவ??..வீட்டம்மாவுக்கு தெரியுமா?? நம்பர் ப்ளீஸ்..??

எம் அப்துல் காதர் said...

//எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும்.அனுப்பினாலும் சாப்பாடு கட், //

சிரிப்பா வரும்??.உண்மைய சொல்லணும். ஹி..ஹி. நாம தேவலாம் போலிருக்கு அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

எம் அப்துல் காதர் said...

//கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு. பயபுள்ளைக்கு எதை நம்பறது எதை நம்ப கூடாதுன்னே தெரிய மாட்டேங்குது.//

நெசமாவா??? க்கி.. க்கி..

எம் அப்துல் காதர் said...

//கண்ணுக்கு கண்ணாடி வாங்கி போட்டாலும் மூக்கு கண்ணாடின்னு சொல்லிடறாங்க.அதுக்குதான் வளையத்தை தூக்கி போட்டுட்டு காண்டாட் லென்ஸ்ன்னு சொல்லிடரோம்.//

நீங்க காண்டாட் லென்சா பாஸ் சொல்லவே இல்ல.. ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

அப்புறம் நேத்து "வேதியியல்" என்று ஏதோ படித்ததாக சொன்னீங்களே அதுக்கும் இதுக்கும் ....??

எம் அப்துல் காதர் said...

//பெண்களுக்கு, மூக்கு குத்தி அணிகலன் அணிவித்தது கூட, கோபரேகையை கட் செய்து, கூட்டு குடித்தன குடும்ப சூழலில் பொறுமை காக்க வைப்பதற்காக என்று ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்//

அப்ப மூக்கு குத்திகிட்டா கோபம் வராதாமா?? ஹை ஜாலி!!!

Asiya Omar said...

ஏதாவது சொல்லனுமே ! நல்லாயிருக்கு.

ஜெய்லானி said...

@@@இமா--//சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்.// ம். ;) //

என்னது ம்-ன்னு சொல்றீங்க .நிறைய தடவை போட்ட அனுபவமா தெரியுதே ..ஹி..ஹி...

////அப்ப மூக்கு கீழே சமாதனமா..?// ;)

இதுக்கும் சிரிப்புதானா....ஹும்..அவ்வ்வ்வ்

//இருந்தாலும் சரியான 'மக்குப் பூசணிக்காய்' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ;))//

இமா மாமி அதுக்காக மாம்ஸ நீங்க இப்பிடி சொல்வதை ரங்ஸ் சங்க செயலாளார் என்ற முறையில் ,வண்மையாக கண்டிக்கிறேன்..( அய்யோ வீட்டில போட்டு குடுத்திடாதீங்க )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Indhira--//எப்படிங்க உங்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வருது..என்னமோ போங்க..மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான்..//

என்னங்க பன்றது சந்தேகம் கேட்டாவே யாரும் பதில சொல்ல மாட்டேங்கிறாங்க ..அதனால சந்தேகம் இன்னும் நிறையவா வருது ..மூக்குக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா..!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!eppoodi //

புத்திசாலி ..சூப்பர் ..அப்புறம் அடுத்த வாரம் ஊருக்குபயணமா ..!! வாழ்த்துக்கள் ..!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//ஆகா இப்படிலாமா யோசிப்பீங்க//

ஆமாங்க..!! கொஞ்சமா ஹி..ஹி..அப்ப அப்ப மூளைக்கு சில்வர் கலர் பெயிண்ட் அடிப்பது வழக்கம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//எனக்குது பிடிக்கேல்லை, வர வர ஜெய்..லானி வீட்டு வரவேற்பு குறைஞ்சுகொண்டே வருது:). உங்கட வரவேற்புக்காகவே அடிக்கடி வரவேண்டும் என நினைப்பதுண்டு.//

அடடா என்ன இப்பிடி சொல்லிட்டீங்க அதிஸ் பாட்டி...!! இந்த பேராண்டி யாரையும் இன்னும் மறக்கல

//ஆனால் இப்பவெல்லாம், வாறாக்களுக்கு ஒரு பிளேன்ன்ன்ன்ன் ரீ கூடக் கொடுக்காமல் புதுத் தலைப்பைப் போட்டுவிடுறீங்க...... இது நல்லாவே இல்லை:((, சொல்லிட்டேன்... பழக்கத்தை மாத்திடாதீங்க, நான் வரவேற்கும் பயக்கத்தைச் சொன்னேன்......//

ஒன்னுமில்ல கொஞ்சமா ஆணித்தொல்லை அதான் . கூடவே வெய்யில் அதான் வேற் ஒன்னுமில்லை.. என்ன சப்பிடுறீங்க என் கையாலேயே நா போட்ட லெமன் ஜுஸ் கூலா இருக்கு வேனுமா ..ஹி..ஹி..

//உஸ் அப்பா.... உள்ளே இருந்ததைக் கொட்டிட்டேன் இப்பத்தான் நிம்மதி....:)).//

அப்படிதாங்க சொல்லனுமின்னு டாக்....டர்ர்ர்ர்ர் சொல்றாங்க...ஹி..ஹி..

//ஆங்.......... இண்டைக்கு இட்சாப் பிட்சா போச்சே.... ஆ.... அதுவும் ஆருக்குப் போயிருக்கு..... முடியல்லே மக்கள்ஸ்ஸ்... //

ஆஹா.. பாட்டிக்கும் சாரி பேபிக்கும் மாமிக்கும் போட்டியா...அதுவும் இட்லி வடை , தோசை பொங்கல் எல்லா, இன்னைக்கு இமா மாமிக்கு மட்டுமேஏஏஏஏஎ

//இட்ஸ் ஓக்கை... அடுத்தமுறை பார்த்திடலாம்....//

பாத்திடலாம் இல்ல சப்பிட்டுடலாம் ..காதை காட்டுங்க வேனா ஒரு செட் உங்களுக்காக தனியா வைச்சிடரேன் .. பூசாருக்கு மோப்பம் அதிகமா கம்மியா தெரியலையே...

//சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க அவ்வ்வ்வ்வ்./// இரண்டுமே வாணாம் என்றால், அப்ப எப்பூடித்தான் காரியத்தைச் சாதிக்கச் சொல்றீங்க....:)).//


கிச்சு கிச்சு காட்டி வாங்கிடலாமோ..ஹி..ஹி.. க்கி..க்கி..

//இருந்தாலும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒபாமாவின் அழுகின்ற படம்தான் கிடைத்துதா உங்களுக்கு?:).//

இது ஆனந்த கண்ணீர் என் பிளாக்குல வந்ததால

//.... புஸ்ஸ்ஸ்(பூஸ் அல்ல:), மேலே இருப்பவர்)அழுகிறமாதிரிப் போட்டிருந்தால்கூட ஓக்கை.//

அதான் அவர் மூஞ்சை பாத்தால் தெரியல க்கி..க்கி...கீஈஈஈஈ

//அப்ப மூக்கு கீழே சமாதனமா..? /// ஆங் இது கரெக்ட்டு:), மூக்குக்கு கீழ தானே “அவர்” இருக்கிறார்.... அதை அயகா ஓபின் பண்ணி, ஒரு ஸ்மைல் விட்டாலே... சமாதானம்தேஏஏஏஏஏஏஎன்....//


பதிலுக்கு வேற தட்டு கிட்டு பறந்து வந்தா என்ன செய்யறதாங்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இது நல்ல உபயோகமான இடுகை!
(ஏதாவது சொல்லணுமே, சொல்லியாச்சி!
அப்பாடா!!)

ஜெய்லானி said...

@@@Priya--// ம்ம்.. முடியல:)//

என்னங்க இதுக்கேவா..? இன்னும் இருக்கே நிறைய..ஹா..ஹ..

//அப்ப மூக்கு கீழே சமாதனமா..?//.... அதேதான். ஏன்னா மேலை நாடுகளில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கண்ணங்களில் முத்தமுட்டு கொள்கிறார்களே:) //

நல்லா பாத்தீங்களா அதுல சந்தேகம் ஒன்னுமில்லையே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

ரைட்டு....!

நட்புடன்
காஞ்சி முரளி

mkr said...

இப்படியேலாம் யோசிக்கிறிங்கே...(வ்வ்வ்...........என்னால் அழுகை கட்டுபடுத்த முடியவில்லை) பூரிக்கட்டை தவறி மு(க்கில்)கத்தில் விழுந்து விட்டதா...

சூன்யா said...

எங்க வீட்டுல ரெண்டு பேருமே பூரிக்கட்டை யூஸ் பண்றோம். (பூரி, சப்பாத்தி போட இல்லை..)

ஜெய்லானி said...

@@@kavisiva--//சமீபத்துல வூட்டுல அடி வாங்குனீங்களா ஜெய்லானி?! ஓஹ் அது தினம் தினம் வாங்குறீங்களோ. இந்தவாட்டி மூக்கு ஒடஞ்சி போச்சோ அதான் இப்படி சந்தேகம் வந்துட்டுதோ?!
மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏஏஎப் //

உஸ்...கவி மெதுவா என் காதுல மட்டும் சொல்லுங்க .எலிக்காதோட சிலப்பேர் இங்க சுத்திகிட்டு இருக்காங்க அவங்க காதுல விழுந்துடப்போகுது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

jailani machan,

supera erukku unga blog...

enna machan..vara vara romba yesikrenga pola..

varatta..

vanathy said...

சந்தூ,

// யாரங்கே.. டைகரக் கூப்பிடுங்க... டைகர் வந்த பின்னாடிதான் படிக்கவே ஆரம்பிப்பேன்..//
டைகர் இதோ இங்கே தான் மறைவா நிற்கிறேன். ஜெய் கண்ணிலை மாட்டாமல் தப்ப வேண்டும்.

ரோஸ்விக் said...

வீட்டுல கொஞ்சம் சாஸ்தியா விழுந்துடுச்சோ? :-)

அழுகுறதை பத்தி சிரிக்க சிரிக்க எழுதியிருக்கீங்களே... ரசிக்கும்படியா இருக்கு ஜெய்லானி.. :-)

ஸாதிகா said...

இந்த சந்தேகம் ஜெய்லானி அண்ணாச்சியை விட்டு போய்ட்டால் பூரிக்கட்டையாலேயே மூக்கில் நாலு போடணும்ன்னு வேண்டிக்கறேன்.(யார் மூக்குங்றதுதான் குழப்பமாக இருக்கு.)

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு .
//

ஆனந்தக்கண்ணீர் இனிக்கும்...
முதலை கண்ணிர் துவர்க்கும்...

வேணா try பண்ணிப்பாருங்களேன்..ஹி..ஹி //

என்னது டிரை பண்ணி பாக்கவே...?உயிருக்கு கேரண்டி யார் தருவா..?அவ்வ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//சமீபத்துல வூட்டுல அடி வாங்குனீங்களா ஜெய்லானி?! ஓஹ் அது தினம் தினம் வாங்குறீங்களோ. இந்தவாட்டி மூக்கு ஒடஞ்சி போச்சோ அதான் இப்படி சந்தேகம் வந்துட்டுதோ?!// ha ha super kavi..iyoo jailani mudiyala..naan appurama varen...//

மேனகாக்கா நீங்க சொன்னா அப்ப சரியாதான் இருக்கும் ஏன்னா ஒலியின்( கிச்சனின் )ஓசை சரியா வருமுன்னு Dr. Phil சொன்னாரே..க்கி..க்கி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jey --//பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்.///

யோவ், உனக்கே இது ஓவரா தெரியலே...., கால்ல தவறி விழுந்ததுக்கு ரொம்பத்தான் ஃபீல் பண்ணிக்கிறே...//

ஏன்யா கேக்க மாட்டே நீதான் கிச்சனுகுள்ளேயே கிரிக்கெட் பேடோட அலையிறியே..!!

//பூரிக்கட்டையால, தலையில அடிவங்கிட்டிருக்கிற நாங்கல்லாம்,//

ஓஹ்...அன்னைக்கி ஹெல்மெட் போட மறந்துட்டியா ஐயோ..பாவம் .ஆமா எத்தனை தையல் அடி பலமோ..?

//வெளில ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா... போய்யா// போ போ //

ஹா..ஹ..அதான்யா ஆம்பிளைக்கு அழகு. யாரு நாம சிங்கமில்ல..வழக்கி விழுந்தாலும் சிங்கம் சிங்கம்தாம்லே..!!..அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன் வசந்த்--//மச்சி சிரிப் ...//


என்னங்கடா இது ஒரு சந்தேகம் கேட்டா அதை தீர்த்து வைப்பாங்கன்னு பார்தால் விட்டு புட்டு....

//இமா அடிச்சு ஆடுறாங்க ஏதாவது பாடிகார்ட் வாங்கிக்கங்க ஜெய்லானி...//

ச்சே..ச்சே..இமா மாமி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//என்ன‌வோ போங்க‌... வ‌ர‌லாற்றுல‌ முக்கிய‌ இட‌த்தை புடிக்க‌ போறிங்க‌..அவ்வ்வ்வ் //

எப்படி லகிட பாண்டிகள் மாதிரியா..!!ஸ்டீபன்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//mudiyala thala //

சீக்கிரம் வாங்க..நான் பொருமையா வைட் பண்ரேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--// .....ENT - Ear, Nose, Throat எல்லாமே ஒரே உணர்ச்சி ரேகைகளால் connected என்று எங்க பக்கத்து ஊரு ENT Specialist டாக்டர் அய்யா சொல்லிட்டாங்கப்பா....//

வாங்க ...வாங்க ...இத்தனை தடவை மாட்டாம சரியா மாட்டிகிட்டீங்க ..இந்ததடவை...காது மூக்கு தொண்டை சரி நா கேட்டது கண்னு கலங்க போவதுக்கு முன்ன மூக்கு ஏன் ஓவர் டைம் பாக்குது சுர்..சுர்ன்னு ஒரு சத்தம் கேக்குமே ..அழுது முடிச்ச பிறகும் கொஞ்ச நேரத்துக்கு சத்தம் வருதே ஏன்..?//பெண்களுக்கு, மூக்கு குத்தி அணிகலன் அணிவித்தது கூட, கோபரேகையை கட் செய்து, கூட்டு குடித்தன குடும்ப சூழலில் பொறுமை காக்க வைப்பதற்காக என்று ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்....//

மூக்கு குத்திய பென்களுக்கு கோவம் கம்மியா வரும் ஆனா அதில்மாட்ட வைர மூக்குத்தி வாங்கி கேட்டா நமக்கு மூக்குக்கு மேல கோவமும் கண்ணூல தண்ணியும் வருதே ஏன்..

//என்ன கொடுமை டா, சாமி. மாட்டுக்கும், மூக்கில் துவாரம் போட்டு விடுவதை போல.... அவ்வ்வ்வ்....//

ஹா..ஹா.. அதுக்குதான் மேடம் மாட்டுப்பொன்னுன்னு சொலறாங்க தெரியாதா ஹி..ஹி..ஹய்யோ..ஹய்யோ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஓ...வெள்ளிக்கிழமை சந்தேகமா..நான் வெள்ளிக்கிழமைல விரதம்.பதில் சொல்லக்கூடாதாம் !//

வாங்க குழந்தை நிலா..!! நல்ல பாலிஸி எனக்காக பயந்துகிட்டுதானே இந்த விரதம்..அப்ப சந்தேகத்தை அடுத்த நாள வச்சிகிரேன் ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், இது என்ன எங்கள் தலீவர் அழுவாச்சிப் படமா போட்டிருக்கிறீங்க??? நல்லாவே இல்லை. இதில் என்ன சந்தேகம்? எனக்கு கேள்வியே விளங்கவில்லை ( அப்பாடா தப்பிச்சாச்சு..... ).//

யப்பா நா தப்பிச்சேன் வில்லங்கமா கேள்வி கேக்குர ஒரு ஆள எஸ்கேப். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்( ஒன்னுமில்ல விசில்)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

//ச்சே..ச்சே..இமா மாமி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க .// தாங்யூ தாங்யூ தாங்க்யூ. ;))

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும் .அனுப்பினாலும் சாப்பாடு கட், அந்த கிச்சன் ரகசியத்தை நாமே ஆராய வேண்டி வரும் அப்படி அனுப்பாட்டியும் சாப்பாடு கட் .//

ஜெய்லானி விளக்கம் இதுலே இருக்கு கண்டு பிடிச்சுக்கவும்...ஏதோ என்னால முடிஞ்சது...//

வாங்க கனி..பரவா இல்லை ஏதோ டிரை பண்ணி இருக்கீங்க எஸ்கேப் ஆகிறதுக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@pinkyrose--//ஓ...வெள்ளிக்கிழமை சந்தேகமா..நான் வெள்ளிக்கிழமைல விரதம்.பதில் சொல்லக்கூடாதாம்//
எனக்கும் வெள்ளிக்கிழமை ஸ்பெசல் ஸோ கப்சிப்!/

பிங்கி இதெல்லாம் அழுகுனி ஆட்டம் ...((யப்பா இவங்களும் எஸ்கேப்பா தப்பிச்சது தலை))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Karthick Chidambaram--//கோவம் வந்தாலும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது.. அது என்ன மூக்கு மேல கோவம் .அப்ப மூக்கு கீழே சமாதனமா..? //
எப்படி இப்படி ? //

ஹா..ஹ.. கண்டுகாதீங்க கார்ததிக் அது ஒரு ஃபுளோல தானா வருது.. மேட்டர் அப்படி பட்டது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//சரி சமாதனமா போனாலும் அரை மனிநேரத்துக்கு இந்த மூக்கு மட்டும் ஓவர் டைம் ஏன் பாக்குது. //

அதானே...?? நல்லா வருதுய்யா டவுட்டு...! :D :D //

கேள்வி என்னைய கேக்கலதானே...!!

//எங்கேயே இடி இடிக்கிற மாதிரி ஒரு சவுண்ட் மூக்கு உறிஞ்சுற சத்தம் வரும் . அப்ப கன்ஃபாமா அழுகை ரெடி ஆகுதுன்னு அர்த்தம். அதை கேட்டு உஷாரா ஆகிட வேண்டியதுதான்///

எப்படி ரெடி ஜூட்-டுன்னு ஓடிர்ரதுக்கா????? :-))//

முடியலையே கதவசாத்தி வச்சா எங்கே ஓடறது..அவ்வ்வ்

///உப்பிலிருந்து மிளகாய் வரை தாறுமாரா இருக்கும் .சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். //

யாரு சொன்னா... தெரியாமன்னு????
அது தாங்கோ பிளானே..!! இது கூட தெரியல... ஐயோ ஐயோ...!!//


பிளான் சூப்பர் ..ஆனா சொல்லிட்டு அடிக்கனும் எதுவா இருந்தாலும் .இப்பிடி எதிர்பாக்காம அடிக்க கூடாது ஆமா சொல்லிட்டேன்..

///கேட்டா சாரி கை தவறிடுச்சி.. ///

அப்படி தான் சமாளிக்கறது.... பின்னே வேணும்னு தான் போட்டேன்னா சொல்லுவாங்க..//

ஹும் பயபுள்ளமேல அவ்வளவு பாசம் , நேசம் ..

///நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க///

நல்லா கோஷம் போடுறீங்க.... வாழ்க..!!//

ஆமா இருக்காதா பின்ன .அனுபபட்ட ஆள் சொன்னா அதுசரியாதான் இருக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//ஆ.... அதுவும் ஆருக்குப் போயிருக்கு..... முடியல்லே மக்கள்ஸ்ஸ்... // ஏதோ அதிசயமாக ஒரு முறை. எதுக்கு இப்பிடிப் புகையுறீங்கோ அதீஸ். ;) //

அது ஒன்னுமில்ல இமா மாமி மரத்திலிருந்து பாய்ந்து ஓடி வந்தும் ஒரே நேரத்துல 5 கமெண்ட் வடை சட்னி . காலி பிளேட் கூட கிடைக்கலையா அதான் ..நம்ப முடியல அதிஸால ..... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

எப்போதான் இங்க வந்து இருக்கிற கடைசி கமண்டுக்குப் பதில் போட்டு முடிக்கப் போறீங்க? ;)

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மண அழுத்தம் வந்து சில//

ஆமாங்க, அதென்னங்க "மண அழுத்தம்", கல்யாணமானவங்களுக்கெல்லாம் வரலாமுங்களா? //

ஆமாங்க வாத்தியாரே இது அதிகம் மணமானவங்களுக்குதானே வருது ..வாஜ்பாய் , அப்துல்கலாமுக்கு ஏன் வரதில்லை அவங்கலுக்கு வரதெல்லாம் முட்டிகால் வலிதானே...ஹி..ஹி..

//சும்மா ஒரு தமாசுக்கு. "ண,ன" வித்தியாசம் கவனியுங்க.//

சரிங்கன்னா..ச்சே..சரிங்ண்ணா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--// இப்படியெல்லாம் கூடவா சந்தேகம் வரும்..//

ஹா..ஹா..நீங்க வெறும்பயவா இல்ல கல்யாணம் ஆன பயலா..முதல்ல சொல்லுங்க சார் .பதில நா சொல்ரேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//எனக்கும் வந்துது. ;)))
ஓட்டினது போதும், பாவம் ஜெய்லானி என்று விட்டு விட்டேன்.//

அதுக்குதான் நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சர்டிஃபிகேட் குடுத்தேனே பாக்க்லையா.. ஹி..ஹி..(( -- ---- --- --- --- என்னது கேப் விடாம அடிக்காதீங்க )) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//நல்லா கேக்குராகையா டீடைலு....//

நா ஒன்னுதானேங்க கேட்டேன் .அதுக்கு யாருமே பதில குடுக்கலை என்ன செய்ய சரி அடுத்த சந்தேகத்தில பாத்துக்கிறேன் .அவ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--:-)))))))))) //

ஓஹ் ..சிரிப்பாஆஆஆஆஆஆ அப்ப சரி...சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//யாரங்கே.. டைகரக் கூப்பிடுங்க... டைகர் வந்த பின்னாடிதான் படிக்கவே ஆரம்பிப்பேன்..//

ஏங்க அதை அழ வச்சி பாக்க ஆசையா..? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

////மண அழுத்தம்//

:)))))))))))) //

க.க.க.போ..

////அதே நேரம் வெளிக்காட்ட பயந்தோ அல்லது வெட்கப்பட்டோ அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மண அழுத்தம் வந்து//

தங்க்ஸ் கிட்ட அடி வாங்குனா வெக்கத்த விட்டு அழுதுடோனும்.. ஓக்கை?? //

அழுதா வாயை மூடுன்னு சொல்லி இன்னும் விழுந்தா என்ன செய்ய..!!

////பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். //

பெட்ஷீட்டா? //

ம் இல்ல மாட்டுக்கு போடும் ஊசி மாதிரி வச்சி குத்தும் அதிகாரம்...

////.சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். கேட்டா சாரி கை தவறிடுச்சி.. நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க//

ஹாஹ்ஹா.. பாத்து, ஏமாந்த சமயத்துல மிக்சிக்குள்ளாற கையக் கொண்டுபோய் விட்டுறப் போறாங்க :)//

உஸ்..ஸ்..அதை கொஞ்சம் மெதுவா சொல்லுங்க .யாருக்காவது கேட்டிடப்போகுது.. விரலுக்கும் வேலை வச்சிடுவீங்க போலிருக்கே..அவ்வ்வ்வ்...

////கண்ணீருக்கும் , மூக்குக்கும் என்ன சம்பந்தம்//

கண் ஓரமா இருக்கற தண்ணி டாங்க்ல யிருந்து மூக்குக்கு தண்ணி பைப் போவுது (சத்தியமா..).. அதான்..

//இந்த மூக்குக்கு ஒரு நோஸ் கட் வச்சிடலாம்//

ஜெய்லானி மூக்குக்குத் தானே? கண்டிப்பா :) டைகர்.. இந்தா, இந்தக் கத்தியப் புடி..//

அடப்பாவி..!!! சந்தூஊஊஊஊ..ஏன் இந்த கொலவெறி....யாராவது காப்ப்பாத்த்த்த்த்த்த் துங்களேன்ன்ன்ன்ன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--// Lsss. ;) x 25 //

எனக்கும் அதை பாத்தாதான் பயமா இருக்கு.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வித்யா--//ஸப்பா. இப்பவே கண்ண கட்டுதே.//

அட எனக்கும்தாங்க .என்ன செய்ய சந்தேகம் கேட்டாவே வேற பதிலா வருதே...ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது.//

ஒன்னுமில்ல அக்பர்..மூளைக்கி வாரத்துக்கு ரெண்டுதடவை சில்வர் பெயிண்ட் அடிப்பதால அப்படி ஆகுது. இல்லாட்டி துரு பிடிச்சுக்கும் கடலோரம் இல்லையா அதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும்////
உன் கஷ்டம் புரியுது ஜெய்லானி //

மங்கு இதுல உன்னோட அனுபவம் புரியுது என்ன சொல்ல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//இது நா சொல்லல்ல பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். //

இது தான் ஹைலைட் //

கரெக்ட் ஆனா ஒரு சந்தேகத்துக்கும் பதில் சொல்லலையே..ஃபிரண்ட். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//இது இதுக்கு தான் முன்னாடிய டாக்டர் பட்டம் கொடுத்தேன் //

அடடா கவனிக்கலையே..அப்ப்டியே ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி குடுத்துட்டா ரொம்பவும் வசதியா இருக்கும்..ஹி..ஹி..

//இந்த கண்ணீரை எப்படி கண்டு பிடிப்பது,அனுபவம் பட்ட ஆட்களிடம் கேட்டு கொள்ள வேண்டும்.
தெரியாததி தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று யாரோ சொன்ன நினைவு.//

அதுக்குதான் சொன்னேன் நீங்க ஹஸ்பிடல் கட்டி குடுத்தா அதுல ரிசர்ச் அண்ட் டெவலப் மெண்ட் நா ஆரம்பிச்சுடுவேன்....இன்னும் சந்தேகம் கைவசம் 4996 இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்-//சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க அவ்வ்வ்வ்வ்.//

அதாரு அவ??..வீட்டம்மாவுக்கு தெரியுமா?? நம்பர் ப்ளீஸ்..?? //

இது என்ன புதுசா சிண்டு முடியர வேலை..நெம்பர்தானே 0123456789 பத்து நெம்பர் சரியா வருதா.ஸ் யப்பாஆஆஆ

////எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும்.அனுப்பினாலும் சாப்பாடு கட், //

சிரிப்பா வரும்??.உண்மைய சொல்லணும். ஹி..ஹி. நாம தேவலாம் போலிருக்கு அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் /..

அங்கையுமா இப்பிடி ஹி..ஹி...மக்கா மனசு இப்ப சந்தோஷமா இருக்கு..க்கி..க்கி...

////கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு. பயபுள்ளைக்கு எதை நம்பறது எதை நம்ப கூடாதுன்னே தெரிய மாட்டேங்குது.//

நெசமாவா??? க்கி.. க்கி..//

ஆமாப்பா ஆமாம் ..அவ்வ்வ்

//
நீங்க காண்டாட் லென்சா பாஸ் சொல்லவே இல்ல.. ஹி..ஹி..//

நமக்கு கழுகு கண்ணு லென்சுக்கு இன்னும் அவசியம் வரல...ஆனா ராத்திரியில தூங்கும் போது கண்ணு சரியா தெரியறதில

//அப்புறம் நேத்து "வேதியியல்" என்று ஏதோ படித்ததாக சொன்னீங்களே அதுக்கும் இதுக்கும் ....??//

இது உயிரியல் பாஸ்..அதாவது....ஹி..ஹி..

////பெண்களுக்கு, மூக்கு குத்தி அணிகலன் அணிவித்தது கூட, கோபரேகையை கட் செய்து, கூட்டு குடித்தன குடும்ப சூழலில் பொறுமை காக்க வைப்பதற்காக என்று ஒரு புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன்//

அப்ப மூக்கு குத்திகிட்டா கோபம் வராதாமா?? ஹை ஜாலி!!!//

யாருங்கு உமக்கா யேவ் பாத்தா நல்லாவா இருக்கும்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

http://rkguru.blogspot.com/ said...

அப்பா பதிவுக்கு சலிக்காம பதில்......

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இப்ப இதில எனக்கு வர சந்தேகம் என்னன்னா //
அதானே... இன்னும் காணோமேனு பாத்தேன்... ஹா ஹா ஹா

மூக்கு சந்தேகமா...நீங்க விஞ்ஞானி தக்குடு அவர்களை காண்டக்ட் பண்ணுங்க... அவர் அதுல PHD பண்ணி இருக்கார்னு கேள்வி... (ஹி ஹி ஹி)

அது சரி... உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருது.. பேசாம ஒரு நிஜ டாக்டர்ஐ பாருங்களேன்... ஹி ஹி ஹி

ஜெய்லானி said...

@@@asiya omar--//ஏதாவது சொல்லனுமே ! நல்லாயிருக்கு.//

வாங்க..!!ஆசியாக்கா..!!இதுல எதுவும் உள்குத்து ஒன்னுமில்லையே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//இது நல்ல உபயோகமான இடுகை!
(ஏதாவது சொல்லணுமே, சொல்லியாச்சி!
அப்பாடா!!) //

வாங்க நிஜாம் பாய்..!!இது யாருக்கு உபயோகமுன்னு அப்படியே சொல்லிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--// ரைட்டு....!
நட்புடன் காஞ்சி முரளி..//


வாங்க ..வாங்க..!!ரைட் எந்த பக்கம் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@mkr--//இப்படியேலாம் யோசிக்கிறிங்கே...(வ்வ்வ்...........என்னால் அழுகை கட்டுபடுத்த முடியவில்லை) பூரிக்கட்டை தவறி மு(க்கில்)கத்தில் விழுந்து விட்டதா...//

ஹா..ஹா.. யோசனைக்கி பஞ்சமா என்ன ..?. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது வாத்தியாரே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Soonya--//எங்க வீட்டுல ரெண்டு பேருமே பூரிக்கட்டை யூஸ் பண்றோம். (பூரி, சப்பாத்தி போட இல்லை..)//

சபாஷ் சரியான போட்டி..!!யாருக்கு அதிக ரத்தபோக்கு...வீக்கம்...எலும்பு முறிவு.!!வாழ்க..வாழ்த்துக்கள்..இன்று போல் என்றும் வாழ்க..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@siva--//jailani machan, supera erukku unga blog...enna machan..vara vara romba yesikrenga pola.. varatta.. //


பாராட்டுக்கு நன்றி பாஸ்..!!யோசனை இல்லாம ஏது வாழ்க்கை..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//
@@@சந்தூ,// யாரங்கே.. டைகரக் கூப்பிடுங்க... டைகர் வந்த பின்னாடிதான் படிக்கவே ஆரம்பிப்பேன்..//
டைகர் இதோ இங்கே தான் மறைவா நிற்கிறேன். ஜெய் கண்ணிலை மாட்டாமல் தப்ப வேண்டும்.//

ஹா..ஹா..வான்ஸ் இன்னும் இந்த பயம் போகலையா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புல்லாங்குழல் said...

நல்ல கற்பனை வளம். நகைச்சுவையுணர்வு.அருமையாக எழுதுகிறீர்கள் ஜெய்லானி!

ஜெய்லானி said...

@@@ரோஸ்விக்--//வீட்டுல கொஞ்சம் சாஸ்தியா விழுந்துடுச்சோ? :-) //

ரோஸூ ரகசியத்தை பப்ளிக்கா சொல்லக்கூடாது..அவ்வ்

//அழுகுறதை பத்தி சிரிக்க சிரிக்க எழுதியிருக்கீங்களே... ரசிக்கும்படியா இருக்கு ஜெய்லானி.. :-)//

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே பாஸ்..எப்பவும் இப்படிதான் இப்பவும் அப்படிதான்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//இந்த சந்தேகம் ஜெய்லானி அண்ணாச்சியை விட்டு போய்ட்டால் பூரிக்கட்டையாலேயே மூக்கில் நாலு போடணும்ன்னு வேண்டிக்கறேன்.//

ஸாதிகாக்கா..!!ஹா..ஹா..என்னது வேண்டுதலா. .க்கி..க்கி..வேண்டுதல் பலிக்க வாழ்த்துக்கள்...

//(யார் மூக்குங்றதுதான் குழப்பமாக இருக்கு.)//

பாத்தீங்க ஹா..ஹா..உங்களுக்கும் சந்தேகம் + குழப்பமா, என் பேர சொல்லி நாலு மங்குக்கு போட்டுடுங்கோ அப்படி தப்பிச்சா இங்க ஒருத்தர் இருக்கார் பேர் அபதுல் காதராம் போட்டுடுங்க ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//ச்சே..ச்சே..இமா மாமி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க .// தாங்யூ தாங்யூ தாங்க்யூ. ;)) //

ஓஹ்..எக்கோ எஃபெக்டா...உண்மைதானே... உண்மைதானே...உண்மைதானே......:-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//எப்போதான் இங்க வந்து இருக்கிற கடைசி கமண்டுக்குப் பதில் போட்டு முடிக்கப் போறீங்க? ;) //

வெற ஒன்னுமில்ல இமா மாமி அது வந்து.. கம்பெனி வேலை முடிஞ்சி வந்ததும் சாட்டிங் + மூஞ்சி புக் + மெயிலுக்கு பதில் + எல்லா பிளாக்குக்கும் ஒரு விசிட் +நடுநடுவே இதிலும் கமெண்ட் போட =இப்படியே நாள் ஓடி போகுது..24 மணிநேரம் கம்மி அவ்வ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@rk guru--//அப்பா பதிவுக்கு சலிக்காம பதில்.....//

வாங்க குரு..நாமெல்லாம் சிங்கமுல்ல..எத்தனையே பாத்தாச்சி இதை பாக்க மாட்டோம்மா.(( நல்ல வேலை யாரும் கேக்கல எஸ்கேப்ப்ப்ப்)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி-- //இப்ப இதில எனக்கு வர சந்தேகம் என்னன்னா //
அதானே... இன்னும் காணோமேனு பாத்தேன்... ஹா ஹா ஹா //

பின்ன நம்ம டிரெண்ட மாத்தலாமா..என்ன எப்படி இட்லி பின்னாடி விடாம ஓடினீங்களோ அதுமாதிரி விடுறதா..?

//மூக்கு சந்தேகமா...நீங்க விஞ்ஞானி தக்குடு அவர்களை காண்டக்ட் பண்ணுங்க... அவர் அதுல PHD பண்ணி இருக்கார்னு கேள்வி... (ஹி ஹி ஹி)//

இருங்க அங்கயும் போய் ஒரு வழி பண்ணிடுரேன். டாக்டர்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் . விவேக் மாதிரி விடாம கடிப்பேன் ..ஹி..ஹி..

//அது சரி... உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருது.. பேசாம ஒரு நிஜ டாக்டர்ஐ பாருங்களேன்... ஹி ஹி ஹி //

நிஜடாக்டர்ன்னு ஒருத்தர் இருக்காராஆஆஆஆ. எங்கேஏஏஏஏ இருக்கார்ர்ர்ர்ர்ர்ர்ர்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஒ.நூருல் அமீன்--//நல்ல கற்பனை வளம். நகைச்சுவையுணர்வு.அருமையாக எழுதுகிறீர்கள் ஜெய்லானி! //

வாங்க நூருல் அமீன் .சந்தோஷம். மற்றும் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Admin said...

நல்லாத்தான் யோசிக்கிறிங்க... வேறு எப்படி எல்லாம் யோசிப்பிங்க

ஜெய்லானி said...

@@@சந்ரு--//நல்லாத்தான் யோசிக்கிறிங்க... வேறு எப்படி எல்லாம் யோசிப்பிங்க //

லேபில்ல மொக்கை , மாத்தி யோசி எல்லாமே இப்பிடிதான் ..இன்னும் இருக்கே ஏகப்பட்ட ஐட்டம் ஹி.ஹி.. ஒரு வழியா ஆகாம இருந்தா தொடர்ந்து படிங்க புரியும்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))