Friday, September 23, 2011

ஸ்பெஷல் ஜுஸ்


      பாக்கெட்டுகளில்  அடைக்கப்பட்டு வரும் ஜுஸ்கள் விலைக்குறைவாக இருக்கும் மர்மம் பற்றி பலதடவை யோசித்திருக்கிறேன் . அதே  பழங்களை ஃபிரெஷாக  வாங்கும் போது விலை அதிகம் . என்னதான் மொத்தமாக வாங்கினாலும் . தயாரிப்பு செலவு  அடக்க விலை , தொழிலாளர்கள் , மிஷனரிகள் , டிரான்ஸ் போர்ட் இப்ப்டி பல விஷயங்கள் இருக்கே..!!
     ஒரு பழத்தை  ஜூஸாக செய்தால் அதிக பட்சம் இரெண்டு நாள் வரும். அதுக்கு மேல் அதுக்கு கேரண்டி கிடையாது. இது இல்லாமல்  இதை பாக்கெட் செய்யும் போது முழுக்க முழுக்க 100 சதம் ஜுஸ் மட்டுமே  வைக்க முடியாது .இதனால்தான் .சில கெமிக்கல் சேர்த்து விற்பனைக்கு வருகிறது.  ஒரு சில மில்லி க்கும் மிக க்குறைவாக சேர்ப்பதால் நமது உடம்புக்கு ஒன்னும் ஆகாது .இதுவே இந்த பொருட்களில் கலப்படம் செய்தால் நமது உடம்பு தாங்காது . அதிகளவு சர்க்கரையும் , சிலதில் போதை ஐட்டமும் சேர்ப்பதால்தான் நாமும் இதற்கு அடிமைப்பட்டு தொடர்ந்து வாங்குகிறோம் .
   
  உதாரனமாக சாதாரன லெமன் ஜுஸை  சில மணி நேரங்களுக்குள் உபயோகப்படுத்திட வேண்டும். இல்லா விட்டால் அதன் நிறம் கருப்பாக மாறி விடும் .இருக்கும் பாத்திரத்தையும் வீனாக்கிவிடும் .இதற்குதான் அதே நிறத்தை கொடுக்கும் சில கெமிக்ல்லை  சேர்த்தால் ஒரு வருடம் ஆனாலும் அப்படியே  இருக்கும் . ((ஆனா உங்கள்  உடம்புக்குதான் கேரண்டி இல்லை ஹி..ஹி.. )). 
    ஓகே திரும்பவும், முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கிறேன் .ஒரு சில தயாரிப்புகளில் உதாரணம் மாங்காய் .ஜுஸ் கட்டியாக இல்லாமல் தண்ணீர் அதிகம் சேர்த்து போல்  இருக்கும் .சிலதில் ஜுஸாகவே  இருக்கும் .அதுவும் மாம்பழம்தான் , இதுவும் மாம்பழம்தான் அப்புறம்  ஏன் இந்த இரெண்டு வகை  குவாலிட்டி. ஒன்றில் கெமிக்கல் எக்ஸ்ராக்ட்  அதிகம் இருக்கும் . மற்றொன்றில்  மாம்பழ ஒரிஜினல் ஜுஸாகவே இருக்குமுன்னு நினைச்சா நீங்க கண்டிப்பாக  ஏமாளிதான் .
      இரெண்டிலுமே  வாசனை க்குதான் மாம்பழம் இருக்கும் கலர் சேர்த்து இருப்பார்கள்.வருடம் முழுவதும் மாம்பழம் எங்கிருந்து வருமுன்னு யோசிக்கும் போது உண்மை புரியும் . எனது இத்தனை சந்தேகத்துடன்  ஒரு புகழ் பெற்ற கம்பெனிக்குள் உள்ளே நுழைந்தேன்.((  இதை அது மாதிரி கம்பெனி நிர்வாகிகள் படிச்சால் என்னை கம்பெனி உள்ளே  விடுவானுங்களான்னு தெரியல ..ஹி...ஹி.. )) .
     
  ஒரு பக்கம் வாழைப்பழம் , மாம்பழம் , கொய்யா இப்படி நிறைய ஐட்டங்கள் இருந்தது.. ஒவ்வொன்னா  பார்த்துகிட்டே போனேன் .  இதன் இன்னொரு ஸைடில  உருளை கிழங்குகள் டன் கணக்கில்  இருந்துச்சி .நான் இதை வித்தியாசமா பார்த்ததை கண்டு நைஸாக என்னை  வேறு பக்கம் கொண்டு போய்ட்டார் .இப்போதுதான் என்னோட ஒட்டு மொத்த சந்தேகமும் தீர்ந்தது அடப்பாவமே...!! வாழைப்பழம் கிலோ 3 ரூபாய்  ஆனா உருளை கிழங்கு ஒரு ரூபாய்தான் ,,,, வித்தியாசம் புரிந்தது.
    அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், கொய்யா ஜுஸ் கிடையாது கொய்யா எஸன்ஸ்  கலந்த உருளை ஜுஸ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் . உள்ளே நாலு வித (ஙே) ஜுஸ் குடுத்தாங்க ..குடித்துகிட்டே வந்தேன் . உருளை சேர்ப்பதால் பழசாறுக்கு அடர்த்தி அதிகம் கிடைக்கிறது செலவும் இல்லை .உடலை குறைக்க விரும்புபவர்கள் இதை குடிச்சால் உடல் குறையாது மாறாக கூடவே செய்யும் ஏன்னா  உருளையில் கார்போ ஹைட்டேட் மிக அதிகம். சர்க்கரை வியாதி உள்ளவங்க இதை அதிகம் சாப்பிடக்கூடாது . ஆனா இதை வெளியில சொல்லாம ரொம்பவும் ஈஸியா ஏமாத்திடறாங்க .யாருக்கும் தெரியாது .கவர்ச்சிகரமா யாரையாவது வைத்து விளம்பரம் செய்தால் அக்கா மாலா, கப்சி  மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள்  வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .

     வெளியில்  எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். வெளியே நீண்ட தூரம் போக நேர்ந்தால் ஒரு பாட்டிலில் கொண்டுப்போங்கள். முடிந்த வரை சொந்தமாக கொண்டு போவதால் போலியிலிருந்து தப்ப முடியும் .எந்த வித கெமிக்கல் சேர்க்காத ஒரிஜினல் ஜுஸ் குடித்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும் இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில்  மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க  முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...

54 என்ன சொல்றாங்ன்னா ...:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் மாம்பழம்...

MANO நாஞ்சில் மனோ said...

இனி ஜூஸ் குடிப்பே குடிப்பே....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு, நல்லபதிவு, கம்பெனிக்காரன் இதை படிச்சாம்னா குவாண்டாமோ ஜெயில் நிச்சயம்....

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//முதல் மாம்பழம்...//

வாங்க .வாங்க..!! எபப்டி பழமாதான் வேனுமா .? இல்லை ஜுஸா வேணுமா ஹா..ஹா
..
//இனி ஜூஸ் குடிப்பே குடிப்பே....//

பாட்டில்களில் உள்ளதை முடிந்த வரை குடிப்பதை தவிர்க்கலாம் :-)
//தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு, நல்லபதிவு, கம்பெனிக்காரன் இதை படிச்சாம்னா குவாண்டாமோ ஜெயில் நிச்சயம்...//

ஏன் யா இந்த கொல வெறி...அவ்வ்வ்வ்..உங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஒழுங்கா ஒட்டகத்தை மேச்சமா, பாலை களவாண்டு குடிச்சமான்னு இருக்கணும், ஆராச்சிஎல்லாம் பண்ணப்பிடாது ஹி ஹி...

இமா க்றிஸ் said...

ஸ்பெஷல் ஜூசுக்கு தாங்ஸ். :-)

சாந்தி மாரியப்பன் said...

//இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க //

அப்டியெல்லாம் ஈஸியா விட்டுட முடியாது. நீங்க செஞ்ச லெமன் ஜூசை கொடுத்துடலாம் :-))))

தினேஷ்குமார் said...

புட்டியில் அடைத்த பழச்சாறு விடைப்பெற்றது..........

MANO நாஞ்சில் மனோ said...

ஜெய்லானி said... 4
@@@MANO நாஞ்சில் மனோ--//முதல் மாம்பழம்...//

வாங்க .வாங்க..!! எபப்டி பழமாதான் வேனுமா .? இல்லை ஜுஸா வேணுமா ஹா..ஹா//


ஒரிஜினல் பழம்தான் வேணும்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

துப்பறியும் சிங்கம் ஜெய்லானி.

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்மணம் இணைச்சி ஒட்டும் போட்டாச்சு, நல்லபதிவு, கம்பெனிக்காரன் இதை படிச்சாம்னா குவாண்டாமோ ஜெயில் நிச்சயம்...//

ஏன் யா இந்த கொல வெறி...அவ்வ்வ்வ்..உங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//


ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க ஹி ஹி அதோ ஜீப் வருது...

Mohamed Faaique said...

அட... இவ்ளோ காலம் உருளை கிழங்கைய குடிச்சிட்டு இருக்கோம், பங்காளி'யா விட மோசமா இருந்திருகோமே..!!!

Angel said...

பயனுள்ள பகிர்வு ,எனக்கு எந்த ஜூஸ் குடிச்சாலும் ஒரே டேஸ்ட் இருக்கற ஃபீலிங்.
எனக்கு தான் taste buds வேலை செய்யலையோன்னு நினைச்சேன்
அப்ப எல்லா ஜுசிலும் உருளைகிழங்குதானா !!!!!!!!!
அப்ப ரெண்டு கிலோ பாங் பவுடர் duty free shop இல் இருந்து கொண்டு வந்தேனே அது ?? டவுட்ட கிளியர் பண்ணுங்க ஜெய்

Mohamed Faaique said...

இதுவர soft drink குடிக்காம(குடிச்சா உடம்பு போட்டிடும் 'னு பழ ஜூஸ்'ஐயே விலை கூடவாக இருந்தாலும் பரவல'னு வாங்கிக் குடிச்சேனே!!!

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --// ஒழுங்கா ஒட்டகத்தை மேச்சமா, பாலை களவாண்டு குடிச்சமான்னு இருக்கணும், ஆராச்சிஎல்லாம் பண்ணப்பிடாது ஹி ஹி...//

வாங்க..வாங்க..!! ஓட்டகப்பால் ஓவரா போனதாலதான் இந்த சந்தேகமே வந்துச்சு ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா --//ஸ்பெஷல் ஜூசுக்கு தாங்ஸ். :-) //

வாங்க..வாங்க..!! எப்படி..உங்களுக்கும் ஒரு லிட்டர் அனுப்பவா..? ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்-- //இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க //

அப்டியெல்லாம் ஈஸியா விட்டுட முடியாது. நீங்க செஞ்ச லெமன் ஜூசை கொடுத்துடலாம் :-))))//

வாங்க..சாரலக்கா வாங்க..!!எங்கே நீங்கலெல்லாம் அதை மறந்துட்டீங்களோன்னு நினைச்சிட்டேன் அவ்வ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜூஸ்கடையைப்பாத்தாலே பயப்பட வச்சுட்டீங்களே?
அப்போ ரசனா ல்லாம் எந்தவகையில் வருது?

ஜெய்லானி said...

@@@தினேஷ்குமார் -//புட்டியில் அடைத்த பழச்சாறு விடைப்பெற்றது..........//

வாங்க.வாங்க.!! இனிமே சொந்தமா வீட்டிலேயே செய்யுங்க , அதான் ஆரோக்கியம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாருஸ்ரீராஜ் said...

பயனுள்ள பதிவு...

மனோ சாமிநாதன் said...

ஜுஸ் வகைக‌ளில் உருளைக்கிழங்கு ஜுஸ் கலப்பது தெரிந்து திகிலாக இருக்கிறது! குறிப்பிட்ட பழச்சாறுகள் மட்டுமா, அல்லது எல்லா வகை பழச்சாறுகளிலும் கலக்கிறார்களா? சூப்பர்மார்க்கெட்டுகளில் அடுக்கி வைத்திருக்கும் பழச்சாறு வகைக‌ளை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிற‌து!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நோஓஓஓஓஓஓஓஓஓ மாம்பழம் எனக்குத்தான்.... ஏனையவற்றைப் புறிச்சுக் கொடுங்க ஜெய்.... பிறகு வாறேன்...:))).

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --//ஒரிஜினல் பழம்தான் வேணும்...//

வாங்க ..வாங்க.!! ஒரிஜினலாதான் இருக்கு ஆனா உள்ளே ஏகப்பட்ட வண்டு இருக்கு அப்படியே பார்ஸல் போட்டுடறேன் ஹி...ஹி... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//துப்பறியும் சிங்கம் ஜெய்லானி.//

வாங்க நிஜாம் பாய் வாங்க..!!ஃபாரெஸ்ட் ரேஞ்ஜர் யாராவது பார்த்தா சுட்டுடப்போறாங்க அவ்வ்வ் நான் மனுஷன் தாங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ-//ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க ஹி ஹி அதோ ஜீப் வருது...//

ஹம்மர் வந்தாலே பயப்படுரது இல்ல .இதுல ஜீப்பா ஹி..ஹி... யாரையாவது கையை காட்டிட்டு எஸ்ஸாகிட வேண்டியதுதான் அவ்வ்வ்வ் :-))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஜீப் இல்ல, “சங்கிலி” வருதாம்ம்ம்ம்ம்ம்.... ஹையோ... இங்கு புளியமரமும் இல்லாமல் போச்சே.... இம்முறை மாட்டிதான் ஜெய்:))).

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்னாச்சு ஜெய்லானிக்கு? சந்தேகம் கேக்கரத விட்டுட்டு விளக்கம் எல்லாம் சொல்றாரு...:) ஜஸ்ட் கிட்டிங்... நல்ல பதிவு

அந்நியன் 2 said...

//வெளியில் எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். //

இன்னா..நைனா புள்ளே குட்டிக கஷ்ட்டப்படுதுக ஜூஸ் கடை வச்சு பிழைக்கலாம்னு பாத்தா இப்படி குண்டை தூக்கி போடுறியே.

அப்படினு யாரோ சொல்றது கேட்கிறது பாஸ்.

தரமான ஜூஸ்களும் இருக்கத்தான் செய்கிறது மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் தரம் கண்டறியப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும்.

குறிப்பா ஆசிய நாடுகளில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கனும்.

வாழ்த்தும் ஓட்டும்.

கோகுல் said...

ஆமாங்க!சிலர் ஸ்டைல்க்காகவும் பாட்டில்லயும்,டின்லையும் வாங்கி சிப்பு,சிப்பா குடிச்சு
சிதைஞ்சு போறாங்க!

கோகுல் said...

டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே!

Unknown said...

அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல்தந்திருக்கிங்க. நன்றி.

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பயனுள்ள பதிவு.வாழ்த்தும் ஓட்டும்.

Anonymous said...

""மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...""

- ...........?
நல்ல பகிர்வு நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//அட... இவ்ளோ காலம் உருளை கிழங்கைய குடிச்சிட்டு இருக்கோம், பங்காளி'யா விட மோசமா இருந்திருகோமே..!!! //

வாங்க..வாங்க..!! ஹா..ஹா.. இனியாவது ஜாக்கிரதையா இருங்க :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin --/பயனுள்ள பகிர்வு ,எனக்கு எந்த ஜூஸ் குடிச்சாலும் ஒரே டேஸ்ட் இருக்கற ஃபீலிங்.
எனக்கு தான் taste buds வேலை செய்யலையோன்னு நினைச்சேன்
அப்ப எல்லா ஜுசிலும் உருளைகிழங்குதானா !!!!!!!!! //

வாங்க..வாங்க..!! எனக்கும் இந்த ஃபீலீங் இருப்பதாலதான் சந்தேகமே ..இனிப்பும் , டேஸ்டும் ஒரே மாதிரி இருக்கும் . ஆனா வாசனை மட்டுமே விதவிதமா தோனும் மர்மம் இதேதான் :-))
// அப்ப ரெண்டு கிலோ பாங் பவுடர் duty free shop இல் இருந்து கொண்டு வந்தேனே அது ?? டவுட்ட கிளியர் பண்ணுங்க ஜெய் //

பவுடரும் கிட்டதட்ட இதே ரகமாதான் இருக்கும் . என்ன அதில் உருளைக்கு பதில் மரவள்ளி கிழங்கு இருக்கப்போகுது ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --//இதுவர soft drink குடிக்காம(குடிச்சா உடம்பு போட்டிடும் 'னு பழ ஜூஸ்'ஐயே விலை கூடவாக இருந்தாலும் பரவல'னு வாங்கிக் குடிச்சேனே!!! //

வாங்க ..வாங்க..!! 10 & 20 கடையில சிம்பிளா ஒரு மிக்ஸி வாங்கி வைச்சுக்கோங்க . இதான் இதுக்கு தீர்வு :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--// ஜூஸ்கடையைப்பாத்தாலே பயப்பட வச்சுட்டீங்களே? //

வாங்க ..வாங்க..!! அந்த விலையில எப்படி குடுக்க முடியும் ..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. 5 ஸ்டாரில ஏன் விலை அதிகமுன்னு இப்போ புரியுதா :-))
// அப்போ ரசனா ல்லாம் எந்தவகையில் வருது?//
இதெல்லாம் கெமிக்கல்ஸ் கலவை ,அஸ்கார்பிக் ஆசிட் , மாலிக் ஆசிட் , சிட்ரிக் ஆசிட் , இப்படி பலதரப்பட்ட அமிலங்களின் கூட்டுதான் . இப்போது வாசனை எஸன்ஸ் வருதே அதுவும் அதே ரகம் தான் . கலர் பொடிகள் விதவிதமாக கடைகளில் கிடைக்கிறது .டுட்டி ஃபுரூட்டி என்பது உருளையை அதேபோல் வெட்டி வேக வைத்து கலர் மிக்ஸ் செய்தால் உடனே கிடைக்கும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ் --//பயனுள்ள பதிவு...//

வாங்க சாருக்கா வாங்க..!! எங்கே பிலாகர் உலகத்திலேயும் பார்க்க முடிவதில்லை :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன் --// ஜுஸ் வகைக‌ளில் உருளைக்கிழங்கு ஜுஸ் கலப்பது தெரிந்து திகிலாக இருக்கிறது! குறிப்பிட்ட பழச்சாறுகள் மட்டுமா, அல்லது எல்லா வகை பழச்சாறுகளிலும் கலக்கிறார்களா? //

அங்கே நிறைய விதமான ஜுஸ் கிடைக்கிரது .அப்படியென்றால் மேக்ஸிம் அதுதானே இருக்கும் :-)
//சூப்பர்மார்க்கெட்டுகளில் அடுக்கி வைத்திருக்கும் பழச்சாறு வகைக‌ளை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிற‌து! //
இரெண்டு லிட்டர் இரெண்டு கேன்கள் 8 க்கு கிடைக்கிரது .இதில் ஒன்று காக்டெய்ல் , அப்படினா நீங்களே முடிவு செய்துக்கோங்க :-)) ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//நோஓஓஓஓஓஓஓஓஓ மாம்பழம் எனக்குத்தான்.... ஏனையவற்றைப் புறிச்சுக் கொடுங்க ஜெய்.... பிறகு வாறேன்...:))). //

வாங்க வாங்க..!! படிக்காமலேயே மாம்பழம் கேட்டமாதிரி தெரியுது அவ்வ்வ்வ் :-))

//ஜீப் இல்ல, “சங்கிலி” வருதாம்ம்ம்ம்ம்ம்.... ஹையோ... இங்கு புளியமரமும் இல்லாமல் போச்சே.... இம்முறை மாட்டிதான் ஜெய்:))).//
யார் நானா இதை கேட்டதுமே பக்கத்திலுள்ள புதரில ஓடி ஒளிஞ்சிகிட்டேன் ஹி..ஹி... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி --//என்னாச்சு ஜெய்லானிக்கு? சந்தேகம் கேக்கரத விட்டுட்டு விளக்கம் எல்லாம் சொல்றாரு...:) ஜஸ்ட் கிட்டிங்... நல்ல பதிவு //

வாங்க..வாங்க..!! சந்தேகம் வெயிட்ட்ங்க் லிஸ்டில இருக்கு . நம்ம ஆள் ஒருத்தர் வேணாம் விடுங்கன்னு அழறார் ஹி.ஹி... சமாதானம் செய்து வைத்திருக்கேன் சொல்லிட்டீங்கல்ல இனி அடுத்த பதிவு சந்தேக பதிவுதான் :-))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--//வெளியில் எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். //

இன்னா..நைனா புள்ளே குட்டிக கஷ்ட்டப்படுதுக ஜூஸ் கடை வச்சு பிழைக்கலாம்னு பாத்தா இப்படி குண்டை தூக்கி போடுறியே.

அப்படினு யாரோ சொல்றது கேட்கிறது பாஸ்.//

வாங்க வாங்க..!! இதுக்கு அந்நியனா என்ன தண்டனைன்னு சொல்லுங்களேன் பாஸ் :-)

// தரமான ஜூஸ்களும் இருக்கத்தான் செய்கிறது மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் தரம் கண்டறியப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும். //

அடப்பாவமே..!! பாஸ் நம்ம ஊர்ல இருக்குற ஆட்கள் தான் இங்கேயும் கம்பெனி வச்சி இருக்காங்க . ரப்பர் ஸ்டாம்ப் தான் அரபி தெரியுமில்ல :-))))

// குறிப்பா ஆசிய நாடுகளில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கனும்.

வாழ்த்தும் ஓட்டும். //

நம்ம ஊர் சமோசா, இட்லி தோசை எப்போது அரபு நாடுகளில் வந்துச்சோ அப்பவே எல்லா தகிடுதத்தமும் கூடவே வந்திருச்சு :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கோகுல்--//ஆமாங்க!சிலர் ஸ்டைல்க்காகவும் பாட்டில்லயும்,டின்லையும் வாங்கி சிப்பு,சிப்பா குடிச்சு
சிதைஞ்சு போறாங்க! /

வாங்க..வாங்க..!! இதெல்லம் விளம்பரம் செய்யும் அட்டகாசத்துக்கு பலியாவது . பெப்ஸியில் பூச்சி மருந்து கண்டுபிடிச்சும் இன்னும் ஊரில ஓடிகிட்டுதானே இருக்கு :-( உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கோகுல்--//டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே! //

ம்.., சூப்பர் ஐடியா, ஆமா அதை வாங்கி வண்டியில ஊத்தினா நம்க்கு தலைய சுத்தாம ஊராவது சுத்தலாம் குடும்பத்தோடு ஹா..ஹா.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதி --//அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல் தந்திருக்கிங்க. நன்றி. //

வாங்க சகோஸ் வாங்க..!! சந்தோசம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோவ்

ஜெய்லானி said...

@@@ஆயிஷா அபுல்--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பயனுள்ள பதிவு.வாழ்த்தும் ஓட்டும். //

வாங்க..வாங்க..!! அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்) சந்தோசம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சின்னதூரல்--// ""மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...""

- ...........?
நல்ல பகிர்வு நன்றி //

வாங்க..வாங்க.!! குறிப்பிட்டு சில கம்பெனி பேரை சொல்லக்கூடாதேன்னுதான் கேப் விட்டேன் :-) ஆனா இதுதான் பார்முலா . கூடுமான வரை தவிர்ப்பது நலம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், //

என்னய்யா சொல்றீங்க..... மாம்பளம் ஊஸ் கேட்டா உருளை கிழங்கு ஜூஸ் தராய்ங்களா.... நான் வேற போன வாரம் பழாப்பழ ஜூஸ் கேட்டேன்.... என்ன தந்தாய்ங்களோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

அட கமேண்ட் பாக்ஸ் புதுசா இருக்கே...

மாய உலகம் said...

அக்கா மாலா, கப்சி மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள் வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .//

கரெக்டா சொன்னீங்க தல

மாய உலகம் said...

இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...//

சொல்லிட்டீங்கள்ள பாஸ்... சுடு தண்ணீ ரெடி பண்ணிட்டிருக்கேன் .... ஹி ஹி ஹி ஹி...

மாய உலகம் said...

இப்பெல்லாம் பயனுள்ள தகவலா போட்டு பட்டைய கிளப்புறீங்க... கலக்குங்க சகோ

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

மாய உலகம் said... 51


சொல்லிட்டீங்கள்ள பாஸ்... சுடு தண்ணீ ரெடி பண்ணிட்டிருக்கேன் .... ஹி ஹி ஹி ஹி.///

karrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)).

இராஜராஜேஸ்வரி said...

//இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க //

பயனுள்ள விழிப்புணர்வுப்பகிர்வு.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))