Friday, February 26, 2010

க்ராஷ் ஆன ஃபைலை என்ன செய்ய

கம்பியூட்டரோ அல்லது ஒரு குறிப்பிட்ட மென்பொருளோ கிராஷ் ஆகி முடங்கும் போது ஃபைல்கள் சேதமடைய நிறைய வாய்புள்ளது. பொதுவாக அப்ளிகேஷன் மென்பொருள்களில் மற்றும் ஹார்ட்வேர் மென்பொருளில் ஏற்படும் பிழைகள் அல்லது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளின் காரணமாக செயல் இழப்புகள் ஏற்படுகிறது.

கணிணி செயல் இழப்புகள் ஏற்படாதபோது ஃபைல்கள் திறக்காமல் இருந்தால் அல்லது சேதமடைந்த ஃபைல்கள் நிறைய இருந்தால் அது வைரஸின் வேலைதான் காரணம். இதற்காகவே ஆண்டி வைரஸ் சாஃப்ட்வேரை எப்போதும் அப்டேட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.<">இரண்டு தினத்திற்கு ஒருமுறை பேக் அப் எடுக்க பழகுவது மிகவும் நல்லது

ஃபைல் சிஸ்டத்தில் அல்லது ஹார்டிஸ்கின் ( நீண்ட நேரம் பயன்படுத்துவதால் வரும் சூடு , காற்றாடி வேலை செய்யாததனால் வரும் சூடு , ) குறைபாடுகளினால் வாய்ப்பு அதிகம்.

இதுப்போன்ற நிலைவந்தால் முதலில் ஸ்கேன் டிஸ்க் போன்ற டூல்களை பயன்படுத்தினால் அவை ஹார்டிஸ்கை ஸ்கேன் செய்து பிழைகளை கண்டுபிடித்தும் ஃபைல் ஸிஸ்டத்தையும் சரிசெய்து தரும்

முதலில் மை கம்ப்யூட்டரை இரட்டை கிளிக் செய்து எந்த டிரைவ் வேனுமோ அதன் மீது வலது கிளிக் செய்து ப்ராப்ரடீஸ் > டூல்ஸ் > செக் நவ் தேர்ந்தெடுத்து இரண்டு ஆப்ஷன்களிலும் டிக் செய்து ஸ்டார்ட் செய்யுங்கள். பின் தேவை பட்டால் ரீஸ்டாட் செய்யவும்.

உதாரணமாக வேர்டானது ஒவொரு . doc ஃபைலையும் . wbk ஃபைலாக அதே போல்டரிலேயே பேக்கப் எடுத்து வைக்கும் நாம் இதை வேர்டில் திறந்து . doc ஃபைலைலாக சேவ் செய்யலாம்.

பேக்கப் ஏதும் இல்லாவிட்டால் டேட்டா ரெக்கவரி( கூகிளில் தேடினால் நிறைய கிடைக்கும் ) ப்ரோக்ராமை நாடலாம். இவை பெரும்பாலும் மீட்டு தரும். எத்தனை முடியும் , முடியாது என்றும் சொல்லிவிடும்.

சேதமடைந்துள்ள ஃபைலை அழிக்க முடியவில்லை என்றால் , முதலாவதாக அந்த ஃபைலானது கணினியில் இல்லாமல் அதன் தலை , வால் மட்டும் ( கோஸ்ட் ) இருக்கலாம்

இரண்டாவதாக ஆப்ரேடிங் ஸிஸ்டமானது அல்லது ப்ரோக்ரமானது அதை இன்னும் பயன் படுத்துகிறது என்று அர்த்தம். இதை விடுவிக்க கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தாலெ போதும்.

முக்கியமாக ஒரு யூ பி எஸ் வாங்கி வைப்பது நல்லது, சுமார் பத்து நிமிட யூ பி எஸ் போதும். மின்சார கோளாறினாலேயே ( எப்போது போகும் எப்போது வரும் தெரியாது ) அதிகம் பாதிப்பு வருகிறது. வெளிநாட்டில் மின்சார கோளாறு அத்தனை இல்லை. அதே போல எர்த் கனெக்‌ஷனையும் முக்கியமா பாருங்க .இல்லாவிட்டால் முதலில் கெட்டு போவது ஹார்டிஸ்க் , இரண்டாவது ராம் . (மெமரி )

26 என்ன சொல்றாங்ன்னா ...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இன்னுமா இதை நம்பிறீங்க..
ஏன்னா, இந்த சிப் பண்ற கம்பெனியில் தான் நான்
வேலை செய்யறேன்..

எனக்கு அடுத்த வருசம் போனஸ் வேண்டும்.?
அதனாலே அண்ணன் சொன்ன மாறி , யூ.எஸ்.பீ வாங்க்குங்கோ...

ஜெய்லானி said...

///பட்டாபட்டி.. said... எனக்கு அடுத்த வருசம் போனஸ் வேண்டும்.?
அதனாலே அண்ணன் சொன்ன மாறி , யூ.எஸ்.பீ வாங்க்குங்கோ...///

யூ.எஸ் .பீ லயும் சில பூட்டிங் டிரபிள் இருக்கு. என்னிடம் 1 டி.பி. இருக்கு.

Chitra said...

useful info.

ஜெய்லானி said...

//Chitra said...useful info.///

என்னவோ சொல்றீங்கன்னு பட்டும் புரியுது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

நல்ல தகவல்!

ஜெய்லானி said...

///ஸாதிகா said...நல்ல தகவல்!///
வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அப்துல்மாலிக் said...

நல்ல கருத்து

யு.எஸ்.பி யே கரெப்ட் ஆஹுது அதை ரிகவரி செய்ய ஏதாவது உண்டா

ஜெய்லானி said...

//அபுஅஃப்ஸர் said... யு.எஸ்.பி யே கரெப்ட் ஆஹுது அதை ரிகவரி செய்ய ஏதாவது உண்டா//

http://www.snapfiles.com/downloads/easusdfr/dleasusdfr.html இந்த லிங்கில் வரும் ஃபைலை டவுன் லோட் செய்து எளிமையாக ரெகவரி செய்யலாம். ஃபைல் சைசும் குறைவுதான் 3.64 தான் .ஜிஃப் ஃபைலாக வரும். இது ஒரு ஃப்ரீ வேர் அதனால் தைரியமாக பயன் படுத்தலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

எல்லா தகவலிலும் கலக்கல் போல.
பயனுள்ள பகிர்வு

ஜெய்லானி said...

///Jaleela said...எல்லா தகவலிலும் கலக்கல் போல.
பயனுள்ள பகிர்வு///

ஆல் இன் ஆல் உங்களை போல வருமா !!வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

விக்னேஷ்வரி said...

நல்ல, பயனுள்ள தகவல்.

ஜெய்லானி said...

//விக்னேஷ்வரி said...நல்ல, பயனுள்ள தகவல்//
வாங்க! வாங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

:-)))

ஜெய்லானி said...

///ஹுஸைனம்மா said...

:-))) ///
ஏதோ சொல்றீங்க மட்டும் புரியுது.(ஸ்மைலி மட்டும் மண்டையில ஏறமாட்டேங்கிறது )

வாங்க! வாங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பித்தனின் வாக்கு said...

நல்ல தகவல்கள். நன்றி ஜெய்லானி.

Asiya Omar said...

நமக்கு ஒண்ணும் புரியலீங்க,வந்திட்டமே கருத்தை பதிப்போம்.u s b மட்டும் அடிக்கடி கேட்ட நியாபகம்.

ஜெய்லானி said...

///பித்தனின் வாக்கு said... நல்ல தகவல்கள். நன்றி ஜெய்லானி//
வாங்க! வாங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

///asiya omar said... நமக்கு ஒண்ணும் புரியலீங்க,வந்திட்டமே கருத்தை பதிப்போம்.u s b மட்டும் அடிக்கடி கேட்ட நியாபகம்///

யூ பி எஸ் என்பது ,(அன் இண்டிராப்டிபில் பவர் சப்ளை ) கரெண்ட் போனால் எரியும் சார்ஜர் லைட் போல நமது கம்ப்யூட்டருக்கு தேவையான (220-240 v )மின் சப்ளையை தரும் ஒரு சாதனம். நிமிடத்திற்கு ஏற்ப அதன் விலை. u s b என்பது (யுனிவர்ஸல் சிரியல் பஸ் )இரு பொருட்களுக்கு இடையில் இனைக்கும் அதிவேக இடை முகப்பு இந்த லிங்க் பாருங்க கூடுதல் விளக்கம் கிடைக்கும்
http://en.wikipedia.org/wiki/Universal_Serial_Bus

http://en.wikipedia.org/wiki/Uninterruptible_power_supply

படித்து விட்டு சொல்லுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் !

ஜெய்லானி said...

///♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் !///

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SUFFIX said...

ஒரு முறை அலுவலகத்தில் ஒரு எக்ஸல் டேட்டாபேஸ் முழுதும் 2007/2003 இரண்டிலும் உப்யோகிச்சது இப்படி க்ரஷ் ஆச்சுப்பா, நல்ல வேளை பேக்கப் செய்த USB வீட்டில் இருந்தது. இது மாதிரி ஆச்சுன்னா என்ன செய்யலாம்னு பச்சக்குன்னு ஒரு ஐடியா சொல்லுங்களேன்.

ஜெய்லானி said...

///SUFFIX said.. இது மாதிரி ஆச்சுன்னா என்ன செய்யலாம்னு பச்சக்குன்னு ஒரு ஐடியா சொல்லுங்களேன்.//

யாரையுமே நம்பாத ஆளா இருந்தா.cd/dvd RW(Re Write ) ல் முக்கியமான பைல்களை பேக் அப் எடுத்து வைங்க. (யூ எஸ் பீ க்கவே தனி வைரஸ் நிறைய வருது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

அடடடா எனக்கு இது தெரியவே இல்லையே முபொருமுறை வந்தப யோசிசிக்கிட்டு இருக்கே எது எழுதுறதுன்னு அப்படி இருந்திச்சி. அப்போ சும்மாச்சிக்கும் பிளாக்குபோலன்னு அல்லவா நினைச்சே இப்பதானே தெரியுது யோசனை ரெக்கைகட்டி பறக்குதுன்னு..ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் இனி தொடர்ந்து வருவோமுல்ல..

வந்து பாருங்க இத
http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

ஜெய்லானி said...

//அன்புடன் மலிக்கா said...அடடடா எனக்கு இது தெரியவே இல்லையே முபொருமுறை வந்தப யோசிசிக்கிட்டு இருக்கே எது எழுதுறதுன்னு அப்படி இருந்திச்சி. அப்போ சும்மாச்சிக்கும் பிளாக்குபோலன்னு அல்லவா நினைச்சே இப்பதானே தெரியுது யோசனை ரெக்கைகட்டி பறக்குதுன்னு.///

எல்லாம் உங்களை போல் பெரியோர்களின் ஆசிர்வாதம்தான் காரணம்

///..ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் இனி தொடர்ந்து வருவோமுல்ல.///

வாங்க ! வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Unknown said...

பயன் உள்ள தகவல்.இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.

Priya said...

நல்ல தகவல்!

ஜெய்லானி said...

@@மின்னல் said...பயன் உள்ள தகவல்.இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.

வாங்க உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@Priya said... நல்ல தகவல்!

வாங்க உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))