Thursday, March 17, 2011

உறக்கம்


            தூக்கம் ஒரு மனுஷனுக்கு சரி இல்லாட்டி அவனால எந்த விஷயத்திலும் சரியா முடிவு எடுக்க முடியாது . அது படிக்கிற  பிள்ளையா இருந்தாலும் சரி . இல்லை வேலைக்கு போகும் ஆட்களாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரம்  கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் இருக்கனும் .ஒரு நாளைக்கி சரியா தூங்காம இருந்தா அதோட எஃபெக்ட் எப்படியும் மூனு நாளைக்கு முகத்துல தெரியும் .
        சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும்  கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம்  குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க . அதே மாதிரி ஓவரா தூங்கு முஞ்சியும் காலையில எட்டு மணி வரை தூங்கி கிட்டும் இருக்கும் சோம்பேறி ஆட்களுக்கும் இதே பிரச்சனைகள் இருக்கும் .
நல்லா பாரூ  பயபுள்ள கீழேயே  நிக்கப்போறான் ..!!
      
     சரியான  நேரத்துக்கு தூக்கமும் , நல்ல தண்ணீரும் நிறைய  குடிச்சா இந்த பிரச்சனை வராது . தூக்கம் வராததுக்கு  முக்கிய காரணம் கவலைகள் , பிரச்சனைகள் பற்றிய நினைவுகளே அதிகமா சொல்லப்படுகிறது.  எப்படி பட்ட பிரச்சனையா இருந்தாலும் அதை பெட்ரூம் வரை கொண்டுப் போகக்குடாது . அப்படி கொண்டு போனா அன்னைக்கி அதோ கதிகதான் . அதுக்காக சிலர் தூக்க மாத்திரையை யூஸ் செய்வாங்க .அது பல சைடு எஃபெக்டுகளை குடுத்துடும்
        மதிய நேரம் கண்டிப்பா தூங்கக்கூடாது. அப்படி தூங்குவதா இருந்தா அரை மணிநேரம் போதும் .அதுவும் மதியம் 3 மனிக்கு மேல தூங்கக்கூடாது .தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வைச்சிக்கனும் .அதாவது இன்னைக்கு 10 மணிக்கு தூங்கப்போனா அடுத்த நாள் 1 மனிக்கு தூங்கப்போவது (( விருந்தாளி வந்தா கடலை போடுவது , வார் கடைசி நாளில் ஊர் சுற்றி விட்டு வருவது , டீவீ பார்ப்பதும் இதில் அடங்கும் )) இதுவும் கூடாது 
நூடுல்ஸுன்னா ரொம்ப பிடிக்குமுன்னு யாரோ சொன்னாங்களே..!!

        இரவு நேரம் ஈஸியா செரிக்கும் இட்லி, ((அப்பாவி இட்லி மாதிரி இல்லை )) , தோசை மாதிரி ஐட்டங்களை சாப்பிடனும் . ஏதோ  போருக்கு போவது மாதிரி மட்டன் சிக்கன் அப்படி பூந்து விளையாடக்கூடாது .அது ஃபிரியா (( free )) கிடைச்சாக்கூட மீறி  சாப்பிட்டா  செறிக்க  முடியாம பாதி தூங்கியும் தூங்காம உருண்டு பிறண்டுகிட்டு இருக்கனும் .
     ஏதோ எக்ஸர்சைஸ் செய்யுரேன்னு சொல்லிட்டு நாய்குட்டி மாதிரி இங்கேயும் அங்கேயும் வேர்க்க விறுவிறுக்க அலைஞ்சா தூக்கமா வரும்..உடல் அசதிதான் வரும் .உடற்பயிற்ச்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை 4 டூ 6 தான் .ஆனா அப்பதான் வாயை பிளந்துகிட்டு குறட்டை விட்டு நாம தூங்கிகிட்டு இருப்போம் ((  யூ ஏ ஈ ல இது முடியாது ஏன்னு சொன்னா ஸ்கூல் பஸ் 6 மனிக்கெல்லாம் வந்துடும் )). இரவில் சூடாக பால் சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தருமாம் . சாப்பிட்டவங்க எல்லாம் சொல்றாங்க .ஆனா இது உண்மையா..? பொய்யா..? எனக்கு தெரியாது . ஏன்னா நான் பால் குடிக்கும் பிள்ளை இல்லை ஹி..ஹி... J
ஐயோ  பாவம்....யார் வீட்டு பிள்ளயோ ..!!!
      
      துபாய் வந்த புதுசுல இரவில எப்போதும் தூங்கப் போகும் 10 நிமிடம் முன்னே காஃபி சாப்பிடும் பழக்கம் என்னிடம் இருந்துச்சி. ((இப்பவும் இருக்கு )) .கூடவே இருந்த ஒரு சில நண்பர்கள் ஒரு மாதிரியா பார்ப்பாங்க .ஏதோ  புது ஜந்துவை பார்ப்பது மாதிரி. வேனுமான்னு கேட்டா வேனாமுன்னு சொல்லிடுவானுங்க . இரவில குடிச்சா தூக்கம் வராதுன்னு யாரோ சொல்லி இருக்காங்க போலிருக்கு. ஆனா  நான் குடிப்பதை பார்த்துட்டு ஒரு நாள் வேனுமா கேட்டதும் சரின்னு சொன்னதும் டபுள் ஸ்டிராங்கா சூடா ஒரு கிளாஸ் ஸ்பெஷலா போட்டு குடுத்தேன் . காஃபின்னா இதான் காஃபின்னு சொல்லி ரசிச்சி குடிச்சதுதான் எனக்கு தெரியும் .
        மறு நாள் காலையில டியூட்டிக்கு எழுப்பினா ஒரு பயலும் எழுந்திருக்கவே இல்லை . கேட்டா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை.ரூமுக்கு வெளியே உட்கார்ந்து இருந்திருக்காங்க . வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி. நண்பேண்டா..!!.  இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.    

80 என்ன சொல்றாங்ன்னா ...:

jothi said...

வ‌ண‌க்க‌ம்

jothi said...

//இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.//

ம்ம்ம்,,க‌வ‌லையில்லா ம‌னித‌ர்,.

உற‌க்க‌த்தைப்ப‌ற்றி இவ்வ‌ளவு சொல்லிட்டு க‌ன‌வைப்ப‌ற்றி சொல்ல‌வே இல்லையே

TamilTechToday said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

இராஜராஜேஸ்வரி said...

சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க . /
ச்ரியான கருத்துங்க.உறக்கத்தைப் பற்றி உறங்காமல்
காபி குடித்து ஆராய்ச்சி செய்து அருமையான கருத்துக்கள் விழிப்புணர்வுடன் எடுத்துரைத்தமைக்கு நன்றிங்க.

Vijiskitchencreations said...

சரியா அப்படியே சொல்றிங்க. நானும் காப்பி விரும்பி சில நேரம் நிங்க சொல்வது போல் படுக்க போகு முன் குடித்ததுண்டு. தூக்கமும் நல்லா வரும்.
நம்ம வீட்டில் எப்பவுமே நைட் டின்ன லை டிபன் தான். குட் நல்ல விஷய்மா எடுத்து சொல்லிட்டிங்க.

ஸாதிகா said...

//சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க .// வீட்டு அனுபவமோ?

பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது)

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா திடீர்னு ராத்திரி பதிவை போட்டுட்டீரு....

ஒ நாளை வெள்ளிகிழமை லீவா...இரும் படிச்சிட்டு வந்து லந்து பண்றேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//தூக்கம் ஒரு மனுஷனுக்கு சரி இல்லாட்டி அவனால எந்த விஷயத்திலும் சரியா முடிவு எடுக்க முடியாது//

அப்போ ஒரு முடிவோடதான் பதிவு போட்டீரோ....

MANO நாஞ்சில் மனோ said...

//இரவு நேரம் ஈஸியா செரிக்கும் இட்லி, ((அப்பாவி இட்லி மாதிரி இல்லை )) , தோசை மாதிரி ஐட்டங்களை சாப்பிடனும் //

இது நமக்கு சரிப்படாது. ஒரு புல் கோழியாவது வேணும் ம்ம்ம் மேலே சொல்லும்....

MANO நாஞ்சில் மனோ said...

//.உடற்பயிற்ச்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை 4 டூ 6 தான் .ஆனா அப்பதான் வாயை பிளந்துகிட்டு குறட்டை விட்டு நாம தூங்கிகிட்டு இருப்போம்//

அனுபவஸ்தன் அரவித்சாமி சொல்றாரு கேட்டுக்கோங்க....

MANO நாஞ்சில் மனோ said...

// ஏன்னா நான் பால் குடிக்கும் பிள்ளை இல்லை ஹி..ஹி... J//

மூஞ்சிய பார்த்தா அப்பிடி தெரியலையே....

MANO நாஞ்சில் மனோ said...

//மறு நாள் காலையில டியூட்டிக்கு எழுப்பினா ஒரு பயலும் எழுந்திருக்கவே இல்லை . கேட்டா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை.ரூமுக்கு வெளியே உட்கார்ந்து இருந்திருக்காங்க . வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி.//

பின்னே வினை விதைச்சவன் வினை அறுக்கனுமே.....

MANO நாஞ்சில் மனோ said...

//இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே//

அடபாவி மனுஷா இதை சொல்லத்தான் இத்தனை பில்டப்பா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

இருந்தாலும் பயனுள்ள பதிவுதான். என்ன நம்ம டாக்டர் ஆச்சே....யோவ் கண்ணு சிவப்பா இருக்கே அதுக்கு மருந்து சொல்லும் ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//ஸாதிகா said... 6
//சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க .// வீட்டு அனுபவமோ?

பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது)//

ஹே ஹே ஹே ஹே இதை நான் அப்பவே சொன்னேன் ஸாதிகா... பய புள்ளை கேக்க மாட்டேங்குராரு ஒன்லி போர் ஓட்டகம்னு சொல்றாரு...பூனை எலிக்கெல்லாம் வைத்தியம் பார்க்க மாட்டாராம்....

மதுரை சரவணன் said...

manasuthaangka ellaaththukkum kaaranam..vaalththukkal

பொன் மாலை பொழுது said...

// இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.//

I agree with you CHELLAM. :))))

பொன் மாலை பொழுது said...

இரவில் தோசை கூட வேண்டாம். இட்லியும் தக்க பக்கவாதியமும் கூட போதும். பின்னர் சூட ஒரு கப் பால் அல்லது பில்டர் காப்பி !
நமக்கு இரண்டாவதாக சொன்னதே போதும் தொற!!:))))

பொன் மாலை பொழுது said...

/// பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது)//
-----ஸாதிகா said.

அம்மாதாயே நல்லா பாத்து சொல்லணும், என் படத்த பாத்தா கூடவா அப்டி தோணுது??

சாந்தி மாரியப்பன் said...

//வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி//

சொந்த காபியில் சூனியம் வெச்சுக்கிட்டீங்களா :-)))

இமா க்றிஸ் said...

நல்லிரவு. ;)

கண்ணு தெரியணுமே, அதான் சொல்லிட்டுப் போறேன். ;)

ஹேமா said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு.ராத்திரில கோப்பி குடிக்காதேங்கோ !
அந்த எலியார் எப்பிடி அவ்ளோ நூடில்ஸையும் சாப்பிட்டு முடிப்பார்.அந்த டின் அடுக்கினது யாரு.இதெல்லாம் சந்தேகம் !

athira said...

கொர்ர்ர்ர்... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... இது நான் தலைப்புக்குச் சொன்னேன்... வடைக்குச் சொன்னேனேன தப்பா நினைச்சிடப்பூடா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இண்டைக்கு வடை வாணாம், நான் உண்ணாவிரதம்..:)).. நானே சொல்லிட்டா மரியாதை..:).

///நல்லா பாரூ பயபுள்ள கீழேயே நிக்கப்போறான் // ஹா..ஹா..ஹா... இது என் கொப்பிரைட் படமாச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

சின்ன பின் குறிப்பு:
Yeah... Yeah.... நல்லிரவு:)

athira said...

எங்களுக்கும் நித்திரைக்குப் போகும்போது ஒரு ஸ்ரோங் “ரீ” குடிக்காதுவிட்டால் நித்திரை வராதூஊஊஉ....

பூஸார் மரத்தில என்கிற தைரியத்தில எலியாருக்கு நூடில்ஸ் கேட்குதோ நூடில்ஸ்ஸ்ஸ்ஸ்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், தூக்கத்தின் நன்மைகளையும், தீமைகளையும் கலந்து ஓர் விழிப்புணர்வையும், அதனோடு சேர்த்து அறிவுரைகளையும் தந்திருக்கிறீர்கள்.
நன்றிகள். நன்றிகள்.

அதிகமாக தூங்கா விட்டால் Depression எனப்படும் மனம் சார் வியாதி வரும் என்றும் சொல்லுவார்கள். குறைந்தது ஆறு மணித்தியாலத்திற்கு மேல் நித்திரை கொள்ளாதவர்கள் பிறருடன் எரிந்து விழுவார்கள் என்றும் சொல்லுவார்கள்.

எமது நாளாந்த தூக்க நேரத்தை மாற்றி, வழமைக்கு மாறாக நீண்ட நேரம் விழித்திருந்தால் மலச் சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

உங்களின் விழிப்புணர்விற்கு நன்றிகள்.

நிரூபன் said...

மறு நாள் காலையில டியூட்டிக்கு எழுப்பினா ஒரு பயலும் எழுந்திருக்கவே இல்லை . கேட்டா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை.ரூமுக்கு வெளியே உட்கார்ந்து இருந்திருக்காங்க . வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி. நண்பேண்டா..!!//

வீட்டிலை உள்ள டாய்லெட்டையெல்லாம் நாறடிச்சிட்டாங்களா? உங்க கையாலை ஒரு காப்பி குடிக்கனும் போல இருக்கே. அப்போது தான் என் மலச் சிக்கலுக்கும் ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன் ;))

vanathy said...

ஜெய், எனக்கு இந்த காஃபி என்றாலே அலர்ஜி. சும்மா மணந்தாலே தலை வலி தான். இதில் படுக்க போகும் முன்பு குடிச்சா, ஷார்ஜா பக்கம் வந்து உங்களை மலை மீது இறங்க விடாமல் பண்ணி போடுவன். சாக்கிரதை!!!!
படம் 1- பூஸார் யாரைப் பார்த்து பயப்படுறார்????


சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க//
ஏதோ வைத்தியம் சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்.

பக்கத்திலை தானே இருக்கிறீங்க. ஒரு எட்டு நாஞ்சிலாரின் கண்களை போய் என்னன்னு பார்த்திட்டு வந்துடுங்கோ. எப்ப பாரு கண் சிவப்பா இருக்குன்னு ஒரே புலம்பல். ஃப்ளைட் என்றாலும் பரவாயில்லை. நாஞ்சிலார் டிக்கெட் அனுப்புவார்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிறைய குடிச்சா இந்த பிரச்சனை வராது
//

ரொம்ப டேங்ஸ் வாத்யாரே..

இதை வெச்சே.. வாழ்க்கைய பிக் அப் பண்ணி, பொழச்சுக்குவேன்...
ஹி..ஹி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

////தூக்கம் ஒரு மனுஷனுக்கு சரி இல்லாட்டி அவனால எந்த விஷயத்திலும் சரியா முடிவு எடுக்க முடியாது . அது படிக்கிற பிள்ளையா இருந்தாலும் சரி . இல்லை வேலைக்கு போகும் ஆட்களாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரம் கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் இருக்கனும் .ஒரு நாளைக்கி சரியா தூங்காம இருந்தா அதோட எஃபெக்ட் எப்படியும் மூனு நாளைக்கு முகத்துல தெரியும் //

எனக்கு இது நூறு சதவிகிதம் உண்மை..

தூங்கறது பிடிக்கும்... அதுவும் மதியத் தூக்கம் ரெம்பவே.. அதுவும் லீவு நாளன்னிக்கு நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு, சாயங்காலம் எழுந்து டீ குடிச்சு, ஒரு படம் பாத்து.. என்னைக்கு இந்தக்காலம் மறுபடியும் வரப்போகுதோ..

//எங்களுக்கும் நித்திரைக்குப் போகும்போது ஒரு ஸ்ரோங் “ரீ” குடிக்காதுவிட்டால் நித்திரை வராதூஊஊஉ..//

me too..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு..

ப.கந்தசாமி said...

நல்லாத்தான் சொல்லீருக்கீங்க. ஆனா மதியம் தூக்கத்த பத்தி சொன்னதுதான் இடிக்குது. எனக்கு பகல் 1 மணிக்கு சாப்பிட்டுட்டு படுத்தா கரெக்ட்டா சாயந்திரம் 5 1/2 மணிக்கு காப்பி குடிக்க எழுந்திருச்சுடுவேன்.

middleclassmadhavi said...

பதிவும் படங்களும் ஜோர்!

ஆச்சி ஸ்ரீதர் said...

சூப்பர்

ஆச்சி ஸ்ரீதர் said...

NHM ரைட்டரை டவுன்லோட் செய்துகொண்டேன்.நன்றி.அதோ துங்குகிறாரே,அவரும் நீங்க போட்ட காப்பியை குடிச்சிட்டாரா?

என் பதிவிற்கு வந்து மயில்களைப் பார்க்கவும்.

சிநேகிதன் அக்பர் said...

தூக்கத்தை பற்றி நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு!

ஆமா பாஸ் பாதி பேர் உங்களாலதான் தூங்காம இருக்காங்க ஏன்னு தெரியுமா!

பின்னே இப்படி பயமுறுத்துனா எவன் தூங்குவான்

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

GEETHA ACHAL said...

//சரியா அப்படியே சொல்றிங்க. நானும் காப்பி விரும்பி சில நேரம் நிங்க சொல்வது போல் படுக்க போகு முன் குடித்ததுண்டு. தூக்கமும் நல்லா வரும். //ஆஹா...எனனை மாதிரியே இருக்கின்றிங்க..

இதற்காகவே அம்மா, எனக்கு பரீட்சை சமயத்தில் ப்ரீயாக இருப்பாங்க...காபி போட்டு கொடுக்க தேவையில்லையே...அதான் குடித்தால் தூங்கிவிடுவேனே...

ராஜவம்சம் said...

இன்னைக்கி ஒரு காபி குடிச்சிட்டு தூங்கப்போறேன் மவனே தூக்கம் மட்டும் வரல நாளைக்கு வந்து கும்முறேன்.

Asiya Omar said...

பகிர்வு வழக்கம் போல் சுவாரசியம்,தூக்கம் கண்ணை கெட்டுது,இதை படிச்ச உடனே,காப்பி குடிச்சா?குறட்டையே விடலாம்..அருமை.

r.v.saravanan said...

சுவாரசிய பகிர்வு

athira said...

ஆ.. ஜெய், முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(இது வேறைக்கு).

சரி அதுபோகட்டும்.. என்ன டிஷைன் எல்லாம் மாத்திட்டீங்க..... மேலே இருவரைப் போட்டிருக்கிறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அழகா இருக்கு....

athira said...

பச்சை ரோஸ் குட்டியாக இருக்கே... பெயரின் பின்னால் பெரிதாக வந்தால்(கழுகின் சைஸில) இன்னும் நன்றாக இருக்குமோ?

ஜெய்லானி said...

@@@jothi--// வ‌ண‌க்க‌ம் //

வாங்க..வாங்க..!!வந்தனம் , நமஸ்தே..நமோஸ்கார். . :-))

//இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.//

ம்ம்ம்,,க‌வ‌லையில்லா ம‌னித‌ர்,. //

இருப்பதை பெட்ரூம் வரை கொண்டு போவது இல்லை .சோ..நோ பிராப்ளம்

//உற‌க்க‌த்தைப்ப‌ற்றி இவ்வ‌ளவு சொல்லிட்டு க‌ன‌வைப்ப‌ற்றி சொல்ல‌வே இல்லையே //

ஆழ்மனதில் இருப்பதுதான் கனவாக வெளியே வரும் .. மனதை தெளிவா வையுங்க ..கனவும் நல்லதா வரும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Part Time Jobs--//

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com //

வாங்க பார்ட் டைம்...ஜனாதிபதி போஸ்டுக்குதான் வைட் பண்றேன் . அதுக்குதானே c.v தேவையில்லை ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி --//சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க . /
ச்ரியான கருத்துங்க.உறக்கத்தைப் பற்றி உறங்காமல்

வாங்க..வாங்க.!! யாரு நானா..விட்டா கும்ப கர்ணனே வெட்கப்படுவாரு அந்த அளவுக்கு துங்கிட்டே யோசனை பண்னிகிட்டு இருப்பேன் ஹி..ஹி..
அதுப்போல தூங்காமலே மிட் நைட் மான்ஸ்டராகவும் இருப்பேன் எப்பூடீ..
// காபி குடித்து ஆராய்ச்சி செய்து அருமையான கருத்துக்கள் விழிப்புணர்வுடன் எடுத்துரைத்தமைக்கு நன்றிங்க //

ஒரு நாளைக்கு காலை மாலை மட்டும் காஃபி குடிச்சா நாள் பூராவும் ஃபிரஷா இருக்கலாம் .(( யாரு பிரஷான்னு கேக்கக்கூடாது )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijisveg Kitchen--//சரியா அப்படியே சொல்றிங்க. நானும் காப்பி விரும்பி சில நேரம் நிங்க சொல்வது போல் படுக்க போகு முன் குடித்ததுண்டு. தூக்கமும் நல்லா வரும்.//

வாங்க..வாங்க..!! நான் எப்பசொன்னாலும் சரியாதான் சொல்லுவேன் ..ஆனா சந்தேகம் மட்டும் ரொம்ப கரெக்டா கேப்பேன் :-))
// நம்ம வீட்டில் எப்பவுமே நைட் டின்ன லை டிபன் தான். குட் நல்ல விஷய்மா எடுத்து சொல்லிட்டிங்க. //

நைட்டில எப்பவும் லைட்டா சாப்பிட்டா வயிறு பிரச்சனையே வராது.அதுக்குன்னு ரொம்ப கம்மி பண்ணீனா டபிள் செலவு செய்ய வேண்டி வருமே . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க .// வீட்டு அனுபவமோ?

பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது) //

வாங்க ஸாதிக்காக்கா வாங்க..!! அப்படியா சொல்றீங்க ..நீங்க வந்தா நோ பீஸ் ஹி..ஹி.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//என்னய்யா திடீர்னு ராத்திரி பதிவை போட்டுட்டீரு....//

வாங்க..வாங்க..!! நம்ம வேலையே ஆந்தை வேஅலி மாதிரிதானே ஹி..ஹி.. எதுவும் சொல்லாம போனா கண்னு தெரியாது தெரியுமுல்ல

//ஒ நாளை வெள்ளிகிழமை லீவா...இரும் படிச்சிட்டு வந்து லந்து பண்றேன்..//

பாவி பயபுள்ள வாரத்தில ரெண்டு நாள்தான் லீவு குடுக்குது என்ன செய்ய அவ்வ்வ்வ்

//
அப்போ ஒரு முடிவோடதான் பதிவு போட்டீரோ...//

ஆடு வெட்டறதுன்னு முடி செய்த பின்ன அங்கிட்டு இங்கிட்டு பார்த்தா முடியுமா
//இது நமக்கு சரிப்படாது. ஒரு புல் கோழியாவது வேணும் ம்ம்ம் மேலே சொல்லும்..///

உங்க ஊருல ஏன் சண்டை வந்துச்சுன்னு இப்பதான் புரியுது க்கி...க்கி...
//.உடற்பயிற்ச்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை 4 டூ 6 தான் .ஆனா அப்பதான் வாயை பிளந்துகிட்டு குறட்டை விட்டு நாம தூங்கிகிட்டு இருப்போம்//

அனுபவஸ்தன் அரவித்சாமி சொல்றாரு கேட்டுக்கோங்க....//

ஓய் நைட் 3 மணீக்கு படுத்தாலும் கரெக்டா 4.30 மணிக்கு எந்திரிக்குற ஆளுய்யா நான் .. அது காலையா சாயுங்காலமான்னு எல்லாம் கேக்கப்பிடாது ஹா..ஹா..
//// ஏன்னா நான் பால் குடிக்கும் பிள்ளை இல்லை ஹி..ஹி... J//

மூஞ்சிய பார்த்தா அப்பிடி தெரியலையே...//

மில்மா உங்க ஊருல மட்டும்தான் கிடைக்குமா என்ன ஹி..ஹி...

////மறு நாள் காலையில டியூட்டிக்கு எழுப்பினா ஒரு பயலும் எழுந்திருக்கவே இல்லை . கேட்டா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை.ரூமுக்கு வெளியே உட்கார்ந்து இருந்திருக்காங்க . வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி.//

பின்னே வினை விதைச்சவன் வினை அறுக்கனுமே....//

அதுக்கப்புறம் யாருகிட்டேயும் எதுவும் கேட்பதே இல்லையே ..!!
////இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே//

அடபாவி மனுஷா இதை சொல்லத்தான் இத்தனை பில்டப்பா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல...//

இன்னும் கத்துக்க எவ்வளவோ இருக்கு மக்கா அதுக்குள்ள அசந்தா எப்பூடீ...ஹி..ஹி..

//இருந்தாலும் பயனுள்ள பதிவுதான். என்ன நம்ம டாக்டர் ஆச்சே....யோவ் கண்ணு சிவப்பா இருக்கே அதுக்கு மருந்து சொல்லும் ஒய்....//

அதுக்கு பப்ளிக்குல சொல்ல முடியாது ஓய் அது சீக்ரெட் :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//
//ஸாதிகா --//சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க .// வீட்டு அனுபவமோ?

பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது)//

ஹே ஹே ஹே ஹே இதை நான் அப்பவே சொன்னேன் ஸாதிகா... பய புள்ளை கேக்க மாட்டேங்குராரு ஒன்லி போர் ஓட்டகம்னு சொல்றாரு...பூனை எலிக்கெல்லாம் வைத்தியம் பார்க்க மாட்டாராம்....//

யக்காவ்..!! நல்லா கேட்டுக்கோங்க ..!! உங்களை பார்த்தா எலி பூனை மாதிரி இருக்குதாம்.. இது நான் சொல்லலை ஹி..ஹி.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மதுரை சரவணன்-//manasuthaangka ellaaththukkum kaaranam..vaalththukkal //

வாங்க ..வாங்க..!! சந்தோஷம் நானும் அதையேதான் சொல்றேன் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்-// இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.//

I agree with you CHELLAM. :)))) //

வாங்க..வாங்க..பெரிய டாக்டர்..!! அதான் இங்கிலிபிஷ்ல சொல்றீங்களோ ஹி..ஹி.. :-))

//இரவில் தோசை கூட வேண்டாம். இட்லியும் தக்க பக்கவாதியமும் கூட போதும். பின்னர் சூட ஒரு கப் பால் அல்லது பில்டர் காப்பி !
நமக்கு இரண்டாவதாக சொன்னதே போதும் தொற!!:))))//

இட்லி ஒரு 25 போதுமா பாஸ்..!! ஒரு பக்கெட் பில்டர் காஃபியா தாங்குதா ..ஹி..ஹி.. :-))

///// பேசாமல் டாகட்ர் போர்ட் மாட்டிக்கொண்டால் நல்லா பைசா தேத்தலாம்.நான் சொல்றது வெட்னரி டாக்டர்.(படங்களைப்பார்த்தால் அப்படித்தானே தோணுது)//
-----ஸாதிகா said.

அம்மாதாயே நல்லா பாத்து சொல்லணும், என் படத்த பாத்தா கூடவா அப்டி தோணுது?? //

கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க போலிருக்கே க்கி.க்கி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி//

சொந்த காபியில் சூனியம் வெச்சுக்கிட்டீங்களா :-))) //

வாங்க சாரலக்கா வாங்க..!! ம்..தெரியாதனமா நானும் குடுத்துட்டேன் அவ்வ்வ்வ்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//நல்லிரவு. ;) //

வாங்க மாமீஈஈஈஈ வாங்க..!! பொருள் விளக்கம் பிளீஸ்..யாராவது சொலுங்களேன் ..அவ்வ்வ்வ்

// கண்ணு தெரியணுமே, அதான் சொல்லிட்டுப் போறேன். ;) //

அதானே ..கொஞ்சம் அதிகமா வாயை திறந்திருக்கீங்களேன்னு பார்த்தேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//நல்ல விழிப்புணர்வுப் பதிவு.ராத்திரில கோப்பி குடிக்காதேங்கோ ! //

வாங்க.. குழந்தை நிலா வாங்க..!! எனக்கு எந்த பிராப்ளமும் இல்லைங்க ..கூட இருந்த ஆட்கள்தான் சரியா தூங்கல
// அந்த எலியார் எப்பிடி அவ்ளோ நூடில்ஸையும் சாப்பிட்டு முடிப்பார்.அந்த டின் அடுக்கினது யாரு.இதெல்லாம் சந்தேகம் ! //
நாந்தான் கேட்டுகிட்டு இருந்தேன் இப்ப நீங்க ஆரம்பிச்சிட்டீங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹி..ஹி.. :-))

ஜெய்லானி said...

@@@athira--// கொர்ர்ர்ர்... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... இது நான் தலைப்புக்குச் சொன்னேன்... வடைக்குச் சொன்னேனேன தப்பா நினைச்சிடப்பூடா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//

வாங்க அதிஸ் வாங்க..!! நானும் அதான் வைக்கலாமுன்னு நினைச்சேன் ..நான் தூங்கறதா நினைச்சு எல்லாரும் ஓடிடக்கூடாதுப்பாருங்க அதான் வைக்கல :-))

//எனக்கு இண்டைக்கு வடை வாணாம், நான் உண்ணாவிரதம்..:)).. நானே சொல்லிட்டா மரியாதை..:). //

தனியா நூடுல்ஸ் எடுத்து வச்சிருக்கேன் .. எலி சாப்பிடுவது இல்ல அது வேற இது வேற க்கி..க்கி..

///நல்லா பாரூ பயபுள்ள கீழேயே நிக்கப்போறான் // ஹா..ஹா..ஹா... இது என் கொப்பிரைட் படமாச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

நல்லா பாத்தீங்களா அங்கே காபிரைட் சிம்பலை கானோமே.. :-))

சின்ன பின் குறிப்பு:
Yeah... Yeah.... நல்லிரவு:) //

ரீச்சர் இங்கே சின்னதாதான் வாயை திறப்பாங்க :-))

//எங்களுக்கும் நித்திரைக்குப் போகும்போது ஒரு ஸ்ரோங் “ரீ” குடிக்காதுவிட்டால் நித்திரை வராதூஊஊஉ....//

இஞ்சி ”ரீ”யா லெமன் “ரீ”யா ஒரு சந்தேகந்தான்

//பூஸார் மரத்தில என்கிற தைரியத்தில எலியாருக்கு நூடில்ஸ் கேட்குதோ நூடில்ஸ்ஸ்ஸ்ஸ்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

சபாஷ்..!!பொருத்தத்தை கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்க சூப்பர் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன் --//வணக்கம் சகோதரம், தூக்கத்தின் நன்மைகளையும், தீமைகளையும் கலந்து ஓர் விழிப்புணர்வையும், அதனோடு சேர்த்து அறிவுரைகளையும் தந்திருக்கிறீர்கள்.
நன்றிகள். நன்றிகள்.//

வாங்க சகோ வாங்க..!! கரெக்டா படிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன் :-))

//அதிகமாக தூங்கா விட்டால் Depression எனப்படும் மனம் சார் வியாதி வரும் என்றும் சொல்லுவார்கள். குறைந்தது ஆறு மணித்தியாலத்திற்கு மேல் நித்திரை கொள்ளாதவர்கள் பிறருடன் எரிந்து விழுவார்கள் என்றும் சொல்லுவார்கள். //

உண்மைதான் ..அதனால எல்லோருக்குமே தேவையில்லாத மனக்கஷ்டமும் வருமே..!!

// எமது நாளாந்த தூக்க நேரத்தை மாற்றி, வழமைக்கு மாறாக நீண்ட நேரம் விழித்திருந்தால் மலச் சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.//

அதைதான் மேலே சொல்லலாமுன்னு நினைச்சேன் . பதிவின் நீளம் கருதி சொல்லவில்லை . ..:-))

//உங்களின் விழிப்புணர்விற்கு நன்றிகள். //

அதிகம் மொக்கைகளுக்கிடையில சிலநேரம் இதுப்போல பதிவுகள் வரும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன்--//வீட்டிலை உள்ள டாய்லெட்டையெல்லாம் நாறடிச்சிட்டாங்களா? உங்க கையாலை ஒரு காப்பி குடிக்கனும் போல இருக்கே. அப்போது தான் என் மலச் சிக்கலுக்கும் ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன் ;)) //

ஹா..ஹா.. அது மாதிரி எல்லாம் இல்லை.. கூடவே பணிப்புரியும் நண்பர்கள் அவர்கள் ..உங்களுக்கு ஈஸியான வைத்தியம் ”அஸ்பாகூல்” அப்படின்னு ஜெனரல் சூப்பர் மார்க்கெட்டில் கேட்டால் கிடைக்கும் .ரவையும் மைதாவும் மிக்ஸ் செய்த மாதிரி இருக்கும் அதை தயிருடன் கலந்து சாப்பிட்டாலும் சரி ..இல்லை அப்படியே வாயில் கொட்டி தண்ணீரில் முழுங்கினாலும் சரி .. இரவில் சாப்பிட்டால் போதும் ...!!
கருங்கல்லை சாப்பிட்டாலும் போதும் அடுத்த நாள் வெளியே வந்துடும் வந்ததே தெரியாது :-))
மெடிக்கல் கடையில் ஷாசே பாக்கெட்டுகளில் கிடைக்கும் . ஹைபர் மார்கெட்டில் 100, 200 ,500 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும் .இயற்கை பொருள் என்பதால் நோ ஸைடு எஃபெக்ட்ஸ்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், எனக்கு இந்த காஃபி என்றாலே அலர்ஜி. சும்மா மணந்தாலே தலை வலி தான்.//

வாஙக் வான்ஸ் வாங்க..!! இது வரை வெரைட்டியாக குடிச்சதில்லைன்னு நினைக்கிரேன் . அதான் பிராப்ளம் :-))
//இதில் படுக்க போகும் முன்பு குடிச்சா, ஷார்ஜா பக்கம் வந்து உங்களை மலை மீது இறங்க விடாமல் பண்ணி போடுவன். சாக்கிரதை!!!! //

என் கையால ஒரு தடவை குடிச்சா போதும் அப்புறம் ஒரு நாளைக்கு பத்து தடவை கேப்பீங்க ஹா..ஹா..:-))
படம் 1- பூஸார் யாரைப் பார்த்து பயப்படுறார்???? //

ஹி.ஹி... அது என்னைத்தான்னு எப்படி சொல்வேன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

//சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும் கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம் குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க//
ஏதோ வைத்தியம் சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன். //

தொடர்ந்து வைத்தியம் போட்டா நான் காலி சித்த வைத்திய சிகாமணின்னு யாராவது கல்லை கொண்டு எறிவாங்க ..இப்பவே மேலே ஒரு கமெண்டில ஒரு வியாதிக்கு மருந்து சொல்லிட்டேன் அவ்வ்வ்வ்வ்

//பக்கத்திலை தானே இருக்கிறீங்க. ஒரு எட்டு நாஞ்சிலாரின் கண்களை போய் என்னன்னு பார்த்திட்டு வந்துடுங்கோ. எப்ப பாரு கண் சிவப்பா இருக்குன்னு ஒரே புலம்பல். ஃப்ளைட் என்றாலும் பரவாயில்லை. நாஞ்சிலார் டிக்கெட் அனுப்புவார்.//

சிம்பிள் வைத்தியம் தான் ஆனா பப்ளிக்காச்சே.. அவ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி...//நிறைய குடிச்சா இந்த பிரச்சனை வராது
//

ரொம்ப டேங்ஸ் வாத்யாரே..//

வாங்க குருவே வாங்க ..!! இது எம் சி இல்ல சாதா ..அவ்வ்வ்வ்வ்

//இதை வெச்சே.. வாழ்க்கைய பிக் அப் பண்ணி, பொழச்சுக்குவேன்...
ஹி..ஹி //

ஏன் சைனீஸ் ##>>@>>% ல கடை போடற ஐடியா எல்லாம் இல்லையா ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்...//தூக்கம் ஒரு மனுஷனுக்கு சரி இல்லாட்டி அவனால எந்த விஷயத்திலும் சரியா முடிவு எடுக்க முடியாது . அது படிக்கிற பிள்ளையா இருந்தாலும் சரி . இல்லை வேலைக்கு போகும் ஆட்களாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரம் கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் இருக்கனும் .ஒரு நாளைக்கி சரியா தூங்காம இருந்தா அதோட எஃபெக்ட் எப்படியும் மூனு நாளைக்கு முகத்துல தெரியும் //

எனக்கு இது நூறு சதவிகிதம் உண்மை.. //

வாங்க சந்தூஸ் வாங்க ..!!எங்கே இல்லைன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன் ..!! :-))))நன்னி

//தூங்கறது பிடிக்கும்... அதுவும் மதியத் தூக்கம் ரெம்பவே.. அதுவும் லீவு நாளன்னிக்கு நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு, சாயங்காலம் எழுந்து டீ குடிச்சு, ஒரு படம் பாத்து.. என்னைக்கு இந்தக்காலம் மறுபடியும் வரப்போகுதோ..//

வயசானா அதுப்போல காலம் தானா வரும் . ஆனால் உடல் அதுக்கு ஒத்துழைக்கனுமே. :-)) ””எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் “”யாரோ சொன்னதா நினைவு (பூஸ்) :-))

//எங்களுக்கும் நித்திரைக்குப் போகும்போது ஒரு ஸ்ரோங் “ரீ” குடிக்காதுவிட்டால் நித்திரை வராதூஊஊஉ..//

me too.. //

ஆஹா.. சேம் பிளட் நிறைய இருக்கே . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தோழி பிரஷா--// நல்ல விழிப்புணர்வுப் பதிவு..//

வாங்க..வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//நல்லாத்தான் சொல்லீருக்கீங்க. ஆனா மதியம் தூக்கத்த பத்தி சொன்னதுதான் இடிக்குது. //
வாங்க..வாங்க..!! அங்கேதானே டாக்டர் இடிக்குது..எதுவுமே கொஞ்சமா இருந்தா சரிதானே..!!

/எனக்கு பகல் 1 மணிக்கு சாப்பிட்டுட்டு படுத்தா கரெக்ட்டா சாயந்திரம் 5 1/2 மணிக்கு காப்பி குடிக்க எழுந்திருச்சுடுவேன்.//

இதுப் போல தூங்கினால் அப்புரம் இரவு தூக்கம் வராதே என்ன செய்வீங்க ..? மதியம் மூளைக்கு வேலை குடுங்க . அது 400 ஹார்ஸ் பவர் வேகத்துல வேலை செய்யுமே :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@middleclassmadhavi--//பதிவும் படங்களும் ஜோர்!//

வாங்க..வாங்க..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar --//சூப்பர் //

வாங்க ஆச்சி வாங்க..!! எது படமா ..? பாடமா..?
//NHM ரைட்டரை டவுன்லோட் செய்துகொண்டேன்.நன்றி.அதோ துங்குகிறாரே, அவரும் நீங்க போட்ட காப்பியை குடிச்சிட்டாரா? //

இது காப்பி இல்லை அது மாதிரி ஏதோ குடிச்சிட்ட மாதிரி தெரியுது ஹா..ஹா.. :-))

//என் பதிவிற்கு வந்து மயில்களைப் பார்க்கவும்.//

ம்...பார்த்துட்டு கருத்தும் போட்டுவிட்டேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//தூக்கத்தை பற்றி நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு! //

வாங்க சகோ வாங்க..!! வாழ்க்கையில பாதி நாள் இதுலதானே கழியுது ஹி..ஹி..

//ஆமா பாஸ் பாதி பேர் உங்களாலதான் தூங்காம இருக்காங்க ஏன்னு தெரியுமா! //

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

//பின்னே இப்படி பயமுறுத்துனா எவன் தூங்குவான்

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//
அது ஒன்னுமில்ல வந்து பார்த்துட்டு பேசாம போனா நல்லா இருக்குமா அதுக்கு தான் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//சரியா அப்படியே சொல்றிங்க. நானும் காப்பி விரும்பி சில நேரம் நிங்க சொல்வது போல் படுக்க போகு முன் குடித்ததுண்டு. தூக்கமும் நல்லா வரும். //ஆஹா...எனனை மாதிரியே இருக்கின்றிங்க..

இதற்காகவே அம்மா, எனக்கு பரீட்சை சமயத்தில் ப்ரீயாக இருப்பாங்க...காபி போட்டு கொடுக்க தேவையில்லையே...அதான் குடித்தால் தூங்கிவிடுவேனே..//

வாங்க சகோஸ் வாங்க..!! நீங்களும் சேம் பிளட் தானா ஹ..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--// இன்னைக்கி ஒரு காபி குடிச்சிட்டு தூங்கப்போறேன் மவனே தூக்கம் மட்டும் வரல நாளைக்கு வந்து கும்முறேன். //

வாங்க சகோ வாங்க..!!என்னது இது இப்ப உங்களுக்கு தூக்கம் வரனுமா வரக்கூடாதா..? அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar --//பகிர்வு வழக்கம் போல் சுவாரசியம், தூக்கம் கண்ணை கெட்டுது,இதை படிச்ச உடனே,காப்பி குடிச்சா? குறட்டையே விடலாம்..அருமை. //

வாங்க..வாங்க..!! சந்தேகமாவே பதிவைப் போட்டா என்னை மாதிரி தூக்கத்திற்கு முன்னே காப்பி குடிக்கும் நிறையப்பேர் இருப்பாங்கப் போலிருக்கே :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//சுவாரசிய பகிர்வு //

வாங்க..வாங்க..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஆ.. ஜெய், முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(இது வேறைக்கு). //

வாங்க..வாங்க..!! அழைத்த கடமை வாட்டி வதக்கி விட்டது ஹி..ஹி...

//சரி அதுபோகட்டும்.. என்ன டிஷைன் எல்லாம் மாத்திட்டீங்க..... மேலே இருவரைப் போட்டிருக்கிறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். //

கிட்டத்தட்ட மூனு வருடத்திற்கு பிறகு டெம்பிளேட் மாற்றி இருக்கேன் . மெல்லிய வர்ணத்தில் கண்ணுக்கு கூசாமல் தேடியதில் இது கிடைச்சுது. சில கோடிங் மண்டைய காய வைத்து விட்டது கூடவே கலர் காம்பினேஷன் வித் போட்டோஷாப் எடிட்டிங் :-)))))))

//அழகா இருக்கு..//
நன்னி..நன்னி..நன்னி...தேங்க்யூஊஊஊஊஊஊ

//பச்சை ரோஸ் குட்டியாக இருக்கே... பெயரின் பின்னால் பெரிதாக வந்தால்(கழுகின் சைஸில) இன்னும் நன்றாக இருக்குமோ? //

பேக்கிரவுண்ட் பச்சை கலரில் இருப்பதால் சரி வருமான்னு தெரியல. இன்னொரு ஐடியா இருக்கு பொருமையா போடரேன் ..

இதுப்போல ஓப்பன் மைண்ட் கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

Mrs.Mano Saminathan said...

சுவாரஸ்யமான பதிவு!
தூங்கப்போகுமுன் ஏதாவது படிப்பதுதான் நல்ல தூக்கத்துக்கு வழி! அதுவும் 'போர்' அடிக்கும் புத்தகமாயிருந்தால் ரொம்பவும் நல்லது! அப்புறம் தூங்கப்போகுமுன் சினிமா, சீரியல்கள் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்!
முதலாவது புகைப்படம் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html

Anisha Yunus said...

காலேஜ்ல படிக்கிறப்ப எக்ஸாம் சமயத்துல 12 மணிக்கு ஒரு டீ சர்வீஸ் நடக்கும். நான் அதுக்காகவே முழிச்சிருப்பேன். டீ வந்ததும், மொத ஆளா நின்னு வாங்கி குடிச்சிட்டு, கவுந்தடிச்சி தூங்கிருவேன். ஹெ ஹெ ஹெ... நினைவில் வந்தது. எனக்கென்னமோ அந்த டீ, அப்ப குடிச்சாதேன் தூக்கம் வருங்கற மாதிரி இருந்தது. :)

ஜெய்லானி பாய், எனக்கொரு சந்தேகம் உங்க பேர்ல. அதான் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டேன். கண்டிப்பா எழுதுங்க :)
http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html
நன்றி. :)

Anonymous said...

டும்டும்..டும்டும்...
மேளத்தை சத்தமா தட்டுங்க...
தூக்கம் வராது.

கோமதி அரசு said...

// இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.//

நீங்கள் சொல்வது உண்மை. நல்ல உறக்கத்திறகு என்று மட்டுமல்ல எல்லாத்துக்கும் மனம் தான் காரணம்.

ஜெய்லானி said...

@@@Mano Saminathan --//சுவாரஸ்யமான பதிவு! //


வாங்க..வாங்க ..!! சந்தோஷம் :-))
// தூங்கப்போகுமுன் ஏதாவது படிப்பதுதான் நல்ல தூக்கத்துக்கு வழி! அதுவும் 'போர்' அடிக்கும் புத்தகமாயிருந்தால் ரொம்பவும் நல்லது! அப்புறம் தூங்கப்போகுமுன் சினிமா, சீரியல்கள் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும்! //

பெரும்பாலும் தூங்கப்போகும் முகம் , கை கால் கழுவி விட்டு அமைதியாக போய் படுத்தாலே போதும் தூக்கம் தானாய் வரும். அந்த நேரத்துல தேவையில்லாத மேட்டரை தலையில் ஏற்றினால் அதுவே கெட்ட கனவு வருவதுக்கும் அதுவே வேலை வைத்து விடுமே
//முதலாவது புகைப்படம் அழகு.//

இதுக்கு காப்பி ரைட்டு காப்பி தப்பு வைச்சிருக்கேன்னு மேலே ஒருத்தங்க மிரட்டினாங்களே கவனிக்கலையா சகோஸ் :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.. //

வாங்க சாரலக்கா வாங்க..!! தொடருன்னு சொன்னாலே மனசு ஆஆஆஆடி போகுது ஏன்னு தெரியல..இப்பவே டஜன் கணக்குல பாக்கி இருக்கு
// http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html //
ம்..முயற்ச்சி செய்யுரேன்ன்ன்ன்ன்ன்
அவ்வ்வ்வ்வ்வ்...அவ்வ்வ்வ்...அவ்வ்வ்வ் :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--//காலேஜ்ல படிக்கிறப்ப எக்ஸாம் சமயத்துல 12 மணிக்கு ஒரு டீ சர்வீஸ் நடக்கும். நான் அதுக்காகவே முழிச்சிருப்பேன். டீ வந்ததும், மொத ஆளா நின்னு வாங்கி குடிச்சிட்டு, கவுந்தடிச்சி தூங்கிருவேன். ஹெ ஹெ ஹெ... நினைவில் வந்தது. எனக்கென்னமோ அந்த டீ, அப்ப குடிச்சாதேன் தூக்கம் வருங்கற மாதிரி இருந்தது. :)//


வாங்க சகோஸ் வாங்க..!! இந்த பதிவு போடும் போது நான் மட்டும்தான்னு நினைச்சிகிட்டு இருந்தது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது.. என்னை மாதிரி பலப்பேர் இருப்பாங்கப் போலிருக்கே.. அப்ப நீங்களும் என் ரத்தம்தான் ஹி..ஹி... :-))

//ஜெய்லானி பாய், எனக்கொரு சந்தேகம் உங்க பேர்ல. அதான் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டேன். கண்டிப்பா எழுதுங்க :)
http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html
நன்றி. :) //

அனீஸ்...இது என்ன அக்கிரமமா இருக்கு .இந்த பேர்ல உங்களுக்கு சந்தேகம் வரலாமா..??..தி கிரேட் பேராச்சே...அவ்வ்வ்வ்வ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் இருக்கனும்//
அது ஒரு நாள் கூட சாத்தியமானதில்லை... "கனவில்லாத உறக்கம் கேட்டேன்" னு அஜித்குமார் பாடின ஒரு பாட்டு மெட்டுல கத்தனும் போல தோணும் சில நேரம்... வர்ற கனவு ஒரே கனவா வந்து தொலைச்சாலும் புண்ணியம், திடீர்னு இந்தியால இருப்பேன், திடீர்னு சம்பந்தமே இல்லாம ஸ்கூல் பிரெண்ட் ஒருத்தி இங்க என் வீட்டுல இருப்பா, அடுத்த நிமிஷம் எங்கயோ மழைல போற மாதிரி... உலக மகா குழப்பம்...ஹ்ம்ம்....

// இரவு நேரம் ஈஸியா செரிக்கும் இட்லி, ((அப்பாவி இட்லி மாதிரி இல்லை ))//
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.......:)))

//தூங்கப் போகும் 10 நிமிடம் முன்னே காஃபி சாப்பிடும் பழக்கம் என்னிடம் இருந்துச்சி//
எங்க பாட்டி இதை சொல்லுவாங்க... "தூக்கமே வர்ல ஒரு வாய் காப்பி குடேன்"னு... நாங்க கிண்டல் பண்ணுவோம்...:)

நல்ல பதிவுங்க...

Thenammai Lakshmanan said...

டெய்லி தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமேன்னு பாட ஒரு ஆள் போடலாம்.. ஜெய்..:))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//இரவு நேரம் ஈஸியா செரிக்கும் இட்லி, ((அப்பாவி இட்லி மாதிரி இல்லை ))//

இதுக்கு அப்பாவி மேடத்திடமிருந்து ரிப்லை எதிர்ப்பார்த்தேன், ஜில்லுனு ஒரு காதல்ல பிஸியா இருப்பாங்கன்னு நினைச்சா, அதுவும் இன்னைக்கு இல்லைன்னு ஆயிடுச்சு.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))