Saturday, August 20, 2011

ஒரு ............டைரி....!!!-----2


டிஸ்கி :ஒரு......யின் டைரி தொடர்ச்சி இரெண்டாம் பாகம் ஆரம்பிக்குது. இது இன்னும்  தொடரும் போலிருக்குது . இனி யாரும் தொடருக்கு என்னை கூப்பிடுவீங்க..??? (யாரோ புலம்புவது கேட்குது )) ஹி...ஹி..  
                                             மார்ச்  2010
      எங்கள் கூட வேலை செய்யும்  பெங்காலி (பங்ளாதேஷி ) ஒரு மாதிரியான டைப் . எது கேட்டாலும் அவனிடம் எப்போதுமே  சரியான பதில் சொல்லமாட்டான் .ராங்கான பதிலே வரும் புதிதாக  கேட்பவருக்கு சில நேரம் கோவமே வந்துடும் . ( நமக்கு  பழகி போயிடுச்சி ) . அன்றிலிருந்து  2 மாதம் லீவு ஊருக்கு  கிளம்பிகிட்டு இருந்தான் . சரி போய் பார்த்து விட்டு வரலாமுன்னு கேம்பிறகு போனால் இரவு 10 மணி ஃபிளைட்டிற்கு  8 மணி வரை ரூமிலேயே இருந்தான் .கேட்டதுக்கு இன்னும் தம்பி  கார் கொண்டு வரலை அதுக்காக வெயிட்டிங்னு சொல்லிட்டான் . துபாய் , ஷார்ஜா டிராஃபிக் சமாளித்து போகவே சில சமயம் 3 மணி நேரம்  பிடிக்கும் .கடைசியில் இவன் தம்பி வந்து ஏர் போர்ட் போனபோது மணி 11 ஆகி ஃபிளைட் மிஸ்ஸிங்  .திரும்ப வந்து விட்டான்
   மறு நாள் என்னையும் ஏர்போட்  போக கூப்பிட்டான். நான் கராராக சொல்லிவிட்டேன் . மாலை 6 மணி ஃபிளைட்டிற்கு இங்கிருந்து மதியம் 2.30க்கு கிளம்பினால் சரியாக இருக்கும் அப்படி என்றால் வருகிறேன் . அவனும் ஓக்கே சொல்லிட்டான் .
    அடுத்த நாள் பாஸ்போர்ட் ரெடியா , டிக்கெட் ரெடியான்னு சொல்லி விட்டு  கூடவே கிளம்பினேன் . மதிய நேரம் அவ்வளவா டிராஃபிக் இல்லை .ஒரு வழியா 4 மணிக்கு துபாய் ஏர்போர்ட்  போய் விட்டோம் . லக்கேஜ் ஸ்கேனிங்  போட்டதும் என்னை போக சொல்லிவிட நான் அங்கேயே இருந்தேன் . பயபுள்ள உள்ளே போன கால் மணி நேரத்திலேயே  திரும்ப வந்தான் என்னடா ஆச்சின்னு கேட்டதுக்கு சொல்றான் பாருங்க .ஜெய்லானி ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . அதுக்கும் நீ திரும்ப வந்த்துக்கும் என்ன  சம்பந்தமுன்னு கேட்டேன் .
   அதுக்கு அவன் சொல்றான் .நாசமா போச்சி  நான் போக வேண்டிய ஃபிளைட் ஷார்ஜா ஏர்போர்ட் , ஆனா நாம வந்தது  துபாய் ஏர்போர்ட்டுக்குன்னு கூலா சொல்றான் . பெங்காலி பயபுள்ள ஃபிரென்ஷிப் வேண்டாமுன்னு சொன்னாலும் நான் கேட்டாதானே..!!

                      ஏப்ரல்  2010
       டியூட்டி நேரங்களில் டைம்பாஸ் செய்ய பக்கத்துல இருக்கிற ஹோட்டல்தான்  வசதி .நொறுக்கு தீனிகளோட நேரம் போவது தெரியாம்ல் கலாய்த்து கொண்டிருப்போம் . ஒரு நாள் கூட வந்த நாலு பேருமே டீ சரியில்லைன்னு  சொல்லிகிட்டு இருந்தானுங்க . நான் லைட் டீ ( பால் இல்லாம )  மட்டுமே குடிப்பது வழக்கம். மத்தவங்க ஸ்டிராங் (  வீட்டில் குடிப்பது போல தேயிலை நன்றாக கொதிக்க வைத்தது )  குடிப்பதால் , ஒரு வேளை தேயிலை தூள் புதியதான்னு  கேட்டுகிட்டும் , இன்னும் சில பேர் ஒரு வேளை பால் புது டைப்பாக இருக்குமோ , இல்லை சர்க்கரை (சீனி ) சரியில்லையோன்னு  ஆளாளுக்கு அப்செடாக இருந்தார்கள்.
    வரப்போகிற எல்லாருமே  லேசாக முகம் சுளிப்பதை பார்த்து விட்டு ஹோட்டல் மலையாளியிடம் கேட்டேன் . ஏண்டா என்ன ஆச்சி எதுவும் ராங் ஐட்டம் போட்டுட்டியா..? இல்லை எதுவும் பழைய சரக்கா..? பழைய டேஸ்ட் இல்லைன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன் .
     அது ஒன்னுமில்ல  ஜெய்லானி .எல்லாமே அதே குவாலிட்டி சாதனம்தான் . இந்த டீ கெட்டிலை உள்ளே சுத்தம் செய்து கிட்டதட்ட  ரெண்டு மாசம் ஆகிரதேன்னு நாந்தான் இன்னைக்கி காலையில  நல்லா கிளீன் செய்தேன் . ஒரு வேளை அதுதான்னு நினைக்கிறேன்னு சொன்னான் பாருங்க .
      எனக்கு தல சுற்றியதுல ஒரு செகண்ட் நான் பூமியிலதான் இருக்கிறேனோன்னு சந்தேகமே வந்துட்டுது.
                  மே 2010


      மாலை நேரம் பக்கத்துல இருக்கும் காஃபிடீரியாவில்ஒரு காக்டெயிலும் (நம்புங்க ஜுஸ்தான் ), பர்கருமாக கூடவே நிறைய ஃபிரெஞ்ச் ஃபிரையை  வைத்துகிட்டு  எதை முதலில்  ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது .ஒரு பெங்காலி உள்ளே வந்தான் . எனக்கு எதிரில் உள்ள சீட்டில் உட்கார்ந்துகிட்டு  ஷ்வர்மா  ஆர்டர் செய்தான் .
    ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள்தான் ஆகிறதாம் .இந்த நாட்டிற்கு புதுசாம் . பரஸ்பரம் நலம் விசாரிச்சி கிட்டு இருக்கும் போதே அவன் கேட்ட சிக்கன் ஷ்வர்மா வந்தது. நான் கடை ஆளிடம் பேசிகிட்டு திரும்பி பார்ப்பதுக்குள்  முழுதும் சாப்பிட்டு விட்டான் .நன்றாக இருந்த்து போல இன்னொன்னு கேட்டான்
  ””பாய் சாப் ஷ்வர்மா பஹுத் அச்சா ஹை , அவுர் ஏக் தியோ மகர் பேப்பர் தோடா கம் ரக்கோ”” அப்படின்னு சொன்னான் .((சகோ  ஷவர்மா  ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான் ))  பாருங்க .. அடப்பாவி ஷ்வர்மாவுல சுத்தி இருக்கிற பேப்பரை பிரிச்சி போட்டுட்டு சாப்பிடனுமுன்னு கூட  தெரியலப் போலிருக்கு. அவ்வ்வ்வ் .
                    ஜுன் 2010


       ஒரு பொன் மாலைப்பொழுதில்  பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது ஒரு ஆள் என் பக்கம் வந்து நலம் விசாரிச்சார் .((எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறானுங்களோ தெரியலை)) நானும் சின்னதா ஒரு புன்னகை செய்தேன் .
    அவர் ஒரு கைரேகை ஜோசியராம் (( இந்த ஊருல கிளியை வச்சி செஞ்சா நேரே  ஜெயில்தான் )) .ராசியை பத்தி பேசிகிட்டு இருந்தார் .நமக்கு ராசி நல்லா இருந்தா ஏன் வெளிநாட்டுக்கு வரோம் ஹி..ஹி...அவருக்கு கையை பார்த்தாலே  கடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் எல்லாமே தெரியுமாம் .நானும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டி வைத்தேன்  நமக்கும் நேரம் போகனுமில்ல ஹா..ஹா.
   கடந்தகாலம்தான் தெரியுமே அதுக்கு ரீவியூ எதுக்கு . நிகழ்காலம் இங்கே கொஞ்சம் வெயில் ஒன்னும் சொல்றதுக்கில்ல . எதிர்காலம் தெரிஞ்சா டேஞ்சர் . அதில் ஒரு திரில் , சுவாரஸ்யம் இருக்காது .ஆக மொத்தம் எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது .. முழு எதிர்காலமே சொல்கிறேன் . 30 Dhs கொடுங்கன்னு  கேட்டார்.
     நான் சொன்னேன் ஓக்கே நான் 100 Dhs தருகிறேன் .எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னு . அவரும் ஆர்வமாக சொல்லுங்கன்னார் . கேள்வி இதுதான் . நான் உங்களூக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்கி தரும் அடுத்த வேளை என்ன சாப்பிடுவீங்கன்னு சரியா சொன்னா அதோடு இந்த 100 Dhs  உங்களுக்கேன்னு சொன்னேன் .
     அவர் முகத்துல ஈ ஆடவில்லை . அமைதியாக இருந்தவர் .மெதுவாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் . எங்கிட்டேயேவா...?..!!

டிஸ்கி நெ 2 : இது வரை பொருமையாக படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் . இந்த தொடரை இன்னும் தொடரனுமான்னு நீங்கதான் சொல்லனும் :-)

66 என்ன சொல்றாங்ன்னா ...:

ப.கந்தசாமி said...

எனக்கு சொர்க்கம் வேண்டாம். இந்த தொடர் பதிவ கண்டுபிடிச்சவன் யாரு???

ஆமினா said...

//ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . //

:)

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

மகேந்திரன் said...

சரியான கேள்வி கேட்டீங்க?
அவர் எப்படி பதில் சொல்ல முடியும்...
தொடருங்கள் நண்பரே
பதிவு நல்லா இருக்குது.

ஆர்வா said...

டீ கெட்டில் மேட்டரை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்... ஹா.. ஹா..

குறையொன்றுமில்லை. said...

ஐயோ, உங்க டைரி ரொம்ப நகைச்சுவை ததும்ப
சொல்ரீங்க. தொடருங்க.காத்துக்கிட்டே இருப்போம்ல.

Jaleela Kamal said...

ஹா ஹா ஏர்போர்ட் மாறி போனது ஒரு வேலை நீங்க போறதா நிஅனித்து அவர ஜார்ஜாவுக்கு பதில் துபாய் ஏர்போட் கூப்பிட்டு போயிட்டீங்களோ?

Jaleela Kamal said...

பங்களாங்க பாஷைய ஹிந்தியா இருந்தாலும் அவங்க பேசினா நாமா யோசித்து தான் புரிஞ்சிக்கனும்


பங்காளி :மேடம் கல் மைம் ரூசல்கீமா கியா தா

நான்: கியா, கியா

நான்: யோசனை ம்ம் ஓஒ ராசல் கைமா , டிக்கே டிக்கே..

Jaleela Kamal said...

ஷவர்மாவ பேப்பரோட சாப்பிடும் வரை செந்தில் கவுண்ட மனிய பல்லி விழுந்த டீ ய குடிக்கும் வரை பார்த்து விட்டு குடித்தபிறகு சொல்வாரே, அது போல பார்த்து கொண்டு இருந்தீங்களா?

ஏன் சொல்லப்ப்டாதா?

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதிரா நித்திரையானபின்பு பதிவு போடப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வட, கெபாப் எல்லாம் போச்சே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

இது மணியோசைதான் ..:)) நான் பின்பு வருவேன்...:)).

சாந்தி மாரியப்பன் said...

//சகோ ஷவர்மா ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான்//

நம்மூரு பேப்பர் ரோஸ்டு மாதிரி இது இந்த ஊரு பேப்பர் ஷவர்மான்னு சொல்லியிருக்கலாமில்ல :-)))

ஜூப்பர் ஜோசியம். லகே ரஹோ முன்னா பாய் படத்தோட க்ளைமாக்ஸ் ஞாபகம் வருது :-))

Mohamed Faaique said...

பங்காளி... அவன் எங்க போனாலும் பிரவிக் குணம் மாறாது போலிருக்கு...

அது paper'aa?? pepper?

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD --//எனக்கு சொர்க்கம் வேண்டாம். இந்த தொடர் பதிவ கண்டுபிடிச்சவன் யாரு??? //

வாங்க ஐயா வாங்க..!!நானும் இதை நினைச்சிதான் அடிக்கடி குழம்புவதுண்டு.. இருந்தாலும் வித்தியாசமா வரும் போது சந்தோஷப்படுவதுண்டு :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா --//ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . //

:) //

வாங்க சகோஸ் வாங்க..!! இதை வைத்து இன்னும் அவனை நாங்கள் கிண்டல் செய்து வருகிரோம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Rathnavel --//
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html //

வாங்க..வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகேந்திரன்--//
சரியான கேள்வி கேட்டீங்க?
அவர் எப்படி பதில் சொல்ல முடியும்...
தொடருங்கள் நண்பரே
பதிவு நல்லா இருக்குது. //

வாங்க..வாங்க...!! எதிர்கால நினைவில் நடக்கு காலத்தை நாம் மறந்து விடுட்டு கவலை கொள்கிறோம் .அதுதான் அவர்களுக்கு வசதியாக போகிறது :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கவிதை காதலன் --//டீ கெட்டில் மேட்டரை படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்... ஹா.. ஹா.. //

வாங்க வாங்க..!! இப்படித்தான் ருசிக்காக நிறைப்பேர் ஏமாந்து போறாங்க . அவ்வ்வ்வ்வ் .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi --//ஐயோ, உங்க டைரி ரொம்ப நகைச்சுவை ததும்ப சொல்ரீங்க. தொடருங்க. காத்துக்கிட்டே இருப்போம்ல. //

வாங்க..வாங்க..!! இங்கே வந்ததில் நிறைய வெளிநாட்டவர்களின் பழக்க வழக்கம் கிடைக்கிறது .அதுதான் இது :-). உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--// ஹா ஹா ஏர்போர்ட் மாறி போனது ஒரு வேலை நீங்க போறதா நிஅனித்து அவர ஜார்ஜாவுக்கு பதில் துபாய் ஏர்போட் கூப்பிட்டு போயிட்டீங்களோ? //

வாங்க ஜலிலாக்கா வாங்க ..!! முதல் நாள் போனானே அப்பவும் அவன் பார்க்கல ..நானும் துபாய் ஏர்போர்ட்டுன்னு நினைச்சிதான் கூட்டிகிட்டு போனேன் . பயபுள்ள பாஸ்போர்ட் , டிக்கெட்டையே கண்னுல காட்டல :-)

//பங்களாங்க பாஷைய ஹிந்தியா இருந்தாலும் அவங்க பேசினா நாமா யோசித்து தான் புரிஞ்சிக்கனும்
பங்காளி :மேடம் கல் மைம் ரூசல்கீமா கியா தா

நான்: கியா, கியா
நான்: யோசனை ம்ம் ஓஒ ராசல் கைமா , டிக்கே டிக்கே..//

நான் இங்கு வந்த புதுசுல எனக்கு ஹெல்பர் பெங்காலி தான் . கிட்ட தட்ட ஒரு வருஷம் ..என்ன சொன்னாலும் அவனுங்க பாஷை திருந்த வே திருந்தாது :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//ஷவர்மாவ பேப்பரோட சாப்பிடும் வரை செந்தில் கவுண்ட மனிய பல்லி விழுந்த டீ ய குடிக்கும் வரை பார்த்து விட்டு குடித்தபிறகு சொல்வாரே, அது போல பார்த்து கொண்டு இருந்தீங்களா?

ஏன் சொல்லப்ப்டாதா? //

நான் சரியா கவனிக்கல திரும்பி கடை ஓனரிடம் பேசிகிட்டு இருந்தேன் .அதுக்குள்ள சாப்பிட்டுட்டான் திரும்பி பார்த்தால் தட்டுல பேப்பரையே கானோம் ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதிரா நித்திரையானபின்பு பதிவு போடப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வட, கெபாப் எல்லாம் போச்சே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//


வாங்க அதிஸ் வாங்க ...!! நான் பதிவு போடும் போது உங்கட ஊர் டைம் இரவு 10 மணி அதுக்குள்ளே நித்திரையா டூ பேட் :-))

// இது மணியோசைதான் ..:)) நான் பின்பு வருவேன்...:)).//

பொருமையா வாங்க :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//சகோ ஷவர்மா ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான்//

நம்மூரு பேப்பர் ரோஸ்டு மாதிரி இது இந்த ஊரு பேப்பர் ஷவர்மான்னு சொல்லியிருக்கலாமில்ல :-))) //

வாங்க சாரலக்கா வாங்க...!! என்னத்த சொல்ல கழுதை பேப்பரை சாப்பிடுவது போல சாப்பிட்டான் . அதை பிரிக்க தெரியலையா..? இல்லை மாடலே இப்படித்தான்னு நினைச்சிட்டானோ என்னவோ ஹி..ஹி..

//ஜூப்பர் ஜோசியம். லகே ரஹோ முன்னா பாய் படத்தோட க்ளைமாக்ஸ் ஞாபகம் வருது :-)) //


ஆஹா....படம் பார்த்த நினைவு வரலையே இன்னைக்கே பார்த்திடுறேன் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique-// பங்காளி... அவன் எங்க போனாலும் பிரவிக் குணம் மாறாது போலிருக்கு...//

வாங்க பாஸ் வாங்க..!! சரியா சொன்னீங்க ..இது பிரவி குணம்தான் போலிருக்கு :-)

//அது paper'aa?? pepper? //
சந்தேகமே இல்லை வெள்ளைகலர் சான்ட்விச் பேப்பர்தான் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

தொடர்பதிவு எழுதச் சொன்னா என்னைய்யா இது சுயசரிதமே எழுதுறீங்க! ஒருவேளை கல்யாணம் முடிந்தப்ப உள்ள நிகழ்வுகளை (உங்க எழுத்து நடையில்)எழுதினா இன்னும் சுவாரஸ்யம் கூடினமோ ????? அப்ப எழுதுங்களேன் அதையும் தான் பார்ப்போம்!! அவ்வ்வ்வவ்...

// இது மணியோசைதான் ..:)) நான் பின்பு வருவேன்...:)). // ஆமா, இது ஓபனிங் தான் இனிமே தான் கிளைமாக்ஸ். நோம்பு தொறந்துட்டு வருவேனாம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்ல, விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... (பறந்திட்டேனாம்!!)

ஸாதிகா said...

ஜெய்லானி.உங்களுக்கென்றே கிடைக்குதே இப்படி பட்ட மேட்டர்...ஹா..ஹா..ஹா..

ஷவர்மாவை பேப்பருடன் சாப்பிட்ட பெங்காலியை நினைக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை.பேப்பர் சுற்றப்படாமல் பிளேட்டிலேயே வைத்து தரும் சஹன் சவர்மாவை(sahan shawarma)வாங்கினால் அப்படியே பிளேட்டுடன் கபளீகரம் பண்ணிடுவாரா அந்த பெங்காலி?

மாய உலகம் said...

ஷவர்மாவை பேப்பருடன் சாப்பிட்ட பெங்காலியை நினைக்கும் பொழுது சிரிப்பு வரவில்லை...சேம் ப்ளட் தான் ஞாபகத்திற்கு வந்தது... முத முதல்ல ஒரு ஸ்டார் ஹோட்டல் போனபோது பால் தனியா டீ தூள் தனியா கப்புல வச்சு கொடுத்தாங்க.. எனக்கு எப்பவுமே டீயா டைரக்க்டா குடிச்சு தான் பழக்கம் இது நடைமுறைக்கு வந்தப்ப எனக்கு தெரியல நான் என்ன செய்வேன் பாவம், யாரங்கே உச்சு கொட்றது...நான் இதுவும் பஃபே சிஸ்டம் போல என நினைத்து டீ தூளப்பிரிச்சு பால்ல கொட்னது பாத்து பக்கத்து டேபிள்ள ரீ குடிச்சுட்டுருந்த ஃபிகரு குபீர்ன்னு சிரிச்சுடுச்சு.. எனக்கு அப்பறந்தான் தெரிஞ்சுது நூல் கட்டியிருந்த டீத்தூள முக்கி எடுக்குனும்னு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அசடு வழிந்தவாறே வெளியே வந்துவிட்டேன் ஹி ஹி

மாய உலகம் said...

:ஒரு......யின் டைரி // அந்த டேஸ் என்னன்னு சொல்லுங்க.. அந்த டேஸ் ஆஅரூஊஊஉ

மாய உலகம் said...

அதுக்கு அவன் சொல்றான் .நாசமா போச்சி நான் போக வேண்டிய ஃபிளைட் ஷார்ஜா ஏர்போர்ட் , ஆனா நாம வந்தது துபாய் ஏர்போர்ட்டுக்குன்னு கூலா சொல்றான் .//

துபாயில எந்த ஏர்போர்ட்டுன்னு கேக்கனுமுள்ள... நான் கேக்கறன் பாருங்க... துபாயில எந்த ஏர்போர்ட்ட்டூஊஊ அபிதாபியாஆஆஆ, பெக்ரைனா , ஷார்ஜாவா...துபாயில எந்த ஏர்போர்ட்டுன்னு கேக்கறேன்... துபாய் ஏர்போர்ட் ...அவ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

டீ கெட்டிலை உள்ளே சுத்தம் செய்து கிட்டதட்ட ரெண்டு மாசம் ஆகிரதேன்னு நாந்தான் இன்னைக்கி காலையில நல்லா கிளீன் செய்தேன் . ஒரு வேளை அதுதான்னு நினைக்கிறேன்னு சொன்னான் பாருங்க .//

பயபுள்ள இத்தனை நாளா ஸ்பெசல் டீ போட்டுக்கொடுத்திருக்கான்....ஹா ஹா ஹா

ஸ்ரீதர் said...

வணக்கம் நண்பர் ஜெய்லானி அவர்களே!மிகவும் சுவராஸ்யமான தொடர்.நானும் குவைத்தில் இருப்பதால் எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு.இண்ட்லியில் என்னை பின் தொடர்ந்தமைக்கு மிகவும் நன்றி!
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்

அந்நியன் 2 said...

எதோ...ஒரு சர்தாரின் டைரி போல இருக்கு உங்கள் டைரி.

வாழ்த்துக்கள்.

தொடருங்கள்...

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ... முக்கு முக்கென்று முக்கி யூன் வரைக்கும் கொண்டுவந்திட்டார் டயரியை:))... இன்னும் ஒரு பதிவோட இதை முற்றுக்குக் கொண்டு வராட்டில்.... நாங்க படையோடு வந்து “ஜெய்”ஐ தேம்ஸ்க்கு அழைத்துப் போவோம் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்:))).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஜெய்... எனக்கொரு உண்மை தெரிஞ்ச்சாகோணும்:), அந்த எயார்போர்ட் மாறிய கதை உண்மைதானா?:)). லக்கேஜை, ரிக்கெட் பார்க்காமல் அக்செப்ட் பண்ண மாட்டார்களே!!!!

நீங்க ஒரு பெரிய ஆள் என நம்பித்தான் உங்களைக் கூட்டிப் போயிருப்பார்:))... நீங்ககூட பிளைட் நம்பர் கவனிக்காமலா உள்ளே போனீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//பாருங்க .. அடப்பாவி ஷ்வர்மாவுல சுத்தி இருக்கிற பேப்பரை பிரிச்சி போட்டுட்டு சாப்பிடனுமுன்னு கூட தெரியலப் போலிருக்கு. அவ்வ்வ்வ் . //

ஹா..ஹா..ஹா.. அது ஜெய்யை ஒரு வார்த்தை மருவாதைக்கெண்டாலும்:), கொஞ்சம் சாப்பிடுறீங்களா எனக் கேட்கவில்லை என்றுதான், இப்பூடிப் புகைக்குது ஜெய்க்கு:))))

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//அமைதியாக இருந்தவர் .மெதுவாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் . எங்கிட்டேயேவா...?..!! //

அதானே... ஓடுற பாம்பை ஒத்த விரலால நசுக்கிறவராச்சே இதை விடுவாரா அவ்வ்வ்வ்வ்:)).

இருந்தாலும் ஜெய், ஒரே ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்..

ஒரு பிரபல பதிவர், பிரபல ஆசிரியர்..... அதிரா எண்டு பெயர்.... அவருக்கு எப்ப ஒரு பப்பிக்குட்டி கிடைக்கும் எனக் கேட்டிருக்கலாமெல்லோ?:))).

கடவுளே... இண்டைக்கு ஜெய் நல்ல நித்திரை, அதனாலதான் துணிஞ்சு நிறைய எழுதிட்டன்.... இனிப் பேச மாட்டேன்.... பேசவே மாட்டேன் சாமீஈஈஈஈஈ...:)). கொப்பி முறிஞ்சு தேம்ஸ்ல விழுந்தாலும் பறவாயில்லை, நான் கீழ இறங்கமாட்டேன்:))))).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

சே... ஸ்பெல்லிங்கூ மிசுரேக்கா வருது... அது கொப்பி இல்லை, முருங்கைக் கொப்பு:))

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

மாய உலகம் said...
26

பாத்து பக்கத்து டேபிள்ள ரீ குடிச்சுட்டுருந்த ஃபிகரு குபீர்ன்னு சிரிச்சுடுச்சு.///

ஹையோ... இன்னுமா மாயா தேம்ஸ்ல குதிக்காமல் இருக்கிறீங்க?:)))))

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஜெய், என் பக்கத்திலிருக்கும் யூகே நேரத்தோடு ஒரு மணித்தியாலம் கூட்டினால்தான் இப்போதைய, எம் நேரம் கிடைக்கும், இங்கு வருடத்தில் 2 முறை நேரம் மாத்துவார்கள், நான் புளொக்கில் மாத்தாமல் விட்டிருக்கிறேன், செப்டெம்பருக்கு மீண்டும், புளொக் நேரத்துக்கு வந்துவிடும்.

இமா க்றிஸ் said...

//இந்த தொடரை இன்னும் தொடரனுமான்னு நீங்கதான் சொல்லனும் :-)// நான் சப்போர்ட். பூனை கொப்பில இருந்து விழுந்தாலும் கொப்பியில இருந்து விழுந்தாலும் பரவாயில்ல. நீங்க எழுதுங்கோ. இனி என்ன! மாதம் ஒரு டயரி போட்டால் போதும்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *21224434109000


மருமகனுக்குக்கேத்த மாமியார்:)))... எப்பூடித்தான் தேடிப் புய்க்கினமோஓஓஓஓஓஒ:))))).

இமா க்றிஸ் said...

;)

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//ஒரு பிரபல பதிவர், பிரபல ஆசிரியர்..... அதிரா எண்டு பெயர்.... அவருக்கு எப்ப ஒரு பப்பிக்குட்டி கிடைக்கும் எனக் கேட்டிருக்கலாமெல்லோ?:))).//

கடவுளே..... அது பப்பிக்குட்டி இல்ல, பப்புளிக்குட்டி:))... . ஸ்பெலிங் மிசுரேக்காப்போச்சூஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

இமா க்றிஸ் said...

நான் உண்மையா... ஜீனோவாக்கும் என்று நினைச்சன் அதீஸ். ;)))))

நட்புடன் ஜமால் said...

பங்காளிக்கும் உங்களுக்கும் ஏக பொறுத்தம் போல ...


சோசியக்காரன நல்லா விரட்-நீங்கோ ...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா !! பதிவு காமெடி.. 11 பேரை வைத்து 44 கமெண்ட் தேத்துவது எப்படி என ஒரு பதிவு போடவும் ஹி ஹி

அம்பாளடியாள் said...

நகைச்சுவை கலந்த நல்லதொரு ஆக்கம் .நன்றி சகோ
பகிர்வுக்கு .என் தளப்பக்கமும் கொஞ்சம் வாருங்களேன்...

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

dairy இருக்கு ஆனா ஜெய்யைக் காணேல்லை:), ஆராவது உந்த டயரியை எடுத்துப் படிச்சுப் பாருங்கோ, கடசிப் பக்கத்தில எண்டாலும் எங்க போறார் என்பதை எழுதி வச்சிருப்பார்:))))).

M.R said...

நல்லதொரு காமடி அனுபவம் ,பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//தொடர்பதிவு எழுதச் சொன்னா என்னைய்யா இது சுயசரிதமே எழுதுறீங்க! ஒருவேளை கல்யாணம் முடிந்தப்ப உள்ள நிகழ்வுகளை (உங்க எழுத்து நடையில்)எழுதினா இன்னும் சுவாரஸ்யம் கூடினமோ ????? அப்ப எழுதுங்களேன் அதையும் தான் பார்ப்போம்!! அவ்வ்வ்வவ்...//

வாங்க பாஸ் வாங்க ..!! ஒரு வருஷத்து டைரி எழுத சொன்னா வேற எதை எழுதவாம் . கிண்டலா , இருங்க இந்த தொடர் முடிவில உங்களை கூப்பிடறேன்..ஹா..ஹா..

// இது மணியோசைதான் ..:)) நான் பின்பு வருவேன்...:)). // ஆமா, இது ஓபனிங் தான் இனிமே தான் கிளைமாக்ஸ். நோம்பு தொறந்துட்டு வருவேனாம்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்ல, விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... (பறந்திட்டேனாம்!!) //

ஏதாவது ஏடாகூடமா பதில் போடுவேன்னு நினச்சிட்டு எஸ்கேப்பா ஹா..ஹா.. விட மாட்டோமுல்ல எப்பூடீ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஜெய்லானி.உங்களுக்கென்றே கிடைக்குதே இப்படி பட்ட மேட்டர்... ஹா..ஹா.. ஹா.. //

வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! என்ன செய்யுறது நான் சும்மா இருந்தாலும் நம்ம பயபுள்ளங்க சும்மா இருக்க மாட்டேங்கிறானுங்களே ஹா..ஹா..

// ஷவர்மாவை பேப்பருடன் சாப்பிட்ட பெங்காலியை நினைக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை.பேப்பர் சுற்றப்படாமல் பிளேட்டிலேயே வைத்து தரும் சஹன் சவர்மாவை(sahan shawarma)வாங்கினால் அப்படியே பிளேட்டுடன் கபளீகரம் பண்ணிடுவாரா அந்த பெங்காலி?//
பக்கத்துல நான் இருக்கும் போது அது மாதிரி நடக்காதுன்னுதான் நினைக்கிறேன் ஹி.. ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

F.NIHAZA said...

பதிவு திகவும் நன்றாய் இருக்கு

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

தொடர் தொடரவும் வாழ்த்தும்!theeranchinnamalai.blogspot.com

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு ....

vettha.(kovaikavi) said...

நகைச் சுவையான ஆக்கம் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Pmuthuraj said...

பதிவு பயனுள்ளதாக இருப்பது நலம்.
தொடர்ந்து பதிவு செய்யுங்க...
நான் தொடர்ந்து வருகிரேன்.

enrenrum16 said...

இந்த மாதிரி எடக்கு மடக்கு ஆட்கள் உங்களை கரக்டா கண்டுபிடிச்சு வர்றாங்களே.... ஹா ஹா... எல்லாமே செம காமெடி...

ஆமா தொடர்பதிவுன்னா இப்படித்தான் தொடரும் போட்டு போட்டு எழுதறதோ? எப்படியாப்பட்ட மொக்கையா இருந்தாலும் வாசிக்க நாங்க ரெடி... அதனால போடுங்க 'தொடரும்' ;-)))

Jana said...

நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்யலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

அந்நியன் 2 said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஜெய்...ஜெய்.... ஜெய்ய்ய்ய்ய்ய்ய்.... காது கேட்குதோ? ஆஆஆஆ கேட்குதோ?:)).... பெருநாள் வாழ்த்துக்கள் .. நல்லா என்சோய் பண்ணிக் கொண்டாடிட்டு வாங்க.

மாய உலகம் said...

EID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா

மாதேவி said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

காஞ்சி முரளி said...

எனதன்பு
இசுலாமிய நண்பர்களுக்கும்...
அவர்தம் குடும்பத்தாருக்கும்.....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....


"புனித ரமலான் வாழ்த்துக்கள்"......!

நட்புடன்...
காஞ்சி முரளி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் தாமதமான ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்...

நல்லாவே கேட்குறீங்க கேள்வி... அவருக்கு கெட்ட நேரம் உங்ககிட்ட வந்து மாட்டிருக்கிறாரு....

Aathira mullai said...

ப்டிக்கும்போதே அதுதான் சொர்க்கம் தெரியுதே. அப்பரம் என்ன சொல்ல இருக்கு..

அருமையா இருக்கு ஜெய்லானி.

Aathira mullai said...

தாமதமானாலும் நானும் தெரிவித்துக்கொள்கிறேன். இனிய ரமலான் வாழ்த்துகள்.

orarabas said...

Merkur - Dai-Titanium-Arsenic-G-X
Merkur - Dai-Titanium-Arsenic-G-X · Merkur - Dai-Titanium-Arsenic-G-X. Product Details. titanium pan Condition: Used. Weight: 0.10 kg, Dimensions: titanium post earrings 5 x 4 x 4 inches (1.6 m) Brand: MerkurWeight: 0.10 kgBrand: MerkurColor: Black Rating: 4.5 · titanium cerakote ‎4 titanium block reviews nano titanium flat iron

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))