Wednesday, April 21, 2010

பிடித்த 10 தமிழ்ப் படங்கள்


          நண்பர்  முகிலன் மற்றும் சைவ கொத்து பரோட்டா பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார்.


விதி: 
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)


(1) எங்க வீட்டு பிள்ளை          முதலில் காலம் பல சென்றாலும் இன்னும் வாழ்வில் பல அரசியல் வாதிகளை வாழவைத்து கொண்டிருக்கும் தமிழக தலைவர் எம் ஜி ஆர் படத்தை போடாவிட்டால் அவர் ஆவி என்னை தூங்க விடாது. அந்த  வகையில் அவர் நடித்ததில் வீரமாகவும் கோழையாகவும் பயந்து நடித்த எங்க வீட்டு பிள்ளை

(2) புதிய பறவை
                 கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் முகத்தில் நவ ரசங்களையும் கொண்டு வரும் நமது சிவாஜியை நினைவு கூறாவிட்டால் அவருடைய ஆவியும் என்னை நொந்து நூடுல்ஸாக்கி கை வீசம்மா கைவீசுன்னு அழ வைத்து விடும் . இதில் சின்ன தகறாறில் சொவ்கார் ஜானகி இறந்ததும்  . சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சரோஜா தேவியை ல்வ் பண்ணவும் முடியாமல் கடைசி வரை தடுமாறும் அழகோ அழகு. கடைசியில் நீ என்னை கைது செய்ய காதல்தானா கிடைச்சுதுன்னு சிவாஜி சொல்லும் சீன் காலம் மாறினாலும் மனதை விட்டு நீங்காது. எங்கே நிம்மதிபாட்டு  இப்போதும் மண்டை காய்ந்தால் தானாகவே உதடு பாட ஆரம்பிக்கும்.

(3) புரியாத புதிர்

                  90களில் காவல் மிகுந்த கல்வி நிறுவனத்தின் சுவர் ஏறிகுதித்து கட் அடித்து பார்த்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்த  தோல்வி படம் . கடைசி வரை கொலை செய்தது யார் என்று மிக மிக நம்மை குழம்ப வைத்த படம். தமிழ்பட வரலாற்றில் இதுமாதிரி வந்திருக்குமான்னு சந்தேகமே. ரேகாவின் நடிப்பு அருமையான ஃபலுடா மாதிரி இதில். மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லைன்னு தெரியல.

(4) இரத்தக்கண்ணீர்

                  பணத்திமிரில் கட்டிய மனைவியின் அருமை புரியாமல் மது,மாதுன்னு திரியும் சபல கேஸ் பேமானிகளுக்கு உச்சந்தலையில் சும்மா நங்...நங்கொன்று கொட்டி புரிய வைக்கக்கூடிய மிக அருமையான எம் ஆர் ராதாவின் வசனம் வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பா பேசி நடித்திருக்க முடியாது.  இப்ப அந்த வசனங்களை கேட்டாலும் மனதை கட்டிப்போட்டு விடும். இந்த படத்தை பார்த்து திருந்தாவிட்டால் அவனை கடவுளால் கூட காப்பாத்த முடியாது.


(5) கரகாட்டக்காரன்
                    பெரியதாக கதை ஒன்னும் இல்லாவிட்டாலும் ஒரு வாழை பழத்தை வைத்தே மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம். எத்தனை தடவை பாத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு கண்ணழகி கனகாவும் ஒரு பிளஸ் .

(6) வாழ்வே மாயம்
                     என்றோ வரும் நமது  மரணம் இன்னும் சிறிது நாள் , என்று நாள் குறித்து விட்டால் அவனது நிலையை என்னென்று சொல்வது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கமல ஹாசன்.இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். ‘வந்தனம் ‘ பாட்டில் கடைசியில் ஸ்ரீ தேவி மீது பூவை தூவி சமர்ப்பணம்ன்னு சொல்லும் சீனாகட்டும், வாழ்வே மாயம்’  பாட்டில் உயிர் போகும் வலியிலும் பழைய சிரிப்பு , பழைய நினைவுகள் வருவது.>>>மனதை விட்டு போகவில்லை. சிகரட் பிடிக்கும் மக்களே கேன்சரை காசு குடுத்து வாங்காதீங்க. பின்ன உங்க ஒருத்தரால உங்களுக்கும் கஷ்டம் உங்களை நம்பி வந்தவங்களுக்கும் , பெத்தவங்களுக்கும் கஷ்டம் ஏன் ?

(7) வசீகரா
                      ஈ அடிச்சான் கப்பி நடிகனாகிய விஜய் கொஞ்சம் கஸ்டப்பட்டு நடிச்சதுமாதிரி இருந்தது இந்த படம். பாட்டும் சினேகாவும் ஒரு பிளஸ் பாயிண்ட்.

(8) உன்னை நினைத்து
                         பணம் பொதுவா பெண்கள் வாழ்க்கையிலதான் விளையாடும் ஆனா இதுல சூர்யா வாழ்கையில விளையாடியது .ஏமாற்றிய லவர் மீது ஆசிட் வீசும் மற்றும் மொட்டைகடிதாசு போடும் இந்த காலத்தில தன் சொத்தையே குடுத்து படிக்க வைப்பது உன்மையிலேயே காதலுக்கு மரியாதைதான். ’’பொம்பலைங்க காதலைதான் நம்பிவிடாதே’’ ’’யாரிந்த தேவதை ‘பாட்டு நல்ல கவிதை வரிகள்.

(9) வானத்தைப்போல
                          எப்போதும் எதிர்மறையான எண்ணங்களுடன் வரும் நபர்களை பார்த்து பழகிய நமக்கு பாசமுள்ள அண்ணன் , குடும்பம் , வில்லன் வரை அசத்தியது இந்த படம். பாட்டுக்களும் ஏ ஓன்,,, அநியாயத்துக்கு எல்லாருமே நல்லவங்களா இருக்காங்கப்பா!!!

(10) பாட்சா
                           எல்லாரையும் சொல்லிட்டு ரஜினியை சொல்லாட்டி தமிழ் ரசிகர்கள் கும்மிடுவாங்க. அதுவும் சித்ராக்கா காதுல விசில விட்டு காதை பஞ்சராக்கிடுவாங்க. இந்த படத்துல  வழக்கமா வரும் ரஜினியின் நகைச்சுவை மிஸ்ஸிங் சீரியஸான நடிப்பில் நம்மை மிரட்டி இருப்பார். ’’நான் உண்மைய சொன்னேன்”’ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி ‘வசனங்கள் டாப் டக்கர் . பழைய ரஜினியின் சாயல் இதில் கொஞ்சம் அதிகமாகவே தெரியும்.

                          எத்தனையோ படங்கள் இருக்கு ஓவ்வொன்னும் புதுமையாக நிறைய படங்கள் தோழர்கள் , தோழிகள் , அண்ணண்கள் , தம்பிகள் போட்டுவிட்டதால் ஏதோ சின்ன முயற்சி செஞ்சது. பாத்துட்டு எதுவா இருந்தாலும் பிண்ணூட்டத்தில் குத்தி கிழிக்கலாம். தைரியமா வாங்க!!!!!

41 என்ன சொல்றாங்ன்னா ...:

மசக்கவுண்டன் said...

நல்ல படங்கள். ஏழு படங்கள் நான் பார்த்தவை. மற்றவைகளைப் பார்க்க முயற்சி செய்ய்யய்யய்யய்யய்யய்யய்யகிறேன்ன்னன்னன்னன்ன.

Chitra said...

உங்களுக்கு பிடித்த பத்து படங்களில், "பாட்ஷா" படத்தை ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி.......!!! உய்..................உய்.....உய்.........!!!

வேலன். said...

நியாப்படி எம்.ஜி.ஆர்.- சிவாஜி படங்களுக்கு அடுத்து நீங்கள் ரஜினி படம் தான் போட்டிருக்கனும். இருங்கள் சித்ராக்கா வந்ததும் சொல்லி இரண்டு காதிலும் விசில் விட்டு பஞ்சராக்க சொல்ரேன்.
படங்கள் நல்ல தேர்வு.வாழ்க வளமுடன்,வேலன்.

vanathy said...

ஜெய்லானி, நல்ல தெரிவு. தொடக்கத்தில் இருந்த படங்களைப் பார்த்து விட்டு நீங்கள் 70 வயதைக் கடந்தவராக்கும் என்று நினைத்து விட்டேன் ஹிஹி....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாந்தான் பஸ்ட்..( கவுண்டர் கமென்ஸ் போடாம இருந்திருந்தா..ஹி..ஹி )...

ஆமா.. படம் எல்லாம் பார்பீங்களா?.. சொல்லவேயில்லை சார்..

ஹாய் அரும்பாவூர் said...

good top 10 movies
jailani

சைவகொத்துப்பரோட்டா said...

3 - வது மட்டும் இன்னும் பார்க்கவில்லை.
நன்றி ஜெய்லானி.

malar said...

;;;ஃபலுடா மாதிரி’’’’

நீங்களுமா ஃபலுடா?

நாடோடி said...

"புரியாத‌ புதிர்" நான் ர‌சித்த‌ ப‌ட‌ங்க‌ளில் ஒன்று..... தொகுப்பு அருமை ஜெய்லானி

கண்ணா.. said...

இதில் எனக்கு பிடிச்சது பாட்ஷா மற்றும் இரத்த கண்ணீர்.

அசத்தல் தொகுப்பு தல...

:)

அன்புடன் மலிக்கா said...

ஆகா டாப் 10 இங்கேயுமா?

//ஜெய்லானி, நல்ல தெரிவு. தொடக்கத்தில் இருந்த படங்களைப் பார்த்து விட்டு நீங்கள் 70 வயதைக் கடந்தவராக்கும் என்று நினைத்து விட்டேன் ஹிஹி//

இதத்தானே நானும் சொல்லவந்தேன்.

அடி வருது அடி வருது ஓடிப்போயிரு அப்படியெல்லாம் சொல்லமாட்டோம் உண்மைசொன்னா ஒத்துக்கோனும்..

உன்னை நினைத்து.

புரியாத புதிர்

வாய்வே மாயம்.

கரகாட்டக்காரன்.

எனக்கும் பிடிக்கும்.

Asiya Omar said...

3,7,8,9 படங்களை பார்க்கலை,செலக்‌ஷன் ஓ.கே.சித்ராவின் விசில் சூப்பர்.

Jaleela Kamal said...

ரொம்ப சரியான தேர்வு

புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். எத்தனை தலைமுறை வந்தாலும் அவர் நடிப்பை சொல்லாமல் இருக்கவே முடியாது.. ஒரு தடவை நேரில் பார்த்துக்கிறேன். கிள்ளி விட்டா ரத்தம் வருவது போல ஒரு கலர்..

ஆஹா புதிய பறவை , ரொம்ப சூப்பர் படம், சரோஜா தேவி , சவுகார் ஜானகியின் சிவாஜியின் நடிப்பை கேட்க்வா வேணும்,

கரகாட்ட காரன் வாழை பழ ஜோக்க யாராலும் மறக்க முடியாது..

இரத்த கண்ணீர் எம் ஆர் ராதா, அவர் நடிப்பே நடிப்பு வில்லன் + காமடியா இருக்கும்.

வாழ்வே மாய‌ம் கேன்ச‌ர் ப‌ற்றி தெரிய‌ வ‌ந்த‌ ப‌ட‌ம்.
பாட்சா பிள்ளைகள் அனைவருக்கும் இந்த படத்தில் ஆக் ஷன் அத்துப்படி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கு பிடித்த 10 படங்களும் அருமை..
அதில் 2 படங்கள் மட்டுமே நான் இன்னும் பார்க்கவில்லை..

நீங்க படங்கள் பற்றி விவரித்திருந்தது நல்லா இருக்கு.. :)

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--வாங்க!!முத வடை உங்களுக்குதான். பாருங்க நேரம் இருந்தால்.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Chitra --//உங்களுக்கு பிடித்த பத்து படங்களில், "பாட்ஷா" படத்தை ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி.......!!! உய்..................உய்.....உய்.........!!!//

அக்கோவ் காது பஞ்சராகி டின்சருக்கு வெய்டிங். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@வேலன்.--//நியாப்படி எம்.ஜி.ஆர்.- சிவாஜி படங்களுக்கு அடுத்து நீங்கள் ரஜினி படம் தான் போட்டிருக்கனும். இருங்கள் சித்ராக்கா வந்ததும் சொல்லி இரண்டு காதிலும் விசில் விட்டு பஞ்சராக்க சொல்ரேன்//

அண்ணே!! என்னமோ சொல்றீங்க ஆனா காதுல ஒன்னுமே விழல காது சும்மா கொய்ய்ய்..ன்னு சத்தம் மட்டும் கேக்குது. நீங்க சொல்றதுக்கு முன்னமே அவங்க காதுல வாம்பையர் விசில விட்டுட்டாங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@vanathy--// ஜெய்லானி, நல்ல தெரிவு. தொடக்கத்தில் இருந்த படங்களைப் பார்த்து விட்டு நீங்கள் 70 வயதைக் கடந்தவராக்கும் என்று நினைத்து விட்டேன் ஹிஹி....//

ஹா..ஹா..நக்கல்...நல்ல வேளை 90 வயசு கெழம்ன்னு சொல்லாம விட்டீங்களே . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பட்டாபட்டி--//நாந்தான் பஸ்ட்..( கவுண்டர் கமென்ஸ் போடாம இருந்திருந்தா..ஹி..ஹி )...
ஆமா.. படம் எல்லாம் பார்பீங்களா?.. சொல்லவேயில்லை சார்.//

பட்டு நான் அவ்வளவு சீக்கிரம் படம் பாக்க மாட்டேன். யாராவது 4 பேராவது நல்லா இருக்குன்னு சொன்னாதான் பாக்குறது வழக்கம். வேலில போற ஓனானை பிடித்து ஏன் ’’%^$^&”” விட்டுட்டு பின்ன கத்தனும் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹாய் அரும்பாவூர்--// good top 10 movies jailani//

வாங்க ஐயா, சந்தோஷம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சைவகொத்துப்பரோட்டா --//3 - வது மட்டும் இன்னும் பார்க்கவில்லை.//

சீடி கிடைத்தால் பாருங்க ,நானும் அப்ப ரிலீஸில் பாத்ததுதான். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@malar--//;;;ஃபலுடா மாதிரி’’’’நீங்களுமா ஃபலுடா?//

ஏன் உங்களுக்கு ஃபலூடா பிடிக்காதா?. ஜில்லுன்னு ஐஸ்கிரீமுமில்லாம ஃப்ரூட் சாலட்டுமில்லம “...” எனக்கு பிடிக்குமே!! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாடோடி--// "புரியாத‌ புதிர்" நான் ர‌சித்த‌ ப‌ட‌ங்க‌ளில் ஒன்று..//

திரில் படம் . ஏன் ஃபெயிலியர் தெரியல உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@கண்ணா--//இதில் எனக்கு பிடிச்சது பாட்ஷா மற்றும் இரத்த கண்ணீர்.//

ரத்த கண்ணீரில் ரஜினியை போட்டால் பாதி சக்ஸஸ் ஆகிடும்ன்னு நினைக்கிறேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ அன்புடன் மலிக்கா--//ஆகா டாப் 10 இங்கேயுமா?//

ஆமாங்க் ஆமாம் .பெரியவங்க தர..தரன்னு இழுத்து விட்டுட்டங்க.

//ஜெய்லானி, நல்ல தெரிவு. தொடக்கத்தில் இருந்த படங்களைப் பார்த்து விட்டு நீங்கள் 70 வயதைக் கடந்தவராக்கும் என்று நினைத்து விட்டேன் ஹிஹி//

இதத்தானே நானும் சொல்லவந்தேன்.//

ஒரு பச்ச புள்ளய இப்படியா அழவைக்கிறது.

//அடி வருது அடி வருது ஓடிப்போயிரு அப்படியெல்லாம் சொல்லமாட்டோம் உண்மைசொன்னா ஒத்துக்கோனும்..//

மலீக்கா பாட்டி சொன்னா இந்த பேராண்டி கேக்க மாட்டானா என்ன !!! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar --//3,7,8,9 படங்களை பார்க்கலை,செலக்‌ஷன் ஓ.கே.சித்ராவின் விசில் சூப்பர்.//

கிடச்சா கண்டிப்பா பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும். விசிலு ..இன்னும் காதுலயே கேக்குது.. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Jaleela--//. புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். எத்தனை தலைமுறை வந்தாலும் அவர் நடிப்பை சொல்லாமல் இருக்கவே முடியாது.. ஒரு தடவை நேரில் பார்த்துக்கிறேன். கிள்ளி விட்டா ரத்தம் வருவது போல ஒரு கலர்..//

அப்ப உங்க பாஷயில பிலிபைனி கலருன்னு சொல்லுங்க

//ஆஹா புதிய பறவை , ரொம்ப சூப்பர் படம், சரோஜா தேவி , சவுகார் ஜானகியின் சிவாஜியின் நடிப்பை கேட்க்வா வேணும்,//

கிளியின் பேச்சை கேட்டா எனக்கு சரோஜா தேவி நினைவுதான் வரும்

//கரகாட்ட காரன் வாழை பழ ஜோக்க யாராலும் மறக்க முடியாது..//

இன்னென்னு எங்க அதாங்க இது..

//இரத்த கண்ணீர் எம் ஆர் ராதா, அவர் நடிப்பே நடிப்பு வில்லன் + காமடியா இருக்கும்.//

எத்தனை தடவை பார்தாலும் கேட்டாலும் பரிதாமா இருக்கும்

//வாழ்வே மாய‌ம் கேன்ச‌ர் ப‌ற்றி தெரிய‌ வ‌ந்த‌ ப‌ட‌ம்.//
இதில் எனக்கு ஸ்ரீ தேவியை விட ஸ்ரீ பிரியா கேரக்டர் ரொம்ப பிடிச்சது
//பாட்சா பிள்ளைகள் அனைவருக்கும் இந்த படத்தில் ஆக் ஷன் அத்துப்படி//

பின்ன ஸ்டையில் அந்த கெட்டப் நம்ம சித்ராக்காவே விசில் அடிக்குபோது !!!!!!!!!உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//உங்களுக்கு பிடித்த 10 படங்களும் அருமை..அதில் 2 படங்கள் மட்டுமே நான் இன்னும் பார்க்கவில்லை..நீங்க படங்கள் பற்றி விவரித்திருந்தது நல்லா இருக்கு.. :) //

டைம் இருந்தா பாருங்க. இப்ப வரும் படங்கள் எல்லாம் டீனேஜை கணக்கு வச்சே வருது . குடும்பத்துடன் ரசிக்கும் படி வருவது இல்லை. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாஸியா said...

லாலாலல்லலால்லா லால்லால்லா லலல்லா

இது தான் இப்போ பேக்க்ரவுன்ட் ம்யூசிக்... ஒரே விக்ரமன் படங்களா இருக்கு..

எனக்கு கரகாட்டக்காரன் முதல் பாதியும் பாட்ஷாவும் பிடிக்கும்.. :)

ஜெய்லானி said...

@@@நாஸியா--///லாலாலல்லலால்லா லால்லால்லா லலல்லா இது தான் இப்போ பேக்க்ரவுன்ட் ம்யூசிக்... ஒரே விக்ரமன் படங்களா இருக்கு..எனக்கு கரகாட்டக்காரன் முதல் பாதியும் பாட்ஷாவும் பிடிக்கும்.. :)//

அப்படியா நா இருக்குற இடத்தில டீவீயே வைக்க முடியாது .அப்பரம் எப்படி டிஷ் ? நியூஸ் க்கூட நெட்டுல தான் . பிடித்ததை சொன்னது சந்தோஷம் .உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

பாட்ஷா வெடி படமுங்கோ

சசிகுமார் said...

அனைத்துமே அருமையான படங்கள் நண்பா, நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Balamurugan said...

நல்ல தேர்வு.

எல் கே said...

nalla tervu

r.v.saravanan said...

ஜெய்லானி சார்

நான் எழுதலாம் னு நினைச்ச மூன்று படங்கள் பற்றி நீங்க எழுதிட்டீங்க

பத்தும் முத்து தான்

ஹுஸைனம்மா said...

கேன்சர்னு பேச்சு வந்தாலே வாழ்வே மாயம்தான் ஞாபகம் வரும்; அந்தளவுக்கு கேன்ஸர் வந்தா மரணம்தான்னு அநியாயமா பயங்காட்டி இருப்பாங்க அதில!!

எல்லாமே நல்ல தேர்வுகள்!!

அன்புத்தோழன் said...

Gud selection...

Movies 1->4 = daddy kaalathula ulladhu.....

Movies 5->6 = Na porakka munnadi ulladhunu ninaikuren.....

Movies 7->9 = School padikra kalathula vandhadhu...

10 - The only movie i watched till end...

Menaga Sathia said...

நல்லத் தேர்வுகள்!! எனக்கும் உங்கமேல கோபம் நம்ம தலைவர் படத்தை கடசியா போட்டு பிடிக்கும்னு சொல்லிருக்கிங்க...

சிநேகிதன் அக்பர் said...

பட வரிசை ரொம்ப சூப்பர் ஜெய்லானி.

ஜெய்லானி said...

@@@A.சிவசங்கர்--//பாட்ஷா வெடி படமுங்கோ//

ஆமாம் தல மெகா ஹிட் படம்.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சசிகுமார்--//அனைத்துமே அருமையான படங்கள் நண்பா, நான் அனைத்தையும் பார்த்துவிட்டேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

வாங்க சார்.பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பாலமுருகன்-//நல்ல தேர்வு //

வாங்க சார்.பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@LK --//nalla tervu //

வாங்க சார்.பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


@@@.v.saravanan kudandhai--//ஜெய்லானி சார் நான் எழுதலாம் னு நினைச்ச மூன்று படங்கள் பற்றி நீங்க எழுதிட்டீங்க பத்தும் முத்து தான்//

இதனாலதான் சீக்கிரமா நடு ராத்திரியில போட்டது. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹுஸைனம்மா--//கேன்சர்னு பேச்சு வந்தாலே வாழ்வே மாயம்தான் ஞாபகம் வரும்; அந்தளவுக்கு கேன்ஸர் வந்தா மரணம்தான்னு அநியாயமா பயங்காட்டி இருப்பாங்க அதில!!//

ஒரு வகையில உண்மையும் அதுதானே..கேன்சரின் மரனங்களும் அப்படியே தாங்க இருக்கு கொடும...உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன்--//
Gud selection...

Movies 1->4 = daddy kaalathula ulladhu.....

Movies 5->6 = Na porakka munnadi ulladhunu ninaikuren.....

Movies 7->9 = School padikra kalathula vandhadhu...

10 - The only movie i watched till end..//

தலைவா பிச்சி பிச்சி எடுத்திட்டீங்க.1989 ல வந்த படம் கரகாட்டகாரன். பொறக்கரத்துக்கு முன்னாடின்னு போட்டிருக்கீங்க. ( குழம்புதே!! )உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia --//நல்லத் தேர்வுகள்!! எனக்கும் உங்கமேல கோபம் நம்ம தலைவர் படத்தை கடசியா போட்டு பிடிக்கும்னு சொல்லிருக்கிங்க...//

அய்யோ அடிக்காதீங்க . இனி இந்த தப்பு வராம பாத்துக்கிறேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//பட வரிசை ரொம்ப சூப்பர் ஜெய்லானி //

வாங்க!! வாங்க!!.பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

athira said...

அனைத்தும் சூப்பர் ஜெய்..லானி, மேல வைக்கலாம்.

ஹா..ஹா..நக்கல்...நல்ல வேளை 90 வயசு கெழம்ன்னு சொல்லாம விட்டீங்களே /// கிக்..கிக்...கிக்... நாங்க சொல்ல வந்திட்டமில்ல... அதிரா வந்து சொல்லட்டும் என்றுதான், வாணி அப்படிச் சொல்லாமல் விட்டவ...

Priya said...

உங்க தொகுப்பில் இருக்கும் பத்து படங்களும் மிக சிறந்த படங்கள்தான்! எம்ஜியாரில் ஆரம்பித்து.... மிக அழகாக வரிசைப்படுத்தி இருக்கிங்க!!!

Philosophy Prabhakaran said...

புரியாத புதிர்: எதிர்பாராத ஒரு இரவில் டிவியில் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படம் தோல்வியடைந்தது என்று நீங்கள் சொல்லித்தான் தெரிந்துக்கொண்டேன்.

ரத்தக்கண்ணீர்: simply, M.R.RATHA. அருமையாக நக்கலடித்திருப்பார் படம் முழுக்க. அவர் பேசும் வசனங்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அதிலும் கடைசி அரை மணிநேரம் காலத்தால் அழியாத நக்கல்ஸ்.

வசீகரா: மென்மையான காதல் படம் என்று சொல்லலாம். பார்த்ததும் காதல் என்று இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் இடையில் காதல் துளிர்த்தது பிடித்திருந்தது. விஜய் - வடிவேலு காமெடி சூப்பர்.

எங்க வீட்டு பிள்ளையும் புதிய பறவையும் நான் பார்த்தது கிடையாது. மற்ற படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் ரொம்ப பிடிக்கும் என்று கூறமாட்டேன்.

இந்த பதிவின் என்னுடைய பதிப்பை படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html

ஜெய்லானி said...

@@@athira--// கிக்..கிக்...கிக்... நாங்க சொல்ல வந்திட்டமில்ல... அதிரா வந்து சொல்லட்டும் என்றுதான், வாணி அப்படிச் சொல்லாமல் விட்டவ...//

எங்கே நம்ம பூஸாரை கொஞ்ச நாளா கானோமேன்னு நெனச்சேன். கரெக்டா வந்துட்டீங்களே. ஹி...ஹி.. நான் எப்ப் மாட்டுவேன்னுட்டு எல்லாம் ஒரு குருப்பாதான் இருக்கீங்க போல...ஓகே..ஒகே..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//உங்க தொகுப்பில் இருக்கும் பத்து படங்களும் மிக சிறந்த படங்கள்தான்! எம்ஜியாரில் ஆரம்பித்து.... மிக அழகாக வரிசைப்படுத்தி இருக்கிங்க!!!//

ரொம்ப தேங்ஸுங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Asiya Omar said...

மங்குனி அமைச்சரை ஜெய்லானி ப்ளாக் பக்கம் பார்க்க முடியலை,ஜெய்லானிக்கு அவ்வளவு பயமா?

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran --//எங்க வீட்டு பிள்ளையும் புதிய பறவையும் நான் பார்த்தது கிடையாது. மற்ற படங்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் ரொம்ப பிடிக்கும் என்று கூறமாட்டேன்.//

கிடச்சா பாருங்க அசந்து போவீங்க . ஃபாலோயர் போட்டாச்சு. இனி வருவேன்.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--//மங்குனி அமைச்சரை ஜெய்லானி ப்ளாக் பக்கம் பார்க்க முடியலை,ஜெய்லானிக்கு அவ்வளவு பயமா?//

ஏன்னு தெரியல!!! நான் இது வரைக்கும் யார் பிளாக்கிலயும் போய் என் பிளாக்குக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிட்டது இல்ல , அதுக்கூட காரணமா
இருக்கலாம் !!!!உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan said...

எனக்கு பிடித்த பத்து படங்கள் பதிவிட்டுள்ளேன் ஜெய்லானி

kudanthaiyur.blogspot.com

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))