Saturday, August 6, 2011

எழுத்து வகை ..!!


    இப்பதான் ஒரு தொடர் முடிஞ்சுது அதுக்குள்ளே இன்னொன்னானு நினைக்க வேண்டாம் .வேற வழியே இல்லை . அழைத்து இங்கே பார்க்கவும் . அழைத்தமைக்கு நன்றி . இந்த தொடரில் எதிர் பாலினம் ஒருவர் எழுதினால் எப்படி இருக்கும் என்று டெஸ்ட் செய்யவே இது. :-) கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம் :-)
   நாம் ஒரு கதையோ , கவிதையோ ,அல்லது கட்டுரையோ  படிக்க ஆரம்பிக்கும் போது அது யார் எழுதி இருப்பது ? எழுதியவர் ஆணா இல்லை பெண்ணா என்று பார்த்து விட்டோ  படிக்கிறோம் .அதில் தெரிந்தவர்  என்றால் படிக்கும் ஆசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் .அந்த வகையில்தான்  நாவல் , சினிமா பாட்டாக , இலக்கியமாக ஒருவரை குறித்து நமது அனுகுமுறை இருக்கிறது. 
இப்போ இங்கே இருக்கிர சூடுக்கு இது வேரயா..?  அவ்வ்வ்

    ஒரு கவிதையை கண்ணதாசனோ , வைரமுத்தோ ,வாலி இவர்கள் எழுதி அதை நாம் வாசிப்பதுக்கும்  ஒரு சாதாரன குப்பனோ ,சுப்பனோ எழுதி இருந்தால் அதை வாசிப்பதுக்கும் ஏக வித்தியாசம் இருக்கிறது புதியதாக யாராவது எழுதி இருந்தால் மேலோட்டமாக வாசித்து விட்டு விடுவோம் .இங்கே கவிதை  வரிகளுக்கு நாம் மரியாதை  குடுப்பதில்லை .எழுதியவர் யார் என்றே. முதல் கேள்வி
   பொது வெளியை விட்டுவிட்டு பார்க்கும் போது இங்கே பதியுலகில் பலர்  விதவிதமாக எழுதி வருகிறார்கள். இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு வித டேலண்ட் இருக்கிறது. அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஒருவருக்கு கவிதை நன்றாக வருகிறது. இன்னொருவருக்கோ  சமையல் நன்றாக வருகிறது இப்படி பலவகை இருக்கு. எது எவருக்கு பிடித்து இருக்கோ அதில் எழுதுகின்றார்கள்.
    பதிவுலகில் இருக்கும் பலரும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை இல்லை .நல்ல மெச்சூரிட்டியான ஆட்களே இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண்ணோ ,இல்லை ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னோ ஒரு ஆண் கட்டாயம் தூண்டுக்கோலாகவே  இருக்காங்க . அந்த வகையில் அவர்கள் எழுதும் எழுத்தும்(வழிமுறை)  தனித்தனியே  பிரித்து பார்க்கவே  முடியாது. 
(இனிப்பான ) சோதனை மேல் சோதனை  போதுமடா சாமி...

   அசிங்கமாக ,அடுத்தவர் முகம் சுழிக்கம்படியாக யார் எழுதினாலும் அது நீண்ட நாள் நிற்காது. அப்படிப்பட்டவர் பெரும்பாலும் யாருக்குமே தெரியாத புனைப்பெயரிலோ  அல்லது தன்னுடைய அடையாளம் வெளியே தெரியாமல்தான் எழுதுவார். இங்கேதான் வருகிறது அது ஆண் எழுதும் எழுத்தா இல்லை இது பெண் எழுதும் எழுத்தா..? என்ற கேள்வியே. (உஸ்...யப்பா ஒரு வழியா மேட்டருக்கு  வந்துட்டேன் )
   ஊரில் எங்கோ நடக்கும் ஒரு குண்டூசி செய்தியை ஊதி ஊதி  பெரிசாக்கி புல்டோசர் அளவு பரப்பரப்பாக கூடிய பெண்களும் இங்கே இருக்கிறார்கள். (தேவை ) இல்லாத வார்த்தையை விட்டு விட்டுஅதுக்காக்க  குடுமிப்பிடி போடும் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். இதில் இவர் இப்படித்தான் எழுதனும் என்கிற வறைமுறை எதுவும் கிடையாது.
   ஒருவனோ அல்லது ஒருத்தியோ இப்படித்தான் எழுதனும் என்று வந்தால் அதில் அவரோட தனித்தன்மை என்று எதுவும் இல்லை ,இருக்காது என்றே அர்த்தம் . இங்கேதான் அடக்குமுறை என்ற பேச்சு வருகிறது. இந்த தொடரில் எழுதிய பெரும்பாலோனேர் அவர்களுக்குள்ளேயே  ஒரு பெண் இப்படித்தான் எழுதனும் என்ற வரைமுறையை ஒத்துக்கொள்கிறார்கள்.  கடைசியில்  எங்களுக்கு எழுத்துலகில் எழுத்து சுதந்திரம் கிடையாது என்று சொன்னால்  யாரை குற்றம் சொல்வது ?
   உதாரணத்திற்கு  ஒரு கவிதையோ  அல்லது கட்டுரையோ  கீழே பெயர் போடாமல் போட்டால் அது ஆண் எழுதியதா இல்லை பெண் எழுதியதா என்று கண்டிபாக ஊகிக்கவே  முடியாது .இதில் முன்பே சொன்ன மாதிரி அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் . எழுத்திலே  ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பது   வேண்டாத வேலை என்றே  தோன்றுகிறது.
     பதிவு கொஞ்சம் சீரியஸா ஆன மாதிரி தெரியுது அதுக்காக ஒரு ஜோக்
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரியுதே..?
மனைவி: அதிக மில்லை ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.....
யோவ் இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம் மட்டும்தான் தான்  வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
    அப்படியே  ஒரு சந்தேகம் J  குளத்துல எந்த வகையான (நீளம்  அகலம் )பொருட்களை போட்டாலும்  அலை மட்டும் வட்டவட்டமா  வருதே அது ஏன் ???  ((ஒன்னுமில்ல சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சு அதான் ஹி..ஹி... ))

80 என்ன சொல்றாங்ன்னா ...:

Mahi said...

ஐ..நான்தான் 1ஸ்ட்!!

இமா க்றிஸ் said...

//கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம் :-) // என்று ஆரம்பித்து 'சீ'ரியஸாக பதிவு வந்து இருக்கிறது.

ஒழுங்காக ஒரு இடுகை. ;)))

ம.தி.சுதா said...

////அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் .////

சரியான கருத்துத் தான் சகோதரா..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

இமா க்றிஸ் said...

ஆ(மி)மை அழகு. ;)

Mahi said...

/(உஸ்...யப்பா ஒரு வழியா மேட்டருக்கு வந்துட்டேன் )/இந்த லைனைப் படிச்சதும்தான் என்ன சொல்ல வந்தீங்கன்னே புரிஞ்சது.கொஞ்சம் நீஈஈஈஈஈஈளமான முன்னுரை!!

நல்ல பதிவு ஜெய் அண்ணா! சூப்பரா எழுதிட்டீங்க!

மாய உலகம் said...

// குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??? //

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ... ஆமால்ல கட்டம் கட்டமா வரவேண்டியதானே....

மாய உலகம் said...

எழுத்திலே ஆண் எழுதினால் என்ன பெண் எழுதினால் என்ன .. மொத்தத்திலே பெண் தானே எழுதும்... பென்சிலும் எழுதும்னு சொல்லக்கூடாது....

மாய உலகம் said...

ஒரு பக்கம் ஆமை தொப்பியை தூக்கிட்டுப்போவுது.. இன்னொரு பக்கம் எரும்பு பிஸ்கட்ட தூக்கிட்டுபோவுது.. என்ன நண்பரே நடக்குது இங்கே.... நான் எத தூக்கிட்டுபோவ... இந்த பதிவ தூக்கிட்டுப்போயிர வேண்டியதான்...

மாய உலகம் said...

பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்....

இமா க்றிஸ் said...

//பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்.... // ;))))))

ஜெய்லானி said...

@@@Mahi --// ஐ..நான்தான் 1ஸ்ட்!! //

வாங்க மஹி வாங்க ...!! இன்னைக்கி நீங்கதான் ஃபஸ்ட் அதனால எறும்பு தூக்கிட்டு போற பிஸ்கெட்டுல ஒன்னு உங்களுக்குதான் :-;) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ப.கந்தசாமி said...

வந்தேன், படித்தேன், ரசித்தேன்.

ஜெய்லானி said...

@@@இமா -- //கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம் :-) // என்று ஆரம்பித்து 'சீ'ரியஸாக பதிவு வந்து இருக்கிறது.

ஒழுங்காக ஒரு இடுகை. ;))) //
வாங்க மாமீஈஈஈ வாங்க ...!!சீரியஸுன்னு சொல்றீங்க ஒழுங்குன்னு சொல்றீங்க இதுல எது சரி எது தப்புன்னு தெரியலையே அவ்வ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

>>நாம் ஒரு கதையோ , கவிதையோ ,அல்லது கட்டுரையோ படிக்க ஆரம்பிக்கும் போது அது யார் எழுதி இருப்பது ? எழுதியவர் ஆணா இல்லை பெண்ணா என்று பார்த்து விட்டோ படிக்கிறோம் .அதில் தெரிந்தவர் என்றால் படிக்கும் ஆசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்ada!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு கவிதையோ அல்லது கட்டுரையோ கீழே பெயர் போடாமல் போட்டால் அது ஆண் எழுதியதா இல்லை பெண் எழுதியதா என்று கண்டிபாக ஊகிக்கவே முடியாது .இதில் முன்பே சொன்ன மாதிரி அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான்


ம் ம் அண்ணன் எனமோ சொல்ல வர்றார்.. ஆனா நேரடியா சொல்லாம ஏன் சுத்தி வளைக்கறார்னு தெரில.. ஹி ஹி

அந்நியன் 2 said...

ம்... ம் அண்ணன் எனமோ சொல்ல வர்றார்.. ஆனா நேரடியா சொல்லாம ஏன் சுத்தி வளைக்கறார்னு தெரில.

ரசித்தேன்.

Chitra said...

இந்த தொடரில் எழுதிய பெரும்பாலோனேர் அவர்களுக்குள்ளேயே ஒரு பெண் இப்படித்தான் எழுதனும் என்ற வரைமுறையை ஒத்துக்கொள்கிறார்கள். கடைசியில் எங்களுக்கு எழுத்துலகில் எழுத்து சுதந்திரம் கிடையாது என்று சொன்னால் யாரை குற்றம் சொல்வது ?


.......எழுத்து சுதந்திரம் எப்பொழுதும் உண்டு. ஆரோக்கியமான கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. எப்பூடி! :-)))

r.v.saravanan said...

குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ???

அந்த அலையை கேட்டா சொல்லிட போகுது

கூடல் பாலா said...

சூடா எழுத ஆரம்பிச்சி அப்படியே கூல் பண்ணி விட்டுட்டீங்க ...நல்லாயிருந்தது !

MANO நாஞ்சில் மனோ said...

யாரோ செமையா உள்குத்து வாங்குனா மாதிரி தெரியுதே, அது யாரு..??? ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே உங்க ஊர்ல இப்போ ரொம்ப சூடாண்ணே...நீங்க அதை விட சூடா இருக்கீங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

விடும்யா விடும்ய்யா ஹி ஹி.....

Jaleela Kamal said...

எழுத்து , யாரை, இது எங்கே இருந்து புகையுதுன்னு தெரியலையே?

Jaleela Kamal said...

//படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!//

டயலாக மாற்றியாச்சா?

பித்தனின் வாக்கு said...

பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்....

நாடோடி said...

//கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம்//

எதோ ஜெய்லானி சொல்லவர்றார் எல்லோரும் சீரியஸா கேளுங்கப்பா....


//பதிவு கொஞ்சம் சீரியஸா ஆன மாதிரி தெரியுது//

அப்படியா?.. நீங்க சொன்ன சரியாதான் இருக்கும்.. :))))))))))

ஸாதிகா said...

நல்ல தரமான பதிவு.வாழ்த்துக்கள்.இரண்டு ஜோக்குகளுமே சிரிக்க வைத்தன்.அதிலும் முதலாம் ஜோக் உங்களுக்கே உரித்தான் ஜோக்.வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

@@@♔ம.தி.சுதா♔--////அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் .////

சரியான கருத்துத் தான் சகோதரா.. //

வாங்க மதி வாங்க...!!இந்த தொடர் கொஞ்சம் லேட் அதனால தனித்து தெரியுது .அதுவும் நன்மைக்கே .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம.தி.சுதா

ஜெய்லானி said...

@@@இமா --//ஆ(மி)மை அழகு. ;) //

வாங்க மாமீஈஈ வாங்க..!!வேனுமின்னா கொண்டு போங்க நோ பிராப்ளம் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--///(உஸ்...யப்பா ஒரு வழியா மேட்டருக்கு வந்துட்டேன் )/இந்த லைனைப் படிச்சதும்தான் என்ன சொல்ல வந்தீங்கன்னே புரிஞ்சது.கொஞ்சம் நீஈஈஈஈஈஈளமான முன்னுரை!! //

வாங்க மஹி வாங்க..!! அதாவது இந்த மேட்டரை கடைசியிலதான் போடலாமுன்னு இருந்தேன் .பொது மக்கள் நலன் கருதி நடுவிலே சேர்த்துட்டேன் ..பாருங்க உங்களுக்கே கண்ணை கட்டுதே ஹி...ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

// நல்ல பதிவு ஜெய் அண்ணா! சூப்பரா எழுதிட்டீங்க! //

பாராட்டிற்கு நன்றி கூலா என்ன சாப்பிடுறீங்க ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--// குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??? //

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ... ஆமால்ல கட்டம் கட்டமா வரவேண்டியதானே.//

வாங்க மாயா வாங்க ..!! நா எனன்வும் இப்படித்தான் யோசிப்பேன் .வந்துட்டீங்கல்ல இனி நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிடூவீங்க ஹா..ஹா..
//எழுத்திலே ஆண் எழுதினால் என்ன பெண் எழுதினால் என்ன .. மொத்தத்திலே பெண் தானே எழுதும்... பென்சிலும் எழுதும்னு சொல்லக்கூடாது..//
பெண்-னா இல்லை பென் -னா அவ்வ்வ்வ் :-))

//ஒரு பக்கம் ஆமை தொப்பியை தூக்கிட்டுப்போவுது.. இன்னொரு பக்கம் எரும்பு பிஸ்கட்ட தூக்கிட்டுபோவுது.. என்ன நண்பரே நடக்குது இங்கே.... நான் எத தூக்கிட்டுபோவ... இந்த பதிவ தூக்கிட்டுப்போயிர வேண்டியதான்...//

இது சிம்பாலிக்கா சொன்ன மேட்டர் .உங்களுக்கு பிடிசசிருந்தா இந்த பிளாகையே கொண்டுப்போங்க . பகக்த்தில பிளம்பரம் பாக்கலையா ஹய்யோ.. ஹய்யோ..
//பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்...//
அட அப்ப நான் சரியாதான் எழுதி இருக்கேன் போல ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்.... // ;)))))) /

வாங்க வாங்க ...!! அப்போ இது உங்களுக்கும் புரியலையா அவ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD --//வந்தேன், படித்தேன், ரசித்தேன். //

வாங்க ஐயா வாங்க ..!! தலைப்பு சூப்பரா இருக்கு :-) எதுக்கும் ரெஜிஸ்டர் பண்ணிடுறேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), //

சிறப்பான எழுத்துக்குப் பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார் --//நாம் ஒரு கதையோ , கவிதையோ ,அல்லது கட்டுரையோ படிக்க ஆரம்பிக்கும் போது அது யார் எழுதி இருப்பது ? எழுதியவர் ஆணா இல்லை பெண்ணா என்று பார்த்து விட்டோ படிக்கிறோம் .அதில் தெரிந்தவர் என்றால் படிக்கும் ஆசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்ada!!!!!!!! //

வாங்க பிரதர் வாங்க ..!! இத்தனை ஆச்சிரியமா ஹி..ஹி..
//
ம் ம் அண்ணன் எனமோ சொல்ல வர்றார்.. ஆனா நேரடியா சொல்லாம ஏன் சுத்தி வளைக்கறார்னு தெரில.. ஹி ஹி //
அப்படியே ஒரு புனைவு எழுதலாமுன்னு நினைச்சேன் ..கண்டு பிடிச்சிட்டீங்களே கில்லாடி வாத்யாரே நீங்க :-) ((இண்ட்லி பிரச்சனை இன்னும் தீரல .இனைத்ததுக்கு நன்றி )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன்--// ம்... ம் அண்ணன் எனமோ சொல்ல வர்றார்.. ஆனா நேரடியா சொல்லாம ஏன் சுத்தி வளைக்கறார்னு தெரில.
ரசித்தேன். //

வாங்க அந்நியன் வாங்க ..!!ரெண்டுதடவை படிங்க அப்பவும் புரியாட்டி சாய்ஸ்ல விட்டுடுங்க .முக்கியமா ஒரு ஆள் இன்னும் பார்க்கல போலிருக்கு ஹி...ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

ஜெய்...என்ன இப்பிடி ஒரு சிந்தனை.எனக்குப் பின்னால யாருமில்லப்பா.உங்களுக்குப் பின்னால....!

Mohamed Faaique said...

கடைசியா நீதி`னு ஒன்னு போட்டு என்ன சொல்ல வரீங்க`னு சொல்லி இருக்கலாம்..

உங்கள் கருத்துக்கள் சரியானதே!!!

Unknown said...

பொன்னெழுத்து!

குறையொன்றுமில்லை. said...

இந்தபதிவுக்கு ஆண்கள்தான் கமெண்ட்போடனுமா
பெண்களுக்கும் அனுமதிஉண்டா? ஹி ஹி

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஆஆ... ஜெய்..ஜெய்... அதெப்பூடி நான் இல்லாத நேரமாப் பார்த்துப் பதிவைப் போட்டு, லபக்கெண்டு வடையைத்தூக்கி மகிக்குக் கொடுக்கலாம்...? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

சரி சரி டிஷ்யூ வாணாம்... அது காய்ஞ்சு போச்சூஊஊஊஊ:)), நான் கண்ணீரைச் சொன்னேன்.

சொன்னபடி எழுதிக் கலக்கிட்டீங்க... கொஞ்சம் இருங்க வாறேன்... எங்கின விட்டேன் சாமீஈஈ...:)).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஓடுற மீனில, நழுவுற மீனாக அங்கங்க நழுவினாலும்:) ஒழுங்காச் சொல்லி முடிச்சிட்டீங்க... ஒரே அலைவரிசை:))))(தேங்கியூ மாமீஈஈஈஈ(ஜெய்ட முறையில:))).

அதுசரி ஆமையாருக்கு எதுக்காம் கெல்மேஏஏஎட்டு? ஆராவது கல்ல்லுக்கில்லு எறியினமோ?:). ரொம்பவும்தான் பாதுகாப்பாகப் போறார்.

எறும்பார் என்ன ஆசனம் செய்கிறார்?:))... ஜெய் ஐப்போல:))))(கடவுளே ஒரு ஃபுளோல சொல்லிட்டேன்.. மன்னிச்சிடோணும்:))).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??//

ரொம்ப முக்கியமான சந்தேகம்தான்:)), அதுவா அது, ஒராள் தண்ணிக்குள்ள தலைகீழாக ஆசனம் செய்கிறாரெல்லோ... அவரின்ர மூச்சுக்காத்தின் எபெக்ட்டாலதான் அப்பூடி:)).

தொடரை ஏற்று எழுதி முடித்தமைக்கு மியாவும் நன்றி ஜெய்.

ஊசிக்குறிப்பு:
அடுத்த தொடரை எப்போ எழுதப்போறீங்க?.... கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

Anonymous said...

மீ 44

4+4 = 8 ராசியான நம்பர் இல்லே சோ...45 இல கமெண்ட் போடுறேன்

Anonymous said...

//பதிவுலகில் இருக்கும் பலரும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை இல்லை .நல்ல மெச்சூரிட்டியான ஆட்களே இருக்கிறார்கள்// இதுல கண்டிப்பா என்னைய சேர்க்கல ஹீ ஹீ நான் இப்போதான் கத்து குட்டி :))

//அவர்களில் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண்ணோ ,இல்லை ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னோ ஒரு ஆண் கட்டாயம் தூண்டுக்கோலாகவே இருக்காங்க // உங்களுக்கு யாரு சாரி தூண்டுகோல் ன்னு சொல்லவே இல்லே? அது ஆணா பெண்ணா ??

Anonymous said...

//ஊரில் எங்கோ நடக்கும் ஒரு குண்டூசி செய்தியை ஊதி ஊதிபெரிசாக்கி புல்டோசர் அளவு பரப்பரப்பாக கூடிய பெண்களும் இங்கே இருக்கிறார்கள்// இத யார சொல்லுறீங்க ஒரு க்ளு ப்ளீஸ்!

தேவை ) இல்லாத வார்த்தையை விட்டு விட்டுஅதுக்காக்ககுடுமிப்பிடி போடும் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள் // வெறும் பெண்களை மட்டும் சொல்லாமல் ஆண்களையும் சொன்னீங்க பாருங்க நீங்க ரொம்ப நியாயவாதி

Anonymous said...

//அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் . எழுத்திலேஆண் பெண் என்று பிரித்து பார்ப்பது வேண்டாத வேலை என்றேதோன்றுகிறது. // யெஸ் யுவர் ஆனர். ஒண்ணுக்கு ரெண்டு தடவ சொல்லி இருக்கீங்க மறுக்க முடியுமா?

//வாங்க மஹி வாங்க..!! அதாவது இந்த மேட்டரை கடைசியிலதான் போடலாமுன்னு இருந்தேன் .பொது மக்கள் நலன் கருதி நடுவிலே சேர்த்துட்டேன்// ஆகா என்னே கருணை உள்ளம் உங்களுக்கு பொது மக்கள் மேல கண்ணுல சொர்க்கம் தெரியுது ....

நட்புடன் ஜமால் said...

ஆகா! இப்படி ஒன்னு உலாவிகிட்டு இருக்கா, இம்பூட்டு நாள் தூங்கிட்டேன் போலிருக்கே

பலரும் சொல்லிட்டாங்க நான் என்ன புச்சா ஜொள்ளப்போறேன் ...

நீங்க என்னமோ சொல்லுதியன்னு விளங்குது, அது இன்னான்னு விளங்கயில்லை ...

Prabu Krishna said...

யோசிக்கவும் பின்னர் சிரிக்கவும்... நல்ல பதிவு. / முதல் வருகை.

ஜெய்லானி said...

@@@Chitra--//.......எழுத்து சுதந்திரம் எப்பொழுதும் உண்டு. ஆரோக்கியமான கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு என்று தெரியவில்லை. எப்பூடி! :-))) //

வாங்க சித்ராக்கா வாங்க ..!!ஆஹா ..சைக்கிள் கேப்பில யோசிக்க வச்சிட்டீங்களே..!!அவ்வ் போத்திகிட்டு படுத்தாலும் , படுத்துகிட்டு போத்தினாலும் எல்லாம் ஒன்னுதானே..!! ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan --//குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ???

அந்த அலையை கேட்டா சொல்லிட போகுது //

வாங்க ஆர் வி எஸ் வாங்க..!! கிரிக்கெட்டில அதெப்படி போட்ட பாலையே பிடிச்சி வச்சிகிட்டு தரமாட்டேங்கிறீங்க ..ஹா..ஹா.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//En Samaiyal said...
44

மீ 44

4+4 = 8 ராசியான நம்பர் இல்லே சோ...45 இல கமெண்ட் போடுறேன்
///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இனியும் ஆராவது ராசியான நெம்பரு பற்றிக் கதைத்தால், கால்ல கல்லுக் கட்டிப்போட்டு:), தேம்ஸ்ல தூக்கிப் போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)))).

வேலன். said...

நீங்க சொல்லவறது புரியுது. ஆனால் என்ன சொன்னீஙகனுதான புரியலை...குளத்துள கல்லுபோட்டால் வட்டவட்டமாக வரும் என்கின்றது மட்டும் புரிகின்றது...
இன்னும்ஒரு முறை படித்துபார்க்கின்றேன் புரிகின்றதா என்று பார்க்கலாம்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

மகேந்திரன் said...

ரசிக்கத்தகுந்த படைப்பு
அருமையாக இருந்தது...

http://www.ilavenirkaalam.blogspot.com/

Anonymous said...

//இனியும் ஆராவது ராசியான நெம்பரு பற்றிக் கதைத்தால், கால்ல கல்லுக் கட்டிப்போட்டு:), தேம்ஸ்ல தூக்கிப் போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)))).// ஆகா இது சிகப்பு ரோஜாக்கள் பூஸ் தான் ... கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கோணும்

மனோ சாமிநாதன் said...

தரமான பதிவு!

"அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான்"

தரமான கருத்தும்கூட!

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கலியாணவீட்டுக்கு முதேல் வாற கொஞ்சப்பேருக்கு மட்டும்தேன்ன்ன் வடை பாயாசம், ரீ எல்லாம்..... பிறகு வாறவைக்கு லெமென் யூஸ் கூட இல்லையாம்..... “அழைப்பிதழ்”(ழ்?:)) லயே போட்டிருந்தால் பறவாயில்லை.... இது தொண்டை காய்ந்து நாக்குப் புரளுதில்லயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

எம் அப்துல் காதர் said...

// அப்படியே ஒரு சந்தேகம் குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??? //

அது எந்த மாவட்டத்துல ?? :-))

ஜெய்லானி said...

@@@koodal bala -//சூடா எழுத ஆரம்பிச்சி அப்படியே கூல் பண்ணி விட்டுட்டீங்க ...நல்லாயிருந்தது ! //

வாங்க ...வாங்க..!! கொஞ்ச நாள் கேப் விட்டு எழுதபார்த்து அப்படித்தோனுதுப்போல ஹா..ஹா..இதுக்குதான் தொடரை லேட்டா ஆரம்பிச்சது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ-//யாரோ செமையா உள்குத்து வாங்குனா மாதிரி தெரியுதே, அது யாரு..??? ஹி ஹி..... //

வாய்யா வா...!! தூங்குகிற சிங்கம் அப்புரம் முழிச்சிக்கப்போகுது அவ்வ்வ்வ்

//அண்ணே உங்க ஊர்ல இப்போ ரொம்ப சூடாண்ணே...நீங்க அதை விட சூடா இருக்கீங்க...!!!//

ஊருக்கு போய்ட்டோங்கிற லொல்லுதானே இப்பிடி பேசச்சொல்லுது ...

//விடும்யா விடும்ய்யா ஹி ஹி.... // அண்ணே...!! அது நான் அவன் இல்லை ஹி..ஹி.. !!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//எழுத்து , யாரை, இது எங்கே இருந்து புகையுதுன்னு தெரியலையே? //

வாங்க ஜலீலாக்காவ் வாங்க ..!! ஆஹா...நீங்களும் நம்பிட்டீங்களா..!! ஹய்யோ...ஹய்யோ...!!

////படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!//

டயலாக மாற்றியாச்சா? //

பயத்துல சிலப்பேருக்கு ராத்திரியில சரியா கண்ணு தெரியலயாம் ...!!இருட்டுல கண்ணு நல்லா தெரியறவங்க அதை மாத்திட்டாங்க ஹி...ஹி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//பாடறியன் படிப்பறியேன் இந்த பதிவின் எழுத்துவகை நானறியேன்.. //

வாங்க ஐயா வாங்க ..!!ரொம்ப நாளா இந்த ஏரியா பக்கமே கானோமே..!! நலமா? பழையப்படி அதே உற்சாகத்தோட வாங்க .எதிர்பார்க்கிறோம் :-)

அப்ப கொஞ்சம் பார்டர் மார்க்காவது போடுங்க :-)..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி--//கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம்//

எதோ ஜெய்லானி சொல்லவர்றார் எல்லோரும் சீரியஸா கேளுங்கப்பா....//

வாங்க வாங்க..!! அது ஒன்னுமில்லை பிரதர் இங்கே இப்போ வெய்யில் அதிகம் அதுதான் இப்பிடி ஹி..ஹி..

//பதிவு கொஞ்சம் சீரியஸா ஆன மாதிரி தெரியுது//

அப்படியா?.. நீங்க சொன்ன சரியாதான் இருக்கும்.. :)))))))))) //

ஆஹா.. அப்போ அங்கேயும் வெய்யில் வாட்டி வதைக்குதா ஹா..ஹா.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நல்ல தரமான பதிவு.வாழ்த்துக்கள்.இரண்டு ஜோக்குகளுமே சிரிக்க வைத்தன்.அதிலும் முதலாம் ஜோக் உங்களுக்கே உரித்தான் ஜோக்.வாழ்த்துக்கள்! //

வாங்க ஸாதிகாக்கா வாங்க..!! நீங்க இந்த பாயிண்டைதான் பிடிப்பீங்கன்னு நினைச்சேன் .அதையே சொல்லிட்டீங்க ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி--// படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), //

சிறப்பான எழுத்துக்குப் பாராட்டுக்கள். //

வாங்க ..வாங்க..!! உங்களுக்கு கண்டிப்பா சொர்க்கம் தெரியும் .அதுக்காக தூங்காம இருந்துடாதீங்க :-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்...என்ன இப்பிடி ஒரு சிந்தனை.எனக்குப் பின்னால யாருமில்லப்பா. உங்களுக்குப் பின்னால....! //


வாங்க குழந்தை நிலா வாங்க ..!!. எனக்கு பின்னால் என் முதுகுதான் இருக்கு ஹி...ஹி.. :-). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --//கடைசியா நீதி`னு ஒன்னு போட்டு என்ன சொல்ல வரீங்க`னு சொல்லி இருக்கலாம்.. //


வாங்க ..வாங்க..!! அதான் கீழே ரெண்டு ஜோக் போட்டிருக்கேனே கவனிக்கலையா..ஹா..ஹா.. :-))

// உங்கள் கருத்துக்கள் சரியானதே!!! //

ஆஹா... புரியாம தலை யாட்டிட்டீங்களே..!! புத்திசாலி நீங்க :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//பொன்னெழுத்து! //

வாங்க கவிஞரே வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--//இந்தபதிவுக்கு ஆண்கள்தான் கமெண்ட்போடனுமா பெண்களுக்கும் அனுமதிஉண்டா? ஹி ஹி //

வாங்க ..வாங்க..!! என்ன இந்த மாதிரி சொல்லிட்டீங்க...!!.மனசுல தோனும் எதையும் இங்கே சொல்லலாம் .:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஆஆ... ஜெய்..ஜெய்... அதெப்பூடி நான் இல்லாத நேரமாப் பார்த்துப் பதிவைப் போட்டு, லபக்கெண்டு வடையைத்தூக்கி மகிக்குக் கொடுக்கலாம்...? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). //

வாங்க ...வாங்க..!! கர்ர்ர்ர்ர்ர்ர்....நீங்க ”அங்கே” பிஸியா கமெண்டு போட்டுகிட்டு இருக்கும் போது கவனிக்கல ..சைக்கிள் கேப்பில மஹி பிடிச்சுட்டாங்க :-)

// சரி சரி டிஷ்யூ வாணாம்... அது காய்ஞ்சு போச்சூஊஊஊஊ:)), நான் கண்ணீரைச் சொன்னேன்.//

அடுத்த தடவை நீங்களும் சொல்லிடுங்க .இந்த நெம்பர்தான் எனக்கும் ராசியான நெம்பர்ன்னு ஹி.ஹி.. எப்படி ஐடியா ..!!

//சொன்னபடி எழுதிக் கலக்கிட்டீங்க... கொஞ்சம் இருங்க வாறேன்... எங்கின விட்டேன் சாமீஈஈ...:)). // அடுத்த தொடருக்கு ரெடியா ன்னு கேட்பதுப்போல தெரியுதே அவ்வ்வ்வ்வ்

//ஓடுற மீனில, நழுவுற மீனாக அங்கங்க நழுவினாலும்:) ஒழுங்காச் சொல்லி முடிச்சிட்டீங்க... ஒரே அலைவரிசை:))))(தேங்கியூ மாமீஈஈஈஈ(ஜெய்ட முறையில:))). //

ஹா..ஹா... :-)))

//அதுசரி ஆமையாருக்கு எதுக்காம் கெல்மேஏஏஎட்டு? ஆராவது கல்ல்லுக்கில்லு எறியினமோ?:). ரொம்பவும்தான் பாதுகாப்பாகப் போறார். //

ஸைடுல விளம்பரம் பார்க்கைலையா..ஹி...ஹி..யாரையும் நம்ப முடியல அதான் :-))

//எறும்பார் என்ன ஆசனம் செய்கிறார்?:))... ஜெய் ஐப்போல:))))(கடவுளே ஒரு ஃபுளோல சொல்லிட்டேன்.. மன்னிச்சிடோணும்:)))...

ஹா..ஹா.. பாடி பில்டிங்..சுகமான சுமையாம் கேட்டால் யாருக்கும் தரமாட்டாராம் :-))
////குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??//

ரொம்ப முக்கியமான சந்தேகம்தான்:)), அதுவா அது, ஒராள் தண்ணிக்குள்ள தலைகீழாக ஆசனம் செய்கிறாரெல்லோ... அவரின்ர மூச்சுக்காத்தின் எபெக்ட்டாலதான் அப்பூடி:)). //

ஆஹா...கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கோனும் போலிருக்கு .இல்லாட்டா கல்லை கட்டி தள்ளி விட்டுடுவாங்க ப்போலிருக்கு அவ்வ்வ்வ்

//தொடரை ஏற்று எழுதி முடித்தமைக்கு மியாவும் நன்றி ஜெய். //

வந்ததும் எழுதலாமுன்னு இருந்தேன் . ஆனா “நேரம் இல்லாத “ காரணத்தால முடியல ஹி...ஹி..

//ஊசிக்குறிப்பு:
அடுத்த தொடரை எப்போ எழுதப்போறீங்க?.... கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))). //நீங்க கூப்பிட்டது இது ஒன்னுதானே ..இல்ல வேற இருக்கோ ..??? !!!! அவ்வ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@En Samaiyal--//மீ44

4+4 = 8 ராசியான நம்பர் இல்லே சோ...45 இல கமெண்ட் போடுறேன் //

வாங்க..வாங்க..!! இந்த நெம்பரோட இன்னும் சில சைபர் சேர்த்து ரூ,டாலர்,யூரோ நோட்டுக்கள் கிடைத்தால் வாங்க மாட்டீங்களா..? :-))
////பதிவுலகில் இருக்கும் பலரும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை இல்லை .நல்ல மெச்சூரிட்டியான ஆட்களே இருக்கிறார்கள்// இதுல கண்டிப்பா என்னைய சேர்க்கல ஹீ ஹீ நான் இப்போதான் கத்து குட்டி :)) //

இதுக்கு பதில் சொல்ல இன்னும் அந்த ரெண்டு பேரையும் கூப்பிடுகிறேன் அவங்களே சொல்லுவாங்க ஹி..ஹி.. :-))

//
//அவர்களில் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண்ணோ ,இல்லை ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னோ ஒரு ஆண் கட்டாயம் தூண்டுக்கோலாகவே இருக்காங்க // உங்களுக்கு யாரு சாரி தூண்டுகோல் ன்னு சொல்லவே இல்லே? அது ஆணா பெண்ணா ?? // ஹை..அஸ்கு ..புஸ்கு.இப்பிடி கேட்டா நான் சொல்லிடுவேனாக்கும் :-))

////ஊரில் எங்கோ நடக்கும் ஒரு குண்டூசி செய்தியை ஊதி ஊதிபெரிசாக்கி புல்டோசர் அளவு பரப்பரப்பாக கூடிய பெண்களும் இங்கே இருக்கிறார்கள்// இத யார சொல்லுறீங்க ஒரு க்ளு ப்ளீஸ்!//

ஏனுங்க ..நான் நல்லா இருப்பது பிடிக்கலையா... ஏன் இந்த கொல வெறி .? :-))
//தேவை ) இல்லாத வார்த்தையை விட்டு விட்டுஅதுக்காக்ககுடுமிப்பிடி போடும் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள் // வெறும் பெண்களை மட்டும் சொல்லாமல் ஆண்களையும் சொன்னீங்க பாருங்க நீங்க ரொம்ப நியாயவாதி //

ஐ...இந்த வெயிலுக்கு சூடா ,ஜில்லுன்னு ஒரு இளநீர் குடிச்ச மாதிரி இருக்கு ஹி..ஹி.. தேன்யூஊஊஊஊ...

////அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் . எழுத்திலேஆண் பெண் என்று பிரித்து பார்ப்பது வேண்டாத வேலை என்றேதோன்றுகிறது. // யெஸ் யுவர் ஆனர். ஒண்ணுக்கு ரெண்டு தடவ சொல்லி இருக்கீங்க மறுக்க முடியுமா? //
அது சரி வந்துட்டீங்க ..!! என்ன குடிக்கிறீங்க..? பாம்பு ரத்தத்துல செஞ்ச புட்டு இருக்கு வேணுமா ? .இல்ல நம்ம ஸ்பெஷல் லெமன் ஜுஸ் இருக்கு குடிக்கிறீங்களா :-))
// //வாங்க மஹி வாங்க..!! அதாவது இந்த மேட்டரை கடைசியிலதான் போடலாமுன்னு இருந்தேன் .பொது மக்கள் நலன் கருதி நடுவிலே சேர்த்துட்டேன்// ஆகா என்னே கருணை உள்ளம் உங்களுக்கு பொது மக்கள் மேல கண்ணுல சொர்க்கம் தெரியுது ..//
நானும் ரொம்ப நல்ல பையன் 2 வயசிலிருந்தே ஹி..ஹி... )சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க அவ்வ்வ்)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நட்புடன் ஜமால்--//ஆகா! இப்படி ஒன்னு உலாவிகிட்டு இருக்கா, இம்பூட்டு நாள் தூங்கிட்டேன் போலிருக்கே //

வாங்க ...வாங்க..!! இது ஒரு 5 மாசமா ஓடிகிட்டு இருக்கே :-))

//பலரும் சொல்லிட்டாங்க நான் என்ன புச்சா ஜொள்ளப்போறேன் ...

நீங்க என்னமோ சொல்லுதியன்னு விளங்குது, அது இன்னான்னு விளங்கயில்லை . //

அது விளங்கிட்டாதான் தொல்லை ஹா..ஹா.. ..:-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பலே பிரபு --//யோசிக்கவும் பின்னர் சிரிக்கவும்... நல்ல பதிவு. / முதல் வருகை.//

வாங்க ..வாங்க..!! சந்தோஷம் .அடிக்கடி வாங்க ..மனதில் எது தோனுதோ அதை தைரியமா சொல்லிட்டுப்போங்க .உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira -- //En Samaiyal said...
44

மீ 44

4+4 = 8 ராசியான நம்பர் இல்லே சோ...45 இல கமெண்ட் போடுறேன்
///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இனியும் ஆராவது ராசியான நெம்பரு பற்றிக் கதைத்தால், கால்ல கல்லுக் கட்டிப்போட்டு:), தேம்ஸ்ல தூக்கிப் போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)))).//

வாங்க..வாங்க..!! இப்ப தேம்ஸில தண்ணீர் இருக்கா..? இல்ல சின்னதா ஒரு சந்தேகம் அவ்வளவுதான் கல்லை கட்டிப்போடுவதுக்கு பதில் ”ஸ்டஃப் இட்லி “ ஒண்னு குடுத்துப்பாருங்க .ஹி...ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.--// நீங்க சொல்லவறது புரியுது. ஆனால் என்ன சொன்னீஙகனுதான புரியலை...குளத்துள கல்லுபோட்டால் வட்டவட்டமாக வரும் என்கின்றது மட்டும் புரிகின்றது... //

வாங்க ..வாங்க.!! ஆஹா..எனனியே குழப்பிட்டீங்களே...!! எந்த வடிவப்பொருளாளானாலும் ஆற்றிலோ அல்லது குளத்திலோ போட்டால் அதில் வரும் அலைகள் மட்டும் வட்டவடிவமாகவே இருக்குதேன்னுதான் . வேறு டிஸைனில் வருவதில்லை.இதுதாங்க என்னோட கவலை ஹி..ஹி..
// இன்னும்ஒரு முறை படித்துபார்க்கின்றேன் புரிகின்றதா என்று பார்க்கலாம்...
வாழ்க வளமுடன்.
வேலன். //

புரியாட்டி விட்டுடுங்க...ரொமபவும் குழம்பினால் எனக்கும் சேர்த்து வீட்டம்மா சாபம் குடுத்திடப்போறாங்க ஹி...ஹி... :-))). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகேந்திரன்--// ரசிக்கத்தகுந்த படைப்பு
அருமையாக இருந்தது...

http://www.ilavenirkaalam.blogspot.com/ //

வாங்க...வாங்க..!!சந்தோஷம் .அங்கும் கூடிய விரைவில் வருகிறேன் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@En Samaiyal--//இனியும் ஆராவது ராசியான நெம்பரு பற்றிக் கதைத்தால், கால்ல கல்லுக் கட்டிப்போட்டு:), தேம்ஸ்ல தூக்கிப் போட்டிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)))).// ஆகா இது சிகப்பு ரோஜாக்கள் பூஸ் தான் ... கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கோணும் //

வாங்க..வாங்க..!! இல்லையாமே கேட்டால் 6 வயசிலிருந்தே நல்லவங்களாம் :-))எனக்கு இப்பவே கை கால் உதறுதே...அவ்வ்வ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--// தரமான பதிவு!

"அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான்"

தரமான கருத்தும்கூட! //

வாங்க ..வாங்க..!! உங்களுக்கே உரிய வகையில பாராட்டு , சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கலியாணவீட்டுக்கு முதேல் வாற கொஞ்சப்பேருக்கு மட்டும்தேன்ன்ன் வடை பாயாசம், ரீ எல்லாம்..... பிறகு வாறவைக்கு லெமென் யூஸ் கூட இல்லையாம்..... “அழைப்பிதழ்”(ழ்?:)) லயே போட்டிருந்தால் பறவாயில்லை.... இது தொண்டை காய்ந்து நாக்குப் புரளுதில்லயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//

வாங்க...வாங்க..!! அது ஒன்னுமிலீங்க..கொஞ்சம் சோம்பல் அதான் ஆனி பிடுங்கல்ன்னு பொய் சொல்ல விரும்பல ஹி...ஹி.. சொல்லிட்டீங்கல்ல இனி மேல் வாசலிலேயே ஒரு அண்டா நிறைய கொசு ரத்தம் (( விம் டோ )) வச்சிடுறேன் ஹா..ஹா..:-)) உங்கள் வருகௌக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--// அப்படியே ஒரு சந்தேகம் குளத்துல எந்த வகையான (நீளம் அகலம் )பொருட்களை போட்டாலும் அலை மட்டும் வட்டவட்டமா வருதே அது ஏன் ??? //

அது எந்த மாவட்டத்துல ?? :-)) //

வாங்க பாஸ் வாங்க..!! நல்ல வேளை யார் வீட்டு குளம் ,கிணறுன்னு கேட்காம விட்டீங்களே அது வரையில் சந்தோஷம் தான் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))