Friday, July 15, 2011

காணவில்லை:(((

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்....

சொன்னது: அப்துல் காதர்





























காவில்லை..:(

1. நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுகிறாய்?

2. ஜெய்ஸ் பேஸ்ட்

1. நீ என்ன பவுடர் யூஸ் பண்ணுகிறாய்?

2.ஜெய்ஸ் பவுடர்

1. என்ன சோப் யூஸ் பண்றாய்?

2. ஜெய்ஸ் சோப்

1. அது என்ன? ஜெய் என்பது புதுஷா வந்திருக்கிற பிராண்ட்டோ?

2. இல்லிங்க ஜெய் என்பது என் ரூம் மேட்டோட பெயர்...

==========================================================

காவில்லை..:(

காணாமல் போனோரைத் தேடும் “....” படைத் தலைவர்

ஒருவர் உங்கமீது கல்லைக் கொண்டு எறிந்தால்

நீங்கள் பூவைக்கொண்டு எறியுங்கள்

மறுபடியும் உங்கமீது கல் எறிந்தால்

நீங்க பூந்தொட்டி கொண்டு எறியுங்க..

அடங் கொய்யாலே... என்ன

நினைச்சிட்டிருக்கிறார்கள்... உங்களைப்பற்றி..

==========================================================

காவில்லை..:(

1. எக்கவுண்டன் வேலைக்குப் போனீங்களே.. என்ன ஆச்சு?

2.செலக்ட் ஆகல:((, வருஷத்துக்கு 86 ஆயிரம் ரூபா சம்பளமாம்..

1.ஏன்? நல்ல சம்பளம்தானே?

2.நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 86 என்றால்,மாதத்துக்கு எவ்வளவு எனக் கேட்டிட்டேன்...

=========================================================

காவில்லை..:(

முக்கிய அறிவித்தல்: காணவில்லை:(

ஒருவர்: என் மனைவி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்.

மற்றவர்: அடப் பாவமே! அப்புறம்?

ஒருவர்: அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது

==========================================================

காவில்லை..:(

எவ்வளவு உயரத்தில ஏறிப் பார்த்தாலும், காணாமல் போனோரைத் தெரியவில்லையே:))

"என்ன சார் இது... உங்க பையன் மண்ணை சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்...கேட்க மாட்டீங்களா?"

"நான் மண்ணைச் சாப்பிடுறதில்லைங்க..."

=========================================================

காவில்லை..:(

Exam ல் பெயில் ஆன மகனிடம்
தந்தை : கையெழுத்து போட மாட்டேன் . இனிமே என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன் : என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே

==========================================================

காவில்லை..:(

ஒரு நாள் தன் காரை எடுக்கவந்தபோது "Parking fine" என எழுதியிருப்பதைக் கண்டு, மிகவும் சந்தோஷமடைந்த சர்தாஜி, ஒரு பேப்பரிலே “பாராட்டுக்கு நன்றி” என எழுதி , அருகிலிருந்த போஸ்ட் இல் ஒட்டிவிட்டு வந்தார்.

==========================================================

காவில்லை..:(

==========================================================

பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம்

இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்

இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.

==========================================================

39 என்ன சொல்றாங்ன்னா ...:

Unknown said...

கதை மிக அருமை...(பதிவுக்கும் கமெண்ட்டுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்.)

ஜெய்லானி said...

முதல் படத்தில இவ்வளவு அழகா இருக்காங்களே யாருங்க அது ஹா..ஹா...!!!

கடைசிக்கு முதல் படம் த -க்கு வெளியே..?????? :-))

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு நாள் தன் காரை எடுக்கவந்தபோது "Parking fine" என எழுதியிருப்பதைக் கண்டு, மிகவும் சந்தோஷமடைந்த சர்தாஜி, ஒரு பேப்பரிலே “பாராட்டுக்கு நன்றி” என எழுதி , அருகிலிருந்த போஸ்ட் இல் ஒட்டிவிட்டு வந்தார்.//

அது சர்தார்ஜி இல்லை மக்கா நீர்தான்......

MANO நாஞ்சில் மனோ said...

இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்//

ம்ஹும் ஒரு பய அழமாட்டான் சந்தோசப்படுவான்...ஹி ஹி....

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான புகைப்படங்கள்! அதுவும் ஒட்டகச்சிவிங்கி மீது வரிக்குதிரை! அசர வைக்கும் புகைப்படம்!

ஸாதிகா said...

//பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம்


இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்

இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.// அருமையான வரிகள்.

Mohamed Faaique said...

///காணவில்லை///
இதைத்தான் நாமளும் சொல்லிக் கொண்டிருந்த்தோம்..

இமா க்றிஸ் said...

//இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.// மியாவ்வ்வ்வ் ;)))

அந்நியன் 2 said...

காணவில்லை.

ஓட்டு கேட்டு பாட்டுப் போட்டு வந்த எம்எல்ஏ நாச்சி முத்துவை காணவில்லை

ராசா...என்...மன்மத ராசா...என்னை புறிஞ்சுக்கோ ராசா..மாஜி மந்திரியை காணவில்லை.

செம்மொழியாம்...ஆ..ஆ.ம்..தமிழ் மொழியாம்..கனி மொழியாம்....காணவில்லை.

இன்னும் ஏகப்பட்டோரை காணோம் தலைவா......முதலில் அவர்களுக்கு ஒரு வலையைப் போடுங்கள்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

:):):).... ஹா....ஹா..ஹா....

இமா க்றிஸ் said...

அதீஸ்.. பதிவு போட்டவர் பெயர் "அதிரா" எண்டு கொஞ்சம் பெரிய எழுத்தில ஒரு அறிவித்தல் போட்டால் நல்லமெல்லோ!! அதை விட்டுப் போட்டு என்ன //:):):).... ஹா....ஹா..ஹா....// ;)))

ஹேமா said...

பதிவு போட்டவர் இருக்காரோ இல்லையோ !

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நான் சிரிச்சாக் கேட்காதோ இமா?:)), கேட்குமாக்கும் என நினைச்சுட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

அதெப்பூடிக் கண்டு பிடிச்சிட்டீங்க?:), போட்டவர் ஆரென்பதெல்லாம் முக்கியமில்லை இமா, என்ன விஷயத்துக்காக என்பதுதானே முக்கியம் சோஓஓஓஓ... தண்ணிக்குள்ள, அங்கின வதனப் பக்கம் மட்டும் இருந்தால் போதுமோ(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))... எண்டுதான் தேடுறம் எல்லோரும்... .

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//ஹேமா said...
12

பதிவு போட்டவர் இருக்காரோ இல்லையோ !
//
இருக்கார் இருக்கார்ர்ர்ர்ர்.. கடவுளே 2012 க்கு முன்பே அனுப்பிடுவினம் போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))).

Naseem said...

இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்---
இந்த வாசகம் உங்களுக்குப் பொருந்தும்... அனைத்தும் அருமை !!!

இமா க்றிஸ் said...
This comment has been removed by the author.
இமா க்றிஸ் said...

அதீஸ்...
//அதெப்பூடிக் கண்டு பிடிச்சிட்டீங்க?//
சாட்சி நம்பர் 1. போன போஸ்டிங் 'டைமிங்' (அப்பவே தெரிஞ்சு தான் கமண்ட் போட்டனான்.)
தொடர்ந்து 'சாட்சிகள்' தன்னால மெய்ல்ல வந்து விழுந்துது. கொன்ஃபேம்ட். ;) நான் மட்டும் இல்ல... வேற ஆட்களும் கவனிச்சு இருப்பினம்.

//அங்கின வதனப் பக்கம்// ஒரு இன்விடேஷன் அனுப்பாமல் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன???

எம் அப்துல் காதர் said...

// படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:),// ஹி.. ஹி.. இது வேறயா மக்கா.. எப்பத்திலிருந்து அவ்வ்வ்வ்.. சொல்லவே இல்ல!!

எம் அப்துல் காதர் said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!!//

பரவாயில்ல எதாவது ஜொள்ளுங்னா...!!

எம் அப்துல் காதர் said...

// முக்கிய அறிவித்தல்: காணவில்லை :( //என்னாங்கடாது கடத்திக் கொண்டு போனது எப்பூபூபூபூடி... கிடைக்கும் க்கி...க்கி

எம் அப்துல் காதர் said...

//பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம் இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம் இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம். //

படிச்சிட்டு.. எங்கள அழ வைக்காம இருந்தா சரி தான் ஹி.. ஹி...!!

எம் அப்துல் காதர் said...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்.... சொன்னது: அப்துல் காதர் //

படத்த நாமென்ன சம்பந்தமா பண்ணிக்கப் போறோம்??? அவ்வ்வ்வவ்.

எம் அப்துல் காதர் said...

தொடர்ந்து பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க...​ம்ம்ம்ம் ஊருக்கு போயிட்டு வந்து ரொம்ப சுறுசுறுப்பாதானிருக்​கீங்க :-)))

அந்நியன் 2 said...

பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம்

இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்

இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.

இதை நான் எங்கேயோ படிச்ச மாதிரி தெறியுதே பாஸ்?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இமா.... எல்லாத்துக்கும் காரணம் ஜெய்...தான்:))... நான் இப்போ தேடிட்டேஏஏஏஏஏஏ இருக்கிறன். தெரியாமல் முன்பு ஒரு தடவை சொல்லிட்டன், பூல் க்குள் போனாலும் தலையைத் தண்ணிக்குள் வைக்க மாட்டன் பயம் என...:).

அதால கடலுக்குள் ஆரும் வராயினம் எண்டு, தலைகீழாக ஆசனமாம்ம்ம்:))). அதிராவோ கொக்கோ:)), அதுக்குத்தான் நான் கிட்னியை யூஸ் பண்ணி, இப்போ “சுறா”வுக்கு(நான் மீனைச் சொன்னேன்:)) ரெயினிங் நடக்குது, பம் கட்டிப்போய் அங்கின வெடிக்க வைக்க:)), இனிமேலும் ஆரும் போவினமோ கடலுக்கடியில பார்ப்பம்:)).

ஆனாலும் இமா ஜெய்யையும் குறை சொல்லப்பிடா... :)).

ஊரில, ஒரே பாட்டாம் “அடுத்தாற்று அம்புஜத்தைப் பார்த்தேளா... அவ ஆத்துக்காரர் ஆறு மாத லீவில வந்ததைக் கேட்டேளா” என்று. ஜெய்தான் இஞ்சிக்கு நீர் ஊற்றுபவராச்சே:), எப்பூடி லீவெடுக்கலாம்.. அதனால...

ரக்‌ஷி பிடிச்சு “நாகைக்குப்” போய்(அங்கினதான் விலை மலிவாமே:)) குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வாங்கிக் கொடுத்து ஒருமாதிரி இங்க ஓடிவந்தா..:)), மத்தளம்கூடப் பறவாயில்லை 2 பக்கம்தான் இடியாம்...:), இது ரப்பர் போல் மாதிரி திரும்புற இடமெல்லாம் இடிவிழுந்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))...

ஊசிக்குறிப்பு:
படிச்சதும் கிழிச்சிடுங்க இமா:)))). நான் ஏறிட்டன் விண்கலத்தில ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஓ வதனப்பக்கம்///
நான் வீட்டிலுள்ளோரின் ஐடியில்தான் வாறனான்... மேலோட்டம் பார்க்க:)(சி ஐ டி பிராஞ்சும் உண்டு:))), சொந்தப் பெயர் என்றால் நிட்சயம் இன்விடேஷன் வந்திருக்கும்:)). ஆனா எனக்கு ஏனோ இன்னும் மனம் விரும்பவில்லை அதில் இணைய:(, விரும்பம் வந்தால் வருவேன்.

இமா க்றிஸ் said...

என்னால சிரிக்காமல் இருக்க முடியேல்ல. ;)))))

இந்த இடுகை //வெளியீட்டாளர்:- athira on Friday, July 15, 2011// கவனிக்க மாட்டீங்களோ யாரும்!!
சரி, அதாவது பரவாயில்லை..
//ஜெய்லானி said...
2

முதல் படத்தில இவ்வளவு அழகா இருக்காங்களே யாருங்க அது ஹா..ஹா...!!!

கடைசிக்கு முதல் படம் த -க்கு வெளியே..?????? :-))// இதைக் கூடவா கவனிக்கேல்ல!!

கண்ணை மூடிக் கொண்டு... 'மக்கா', 'பாஸ்', 'தலைவா', 'ஜொள்ளுங்னா...!!', //ஊருக்கு போயிட்டு வந்து ரொம்ப சுறுசுறுப்பாதானிருக்​கீங்க// எண்டு ஆளாளுக்கு கொமண்ட் போட்டால்... இமா பாவம். ;) சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ;))

//படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்.... சொன்னது: அப்துல் காதர்// அப்துல் காதருக்கும் கூடவா விளங்கேல்ல!!

ஒருவேளை!!.. இடுகைக்கும் கமண்ட்டுக்கும் சம்பந்தம் இருக்கப்படாது எண்டு யாரேனும் சொன்னவங்களோ!! ;))))))))))

ஜெய்லானி டீவீல இடுகை வந்தால் 'அறிவிப்பாளர்' யார் என்று பார்த்துப் போட்டுக் கமண்ட் போடுங்க மக்கள்ஸ். சிரிக்க முடியேல்ல என்னால. கொடுமையா இருக்கு. ;)))))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஹா...ஹா...ஹா.... இமா...

போட்டது யாரெனத் தெரியாமல் வரும் பின்னூட்டங்களில்தான் ஒரு “இது” இருக்குதூஊஊஊஊ...:))).

//அப்துல் காதருக்கும் கூடவா விளங்கேல்ல!! //
இமா, நித்திரை கொள்வோரை எழுப்பலாம், நித்திரைபோல பாசாங்கு செய்வோரை எழுப்பவே முடியாது”...
நீங்க நம்பிட்டீங்களோ விளங்கேல்லை எண்டு:))).

அவருக்கு கலியாணம் முடிஞ்சு பலவருஷமாச்சாம், ஆனா இன்னும் சம்பந்தம் பற்றியே நினைச்சுக்கொண்டிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).... கடவுளே.... ஜெய்.. காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓஓ... நான் அண்டாட்டிக்காவில பென்குயின்களுக்கு மத்தியில இருக்கிறேன் இப்போ... பென்குயின் முட்டை பொறுக்கிறேன் அவிக்க:)))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

பதிவு மட்டும்தான் என்னுடையது... பின்னூட்டமெல்லாம் ஜெய்...க்குத்தான் சொந்தம்ம்ம்:))) அவர்தான் rubber ball ஆச்சே..:))))))))))))))))).

காஞ்சி முரளி said...

ஏய்யா..!

இத்தன நாளா நீ காணமாப்போய்ட்டு....!

"காணவில்லை" அப்படீன்னு பதிவா....!

நல்லா இருக்கையா....!

செய்ங்க...! செய்ங்க....!

erodethangadurai said...

நல்ல காமெடி....

http://erodethangadurai.blogspot.com/

Apple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டுமே ... !

இராஜராஜேஸ்வரி said...

அருமையான படங்கள், அழகான பகிர்வு. பாராட்டுக்கள்.

rajamelaiyur said...

அனைத்தும் அருமையான ஜோக்ஸ்

rajamelaiyur said...

கலக்குறிங்க நீங்க

Jaleela Kamal said...

என்ன ஜெய்ஸ் ப்ராடக்ட் புதுசா வந்து இருக்கா அது எங்க கிடைக்கும்?

அதற்கு பிறகு பூஸார் இடம் மாறி இங்குவந்து இருக்காறே?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//என்ன ஜெய்ஸ் ப்ராடக்ட் புதுசா வந்து இருக்கா அது எங்க கிடைக்கும்?//

ஜலீலாக்கா.... அது வாணும் என்றால் ஸ்பெஷல் டெலிவரிக்கு ஓடர் குடுங்க:)).

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே, நீங்க எவ்வளவு பெரிய ஆளு,. நீங்க என்னை மாதிரி சின்னப்பையனாட்டம் ஜோக்ஸ் எல்லாம் போட்டா எப்படி? ஹி ஹி

மாய உலகம் said...

ஜெய்ஸ் பேஸ்ட், ஜெய்ஸ் பவுடர் , ஜெய்ஸ் சோப் எந்த கடையில் விக்குது எனக்கு ஒரு பார்சல்..... நகைச்சுவையாக சொல்லிய நண்பர் ஜெய்லானியைப்பார்த்து மூன்று வரிக்குதிரைகளும் ஜெய்ஹோ ன்னு பாட்டு பாடுதா இல்ல .. மூன்று தொடர் பதிவுக்கு கூப்பிடுதா...

Valentin said...

Přehled online kasina Sazka Hry-Sazka Hry kasino-oficiální webové stránky, štědré bonusy, recenze skutečných hráčů, spousta hracích automatů za skutečné peníze

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))