Saturday, July 30, 2011

முத்துக்கள் மூன்று மட்டுமே ..!!



    நீண்ட நாளைக்கு பிறகு  இங்கே ஒரு தொடரின் தொடர் தொடர்ந்துகிட்டு இருக்கு . ரொம்ப நாளும் ஏமாத்த முடியல . கைவசம் இன்னும்  நிறைய பாக்கி இருக்கு தொடர் தொடர்ந்துகிட்டு இருக்கும் போது தொடர்ந்தால் சுவாரஸ்யம் இருக்காது .இதை அழைத்த சகோஸ் , சகோஸ்  அவர்களுக்கு நன்றி ..


(1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
(1)     புயல்மழை அடிக்கும் போது  கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்  
(2)     கலகலப்பாக இருக்க
(3)     கலகலப்பாக இருக்கும் எல்லோரையுமே 

1)      நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1)     சிகரெட், பீடி ,சாராயம்
(2)    நீண்ட பயணம்
(3)     தனிமை
2)      பயப்படும் மூன்று விஷயங்கள்
(1)     மரணம் அது குறித்து சிந்தனை
(2)    ஹஸ்பிட்டல் ஸ்மெல்
(3)    எலெக்டிரிக்  ஷாக்  
3)      உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
(1)    இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது )
(2)    ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்குதான் தெரியும்முன்னு சொல்றாங்களே  அது
(3)     காதல்
4)      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
(1)     கம்ப்யூட்டர்
(2)    லட்டர் பேட்
(3)    பேனா
5)      உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
(1)    டாம் அண்ட் ஜெர்ரி
(2)    மிஸ்ட்ர் பீன்
(3)    காமெடி புக், பதிவுகள்
6)      தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
(1)     முந்தின கேள்விகளுக்கு டைப்பிகிட்டு இருக்கேன்
(2)     இந்த கேள்விக்கும் பதில் டைப்பிகிட்டு இருக்கேன்
(3)    அடுத்த கேள்விக்கும் இன்னும் டைப்பனும்
7)      வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
(1)     இருக்கும் வரை அடுத்தவங்களுகு தொல்லைதராமல் இருக்கனும்
(2)    என் பெயரில் ஒரு அறக்கட்டளை .அது யாருக்காவது உதவிகிட்டே இருக்கனும்
(3)    நட்புக்களிடம் தொடர்ந்து நட்புடன் இருக்க முயற்சி
8)      உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
(1)     எந்த வேலை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் மனோ தைரியம் .(எல்லா புகழும் இறைவனுக்கே )
(2)    தூங்க சொன்னால் உடனே போய் தூங்கிடுவேன் (அவ்வளவு சமத்து )
(3)    கை , கால் , நல்லா இருக்கும் வரை எல்லாமே முடியும்
9)      கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1)     புறம் பேசுதல்
(2)    ஆம்புலன்ஸ் சத்தம்
(3)    அரசியல்வாதியின் பேச்சு
10)   கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
(1)     ராக்கெட் ஓட்ட
(2)    மிருகங்களின்  பாஷை
(3)    வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க
11)   பிடிச்ச மூன்று உணவு வகை?
  கேள்வியை தயாரிச்ச புண்ணியவான் யாருங்க..?  என்னதான் பிடிச்ச உணவா இருந்தாலும்  3 வேளை அதையே  சாப்பிட முடியாது
12)   அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
நேரத்துக்கு தகுந்த படி  இந்த பாட்டு தானாகவே வாய் அசையும் அது
13)   பிடித்த மூன்று படங்கள்?

(1)     பார்டர்  (ஹிந்தி )
(2)     புதிய பறவை
(3)     கபி குஷி கபி கம் (ஹிந்தி )
14)   இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
(1)     பல்லு விலக்காம இருக்க முடியாது
(2)     டிரஸ் போடாம இருக்க முடியாது
(3)     என்னால தினமும் குளிக்காம இருக்க முடியாது (( எங்கிட்டேயேவா,,ஹி..ஹி.. ))
15)   இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
  இதை மூனுப்பேர்கிட்ட மட்டும் அடக்க என்னால் முடியாது ஸோ..இந்த கேள்வி சாய்ஸில்  விடப்படுகிறது


உஸ்...ஒரு வழியா இந்த தொடரை முடிச்சாச்சு .. கேள்வி அதுப்பாட்டுக்கு  வந்துகிட்டே இருக்கு .நா பரிட்சைக்கு கூட இப்படி எல்லா கேள்விக்கும் பதில் கொடுத்தது  இல்ல ..அவ்வ்வ்

92 என்ன சொல்றாங்ன்னா ...:

இமா க்றிஸ் said...

இப்பதான் உங்க 'சிந்தனை' படிச்சேன். இது படிக்க மனசா இல்ல. நாளைக்காலை வந்து படிச்சு கமண்ட் சொல்றேன்.

r.v.saravanan said...

present jailani

r.v.saravanan said...

padichittu varen

ஆமினா said...

கலக்கல் !!! :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாடா...இருக்கீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்...
:-)

Rathnavel Natarajan said...

அருமை.

middleclassmadhavi said...

நல்ல சிந்தனையாளர் தாம்! :-))

நிரூபன் said...

உங்களின் ரசனையினை விளக்கும் வகையில், முத்தான மூன்று விடயங்களை, வெவ்வேறு தலைப்பின் கீழ்ப் பதிந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

ஜெய்லானி said...

@@@இமா--//இப்பதான் உங்க 'சிந்தனை' படிச்சேன். இது படிக்க மனசா இல்ல. நாளைக்காலை வந்து படிச்சு கமண்ட் சொல்றேன். //

வாங்க..வாங்க..!! அந்த நினைவு கொஞ்சம் குறைய ஆரம்பிச்சதும்தான் இங்கே (பிளாக் ) வந்ததே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan --//present jailani //

வாங்க r v s வாங்க ..!! அட்டனனஸ் ஓக்கே

//padichittu varen // பொருமையா படிச்சுட்டு வாங்க :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா --//கலக்கல் !!! :) //

வாங்க சகோஸ் வாங்க ..!! சரியா படிகலன்னு புரியுது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி....//அப்பாடா...இருக்கீங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்...
:-) //

வாங்க குரு வாங்க ..!! இதுல எதுவும் உள் குத்து இல்லையே ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Rathnavel -//அருமை. //

வாங்க ..!! சந்தோஷம் .:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@middleclassmadhavi--// நல்ல சிந்தனையாளர் தாம்! :-)) //

வாங்க ..இன்னுமா ஊரு நம்மளை நம்புது ஹி..ஹி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன்-//உங்களின் ரசனையினை விளக்கும் வகையில், முத்தான மூன்று விடயங்களை, வெவ்வேறு தலைப்பின் கீழ்ப் பதிந்திருக்கிறீங்க. ரசித்தேன். //

வாங்க ஐயா வாங்க..!! தொடர் அது மாதிரி ஆகிட்டுதே .பரிட்சையில மூனு குடுத்து ஒன்னு எழுத்த சொல்லுவாங்க ..இங்கே ஒன்னு குடுத்து மூனு எழுத சொன்னா ..? அவ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அந்நியன் 2 said...

பிடிச்சதில் வீட்டுக்கார அம்மாவை மறந்த மாதிரி தெறியுது.

சாரி பாஸ் உங்கள் சந்தோசத்தை கெடுக்க விரும்பலை..

எல்லாமே கலக்கல் பாஸ்,வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--//பிடிச்சதில் வீட்டுக்கார அம்மாவை மறந்த மாதிரி தெறியுது.//

வாங்க பாஸ் வாங்க ..!! விட்டுக்குள் ஒரு வரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே..!! பிள்ளைகள் பிடிக்காதா..? அம்மா வை பிடிக்காதான்னு கேள்வி வருமே ..!!

// சாரி பாஸ் உங்கள் சந்தோசத்தை கெடுக்க விரும்பலை.. //

இப்படி கேட்டாதான் சந்தோஷமே..தொடருங்கள் :-))

// எல்லாமே கலக்கல் பாஸ்,வாழ்த்துக்கள்! //

சந்தோஷம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vanathy said...

ராக்கெட் ஓட்ட
(2) மிருகங்களின் பாஷை
(3) வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க///

ஹையோ! எல்லோரும் ஒரு மார்க்கமாவே திரியுறாங்க போல. அவராவது பரவாயில்லை ( யாரா? நம்ம பூஸார் ) ப்ளேன் ஓட்ட மட்டும் ஆசைப்படுறார். இவருக்கு ராக்கெட் ஓட்ட வேணுமாம். எங்க ஊர் பக்கம் தான் நாசா இருக்கு. ஒரு நடை போய் கேட்டுப் பார்க்கிறேன்.

வவ்வால் போல் தொங்க ஆசையா - தொங்க வேண்டியது தானே. யார் வேண்டாம் என்று சொன்னா கிக்க்க்க்க்க்...

2nd one - no comments

ஜெய்லானி said...

@@@vanathy --//ராக்கெட் ஓட்ட
(2) மிருகங்களின் பாஷை
(3) வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க///

ஹையோ! எல்லோரும் ஒரு மார்க்கமாவே திரியுறாங்க போல. அவராவது பரவாயில்லை ( யாரா? நம்ம பூஸார் ) ப்ளேன் ஓட்ட மட்டும் ஆசைப்படுறார். இவருக்கு ராக்கெட் ஓட்ட வேணுமாம். எங்க ஊர் பக்கம் தான் நாசா இருக்கு. ஒரு நடை போய் கேட்டுப் பார்க்கிறேன். //

வாங்க வான்ஸ் வாங்க ..!!தெய்வமே...என்னோட ஆசை இவ்வளவு சீக்கிரம் ஒர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கவே இல்லை. ஒரு வேளை ”எண்டோவர்” எகஸ்பிரி ஆனாலும் வாங்கிக்கொடுங்க பரவாயில்லை :-)

//வவ்வால் போல் தொங்க ஆசையா - தொங்க வேண்டியது தானே. யார் வேண்டாம் என்று சொன்னா கிக்க்க்க்க்க்...//
தரையில முடியுது ..ஆனா மரத்துல முடியலையே அவ்வ்வ்

//2nd one - no comments //
ஏனுங்க உங்களும் அந்த ஆசை இருக்கா ஹி..ஹி.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

ஓட்டு போட்டாச்சு கமெண்ட் அப்பரம் போடலாமா?

ஹேமா said...

ஜெய் ஸ்டைலில் பதில்கள் கலகலன்னு இருக்கு !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Pathilkal arumai.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Pathilkal arumai.

சிநேகிதன் அக்பர் said...

அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே ஜெயிலானி !!!!!!!!

athira said...

//நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1) சிகரெட், பீடி ,சாராயம்//

அப்போ மற்ற “மதுவகை” எல்லாம் பிடிக்குமோ?:)). ஹையோ.. சும்மா ஒரு சந்தேகம் வந்திட்டுதூஊஊஊ.. தெரியாமல் கேட்டுட்டேன்ன்ன்ன்.. விட்டிடுங்க:)).

//) ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்குதான் தெரியும்முன்னு சொல்றாங்களே அது //

இதில இப்ப என்ன உங்களுக்குப் புரியேல்லை எண்டு, எனக்குப் புரியேல்லை அவ்வ்வ்வ்வ்:)))).

athira said...

எல்லாரும் தமிழை விட்டுப்போட்டு ஹிந்தில இறங்கியிருக்கினம் பாட்டுக் கேட்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). ஓன் பண்ணினவுடனேயே ஓவ் பண்ணிட்டன்..:))

3வது பாட்டு சூஊஊஊஊஊஊஊப்பர்... தேடிக் கேட்பதில்லை, ரீவியில் போனால் எங்கிருந்தாலும் ஓடிவந்து கேட்பேன்.

//டைப்பிகிட்டு இருக்கேன்// :))).

//2) தூங்க சொன்னால் உடனே போய் தூங்கிடுவேன் (அவ்வளவு சமத்து )// அதுதான் அடிக்கடி காணாமல் போவதன் ரகசியமோ:)).

//(1) பல்லு விலக்காம இருக்க முடியாது //

ரீச்சர் ஓடிவாங்க... டமில் டமில்... நான் புடிச்சிட்டேன்ன்ன்ன்:)))).

ஆ... எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஇ... மிகுதிக்கு இமா வந்து பதில் போடுவா ஜெய்... கொஞ்சம் இருங்க.:)

athira said...

//5) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?//

ஆருமே என்னைப்போல தைரியசாலி இல்லைப்போல:))) கிக்..கிக்...கீஈஈஈஈஈ.

//ஹையோ! எல்லோரும் ஒரு மார்க்கமாவே திரியுறாங்க போல. அவராவது பரவாயில்லை ( யாரா? நம்ம பூஸார் ) ப்ளேன் ஓட்ட மட்டும் ஆசைப்படுறார். // அதானே.. ராக்கெட்டாம் ராக்கெட்டூஊஊஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

வழிவிடுங்க...வழிவிடுங்க.., அடக்கடவுளேஏஏஏஏஏ எங்க என் கட்டிலைக் காணவில்லையே.... ஆபத்துக்குப் பாவமில்லை, வான்ஸ்ட கிச்சின் மேசைக்கு கீழ ஒளிப்பம்:))).

athira said...

மியாவ்..மியாவ்... ஜெய்... தொடரைத் தொடர்ந்தமைக்கு.

athira said...

//தரையில முடியுது ..ஆனா மரத்துல முடியலையே அவ்வ்வ் //

அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).

கடவுளே.... 2 நாளைக்கு நான் லீவூஊஊஊஊஊஊஊ.. என்னை ஆரும் தேடிட வாணாம்ம்ம்ம்ம்ம்:)))))).

சாந்தி மாரியப்பன் said...

நல்ல விஷயங்கள்..

சீக்கிரமே, பிடிச்ச மூன்று விஷயங்களைக்கத்துக்க கடவுள் துணையிருக்கட்டும் :-)))))))

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சேன். அண்ணே.. உங்க லோகோ ரோஜா பச்சையா இருக்கே? உங்க எழுத்தும் பச்சை பச்சையா இருக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ( சும்மா ஜோக்.. நோ திட்டிங்க் மீ ஹி ஹி )

Geetha6 said...

ஒரே கலக்கல் தான் ..ம்..ஓகே ஓகே .

ஸாதிகா said...

கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் கலக்கல்,கொஞ்சம் காமெடி,கொஞ்சம் மொக்கை எல்லாம் கலந்த சூப்பர் காக்டெயில் பதில்கள்

ஸாதிகா said...

//புயல்மழை அடிக்கும் போது கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்// என்னா தகிரியம்பா...!

// வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க// ஹே..ஹே..ஜெய்லானி பாய் தலை கீழா தொங்கறதை எல்லோரும் பார்க்க ரெடியா இருங்க மக்காஸ்,,,

ஸாதிகா said...

//அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).// அதீஸ் சூப்பர் ஐடியாவாக இருக்கே.முதலில் அதற்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.ஆனால் அந்த கூட்டத்துக்கு என்னை மட்டும் கூப்பிட்டுடாதிங்க.நான் ரொம்ப பிசியாக்கும்.

மோகன்ஜி said...

நல்ல ரசனை பாஸ் உங்களுக்கு!

Mahi said...

கமென்ட் நம்பர் 29ல ஒரு லைன் மட்டும் மங்கலாத்தெரியுது. இப்ப மணி 11 ஆச்சு,அரைத்தூக்கத்தில இருக்கன்,நாளைக்கு காலையிலே தெளிவா வாரேன்.

29-க்கு 35 ஸப்போர்ட்டா? அவ்வ்வ்வ்வ்! ஸாதிகாக்கா,நீங்க எம்பூட்டு பிஸீயா இருந்தாலும் இப்படிப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியெல்லாம் மிஸ் பண்ணப்படாதூஉ..சொல்லியனுப்பறம்,2 நாளுக்கு மிந்தியே வந்துருங்கோ,என்ன?!

:) :) இன்று போய் நாளை வாரேன்! ;)

ஸாதிகா said...

// இப்படிப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியெல்லாம் மிஸ் பண்ணப்படாதூஉ..சொல்லியனுப்பறம்,2 நாளுக்கு மிந்தியே வந்துருங்கோ,என்ன?! // மகி அதான் கலைஞர் டி வி இல் லைவ் டெலிகாஸ்ட் பண்ண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கே.நான் வீட்டில் இருந்தே பார்த்துக்கறேன்.

Riyas said...

ம்ம்ம் நீண்ட நாளைக்குப்பிறகு வாரேன் ஜெய்லானி சுகம்தானே,,


//புயல்மழை அடிக்கும் போது கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்//

சுனாமி வந்துடப்போகுது கவனம் பாஸ்

// இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது//

அதுக்கிட்டயே கேட்கவேண்டியதுதானே,,

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//ஓட்டு போட்டாச்சு கமெண்ட் அப்பரம் போடலாமா? //

வாங்க ஜலீலாக்கா வாங்க..!! நீங்க இந்த பக்கம் எட்டிப்பார்த்தாலே போதும் மனசு நிறைஞ்சுடும். :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

காஞ்சி முரளி said...

/////நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

(1) சிகரெட், பீடி ,சாராயம்
(2) நீண்ட பயணம்
(3) தனிமை/////

இதுல மூணாவதா சொன்னீங்களே...
அத... அதத்தான்...!

அப்ப "தனிமை"யை விரும்பாத நீங்கள் தற்போது இருக்கும் நிலை...?
விரும்பாத விருப்பமா...?

மாட்டிக்கிட்டாரு...!
ஜெய்லானி மாட்டிக்கிட்டாரு...!

ஜெய்லானி said...

@@@ஹேமா --// ஜெய் ஸ்டைலில் பதில்கள் கலகலன்னு இருக்கு ! //

வாங்க குழந்தை நிலா வாங்க..!! சந்தோஷம் ..இந்த கலகல எப்போதும் இருக்கனும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --// Pathilkal arumai. //

வாங்க பாஸ் வாங்க ..!! சந்தோஷம்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே ஜெயிலானி !!!!!!!! //

வாங்க பாஸ் வாங்க ...!! இந்த உலகத்தை விட்டு போகும் இங்குள்ளது எது கூடவே வரும் ..? தெரியும்தானே :-))).
நான் நல்லவன்னு சொன்னா உலகத்துல ஒரு கெட்டவன் ஒழிந்தான்னு அர்த்தம் ...ஹா...ஹா .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

காஞ்சி முரளி said...

ஜெய்லானி இந்தப் பக்கம்தான் சுத்திட்டு இருக்காரு போலிருக்கு....!

என்னாண்ணாத்தே....!
சௌக்கியமா...!

ஜெய்லானி said...

@@@athira --//
//நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1) சிகரெட், பீடி ,சாராயம்//

அப்போ மற்ற “மதுவகை” எல்லாம் பிடிக்குமோ?:)). ஹையோ.. சும்மா ஒரு சந்தேகம் வந்திட்டுதூஊஊஊ.. தெரியாமல் கேட்டுட்டேன்ன்ன்ன்.. விட்டிடுங்க:)). //

சின்ன வயதிலிருந்து சிகரெட் நாற்றமே பிடிக்காது .அதுவே யாராவது பீடி குடித்தால் அரை கிலோமீட்டர் தூரத்திலேயே அதோட நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்துக் கொள்வேன். இதனாலேயே தியேட்டருக்கே போகப்பிடிக்காது(தரை டிக்கெட் 75 பைசா பால்கனி 2.50 ) போனால் ஏசி ரூம் தான் போவேன் :-)) இதுல மூனாவது பாட்டு கேக்கலையா ஹா..ஹா..

//) ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்குதான் தெரியும்முன்னு சொல்றாங்களே அது //

இதில இப்ப என்ன உங்களுக்குப் புரியேல்லை எண்டு, எனக்குப் புரியேல்லை அவ்வ்வ்வ்வ்:)))). //

ஓ...நீங்க தமிழ் படமே பார்ப்பதில்லையா.. ஹி...ஹி...:-))))))))))))))))))))))))))))

// எல்லாரும் தமிழை விட்டுப்போட்டு ஹிந்தில இறங்கியிருக்கினம் பாட்டுக் கேட்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). ஓன் பண்ணினவுடனேயே ஓவ் பண்ணிட்டன்..:)) //

இதுலதான் நிறைய பேர் தப்பு பண்றாங்க ..!! அதுக்கு காரணம் புரியாத பாஷை. அது புரியும் போது ...... :-))) தெரிந்த யாரிடமாவது விளக்கம் கேளுங்க.. அதுக்கு பிறகு நீங்களும் இதுக்கு அடிமை . தமிழ கவிஞர்கள் மட்டுமே தெரிந்த நமக்கு மற்ற கவிஞர்களின் ரசனையையும் அறிந்துக்கொள்ளலாம் :-)

//3வது பாட்டு சூஊஊஊஊஊஊஊப்பர்... தேடிக் கேட்பதில்லை, ரீவியில் போனால் எங்கிருந்தாலும் ஓடிவந்து கேட்பேன். //

நான் எப்போதும் ஆடலை பார்பதில்லை பாடலை மட்டுமே ரசிப்பேன் அதோட வரிகள் இதில்
”உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை”
வைரமுத்துவின் இந்த வரிகள் எனக்கு டானிக் மாதிரி :-))

//டைப்பிகிட்டு இருக்கேன்// :))). :-))X14689

//2) தூங்க சொன்னால் உடனே போய் தூங்கிடுவேன் (அவ்வளவு சமத்து )// அதுதான் அடிக்கடி காணாமல் போவதன் ரகசியமோ:)). //

ஹா..ஹா... அதுவும் கட்டிலுக்கு கீழேதான் ..ரொம்பவும் பிஸியா :-)))

//(1) பல்லு விலக்காம இருக்க முடியாது //

ரீச்சர் ஓடிவாங்க... டமில் டமில்... நான் புடிச்சிட்டேன்ன்ன்ன்:)))). //

இதுல டமில்...டமிலா...இல்ல டுமீல் டுமீலா..அவ்வ்வ் பயமா இருக்கே துவக்கு சத்தம் மாதிரி அவ்வ்வ்வ்

//ஆ... எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஇ... மிகுதிக்கு இமா வந்து பதில் போடுவா ஜெய்... கொஞ்சம் இருங்க.:) ///
ஆஹா...கோர்த்து விட்டுட்டீங்களே...எஸ்கேப்ப்ப்ப்ப்

////5) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?//

ஆருமே என்னைப்போல தைரியசாலி இல்லைப்போல:))) கிக்..கிக்...கீஈஈஈஈஈ. //

ஹா..ஹா...ஒரு வேளை அவங்க நம்ம மயிலை மாதிரி மாசக்கணக்குல எஸ்கேப் ஆகிட்டா அந்த பாவம் எனக்கு எதுக்கு :-))

//ஹையோ! எல்லோரும் ஒரு மார்க்கமாவே திரியுறாங்க போல. அவராவது பரவாயில்லை ( யாரா? நம்ம பூஸார் ) ப்ளேன் ஓட்ட மட்டும் ஆசைப்படுறார். // அதானே.. ராக்கெட்டாம் ராக்கெட்டூஊஊஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). //

ஓவரா பல்லை கடிக்காதீங்க அப்புறம் பிடிக்க அட ..ச்சே கடிக்க பல்லு இருக்காது :-))

//வழிவிடுங்க...வழிவிடுங்க.., அடக்கடவுளேஏஏஏஏஏ எங்க என் கட்டிலைக் காணவில்லையே.... ஆபத்துக்குப் பாவமில்லை, வான்ஸ்ட கிச்சின் மேசைக்கு கீழ ஒளிப்பம்:))).//அங்கத்தான் மண்புழு நிரைய இருக்காம் ...எதுக்கும் ஒருக்கா நல்லா பார்த்துட்டு ஒளிஞ்சிக்கோங்க

//மியாவ்..மியாவ்... ஜெய்... தொடரைத் தொடர்ந்தமைக்கு. //

இன்னும் சிலது மீதி இருக்கு ஒவ்வொன்னா ரிலீஸ் செய்கிறேன் .அடுத்தது அந்த ”எழுத்து”தான் :-)

//தரையில முடியுது ..ஆனா மரத்துல முடியலையே அவ்வ்வ் //

அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).//

ஆஹா...எல்லாருமே ஒரு முடிவாதான் இருக்கிணம் ஜெய்லானி இவங்ககிட்டே மாட்டிக்காதே எஸ்க்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

//கடவுளே.... 2 நாளைக்கு நான் லீவூஊஊஊஊஊஊஊ.. என்னை ஆரும் தேடிட வாணாம்ம்ம்ம்ம்ம்:)))))). // விடாம ஒரு ஹெலி பிடிச்சு வந்து தேடிடுவோம் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --//நல்ல விஷயங்கள்..

சீக்கிரமே, பிடிச்ச மூன்று விஷயங்களைக்கத்துக்க கடவுள் துணையிருக்கட்டும் :-))))))) //

வாங்க சாரலக்கா வாங்க ..!! இதுதான் என்னுடைய பிராத்தனையும் ..!! இருக்கும் வரை சந்தோஷம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார் --//ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சேன். அண்ணே.. உங்க லோகோ ரோஜா பச்சையா இருக்கே? உங்க எழுத்தும் பச்சை பச்சையா இருக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ( சும்மா ஜோக்.. நோ திட்டிங்க் மீ ஹி ஹி ) //

வாங்க பாஸ் வாங்க ..!! என்னிடம் பலப்பேர் கேட்டக்கேள்வி இது . எதுவுமே வித்தியாசமா யோசிக்கிறது என் ஸ்டைல் .அது பல பேருக்கு பயித்தியக்காரத்தனமா தெரிந்தாலும் டோண்ட் கேர் ..!! எனக்குன்னு தனி ஸ்டைலில் தேடியதுல செட்டானது இது .என்னோட டிஸைன் இது . நான் போட்டதுமே பாக்கிஸ்தானில் ஒரு ஆள் அந்த லோகோவை யூஸ் செய்கிறார் . இது தவிர வேற எங்குமே இல்லை . என்னோட பிளாக் , ஃபேஸ் புக் , டிவிட்டர் தவிர . இது இல்லாம அடிக்கடி லோகவை மாத்துரதும் எனக்கு பிடிக்காது ..இதான் இதிலுள்ள ரகசியம் :-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6 --//ஒரே கலக்கல் தான் ..ம்..ஓகே ஓகே .//

வாங்க சகோஸ் வாங்க ..!! ஜெய்லானி ரிடன்ஸ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் கலக்கல்,கொஞ்சம் காமெடி,கொஞ்சம் மொக்கை எல்லாம் கலந்த சூப்பர் காக்டெயில் பதில்கள் //

வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! ஆக என்னவோ சொல்ல வறீங்கன்னு மட்டும் புரியுது ஹா..ஹா.. :-))

////புயல்மழை அடிக்கும் போது கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்// என்னா தகிரியம்பா...!//

இதை பத்தி போடனுன்னா நிறைய பக்கம் ஆகும் . அப்போது புயல் காற்று, காற்றில் பிரம்பு வீசுர சத்தம் கேட்கும் .கடல் இறைச்சலும் அலை உயரே எழும்ப துடிக்கும் வேகமும் அது சொல்ல முடியாத உணர்வு . கடல் நடுவே ஒரு பிளாட் ஃபார்ம் போகும் ( இடம் கடலூர் ஓ .டி old town ) சைக்கிளில் தனியே போய் அங்கே நிற்பேன். போகிற வழி இரு பக்கமும் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்க பாதை மட்டும் 2 கிலோ மீட்டர் போகும் ..மறக்க முடியாத அனுபவங்கள் :-))

// வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க// ஹே..ஹே..ஜெய்லானி பாய் தலை கீழா தொங்கறதை எல்லோரும் பார்க்க ரெடியா இருங்க மக்காஸ்,,, //

யோகாவில சிலது இருக்கு .. டிரை பண்ன பார்க்கிரேன் ஹா..ஹா.. ( ஆர்னால்ட் படங்கள் பார்த்தில்லையா ஹி..ஹி.. )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).// அதீஸ் சூப்பர் ஐடியாவாக இருக்கே.முதலில் அதற்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.ஆனால் அந்த கூட்டத்துக்கு என்னை மட்டும் கூப்பிட்டுடாதிங்க.நான் ரொம்ப பிசியாக்கும்.//

ஆஹா... தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்தை குச்சி வச்சி சுரண்டுராங்களே என்ன ஆகப்போகுதோ அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மோகன்ஜி --//நல்ல ரசனை பாஸ் உங்களுக்கு! //

வாங்க பாஸ்..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி --//கமென்ட் நம்பர் 29ல ஒரு லைன் மட்டும் மங்கலாத்தெரியுது. இப்ப மணி 11 ஆச்சு,அரைத்தூக்கத்தில இருக்கன்,நாளைக்கு காலையிலே தெளிவா வாரேன். //

வாங்க மஹி வாங்க ..!! ஒரு வேளை ஸ்டஃப் இட்லி 7 , எட்டு சாப்பிட்டீங்களா..??? நல்ல தெளிவான கண்பார்வைக்கு ஒரு ரெஸிபி இருக்கு தரட்டுமா ஹா..ஹா..

// 29-க்கு 35 ஸப்போர்ட்டா? அவ்வ்வ்வ்வ்! ஸாதிகாக்கா,நீங்க எம்பூட்டு பிஸீயா இருந்தாலும் இப்படிப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியெல்லாம் மிஸ் பண்ணப்படாதூஉ..சொல்லியனுப்பறம்,2 நாளுக்கு மிந்தியே வந்துருங்கோ,என்ன?! //

ஆஹா... வராட்டி ஒரு வேளை அடிச்சும் கூப்பிடுவாங்களா அவ்வ்வ்வ்

// :) :) இன்று போய் நாளை வாரேன்! ;) // இனிய உறக்கம் வரட்டும் (( கணவில உங்க ஸ்டஃப் இட்லியே வந்தாலும் வரும் , எதுக்கும் ஒரு கண்ணை மட்டும் திறந்து வச்சிகிட்டு தூங்குங்க :-)) )) குட் நைட் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// இப்படிப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியெல்லாம் மிஸ் பண்ணப்படாதூஉ.. சொல்லியனுப்பறம்,2 நாளுக்கு மிந்தியே வந்துருங்கோ,என்ன?! // மகி அதான் கலைஞர் டி வி இல் லைவ் டெலிகாஸ்ட் பண்ண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கே.நான் வீட்டில் இருந்தே பார்த்துக்கறேன். //

தூங்குற சிங்கத்தை குச்சியை வச்சி சுரண்டுனது பத்தாம ஜஸ் வாட்டரை வேற மூஞ்சில ஸ்பிரே பண்றாங்களே அவ்வ்வ்வ் .. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas--//ம்ம்ம் நீண்ட நாளைக்குப்பிறகு வாரேன் ஜெய்லானி சுகம்தானே,, //

வாங்க ரியாஸ் வாங்க ..!! உங்கள் வரவு நல்வரவாகுக ..!! ரொம்ப நாளா ஆளையே கானோமே சுகமா..? :-)


//புயல்மழை அடிக்கும் போது கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்//

சுனாமி வந்துடப்போகுது கவனம் பாஸ் //

ஓடுர பாம்பை ஒத்த விரலால நசுக்குர வயசுல சுனாமி பயமெல்லாம் கிடையாது பாஸ் .அது ஒரு திரில் . :-)

// இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது//

அதுக்கிட்டயே கேட்கவேண்டியதுதானே,, //

கேட்டேனே அப்பவும் அது அழுவுது..ஏன்னு சொல்லிட்டு அழுதானே நமக்கும் புரியும் . குழல் இணிது யாழ் இணிது என்பார் மழலை சொல் கேட்காதவர். உண்மைதானே பாஸ் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி --//நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

(1) சிகரெட், பீடி ,சாராயம்
(2) நீண்ட பயணம்
(3) தனிமை/////

இதுல மூணாவதா சொன்னீங்களே...
அத... அதத்தான்...!

அப்ப "தனிமை"யை விரும்பாத நீங்கள் தற்போது இருக்கும் நிலை...?
விரும்பாத விருப்பமா...? //

வாங்க அண்ணாத்தே வாங்க ..!! அக்கா இருக்கும் வரை இந்த ஏரியாவில தெரிந்தவர் .நீண்ட காலத்துக்கு பிறகு இப்போ நம்ம ஏரியாவில ஹா..ஹா.. வெல்கம் பேக் :-))ஓக்கை விஷயத்துக்கு வருவோம்
””நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ..
நடந்ததையே நினைத்திருந்தால் நெஞ்சில் அமைதி இல்லை “” தெரியும்தானே ஹா..ஹா..

//மாட்டிக்கிட்டாரு...!
ஜெய்லானி மாட்டிக்கிட்டாரு...! // எங்கே .? எங்கே..? அது நான் இல்ல ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

ஆஹா முத்துக்கள் மூன்றும் சொத்தானவை...சாரி சத்தானவை...... ம்ம்ம்ம்ம் அப்பறம் முதல் பாட்டுக்கே...எனது ஓட்டு.. எழுதிட மறுக்குது என் பேனா.. அப்பறம் உங்களிடம் பிடித்த மூன்று பொய்கள் ஜெய் நண்பரே...! (1) பல்லு விலக்காம இருக்க முடியாது
(2) டிரஸ் போடாம இருக்க முடியாது
(3) என்னால தினமும் குளிக்காம இருக்க முடியாது (( எங்கிட்டேயேவா,,ஹி..ஹி.. )) எங்ககிட்டயேவா..ஹி ஹி ஹி

athira said...

//ஓடுர பாம்பை ஒத்த விரலால நசுக்குர வயசுல சுனாமி பயமெல்லாம் // அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

athira said...

//இன்னும் சிலது மீதி இருக்கு ஒவ்வொன்னா ரிலீஸ் செய்கிறேன் .அடுத்தது அந்த ”எழுத்து”தான் :-)//

உண்மையாகவோ?.. நான் நினைத்தேன் அதை மறந்திட்டீங்களென... எழுதுங்கோ படிக்க நாங்க ரெடீஈஈஈஈ.

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//ஆஹா முத்துக்கள் மூன்றும் சொத்தானவை...சாரி சத்தானவை...... ம்ம்ம்ம்ம் அப்பறம் முதல் பாட்டுக்கே...எனது ஓட்டு.. எழுதிட மறுக்குது என் பேனா.. //

வாங்க மாய உலகம் வாங்க..!! பரிட்சையில கூட மூனு கேள்விக்கு ஒரு பதில்தான் கேப்பாங்க இங்கே அவ்வ்வ் .ஒரு கேள்விக்கு மூனு பதிலாம்
.
//அப்பறம் உங்களிடம் பிடித்த மூன்று பொய்கள் ஜெய் நண்பரே...! (1) பல்லு விலக்காம இருக்க முடியாது
(2) டிரஸ் போடாம இருக்க முடியாது
(3) என்னால தினமும் குளிக்காம இருக்க முடியாது (( எங்கிட்டேயேவா,,ஹி..ஹி.. )) எங்ககிட்டயேவா..ஹி ஹி ஹி //

ஓஹ் அப்ப நீங்க இதெல்லாம் செய்யுரதில்லையா..? சேம் ஷேம்..பப்பி ஷேம் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//ஓடுர பாம்பை ஒத்த விரலால நசுக்குர வயசுல சுனாமி பயமெல்லாம் // அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

வாங்க வாங்க.!!! உங்களுக்கு ”சந்தேகம் “இருந்தா ஒரு பாம்பை பிடிச்சிகிட்டு வாங்க .ஒத்தை விரலால நசுக்கி காட்டுரேன் ..ஹி..ஹி... எப்பூடீ ? :-))

//உண்மையாகவோ?.. நான் நினைத்தேன் அதை மறந்திட்டீங்களென... எழுதுங்கோ படிக்க நாங்க ரெடீஈஈஈஈ // எனக்கு மூனு வயசுல நடந்ததே இன்னும் நல்லா நினைவுல் இருக்கு இப்ப மூனு மாச புதுசு நினைவில் இருக்காதோ ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

நன்றி ஜெய் நண்பரே

athira said...

//ஸாதிகா said...
35
அதீஸ் சூப்பர் ஐடியாவாக இருக்கே.முதலில் அதற்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.ஆனால் அந்த கூட்டத்துக்கு என்னை மட்டும் கூப்பிட்டுடாதிங்க.நான் ரொம்ப பிசியாக்கும்.//

ரொம்பவும் ஓவரா நல்லவங்களா நடிக்கப்பிடா:))).

கடவுளே.... வழிவிடுங்க, வான்ஸ்ட மேசைக்குக்கீழ.. மண்..புழுவாமே:))) ஹையோ நான் மாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ:)).

நான் இப்போ இடத்தை மாத்திட்டேன், இமாட கட்டிலுக்குக் கீழ இருக்கிறேன்(எல்லாம் ஒரு சேஃப்ரிக்காகத்தான்:))... சொல்லிக்கொடுத்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ், பிறகு எலியை ரூமுக்குள் காட்டியே, என்னை வெளில வர வச்சிடுவா:))).

athira said...

வாங்க வாங்க.!!! உங்களுக்கு ”சந்தேகம் “இருந்தா ஒரு பாம்பை பிடிச்சிகிட்டு வாங்க .ஒத்தை விரலால நசுக்கி காட்டுரேன் ..ஹி..ஹி... எப்பூடீ ? :-))///

கொஞ்சம் பொறுங்க மலைப்பாம்புக்கு ஓடர் கொடுத்திட்டேன்ன்ன்.. பிளைட்ல பைலட் சீட்டில வச்சுக் கொண்டு வருகினமாம்(தப்பி ஓடிடக்கூடதெல்லோ... நான் பாம்பைச் சொன்னேன்:))

//// எனக்கு மூனு வயசுல நடந்ததே இன்னும் நல்லா நினைவுல் இருக்கு இப்ப மூனு மாச புதுசு நினைவில் இருக்காதோ ஹா..ஹா.////

இப்போ வயசாகிட்டுது அதால மறந்திருப்பீங்களென நினைச்சுட்டேன்ன்ன்ன்.... ஆ ஆஆஅ.. வெயார் இஸ் இமாஸ் கட்டில்ல்ல்ல்ல்ல்:))).

மாய உலகம் said...

ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said...

me the firstu...

Unknown said...

me the second

Unknown said...

all 3 very good.
really beautiful answer..
vaalga valamudan.

நாடோடி said...

ரெம்ப நாளைக்கு அப்புறம் தொடர்பதிவுல வந்திருக்கீங்க போல.. :)

வாழ்நாளில் செய்ய நினைக்கும் மூன்று காரியங்களும் விரைவில் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..

வேலன். said...

வேலன் பிரசண்ட் சார்(வேலன் உள்ளேன் அய்யா....)
வாழ்க வளமுடன்.
வேலன்.

M.R said...

புயல்மழை அடிக்கும் போது கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்


புயல் அடிக்கும் பொழுது கடற்கரைக்கு போகக்கூடாது சகோ ...
அது ஆபத்து .

M.R said...

உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
(1) டாம் அண்ட் ஜெர்ரி
(2) மிஸ்ட்ர் பீன்
(3) காமெடி புக், பதிவுகள்


எனக்கும் .

அதிலும் டாம் அண்ட் ஜெர்ரி

வீட்டில் திட்டு வாங்கிகிட்டே பார்ப்பேன் .

ஏனென்றால் அது சின்ன பிள்ளைங்க பார்க்க கூடியதாம் .

நானும் குழைந்தை தானே மனதளவில் .

M.R said...

கற்றுக் கொள்ள விரும்பும் விஷயங்கள்?

(2) மிருகங்களின் பாஷை

எனக்கும் தான்.

சில சமயம் அது என்னமோ நம்மிடம் சொல்ல வருவது போல் இருக்கும் பொழுது நமக்கு ஆதங்கமாக இருக்கும் அதன் பாஷை தெரிய வில்லையே என்று .

(3) வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க

ஏன் இந்த விபரீத ஆசை சகோ ?

M.R said...

படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:),

அப்பாடி எனக்கு நாலு சொர்க்கம் தெரியும் .

ஏன்னா நான் நாலு கமன்ட் போட்டுட்டேனே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

திருப்பதிக்கே லட்டா? ஜெய்லானிகே கொஸ்டினா? வாட் எ பிட்டி வாட் எ பிட்டி...:)))

Anonymous said...

//கேள்வியை தயாரிச்ச புண்ணியவான் யாருங்க..?என்னதான் பிடிச்ச உணவா இருந்தாலும்3 வேளை அதையேசாப்பிட முடியாது // சூப்பர் கடைசி வரைக்கும் புடிச்ச சாப்பாட்ட சொல்லவே இல்லையே??



//பல்லு விலக்காம இருக்க முடியாது// ஏன் பல்லை எல்லாம் விலக்கி வைக்குறீங்க அது என்ன பாவம் செஞ்சுது? நாங்கெல்லாம் பல்ல விளக்குவோம். அஸ்க்கு புஸ்க்கு ஸ்பெல்லிங் ஹீ ஹீ

vanathy said...

ஏன் பல்லை எல்லாம் விலக்கி வைக்குறீங்க// அவர் பல்லு செட் போட்டிருக்கிறார் என்பதை பூடகமாக சொல்றார்.

Anonymous said...

////(1) பல்லு விலக்காம இருக்க முடியாது //

ரீச்சர் ஓடிவாங்க... டமில் டமில்... நான் புடிச்சிட்டேன்ன்ன்ன்:)))).// ஹ்ய் பூஸும் புடிச்சிட்டாங்க. சாரி நான் கமெண்ட் போட்டதுக்கு அப்புறம் தான் மீதி கமெண்ட் படிச்சேன்


// அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).// ஜெய் அண்ணாவ இந்த வாரம் நீங்க மாட்டிக்கிட்டீங்களா இந்த கோல கார கும்பல் கிட்ட? போன வரம் என்னைய தூக்கத்துல இருந்து தள்ளி விட பார்த்தாங்க. ஜஸ்ட் மிஸ்ஸூ ஹீ ஹீ :))

Anonymous said...

யாராச்சும் என் கமெண்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு பிடிக்கறதுக்கு முன்னே நான் ஜுட் ... அது கொலை கார கும்பல்

enrenrum16 said...

/இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது )/ அப்ப மூணு மாசக் குழந்தை அழுதா புரியுமா??? யாருக்காவது மூணு மாதக் குழந்தை இருக்கா... உங்க குழந்தை அழுதா டாக்டருக்கு பதிலா ஜெய்லானி வீட்டுக்கு போங்க... இலவசமா வைத்தியம் கிடைக்கும்...ஹி..ஹி...

/எந்த வேலை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் மனோ தைரியம் / எங்க அந்த கடல்ல போய் விழுங்க...ச்சூ...ச்சூ..அழக்கூடாது...மனோதைரியத்தோட போகணும்...(ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு...)....எப்பூடீ?!

ஜெய்லானி said...

@@@மாய உலகம் ..// 62 //

வாங்க சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --
//ஸாதிகா said...
35
அதீஸ் சூப்பர் ஐடியாவாக இருக்கே.முதலில் அதற்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.ஆனால் அந்த கூட்டத்துக்கு என்னை மட்டும் கூப்பிட்டுடாதிங்க.நான் ரொம்ப பிசியாக்கும்.//

ரொம்பவும் ஓவரா நல்லவங்களா நடிக்கப்பிடா:))). //

பாட்டி.... ஸாரி...ஆண்டீஈஈஈ எப்பவுமே இப்படித்தான் கண்டுக்க ப்பிடாது ஹி..ஹி..

//கடவுளே.... வழிவிடுங்க, வான்ஸ்ட மேசைக்குக்கீழ.. மண்..புழுவாமே:))) ஹையோ நான் மாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ:)). //
ஹா..ஹா.. அங்கே அவங்கதான் உரம் போட்டு வளக்குறாங்களாம் பி பி சி நியூஸ் :-))

// நான் இப்போ இடத்தை மாத்திட்டேன், இமாட கட்டிலுக்குக் கீழ இருக்கிறேன்(எல்லாம் ஒரு சேஃப்ரிக்காகத்தான்:))... சொல்லிக்கொடுத்திடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ், பிறகு எலியை ரூமுக்குள் காட்டியே, என்னை வெளில வர வச்சிடுவா:)) //

எலியா இருக்காது அது ஆஆஆ மையா இருக்கப்போது அப்புறம் அது தலையில் பட்டு கால் சிலிப்பாகிடும் க்கி...க்கி...
//கொஞ்சம் பொறுங்க மலைப்பாம்புக்கு ஓடர் கொடுத்திட்டேன்ன்ன்.. பிளைட்ல பைலட் சீட்டில வச்சுக் கொண்டு வருகினமாம்(தப்பி ஓடிடக்கூடதெல்லோ... நான் பாம்பைச் சொன்னேன்:)) //
ஆஹா... பைதான் ..அனகொண்டா ரேஞ்சுக்கு போவீங்கன்னு தெரியாமல் உளாறிட்டேனே அவ்வ் (ஒரு வேளை லேடி டார்ஜானோ அவ்வ்வ்))

//இப்போ வயசாகிட்டுது அதால மறந்திருப்பீங்களென நினைச்சுட்டேன்ன்ன்ன்.... ஆ ஆஆஅ.. வெயார் இஸ் இமாஸ் கட்டில்ல்ல்ல்ல்ல்:))).//

ரிலீஸ் ஆகிட்டுது அங்கே :-))இன்னும் நிறைய தொடர் இருக்கே உஸ்....யப்பா...இப்பவே கண்னை கட்டுதே...!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே //

வாங்க சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@siva -// me the firstu... //

வாங்க நீங்கதான் ஃபஸ்ட்

//me the second //

இப்பவும் நீங்கதான் ரெண்டாவதா வந்திருக்கீங்க :-)

//all 3 very good.
really beautiful answer..
vaalga valamudan. //


அப்போ பரிட்சையில பாஸுன்னா சொல்றீங்க ..நம்பவே முடியல..அவ்வ்வ் ..ஒன்னுமில்ல ஆனந்த கண்ணீர் அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி --//ரெம்ப நாளைக்கு அப்புறம் தொடர்பதிவுல வந்திருக்கீங்க போல.. :) ///

வாங்க ஸ்டீபன் வாங்க ..!! ஓமானில் ஒழுங்கா செட்டில் ஆயாச்சா? மீண்டும் உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி .
ம் ஆமாம் தாயெந்நாடு போ0னதால் நடுவில் பெரிய கேப் வந்ததும் ஒரு சினன் கேப் . :-)

// வாழ்நாளில் செய்ய நினைக்கும் மூன்று காரியங்களும் விரைவில் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்..//

இறைவன் அருளால் நடக்கட்டும் .நாம் வாழ்நாளில் செய்யும் செயல் மட்டுமே நம் கூட வரும் .அதனால சினன் வயதிலிருந்தே இந்த எண்ணம் இருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.-//வேலன் பிரசண்ட் சார்(வேலன் உள்ளேன் அய்யா....)
வாழ்க வளமுடன்.
வேலன். //

வாங்க அண்ணாத்தே வாங்க..!! சந்தோஷம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@M.R --//புயல் அடிக்கும் பொழுது கடற்கரைக்கு போகக்கூடாது சகோ ...
அது ஆபத்து . //
வாங்க வாங்க ..!!ம் தெரியும் ..அப்போது காற்றும் வீசும் வேகமும் அலைகளின் ஆர்ப்பரிப்பும் ஒரு வித திரில் . :-)சுனாமி என்கிற வார்த்தையே நமக்கு இப்போதுதானே தெரியும் ஆனால் அதுக்கு முன் வரை இந்த விளையாட்டு பிடிச்சிருந்தது என்பது உண்மை
// எனக்கும் .அதிலும் டாம் அண்ட் ஜெர்ரி வீட்டில் திட்டு வாங்கிகிட்டே பார்ப்பேன் .ஏனென்றால் அது சின்ன பிள்ளைங்க பார்க்க கூடியதாம் .நானும் குழைந்தை தானே மனதளவில் //

உண்மைதான் சில நேரமாவது கவலைகளை மறந்து நமக்கு ஒரு வித சந்தோஷம் கிடைக்கிறது .அதை விடலாமா என்ன ..!!

//எனக்கும் தான்.சில சமயம் அது என்னமோ நம்மிடம் சொல்ல வருவது போல் இருக்கும் பொழுது நமக்கு ஆதங்கமாக இருக்கும் அதன் பாஷை தெரிய வில்லையே என்று .//

கரெக்ட் .100க்கு 100 :-)

//ஏன் இந்த விபரீத ஆசை சகோ ? //

யோகான்னு ஒன்னு இருக்கே அதுக்கு இந்த வவ்வால்தானே முன்னோடி ..!! இப்போது புரிகிறதா ஹா..ஹா..
//படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:),அப்பாடி எனக்கு நாலு சொர்க்கம் தெரியும் .ஏன்னா நான் நாலு கமன்ட் போட்டுட்டேனே//

இந்த பிளாக் வந்தாலே உங்களுக்கு பாதி ஆப்பர்சூனிட்டி இருக்கு மீதி ஹி...ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி --//திருப்பதிக்கே லட்டா? ஜெய்லானிகே கொஸ்டினா? வாட் எ பிட்டி வாட் எ பிட்டி...:))) //

வாங்க இட்லிமாமி வாங்க .!! நீங்க ஒரு ஆள்தான் என்னைய சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க .. இந்த தொடரை பார்த்தாலே பயந்து ஹார்ட் படக்..படக்ன்னு அடிச்சுக்கிது ஹி..ஹி.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --// ஏன் பல்லை எல்லாம் விலக்கி வைக்குறீங்க// அவர் பல்லு செட் போட்டிருக்கிறார் என்பதை பூடகமாக சொல்றார். //

ஆஹா... போட்டுக்குடுத்திட்டாங்களே அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@En Samaiyal-- ////(1) பல்லு விலக்காம இருக்க முடியாது //

ரீச்சர் ஓடிவாங்க... டமில் டமில்... நான் புடிச்சிட்டேன்ன்ன்ன்:)))).// ஹ்ய் பூஸும் புடிச்சிட்டாங்க. சாரி நான் கமெண்ட் போட்டதுக்கு அப்புறம் தான் மீதி கமெண்ட் படிச்சேன் //

வாங்க சமையல் வாங்க ..!!ஓக்கே இனி விடப்படாது நம்ம சந்தேகத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .அடுத்த பதிவில் ஏதாவது கேட்டே ஆகனும் ஹி..ஹி...


// அதிகம் ஆசையெண்டால் சொல்லுங்கோ... எங்கட:) மகிதலைமையில:)) கூட்டத்தோட:) வந்து, கயிறுபோட்டுத் தொங்கப்பண்ணி.. ஆசையை நிறைவேத்தி விடுறோம்... தலைகீழாகத் தொங்கும் ஆசையைச் சொன்னேன்:)).// ஜெய் அண்ணாவ இந்த வாரம் நீங்க மாட்டிக்கிட்டீங்களா இந்த கோல கார கும்பல் கிட்ட? போன வரம் என்னைய தூக்கத்துல இருந்து தள்ளி விட பார்த்தாங்க. ஜஸ்ட் மிஸ்ஸூ ஹீ ஹீ :)) //

என் முதுகுல ஒரு பாராஷூட் பத்திரமா இருக்கு ,இவங்க மலை உச்சிக்கு கொண்டு போனாலும் பராவாயில்லை இன்னொன்னு சேஃப்டிக்காக பாக்கெட்டில் ஒன்னும் இருக்கு ஹி...ஹி..

//யாராச்சும் என் கமெண்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு பிடிக்கறதுக்கு முன்னே நான் ஜுட் ... அது கொலை கார கும்பல் //
அது இங்கே ரொம்ப சகஜமப்பா சகஜம் யாருமே தமிழ் பண்டிட் கிடையாது ஹி...ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@enrenrum16 --

/இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது )/ அப்ப மூணு மாசக் குழந்தை அழுதா புரியுமா??? யாருக்காவது மூணு மாதக் குழந்தை இருக்கா... உங்க குழந்தை அழுதா டாக்டருக்கு பதிலா ஜெய்லானி வீட்டுக்கு போங்க... இலவசமா வைத்தியம் கிடைக்கும்...ஹி..ஹி... //

வாங்க..வாங்க..!!3 மாச குழந்தை ...ஹி... ஹி... அதுக்கொரு வாயில கொஞ்சம் தேன் தடவினா போதும் ஆட்டோமேடிக்கா சவுண்டு ஸ்டாப் ஹி...ஹி...

/எந்த வேலை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் மனோ தைரியம் / எங்க அந்த கடல்ல போய் விழுங்க...ச்சூ...ச்சூ..அழக்கூடாது...மனோதைரியத்தோட போகணும்...(ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு...)....எப்பூடீ? //

ஏங்க இந்த கொலவெறி...அவ்வ்வ் . என்னோட தொல்லை தாங்காம கடல்ல இருக்கிற உயிரினங்கள் ஊருக்குள்ளே வந்துட்டா ஹா...ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kowsy said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. ஒNரிதமான கேள்விகளானாலும் விடை தருவதில் ஆளுக்கு ஆள் வேறுபட்ட சிந்தனைகள். மிகச்சிறப்பாக நகைச்சுவையாக ரசிக்கக் கூடியவிதமாக முத்துக்கள் மூன்றைத் தந்திருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))