Thursday, April 15, 2010

கதைகேளு கதகேளு![தொடரோ தொடர்]

இந்தபதிவ எழுத அழைத்த அக்பருக்கு மிக்க நன்றி

இப்ப நம்ம ராசி சரியில்லை. அதனால எங்காட்டி ஒரு பதிவை இல்லை எதாவது ஒரு படத்தையாவது சுட்டால் மட்டுமே ப்திவுலகத்தில் குப்பை கொட்டமுடியும் என்று பதிவுலக சோதிடர் சேட்டைக்காரன் சொன்னதால அதுவும் மங்குனி தலைமேல அடிச்சி சொன்னதால வேற வழியில்லை .பதிவை திருடினால் நம்மை கும்மி விடுவார்கள் . வேற என்னத்த செய்ய படம் ???

இப்ப கருப்பு காக்காவுக்கு பதில் வெள்ளை காக்காவுக்கு மவுசு அதிகமாச்சி . கவிஞர் மலிக்கா ஒரு வெள்ளை காக்காயை கஷ்டப்பட்டு பிடிச்சி வந்தாங்க , பிடிச்சி வந்தா மறுநாளே நம்ம பித்தன்வாக்கு சுதாகர் அண்ணாத்தே அதை லவட்டிகிட்டு போய்ட்டார்.. அப்ப நாமட்டும் என்ன ??? சரி அப்ப ஆட்டைய போட்டது

இந்த படத்தை காக்காவிடமே நீயே ஒரு கதை சொல்லுன்னு கதைய கேக்க போனபோது கொஞ்சம் வா என் கூடன்னு நீரோடை பக்கமே கூட்டிகிட்டு போச்சி . அங்க போனா கொழுக்கட்டையோட இன்னொரு காக்கா., அப்ப , அப்ப கொழுக்கட்டையை ஒரு கடிகடித்து பிறகு சொல்ல ஆரம்பிச்சது வ்வெ...வ்வெ....வ்வெ..

ஒரு ஊரில ஒரு பெரிய மனிதர் இருந்தார். வயசு , அனுபவம் இருந்தா அவர் பெரிய மனுசர் தானுங்களே .. ஆனால் ஒன்னு அவரோ ஏழை அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை எப்படியாவது இறைவனுக்காக ஒரு பள்ளியை கட்டனும்ங்கிறதுதான். ஆனால் அவரால முடியல இப்படியே காலம் போச்சி. வயசும் ஆச்சு. எண்ணமும் ஆசையும் மட்டும் மாறல. ஒரு நாள் மன்னாரில் முத்து வியாபாரம் நடப்பதை கேள்விப்பட்டு மனசு நொந்து போனார். என்ன செய்வது.
அங்கே போய் சிப்பி வாங்குவதுக்கு கையில பணமும் இல்லை. இருந்தாலும் மனைவியின் கழுத்தில இருந்த கரிய மனியை விற்று அந்த பணத்துடன் மன்னாருக்கு கிளம்பினார் . அங்க போய் முயற்ச்சி செஞ்சதுல எந்த சிப்பிலயும் முத்து கிடைக்கல .கையில இருந்த பணமும் தீர்ந்து போச்சி.
வேற வழி இல்லாத்ததால முத்து சிப்பி சந்தையை விட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சார் . உடல் அசதி ஒரு பக்கம் எதுவும் கிடைக்கலயேன்ற ஏக்கம் மறுப்பக்கம் . அருகில் இருந்த மரத்தின் கீழ் தங்கி அப்படியே தூங்கி போய் விட்டார். அப்போது ஒரு காக்கா ( இது உண்மையான காக்கா ) அவர் தூங்கும் இடத்துக்கு போல் உள்ள மரக்கிளையில் வந்து உட்கார்ந்து தான் ஆட்டைய போட்டு வந்த சிப்பியை கொத்தி துண்ண ஆரம்பிச்சது.


முழு சிப்பி கொழுக்கட்டை மாதிரி இருந்ததால அதனால துண்ண முடியல வழுக்கி கீழே தூங்குகிற நம்ம பெரியவரின் மேலே விழுந்தது. மனசு நொந்து நூடுல்ஸான பெரியவர் கண்ணையே திறந்து பாக்கல. என்ன குலோப்ஜாமூனோ நம்ம சொட்ட மண்டையில விழுதேன்னு நெனச்சிட்டாரு. நம்ம விடாப்பிடி காக்கா திரும்பவும் அதை கொத்தி அலகால எடுத்து வந்து பழைய இடத்திலேயே ஒக்காந்து திரும்பவும் ஒரு கடி. ஊசிப்போன கொழுக்கட்டையை கடிச்ச நம்ம பூஸார் மாதிரி முகம் மாற வழுக்கி திரும்பவும் பெரியவர் மேலே சிப்பி விழுந்தது.

இப்பவும் நம்ம பெரிசு கண்ணை தொறந்து பாக்கல என்ன கஸ்மாலமோ லெக் பீஸ துன்னுட்டு எலும்பை தூக்கி போடறானுங்க மடப்பசங்கன்னுட்டு திரும்ப தூங்கிட்டார் . சற்றும் மனம் தளராத விக்கிர மாதித்தன் போல திரும்பவும் நம்ம காக்கா பழையபடி சிப்பியை தூக்கி வந்து விட்டதை தொடர்ந்தது. மூன்றாவது முறையும் பல் இல்லாத காக்கையால முடியல. இப்ப சரியா நம்ம பெரியவரின் மூக்கில விழுந்துச்சி..

இப்பதான் அவருக்கு சரியா முழிப்பு வந்துச்சி . கொக்காமக்கா யார்ல அது என் சப்ப மூக்குல என்னத்தயோ தூக்கி போட்டதுன்னு பார்த்தாரு. பாத்தா யாருமே அங்க இல்ல ஒரு சிப்பிதான் இருந்துச்சி மேலே பாத்தா காக்கா. அது ஒரு முழுச்சிப்பியா இருந்ததால உடச்சி பாத்தாரு. உள்ளே ரெண்டு முத்து பெரிய ஸைசில என்னை எடுத்துக்கோன்னு சொல்ற மாதிரி இருந்துச்சி. அதை எடுத்துக்கொண்டு சந்தோஷமா வீடு வந்தார்.

அப்ப இருந்த மதுரை மன்னரிடம் அந்த இரண்டு முத்தையும் குடுத்து விட்டு தனது ஊரில் ஒரு பள்ளி வாசலை கட்டிதருமாறு கேட்டார். மன்னரும் முத்தின் தரத்தை பார்த்து வியந்து விட்டு தன் அமைச்சரிடம் உடனே அவரின் ஆசையை நிறைவேற்ற ஆனையிட்டார். நெடுநாளான தன் ஆசையான தொண்டி யில் அந்த பள்ளிவாசல் உருவானது கண்டு ஊரே மகிழ்ச்சியானது, அவரின் எண்ணமும் நடந்துடுச்சி அது இப்போதும் உள்ளதாக தெரிகிறது.

இதனால் வரும் நீதி:: நல்லெண்னமும் விடாமுயற்ச்சியும் இருந்தால் ஏழை என்ன ? பணக்காரன் என்ன ? . இறைவன் அருள் எப்போதும் உண்டு.
டிஸ்கி: இது சிறு வயதில் கேட்ட கதை. உண்மையான வரலாறும் கூட . படங்கள் உபயம் நீரோடையில் சுட்டது. கேஸ் போட்டால் நிர்வாகம் பொருப்பில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொ’ல்’கிறோம். நன்றி வணக்கம்..

46 என்ன சொல்றாங்ன்னா ...:

ஸாதிகா said...

பூஸ்..பூஸ் ஓடியங்கோ ஓடியாங்கோ..//ஊசிப்போன கொழுக்கட்டையை கடிச்ச நம்ம பூஸார் மாதிரி முகம் மாற வழுக்கி திரும்பவும் பெரியவர் மேலே சிப்பி விழுந்தது//

இதை பாருங்கோ.சும்மா ஓடி வராதீங்க.உருட்டுக்கடை ஊசி ஈட்டி எல்லாவற்றையும் எடுத்துட்டு ஓடிவாங்க.நான் தூரமா நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்.

ஸாதிகா said...

ஃபாண்டு சிறிது பண்ணுங்கள் சகோதரரே!கண்ணைகட்டுது..படிக்க கஷ்டமாக உள்ளது.

வேலன். said...

கதை நன்றாக இருந்தது சகோதரரே..//.ஃபாண்டு சிறிது பண்ணுங்கள் சகோதரரே!கண்ணைகட்டுது..படிக்க கஷ்டமாக உள்ளது//
.பாண்டு சரியாகதான் உள்ளதே சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Chitra said...

இப்பவும் நம்ம பெரிசு கண்ணை தொறந்து பாக்கல என்ன கஸ்மாலமோ லெக் பீஸ துன்னுட்டு எலும்பை தூக்கி போடறானுங்க மடப்பசங்கன்னுட்டு திரும்ப தூங்கிட்டார் .


.....ha,ha,ha,ha.... funny!

vanathy said...

ஜெய்லானி, நல்ல நகைச்சுவையாக கதை எழுதியுள்ளீர்கள். சுட்ட படங்கள் கொள்ளை அழகு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்ணையே திறந்து பாக்கல. என்ன குலோப்ஜாமூனோ நம்ம சொட்ட மண்டையில விழுதேன்னு நெனச்சிட்டாரு.
//

உள்குத்து எதுவுமில்லையே ஜெய்லானி சார்..

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மைக்கதையா!!!
நல்லா இருக்கு ஜெய்லானி.

'பரிவை' சே.குமார் said...

ஜெய்லானி, நல்ல நகைச்சுவை கதை. சுட்ட படங்கள் கொள்ளை அழகு.

Jaleela Kamal said...

கதை ரொமப் நல்ல இருக்கு ஆனால் இன்னும் என் கொழுக்கட்டை தான் எல்லா இடத்திலும் சுற்றி கொண்டு இருக்கா?
இனி கருப்பு காக்கா கிடையாதா வெள்ளை காக்கா தானா?

குலோப் ஜாமூனும், ரசகுல்லாவும் சாப்பிட்ட மயக்கம் தீர்ந்துதா இல்லையா ?

தெளிவாகிட்டீங்களா. அங்கு பூஸார் உங்களை கூப்பிட்டாரே. அட இங்கும் பூஸார் வந்துட்டாரா////

நாடோடி said...

க‌தையோ க‌தை ந‌ல்லா இருக்கு..... நீதியும் ந‌ல்லா இருக்கு...

athira said...

ஆ.... ஜெய்...லானியும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாராஆஆஆ? இனி நாங்களெல்லாம் போர்த்துக்கொண்டுபடுக்க வேண்டியதுதேஏஏஏஏன்.

ஸாதிகா அக்கா நான் கொழுக்கட்டை சாப்பிட்ட பூஸாரைப் படித்திட்டு பெரீஈஈஈஈஈய பொல்லெடுத்தேன்..... பிறகுதான் உங்கள் பதிவுபார்த்தேன், உடனே பொல்லை வீஇசிவிட்டு ரொக்கட் லோஞ்சரைத் தூக்கிட்டேன்.... ஆ.... காதுக்கு பஞ்சுவையுங்கோ... இப்ப பக்கத்திலயெல்லோ நிற்கிறீங்கள்.... சத்தம் தாங்காஆஆஆஆஅ மாட்டீங்கள்ள்ள்.

ஜலீலாக்கா கவனியுங்கோ... உங்கட கொழுக்கட்டை சாப்பிட்டால் முகம் வீங்குமாமே..... அப்பாடா பத்த வச்சிட்டேன்..

athira said...

ஜெய்..லானி நன்றாகக் கதைசொல்றீங்கள், கதையோடு கதையாக உங்களைப்பற்றியும் சொன்னதுபோல இருந்துது..///வயசு , அனுபவம் இருந்தா அவர் பெரிய மனுசர் தானுங்களே ..///.


ஊசிக்குறிப்பு:
ஒருவர் மயிலைப்பார்த்து இது குயிலென்றால் உடனேயே ஆமா... எனத் தலையாட்டுவதோ? என்னைமாதிரி ஒரு பெரிய மனிஷரிட்டைக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடாதோ?.

வடிவாப்பாருங்கோ இது வெள்ளைக்காகம் இல்லை கொக்கு:), இரண்டு காலிருக்கில்ல அப்ப எப்பூஊஊடிக் காகமாகும்????

நானும் இன்று முழுக்க எங்க பக்கத்து மரத்துக்கீழ படுக்கப்போறன்... முத்துகிடைக்கும்தானே ஜெய்..லானி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்லா கதை போட்டிங்கள், மிக சுவாரஸ்யமாய்
இருக்கிறது.

Balamurugan said...

நீங்க சின்ன வயசுல கேட்ட கதை நல்லா இருக்குங்க.

Ahamed irshad said...

சிரிப்பான கதை நல்லாயிருக்கு,

தொடருங்கள் JAiலானி..

Priya said...

Very funny & a good one!!!

Menaga Sathia said...

கதை நல்லாயிருக்கு ஜெய்லானி!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

செண்பகம் : ஜெய்லானி அண்ணே! கத நல்லாவுட்டுருகாகோ மச்சான்.

மணி : அட ஆமாபுள்ள.. இது சுட்டகதையா சுடாத கதையா?..

தாராபுரத்தான் said...

படமும் பாடமும் சூப்பர்..ங்க தம்பி.

சசிகுமார் said...

அதென்ன எல்லாருமே காக்கா கதை தான் சொல்றீங்க வேற எந்த பறவையும் உங்க கண்ணுல மாட்டலையா. இருந்தாலும் கதை அருமையாக உள்ளது நண்பரே.
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// பூஸ்..பூஸ் ஓடியங்கோ ஓடியாங்கோ. இதை பாருங்கோ.சும்மா ஓடி வராதீங்க.உருட்டுக்கடை ஊசி ஈட்டி எல்லாவற்றையும் எடுத்துட்டு ஓடிவாங்க.நான் தூரமா நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்//

நல்ல வேளை பூஸ ஓடி வந்து கண்ட இடத்தில கடிச்சு வையுங்கன்னு சொல்லாம விட்டீங்களே.

//ஃபாண்டு சிறிது பண்ணுங்கள் சகோதரரே!கண்ணைகட்டுது..படிக்க கஷ்டமாக உள்ளது.//

நெட் வொர்க் பிராப்ளத்தால வேகமா மாத்த முடியல , ஒரு மணிநேரத்தில சரியாச்சு. ( அந்த நேரம் நீங்களும் இல்ல தூங்காம கமொண்ட் போட்டீங்க. நன்றி ) . உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//கதை நன்றாக இருந்தது சகோதரரே..//

இது ஒரு உண்மை கதை. அதை கொஞ்சம் மாத்தி சொன்னேன்.
//பாண்டு சரியாகதான் உள்ளதே சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.//

அந்த நேரம் அப்படிதான் வந்துச்சி. அவங்க உடனே கமெண்ட் போட்டதும் அதுதான். மாத்த முடியாத்தால மொத்தமா டெலிட் பண்னும்போது அவங்க கருத்தும் டெலிட்ஆச்சு. பிறகு மெயிலிருந்து காப்பி பண்ணி போட்டேன். உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Chitra --உங்களுக்கே சிரிப்பு வந்தால் அப்ப சரிதான். உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@vanathy-//. சுட்ட படங்கள் கொள்ளை அழகு//

சுட்டதுல என்னுடைய மிக்ஸிங்க்கும் உண்டு. இல்லாட்டி நீரோடையிலயே என்னை முக்கிடுவாங்களே முக்கி. அவங்க இன்னும் வரல பாக்கலாம் . சுட்டதை புகழ்ற ஒரே ஆள் நீங்கதாங்க. இதுல எதுவும் சைட் குத்து ஒன்னுமில்லையே . உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பட்டாபட்டி..-//உள்குத்து எதுவுமில்லையே ஜெய்லானி சார்..//

அப்டியெல்லாம் ஒன்னுமில்ல. பச்சை மிளகாய்ல பலகாரம் செய்வது எப்படின்னு போடலாமான்னு ஒரு ஐடியா இருக்கு. என்னா பட்டு போட்டுடுவோமா ? ரெஸிபி ரெடி. உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா-//உண்மைக்கதையா!!!//

வெள்ளை காக்காவை பாத்து சந்தேகமா ? படம்தாங்க சுட்டது. உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சே.குமார் --கொஞ்சம் மெதுவா சொல்லுங்க சார் .அவங்க காதுல விழுந்திற போகுது. ஒரு நாள் லீவுல போய் இருக்காங்க. உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Jaleela-// இன்னும் என் கொழுக்கட்டை தான் எல்லா இடத்திலும் சுற்றி கொண்டு இருக்கா?//

ஆமாங்க ஆமாம்...படம் வேற காட்டீங்க.ஆசை விடுமா ? என்ன!!

//இனி கருப்பு காக்கா கிடையாதா வெள்ளை காக்கா தானா?//

இருக்கே!! மங்குனிக்காக்கா அது ஆனிபுடுங்க போய் இருக்கு. வந்ததும் சொல்றேன்.

//குலோப் ஜாமூனும், ரசகுல்லாவும் சாப்பிட்ட மயக்கம் தீர்ந்துதா இல்லையா ?
தெளிவாகிட்டீங்களா.//

இன்னும் கொழுக்கட்டை பாக்கி இருக்கு.

//அங்கு பூஸார் உங்களை கூப்பிட்டாரே. அட இங்கும் பூஸார் வந்துட்டாரா//

ஸாதிகாக்கா வேற கட்டையேட வரசொல்லி இருக்காங்க என்ன ஆக போகுதோ என் நிலமை ?உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி --சந்தோஷம். உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@athira--//ஆ.... ஜெய்...லானியும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாராஆஆஆ? இனி நாங்களெல்லாம் போர்த்துக்கொண்டுபடுக்க வேண்டியதுதேஏஏஏஏன்.//

ஹி..ஹி.. அப்ப கட்டிலுக்கு அடிலயும் இனி இந்த கஷ்டம். இன்னும் நிறைய கதை இருக்கே. பின்ன ஒரு நாள் கதைக்கலாம்.

//ஸாதிகா அக்கா நான் கொழுக்கட்டை சாப்பிட்ட பூஸாரைப் படித்திட்டு பெரீஈஈஈஈஈய பொல்லெடுத்தேன்//

பல்லு போச்சா. இருக்குதா . அந்த கோவத்திலதானே

//ஜலீலாக்கா கவனியுங்கோ... உங்கட கொழுக்கட்டை சாப்பிட்டால் முகம் வீங்குமாமே..... அப்பாடா பத்த வச்சிட்டேன்.//

ஊசிப்போன கொழுக்கட்டைன்னு நல்ல வேளை போட்டு குடுக்கல .. அப்பாடா தப்பிச்சேன்

//கதையோடு கதையாக உங்களைப்பற்றியும் சொன்னதுபோல இருந்துது//

எனக்கு வயசு இப்ப..இப்ப...இப்ப..தாங்க பத்து முடிஞ்சி பதினொன்னு ஆக போகுது. வடிவா கண்டு பிடிச்சிடீங்க , புத்திசாலிதான் நீங்க

//ஒருவர் மயிலைப்பார்த்து இது குயிலென்றால் உடனேயே ஆமா... எனத் தலையாட்டுவதோ? என்னைமாதிரி ஒரு பெரிய மனிஷரிட்டைக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடாதோ?.//

ஆமா ஆந்தைக்கு பகல்ல கண்ணு தெரியுமா? ஒரு சந்தேகம் அதான் கேட்டேன்.

//வடிவாப்பாருங்கோ இது வெள்ளைக்காகம் இல்லை கொக்கு:), இரண்டு காலிருக்கில்ல அப்ப எப்பூஊஊடிக் காகமாகும்????//

கொக்குக்கு ஒரு கால்தாங்க . காக்காக்குதான் ரெண்டு காலா பாருங்க ””கஆக்கஆ””

//நானும் இன்று முழுக்க எங்க பக்கத்து மரத்துக்கீழ படுக்கப்போறன்... முத்துகிடைக்கும்தானே ஜெய்..லானி.//

பாத்து படுங்க சில சமயம் மீன் தலை, எலி குடல் , செத்த பாம்பு >>>>>>> கிடைத்தாலும் கிடைக்கும். எதுக்கும் முகத்துல துணியை போட்டு தூங்குங்க.உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --வாங்க!! வாங்க!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பாலமுருகன்--வாங்க!! வாங்க!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அஹமது இர்ஷாத் --வாங்க!! வாங்க!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Priya--வாங்க!! வாங்க!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Mrs.Menagasathia --வாங்க!! வாங்க!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )

// செண்பகம் : ஜெய்லானி அண்ணே! கத நல்லாவுட்டுருகாகோ மச்சான்.

மணி : அட ஆமாபுள்ள.. இது சுட்டகதையா சுடாத கதையா?..//


செண்பகம் :இச்..இச்..இச்..

மணி : ??? ???? ????? ??????

@@@தாராபுரத்தான்--//படமும் பாடமும் சூப்பர்..ங்க தம்பி.//

உஸ்.. மெதுவா அவங்க வந்துறப் போராங்க.உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சசிகுமார்--//அதென்ன எல்லாருமே காக்கா கதை தான் சொல்றீங்க வேற எந்த பறவையும் உங்க கண்ணுல மாட்டலையா.//

அண்ணாத்தே இது சின்ன வயசுலேந்தே காலங்காலமா வருது. நம்ம நீரோடை மலீக்காக்கா வேற வெள்ளை காக்கா போட்டுட்டாங்களா . நா ஒரு காக்காவை ரெண்டு காக்காவாக்கிட்டேன் அதாங்க இது. உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@

Jaleela Kamal said...

ஜெய்லாணி உங்களுக்கு கருப்பு காக்கா கிடைகாத்தால், உங்களுக்காகவேஒரு கருப்புகாக்காவ கண்டு பிடிச்சி வைத்தாச்சு.
அடுத்த குறிப்பில் வரும்.

அதிரா கவனியுங்கோ, நீங்க மரத்த்டியில் படுத்தால் செத்த பாம்பு, எலி குடல், மீன் தல எல்லாம் வருமா,மீன் தல பரவாயில்ல சூப் வைத்து விடலாம்,

செத்த பாம்பு, எலி குடலும் நம்ம அமைச்சருக்கு வைத்து விடலாம், கொழுட்ட ஊசி போய் ஒரு வாரம் ஆச்சு இன்னும் அது பின்னாடி சுத்தினா எப்படி.

ஜெய்லானி said...

@@@Jaleela --//ஜெய்லாணி உங்களுக்கு கருப்பு காக்கா கிடைகாத்தால், உங்களுக்காகவேஒரு கருப்புகாக்காவ கண்டு பிடிச்சி வைத்தாச்சு.//

நீங்க இருக்கிற இடத்தில ஒட்டகம் மட்டும் இருக்கிரதா மலீக்காக்கா சொன்னாங்க இப்ப காக்காவேற இருக்கா (ஒட்டகப்பால் ஐஸ் டீ )

//மீன் தல பரவாயில்ல சூப் வைத்து விடலாம்//

அதுல அதிராவுக்கு மிளகு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் .அப்பதாங்க நாத்தம் தெரியாது

//கொழுட்ட ஊசி போய் ஒரு வாரம் ஆச்சு இன்னும் அது பின்னாடி சுத்தினா எப்படி.//

கிடைச்சால் அதுல ஆமை முட்டைய போட்டு புது ரெஸிபி பண்ணி மங்குணிக்கு முதல்ல டெஸ்ட் பாத்திட்டு சரியா வந்தா( மங்கு உயிரோட இருந்தா) பின்ன அதிராவுக்கு பார்ஸல்

முற்றும் அறிந்த அதிரா said...

மீன் தல பரவாயில்ல சூப் வைத்து விடலாம்,// அக்காவென்றால் அக்காதான் ரொம்ப நன்றி ஜலீலாக்கா.. கிடைத்ததும் கொண்டு அங்கே வருகிறேன்(இன்னும் விழல்ல.. நான் மீ.தலையைச் சொன்னேன்...

//கிடைச்சால் அதுல ஆமை முட்டைய போட்டு புது ரெஸிபி பண்ணி மங்குணிக்கு முதல்ல டெஸ்ட் பாத்திட்டு சரியா வந்தா( மங்கு உயிரோட இருந்தா) பின்ன அதிராவுக்கு பார்ஸல்///நன்றி ஜெய்..லானி, முதல்ல அதைச் செய்யுங்கோ.... அவருக்குத்தான் ஓர்கிட் பூச்சின்னம் கொடுத்திருக்கு நட்பில... இனி எல்லாரும் ஓர்கிட்டுக்கே வோட் பண்ணோணும்.... சூப்குடித்தும் ஜூமாட்டாக இருந்தால்(எம்பி)...

Asiya Omar said...

ஆண்டவா நான் தான் பயணம் கட்டுதல், என் ப்ளாக் இருந்ததால கதை லேட்டாக கேட்க வந்தேன்,பின்னூட்டக்கதையும் சேர்த்து படித்தது நல்லதாப்போச்சு.என்ன கலக்கல் சும்மா சொல்லக்கூடாது.

ஜெய்லானி said...

@@@asiya omar--//ஆண்டவா நான் தான் பயணம் கட்டுதல், என் ப்ளாக் இருந்ததால கதை லேட்டாக கேட்க வந்தேன்,பின்னூட்டக்கதையும் சேர்த்து படித்தது நல்லதாப்போச்சு.என்ன கலக்கல் சும்மா சொல்லக்கூடாது//

எனக்கு அல்வா கொடுத்த தாய்குலமே வருக!! வருக!!. லேட்டா வந்தா என்னா . ஒரு பிளேட் ஹல்வா ஓவர் இனிப்பு.உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பருப்பு (a) Phantom Mohan said...

சார் வெள்ளக் காக்கா குமால்டியா இருக்கு சார்...சனியன் அது கத்தார் பக்கம் வரட்டும், அடிச்சு சூப் ஆச்சு அனுப்புறேன் டேஸ்டு பாத்து சொல்லுங்க

ஜெய்லானி said...

@@@பருப்பு The Great பருப்ப்பு--//சார் வெள்ளக் காக்கா குமால்டியா இருக்கு சார்...சனியன் அது கத்தார் பக்கம் வரட்டும், அடிச்சு சூப் ஆச்சு அனுப்புறேன் டேஸ்டு பாத்து சொல்லுங்க//


கொஞ்சம் மிளகும் தக்காளியும் தூக்கலா போடுங்க அப்பதான் மஜாவா இருக்கும். ஆமா வாத்யாரே பருப்புல எல்லாமே ஒன்னுதானே அப்புரமென்ன தி கிரேட் ஒரு வேளை மொச்சகொட்டையா ?ஹா..ஹ்..உங்கள முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாமக்கோடங்கி said...

அடே வெள்ளக் காக்கா பறக்குது பார்ரா...

எங்கண்ணே...?

ஜெய்லானி ப்ளாக்ல....

ஜெய்லானி said...

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி --//

அடே வெள்ளக் காக்கா பறக்குது பார்ரா...

எங்கண்ணே...?

ஜெய்லானி ப்ளாக்ல...//

அண்ணே, கொஞ்சம் நல்லா பாருங்கண்ணே. வெள்ளை காக்கா. பறக்கல உட்காந்து இருக்கு. அதை ஓட்டி உட்டுடாதீங்கண்னே!!உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

ஜெய்லானி, படமும், கதையும்,கருத்தும் அருமை.

அன்புடன் மலிக்கா said...

அடகொக்கமக்கா. என்னோட காக்கா எல்லார் பிளாக்கிளும் விசிட் அடிக்குதா விசில் அடிக்குதா.
அச்சோ அதான் என் பிளாக்கில் கருத்ததுபோல் தெரியுதா.

வெள்ளக்காக்க்காவ சுட்டாலும் சுட்டேன். எனக்கு கண்ணுவிழுந்து அச்சோ என்மேல கண்ணுவிழுந்துபோச்சி.

லீவ்முடிஞ்சி பள்ளிக்கூடம் வந்தா காக்காவ காணலை
இங்கவந்த ஒன்னு ரெண்டாவுல குந்திக்கீனுகீது அதுவும் நீரோடையே கண்ணுவச்சிக்கின்னு..

கதையும் கருவும் சூப்பர் ஜெய்லானி.
அதுசரி இதுயாரு சொன்னகத அவுகதானே!

சரி சரி நான் வெளியில சொல்லமாட்டேன்..

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அடகொக்கமக்கா. என்னோட காக்கா எல்லார் பிளாக்கிளும் விசிட் அடிக்குதா விசில் அடிக்குதாஅச்சோ அதான் என் பிளாக்கில் கருத்ததுபோல் தெரியுதா.//

பினாயிலு போட்டு கழுவி வச்சிருக்கேன் . சும்மா பளபளன்னு.

// வெள்ளக்காக்க்காவ சுட்டாலும் சுட்டேன். எனக்கு கண்ணுவிழுந்து அச்சோ என்மேல கண்ணுவிழுந்துபோச்சி.//

அப்டியெல்லாம் சொல்லப்படாது. ஊசிப்போன கொழுக்கட்டை துண்ணதுன்னு நீங்களே சொன்னீங்களே.

//லீவ்முடிஞ்சி பள்ளிக்கூடம் வந்தா காக்காவ காணலைஇங்கவந்த ஒன்னு ரெண்டாவுல குந்திக்கீனுகீது அதுவும் நீரோடையே கண்ணுவச்சிக்கின்னு.//

சொந்தக்காரவங்க வரலியேன்னு வந்த வழிய பாத்து குந்திகினு கீது

//கதையும் கருவும் சூப்பர் ஜெய்லானி.அதுசரி இதுயாரு சொன்னகத அவுகதானே!சரி சரி நான் வெளியில சொல்லமாட்டேன்..//

எப்படிதாங் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியல..

ஹேமா said...

ஹாய்...ஜெய் கொளுக்கட்டை இன்னும் இருக்கா ?ரொம்பப் பிந்தி வந்திடேனோ !

r.v.saravanan said...

படமும் கதையும் அருமை

வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@ஹேமா--// ஹாய்...ஜெய் கொளுக்கட்டை இன்னும் இருக்கா ?ரொம்பப் பிந்தி வந்திடேனோ !//


கொழுக்கட்டைக்கு ஆர்டர் குடுத்தாச்சி உங்களுக்கு மட்டும் மூனு பிளேட் . யார்கிட்டையும் சொல்லிடாதீங்கோ !!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@r.v.saravanan kudandhai--//படமும் கதையும் அருமை //

வாங்க!!! வாங்க !!! உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு
அழைத்துள்ளேன், நேரம் கிடைக்கும்போது
தொடருங்களேன் ஜெய்லானி, நன்றி.

செந்தமிழ் செல்வி said...

சகோதரரே!
மேலே உள்ள வாசகத்தைப் படித்தபின் பதிவு போடாமல் போக பயமாக இருக்கு :-0

உண்மைக் கதையில் உங்களின் கற்பனையைக் கலந்து நல்லாவே கதை விட்டிருக்கீங்க, இல்லையில்லை, சொல்லி இருக்கீங்க:-)

ஜெய்லானி said...

@@@செந்தமிழ் செல்வி--//சகோதரரே!மேலே உள்ள வாசகத்தைப் படித்தபின் பதிவு போடாமல் போக பயமாக இருக்கு :-0//

தூங்கும் போதுன்னு சொன்னேன் பயந்துட்டீங்களா ?. பாருங்க இப்படியெல்லாம் செஞ்சிதாங் கருத்து போட வைக்க வேண்டி இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//உங்களை தொடர்பதிவு ஒன்றுக்கு அழைத்துள்ளேன், நேரம் கிடைக்கும்போது
தொடருங்களேன் //

சீக்கிரமே போட்டு விடுகிறேன் .

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//ஜெய்லானி, படமும், கதையும்,கருத்தும் அருமை.//

சுதாகர் சார்.! உங்க கிட்ட சுட்ட படத்தை கொஞ்சம் கழுவி காயப்போட்டு போட்டேன் அதான் அப்படி . மற்றபடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))