Sunday, February 21, 2010

வரும் முன் காக்க!!

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான ஆதார அடிப்படை அம்சமே சுவாசித்தலேதான். ஆனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்து , ஊளைச்சதை காரணமாக உடல் பருமனால் பாதிக்கப்படுகிறவர்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பாதிபினால் அவஸ்தைப் படுகின்றார்கள்.
நோய்களிலேயே ஆஸ்துமா ஒருவிதமான கொடிய நோய் என்றும் சொல்லலாம். மூச்சி திணறலால் இந்த நோயாளிகள் படாதபாடு படுகிறார்கள். சாப்பிட்ட உடனே படுத்து விட்டால் , உணவானது ஜீரணம் ஆகாமல் , சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும். அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் சிறிது நேரம் உலவிவிட்டு பிறகு படுக்கலாம். இவர்களுக்கு சளியானது சுவாச குழாய்களில் தங்கி விடுவதால் குறட்டை ஏற்பட்டு பக்கத்தில் படுப்பவர்க்கு அது இணிய இரவாக இல்லாமல் தூக்கம் கெட்டு நாலு தலைமுறைக்கு முன் பிறந்த வரைக் கூட திட்டிகொண்டு இருப்பார். தேவையா நமக்கு?
தவறான மற்றும் அதிகமான உணவு சாப்பிட்டு சுவாசிக்கவே அவஸ்தை படக்கூடியவர்கள் பலர் உடல் பருமணாலும் பாதிக்கப் பட்டவர்களாகவே இருக்கிண்றார்கள்.
அதிகமான கொழுப்பு உணவுகள் , குறிப்பாக சொன்னால் பால் , தயிர் , பாலாடை கட்டி , வெண்ணெய் , டால்டா , நெய் மற்றும் மாமிசம் (ஆடு , மாடு , .......) போன்றவற்றை உட்கொள்கிறபோது மூச்சுக் குழழில் சளி நிறைகிறது. இதனாலேயே சுவாசிப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
அதிக கொழுப்பானது அடிவயிற்றிலும் , நெஞ்சிலும் சேர்கிறது. தான் இருக்க வேண்டிய எடையை விட அதிகமான எடை இருக்கிற போது , அந்த அதிகப்படி எடையைச் சுமக்கிறபோது மூச்சிறைப்பு ஏற்படுகிறது.
ஆகவே உடல் பருமணாக இருந்து , ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினி இருக்கக் கூடாது.
ஏன் என்றால் அதிகபடியான கொழுப்பு ஆஸ்துமா நேயாளிகளுக்கு வேறுஒரு பிரச்சனையை உண்டாக்கி விடும் . அதாவது ஆர்ட்டிரிக்களில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து விடும். இதனால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை கூட குறையும் , அதனால் ரத்தம் உறையவும் , மாரடைப்பு , மூளையில் கட்டி போன்ற தொந்தரவுகளுடன் மரணம் கூட வர வாய்ப்பு இருக்கு

உடம்பை குறைக்க இதோ வழி:
( 1 )தினமும் காலை அல்லது மாலை அதாவது லேசாக வெயில் உள்ள போது குறைந்தது அரை மணி நேரம் நடக்க வேண்டும். பின் படிப்படியாக அதிகரித்து இரண்டு மணி நேரமாக்கலாம்.
( 2 ) நொருக்கு தீணியை குறைத்து கொள்ளவும் அல்லது கூடாது...( அப்படி பட்ட எண்ணம் வரும் போது )
(3 ) தண்ணீர் அதிகம் குடிக்கவும். ( ஜுஸ் இல்லை )
(4 ) சின்ன சின்ன உடல் பயிற்சி ( துணி துவைப்பது - - இது ஆண்களுக்கும் பொருந்தும் )
( 5 ) பாதி வயிறு சாப்பாடு , கால் வயிறு தண்ணீர் கால வயிறு காலியாக இருக்குமானால் மிகவும் நல்லது. பந்திக்கு போனால் பிந்தி போகவும்
( 6 ) ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும்
( 7 ) முடிந்தவரை வீட்டுவேலைகளை நாமே செய்யவேண்டும்.
( 8 ) அதிக கவலை நம்மை குண்டாக்கிவிடும். ( கவலையினால் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு நாம சாப்பிடலையே என்ற அதே கவலையில் மூன்று வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் மூச்சிபிடிக்க சாப்பிடுவது.
( 9 ) என்னுடைய பதிவுகளை படிப்பது..( யாருங்க அது கல்லை விட்டு எறியறது..)

குஷ்பு இட்லி பார்க்க(சாப்பிட) நல்லா இருக்கும் அதுக்காக யாரும் எண்ணையில்லாத ( காய்ந்த) சப்பாத்தியை விரும்பாமல் இல்லையே!!!!!!!!!

டிப்ஸ்:::: (1 ) முருங்கை கீரை இரண்டு கைபிடி அளவு ( 2 ) நாலு கிளாஸ் நீர் (3 )கால் ஸ்பூன் சீரகம் (4) நாலு பொடித்த மிளகு(மிளகாய் இல்லை) ( 5 ) சிறிது உப்பு
செய்முறை::: முருங்கை கீரை (முத்திய கீரை இல்லை இளசாக)யை (சுத்தம் செய்து (நீண்ட காம்புவை மட்டும் எடுங்க சிரியது ஓக்கே) அதனுடன் மேல் சொன்ன எல்லாத்தியும் போட்டு இரண்டு கிலாஸ் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து டீ காப்பிக்கு பதில் குடித்து வர ஆஸ்துமா மற்றும் குளிர் கால சுவாச பிரச்சனை தீரும்..
((ஆசியா உமர் கேட்டதால் இந்த டிப்ஸ்))

26 என்ன சொல்றாங்ன்னா ...:

Chitra said...

பயனுள்ள தகவல் தொகுப்பு. நன்றி.

kavisiva said...

நல்ல பதிவு! பலருக்கும் தெரிந்த விஷயம்தான் :-) ஆனால் நடைமுறைப்படுத்துவதில்தான் பிரச்சினையே! இன்னிக்கு காஞ்ச சப்பாத்திதான் சாப்பிடணும்னு முடிவு செஞ்சிருக்கும் போதுதான் சாப்பிடத் தூண்டும் ருசியான உணவுக் குறிப்புகள் கண்ணில் படும். அப்புறம் டயட் அன்னிக்கு அவ்வளவுதான் :-(

டவுசர் பாண்டி said...

இல்ல , இது இன்னா வேல , நானு தாரு பேரலு கணக்கா கீரேன், இன்றதுக்காக இது மேரி எல்லாம் சொல்லிக் கீரீயா ? தல !! நா ஒல்லி ஆவறதா முடிவு பண்ணிட்டேன் , தொடர்ந்து உம் பதிவ படிக்கப் போறேன் , அக்காங் !!

SUFFIX said...

நடை - உடம்பிற்கு புத்துணர்ச்சி தரும் எளிமையான நல்லதொரு உடற்பயிற்சி. பல நல்ல தகவல்கள் - நன்றி.

ஹுஸைனம்மா said...

நேத்து டெக்னிக்கல் பதிவு; இன்னிக்கு உடல்நலப் பதிவு. ம்ம், இந்த மாதிரி நல்ல விஷயங்கள் அப்பப்ப ஞாபகப்படுத்திகிட்டே இருந்தாத்தான் நல்லது.

Unknown said...

பயனுள்ள பதிவு ...

Menaga Sathia said...

நல்ல பயனுள்ள பதிவு!!

ஜெய்லானி said...

//Chitra said. பயனுள்ள தகவல் தொகுப்பு. நன்றி.//
குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

\\kavisiva said...நல்ல பதிவு! பலருக்கும் தெரிந்த விஷயம்தான் :-) ஆனால் நடைமுறைப் படுத்துவதில் தான் பிரச்சினையே!//
ஒரே நாளில் எதுக்குமே தீர்வு இல்லையே. (5 )நெம்பரை பின் பற்றலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//டவுசர் பாண்டி said..இல்ல , இது இன்னா வேல//
உலக சுகாதார நிலையம் ( W H O ) நாம குண்டாக இருப்பதும் நோய் ( வியாதி ) என்று சொல்லியிருக்கு. குண்டாக இருப்பதால் வரும் முக்கிய வியாதி மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) அதுதான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் (நினைவு படுத்துதல்) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SUFFIX -குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா -ஒரே மாதிரி போட்டா எனக்கே போரடித்து விடும் . அதனாலதான் நடுவில் பாட்டுக்கூட போடுவதுண்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//சிநேகிதி said...பயனுள்ள பதிவு ///

குற்றம் குறை இருந்தாலும் சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

///Mrs.Menagasathia said...நல்ல பயனுள்ள பதிவு!!///

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

எனக்கு தெரிந்த ஒரு சில பேருக்கு இந்த தொந்திரவு இருக்கு,நாம சொல்றதை விட இதை பார்க்கச் சொல்லலாம்.நல்ல தகவல்.கம்ப்யூட்டர் மாஸ்டர்னு நினைச்சேன்.கூடிய விரைவில் உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைச்சாலும் கிடைக்கலாம்.

ஜெய்லானி said...

///asiya omar said...எனக்கு தெரிந்த ஒரு சில பேருக்கு இந்த தொந்திரவு இருக்கு///

( டிப்ஸ்- நான் மேலே போடுகிறேன் பயன்படும்)
பணம் படைத்தவர் செலவு செய்கிறார் , குறைவாக இருப்பவர்களுக்கு இந்த செலவில்லா வைத்தியம் உதவும். அதுக்குதான் இந்த கட்டுரை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

நன்றி ஜெய்லானி.
உங்க முருங்கை பற்றிய மருத்துவ குறிப்பு ரொம்ப பயன் உள்ளது {முருங்கை சூப் ).நிச்சயம் போஸ்டர் ஒட்டி விடுவேன்.

ஜெய்லானி said...

asiya omar-ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் பலன் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் வருகைக்கு நன்றி

வேலன். said...

ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் ((( முக்கிய அறிவிப்பு::::: .... டிக்...டிக்...ஹலோ.....மைக் டெஸ்டிங்...சமையல் வலைபதிவு வைத்திருக்கும் மாண்புமிகு தாய்குலங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)ஃஃ//

இருங்க இருங்க சகோதரியிடம் சொல்லி உங்களுக்கு ஒரு பிளேட் பிரியாணி அனுப்ப சொல்கின்றேன்...கட்டுடரை அருமை..வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

//வேலன். said..இருங்க இருங்க சகோதரியிடம் சொல்லி உங்களுக்கு ஒரு பிளேட் பிரியாணி அனுப்ப சொல்கின்றேன்///

சிக்கன் இல்லாமல், மசாலா இல்லாமல் வெறும் மஞ்சள் பொடி போட்டு அரிசி கஞ்ஜி (பிரியாணி???)அவரிடம் மட்டும் சொல்லிடாதிங்க.(என்ன கொடுமைடா சாமி)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Geetha6 said...

very nice.
good post.
udtgeeth.blogspot.com

Unknown said...

ஆக இங்கயும் முருங்கை கீரையா என்ட ஒரு பதிவில இத பற்றி விரிவா சொல்லி இருக்கேன் இந்த முருங்கை கீரை பத்திதான்

ஜெய்லானி said...

//Geetha6 said...very nice.good post.udtgeeth.blogspot.com///

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க மூணு ப்ளாக்குமே விஷுவல் நல்லா இருக்கு.

//V.A.S.SANGAR-ஆக இங்கயும் முருங்கை கீரையா//

இதனுடைய பயன் தெரிந்தால் ஒரு நாளைக்கு மூணுவேளையும் கேட்பீங்க. இலை, காய், பூ, பிசின், பட்டை அவ்வளவும் பவர்ஃபுல்.......(பிளாக்கிற்கு பெயர் அனுப்பினேனே வந்துச்சா)

karivayplli said...

nalaeruku, enaku tharisa murukai bakyaraj style
atharku eppati oru palan ippathan thariyuthu
pepusekar@gmail.com

ஜெய்லானி said...

sekar-உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிப்ஸ்:::: (1 ) முருங்கை கீரை இரண்டு கைபிடி அளவு ( 2 ) நாலு கிளாஸ் நீர் (3 )கால் ஸ்பூன் சீரகம் (4) நாலு பொடித்த மிளகு(மிளகாய் இல்லை) ( 5 ) சிறிது உப்பு
செய்முறை::: முருங்கை கீரை (முத்திய கீரை இல்லை இளசாக)யை (சுத்தம் செய்து (நீண்ட காம்புவை மட்டும் எடுங்க சிரியது ஓக்கே) அதனுடன் மேல் சொன்ன எல்லாத்தியும் போட்டு இரண்டு கிலாஸ் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து டீ காப்பிக்கு பதில் குடித்து வர ஆஸ்துமா மற்றும் குளிர் கால சுவாச பிரச்சனை தீரும்..
//

சார்.டயடா இருக்கு ..
. ப்ளிஸ்..டிப்ஸ்-ல சொன்னமாறி செஞ்சு அனுப்புங்க சார்..

ஜெய்லானி said...

///பட்டாபட்டி.. said...சார்.டயடா இருக்கு ..
. ப்ளிஸ்..டிப்ஸ்-ல சொன்னமாறி செஞ்சு அனுப்புங்க சார்..///

பட்டு சார் கூரியர்ல அனுப்பினால் வந்து சேரும்போது அது பியர்மாதிரி ஆகிவிடும். மருந்து ஐட்டம் போதை ஐட்டமாகி விடும்.

ஹேமா said...

தேவையான பதிவு தோழி.

அதென்ன ஒரு வெருட்டு.
தூக்கத்தில யாருக்குத்தான் கண் தெரியும் !

ஜெய்லானி said...

///ஹேமா said...அதென்ன ஒரு வெருட்டு.
தூக்கத்தில யாருக்குத்தான் கண் தெரியும் !///

தமாசுக்குதான். பயப்படாதீங்க.

((தூக்கத்தில கண் தெரிவது கனவு காண்பதுக்கு சமம், கெட்டதும் ,நல்லதும் இருக்கலாம், கண் தெரியாது என்பது கனவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கம் அடுத்த நாள் நல்ல புத்துணர்ச்சி இதாங்க மேட்டர்)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

//ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் //


இது சொன்னீஙகளே இது சரி//

எல்லா டிப்ஸும் அருமை

ஜெய்லானி said...

///Jaleela said...//ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடவும் //
இது சொன்னீஙகளே இது சரி//

ஆல் இன் ஆலே , சொல்லிட்டீங்க .மறு சொல் ஏது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))