Friday, June 4, 2010

ஒரு சந்தேகம்


           இன்றைக்கு ஒரு சந்தேகம் யார்கிட்டயாவது கேட்கலாமான்னு பார்த்தால் லீவு , அதனால யாரையும் பார்க்க முடியல . ஒரு வேளை கேட்டு வச்சி  அவங்க என்னை அடிக்க வந்துட்டா என்ன செய்யரது . அதனால இந்த கேள்வியை நான் உங்க கிட்ட கேக்குறேன் . சரியா ! எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா மட்டும் இருக்கனும் அதுக்காக கட்டை , வேல்கம்பு , இப்படி ஆயுத்தோட சண்டைக்கு வரக்கூடாது .

          இப்ப கேள்வி என்னன்னா முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி . அது முட்டை மாதிரி இருப்பதனாலா ? இருக்கலாம்ன்னு சொல்ற பொது மக்கள் !,  அப்ப வட்டத்துக்கு என்ன பேர் சொல்வாங்க .  வட்டம் முட்டை இரண்டுமே ஒரே மாதிரிதான் இருக்குன்னு நீங்க சொன்னா . கோழி போடுற கருவுக்கு ஏன் முட்டைன்னு சொல்றாங்க.? அது நீள் வட்டமா தானே இருக்கு.

          அப்ப கோழி முட்டை , வட்டமா இல்ல முட்டையா ?, எது சரி ! கோழி முட்டைக்கு , முட்டைன்னு மட்டுமே ஏன் சொல்லனும். கடையில பொதுவா இங்கு முட்டை கிடைக்கும்ன்னு மட்டும் இருப்பது ஏன்.? வீட்டில  முட்டை வாங்கிட்டு வான்னு சொன்னா நீங்க ஏன் கோழியோட முட்டையை மட்டும் வாங்கிட்டு வறீங்க. ஒரு வாத்து வோட முட்டை , காக்கையோட முட்டை , புறாவோட முட்டை , ஆமை முட்டை , கொசு முட்டை , பல்லி முட்டை , பாம்பு முட்டை இப்படி எல்லாமே முட்டை போடும் போது தனிபட்ட கோழிக்கு மட்டும் முட்டை அந்தஸ்து குடுப்பது ஏன் ?

          சரி இது முட்டை இல்ல கருதான்னு நீங்க எஸ் ஆனா !!, இதுக்கு பதில் சொல்லுங்க . முட்டையோட  உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இருக்கு . அப்ப இரண்டு கரு சேர்ந்தத ,  கரு முட்டைன்னு சொன்னா . ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிலே எதுவுமே இல்லாம அதை கரு முட்டைன்னு ஏன் சொல்லனும் ?.

         ஒரு விசயத்தில சந்தேகம் வந்துட்டா அதில தெளிவு வராத வரை எனக்கு தூக்கம் வராது . இந்த விசயத்தில நா கும்ப கர்ணன் மாதிரி ? !!! .அப்படி தெரிந்தவங்க  கொஞ்சம் கும்மிட்டு போகலாம் . அப்படி தெரியாட்டி இதை படிங்க வேற தப்பிக்க இடமே இல்லை..


படம் >>> கோழிப்யோட கவிதைகள்

போனதே போனதே என் முட்டை டிரேயிலே
போனதே  போனதே என் முட்டை டிரேயிலே
நானும் சேர்ந்து போகவும் ஒருவழியும் இல்லையே
அதில் இடமும்  இல்லையே
போனதே போனதே என் முட்டை டிரேயிலே

குடோன் சேரும் போது  கரெண்ட் கட்டானதோ
அறியாமல் பிக்கப்  தடம் மாறியதோ
முட்டை அது புதுசு விழுந்தால் அழும் மனசு
தங்க முட்டையே சந்திப்போமா
சந்தித்தாலும் முழுசா பார்போமா
சந்தேகம்  தானே ?

போனதே போனதே என்

போனதும்  முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும்  ஏது?

போனதே போனதே என் முட்டை டிரேயிலே
நானும் சேர்ந்து போகவும் ஒருவழியும் இல்லையே
அதில் இடமும்  இல்லையே

           டிஸ்கி: யாருப்பா அது கதாசிரியர் விருது குடுக்கிறது . பேசாம மொக்கை பாடலாசிரியர் ( ஐ...) விருதா மாத்தி குடுத்திடுங்க. ( அடுத்த பதிவு சீரியஸா போட்டுடுவோம் பயப்படாதீங்க )

121 என்ன சொல்றாங்ன்னா ...:

Kasaly said...

நானும் என்னவோ ஏதோ என்று படத்தை பார்த்து
அவிச்ச முட்டை எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுக்க போகிறீர்கள் என்று வந்தேன்...சுத்த கூமுட்டை தனமல்லவோ இருக்கு..
தூக்கம் வரலைய்ன்னா இப்படில்லாமா!!!

ஜெய்லானி said...

@@@நானும் என்னவோ ஏதோ என்று படத்தை பார்த்து
அவிச்ச முட்டை எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுக்க போகிறீர்கள் என்று வந்தேன்...சுத்த கூமுட்டை தனமல்லவோ இருக்கு..
தூக்கம் வரலைய்ன்னா இப்படில்லாமா!!!//

அதுக்குதாங்க சந்தேகம்ன்னு பேர் போட்டது ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anisha Yunus said...

தல...இதுக்கு நீங்க ஒரே வார்த்தைல எங்களையெல்லாம் பதிவுலகத்தை விட்டு போகச் சொல்லியிருக்கலாம். ஏன் தல‌? ஏன் இந்த கொல வெறி?? ஒரு மசால் வடைக்கு கிண்டல் அடிச்சத வச்சி இப்படியா கொலவெறியோட அலையணும்? ஒரு கோழித்தூக்கம் போட்டுட்டு மண்டைக்கு ஒரு முட்டைய வச்சி ...ஆஹா...மறுபடியும் ஆரம்பிச்சிடப் போறீங்...வேணாங்...

Anonymous said...

Grrrrrrrrrrrrrrr!!!

இமா க்றிஸ் said...

முட்டை ரெசிபியும் இல்லை. மோவா பற்றியும் இல்லை. கர்ர்ர்.
எனக்கும் சந்தேகம்.
1. ஜெய்லானி கதாசிரியரா, பாட்டு எழுதுறவரா?
2. இந்தப் பாட்டு என்ன ட்யூன்ல பாடுறது?

நசரேயன் said...

// பேசாம மொக்கை பாடலாசிரியர்//

சினிமா பாடல் ஆசிரியர்

- இரவீ - said...

என் இனமடா நீ... (அப்டீனு கோழி கூவுது பாருங்க பாச்..)

ஹேமா said...

ஜெய்...வெள்ளிக்கிழமையும் அதுவுமா இத்தனை சந்தேகம்.இனி ரெண்டு நாளைக்கு லீவு.
தலையைப் பிச்சிக்கிட்டு இருகபோறீங்க.
யாராச்சும் பாவப்பட்டு திங்கக்கிழமை வந்து
பதில் சொன்னாத்தான் !

ஆனா கோழி பாவம்.கோவிக்கப்போகுது உங்களோட !
இதுக்கு...ஒரு கவிதையும் கூட.

ஜெய்...ஹோ !

athira said...

ஜெய்..லானீஈஈஈஈ ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இப்ப அ.கோ.மு இலும் கை வச்சிட்டீங்களே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தேவையில்லாததையெல்லாம் யோசித்து கிட்னியை நாசம் பண்ணக்கூடாது ஓக்கை.லீவை என்சோய் பண்ணுங்கோ.

இருப்பினும் உங்களுக்காக நீண்ட நேரம் யோசித்து ஒரு விருது....... “முட்டை விருது”........ பெற்றுக்கொள்ளுங்கோ ஜெய்..லானி.

பாடிய பாட்டு என் பாட்டாச்சே..... ஏற்கனவே நான் பாடிவிட்டேன் நட்பில் இருப்பினும் மீண்டும் ஒரு தடவை.....

”போகுதே போகுதே என் பைங்கிளி ரோட்டிலே....
நானும் சேர்ந்து போகவே சைக்கிள் இல்லையே..
அது முறையும் இல்லையே,......”

athira said...

வீட்டில ஒரு ஹேம் விளையாடினோம்.... what is your favourite..... something... இப்படி.
அப்போ ஒரு கேள்வி.. what is your favourite breakfast? நான் சொன்னேன் இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட் அதனோடு அவித்த கோழிமுட்டையும் என்று சொல்லிக்கொண்டே.. உங்கள் புளொக்குக்கு வந்தேன்.... அழகாக அடுக்கியபடி அ.கோ.மு...... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ..

ப.கந்தசாமி said...

தூங்காம நல்லா யோசிக்குறீங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல சந்தேகம்.. இப்படிதான் கேள்வி கேட்டுப்பழகனும் பாஸ்..

ஓ.கே.வா?. ..சரிங்க நாளைக்கு பார்ப்போம்..
.
.
என்னாது பதில் வேணுமா?
.
.
என்னை மாறி கூமுட்டகிட்ட பதில் எதிர்பார்க்ககூடாது..
கேள்வி கேட்டுக்கிட்டு போயிட்டேயிருக்கனும்..
( அங்க வெயில அதிகமா பாஸ்?..ஹி..ஹி)

எல் கே said...

@ஜெய்

முட்டை வீரர் ஜெய் ....

ILLUMINATI said...

முட்ட....கூமுட்ட...

ஆஹா...என்ன பொருத்தம்!! :)

goma said...

முட்டை கவிதை பாடிய ஜெய்லானிக்கு
100 முட்டை பரிசாகக் காத்திருக்கிறது .

vanathy said...

ஜெய், உங்களுக்கு என் பரிசாக 100 கூழ் முட்டைகள் அனுப்பி வைக்கிறேன். மேலே படத்தில் டைனசர் முட்டையோடு இருப்பது நீங்களா? என்ன ஒரு சாந்தம்/ அமைதி தவழும் முகம்.
ஆசியா அக்கா சிறந்த கதாசிரியர் விருது குடுத்தாலும் குடுத்தாங்க. இந்த ஜெய்லானி தொல்லை தாங்க முடியலை சாமி.

வேலன். said...

முட்டையை பற்றிதான் சமையல் குறிப்பு என நினைத்தேன். எல்லோருக்கும் முட்டை கொடுத்திட்டீங்க.்(ஏன் அலவாதான தரனுமா?மாறுதலுக்கு முட்டை தரகூடாதா?) ந்ல்ல பதிவு வாழ்க வளமுடன்.வேலன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு கூமுட்டை
முட்டையைப் பத்தி
பேசுகிறதே அடடே
ஆச்சரியக்குறி!!!!
கவிதை கவிதை!!!

Mahi said...

எப்பூடி..எப்பூடி உங்களுக்கு இப்பூடி எல்லாம் சந்தேகம் வருது? இந்த டவுட்டுக்கு பதில் சொல்லற அளவுக்கு நாங்க புத்திசாலி இல்லைங்ணா!!

சௌந்தர் said...

தேர்வில் முட்டை வாங்கின இப்படி தான் யோசிக்க தோணும் பாஸ்...

ஜெயந்தி said...

சரி விடுங்க முட்டைக்கு பேர மாத்தச் சொல்லி போராட்டம் நடத்துவோம்.

Jaleela Kamal said...

ஆத்தாடி இது பெரிய சந்தேகமாவுள்ல இருக்கு., நானும் ஜெய்லானி டீவியில அடுத்த ரெசிபி போட்ட்டாச்சுன்னு ஓடோடி வந்தேன்.

எனக்கும் உங்கள் முட்டை சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியாது.

சசிகுமார் said...

யப்பா சாமி ஆழ உட்டுருப்பா, தெரியாம வந்துட்டோம் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்கள் ஆசிட் முட்டையாள அடிக்கனுன்னு பட்டா என்கிட்டே கேக்கறாரு, உங்க அட்ரெஸ் கொஞ்சம் தரமுடியுமா?

சுசி said...

இதுக்கே தாங்கலை.. இதில அடுத்தது சீரியஸ் பதிவாஆஆஆஆஆ..

ஆஆவ்வ்வ்வ்வ்வ்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்கள் ஆசிட் முட்டையாள அடிக்கனுன்னு பட்டா என்கிட்டே கேக்கறாரு, உங்க அட்ரெஸ் கொஞ்சம் தரமுடியுமா?
//

ஆடுகிட்ட அட்ரஸ் கேட்க்கூடாது செந்தில்..
நாமாளாத்தான் கண்டுபிடிக்கனும்..ஹி..ஹி

ஜெய்லானி said...

@@@அன்னு--//தல...இதுக்கு நீங்க ஒரே வார்த்தைல எங்களையெல்லாம் பதிவுலகத்தை விட்டு போகச் சொல்லியிருக்கலாம். ஏன் தல‌? ஏன் இந்த கொல வெறி?? ஒரு மசால் வடைக்கு கிண்டல் அடிச்சத வச்சி இப்படியா கொலவெறியோட அலையணும்?//

என்னங்க அனிஸ் இந்த ஒரு சந்தேகத்துக்கே இப்படியா ? அப்ப மீதிக்கு.........

//ஒரு கோழித்தூக்கம் போட்டுட்டு மண்டைக்கு ஒரு முட்டைய வச்சி ...ஆஹா...மறுபடியும் ஆரம்பிச்சிடப் போறீங்...வேணாங்...//

ஹா..ஹா..ஏன் இப்படி ஓடறீங்க ... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//Grrrrrrrrrrrrrrr!!!//

வாங்க ,அனாமி !! மொத்தமா பதினஞ்சி ’ r ’போட்டு ’அவ் ’ வுக்கு பழி வாங்கிட்டீங்க .க்கி..க்கி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//முட்டை ரெசிபியும் இல்லை. மோவா பற்றியும் இல்லை. கர்ர்ர்.//

கடைசியில போடலாமுன்னு இருந்தேன் . அச்சொ..அதுக்கென்ன இன்னொரு பதிவா போட்டுட்டா போச்சி
//எனக்கும் சந்தேகம்.
1. ஜெய்லானி கதாசிரியரா, பாட்டு எழுதுறவரா?
2. இந்தப் பாட்டு என்ன ட்யூன்ல பாடுறது? //

அதாங்க எனக்கும் புரியல..விருதுல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எதுவும் இருக்கான்னு பாக்கனும் . பாட்டு கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் அதே டியூன் தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய் said...

ஜெய்லானி.. அந்த கவிதையை சத்தமா படிச்சதுல, எங்க வீட்டு கோழி கூட அழுது..

ஜெய்லானி said...

@@@நசரேயன்--// பேசாம மொக்கை பாடலாசிரியர்//

சினிமா பாடல் ஆசிரியர் .

வாங்க நசரேயன் ..சினிமா பாடல் ஆசிரியரா ? அந்த அளவுக்கா இது இருக்கு. ஒரு வேளை பதிவை படிச்சி குழம்பிட்டீங்களா .அவ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இரவீ--//என் இனமடா நீ... (அப்டீனு கோழி கூவுது பாருங்க பாச்..) //

தல , சைடு கேப்பில என்னையும் கோழியாக்கிட்டீங்களே !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்...வெள்ளிக்கிழமையும் அதுவுமா இத்தனை சந்தேகம்.இனி ரெண்டு நாளைக்கு லீவு.தலையைப் பிச்சிக்கிட்டு இருகபோறீங்க.யாராச்சும் பாவப்பட்டு திங்கக்கிழமை வந்து பதில் சொன்னாத்தான் !//

வாங்க குழந்தை நிலா!! எங்களுக்கு வெள்ளி , சனி ரெண்டு நாள் லீவு வாரத்துல . அப்ப கஷ்டம்தான்னு சொல்றீங்க பாக்கலாம்

//ஆனா கோழி பாவம்.கோவிக்கப்போகுது உங்களோட ! இதுக்கு...ஒரு கவிதையும் கூட. ஜெய்... ஹோ !//

உண்மைதாங்க . இது கவிதை இலிங்க கடலோரக்கவிதை படத்தில வர்ர ஃபேமஸ் பாட்டு .கொஞ்சம் உல்டாவா மாத்தி யோசிச்சது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்..லானீஈஈஈஈ ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இப்ப அ.கோ.மு இலும் கை வச்சிட்டீங்களே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தேவையில்லாததையெல்லாம் யோசித்து கிட்னியை நாசம் பண்ணக்கூடாது ஓக்கை.லீவை என்சோய் பண்ணுங்கோ.//

இதாங்க அதிஸ் என்னோட என்ஜாய் , எப்பவும் யாரையாவது கொழப்பறது .ஹி..ஹி..

//இருப்பினும் உங்களுக்காக நீண்ட நேரம் யோசித்து ஒரு விருது....... “முட்டை விருது”........ பெற்றுக்கொள்ளுங்கோ ஜெய்..லானி.//

ஆ..முட்டை விருதாஆஆஆஆஆஅ

//பாடிய பாட்டு என் பாட்டாச்சே..... ஏற்கனவே நான் பாடிவிட்டேன் நட்பில் இருப்பினும் மீண்டும் ஒரு தடவை.....//

இந்த பாட்டு மட்டுமில்லை அந்த டயலாக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு காலத்தில இப்ப பாடினா வீட்டில அடி கிடைக்கும் பயந்தான் காரணம்

//”போகுதே போகுதே என் பைங்கிளி ரோட்டிலே ....
நானும் சேர்ந்து போகவே சைக்கிள் இல்லையே..
அது முறையும் இல்லையே,......”//

அதே பாட்டு...அதே குரல்...பாடு சாந்தா பாடு..உன் பாட்டை கேட்க ஆவலோட வந்தை என்னை கிணற்றில் பிடித்து தள்ளாதே!! கொஞ்ச நேரத்தில் நானே விழுந்து விடுவேன்.. பாடு....
ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@athira--//வீட்டில ஒரு ஹேம் விளையாடினோம். ... what is your favourite..... something... இப்படி.
அப்போ ஒரு கேள்வி.. what is your favourite breakfast? நான் சொன்னேன் இங்கிலிஸ் பிரேக்பாஸ்ட் அதனோடு அவித்த கோழிமுட்டையும் என்று சொல்லிக்கொண்டே.. உங்கள் புளொக்குக்கு வந்தேன்.... அழகாக அடுக்கியபடி அ.கோ.மு...... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ..//

பாத்தீங்களா ? !! உங்க ஆசையை நிறைவேத்தியாச்சி படத்தைப் போட்டு . அதில் கொஞ்சம் பெப்பர் போட்டு சாப்பிடுங்கோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Dr.P.Kandaswamy--//தூங்காம நல்லா யோசிக்குறீங்க. //
டாக்டரய்யா நீங்களாவது என் சந்தேகத்தை தீருங்களேன்.. பிளீஸ்...பிளீஸ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//நல்ல சந்தேகம்.. இப்படிதான் கேள்வி கேட்டுப்பழகனும் பாஸ்.. ஓ.கே.வா?. ..சரிங்க நாளைக்கு பார்ப்போம்....என்னாது பதில் வேணுமா?..என்னை மாறி கூமுட்டகிட்ட பதில் எதிர்பார்க்ககூடாது..//

பட்டா ,இதெல்லாம் அநியாயம் பதில் சொல்லாம எஸ் ஆகிறது. பதில் சொல்லாட்டி இன்னொரு பாட்டு வரும்
// கேள்வி கேட்டுக்கிட்டு போயிட்டேயிருக்கனும்..
( அங்க வெயில அதிகமா பாஸ்?..ஹி..ஹி)//

வெயில் அதிகம்தான் பலைவணமில்லையா !! நாங்களும் அப்படித்தான் ஒட்டகம் மாதிரி ஹி..ஹி. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

உங்களுக்காவது ஒரு சந்தேகம் எனக்கு நிறைய,எதுவும் சரியாக புரிவதில்லை.முட்டை பாடல் o.k.

athira said...

///அதே பாட்டு...அதே குரல்...பாடு சாந்தா பாடு..உன் பாட்டை கேட்க ஆவலோட வந்தை என்னை கிணற்றில் பிடித்து தள்ளாதே!! கொஞ்ச நேரத்தில் நானே விழுந்து விடுவேன்.. பாடு....
ஹி..ஹி../// ஹா...ஹா..ஹா.... ஜெய்..லானி, கொஞ்சம் பின்னாடி திரும்பிப்பாருங்கோ.. யாரோ பிரம்போட நிற்கினம்.. ஓஒடுங்கோ ஓடுங்கோ.... அதே கிணற்றுக்கு.....:) பின்ன என்ன சாந்தாவைக் கூப்பிட்டால்..... வீட்டம்மா சும்மா இருப்பாவோ....:):).

ஜெய்லானி said...

@@@LK--//முட்டை வீரர் ஜெய் ....//

இருங்க அவசரப்படவேனாம். இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் மொத்தமா தரலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--//முட்ட....கூமுட்ட...ஆஹா...என்ன பொருத்தம்!! :) //

தலைவா !!!காமிக்ஸ விட்டுட்டு எப்பயா ஹைக்கூ எழுத ஆரம்பிச்ச.. சொல்லவே இல்லயே!!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Priya said...

//ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிலே எதுவுமே இல்லாம அதை கரு முட்டைன்னு ஏன் சொல்லனும் .//.....எப்ப‌டி இப்படியெல்லாம் சந்தேகம் வருது!!!ம்ம்ம்... யோசிப்போம்... யோசித்துக்கொண்டே இருப்போம்:)

ஜெய்லானி said...

@@@goma--//முட்டை கவிதை பாடிய ஜெய்லானிக்கு
100 முட்டை பரிசாகக் காத்திருக்கிறது .//

கோமாக்கா வாழ்க!! வாழ்க!!. அப்ப சீக்கிரம் ஒரு இன்குபேட்டர் வாங்கி அதை குஞ்சி பொறிக்க வச்சி கோழி பிசினஸ் ஆரம்பிச்சிட வேண்டியதுதான். எப்படி பாத்தாலும் லாபம்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

(*குஷ்பு பேசிய கன்னி பேச்சு மாதிரி*)பதிவுலகத்தில் நாமும் முதல் காலடி எடுத்து வைத்து விடுவோம்னு முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், இப்படி ஒரு சந்தேகமா உங்களுக்கு? வேணாம் சார் வேணாம். நான் இப்படியே ஏர்வாடி, பாப்பாவூர், நாகூர் என்று ஒரு ரவுண்டு அடிச்சிட்டு கடைசியா மிச்சம் மீதி (தலையில் முடி சார்) இருந்தா - வெயில் வேறயா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா வந்து மொட்டை அடிச்சிக்கிறேன் சார், ஆனா மறந்தும் கூட பதிவுலகம் பக்கமே தலை இருந்தாதானே) வச்சு படுக்க மாட்டேன் சார். அம்மாடி ஆத்தாடி ஆள விடுங்க. வர்றேன் சார்... அஸ்ஸலாமு அலைக்கும்.

ஸாதிகா said...

இப்படி மொக்கை சந்தேகம்வருவது,மொக்கையா பாடல் எழுதுவதற்கு ஜெய்லானிக்கு நிகர் இல்லை.வாழ்க மொக்கை மன்னர்.உங்கள் வினாக்களுக்கு பதில் அளிக்கக்கூடிய தெம்பு என் கிட்னி...த்ஸ்...மூளைக்கு இல்லேங்க!

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், உங்களுக்கு என் பரிசாக 100 கூழ் முட்டைகள் அனுப்பி வைக்கிறேன். மேலே படத்தில் டைனசர் முட்டையோடு இருப்பது நீங்களா? என்ன ஒரு சாந்தம்/ அமைதி தவழும் முகம்.//

இல்லைங்க இது ...வேண்டாம்... நா போட்டதும்தான் அவங்க போட்டாங்க...பட்டாம்பூச்சி...எதுக்கு வம்பு...மீ எஸ்ஸ்ஸ்ஸ்
//ஆசியா அக்கா சிறந்த கதாசிரியர் விருது குடுத்தாலும் குடுத்தாங்க. இந்த ஜெய்லானி தொல்லை தாங்க முடியலை சாமி.//

இது நம்ம பூஸார் , அஹ்மத் இர்ஷாத் இரண்டு பேரும் குடுத்தது . ஏன் குடுத்தோமுன்னு தலைய பிச்சிக்க போறாங்க பாருங்க!!!ஏதோ என்னால முடிஞ்சது இம்புட்டுதேங்!!ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--//முட்டையை பற்றிதான் சமையல் குறிப்பு என நினைத்தேன். எல்லோருக்கும் முட்டை கொடுத்திட்டீங்க.்(ஏன் அலவாதான தரனுமா?மாறுதலுக்கு முட்டை தரகூடாதா?) ந்ல்ல பதிவு வாழ்க வளமுடன்.வேலன்.//

அண்ணாத்தே!!நீங்களாவது பதில் சொல்லிட்டு போங்களேன். ஹா..ஹ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

ஒரு கூமுட்டை
முட்டையைப் பத்தி
பேசுகிறதே அடடே
ஆச்சரியக்குறி!!!!
கவிதை கவிதை!!! //

சத்தியமா நம்பிட்டேன்!! ஆனா பதில சொல்லாம எங்க ஓடுறீங்க பாஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி--/எப்பூடி..எப்பூடி உங்களுக்கு இப்பூடி எல்லாம் சந்தேகம் வருது? இந்த டவுட்டுக்கு பதில் சொல்லற அளவுக்கு நாங்க புத்திசாலி இல்லைங்ணா!!//

வாங்க!!நீங்க நம்ம லிஸ்டில சேர்ந்திட்டீங்கதானே ஆட்டோமேடிக்கா புத்திசாலியா ஆயிடுவீங்க கொஞ்சநாளல ஏன் தயக்கம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SUFFIX said...

படிச்சாச்சு, ஒரு ஆம்ளேட் ப்ளீஸ்...:)

ஜெய்லானி said...

@@@soundar--//தேர்வில் முட்டை வாங்கின இப்படி தான் யோசிக்க தோணும் பாஸ்...//

வாத்யாரே!! எப்பவும் என்பத்தி ஐந்து பிரசண்டேஜ் வாங்கிற ஆள் நா. ஒரு வேளை இந்த யோசனை கம்மியோ ? இன்னும் படிக்கவேண்டியது நிறைய இருக்கோ ?ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//சரி விடுங்க முட்டைக்கு பேர மாத்தச் சொல்லி போராட்டம் நடத்துவோம்.//

அப்ப செம்மொலி மாநாட்ல டமில்ல நியூ பேர் வக்க மிஸ்டர் கலைனர் கிட்ட லட்டர் குடுத்துர்வோமா ? !! .
:-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஆத்தாடி இது பெரிய சந்தேகமாவுள்ல இருக்கு., நானும் ஜெய்லானி டீவியில அடுத்த ரெசிபி போட்ட்டாச்சுன்னு ஓடோடி வந்தேன்.//

ஏமாந்துட்டீங்களா ?!!. சீக்கிரமா புது ரெஸிபி போட்டுடலாம் .

//எனக்கும் உங்கள் முட்டை சந்தேகத்தை தீர்த்து வைக்க முடியாது.//
எல்லாரும் எஸ்கேப் ஆனா யாருதாங்க சரியா பதில் சொல்றது ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சௌந்தர் said...

@@@soundar--//தேர்வில் முட்டை வாங்கின இப்படி தான் யோசிக்க தோணும் பாஸ்...//

வாத்யாரே!! எப்பவும் என்பத்தி ஐந்து பிரசண்டேஜ் வாங்கிற ஆள் நா. ஒரு வேளை இந்த யோசனை கம்மியோ ? இன்னும் படிக்கவேண்டியது நிறைய இருக்கோ ?ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி



விடுங்க அண்ணா இதுக்கு போய்.....

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//யப்பா சாமி ஆழ உட்டுருப்பா, தெரியாம வந்துட்டோம் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க சசி !!நீங்களுமா ? புத்திசாலின்னு நெனச்சேன். பதில் சொல்லாம நழுவுறீங்களே !!ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//உங்கள் ஆசிட் முட்டையாள அடிக்கனுன்னு பட்டா என்கிட்டே கேக்கறாரு, உங்க அட்ரெஸ் கொஞ்சம் தரமுடியுமா?//

ஏங்க அடிக்கனும் , அந்த ஆசிட்ட அப்படியே தந்தா என்னோட ரிசர்ச்சிக்கு உதவுமே..அடுத்ததா ஒரு மொக்கை பதிவை சூப்பரா போட்டுடலாம்.
அட்ரஸ்: மாண்பு மிகு ஜெய்லானி,
புதிய நெ 98/ப 54
பட்டினதார் ரோடு ,
துபாய் நெடுக்கு சந்து ,
ஜார்ஜா பாலம் வளைவு அருகில்,
ஜார்ஜா..78
வாசலில் நரிக்குட்டி கட்டி இருக்கும் பார்த்து வரவும்.

போதுமா ? மறக்காமல் வரும்போது ஒரு பார்ஸல் பிரியாணி வாங்கி வரவும். ஹய்யோ..ஹய்யோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுசி--//இதுக்கே தாங்கலை.. இதில அடுத்தது சீரியஸ் பதிவாஆஆஆஆஆ..
ஆஆவ்வ்வ்வ்வ்வ்..//

வாங்க !!!தொடர்ந்து மொக்கை போட மாட்டேன் பயப்படதீங்க .ஒன்னு விட்டு ஒன்னுதான், ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஆடுகிட்ட அட்ரஸ் கேட்க்கூடாது செந்தில்.நாமாளாத்தான் கண்டுபிடிக்கனும்..ஹி..ஹி//

அட்ரஸ் மேலே இருக்கு பாத்து பத்திரமா வந்து சேருங்க!! என்னாஆஆஆ பாசம் . அப்படியே கெண்டாக்கி சிக்கன் ஒன்னும் பார்ஸல் பிடிங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெய்--//ஜெய்லானி.. அந்த கவிதையை சத்தமா படிச்சதுல, எங்க வீட்டு கோழி கூட அழுது..//

பாஸ் அது பேசியது உங்களுக்கு புரிஞ்சிதா ?!!அது ஆனந்த கண்ணீரா இருந்திருக்கும் .அது கவிதையில்ல ராஸா கடலோர கவிதைகள் படப்பாட்டு..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//உங்களுக்காவது ஒரு சந்தேகம் எனக்கு நிறைய,எதுவும் சரியாக புரிவதில்லை. முட்டை பாடல் o.k.//

வாங்க ஆஸியாக்கா!!சந்தேகக் கோடு அது சந்தோஷ கேடு தெரியாதா ?!! எதுவா இருந்தாலும் கேளுங்க..!!ஒரு வேளை நா எழுதுனது புரியலையா ?. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira // ஹா...ஹா..ஹா.... ஜெய்..லானி, கொஞ்சம் பின்னாடி திரும்பிப்பாருங்கோ.. யாரோ பிரம்போட நிற்கினம்.. ஓஒடுங்கோ ஓடுங்கோ.... அதே கிணற்றுக்கு.....:) பின்ன என்ன சாந்தாவைக் கூப்பிட்டால்..... வீட்டம்மா சும்மா இருப்பாவோ....:):).//

நீங்க பாடின பாட்டை கேட்டதும் பழைய நினைவு..ஹி..ஹி.. நமக்கு எங்கே போனாலும் அடிதான் என்ன செய்யிறது..
‘’ஆத்தா ஆடு வளத்தா
மாடு வளத்தா , கோளி கிடைக்கல பூஸ் குட்டி என்னை வளத்தா........உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya--//ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிலே எதுவுமே இல்லாம அதை கரு முட்டைன்னு ஏன் சொல்லனும் .//.....எப்ப‌டி இப்படியெல்லாம் சந்தேகம் வருது!!!ம்ம்ம்... யோசிப்போம்... யோசித்துக்கொண்டே இருப்போம்:)//

வாங்க பிரி!!!சபாஷ்..நீங்க ஒரு ஆள்தான் கொஞ்சம் பக்கம் வந்திருக்கீங்க யோசிச்சி. இன்னும் டிரை பண்ணுங்க...பதில் கிடைக்கும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//இப்படி மொக்கை சந்தேகம் வருவது, மொக்கையா பாடல் எழுதுவதற்கு ஜெய்லானிக்கு நிகர் இல்லை.வாழ்க மொக்கை மன்னர்.உங்கள் வினாக்களுக்கு பதில் அளிக்கக்கூடிய தெம்பு என் கிட்னி...த்ஸ்...மூளைக்கு இல்லேங்க!//

வாங்க !!ஸாதிகக்கா !! உங்க வாயால இப்படி கேட்பது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய மாதிரி இருக்கு . ஓக்கே..அப்படியே கொஞ்சம் பதிலையும் சொன்னா தேவலாம் பிளிஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@SUFFIX--//படிச்சாச்சு, ஒரு ஆம்ளேட் ப்ளீஸ்...:)//

அவிச்ச முட்டை பிடிக்காதா பாஸ் , ஓக்கே ஆம்லட் போடுடலாம் வெங்காயம் அதிகமா , இல்ல கம்மியா ?. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@soundar --//.விடுங்க அண்ணா இதுக்குபோய்....//

ஸீரியஸா நினைக்க வேண்டாம் :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

முட்டை முட்டை முட்டை அவிச்சமுட்டை அவிக்காதமுட்டை அரைவேக்காட்டு முட்டையின்னு.
என்னா போடு போடுறீங்க. அண்ணாத்தே.
அசத்தோ அசத்தல்.

அந்த விருத நான் கொடுக்க
ஐசிஐயில் சொல்லியிருக்கேன். வந்துடூஊஊஊஊஊம்

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//(*குஷ்பு பேசிய கன்னி பேச்சு மாதிரி*)பதிவுலகத்தில் நாமும் முதல் காலடி எடுத்து வைத்து விடுவோம்னு முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், இப்படி ஒரு சந்தேகமா உங்களுக்கு? //

வாங்கய்யா வாங்க!!இந்த சின்ன சந்தேகத்துக்கே இப்படி பயந்தா எப்படி ? இது மாதிரி ஏஏஏஏஏஏகப்பட்ட சந்தேகம் இருக்கே என்கிட்ட. அதுக்கு என்ன பண்ணுவிங்க.

//வேணாம் சார் வேணாம். நான் இப்படியே ஏர்வாடி, பாப்பாவூர், நாகூர் என்று ஒரு ரவுண்டு அடிச்சிட்டு கடைசியா மிச்சம் மீதி (தலையில் முடி சார்) இருந்தா - வெயில் வேறயா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா வந்து மொட்டை அடிச்சிக்கிறேன் சார், //

அந்த கவலை உங்களுக்கு எதுக்கு தொடர்ந்து ஜெய்லானி டீவி பாருங்க எல்லாம் சரியாயிடும்

//ஆனா மறந்தும் கூட பதிவுலகம் பக்கமே தலை இருந்தாதானே) வச்சு படுக்க மாட்டேன் சார். அம்மாடி ஆத்தாடி ஆள விடுங்க. வர்றேன் சார்... அஸ்ஸலாமு அலைக்கும்.//

அட வாங்க சார் ஹி..ஹி..என்னா ஓட்டம் பின்னங்கால் தலையில் அடிக்கிற மாதிரி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//முட்டை முட்டை முட்டை அவிச்சமுட்டை அவிக்காதமுட்டை அரைவேக்காட்டு முட்டையின்னு. என்னா போடு போடுறீங்க. அண்ணாத்தே. அசத்தோ அசத்தல்.//

வாங்க மலீகாக்கா !!இந்த மொக்கைக்கு காரணமே நீங்கதான் .சும்மா இருந்த என்னை பதிவெழுத ஊக்கப்படுத்தி போட்ட முதல் க்மெண்ட் குருவே !! நீவீர் வாழ்க , உம் குலம் வாழ்க ..

//அந்த விருத நான் கொடுக்க ஐசிஐயில் சொல்லியிருக்கேன். வந்துடூஊஊஊஊஊம் //

ஆஹா...கவியரசி கையால் பட்டமாஆஆஆஆஆ!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

இந்த முட்ட, முட்ட அப்படின்னு சொல்லுறியே அப்படின்னா என்னா நண்பா ?

மங்குனி அமைச்சர் said...

சாரி முட்டை , முட்டை

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//இந்த முட்ட, முட்ட அப்படின்னு சொல்லுறியே அப்படின்னா என்னா நண்பா ?சாரி முட்டை , முட்டை //

வாய்யா வா!!! நானும் அதைதான் கேக்குரேன் இதுவரை யாருமே சொல்ற மாதிரி தெரியல . ஐய நீயாவது கொஞ்சம் சொல்லேன்.

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//இந்த முட்ட, முட்ட அப்படின்னு சொல்லுறியே அப்படின்னா என்னா நண்பா ?சாரி முட்டை , முட்டை //

வாய்யா வா!!! நானும் அதைதான் கேக்குரேன் இதுவரை யாருமே சொல்ற மாதிரி தெரியல . ஐய நீயாவது கொஞ்சம் சொல்லேன்.///


பஸ்ட்டு நீ முட்டை அப்படின்னா என்னான்னு சொல்லு , அதுக்கு நான் கரக்ட்டா விளக்கம் தரேன்

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//பஸ்ட்டு நீ முட்டை அப்படின்னா என்னான்னு சொல்லு , அதுக்கு நான் கரக்ட்டா விளக்கம் தரேன்//

படத்தை பாத்தும் இந்த கேள்வியா ? இந்த நொன்ன கேள்வியாரும் கேக்காம இருக்கதான் படம் போட்டது..

Menaga Sathia said...

அய்யோ முடியல் லெய்லானி...எப்ப்டி இப்படிலாம்???? ஹி...ஹி...

சிநேகிதன் அக்பர் said...

என்ன பாஸ் இன்னிக்கு லீவா?

காஞ்சி முரளி said...

ஏன்..! இந்த கொலைவெறி...
நல்லாத்தான போயிட்டிருந்துது ...!

ஆஹா....!
ஆரம்பிச்சுட்டாங்கப்பா...!

ஆணியே புடுங்க வேணா...!
என்ன சாவடிகிராங்கப்பா...!

செந்தமிழ் செல்வி said...

நீங்க என்ன கேள்வி கேட்கறீங்கன்னே எனக்கு புரியலை சகோதரரே:-(
வேணும்னா, உங்க பதிவில் எத்தனை முறை முட்டைன்னு வருதுன்னு வேணா ஒரு போட்டட வைக்கலாம் ;-)

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//.அய்யோ முடியல் லெய்லானி...எப்ப்டி இப்படிலாம்???? ஹி...ஹி...//

பாத்தீங்களா !! கடிதாங்காம என் பேரைக்கூட கடிச்சி வச்சிடீங்களே!! உங்க கோவம் புரியுது...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--//என்ன பாஸ் இன்னிக்கு லீவா? //

ஆமா,பாஸ்!! வெள்ளி ,சனி எப்பவும் லீவு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//ஏன்..! இந்த கொலைவெறி...
நல்லாத்தான போயிட்டிருந்துது ...!

ஆஹா....!
ஆரம்பிச்சுட்டாங்கப்பா...!

ஆணியே புடுங்க வேணா...!
என்ன சாவடிகிராங்கப்பா...!//

தலைவா!!எப்படியும் இரெண்டு பதிவுக்கு ஒண்னாவது கடிக்காட்டி எப்படி ? அதான் நாங்களும் பாட்டு எழுதுவோமுல்ல !!!மொக்கைக்கு அர்த்தம் இப்ப புரியுதா பாஸ்!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@செந்தமிழ் செல்வி--//நீங்க என்ன கேள்வி கேட்கறீங்கன்னே எனக்கு புரியலை சகோதரரே:-( //

வாங்க!!இங்கு வந்த ஆட்களில் நீங்க ஒரு ஆள் மட்டும் தப்பிச்சீங்க .கேள்வி புரியாத்தால . அது உங்க அதிஷ்டம். வேற நா என்ன சொல்ல. ஹி..ஹி..
வேணும்னா, உங்க பதிவில் எத்தனை முறை முட்டைன்னு வருதுன்னு வேணா ஒரு போட்டட வைக்கலாம் ;-)

இதுவும் நல்ல ஐடியாதான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Riyas said...

அது எல்லாம் சரி,,, இந்த முட்டை முட்டை ன்னு சொல்றிங்களே.. அப்பிடின்னா என்ன...

Unknown said...

"ஆ ஹா ஆ ஹா" மேட்டர் இவ்வளவுதானா ! இந்த மாதிரியெல்லாம் கேட்பிங்க என்று தான் ,அண்ணாமலை பல்கலைகழகம் பரங்கிபேட்டை 25 வருடத்திற்கு முன்பே ,ஒரு ஆராய்ச்சி கல்லூரியை தொடங்கி உள்ளார்கள். சார் பழைய மாணவரோ? எப்படி...

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

Unknown said...

அண்ணனுக்கு ரெண்டு ஆப் பாயில் பார்சல்...........

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முடீயல.. முடீயல..

//அதுக்காக கட்டை , வேல்கம்பு , இப்படி ஆயுத்தோட சண்டைக்கு வரக்கூடாது .//

உங்களுக்கெல்லாம் துப்பாக்கி தான் சரி வரும்.. தோ.. வர்றோம்.. :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//

எங்களுக்கு உங்கள மாதிரி தூக்கத்துல நடக்கற வியாதியெல்லாம் ஏதுமில்ல அண்ணாத்த..

Geetha6 said...

முட்டையில் இத்தனை சந்தேகமா?
எப்படி இப்புடி?
ஓகே ரைட் .

அன்புடன் மலிக்கா said...

//வாங்க மலீகாக்கா !!இந்த மொக்கைக்கு காரணமே நீங்கதான் .சும்மா இருந்த என்னை பதிவெழுத ஊக்கப்படுத்தி போட்ட முதல் க்மெண்ட் குருவே !! நீவீர் வாழ்க , உம் குலம் வாழ்க //

அட அப்புடியா எங்கிட்டும் நல்லாயிருந்தா கண்ணுக்கழகு.. குருவா! என்ன கொடுமைங்க அண்ணாத்தே. நான் சிஷ்யைக்கெல்லாம் சிஷ்யை சின்னவாள் அதாவது சின்னவள் என சொல்லவந்தேன். என்ன்போய் குருன்னு சொன்னா குருவாயிருக்குறவங்க அடிக்கவந்துடபோறாங்கப்பு. பாத்து. காணாம போன ஆடுவொன்னு தேடிகிட்டு வேற இருக்காங்களாம். அமைச்சர் வீட்டாண்ட..

MUTHU said...

எனக்கு பதில் தெரியும்,சொல்ல வேண்டும் என்றால் சிக்கன் பிரியாணி வித் லெக் பீசுடன் உடனே அனுப்பவும்

MUTHU said...

உன் சந்தேகத்திற்கு விளக்கம் நான் சொல்கிறேன்.

ஆனால்,சந்தேகம் அப்படி என்றால் என்ன?
அதற்கு ஏன் அப்படி பெயர் வந்தது?
அதற்கு சந்தேகம் என்று பெயர் வாய்த்த புண்ணியவான் பெயர் என்ன?

இதை சொன்னால் உன் கேள்விக்கு விடை சொல்லப்படும்

பி.கு. தவறாக பதில் சொல்பவர்கள் தலை வெடித்து விடும் என்று காரமடை சாமியாரின் சாபம்!

ஜெய்லானி said...

@@@Riyas--//அது எல்லாம் சரி,,, இந்த முட்டை முட்டை ன்னு சொல்றிங்களே.. அப்பிடின்னா என்ன..//

இதுக்குதான் மேல படம் போட்டது ரியாஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//"ஆ ஹா ஆ ஹா" மேட்டர் இவ்வளவுதானா ! இந்த மாதிரியெல்லாம் கேட்பிங்க என்று தான் ,அண்ணாமலை பல்கலைகழகம் பரங்கிபேட்டை 25 வருடத்திற்கு முன்பே ,ஒரு ஆராய்ச்சி கல்லூரியை தொடங்கி உள்ளார்கள். சார் பழைய மாணவரோ? எப்படி...//

வாங்க பாஸ், உங்க சொந்த ஊர் எது ?...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன்...வசந்த்--// :))) //

வாங்க வசந்த் !! ஒன்னும் சொல்லாமல் மெதுவா சிரிச்சிட்டு போய்டீங்க .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

r.v.saravanan said...

ஜெய்லானி நான் சைவம்

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//அண்ணனுக்கு ரெண்டு ஆப் பாயில் பார்சல்...........//

வாங்க !!அப்படியே பெப்பர் கொஞ்சம் தூக்கலா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.பீ சீரியஸ்.--//முடீயல..முடீயல..//

ஹி..ஹி..
//அதுக்காக கட்டை , வேல்கம்பு , இப்படி ஆயுத்தோட சண்டைக்கு வரக்கூடாது .//

உங்களுக்கெல்லாம் துப்பாக்கி தான் சரி வரும்.. தோ.. வர்றோம்.. :))) //

ஹா..ஹா.. இத பாருங்க நா ஆரம்பத்தில சொன்ன மாதிரி பேச்சு பேச்சோட மட்டுமே இருக்கனும் . வன்முறையில இறங்க்கூடாது ..அவ்வ்வ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//

எங்களுக்கு உங்கள மாதிரி தூக்கத்துல நடக்கற வியாதியெல்லாம் ஏதுமில்ல அண்ணாத்த..//

சபாஷ் !!! சரியான போட்டி இது வரை இங்கு வந்த யாரும் இந்த பதில சொல்லவே இல்லை வெரிகுட் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6--//முட்டையில் இத்தனை சந்தேகமா? எப்படி இப்புடி? ஓகே ரைட் .//

என்னங்க பண்றது பாழாப்போன லீவு வந்தாலே புத்தி இப்பிடிதான் போகுது ..நீங்களாவது பதில் சொல்லுங்களேன் பிளீஸ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அட அப்புடியா எங்கிட்டும் நல்லாயிருந்தா கண்ணுக்கழகு.. குருவா! என்ன கொடுமைங்க அண்ணாத்தே.

குருவ குருன்னு சொல்லம வேற எப்படி சொல்றதாம். ஓக்கே டீச்சர்...ஹை..இதும் நல்லாதானே இருக்கு...

//நான் சிஷ்யைக்கெல்லாம் சிஷ்யை சின்னவாள் அதாவது சின்னவள் என சொல்லவந்தேன். என்ன்போய் குருன்னு சொன்னா குருவாயிருக்குறவங்க அடிக்கவந்துடபோறாங்கப்பு. //

சரீங்க டீச்சர்.. ஆமாங்க டீச்சர்....உண்மையை ஒத்துக்கிறேன் டீச்சர்...

//பாத்து. காணாம போன ஆடுவொன்னு தேடிகிட்டு வேற இருக்காங்களாம். அமைச்சர் வீட்டாண்ட..//

அந்த ஆட்டுக்கு தலையில மஞ்சதண்ணிய எப்பவே தெளிச்சாச்சி டீச்சர் . கட்டிங் காக வைட்டிங் டீச்சர் . திரும்பவும் வந்ததுக்கு மிக்க நன்றி டீச்சர்..
:-))))

ஜெய்லானி said...

@@@MUTHU--//எனக்கு பதில் தெரியும்,சொல்ல வேண்டும் என்றால் சிக்கன் பிரியாணி வித் லெக் பீசுடன் உடனே அனுப்பவும் //

காலை தவிர வேற எதுவும் சாப்பிட மாட்டீங்கலோ !!.இருய்யா இரு . ஒரு நாளைக்கு காக்காய் லெக் பீஸ் பிரியாணி பண்ணி அனுப்புறேன் .

//உன் சந்தேகத்திற்கு விளக்கம் நான் சொல்கிறேன்.//

ஜொள்ளு..ஜொள்ளு....

//ஆனால்,சந்தேகம் அப்படி என்றால் என்ன?
அதற்கு ஏன் அப்படி பெயர் வந்தது?
அதற்கு சந்தேகம் என்று பெயர் வாய்த்த புண்ணியவான் பெயர் என்ன? //

இதுக்கு பேசாம என் தலையில கல்லை போட்டு நீ கொன்னுடலாம்

//இதை சொன்னால் உன் கேள்விக்கு விடை சொல்லப்படும் //

ஆங்.. காதில விழலே....

//பி.கு. தவறாக பதில் சொல்பவர்கள் தலை வெடித்து விடும் என்று காரமடை சாமியாரின் சாபம்!//

ஆத்தாடி.. இது வேறயா...மீ..எஸ்ஸ்ஸ்கேப்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//ஜெய்லானி நான் சைவம்//

தலைவா!! இது ரெஸிபி இல்ல... சந்தேகப்பதிவு .. தைரியமா படிச்சிட்டு கருத்துப்போடுங்க...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

MUTHU said...

ஜெய்லானி said...
ஆத்தாடி.. இது வேறயா...மீ..எஸ்ஸ்ஸ்கேப்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//////////




எங்க எஸ் ஆவ பார்குற பதில் சொல்லாமல் போனால் சுறா படத்தை நூறு முறை பார்க்கணும் எது வசதி

kavisiva said...

இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறதில்லேங்கர முடிவுக்கு வந்துட்டேன். இனிமே முட்டையை பார்க்கரப்பல்லாம் ஜெய்லானியோட இந்த பதிவு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குமே! அப்புறம் எப்படி நிம்மதியா சாப்பிட முடியும் :(((((

பொன் மாலை பொழுது said...

ஹையா ...நான்தான் லேட் !!
தப்பிச்சேன்.
இருந்தாலும் இந்த கொல வெறி வேணாம் ஜெய்லா.
தாங்க முடியல.
அது சரி நீங்க குடுத்த அவார்ட நான் ஏன் தளத்தில் எப்படி சேர்ப்பது?
சொல்லுங்க. காத்துகிட்டு இருக்கேன் "சேட்டா "

எம் அப்துல் காதர் said...

சார் உங்க அட்வைசை ஒன்னுக்கு பத்து தடவையா படிச்சு புத்தி தெளிஞ்சுட்டேன் பாஸு!!

http://mabdulkhader.blogspot.com/

இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல

ஜெய்லானி said...

@@@MUTHU--//எங்க எஸ் ஆவ பார்குற பதில் சொல்லாமல் போனால் சுறா படத்தை நூறு முறை பார்க்கணும் எது வசதி //
சுறா வாஆஆஆஆஆஆஆஆஆ, எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்

ஜெய்லானி said...

@@@kavisiva--//இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறதில்லேங்கர முடிவுக்கு வந்துட்டேன். இனிமே முட்டையை பார்க்கரப்பல்லாம் ஜெய்லானியோட இந்த பதிவு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குமே! அப்புறம் எப்படி நிம்மதியா சாப்பிட முடியும் //

இதுக்கே அசந்தா எப்படி .நல்ல வேளை ஊருக்கு போய்ட்டீங்க ...என்னோட நிறைய பதிவை பாக்கல..அதை நினைச்சு சந்தோஷப்படறேன் இப்ப ....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//ஹையா ...நான்தான் லேட் !!தப்பிச்சேன்.//

ஐயா பதில சொல்லுங்க சார்...
//இருந்தாலும் இந்த கொல வெறி வேணாம் ஜெய்லா. தாங்க முடியல.//

வாழ்க்கையே கொழப்பம்தான இதுக்கே பயந்தா எப்படி ? இது மாதிரி நிறைய சந்தேகம் இருக்கே எனக்கு ...
//அது சரி நீங்க குடுத்த அவார்ட நான் ஏன் தளத்தில் எப்படி சேர்ப்பது? சொல்லுங்க. காத்துகிட்டு இருக்கேன் "சேட்டா " //

விருது குடுத்த அப்பவே சொன்னேன் பாக்கலையா!!
விருது உள்ள படத்தை காப்பி பண்ணி உங்க டெஸ்க்டாப்பில வையுங்க, பிறகு உங்க பிளாக் டேஷ்போர்ட்-லேஅவுட்-ஆட் கெஜட்-பிச்சர் கெஜட் கிளிக் பண்ணுங்க .படம் கேட்கும் இடத்தில் படத்தை செலக்ட் செய்தால் படம் வரும் பின் சேவ் பண்ணவும் . ஓகே !!! இப்ப உங்க பிளாக் பார்த்தால் படம் தெரியும்......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//சார் உங்க அட்வைசை ஒன்னுக்கு பத்து தடவையா படிச்சு புத்தி தெளிஞ்சுட்டேன் பாஸு!!

http://mabdulkhader.blogspot.com/ //

பாத்தேன் !!புதியதாக பிளாக் திறந்ததுக்கு வாழ்த்துக்கள் !! என்ன ஸ்வீட் இல்லையா ?

//இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல //

அங்க வந்து வச்சிக்கிறேன் கும்மிய...நான் கூப்பிடாமலேயே வரக்கூடிய ஆள் , நீங்க வாலண்டியரா விருந்து வச்சி அழைச்சா வராமலா போயிடுவேன் . பெஸ்ட் ஆப் லக் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Harini Nagarajan said...

உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க ட்ரை பண்றேன். முதல்ல முட்டையும் உருண்டையும் ஒரே வடிவம் இல்ல. முட்டை (ஜீரோ)எப்படி இருக்கு-நு keyboard-a பாருங்க. வட்டம் o எப்படி இருக்குனு பாருங்க. ஆகவே உங்க முதல் பாயிண்ட்-எ தப்பு. ஜீரோ மாதிரியே கோழி போடற முட்டை வடிவும் இருக்கறதால நாம கோழி போடற கருவ முட்டை நு கூபடறோம். இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா சியான் விக்ரம் ஒ போட்டாரே அது தான் வட்டம். கணக்கு டீச்சர் ஒ போட்டா அது முட்டை. (யாரோட கணக்கு டீச்சர்-நு எல்லாம் கேக்க கூடாது :P )

ஹுஸைனம்மா said...

//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி//

இவ்ளோதானே? இதுக்கு ஏன் இப்படி ஊரைக்கூட்டி அலப்பரை?

முட்டைய, ‘முட்டை’ன்னு சொல்றதால, அதுக்கு ‘முட்டை’ ன்னு பேர் வந்துச்சு!!

போங்க, போய் சோலிகழுதயப் பாருங்க!!

ஜெய்லானி said...

@@@Harini Sree--//உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க ட்ரை பண்றேன். முதல்ல முட்டையும் உருண்டையும் ஒரே வடிவம் இல்ல. //

ஆஹா சூப்பர் இன்னும் மேலே சொல்லுங்க ம்..

//முட்டை (ஜீரோ)எப்படி இருக்கு-நு keyboard-a பாருங்க. வட்டம் o எப்படி இருக்குனு பாருங்க. ஆகவே உங்க முதல் பாயிண்ட்-எ தப்பு.//

ஏங்க இங்கிலிபிஸ்ல ஓ எழுத்து வேற அப்புறம் அதே இங்கிலிபிஸ்ல் ஜீரோ எழுத்து வேற ஆனா பேச்சு வழக்குல ரெண்டுமே ( ஓ , ஜீரோ ) வேற வேற...அப்ப சர்க்குலர் , ஓவல் ?????தமிழ்ல சொல்லுங்க ஹாரி..

//ஜீரோ மாதிரியே கோழி போடற முட்டை வடிவும் இருக்கறதால நாம கோழி போடற கருவ முட்டை நு கூபடறோம்.//

நன்றிங்க அப்புறம் பெண் வயித்து கரு முட்டைய விட்டுடீங்களே பெரியம்மா ???

//இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா சியான் விக்ரம் ஒ போட்டாரே அது தான் வட்டம். கணக்கு டீச்சர் ஒ போட்டா அது முட்டை. (யாரோட கணக்கு டீச்சர்-நு எல்லாம் கேக்க கூடாது :P ) //

அநியாயமா இருக்கே!! கணக்கு டீச்சடுக்கு மட்டும் முட்டைன்னா கோழி கோவிச்சுக்கும்.. பாத்துங்க ..மீதீ பாதி பதில் வெயிட்டிங்.....> உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி//

//இவ்ளோதானே? இதுக்கு ஏன் இப்படி ஊரைக்கூட்டி அலப்பரை?//

ஆமாங்க , ஆமாம்...

//முட்டைய, ‘முட்டை’ன்னு சொல்றதால, அதுக்கு ‘முட்டை’ ன்னு பேர் வந்துச்சு!! //

அப்ப கரு முட்டைக்கு பதில் ???

//போங்க, போய் சோலிகழுதயப் பாருங்க!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாமக்கோடங்கி said...

ஆனா, ஒரு முட்டைக்கே இத்தனை பேர் வந்து குமுறி இருக்காங்க... பாசு.. கலக்குறீங்க...

கவிதா said...

எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜெயில்ல ஆனி புடுங்கினார்-னு
அர்த்தமா???

goma said...

கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெளியே வருவதால் முட்டை ஆனது.

ஹி ஹி மனிதர்களும் முட்டைகள்தான்.[ .சிசேரியன் கேஸ் தவிர்த்து.]

goma said...

இனிமே சந்தேகம் வரக்கூடாது ஓகேவா

ஜெய்லானி said...

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//ஆனா, ஒரு முட்டைக்கே இத்தனை பேர் வந்து குமுறி இருக்காங்க... பாசு.. கலக்குறீங்க...//

வாங்க பிரகாஷ்..!! மேட்டர் அது மாதிரி ஹி..ஹி..இந்த கடி கடிச்சா விட்டுடுவங்களா என்ன ?..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கவிதா--//எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜெயில்ல ஆனி புடுங்கினார்-னு
அர்த்தமா??? //

வாங்க கவி..!! இது இராக்கில இருக்கிற ஊர் பேர் ஜீலான் . அங்க மிகப்பெரிய ( சூஃபி ) இஸ்லாமிய மகான் இருந்தான் . அதனால ஜீலானி .ஜெய்லானி எல்லாம் அவருக்கு அடையாள பெயரா இருந்துச்சி.


உதாரனத்துக்கு: மதுரை , திருப்பதி ,பழனி இப்படி பேர் இருக்குல்ல அதுப்போல இதுவும் ஒரு காரணப்பெயர். போதுமா ?..விளக்கம்..!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@goma--//கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெளியே வருவதால் முட்டை ஆனது. //

ஆஹா என்ன ஒரு விளக்கம் அப்ப வாத்தியார் போடுவது , வட்டம் போடுவது , இதுக்கு என்ன பேர்..

//ஹி ஹி மனிதர்களும் முட்டைகள்தான்.[ . சிசேரியன் கேஸ் தவிர்த்து.] //

அப்ப யாரையாவது போடா முட்டைன்னு திட்டலாம்னு சொல்றீங்க . மனுனையும் முட்டையாக்கிட்டீங்க .நல்ல வேளை கடைசி கமெண்டா போயிடிச்சு இல்லாட்டி ஒரு மெகா கும்மியாகி இருக்கும் இங்க..

//இனிமே சந்தேகம் வரக்கூடாது ஓகேவா //

ஹை..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))