Saturday, July 30, 2011

சிந்தனை


     இதயத்தை பத்தி எத்தனையோ  படங்கள் வந்திருந்தாலும் , அதை பாதுகாக்க எத்தனை எத்தனை வெப் சைட்டுகள் , பிளாக்குகள்   இருந்தாலும் பல தடவை யோசிச்சுப்பார்தாலும்  ஒன்னுமே  புரிய மாட்டேங்குது . இதயம் ஒரு விளங்காத புதிர்  
   ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாளே  ஒரு அதிர்ச்சி சம்பவம் . கூடவே  வேலை செய்யும்  நண்பரின் மகன் வயதும் அதிக மில்லை 23 தான் இருக்கும் . இந்த ஊருக்கு அழைத்து ஒரு வேலையும் வாங்கி தந்து டிரைவிங்க் லைசன்சும் ( இங்கே யானை விலை ஆகும் ) எடுத்து கொடுத்தார் . தனக்கு பிடிச்ச  பெண்ணையே  திருமணமும் செய்து குடுத்தார் . திருமணம் ஆன மூன்றாம் நாளே  மணமகன் காலி. கேட்டால் ஹார்ட் அட்டாக்.
     இரவு 2 மணிக்கு ஊரிலிருந்து டெலிபோன் வரவே  .இவர் தூக்க கலக்கத்தில் எடுக்கவே இல்லை .திரும்ப திரும்ப போன் அடிச்சதில் .எரிச்சல் பட்டு போனையே ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார் . வீட்டிலுள்ளவர்கள் வேறு ஒருவருக்கு தகவல் சொல்லி அவர் காம்பவுண்ட் சுவர் ஏறிகுதித்து உள்ள வந்து இவரை எழுப்பி தகவல் சொல்லும் போது மணி 3 ஆகி விட்டது.  நண்பர் அலறி அடித்துக்கொண்டு  கிடைத்த முதல் ஃபிளைட்டில் ஊர் போய் இருக்கிறார் . அவர் மகன் இனிமையான சுபாவம்  கலகலப்பானவர்.
      நான் ஊர் போவதுக்கு முன் சந்தித்து பேசிய நினைவுகள் சோகத்துடன் நாட்கள் நகர  அடுத்த நான்கு நாட்களில் இன்னுமொரு சோகம் . நேற்று மதியம் வரை ஒன்றாக வேலை செய்தவர். இன்று வேலைக்கு வரவில்லை . ஒரு வேளை லீவா ஏன் வரவில்லைன்னு அவர் நெம்பருக்கு போன் செய்தால் இரவு நெஞ்சு வலி வந்து அதனால் அவரை எமர்ஜென்ஸி வார்டில்  வைத்திருப்பதாக அவர் சகோதரர் சொன்னார் ., சொல்லும் போது மணி காலை10  .
    சரி டியூட்டி முடிஞ்சு போய் பார்க்கலாமுன்னு இருந்தோம் . மதியம் 12.30க்கு  மீண்டும் தகவல் அவர் இறந்து விட்டார் .போய் பார்க்க மனசு ( தைரியம் ) வரவில்லை . உடலில்  எந்த ஒரு வியாதியும் இல்லை. நார்மலாகவே இருந்து வந்தவர் . கடைசியில் என்ன ஆச்சுன்னு சொல்ல அவர் இல்லை .வெளி நாட்டில்  உயிருடன் இருக்கும் வரை ஒரு கஷ்டமும் இல்லை . அதே இறந்து விட்டால் உடலை ஊருக்கு அனுப்ப பல சட்ட பிரச்சனைகள் , நாட்களாகும் அதனாலேயே பலர் இங்கேயே  அடக்கம் செய்து விடுவார்கள்.
     ஊரில் உள்ளவர்கள் இவர் வருவார் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்க அவர் உடல் மட்டுமே போனது .சோகத்தில்  இருக்கும் அவர்கள் குடும்பத்துக்கு இறைவன் மனசாந்தியை  கொடுக்கட்டும் .
  
 உதிர்ந்த இலையையை  பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(

19 என்ன சொல்றாங்ன்னா ...:

இராஜராஜேஸ்வரி said...

உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை ://

வேறு ஒன்றும் சொல்லத்தெரியாத சோகம் கனக்கிறது.

மனோ சாமிநாதன் said...

இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகளை இங்கே இத்தனை வ‌ருடங்களில் பார்த்துப் பார்த்து மனசு சலித்துப் போய் விட்டது. என் சினேகிதியின் கணவர் இங்கு இதே மாஸிவ் ஹார்ட் அட்டாக் காரணமாக இற‌ந்து போக, அன்று வியாழக்கிழமை என்பதால் உடலை சனியன்று தான் தர முடியும் என்று மருத்துவ மனையில் சொல்லி விட, என் சினேகிதி இரன்டு நாட்கள் அழுது கொண்டேயிருந்தது கொடுமையாக இருந்தது. இற‌ந்த கணவரின் உடலைப் பார்க்கக்கூட முடியாமல் அவரின் உடலுடன் இவரும் அதே விமானத்தில் ஊருக்குச் சென்றார். ஆனால் அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. எந்த பிரச்சினையுமே இல்லாத 23 வயது இளைஞன் இற‌ந்தது, அதுவும் திருமணமான மூன்றாம் நாளே இறந்தது மிகவும் கொடுமை! மனம் கனத்துப்போகிறது! நீங்கள் சொல்கிற மாதிரி இந்த இதயத்தைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை!

Mahi said...

மிகவும் வருத்தமாக இருக்கு ஜெய் அண்ணா! :( :(

சிலநேரங்களில் ஆண்டவன் அளிக்கும் தண்டனைகள் மிகமிகக் கொடுமையாக இருக்கிறது.

மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்.அவர்தம் குடும்பத்தாருக்கு ஆண்டவன் மனவலிமையைத் தரவேண்டும்!

ஹூம்..என்ன வாழ்க்கையோ போங்க! :(

ஆமினா said...

//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(//

:(

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி எதிர்பாராமல் நடப்பவைகளை விதி என்று சொல்லி சமாதானம் செய்து கொள்கிறோம்.

என் நண்பரின் மாப்பிள்ளை ஒரு சிறு விபத்திற்குப் பிறகு இரண்டாவது நாள் கோமாவிற்குப் போய் ஒரு மாதம் கழித்து வெஜிடேடிவ் நிலைக்குப் போய்விட்டார். பத்து மாதம் ஆகிறது. எப்போது நினைவு திரும்பும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

athira said...

கடவுளே... ஜெய்..

காலையில் பார்த்ததும் மனம் கலங்கி விட்டது.. இப்படி எத்தனையோ சோகக் கதைகள் உலகில் எமக்குத் தெரியாமலேயே இருக்கு...

//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(
//
உண்மையே...

ஓர் இறப்பு வீட்டைப்பார்த்து, (முற்றும் துறந்தவர்....)
“அங்கே பார் இறந்த உடல்மீது, இறக்கப்போகும் உடல் விழுந்து அழுவதை” ...எனப் பட்டினத்தடிகள் சொன்னாராம்.

சொல்வது சுலபம், ஆனால் அதை மனம் ஏற்றுக்கொள்ளுமா?????.

எதையும் தாங்கும் சக்தியை, அனைவர் இதயத்துக்கும் ஆண்டவன் வழங்கட்டும்.

Jaleela Kamal said...

.தொடர்ந்து தினம் தினம் இது போல் செய்திதான் கேட்டு கொண்டு இருக்கேன், இப்ப பதிவு போடும் சற்று முன் கூட ஏன் இபப்டி ஏன் இப்படி ,


//சோகத்தில் இருக்கும் அவர்கள் குடும்பத்துக்கு இறைவன் மனசாந்தியை கொடுக்கட்டும் //

இமா க்றிஸ் said...

என்ன சொல்றதுன்னே தெரியல ஜெய்லானி. ;( கவலையா இருக்கு.

அவங்க குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியா இருந்து இருக்கும். அவங்களுக்காக என் பிரார்த்தனைகள். இறைவன் அவங்களுக்கு மனத்தைரியத்தைக் கொடுக்கட்டும்.

ஸாதிகா said...

மனம் கனத்துப்போய் விட்டது ஜெய்லானி.இரண்டுமே தாங்கிகொள்ள முடியாத இழப்புகள்.அதிலும் திடும் என்ற மரணம்,இளவயது மரணம் எனபது மிகவும் கொடுமையானது.எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

//
உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :( // இது உலகின் இயல்புதான்.:-(

Mohamed Faaique said...

கல்யாணம் ஆன 3ம் நாளு ஹார்ட் அட்டாக்`ஆ??/
என்னங்க.. காலையிலேயே குண்ட தூக்கு போடுரீங்க....

middleclassmadhavi said...

:-((

ஹுஸைனம்மா said...

நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்; அவனிடமே மீள்வோம்.

பிறக்கும்போதே இறப்பும் உண்டு என்று தெரிந்தாலும், அது (சொல்லாமல் கொள்ளாமல்) வரும்போது, (உடனிருப்பவர்கள்) நிலைகுலைந்து போகிறோம். இறைவன் போதுமானவன்.

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி--//உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை ://

வேறு ஒன்றும் சொல்லத்தெரியாத சோகம் கனக்கிறது. //

கூடவே பழகிய நட்புக்களின் பிரிவு சொல்ல முடியாத வருத்தம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன் --//இது மாதிரி எத்தனையோ நிகழ்வுகளை இங்கே இத்தனை வ‌ருடங்களில் பார்த்துப் பார்த்து மனசு சலித்துப் போய் விட்டது.//

மாற்றம் ஒன்றே மாறாமல் இருக்கு

//என் சினேகிதி இரன்டு நாட்கள் அழுது கொண்டேயிருந்தது கொடுமையாக இருந்தது. இற‌ந்த கணவரின் உடலைப் பார்க்கக்கூட முடியாமல் அவரின் உடலுடன் இவரும் அதே விமானத்தில் ஊருக்குச் சென்றார்.//
நமக்கு நட்பு மட்டுமே ஆனால் சொந்தம் என்னும் போது வருத்ததின் அளவு புரிகிறது..இந்த வாழ்வே ஒரு வழி பாதைதானே ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வருத்தப்பட வைத்த விஷயம்..

காஞ்சி முரளி said...

மறைந்தவர்களின்
சுற்றம், நட்புக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....!

வருத்தங்கள்தான்....!
என்செய்வது....!

நிலையில்லாத நம் வாழ்க்கையில்
நிலையோன்றுமில்லை....
நிலையோன்றுமில்லை.... என
வாய் முணுமுணுத்தாலும்...

மனதோ நிலையானது என பொய் சொல்லி... சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பதே நிஜம்...!

நாமும் அதை நம்பி
ஓடிக்கொண்டே இருக்கிறோம்...!

இதில்...
மிகமிகமிக சோகமானது எதுவென்றால்...
இப்பதிவில் குறிப்பிட்டதுதான்...!

காஞ்சி முரளி said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

காய் இருக்க கனி கவர்ந்தற்று.... அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்

kowsy said...

இதுதான் வாழ்க்கை என்று சும்மா இருக்கவும் முடியல. வாழ்க்கையின் ரகசியத்தை மனிதன் புரிந்துவிட்டால், சுவாரஷ்யம் இல்லையென்றுதானோ என்னவோ வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))