Wednesday, February 17, 2010

நற்ச்செயல் என்பது

நற்ச்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல!! மாறாக
இறைவனையும் , இறுதி நாளையும் ,வானவர்களையும் , வேதங்களையும் , இறை தூதர்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும்
மேலும் (இறைவனின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத் )
தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிபோருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும்
மேலும்
தொழுகையை நிலைநாட்டி , ஜகாத் ( ஏழை வரி )தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்கள். மேலும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள்.
ஆவர் இவர்களே உண்மையாளர்கள்:, மேலும் இவர்களே இறையச்சமுடையவர்கள்

திரு குர் ஆன் :2 : 177


டிஸ்கி : இறையச்சமுடையவர்கள் யார் என்று அல் குர் ஆனில் வரும் வசனம் இது.

13 என்ன சொல்றாங்ன்னா ...:

Chitra said...

வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள்.

.......... true.

வேலன். said...

குர்ரான். இதுவரை நான் படித்ததில்லை நண்பரே...தங்கள் அதிலிருந்து எடுத்துள்ள வரிகள் அற்புதமாக இருக்கினறது.//நற்ச்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல//
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஸாதிகா said...

அருமையான.அற்புத வரிகள்!ஜாசகல்லாஹு ஹைர்!1

சசிகுமார் said...

சிம்பிள சொன்னாலும் ரொம்ப சீரியசான மெசேஜ் சொல்லியிருகீங்க சார், மிகவும் பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி said...

//தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிபோருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும்//

இப்பிடி செஞ்சாக்கா , நல்லா தான் இருக்கும் ! தல!!

ஹுஸைனம்மா said...

//வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள்//

இதுதான் உண்மையிலேயே டெஸ்டிங் டைம்!! வறுமையிலும் நேர்மை, துன்பத்திலும் பொறுமைங்கிறது ஆண்டவன் எல்லாருக்கும் தந்து அருள் புரிவானாக!!

அப்துல்மாலிக் said...

நல்ல விளக்கம் நற்செயல் பற்றி தொடருங்க ஜெய்லானி

Jaleela Kamal said...

நற்செயல் மூலம் இறையச்சம் பற்றி அருமையான பகிர்வு.

தொடருங்கள்.

என்னற்ற வின்டோ ஓப்பன் ஆக டிப்ஸ் கொடுத்தத்ற்கு மிக்க நன்றி, அடுத்த முறை நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன்.
அதை நீங்களே ஒரு பதிவா போட்டுடலாமே, எனக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.

கரம் மசாலா பதிவு போட்டுள்ளேன் உங்களுக்காக முடிந்த போது வந்து பார்க்கவும்.

Menaga Sathia said...

//மேலும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள்// அற்புதமான வரிகள்!!

Asiya Omar said...

நற்செயல் பற்றிய செய்தியை அருமையாக எடுத்து உறைக்கும் வரிகள் ,நன்றி.தேவை இல்லாத விஷ்யங்களுக்கு வாக்குவாதம் செய்யாமல் இப்படி நல்ல செய்தியை எடுத்து போட்டால் இறைவன் அருள் நிச்சயம் .

ஜெய்லானி said...

இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

நல்ல வாசகங்கள். இது நான் ஏற்கனவே ஒருமுறை படித்துள்ளேன். மறை திருக்குரானில் இது போல உள்ள மனித வாழ்க்கைக்கு தேவையான வாசகங்களை எழுதவும் நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

மாஷா அல்லாஹ்,மிக அருமை

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))