Wednesday, September 7, 2011

வாங்க பழகலாம் ...1


      எவ்வளவு நாளைக்குதான் இப்படி காதில ரத்தம் வரும் அளவுக்கு மொக்கையா பதிவு எழுதுவீங்க . மாறுதலுக்காக நானே பாராட்டுர மாதிரி ஒரு டெக்னிகல்  பதிவு எழுதுங்களேன்னு  கேட்டுக்கொண்ட இவருக்கு  இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.

(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..!! ))

        மின்சார வீட்டு உபயோக பொருட்களில் பொதுவா இந்திய தயாரிப்புகளில் இல்லாத சிறப்பு ஜப்பான் , இத்தாலி  , சில ஃபிரான்ஸ் தயாரிப்புகளில்  இருக்கு .அது சில நேரங்களில்  நன்றாக இருந்தாலும் தவறாக நினைப்பதால் நிறையப்பேர் இதனை தெரிந்திருப்பார்களான்னு எனக்கு தெரியல .உதாரணம்  இஸ்திரி பெட்டி , எக்ஸாஸ்ட்  பேன் , எலக்டிரிக் இண்டக்‌ஷன்  அடுப்பு  , எலக்டிரிக் குக்கர் , வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை)) .
        இந்திய தயாரிப்புகளில் இது வைக்காததுக்கு காரணம் இது தான்  மிகச் சரியாக 220 , 240 ஓல்டேஜ் வருவதில்லை .இது சில நேரங்களில் வெறும் 80 லிருந்து 280 வரை கூட வரும் . அதுக்கு தகுந்த மாதிரி வைண்டிங்க காயில் உள்ளே இருக்கும் .  ஆனால் இங்கே வெளி நாட்டில (துபாய் ) மிகச்சரியாக ஓல்டேஜ் இருக்கும் .ஒரு சில மில்லி கூட,  கூட குறைய இருக்காது. அதை சரிகட்ட கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும் .
((  இது ஹீட்டர்ல இருக்கும் ))
      
    எங்காவது ஓல்டேஜ் குறைய ஆரம்பிச்சால் இந்த கெப்பாஸிட்டர் பேங்க் அதை சரி கட்டும் .நம்ம் ஊரில இந்த வசதி வர எனக்கு தெரிஞ்சி இன்னும் 100 வருஷம் ஆகுமுன்னு நினைக்கிறேன். ஓக்கே அந்த ஐட்டம் என்னன்னு இன்னும் சொல்லலையே  அதான் தெர்மல் ரெஸிஸ்டெர். இது நாம உபயோகிக்கும் எலக்டிரிக் பொருட்களுக்கு அதன் வாட்டேஜ் ( சாப்பிடும் அளவு ) க்கு தகுந்த மாதிரி அதன் ஆம்பியர்களில் ((சாப்பிடும் அளவு அதாவது பெருந்தீனி ))  வைத்திருப்பார்கள் .
     இது அதன் சூடு (ஹீட்) தேவையான அளவுக்கு மேல் போனால் உடனே இது எரிந்துப்போகும் . அதாவது மேலே நான் குறிப்பிட்ட உங்க எலக்டிரிக் சாமான்கள் வீனாகிப்போச்சுன்னு அர்த்தம் . அதை குப்பையில்தான் போடனும் . இதுதான் இது வரை நடந்து வரும் வழக்கம் . ரிப்பேர் செய்யும் அளவுக்கு  செய்யும் பணத்தில்  ஒன்று புதுசாவே வாங்கிடலாம் . ஆனால் உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில்  ஹீட்டரோ  , காயிலோ  கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.
     இந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது  அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும்  ஹி..ஹி..
(( இந்த மாடல் ஃபேனில் இருக்கும் ))

     சரி இதை எப்படி கண்டுப்பிடிப்பது . உங்கள் எலெக்டிரிக் குக்கர் , இண்டெக்‌ஷன் அடுப்பு , எலெக்டிரிக்  இஸ்திரி பெட்டி , பின் பக்க கதவை அதன் ஸ்குருவை கழட்டி விட்டு பார்த்தால் பின்னால் தெரியும் ஹீட்டர்  பிளேட்டில் ஒரு சின்ன உருளை ( உருளைகிழங்கு இல்லை மக்கா ))  சிலிண்டரில் அதனை வைத்து ஸ்குரு செய்திருப்பார்கள். அதிலிருந்து ஒரே கலரில் மெல்லிய வயரில் பார்க்கும் போதே தெரியும் . இதை பெண்கள் கூட செய்யலாம் .
           ஆனால் எக்ஸாஸ்ட் ஃபேனில் , வால் பேனில் ஹீட்டர் கிடையாது  அதுக்கு  பதிலாக சிங்கிள் காயில் இருக்கும் . அந்த காயில் இருக்கும் பின் பக்க டோரை கழற்றி விட்டு  பார்க்கும் போது அது தெரியாது .ஆனால் காயிலை சுற்றி மொத்தமான பேப்பர் , பேப்பரால் ஒட்டி இருப்பார்கள் . நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் .அந்த மொத்த பேப்பரை கவணமாக பிய்த்து வெளியே எடுக்கனும் .
         அதுக்குள்ளே போகும் இரெண்டு வயரிகளில் ஏதாவது ஒரு பக்கம் வயரில் இந்த தெர்மல் ரெஸிஸ்டரை இனைத்து இருப்பார்கள் . இங்கே உள்ள தெர்மல் ரெஸிஸ்டர் முன்பு பார்த்த அளவுக்கு இருக்காமல்  சின்னதா மஞ்சள் கலரில் இருக்கும் .((முன்பு சொன்ன  ஐட்டங்களில் வெள்ளை கலரில் இருக்கும் ))இங்கே வாட்டேஜ் அதிகம் இருக்காததால் அளவில் சின்னதா இருக்கும் . தெர்மல் ரெஸிஸ்டரை மெதுவாக கட் செய்து விட்டு வயரை நேரிடையாக சால்டரோ இல்லை அப்படியே ஜாயின் செய்து டேப் ஒட்டி விட்டால் போதும் . பிய்த்த மொத்த பேப்பரை திரும்ப ஒட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது
      திரும்ப கழட்டிய ஸ்குருக்களை அதன் அதன் இடத்தில் மாட்டி ஓட விடுங்கள் இப்போது ஃபேன் இயங்க ஆரம்பிச்சுடும் . புதுசாக ஒன்னு வாங்க வேண்டியதில்லை .இந்த வேலையை செய்ய அதிக பட்சம் உங்களுக்கு அரை மனிநேரம் கூட ஆகாது .இதுக்காக வெளியே யாரையும் எதிர்பார்க்கவும் தேவை இருக்காது .பணமும்  மிச்சமாகும் J

  டிஸ்கி :-  உங்களையும்  ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது . தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில்  தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை  விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..       

61 என்ன சொல்றாங்ன்னா ...:

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஆ..... வந்துட்டேன்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்... ஊசிப் படமெல்லாம் தெரியுதே பொறுங்க வடிவாப் பார்க்கோணும்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..!! ))//

அதாரது நூடில்ஸ் பிடிச்சவங்க ஓடிவந்து எடுத்திட்டு, எலியாரை விட்டுடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

என்னாது ஸாதிகா அக்காவுக்கு டெடிகேட் பண்ணுறீங்களோ? ஸாதிகா அக்கா..... பழைய நூடில்சும் ஒரு குஞ்செலியும் உங்களுக்காம் ஓடிவாங்கோ..:)).

கிராமத்து காக்கை said...

பல டெக்னிக்குகள் தெரியும் போல

பித்தனின் வாக்கு said...

உங்களையும் ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது .

ellam sari jai. en mandaiyila rendu nuttu kalandu vittathu. athukku enna pannalam??.

nalla katturai. thanks to share

Mohamed Faaique said...

thermal resister இது இல்லாமலே உருவாக்கி இருந்தா ஒரு பிரச்சனையும் வராதே.. அப்புறம் எதுக்கு அந்த thermal resister ஐ இனைத்து இருக்கானுங்க... ஹி..ஹி

r.v.saravanan said...

present jailani

Angel said...

அந்த எலி நூடில்ச சாப்பிடுதா இல்ல நூடில்ஸ் எலிய சாப்பிடுதா????
{அப்பாடி கமென்ட் போட்டுட்டேன் .இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும் )

ஜெய்லானி said...

@@@athira --//ஆ..... வந்துட்டேன்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்... ஊசிப் படமெல்லாம் தெரியுதே பொறுங்க வடிவாப் பார்க்கோணும். //

வாங்க..வாங்க..!!ஹா..ஹா.. ஊசிப்படம் ..என்னோட சொந்த படம் போடலாமுன்னு நினைச்சேன் . ஆனால் கூகிள்ள சுட்டபடமே போட்டுட்டேன் :-)

//அதாரது நூடில்ஸ் பிடிச்சவங்க ஓடிவந்து எடுத்திட்டு, எலியாரை விட்டுடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).


ஏன் முதல்ல வந்ததால இந்த பிளேட் உங்களுக்கு இல்லை ஆனா கடைசியா வருபவங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் :-)

//என்னாது ஸாதிகா அக்காவுக்கு டெடிகேட் பண்ணுறீங்களோ? ஸாதிகா அக்கா..... பழைய நூடில்சும் ஒரு குஞ்செலியும் உங்களுக்காம் ஓடிவாங்கோ..:)). //

அவங்கதான் கேட்டுகிட்டு இருந்தாங்க , உங்களுக்கான பதிவும் வந்து கிட்டே இருக்கு ஹி..ஹி.. அட நீங்களேஏஏஏ மாட்டி விட்டுடூவிங்க போலிருக்கே அவ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கிராமத்து காக்கை --// பல டெக்னிக்குகள் தெரியும் போல//

வாங்க ..வாங்க ..!! ஏதோ சின்ன சின்னதா தெரியும் கத்துக்குட்டி மாதிரி :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் உபயோகமான பதிவு தான் இது! முக்கியமாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்!

MANO நாஞ்சில் மனோ said...

ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து திருந்திட்டியாலே, நம்ப முடியலையே....

MANO நாஞ்சில் மனோ said...

அப்புறமா ஊசியில எப்பிடி நூல் கோக்குறது, சுடுதண்ணி எப்பிடி வைக்குறது இதெல்லாம் சொல்லுவீங்கதானே ஹி ஹி...

மாய உலகம் said...

ஆஹா உங்கள கம்ப்யூட்டர் ஹார்டூவேர் என்சினியர்ன்னு நினச்சேன்... எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் வொர்க்க்கும் அத்துப்டியா ( ஹை பிச்சுல பாட வேற வரும் போல இருக்கே)..... டிப்ஸ் நல்லா தான் இருக்கு பாஸ் .... தொடரும்

மாய உலகம் said...

பாஸ் நீங்க சொன்ன மாதிரி வொயரல்லாம் பிச்சி எரிஞ்சிட்டேன்.. அடுத்து என்னா சொன்னாரு

மாய உலகம் said...

காயில சுத்தி இருக்கிற காகிதத்த பிச்சு எறிஞ்சிட சொன்னாரு .... பிச்சி எறிஞ்சிரு....

மாய உலகம் said...

எறிஞ்சாச்சு...அப்பறம்..ம்ம்ம்ம் மறந்து போச்சே! ம்ம்ம்ம்ம் மஞ்சளா ஏதோ பிச்சி எறிஞ்சிட்டு... இந்த ரெசிஸ்ட்டரு ஜாயின் பண்ண சொன்னாரு... பண்ணியாச்சு... அப்பறம்... பாஸ் கலக்கீட்டீங்க சூப்பர்

குறையொன்றுமில்லை. said...

என்னமோ சொல்ல வரீங்க என்னன்னுதான் ஒன்னுமே புரியல்லே.

மகேந்திரன் said...

தொழில் நுட்பம் படிச்சது போல ஆச்சு....

சி.பி.செந்தில்குமார் said...

>>அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..

என்னை தாக்கி எழுதுனா மாதிரியே இருக்கே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அந்நியன் 2 said...

எதோ சொல்றியே கேட்டுத்தானே ஆகனும்.

உருப்படியான தொகுப்பு.

வாழ்த்துக்களும் தமிழ் மணமும்.

சாந்தி மாரியப்பன் said...

புதுசு புதுசா டெக்னிக்கல் விஷயங்கள் கத்துக் கொடுக்கறீங்க. ஜூப்பரு :-)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஜெய்லானி,

///உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில் ஹீட்டரோ , காயிலோ கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.

இந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும் ஹி..ஹி..///

அதாவது... வோல்டேஜ் ட்ராப்பால் சூடாகாமல் இருக்கும் வரை..!


ஆஹா...!

அருமையான துப்பு கொடுத்துள்ளீர்கள். இனி... உஷராயிட வேண்டியதுதான்..! மிக மிக உபயோகமான பதிவு. கற்பித்த தங்களுக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.

அப்புறம்... இந்த கபாசிட்டார் பேன்க் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்பில் தனியாக கிடைக்காதா..? விலை அதிகமா..?

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு --//உங்களையும் ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது .

ellam sari jai. en mandaiyila rendu nuttu kalandu vittathu. athukku enna pannalam??.

nalla katturai. thanks to share//

வாங்க..வாங்க..!! அண்ணே இது ரொம்பவும் சப்ப மேட்டர் வீட்டு அம்மினிக்கிட்டே சொன்னா ஒரே ஒரு தொடப்ப கட்டையாலேயே சரியாக்கிடுவாங்களே..ஹி...ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//thermal resister இது இல்லாமலே உருவாக்கி இருந்தா ஒரு பிரச்சனையும் வராதே.. அப்புறம் எதுக்கு அந்த thermal resister ஐ இனைத்து இருக்கானுங்க... ஹி..ஹி ..

வாங்க வாங்க..!! நல்ல கேள்விதான் . சில சமயம் ஆட்டோமேடிக் ஸ்விட்ச் ( ரிலே , தெர்மோஸ்ஸ்டார்டர் ) வேலை செய்யாவிட்டால் பிளேட், காயில் ஓவர் சூடாகி சில நேரம் ஃபயர் ஆகும் சந்தர்ப்பம் வந்துவிடும் . நம்ம ஊரில் ஓல்டேஜே வராதுங்கிறதால அது தேவைபடாது போலிருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan --// present jailani //

வாங்க வாங்க..!! சந்தோஷம் , :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin --//அந்த எலி நூடில்ச சாப்பிடுதா இல்ல நூடில்ஸ் எலிய சாப்பிடுதா???? //

வாங்க வாங்க .!! ஆஹா.. பட்டி மன்றமே (போட்டியே )வைக்கலாம் போலிருக்கு
// {அப்பாடி கமென்ட் போட்டுட்டேன் .இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும் ) //

கனவில இந்த எலி வராம இருக்கட்டும் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன் --// ரொம்பவும் உபயோகமான பதிவு தான் இது! முக்கியமாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்! //

வாங்க ..வாங்க..!! வீட்டில இருக்கும் இருக்கும் போது இதையும் அவங்களே டிரை செய்யலாம் .அவசரத்துக்கு ஆள் தேட வேண்டியதில்லையே . எவ்வளவோ கிராஃப்ட் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவியா இருக்கும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --//ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து திருந்திட்டியாலே, நம்ப முடியலையே.... //

வாங்க ..வாங்க..!! என்னைக்கி திருந்துறேனோ அன்னைக்கி இந்த பிளாக் இருக்காது .கேரண்டி ஓய் ..ஹி..ஹி..

//அப்புறமா ஊசியில எப்பிடி நூல் கோக்குறது, சுடுதண்ணி எப்பிடி வைக்குறது இதெல்லாம் சொல்லுவீங்கதானே ஹி ஹி..//

மக்கா இங்கே போய் பாரும் http://kjailani.blogspot.com/2010/04/blog-post_23.html . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--//ஆஹா உங்கள கம்ப்யூட்டர் ஹார்டூவேர் என்சினியர்ன்னு நினச்சேன்... எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் வொர்க்க்கும் அத்துப்டியா ( ஹை பிச்சுல பாட வேற வரும் போல இருக்கே)..... டிப்ஸ் நல்லா தான் இருக்கு பாஸ் .... தொடரும் //

வாங்க ..வாங்க..!! உலகில் எல்லாம் தெரிஞ்சவனும் , ஒன்னுமே தெரியாதனுவனும் யாருமில்லையே பாஸ் :-)

//பாஸ் நீங்க சொன்ன மாதிரி வொயரல்லாம் பிச்சி எரிஞ்சிட்டேன்.. அடுத்து என்னா சொன்னாரு //

இதை சப்ளை இருக்கும் போது செய்தீங்களா இல்லையா ஹா..ஹா..
//எறிஞ்சாச்சு...அப்பறம்..ம்ம்ம்ம் மறந்து போச்சே! ம்ம்ம்ம்ம் மஞ்சளா ஏதோ பிச்சி எறிஞ்சிட்டு... இந்த ரெசிஸ்ட்டரு ஜாயின் பண்ண சொன்னாரு... பண்ணியாச்சு... அப்பறம்... பாஸ் கலக்கீட்டீங்க சூப்பர் //

அடப்பாவமே..ஓக்கே ஓக்கே நல்லா இருந்தா சரிதான் ஹா.ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நிரூபன் said...

நாமளும் பழக வந்திட்டோமில்லே...

நிரூபன் said...

வீட்டில் இருந்த படியே நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தி, பேனை வைத்து ஹீட்டராகவும், காற்று வாங்கியாவும் யூஸ் பண்ணுவதற்கேற்ற அருமையான ஐடியா.

ஜெய்லானி said...

@@@Lakshmi --//என்னமோ சொல்ல வரீங்க என்னன்னுதான் ஒன்னுமே புரியல்லே. //

வாங்க..வாங்க..!! சுருக்கமா சொன்னா வீட்டு எலெக்டிரிக் ஐட்டங்களை நீங்களே ரிப்பேர் சரி செய்யும் டெக்னிக் . இப்ப ஒரு முறை திரும்ப படிச்சுப்பருங்க புரியும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகேந்திரன் --//தொழில் நுட்பம் படிச்சது போல ஆச்சு.... //

வாங்க..வாங்க..!! படிச்சதுமில்லாம டிரை செய்தும் பாருங்க :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார் -//

>>அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..

என்னை தாக்கி எழுதுனா மாதிரியே இருக்கே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /

வாங்க..வாங்க..!! நீங்கதான் ஹை டெக்கில போய்கிட்டிருக்கீங்களே .அய்யோ என்னா வேகம் ஹி..ஹி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2 -//எதோ சொல்றியே கேட்டுத்தானே ஆகனும். /

வாங்க .வாங்க..!! அதுகாக கிணத்துல குதிக்க சொன்னா குதிச்சிடாதீங்க பாஸ் ,கொலை கேசில எனனிய உள்ளேஎ தள்ளிடாதீங்க நான் பாவம் ஹி..ஹி..

// உருப்படியான தொகுப்பு.

வாழ்த்துக்களும் தமிழ் மணமும். //

சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --// புதுசு புதுசா டெக்னிக்கல் விஷயங்கள் கத்துக் கொடுக்கறீங்க. ஜூப்பரு :-) //

வாங்க..வாங்க..!! இது புதுசு இலலிங்க பழசுதான். இனி வெளிநாட்டில இருப்பவங்க இந்த ஐட்டங்களை அதிகம் யூஸ் செய்யாம தூக்கி போட்டுடறாங்க . அவங்களுக்கு இது அதிகம் பயன் படும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ //

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... //

அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)

//அதாவது... வோல்டேஜ் ட்ராப்பால் சூடாகாமல் இருக்கும் வரை..!

ஆஹா...!

அருமையான துப்பு கொடுத்துள்ளீர்கள். இனி... உஷராயிட வேண்டியதுதான்..! மிக மிக உபயோகமான பதிவு. கற்பித்த தங்களுக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.

அப்புறம்... இந்த கபாசிட்டார் பேன்க் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்பில் தனியாக கிடைக்காதா..? விலை அதிகமா..? //

இந்த கப்பாஸிட்டர் பேங்க் சாதாரன வீட்டில வாங்கி வைக்க முடியாத அளவுக்கு விலை அதிகம் . அதனால் அதிகம் பேர் வைக்க முடிவதில்லை . ஆனால் பில்டிங் , அல்லது மல்ட்டி ஸ்டோரி பில்டிங்கில் ரிவர்ஸ் ஓல்டேஜ் டிராப் ஆகி டிடான்ஸ்ஃபார்ம் சூடாகாமல் இருக்க கண்டிப்பாக வைக்க வேண்டும் என்பது யூ எ ஈ யின் ரூல்ஸ்
தரை தளத்தில் இருக்கும் மெயின் எலெக்டிரிக் ரூமில் இதை பார்க்கலாம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன் --// நாமளும் பழக வந்திட்டோமில்லே...//

வாங்க..வாங்க..!! நல்லா பழகலாம் , இதை இங்கே வை , அங்கே வைன்னு கத்துக்கலாம் ஹி..ஹி
//வீட்டில் இருந்த படியே நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தி, பேனை வைத்து ஹீட்டராகவும், காற்று வாங்கியாவும் யூஸ் பண்ணுவதற்கேற்ற அருமையான ஐடியா.//

ஆமாம் பாஸ் ஆமாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ப.கந்தசாமி said...

இவ்வளவுதானா டெக்னிக்கு. இத்தன நாளு தெரியாமப் போயி எத்தனை ஹீட்டர்களையும், இஸ்திரிப்பெட்டிகளையும் குப்பையில போட்டுட்டேன்.

ஆமாங்க ஹீட்டர், இஸ்திரிப்பெட்டி அப்படீன்னா என்னங்க, எதாச்சம் திங்கற சாமானுங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பரப்பூ..
உங்கள இன்னா சொல்லிப்பாராட்டுவதுனு தெர்ல...
இருந்தாலும், உங்க திறமைய கண்டு வியந்து.. இந்த பழைய இஸ்திரி பொட்டிய.. உங்களுக்கே பரிசா அனுப்பறேன்...:-))

vanathy said...

பயனுள்ள தகவல்கள் தான் சொல்றீங்க எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை ஹிஹி....
இங்கு பொருள்கள் பழுதாவது குறைவு.

Riyas said...

//அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..//

இதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப புடிச்சது..

Jaleela Kamal said...

நல்ல பயனுள்ள பகிர்வு
நானும் டீவி ரேடியோ கோர்ஸ் படிக்கிறேன்னு
எலலத்தை கழட்ட்டி ஒட்டவைத்த்து ஒரு காலம்

உடனே எங்க மாமனார் கல்யாணத்துக்கு முன்
ஜலீலா வந்ததும் இந்த டீவி ரேடியோவ எல்லாம், ரிப்பேர் செய்யவைக்கனுமும்மு சொல்லும், போது நான் பேப் ப்பேஏஏ தான்
அப்ப ஒரு இண்டரஸ்ட் இருந்தது.இப்ப எல்லாம் ரூட்டே மாறி போச்சு//

அந்த ரெஸிஸ்டர பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது விட்டது

மிக பயனுள்ள பதிவு

ஸாதிகா said...

ஆஹா..என் வேண்டுகோளை ஏற்று எனக்கே டெடிகேட் செய்த தம்பி ஜெய்லானிக்கு மிக்க நன்றி.மிகவும் உபயோகமான பதிவு.என் பையன் பழைய மானிட்டர்,டேப் ரெகார்டர்,டிவி இத்யாதிகளை பிரித்துப்போட்டு பிரித்துப்போட்டு எனக்கு மிகவும் டாச்சர் கொடுக்கின்றான்.உங்கள் பகிர்வு கண்டிப்பாக உபயோகமானது.வாழ்த்துக்கள்!

// தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில் தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி.. //திருந்தவே மாட்டீர்களா?வேறு வழி இல்லை.பரங்கிப்பேட்டைக்கு உங்கள் மொக்கை பதிவுகளையும் ,தொடரும் பின்னூட்டங்களையும் பிரிண்ட் எடுத்து அனுப்பி விடவேண்டியதுதான்.

ஆச்சி ஸ்ரீதர் said...

பயனுள்ள பதிவு.நீங்க சொன்னபடி செய்து வெற்றி பெற்றவங்க உங்களுக்கு நன்றி சொல்வாங்க.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

பயனுள்ள பகிர்வு.

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD --//இவ்வளவுதானா டெக்னிக்கு. இத்தன நாளு தெரியாமப் போயி எத்தனை ஹீட்டர்களையும், இஸ்திரிப் பெட்டிகளையும் குப்பையில போட்டுட்டேன். //

வாங்க ..வாங்க..!!இனிமே ஒரு தடைவைக்கு ரெண்டு தடவையா செக் செய்துக்கோங்க :-))

//ஆமாங்க ஹீட்டர், இஸ்திரிப்பெட்டி அப்படீன்னா என்னங்க, எதாச்சம் திங்கற சாமானுங்களா? //

இல்லங்க ஒன்னு குளிக்கிற சோப்பு , இன்னொன்னு கால் வலிக்கு தேய்க்கும் தைலம் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி....//சூப்பரப்பூ..
உங்கள இன்னா சொல்லிப்பாராட்டுவதுனு தெர்ல...//

வாங்க குரு..வாங்க..!! budak baik ன்னு சொல்லி பாராட்டுங்க ஹி..ஹி..
// இருந்தாலும், உங்க திறமைய கண்டு வியந்து.. இந்த பழைய இஸ்திரி பொட்டிய.. உங்களுக்கே பரிசா அனுப்பறேன்...:-)) //

ஆஹா.. நிறைய அனுப்புங்க ரீசைக்ளிங் செஞ்ஜே பக்கத்திலுள்ள இலங்கையை விலைக்கு வாங்கிடுரேன் ஹி.ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy -//பயனுள்ள தகவல்கள் தான் சொல்றீங்க எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை ஹிஹி....
இங்கு பொருள்கள் பழுதாவது குறைவு. /

வாங்க வான்ஸ் வாங்க ..!! இந்த முறை ஊர் போன போது இதே ஃபால்ட் ரிலேடிவ் வீடுகளில் ஏற்பட்டது . நிறைய செலவு செய்தார்கள் .ஆனால் உண்மை நிலவரம் அவங்களுக்கு தெரியாது :-).பிறகு நான் சொன்னேன் .ஆச்சிரியம் அவங்களுக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

நான் தான் ஒருவேளை கடைசியோ. நம்ம பாஸ் தானே சொல்லி சமாளிச்சுக்கலாம். ஹி.. ஹி..

எம் அப்துல் காதர் said...

// இஸ்திரி பெட்டி, எக்ஸாஸ்ட் பேன், எலக்டிரிக் இண்டக்‌ஷன் அடுப்பு, எலக்டிரிக் குக்கர், வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை))//

சரி இதை எல்லாம் யார் வீட்டிலிருந்து எடுத்து வந்து பழுது பார்க்கனும்னு சொல்லலையே அவ்வ்வ்வவ்..

எம் அப்துல் காதர் said...

// அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி.. //

அதானே ...!! ஜெய்லானியா கொக்கான்னானாம்..

எம் அப்துல் காதர் said...

// கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும். //

இந்த கெப்பாஸிட்டர் பேங்க்கில் டெப்பாசிட் எல்லாம் பண்ண முடியாதா பாஸ் அவ்வ்வ்வ்

Anonymous said...

கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் பழகுவோம்

ஜெய்லானி said...

@@@Riyas --//அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..//

இதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப புடிச்சது.. //

வாங்க ரியாஸ் வாங்க..!! ஹி...ஹி... இது நம்ம டிரேட் மார்க்க ஆச்சே :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--// நல்ல பயனுள்ள பகிர்வு
நானும் டீவி ரேடியோ கோர்ஸ் படிக்கிறேன்னு
எலலத்தை கழட்ட்டி ஒட்டவைத்த்து ஒரு காலம்//

வாங்க ஜலீலாக்கா வாங்க..!! அட நீங்களும் இந்த கோர்ஸ் படிச்சிருக்கீங்களாஆஆஆஆ.. :-))

// உடனே எங்க மாமனார் கல்யாணத்துக்கு முன்
ஜலீலா வந்ததும் இந்த டீவி ரேடியோவ எல்லாம், ரிப்பேர் செய்யவைக்கனுமும்மு சொல்லும், போது நான் பேப் ப்பேஏஏ தான்
அப்ப ஒரு இண்டரஸ்ட் இருந்தது.இப்ப எல்லாம் ரூட்டே மாறி போச்சு//

ம்..அப்படித்தான் சில நேரம் வாழ்க்கை படகு திசை மாறிப்போகும் . போய் விடும் :-(

// அந்த ரெஸிஸ்டர பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது விட்டது

மிக பயனுள்ள பதிவு //

நினைவுகள் எப்போதும் சுகமானது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஆஹா..என் வேண்டுகோளை ஏற்று எனக்கே டெடிகேட் செய்த தம்பி ஜெய்லானிக்கு மிக்க நன்றி.மிகவும் உபயோகமான பதிவு.என் பையன் பழைய மானிட்டர்,டேப் ரெகார்டர்,டிவி இத்யாதிகளை பிரித்துப்போட்டு பிரித்துப்போட்டு எனக்கு மிகவும் டாச்சர் கொடுக்கின்றான்.உங்கள் பகிர்வு கண்டிப்பாக உபயோகமானது.வாழ்த்துக்கள்! //

வாங்க ஸாதிகாக்கா வாங்க..!! கொஞ்சமா டிரை செய்தால் எல்லாமே ஈஸியாக வரும் :-)
//திருந்தவே மாட்டீர்களா?வேறு வழி இல்லை.பரங்கிப்பேட்டைக்கு உங்கள் மொக்கை பதிவுகளையும் ,தொடரும் பின்னூட்டங்களையும் பிரிண்ட் எடுத்து அனுப்பி விடவேண்டியதுதான்.//

இப்பதானே பாராட்டினீங்க அவ்வ்வ்வ்வ் எஸ்கேப்ப்ப்ப்ப்ப் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar--//பயனுள்ள பதிவு.நீங்க சொன்னபடி செய்து வெற்றி பெற்றவங்க உங்களுக்கு நன்றி சொல்வாங்க.//

வாங்க..வாங்க..!! கண்டிப்பா பயனளிக்கும் ..!!ஊரில போன போது பக்கத்து வீட்டில புதுசாக ஒன்னு வாங்கினாங்க அது வேலை செய்யல. திரும்ப குடுக்கவும் முடியல .அதை யூஸ் செய்ய முடியாம மாத கணக்கில இருந்திருக்கு . நான் அதை கால் மணி நேரத்தில் சரி செய்து குடுத்தேன் . அது இப்போதும் (4வருடமா )வேலை செய்கிரது உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)

ஜெய்லானி said...

@@@ஆயிஷா அபுல். -//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. பயனுள்ள பகிர்வு. //

வாங்க.வாங்க..!! அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்) சந்தோசம் :-).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் --//நான் தான் ஒருவேளை கடைசியோ. நம்ம பாஸ் தானே சொல்லி சமாளிச்சுக்கலாம். ஹி.. ஹி.. //

வாங்க பாஸ் வாங்க..!! எப்போ வந்தாலும் வரலாம் , என்ன சாப்பிடுறீங்க..? காடை வருவல் , சிக்கன் 65 , மஞ்சூரியன் ஹி..ஹி...

// சரி இதை எல்லாம் யார் வீட்டிலிருந்து எடுத்து வந்து பழுது பார்க்கனும்னு சொல்லலையே அவ்வ்வ்வவ்..//

போகிர போக்கை பார்த்தா திருட்டு வேலையும் என்னைய கத்து குடுக்க வைச்சிடுவீங்கப் போலிருக்கே அவ்வ்வ்வ்

//அதானே ...!! ஜெய்லானியா கொக்கான்னானாம்..//

என்னைய போயி கொக்குன்னு சொல்லிபிட்டியலே அவ்வ்வ்வ்வ்

//இந்த கெப்பாஸிட்டர் பேங்க்கில் டெப்பாசிட் எல்லாம் பண்ண முடியாதா பாஸ் அவ்வ்வ்வ் //

ம் செய்யலாமே அதுல ஏதாவது ஒரு இடத்துல கைய வச்சா நம்ம உசிரு உடனே ஜன்னத்திலோ இல்ல ஜஹன்னத்திலோ ஆன் தி ஸ்பாட் டோர் டெலிவரி ஆகிடும் ...என்கிட்டேயேவா ஹா.ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சின்னதூரல்-//கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் பழகுவோம் //

வாங்க..வாங்க.!! பார்கத்தான் பெரிசா தெரியும் .வேலையை ஆரம்பிச்சா ஈஸியாதான் இருக்கும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))