Saturday, July 9, 2011

ஆஹா ... சமையல் ..!!

டிஸ்கி :- இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி.. 

இதுக்கே இப்பிடி முழிச்சா என்னாகிறது
   
  எளிமையா அழகா வாசனையா சமையல் குறிப்பு கேட்டு நிறைய பேர் மெயில் செஞ்சாங்க.  தனிதனியா பதில் போடுறதை விட ஒரு பதிவா போட்டா நல்லா இருக்குமேன்னு போட்டிருக்கேன் .
      எப்பவுமே  ஹைஜெனிக்கா சாப்பிட விரும்புகிறவங்க அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம் . ( ஆனா வாசனை பிடிக்குமான்னு நீங்கதான் சொல்லனும் )
     பிரியாணி எப்பவுமே  ஒரே கலரில்தானா செய்யனும்  கொஞ்சம் வித்தியாசமா  கருப்பு கலரில் செஞ்சிப்பாருங்க . ( கலர் தேவைப்பட்டா உங்க பையனோ  பொண்ணோ பேனாவுக்கு போடும் கருப்பு இங்கை பயன் படுத்தலாம்  )
      ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்.
     இட்லியை ஆவியில் வேக வச்சி சாப்பிட்டு போரடிச்சி விட்டதா   கவலையே  படாதீங்க . அதை முறுக்கு பிழியும் குழாயில போட்டு அப்படியே  எண்ணெயில் பொரிச்சி வையுங்க . வித்தியாசமான இட்லி தயார் ( சட்டினின்னு தனியா வேர சைடு டிஷ் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் )
     பருப்பு போட்டாதான் சாம்பாரா  அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும்
     அசைவம் சமைக்கும் போது என்ன தான் சுத்தம் செஞ்சாலும் சில நேரம் ஸ்மெல் போகாது . அதுக்கு  கவலை படாதீங்க கொஞ்சமா பினாயில் விட்டு கழுவினா வாடை போயிடும் .
     நீங்க வச்சிருந்த மாவுல பூச்சிகள்  வந்திட்டுதா அதை தூக்கியே  போடவேனாம் . அப்படியே  மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினா பூச்சி காணாம போகிடும் ஹி..ஹி... ( வந்தவங்களுக்கு தெரியவா போகுது )
     லெமன் ஜீஸ் பழசு மாதிரி தெரியுதா ..அதுல ரோஸ் மில்க் எஸன்ஸை கலந்துட்டா . ஏதோ  காக்டெயில்ன்னு நினைச்சி வந்தவங்க ஏமாந்துடுவாங்க  (  பால் செலவு மிச்சம் )
      மதியம் திடீர்ன்னு யாராவது விருந்துக்கு வந்துட்டா சமையல் செய்ய நேரம் இல்லையா நோ டென்ஷன் ஒரு வயத்து வலி மாத்திரையை  டீ , காஃபி  யில கலந்து குடுத்துட்டா அவங்களுக்கு சாப்பிட எதுவுமே கேக்க மாட்டாங்க ( டீ ,காபியே  சாப்பிடாதவங்களுக்கு மோர் , ஜுஸ் இருக்கவே இருக்கு )
      சிலருக்கு கருவாடு , கத்திரிகாய் என்றால் அலர்ஜின்னு சொல்லுவாங்க . அப்படி பட்டவங்களுக்கு  ஹமாம் சோப் , லைஃப் பாய் சோப் , சிந்தால் சோப்  இதுல ஏதாவது ஒன்னால அதை கழுவிட்டு சமைச்சா அலர்ஜி வராது .. (இதை போட்டு குளிச்சா அலர்ஜி வராதுங்கிர போது  கழுவினாலும் அலர்ஜி வராதுதானே   ஹி..ஹி...)
     வைட்டமின்    E  குறைவினால  நிறைய வியாதிகள் வராதா டாக்டர்கள் சொல்றாங்க .அதனால  முடிஞ்சளவு  உங்க வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா  பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க . ( உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே )   
  டிஸ்கி :-  யார் மெயில் செஞ்சி கேட்டாங்கன்னு  நீங்களும் கேட்க வில்லை அதை நானும் சொல்ல வில்லை

56 என்ன சொல்றாங்ன்னா ...:

r.v.saravanan said...

i am first

r.v.saravanan said...

present jailani

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//i am first //

வாங்க வாங்க ..!!முதல்ல வந்த்தால மேலே இருக்கும் ஈ உங்களுக்குதான் :-)

//present jailani //

எதையுமே படிக்கலையா அப்பாடி தப்பிச்சீங்க நீங்க ஹா..ஹா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

smilzz said...

unka lollu tanka mudiyalapa!

Niroo said...

//படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!!//

என்னத்த சொல்றது?

நிரூபன் said...

அடடா...இடக்கு முடகான சமையல் டிப்ஸ்களையல்லவா தந்திருக்கிறீங்க.

Mohamed Faaique said...

/// ஹைஜெனிக்கா சாப்பிட விரும்புகிறவங்க அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம்///

அந்த கிருமி லிஸ்டுல சாப்பிடரவரும் அடங்குவாரா????

Mohamed Faaique said...

///ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்///

கிச்சன்’ல இருந்து உங்கள தூக்கனும்னாலும் இப்படி பண்ணலாம். அன்றிலிருந்து, சமைக்கிர வேலை கிடையாது...

Mohamed Faaique said...

////பருப்பு போட்டாதான் சாம்பாரா அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும் //

யார் தலைய’னு தெளிவா சொல்லுங்க....(இன்னுமா தெளிவில்லாம இருக்கு????)

Mohamed Faaique said...

////அசைவம் சமைக்கும் போது என்ன தான் சுத்தம் செஞ்சாலும் சில நேரம் ஸ்மெல் போகாது . அதுக்கு கவலை படாதீங்க கொஞ்சமா பினாயில் விட்டு கழுவினா வாடை போயிடும்///

உங்க வடையும் போயிடும்.. ஜாக்கிரத...

///நீங்க வச்சிருந்த மாவுல பூச்சிகள் வந்திட்டுதா அதை தூக்கியே போடவேனாம் . அப்படியே மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினா பூச்சி காணாம போகிடும் ஹி..ஹி... ( வந்தவங்களுக்கு தெரியவா போகுது ) ///

Death Certificate'ல தெரிஞ்சுருமே!!!!

///மதியம் திடீர்ன்னு யாராவது விருந்துக்கு வந்துட்டா சமையல் செய்ய நேரம் இல்லையா நோ டென்ஷன் ஒரு வயத்து வலி மாத்திரையை டீ , காஃபி யில கலந்து குடுத்துட்டா அவங்களுக்கு சாப்பிட எதுவுமே கேக்க மாட்டாங்க ( டீ ,காபியே சாப்பிடாதவங்களுக்கு மோர் , ஜுஸ் இருக்கவே இருக்கு )///

பொலிடோல்’அ குடுத்துடீங்கன்னா, உடனே அனுப்பியும் வச்சிடலாம்...

///வைட்டமின் E குறைவினால நிறைய வியாதிகள் வராதா டாக்டர்கள் சொல்றாங்க .அதனால முடிஞ்சளவு உங்க வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க . ( உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே ) ///

அப்போ விட்டமின் பீ குறைவுன்னா, எத சாப்பிட சொல்வீங்க...?????

ஸாதிகா said...

ஊருக்குப்போயும் திருந்தலியா?

ஸாதிகா said...

உங்கள் வீட்டுக்கு யாரும் வந்தாலும் ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.

இமா க்றிஸ் said...

ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;)

ஊருக்குப் போயிருந்தப்ப பார்க்க வந்தவங்களை இப்பிடித் தான் கவனிச்சீங்களோ!

படம் பயங்கரமா இருக்கு. க்ர்ர்

vanathy said...

ஊருக்கு போய் வந்தாச்சா?? உங்க ஐடியா எல்லாமே சூப்பரோ சூப்ப.....( க )ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

MANO நாஞ்சில் மனோ said...

டிஸ்கி :- இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி.. //

எலேய் என்ன ஆரம்பத்துலையே அலப்பறையா....??? பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....

MANO நாஞ்சில் மனோ said...

ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்.//

கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேனே.......குச்சி வச்சி சிங்கத்தை சொரியுறாரே.......

MANO நாஞ்சில் மனோ said...

இட்லியை ஆவியில் வேக வச்சி சாப்பிட்டு போரடிச்சி விட்டதா கவலையே படாதீங்க . அதை முறுக்கு பிழியும் குழாயில போட்டு அப்படியே எண்ணெயில் பொரிச்சி வையுங்க . வித்தியாசமான இட்லி தயார் ( சட்டினின்னு தனியா வேர சைடு டிஷ் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் )//

நாச நாசமா போச்சி போ......

MANO நாஞ்சில் மனோ said...

பருப்பு போட்டாதான் சாம்பாரா அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும்//

புரியுதுய்யா புரியுது வீட்ல நல்லாத்தான் தாளிச்சி விட்டுருக்காயிங்க......

MANO நாஞ்சில் மனோ said...

கொஞ்ச நாள் திகார் ஜெயிலில் இருந்த ஒரு ஓட்டக களவாணி வெளியே வந்துருச்சி......!!! ஓடுறவன், பாயுறவன், நீந்துறவன் எவனா இருந்தாலும் எப்பிடி வேணா ஓடி தப்பிச்சிருங்க.......அந்த களவாணி பெயர்................................................................................................................................................................................................................................................................................................................................................................................................?
?
?
?
?
?
?
?
??
???
???
????
????????
ஜெய்லானி..................!!!!

MANO நாஞ்சில் மனோ said...

யார் மெயில் செஞ்சி கேட்டாங்கன்னு நீங்களும் கேட்க வில்லை அதை நானும் சொல்ல வில்லை//

அண்ணே சத்தியமா நானும் கேக்கலை, கேட்கவும் மாட்டேம்னே......[[ஆளை விட்ரா சாமியோவ்]]

MANO நாஞ்சில் மனோ said...

vanathy said...
14
ஊருக்கு போய் வந்தாச்சா?? உங்க ஐடியா எல்லாமே சூப்பரோ சூப்ப.....( க )ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

காறி துப்பலைதானே வானதி...??? என்னா ஒரு கொலை வெறி ரெண்டு பேருக்கும் ம்ஹும், பிச்சிபுடுவேன் பிச்சி ரெண்டு பேரையும் ஆமா.....

சாந்தி மாரியப்பன் said...

//அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம்//

அப்புறம் தண்ணீர்ல ஒரு பாட்டில் டெட்டாலை ஊத்தி, அதுல சாதத்தை சமைச்சா மிச்சம் இருக்கற 1% கிருமியும் செத்துடுமே.. அந்த அதிஆரோக்கியமான உணவை முதலில் ருசித்துப்பார்க்க ஜெய்லானியை அழைக்கிறோம் :-)))))))))

ஸாதிகா said...

//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;)
// இமா,உங்களுக்கு புரியலியா?அப்படி யாரும் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முன் ஜாக்கிரதையான பதிவு.

ஹேமா said...

ஜெய்....எங்கடா ஆளைக் காணோமே எண்டு பாத்தான்.சரி சரி இப்பிடி இவ்ளோ சிஸ்டத்தையும் ஊர்ல ட்ரை பண்ணிப் பாத்து மிச்சப்பட்டும் வந்திருக்கீங்க.வாழ்த்துகள்.உங்களை வச்சு பரீட்சித்துப் பாத்தவங்களுக்கு பாராட்டுக்கள் !

middleclassmadhavi said...

Rrrrrrrrrrr........
Your disci cooled me down!! :-))

காஞ்சி முரளி said...

////இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி..////

யப்பா... ஜெய்லானி...!
வந்ததுமே ஆரம்பிசுட்டியாப்பா....!

////எப்பவுமே ஹைஜெனிக்கா சாப்பிட ..............வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க///

இந்த டிப்ஸ எல்லாம் படிச்சு... அதன்படி நடந்தா... வெளங்கிடும்....!
நல்ல வெளக்கமையா....! இதுல வேற பின்பாட்டு... எபக்ட் வேற.....!

ஏப்ரல் மாசம் சொல்லாம...கொள்ளாம காணாமப் போன ஆளு....!
மூணு மாச கழிச்சு வந்து செய்ற அலம்பளப் பாரு...!

யோவ்...! ஜெய்லானி இது ரொம்ப... ரொம்பா... ஓவரு....!
அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்....!


டிசைன் எல்லாம் புதுசா இருக்கு...!

நல்லா இருக்கு...! ஆனா...!

இந்த டிசைனுக்கு ஏத்த மாதிரி பதிவப் போடையா....!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

யாருங்க மெயில் பண்ணினது... அவங்க மட்டும் என் கைல கிடச்சா...... அவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்.......

Mahi said...

பதிவு உபயோகமான பதிவுதான், படம்தான் ரெம்ப டெரரா இருக்கு ஜெய் அண்ணா..ஏன் இப்புடியெல்லாம் பயமுறுத்தறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வரைல உங்க ப்ளாக்ல இருக்க சமையல்குறிப்பெல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்.எப்ப சாப்பிட வரீங்க? ;)

வெகேஷன்லாம் நல்லா இருந்துதா..ஊர் வந்து சேர்ந்து செட்டில் ஆயாச்சா?

Karthikeyan Rajendran said...

டிப்ஸ் நல்ல இருக்கு பட் உயிருக்கு யாரு கேரண்டி

அஸ்மா said...

சலாம் சகோ. ஜெய்லானி. நல்லவிதமா ஊருக்கு போய்விட்டு வந்து இப்பூடியா...? நல்லாதான் யோசிக்கிறீங்க போங்க... உங்க வீட்டு விருந்துக்கு வர்றவங்க உங்க சாப்பாட்டை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பி பார்த்துதான் சாப்பிடணும்போல :))

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post_13.html

எழுதிடுங்க சகோ.

காஞ்சி முரளி said...

/////படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல/////

சார்...

உங்க பதிவ படிச்சிட்டு எதாவது சொல்லலன்னா..... நரகமா..!

என்னை கொண்டுபோய் நரகத்துல... எண்ணை கடைல போட்டு வறுத்தாலும் சரி.... நான் கருத்து சொல்லாமாட்டேன்....

இமா க்றிஸ் said...

விளம்பரம் பார்த்தேன். //தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.// எப்பவும் கிடைக்காது. ;))

ஜெய்லானி said...

@@@smilzz--//unka lollu tanka mudiyalapa! //

வாங்க..!! வாங்க..!! என்னங்க செய்யுறது ..இந்த லொல்லு என் கூடவே பிறந்தது..:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Niroo-- //படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!!//

என்னத்த சொல்றது? //

வாங்க .வாங்க..!! இதாவது பரவாயில்லை .இதுக்கு முன்னே வேற ஒரு டையலாக் இருந்துச்சு..அதை நீங்க படிச்சிருந்தீங்கன்னா... ஹி..ஹி... இன்னும் பயந்துப்போய் இருப்பீங்க .. எல்லாம் பூஸார் புண்ணீயம் :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன்-//அடடா...இடக்கு முடகான சமையல் டிப்ஸ்களையல்லவா தந்திருக்கிறீங்க. //


வாங்க...வாங்க..!! இதுப்போல இன்னும் 500 வித டிப்ஸ் இருக்கே இதுக்கே பயந்து ப்போனா ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//அந்த கிருமி லிஸ்டுல சாப்பிடரவரும் அடங்குவாரா???? //

வாங்க ...வாங்க...!!அதெப்படி இதை நீங்கதான் டிரை செய்து சொல்லனும் ..இதுக்கெல்லாம் டாக்டரை வச்சா அட்வடைஸ் செய்ய முடியும் ஹா..ஹா..

//கிச்சன்’ல இருந்து உங்கள தூக்கனும்னாலும் இப்படி பண்ணலாம். அன்றிலிருந்து, சமைக்கிர வேலை கிடையாது...//

ச்சே..ச்சே...வந்த விருந்தாளிகளை வெறுங்கையோடு விரட்டுவது தமிழர் பண்பாடு இல்லையே...:-)))

//யார் தலைய’னு தெளிவா சொல்லுங்க....(இன்னுமா தெளிவில்லாம இருக்கு????) //

ஆஹா....பாதி படிச்சதுமே தலை சுத்திப்போச்சா உங்களுக்கு ஹய்யோ...ஹய்யோ...!!

//உங்க வடையும் போயிடும்.. ஜாக்கிரத... //

அந்த அனுபவம்தான் மக்கா இது அவ்வ்வ்வ்...!!

//Death Certificate'ல தெரிஞ்சுருமே!!!! //

யாருப்பா அது அவருக்கும் ஒரு பார்ஸல் பிஸிஸ்...!!

//பொலிடோல்’அ குடுத்துடீங்கன்னா, உடனே அனுப்பியும் வச்சிடலாம்... //

வேனாமுங்கோ ஆட்டோ ,அப்புறம் மீட்டருக்கு மேலேயே கேட்பானே..!!

//
அப்போ விட்டமின் பீ குறைவுன்னா, எத சாப்பிட சொல்வீங்க...????? //
பிள்ளை பூச்சி , பல்லி --இதை காயவச்சி சுத்த நெய்யில் வறுத்து ஒரு மண்டலம் சாப்பிடனும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஊருக்குப்போயும் திருந்தலியா? //

வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! ஊருக்கு போவது திருந்துவதுக்கா ஹா..ஹா.. :-))

//உங்கள் வீட்டுக்கு யாரும் வந்தாலும் ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.//

யார் நானா ..? கரொக்டா சொன்னீங்க.. அதொல்லாம் உஷார்தான் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;) //


வாங்க மாமீஈஈஈ வாங்க...!! என்னது இது இன்னும் மெயின் ஐட்டத்தையே பார்க்காமல் ஸைடு டிஸுக்கே இப்படி பயந்தா எப்படி ஹி..ஹி...

/ ஊருக்குப் போயிருந்தப்ப பார்க்க வந்தவங்களை இப்பிடித் தான் கவனிச்சீங்களோ! //

யாரும் வரலைங்கிறதுக்காகதான் இப்படி வந்திருந்தா ஸ்பெஷல் கவனிப்புதான்..!! சரி நீங்க எப்போ வறீங்க :-))

// படம் பயங்கரமா இருக்கு. க்ர்ர் //

இந்த போஸ்டுக்கு பொருத்தமா தேடியதுல இதான் சரியா இருந்துச்சு அதான் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஊருக்கு போய் வந்தாச்சா?? உங்க ஐடியா எல்லாமே சூப்பரோ சூப்ப.....( க )ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... //

வாங்க வான்ஸ் வாங்க.!! வந்ததும்தான் இந்த போஸ்ட் ..கொஞ்சம் கூலா இருக்கட்டுமேன்னு .. ஆனா நீங்க பல்லை கடிக்கிரத பார்த்தா ஹாட்டா இருக்கு போலிருக்கு :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --//

எலேய் என்ன ஆரம்பத்துலையே அலப்பறையா....??? பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா... //

ஊர்ல வாத்து மேய்க்கிரதா கேள்விப்பட்டேன் உண்மையா பாஸ் ...ஹி...ஹி....!!

//கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேனே.......குச்சி வச்சி சிங்கத்தை சொரியுறாரே.......//

அதுக்குதான் சீக்கிரமாவே வந்துட்டேன் இந்த பதிவுலகத்தை இத்தனை ஈஸியா விட்டுட்டு ஓடிடமாட்டேன் . :-))

//நாச நாசமா போச்சி போ......//

மக்கா இப்போ ஊரிலதானே எல்லா ஐடத்தையும் டேஸ்ட் பார்த்துட்டு ஒரு மெயில் அனுப்புமய்யா (( உடலும் உள்ளமும் நலமா இருந்தா )) க்கி..க்கி...

//புரியுதுய்யா புரியுது வீட்ல நல்லாத்தான் தாளிச்சி விட்டுருக்காயிங்க......//

இன்னுமா இந்த ஊர் நம்புது அவ்வ்வ்வ்

//
அண்ணே சத்தியமா நானும் கேக்கலை, கேட்கவும் மாட்டேம்னே......[[ஆளை விட்ரா சாமியோவ்]] //

வாங்களேன் வீட்டுக்கு ஒரு நாள் சாவகாசமா பேசுவோம் ஹி..ஹி.. அப்படியே பல்லி ஃபிரை சாப்பிட்டுகிட்டே :-))

//காறி துப்பலைதானே வானதி...??? என்னா ஒரு கொலை வெறி ரெண்டு பேருக்கும் ம்ஹும், பிச்சிபுடுவேன் பிச்சி ரெண்டு பேரையும் ஆமா....//

கூல்...கூல்...ரொம்பவும் சூடா தெரியுதே..!! கொஞ்சம் லெமன் ஜுஸ் சாப்பிடுறீங்களா.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் //அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம்//

அப்புறம் தண்ணீர்ல ஒரு பாட்டில் டெட்டாலை ஊத்தி, அதுல சாதத்தை சமைச்சா மிச்சம் இருக்கற 1% கிருமியும் செத்துடுமே.. அந்த அதிஆரோக்கியமான உணவை முதலில் ருசித்துப்பார்க்க ஜெய்லானியை அழைக்கிறோம் :-))))))))) //

வாங்க..அமைதியக்கா வாங்க..!! இன்னைக்கி நான் விரதம் அதனால எதையும் சாப்பிட மாட்டேன் ..சாப்பிட்டுட்டு டேஸ்ட் எப்படின்னு சொல்லுங்க :-) (( யப்பா.....இதென்ன கொடுமை அவ்வ்வ்)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;)
// இமா,உங்களுக்கு புரியலியா?அப்படி யாரும் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முன் ஜாக்கிரதையான பதிவு. //

ஆஹா.... வந்தவங்களையும் விரட்டிட்டாங்களே..!! சரி....வேற யாராவது வராங்களான்னு பார்க்கலாம் .. இந்த பூஸையும் கானோம் ..கால் தடத்தையே கானோம் .ஒரு வேளை படிச்சிட்டு அப்படியே எஸ்கேப்பா ஹி...ஹி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இமா க்றிஸ் said...

!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வாசல்ல நிக்கிற எஃபெக்ட்ல ஒவ்வொருத்தரா "வாங்க.. வாங்க" ;))

இதுக்கு ஒரு அஸிஸ்டண்ட் வச்சுக்கலாம்ல.

ஜெய்லானி said...

@@@இமா--//
!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வாசல்ல நிக்கிற எஃபெக்ட்ல ஒவ்வொருத்தரா "வாங்க.. வாங்க" ;)) //

பிளாகும் நமது வீடுப்போலதானே..!! வருபவர்களை வரவேற்பது ஒரு வேளை தப்போ..??
ஒற்றை வரியில் பதில் (கஞ்சத்தனமா)போட எனக்கு பிடிப்பதில்லை ...!! :-))

//இதுக்கு ஒரு அஸிஸ்டண்ட் வச்சுக்கலாம்ல. //

இதுக்கும் ஸைடில விளம்பரம் குடுத்துடவா.??? ஹி...ஹி.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,


உங்க ப்ளோக இப்போதான் போல்ல்வேர் ஆகி படிச்ச முதல் போஸ்ட். ..உங்களுக்கு புண்ணியமா போகும் யாரு உங்கள இப்படி தூண்டி விட்டது??? எய்தவன் இருக்க அம்பை நோவானேன் அப்படீங்கிற நல்லெண்ணத்துல கேக்குறேன். எனக்கு படிச்சதுலையே த்ரீ course மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி . நல்ல...............ஆ இருங்க !! நான் இப்போ எங்கே இருக்கேன் சொர்கமா நரகமா சொல்லடி சிவசக்தி !!

பித்தனின் வாக்கு said...

good jailani. goo humer

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன் . நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

மாய உலகம் said...

வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவி..

ஜெய்லானி said...

@@@En Samaiyal --//ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,

உங்க ப்ளோக இப்போதான் போல்ல்வேர் ஆகி படிச்ச முதல் போஸ்ட். ..உங்களுக்கு புண்ணியமா போகும் யாரு உங்கள இப்படி தூண்டி விட்டது??? எய்தவன் இருக்க அம்பை நோவானேன் அப்படீங்கிற நல்லெண்ணத்துல கேக்குறேன். எனக்கு படிச்சதுலையே த்ரீ course மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி . நல்ல...............ஆ இருங்க !! நான் இப்போ எங்கே இருக்கேன் சொர்கமா நரகமா சொல்லடி சிவசக்தி //

வாங்க...சமைலே வாங்க..!!ஆரம்பத்திலே அப்படித்தான் தெரியும்..ரெண்டாவது ரவுண்டு சாப்பிட ஆரம்பிச்சா தெளிவாயிடுவீங்க .சொர்கத்திலேயும் சரி நரகத்திலேயும் சரி நம்ம பிரான்ச் அங்கே இருக்கு தப்பவே முடியாது ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு -//good jailani. goo humer //

வாங்க பிரதர் வாங்க ..!!இப்பவெல்லாம் எழுதறதை ஏன் விட்டுட்டீங்க , திரும்பவும் உற்சாகத்தோட வாங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@ஆமினா --///உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன் . நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html //

வாங்க சகோஸ் வாங்க..!! இந்த பதிவை படிச்சிட்டு சில பேர் வீட்டை விட்டே எஸ்கேப்பாம் .கொலைவெறியில ஒரு கும்பல் என்னை தேடிகிட்டு அலையுது .மறந்திருந்தவங்களை உசுப்பேத்தி விட்டுட்டீங்களே..!!அவ்வ் :-) உங்கள் வருகைக்கும் வலைசர அறிமுகத்திற்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் //

வாங்க பாஸ் வாங்க..!! வாழ்த்துக்கு நன்றிங்கோவ் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@அமுதா கிருஷ்ணா --//அடப்பாவி.. //

வாங்க..வாங்க.!! இது மாதிரி ஆசிர்வாதம் எனக்கு அடிக்கடி தேவை .ஹி...ஹி...!!:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

அன்புடன் மலிக்கா said...

இப்படியெல்லாம் கூட கிளம்பியிருக்காங்கப்பா..

இப்படியா மறந்துட்டு இருப்பாங்க மனிதர்கள்..

Jafarullah Ismail said...

இதுல உங்க அனுபவத்துலதானே எல்லாம் சொல்லி இருக்கீங்க?/// டவுட்டு/////

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))