டிஸ்கி :- ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை
கடிகாரம் கண்டுப்பிடிக்காத காலங்களில் சூரிய , சந்திரனின் நிலையை வைத்து பருவகாலங்களை கணக்கிட்டான், அதை வைத்தே விவசாயம் நடந்தது. மழைக்காலங்களில் வேலை இல்லாத போது இருக்கும் அறிவை பயன் படுத்தி சேமிப்பை வளர்த்தான். ஜோதிடம் என்பது இவர்களை பொறுத்த வரை வான சாஸ்திரம், அறிவியல் .ஜோதிடம் ஆரம்பிச்சது அதிகமில்லை சுமார் கிமு 1200 லிருந்து கி மு 400 வரை தான்னு வாக்கிய பஞ்சாங்கம் சொல்லுது . இதுக்கு பிறகு வந்தது எண் கணிதம் ஏன்னு கேட்டா அப்போ டெலஸ்க்கோப் கண்டுப்பிடிக்க படல அதனால துல்லியமா எதுவும் சொல்வதுக்கில்லையாம் .
இதை இன்னும் நல்லா படிக்க உள்ளே போனா ((குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுபவனுடைய நிலைதான்னு இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்றது )) கிணற்று தவளை மாதிரி 7 கிரகம்+ 2 நிழல் கிரகம் உள்ளேயேதான் சுற்றி சுற்றி வரனும். நமது கேலக்சியில(பால் வீதி மண்டலம் ) லட்சக்கணக்குல சூரியனும் சந்திரனும் , நட்சத்திரங்களும் கண்டுபிடிச்சு அதுக்கு பேர் வைச்சு கட்டு படியாகாததால, அதுக்கு நெம்பர் போட்டு வச்சிருக்கான் இப்போதுள்ள மனுஷன் .ஆனால் அங்கே ..?
அந்த கிரகத்துக்கும் நம்ம மனுஷ உடலுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா உடனே பதில் வருவது சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வருது , அது இல்லாம உயிர் வாழ முடியாது , சந்திரன் சுழற்சியால அமாவாசை , பவுர்ணமி அன்னைக்கி அலை அதிகம் இருக்கும் . இதை தவிர வேறு லாஜிக் பதில் வரவே வராது . ((இதை பத்தி சொல்லப் போனா பெரிய தொடரா போயிடுங்கிறதால இதோடு நிறுத்திக்கிறேன் )).
ஒரு வேளை கடிகாரமே கண்டுப்பிடிகாத காலத்தில் மழை எந்த மாசத்துல பெய்யும் , காற்று எந்த திசையில் அடிக்குமுன்னு எழுதி வச்சதுக்கு இது தேவைப்படலாம். ஆனா அதுபடியா நடக்குது.? மனித உடலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை .அப்புறம் அதனால் தோஷம் எப்படி வரும் ((ஹய்யோ ஒரு வழியா பாயிண்டுக்கு வந்துட்டேன் )) மனிதனை படைத்த அந்த இறைவன், உடலில் எங்காவது ஒரு குறை வைத்தானா .? இல்லையே .இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்க்காமல், இரவு பகல் பாராமல் உழைக்குதே..!! அப்படி இருக்கும் போது, இவன் வேலை எதுவும் செய்யாமல், சோம்பேறியா இருப்பதுக்கு, ராகு காலம் எமகண்டம்ன்னு, தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் . எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் .
எனக்கு தெரிஞ்ச ஒருவர் சுமார் 10 வருச காலமா பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். இந்த தோஷம் உள்ளதால லேட்டாகிட்டே போதுன்னு ஒரே புலம்பல் . இவ்வளவுக்கும் அவர் குடும்பம் படிக்காத குடும்பம் இல்லை . அறிவு ஜீவிகள்தான் . ஆனா வேலைக்காகல . நானும் எவ்வளவோ சொல்லியும் சரி வரல. எறும்பு ஊர கல்லும் தேயும் ஒரு நாள், தேய்ந்தது ஆனால் காலம் போனதே..நான் சொன்னது இதுதான்.
எத்தனையோ தெய்வங்களை வணங்குகிறீர்கள் ஓக்கே , இதுவும் போதாமல் கூடவே ஒரு குல தெய்வம் .அதுக்கூடவா உங்களுக்கு நல்லது செய்யாது. அதன் மீதுமா நம்பிக்கை இல்லை .இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன் என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும் உறக்கம் இல்லாமல் வேலை செய்யுதே .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்கா..?
மேலே சொன்னது நம்முடைய கன்ட்ரோல் இல்லை ஓக்கே . இந்த நேரங்களில் நீங்க சாப்பிடாமல் , குடிக்காமல் இருந்து இருக்கீங்களா..? அட்லீஸ்ட் யூரின், டாய்லட் போகாமல்..? ஒரு வேளை பயணத்தில் இருந்தால் ஓடிக்கிட்டு இருக்கும் வாகனத்தை விட்டு இறங்கி அங்கேயே நிற்பீங்களா..? ஏற்போர்ட்டில், பஸ் ஸ்டாண்டுகளில் , ரயில்வே ஸ்டேஷன்களில் அந்த நேரங்களில் எதுவும் இயங்காதுன்னு சொன்னால் நீங்கள் அங்கேயே அமைதியா இருப்பீங்களா..?
இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் .பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது. ((உண்மை காரணம் அது ஓடி விட்டதாக நினைத்து பயந்து அங்கேயே சிறிது நின்று விடுகிறது , நமது கவனமும் சிதறி, அதன் மேலே வண்டியை ஏற்றி விடுகிறோம் )).
உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் . கொடுக்கும் பணத்துக்கேற்ப பலன் கிடைக்கும் .
இருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்கையில் வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை . இதை எல்லாம் நினைத்து பின்னால் அழுவதுக்கு பதில் இப்போதே ஒருமுடிவுக்கு வாங்கன்னு சொன்னேன் .நான் இத்தனை சொல்லிய பிறகு இப்போது ஒரு வழியா மனம் திருந்தி மணம் செய்யப்போகிறார். அவருக்கு என வாழ்த்துக்கள் .
-இல்லை இதில் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்பவர்கள் உங்கள் ஜோதிடரிடம் கீழே உள்ள கேள்வியை கேளுங்கள். போட்டிக்கு வருபவர்கள் கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் .அப்படி சரியாக சொன்னால்............ ..
என்னுடைய வரும் அடுத்த இரெண்டு வருட சம்பளம் மொத்தமாக தருகிறேன். அப்படி அவர் போட்டியில் தோற்றுவிட்டால், அவருக்கு அரேபிய படி ........தண்டனை (( அது எதுவா வேண்டுமானாலும் இருக்கும் )) ரெடி ஸ்டாட் மியூசிக்
1 .அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?
2 . நான் என்ன வேலையில் இருப்பேன். எனக்கு என்ன சம்பளம் கிடைக்கும் ...?
3. அப்போது நான் என்ன கலர் டிரஸ் போட்டிருப்பேன் ..?.
4 .என் பக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் .?.
5 . தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
6 . இதே நேரம் என்ன செய்து கிட்டு இருப்பேன் .
இறைவன் கொடுத்த சுய அறிவை கொண்டு மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள் .அடுத்த வேளை தான் என்ன சாப்பிடப்போகிறோம் என்று சொல்ல முடியாதவர்களா நமது எதிர் காலத்தை சரியா சொல்ல முடியும் .
78 என்ன சொல்றாங்ன்னா ...:
நல்ல இடுகை...
// எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் . //
ரசித்தேன்... கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது... இங்கே எதிராளி என்று யாரைக் குறிக்கிறீர்கள்... அவன் யாருக்கு எதிராளி...?
// ஙே //
இந்த எழுத்தை எப்படி டைப்படித்தீர்கள்... நான் சிலமுறை முயன்று தோற்றிருக்கிறேன்...
// போட்டிக்கு வருபவர்கள் கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் .அப்படி சரியாக சொன்னால்............ ..
என்னுடைய வரும் அடுத்த இரெண்டு வருட சம்பளம் மொத்தமாக தருகிரேன் . அப்படி அவர் போட்டியில் தோற்றுவிட்டால் அவருக்கு அரேபிய படி ........தண்டனை (( அது எதுவா வேண்டுமானாலும் இருக்கும் )) ரெடி ஸ்டாட் மியூசிக் //
நம்ம பதிவுலகில் ஜோதிடம் என்று சொல்லி பிறரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அந்த பதிவர்களின் கண்களில் இந்த வார்த்தைகள் படவேண்டும்...
சூப்பர்!
இதோ பதில்கள்.
1 .அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?
இதே இடத்தில் ஆணி பிடுங்கிக்கொண்டு இருப்பீர்கள்.
2 . நான் என்ன வேலையில் இருப்பேன். எனக்கு என்ன சம்பளம் கிடைக்கும் ...?
வைஸ் பிரசிடென்ட் வேலையில் இருப்பீர்கள். சம்பளம் ஏறக்குறைய 20 லட்சம் ரூபாய் அளவிற்கு வரும்.
3. அப்போது நான் என்ன கலர் டிரஸ் போட்டிருப்பேன் ..?.
ஊதா நிறம்.
4 .என் பக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் .?.
உங்கள் ஸ்டெனோ, பெர்சனல் அசிஸ்டென்ட், சீஃப் மேனேஜர்.
5 . தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
7692.
6. இதே நேரம் என்ன செய்து கிட்டு இருப்பேன் .
ஆபீசில் வெட்டியாக உட்கார்ந்திருப்பீர்கள்.
காசா, பணமா? எதையாச்சும் சொல்லிவைக்கலாம். இரண்டு வருஷம் கழிச்சு கூகிள்காரன் இருந்தா பார்த்துக்கலாம்!!!!
இது எப்ப தொடக்கம் ஜெய்?:)..
//இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் //
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்:)).
//பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.//
கரீட்டாச் சொன்னீங்க:))), இனியும் ஆராவது பூனை குறுக்க போகுதே எனச் சொல்லட்டும் பார்ப்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
ஏழு கிரகங்களையும் பெற்ற ஒருவன்...நல்லா கவனிங்க ஏழு கிரகங்களையும் பெற்ற ஒருவன் நெட் கனெக்சன் இருந்தாலும் கருத்து போடுவேன்... இல்லைன்னாலும் கருத்து போடுவேன்... இருங்க ஜோஸியத்த படிச்சுட்டு வாரேன்....
ஜோதிடத்தை விடுங்கோ... உந்த வான்ஸ்ஸ் சொன்ன “ராசிப் பலன்” என்ன மாதிரி?:)))... அது பார்க்காட்டில் .... ரீ குடிக்காத நிலையாகிடுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).
இண்டைக்கு என் ராசிப்பலனின்படி.... வெள்ளி துலாவிலயாம்:))).... அதுதான் இவ்வளவும் துணிஞ்சு எழுதிட்டன்... ஓக்கே பிறகு வாறன்:)).
தமிழ் மணம் நாலு.... ஜோசியத்த கேளு
ஆ.... மாயா உலகுக்குத்தான் போய் தேட வெளிக்கிட்டேன் மாயாஆஆஆஆஆ வந்திட்டார்:)), முதலை விழுங்கிட்டுதோ என பக்குப் பக்கென்றிருந்துதே....:))))
அருமை
5வது த.ம ஓட்டு
வாழ்த்துக்கள்
ஜோதிடத்தை நம்பி
தம் வாலிபத்தை இழந்து
பாழாய்ப் போனவர்கள்
ஆயிரம் ஆயிரம் பேர்
இந்த பதிவு அவர்களைப் போய் சேரட்டும்....
நன்று.
தமிழ் மணம் 6
நல்ல பதிவு.
எனக்கு மட்டுமல்ல என் அப்பாவுக்கும் இதில் நம்பிக்கை கிடையாது. எல்லா நாளும் நல்ல நாள் என்பார் என் அப்பா. ஆனால் ஒரு சிலருக்கு அதிக நம்பிக்கை. அவரவர் நம்பிக்கையை ஏன் கெடுப்பான் என்று நான் பேசாமல் இருந்துவிடுவதுண்டு. என் கிரகப்படி எனக்கு ஏழரை சனி என்று என் உறவினர் சொன்னார். அடங்கொய்யாலா! அந்த சனிக்கிரகத்தை அலறி ஓட வைக்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறேன்.
அதீஸூ, சும்மா டமாஸூக்கு எழுதியதை சீரியஸா எடுக்கப்படாது. ஓக்கை. இன்று எனக்கு ( இப்ப இரவு 10 மணிக்கு தான் தினப்பலன் பார்த்தேன் ) சாந்தம் என்று போட்டிருக்கு. ஆனால் கொஞ்சம் கோபமாவே/ மூட் சரியில்லாமல் இருந்திச்சு. ஒரு வேளை காலையில் அதைப் பார்த்திருந்தா சாந்தமா இருந்திருப்பனோ என்னவோ?????!!!!
.இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்காமல் இரவு பகல் பாராமல் உழைக்குதே..!! அப்படி இருக்கும் போது இவன் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேரியா இருப்பதுக்கு ராகு காலம் எமகண்டம்ன்னு , தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் //
அய்யய்யோ...குட்டல்லாம் பப்ளிக்ல போட்டு ஒடைக்கிறாரே... இதை கேப்பார் யாருமே இல்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும்//
எனக்கு எல்லாமே பச்சையா தெரியுதே அது என்னவாக இருக்கும் பாஸ்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
.பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை //
பாஸ் என்ன சொல்றீங்க....ஆதிஸ்ஸ்ஸ்ஸ் மியாவ்வ்வ்வ் குறுக்கால இப்ப போச்சுங்களே ...அத பாத்துட்டு தேம்ஸ்ல குதிச்சேன்... பாறையில விழுந்துட்டேன்... அப்ப சகுனம் சரில்லதானே அவ்வ்வ்வ்வ்
கவணமும் //
ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஐ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு
வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை .//
பாஸ் என்னாச்சு ...? ஐஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ... உங்கள நினைச்சாஆஆஆ எனக்கு ரொம்ம்ம்ப்பப்ப்ப்ப்ப்ப பெருமையா இருக்கு
அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?//
ஆஆஆஅன் தேம்ஸ்ல இருப்பேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இது சீரியஸ் அவ்வ்வ்வ்வ்... ஜோதிடம் உண்மை தான்... ஜோதிடர்களில் வேண்டுமானால் பொய்யர்கள் நிறைந்து இருக்கலாம்... எல்லாம் ஒரு கணக்கு தான் பாஸ்... ஐ மீன் மேத்தமேட்டிக்ஸ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது ஜாலி அவ்வ்)
athira said...
7
//பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.//
கரீட்டாச் சொன்னீங்க:))), இனியும் ஆராவது பூனை குறுக்க போகுதே எனச் சொல்லட்டும் பார்ப்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))//
இப்ப தான் போச்சு... கூப்பிட்டு சொல்றதுக்குள்ள ஓடிப்போச்சு நான் என்ன செய்வேன்ன்ன்ன்
athira said...
11
ஆ.... மாயா உலகுக்குத்தான் போய் தேட வெளிக்கிட்டேன் மாயாஆஆஆஆஆ வந்திட்டார்:)), முதலை விழுங்கிட்டுதோ என பக்குப் பக்கென்றிருந்துதே....:))))//
முதலை விழுங்க முயற்சி செய்துச்சூஊஊஊ ஆனா அதுக்கு ஃபிரியா ஜோசியம் பாத்து : முதல முதல ...உனக்கு நேரம் சரியில்ல அதனால ஒரு வருசத்துக்கு அசைவ சாப்பாட்ட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்...உடனே அது சோகமா முழுங்காம போயிடுச்சு.... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்
ஆஜர் சார்!
//ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை//
அப்பாலே எனக்கு இன்னா வேலை..? அடுத்த இடுகைலே பார்க்கலாம். :-))
ஸலாமுன் அலைக்கும் சகோ.ஜெய்லானி.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
//டிஸ்கி :- ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை//---"அப்பாலே எனக்கு இன்னா வேலை..? அடுத்த இடுகைலே பார்க்கலாம். :-))"
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
...என்று செல்வதற்கு முன்... ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும்.
//கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் :-)//
---'ஜோசியம் அறிந்தவர்கள் அடுத்தவர் மனதை அறிவர்' என்று பொருள் வரும்படி இப்படி பொருட்குற்றத்துடன் ஜோசியம் மீது நம்பிக்கை இருப்பது போல முன்னர் மறுமொழியில் எழுதிய சகோ.ஜெய்லானி இடம் இருந்து...
கலக்கல் விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி சகோ.
//முஸ்லீம் பதிவர்ன்னா வெறும் சமையல் பதிவு மட்டுமே எழுதனுமுன்னு போயிடும் போலிருக்கே....!!//
---ஏன் அப்படி போக வேண்டும்..? இப்பதிவு போலோ அல்லது... இதற்கு முந்திய பதிவு போல உபயோகமாக எழுதலாமே..?
மொக்கைகளை விட இதனையே பெரும்பான்மையான மக்கள் தங்களிடம் விரும்புகின்றனர் என்பது என் கணிப்பு சகோ.ஜெய்லானி.
சமீபத்தில் தமிழ்மணத்தில் எதோ ஒரு தலைப்பு ஈர்த்ததால்... அந்த 'வகுப்பறை' என்ற ஒரு வலைப்பூவிற்கு முதல் முறை சென்றேன்...
அட பரிதாபமே...! அது ஒரு ஜோசியம் கற்றுத்தரும் வலைப்பூ..! எனக்கு ஆச்சரியம் என்னவென்றால்... அதில்தான் இரண்டாயிரத்துக்கும் மேலே followers... கொடுமை...! இவ்வளவு தமிழ் மக்களா மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கின்றனர்..?
எனில்... இது போன்று நிறைய விழிப்புணர்வூட்டும் பதிவுகள் நாம் நிறைய எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்...!
வர்டா வருடம் சபரிமலை போகும் பக்தர்கள் அதிகரித்து வருகிரார்கள் அவர்களின் ஒருமண்டல விரதம் மிகவும் பிரசித்தம். 27- நட்சத்திரங்கள். 9 கிரகங்கள் ,12 ராசிகள் சேர்ந்துதான் மனிதனை ஆட்டிப்படைஇகிரதுன்னு நம்பராங்க. அதன்படிதான் ஒருமண்டலத்தை 48 நாட்களாக பிரித்து விரதம்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
///இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன் என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும் உறக்கம் இல்லாமல் வேலை செய்யுதே .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்////
ஷப்பாஅ.....ஒரே பதிவுல எத்தன சிக்சரு... நல்ல விழிப்புணர்வுப் பதிவு...
ஒன்பது கிரகம் மட்டும்தானா? அப்பப் புதுசாக் கண்டுபிடிச்சாங்களே பத்தாவதா ஒண்ணு, அது?
ஜாதக ஜோசியத்தை மட்டும் சொல்லிருக்கீங்க, இந்த நியூமராலாஜி, நேமாலாஜி, ஜெம்மாலாஜி, நாடியாலாஜி.. ச்சே.. நாடி ஜோஸ்யம், கைரேக, கிளி, வாஸ்து, இன்னபிற.. இதுக்கெல்லாம் ஒவ்வொரு பதிவா வருமா? :-)))))
ஜாதகமும் நானும்! - மனோ அக்கா எழுதிய அனுபவப்பதிவு இது, வாசிச்சுப் பாருங்க.
உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள்.///
ஹா ஹா ஹா ஹா ரைட்டு....
நமக்கு ஜாதகமும் கிடையாது, ஜோசியமும் கிடையாது நேரே கையை பிடிச்சி கையில குடுத்து, இனி நீயாச்சு என் தங்கச்சியாச்சுன்னு மூணு அண்ணன்மார் அருவாளோட ஆசீர்வாதம் பண்ணுனாணுக சீவலப்பேரி'காரனுவளாச்சே ம்ஹும்...
யோசியம்!!!!!!!...எமது முயற்சி தான் மிகப் பொரிய யோசியம் சகோதரி...
வேதா. இலங்காதிலகம்.
http://www. kovaikkavi.wordpress.com
ஓட்டு போட்டுட்டேன்.
நல்லதொரு அலசல்.
வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
டிஸ்கி படித்துவிட்டு உள்ளே வந்ததற்கு சாரி.
ஆஹா ...அவசியம்...அருமை...
அப்புறம் ஏன் பதிவுக்கு சம்மந்தமில்லாத டிஸ்கி.
///இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும்//
உண்மைதான் சகோ. இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும் என்று நம்பிக்கை வைத்து மூடநம்பிக்கை அழிந்தால் ஜோசியமும் அழிந்து விடும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி
ஹலோ...!
எங்க....
அந்தப் பக்கம் ஆளையே காணோம்....!
இப்படியா....!
ஆணியப் புடுங்கறது....!
சரி...சரி...!
Advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
// இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு .//
FANTASTIC FABULOUS SUPERB.எனக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது சில வருஷம் முன்பு ஒருவர் வாஸ்து வாஸ்து என்று அவர் வீட்டை மாத்தி கட்டினார் கொஞ்ச நாளில் எதோ சின்ன தீபொறி பட்டு பெரிய சேதாரம் .வாஸ்துபடி மாத்தி கட்டினா தனம் பெருகும் என்று நினைத்தார் ,கடைசியில் பெரிய சேதாரம் .
உருப்படியான பதிவு ஜெய்லானி.
@@@Philosophy Prabhakaran-//நல்ல இடுகை... //
வாங்க ..வாங்க..!! தேங்ஸுங்கோவ் :-)
// எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் . //
ரசித்தேன்... கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது... இங்கே எதிராளி என்று யாரைக் குறிக்கிறீர்கள்... அவன் யாருக்கு எதிராளி...? //
இந்த கேள்வியை கேட்பதால நீங்கதான் எனக்கு எதிராளி அப்புறம் எல்லாமே நல்லதா சொல்லிட்டா பூசை ,புனஸ்காரமுனு காசு பார்க்கமுடியாதே ஹி..ஹி..
//// ஙே //
இந்த எழுத்தை எப்படி டைப்படித்தீர்கள்... நான் சிலமுறை முயன்று தோற்றிருக்கிறேன்...//
NHM ரைட்டரில் n g e e ன்னு அடிச்சா வரும் :)
//நம்ம பதிவுலகில் ஜோதிடம் என்று சொல்லி பிறரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அந்த பதிவர்களின் கண்களில் இந்த வார்த்தைகள் படவேண்டும்...//
கேட்டால் விளக்கம் இப்படித்தான் வரும் , டாக்டர் பொய்யா இருக்கலாம் .ஆனா ஆப்பரேஷன் ஒரிஜினல்.அடப்பாவமே :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வால்பையன் --//சூப்பர்! //
வாங்க ..வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@DrPKandaswamyPhD --//
இதோ பதில்கள்.
காசா, பணமா? எதையாச்சும் சொல்லிவைக்கலாம். இரண்டு வருஷம் கழிச்சு கூகிள்காரன் இருந்தா பார்த்துக்கலாம்!!!! //
வாங்க வாங்க..!! உங்க டைமிங்க் சென்ஸ் நல்லா சிரிச்சேன் .அப்போ போட்டிக்கு ரெடியா .தோத்துட்டா என்ன தண்டனைன்னு சரியா படிச்சீங்களா ஹா..ஹா..அப்புறம்......!!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira --//இது எப்ப தொடக்கம் ஜெய்?:)..//
வாங்க அதிஸ் வாங்க ..!!எது தண்னிக்குள்ளேந்து வெளியே தலையை நீட்டியதா ஹா..ஹா.. :-))
//இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் //
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்:)). //
அப்ப நம்பி தைரியமா வெளியே வரலாம் :-))
//கரீட்டாச் சொன்னீங்க:))), இனியும் ஆராவது பூனை குறுக்க போகுதே எனச் சொல்லட்டும் பார்ப்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))//
ம்..நல்ல கடிச்சி இல்ல இல்ல பிறாண்டி வைப்போம் ஹி..ஹி...:-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மாய உலகம்--//ஏழு கிரகங்களையும் பெற்ற ஒருவன்...நல்லா கவனிங்க ஏழு கிரகங்களையும் பெற்ற ஒருவன் நெட் கனெக்சன் இருந்தாலும் கருத்து போடுவேன்... இல்லைன்னாலும் கருத்து போடுவேன்... இருங்க ஜோஸியத்த படிச்சுட்டு வாரேன்..//
வாங்க..வாங்க..!!ஆஹா..இபப்வே குழப்ப ஆரம்பிச்சிட்டாரே..இன்னும் என்னென்ன வரப்போகுதோ அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira-//ஜோதிடத்தை விடுங்கோ... உந்த வான்ஸ்ஸ் சொன்ன “ராசிப் பலன்” என்ன மாதிரி?:)))... அது பார்க்காட்டில் .... ரீ குடிக்காத நிலையாகிடுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))./
வாங்க வாங்க..!! இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது ஹி..ஹி...காதை கிட்ட கொண்டாங்க .வான்ஸுக்கு காரிய வெற்றின்னு போட்டிருக்காம் (அறுவாளோட இருக்காங்க ) பக்கத்தில போக வேண்டாம் நம்ம உயிருக்கு நோ கேரண்டி :-))
// இண்டைக்கு என் ராசிப்பலனின்படி.... வெள்ளி துலாவிலயாம்:))).... அதுதான் இவ்வளவும் துணிஞ்சு எழுதிட்டன்... ஓக்கே பிறகு வாறன்:)).//
நலல் வேளை அங்கே யாரும் பக்கத்தில இல்லை துணிஞ்சி அரை விடாம விட்டீங்களே அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மாய உலகம் --//தமிழ் மணம் நாலு.... ஜோசியத்த கேளு /
வாங்க ..வாங்க..!!முதல் முறைய இந்த பதிவுக்கு தமிழ் மணம் மண மணக்குது. தேன்ஸுங்கோவ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira --// ஆ.... மாயா உலகுக்குத்தான் போய் தேட வெளிக்கிட்டேன் மாயாஆஆஆஆஆ வந்திட்டார்:)), முதலை விழுங்கிட்டுதோ என பக்குப் பக்கென்றிருந்துதே....:)))) //
வாங்க..வாங்க...!!இன்டைக்கி முதலை விரதமாம்.மாயாவுக்கு தெரியல அதனால தப்பிச்சுட்டார்:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சார்வாகன் --//
அருமை
5வது த.ம ஓட்டு
வாழ்த்துக்கள் //
வாங்க..வாங்க..!! சந்தோஷம் , உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் +ஓட்டுக்கும் நன்றி
//5 . தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
7692.//
ஹா..ஹா..ஹா... ஜெய்... இது மட்டும் கரெக்ட்டா எண்ணி, பதில் சொல்லோணும் ஓக்கை? எண்ணுவதுக்கு ஆள் தேவையெண்டால் மாயாவை அனுப்பி வைக்கலாம்.... வித் முதலை பெர்மிஷன்:))))).
@@@மகேந்திரன் --//
ஜோதிடத்தை நம்பி
தம் வாலிபத்தை இழந்து
பாழாய்ப் போனவர்கள்
ஆயிரம் ஆயிரம் பேர்
இந்த பதிவு அவர்களைப் போய் சேரட்டும்....
நன்று. //
வாங்க..வாங்க..!! கண்டிப்பா யாராவது ஒருவர் திருந்தினால் சரிதான் :-)
//தமிழ் மணம் 6 //
தேங்க்ஸுங்கோவ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Rathnavel --//நல்ல பதிவு. /
வாங்க..வாங்க.!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//முதலை விழுங்க முயற்சி செய்துச்சூஊஊஊ ஆனா அதுக்கு ஃபிரியா ஜோசியம் பாத்து : முதல முதல ...உனக்கு நேரம் சரியில்ல அதனால ஒரு வருசத்துக்கு அசைவ சாப்பாட்ட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்...உடனே அது சோகமா முழுங்காம போயிடுச்சு.... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்///
முதலையை எப்பூடியெல்லாம் சமாளிக்கிறீங்க?:))....சூப்பர்..:))அப்போ “மாயா” அசைவமா?:))) ஹா..ஹா..ஹா..:)).
@@@vanathy --//எனக்கு மட்டுமல்ல என் அப்பாவுக்கும் இதில் நம்பிக்கை கிடையாது. எல்லா நாளும் நல்ல நாள் என்பார் என் அப்பா. //
வாங்க வான்ஸ் வாங்க..!! உண்மையும் அதுதானே :-))
//ஆனால் ஒரு சிலருக்கு அதிக நம்பிக்கை. அவரவர் நம்பிக்கையை ஏன் கெடுப்பான் என்று நான் பேசாமல் இருந்துவிடுவதுண்டு.//
அதுவும் சரிதான் ஆனால் அந்த நம்பிக்கை அவருக்கே தப்பா போகும் போது பார்த்துகிட்டு சும்ம இருப்பது நல்லதில்லைதானே
//என் கிரகப்படி எனக்கு ஏழரை சனி என்று என் உறவினர் சொன்னார். அடங்கொய்யாலா! அந்த சனிக்கிரகத்தை அலறி ஓட வைக்கிறேன் என்று சவால் விட்டிருக்கிறேன்.//
சூப்பர்ப்ப்ப்ப்ப். பாவம் இந்த கிரகமோ சூரியன் பக்கத்தில இருந்து கருகிகிட்டு இருக்கு .அவ்வள்வு சூடு .இது உங்களுகு நல்லது கெட்டது செய்யுமோ அடப்பாவமே :-)
//அதீஸூ, சும்மா டமாஸூக்கு எழுதியதை சீரியஸா எடுக்கப்படாது. ஓக்கை. இன்று எனக்கு ( இப்ப இரவு 10 மணிக்கு தான் தினப்பலன் பார்த்தேன் ) சாந்தம் என்று போட்டிருக்கு. ஆனால் கொஞ்சம் கோபமாவே/ மூட் சரியில்லாமல் இருந்திச்சு. ஒரு வேளை காலையில் அதைப் பார்த்திருந்தா சாந்தமா இருந்திருப்பனோ என்னவோ?????!!!! //
ஒரு தடவை விளையாட்டா பார்க்கும் போது தன லாபமுன்னு போட்டிருந்துச்சி .அன்னைக்கி பார்த்து வயத்த வலி டக்டரிடம் போனதுல 100 ரூ காலி. அப்புரம்தான் தெரிஞ்சுது என்னால டாக்டருக்கு லாபம் .இது எப்படி இருக்கு அவ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//மாய உலகம் said...
19
.பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை //
பாஸ் என்ன சொல்றீங்க....ஆதிஸ்ஸ்ஸ்ஸ் மியாவ்வ்வ்வ் குறுக்கால இப்ப போச்சுங்களே ...அத பாத்துட்டு தேம்ஸ்ல குதிச்சேன்... பாறையில விழுந்துட்டேன்... அப்ப சகுனம் சரில்லதானே அவ்வ்வ்வ்வ்
///
ஹா....ஹா..ஹா...அது பாறையில்லை, முதலையின் வாலாக்கும்:))).
ஒருநாள் காலை ரைவிங் ரெஸ்ட்டுக்கு வெளிக்கிட்டு இருக்கும்போது, இன்றைய நாள்பலன் ஜெயா ரீவில போச்சுது, நல்லதல்ல என இருந்துது.... அன்று நான் பெயிலாகிட்டேன்:((.
அடுத்ததடவை அதேமாதிரி கறுப்பு ரீசேட் போட்டு வெளிக்கிட்டிருந்தேன்... இன்று கறுப்புடை அணிந்தால், லக்காக இருக்கும் எனச் சொல்லியது... அன்று நான் பாசாகிட்டேன்..:))).
நான் நம்புவதென்றில்லை, ஆனா ஒரு பொழுதுபோக்குமாதிரிப் பார்ப்பதுண்டு. தினப் பலன் என்பதால், காலை சொல்வது மாலையில் முடிவை அறிந்திடலாமெல்லோ.... வருஷம் எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை.
“நோயாளி விதியாளியாகின், பரியாரி பெயராளியாம்”///.... சாத்திரமும் சில நேரங்களில் அப்படி அமைந்துவிடுகிறது.
மாயா சொன்னதுபோல, இதுவும் ஒரு கணிப்புத்தான், சரியாக கணிக்கப்படவேண்டும், இப்போ எல்லாமே பணத்துக்காகத்தான்.
//உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் .//
நெசமோ நெசம்....
எல்லாம் அனுபவம்தாங்கோ...
ஜோசியம் மூடநம்பிக்கை..,
தற்போதைக்கு.....
தற்போதைக்கு.....
நல்ல தொழில்
@@@மாய உலகம்-//
.இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்காமல் இரவு பகல் பாராமல் உழைக்குதே..!! அப்படி இருக்கும் போது இவன் வேலை எதுவும் செய்யாமல் சோம்பேரியா இருப்பதுக்கு ராகு காலம் எமகண்டம்ன்னு , தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் //
அய்யய்யோ...குட்டல்லாம் பப்ளிக்ல போட்டு ஒடைக்கிறாரே... இதை கேப்பார் யாருமே இல்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
வாங்க ..வாங்க..!! ஏற்கனவே என்னை பிச்சி பீஸா ஆக்கிட்டு இருக்காங்க ..அது தெரியாம நீங்க வேற ...அவ்வ்வ்வ்வ் :-))
//எனக்கு எல்லாமே பச்சையா தெரியுதே அது என்னவாக இருக்கும் பாஸ்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //
அது ஒன்னுமில்லை வேப்பிலை கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு இருப்பீங்க அதான் ஹி...ஹி... :-))
//
பாஸ் என்ன சொல்றீங்க....ஆதிஸ்ஸ்ஸ்ஸ் மியாவ்வ்வ்வ் குறுக்கால இப்ப போச்சுங்களே ...அத பாத்துட்டு தேம்ஸ்ல குதிச்சேன்... பாறையில விழுந்துட்டேன்... அப்ப சகுனம் சரில்லதானே அவ்வ்வ்வ்வ் //
நல்லா சரியா பார்த்து சொல்லுங்க ..நீங்களா குதிச்சீங்களா இல்லை யாராவது பிடிச்சு தள்ளி விட்டுட்டாங்களா..? ஹா..ஹா..
//கவணமும் //
ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஐ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு//
அது ஒன்னுமில்ல பாஸ்.கொஞ்சம் அதிகம் கவனம் தேவைப்படும் இடத்துல கவணம் அதிகமா தெரியும் ஹா..ஹா.. (ஹைய்யோ ..எப்படியே தப்பியாச்சு ))
// வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை .//
பாஸ் என்னாச்சு ...? ஐஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ... உங்கள நினைச்சாஆஆஆ எனக்கு ரொம்ம்ம்ப்பப்ப்ப்ப்ப்ப பெருமையா இருக்கு //
எனக்குஇதை படிச்சி ஒரே அழுகாச்சியா வருது அவ்வ்வ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மாய உலகம்-//அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?//
ஆஆஆஅன் தேம்ஸ்ல இருப்பேன் //
வாங்க .வாங்க..!! அதுகுள்ள முதல தற்கொலை செய்திருக்கும் ஹி.ஹி. :-)))))))))))))))
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இது சீரியஸ் அவ்வ்வ்வ்வ்... ஜோதிடம் உண்மை தான்... ஜோதிடர்களில் வேண்டுமானால் பொய்யர்கள் நிறைந்து இருக்கலாம்... எல்லாம் ஒரு கணக்கு தான் பாஸ்... ஐ மீன் மேத்தமேட்டிக்ஸ்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது ஜாலி அவ்வ்) //
அண்ட வெளியில கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் இருக்கும் போது ஏன் இந்த 9 கிரகத்தை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கனும் எனி ரீசன் ...????
இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கே :-))
////பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.//
கரீட்டாச் சொன்னீங்க:))), இனியும் ஆராவது பூனை குறுக்க போகுதே எனச் சொல்லட்டும் பார்ப்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))//
இப்ப தான் போச்சு... கூப்பிட்டு சொல்றதுக்குள்ள ஓடிப்போச்சு நான் என்ன செய்வேன்ன்ன்ன் //
ஒரு சித்த வைத்திய குறிப்பு சொல்லவா ..? ரொம்ப உபயோகமா இருக்கும் க்கி...க்கி... :-))
//முதலை விழுங்க முயற்சி செய்துச்சூஊஊஊ ஆனா அதுக்கு ஃபிரியா ஜோசியம் பாத்து : முதல முதல ...உனக்கு நேரம் சரியில்ல அதனால ஒரு வருசத்துக்கு அசைவ சாப்பாட்ட சாப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்...உடனே அது சோகமா முழுங்காம போயிடுச்சு.... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன் //
ஒரு வேளை குளிக்காம அது கிட்டே போய் இருப்பீங்கன்னு நினைக்கிறேன் ஹா..ஹா... :-))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சேட்டைக்காரன் --//ஆஜர் சார்! //
வாங்க..வாங்க..!!சந்தோசம் :-))
//ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை//
அப்பாலே எனக்கு இன்னா வேலை..? அடுத்த இடுகைலே பார்க்கலாம். :-)) //
ஹா..ஹா.. இதுதான் சேட்டையின் குறும்பு :-))... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~--//
ஸலாமுன் அலைக்கும் சகோ.ஜெய்லானி. //
வாங்க..வாங்க..!!வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
//டிஸ்கி :- ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை//---"அப்பாலே எனக்கு இன்னா வேலை..? அடுத்த இடுகைலே பார்க்கலாம். :-))"
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
...என்று செல்வதற்கு முன்... ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். //
ஐயா,சொல்லனுமுன்னு வந்ததும் ஒன்னு என்ன நாலா சொல்லுங்க :-))
//கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் :-)//
---'ஜோசியம் அறிந்தவர்கள் அடுத்தவர் மனதை அறிவர்' என்று பொருள் வரும்படி இப்படி பொருட்குற்றத்துடன் ஜோசியம் மீது நம்பிக்கை இருப்பது போல முன்னர் மறுமொழியில் எழுதிய சகோ.ஜெய்லானி இடம் இருந்து...
கலக்கல் விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி சகோ. //
அதிலேயே ஒரு மெசேஜ் இருந்ததே கவணிக்கலையா..? ”யார் மனதில் என்ன இருக்கு அந்த இறைவனே நன்கறிவான் “ ஹா..ஹா.. :-))
//முஸ்லீம் பதிவர்ன்னா வெறும் சமையல் பதிவு மட்டுமே எழுதனுமுன்னு போயிடும் போலிருக்கே....!!//
---ஏன் அப்படி போக வேண்டும்..? இப்பதிவு போலோ அல்லது... இதற்கு முந்திய பதிவு போல உபயோகமாக எழுதலாமே..? //
பிளாக் உலகில் உங்களைப்போல நிறைய அறிவாளிகள் இருக்கும் போது எனைப்போல ஒரு ஜோக்கராவது இருக்க வேனாமா ஹி..ஹி.. :-))
// மொக்கைகளை விட இதனையே பெரும்பான்மையான மக்கள் தங்களிடம் விரும்புகின்றனர் என்பது என் கணிப்பு சகோ.ஜெய்லானி. //
அவசரப்பட்டு இப்படி தப்புக்கணக்கு போட்டுடாதீங்க பிரதர் நான் ஒரு ஜீரோ :-)))))))))
//சமீபத்தில் தமிழ்மணத்தில் எதோ ஒரு தலைப்பு ஈர்த்ததால்... அந்த 'வகுப்பறை' என்ற ஒரு வலைப்பூவிற்கு முதல் முறை சென்றேன்...
அட பரிதாபமே...! அது ஒரு ஜோசியம் கற்றுத்தரும் வலைப்பூ..! எனக்கு ஆச்சரியம் என்னவென்றால்... அதில்தான் இரண்டாயிரத்துக்கும் மேலே followers... கொடுமை...! இவ்வளவு தமிழ் மக்களா மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கின்றனர்..? //
எல்லோருமே சுவர்கம் போய் விட்டால் நரகம் வேஸ்டாகிடுமே ..!!! நிறைய பெண்களை நரகத்தில் கண்டேன் .அவர்களை அதில் சேர்த்து எதுவென்றால் அவர்கள் நிறைய ........)) ஹதிஸ் பொய்யாகிடுமே :-)))
///எனில்... இது போன்று நிறைய விழிப்புணர்வூட்டும் பதிவுகள் நாம் நிறைய எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்...! //
இதுக்கும் ஒரு பதிவு விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Lakshmi-//வர்டா வருடம் சபரிமலை போகும் பக்தர்கள் அதிகரித்து வருகிரார்கள் அவர்களின் ஒருமண்டல விரதம் மிகவும் பிரசித்தம். 27- நட்சத்திரங்கள். 9 கிரகங்கள் ,12 ராசிகள் சேர்ந்துதான் மனிதனை ஆட்டிப்படைஇகிரதுன்னு நம்பராங்க. அதன்படிதான் ஒருமண்டலத்தை 48 நாட்களாக பிரித்து விரதம்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் //
வாங்க ..வாங்க..!! மேலே மாயாவுக்கு சொன்ன பதிலை பார்த்தீர்களா ..!! கேலக்ஸி என்று ஒத்தை சொல்லால் ஆங்கிலத்தில் அழைக்கும் பேரண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திர , சூரிய குடும்பங்கள் இருக்கும் போது குறிப்பிட்ட சில கிரகங்கள் மட்டும் மனிதனை ஆட்டி படைக்கும் என்பது சரியா..???? சில கோடிக்கணககான மைல் தூரத்தில் இருக்கும் சூரியனுக்கே பல சக்திகள் இருப்பதாக கணக்கு(ஙே) சொல்லும் ஜோதிடம் ஏன் மற்றதை விட்டு விட்டது...? நேரம் இருந்தால் அவர்களிடம் கேளுங்கள்.
நீங்கள் ஜோதிடத்தை நம்பினால் கடவுள் ப(ச)க்தி இல்லை என்று பொருள் , கடவுளை நம்பினால் ஜோதிடம் பொய் .. எது வசதி...? ஒரு மனிதன் ஒரே நேரத்தில் இரெண்டு சைக்கிளில் செல்ல முடியாது .ஹா..ஹா... :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Mohamed Faaique--////இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன் என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும் உறக்கம் இல்லாமல் வேலை செய்யுதே .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்////
ஷப்பாஅ.....ஒரே பதிவுல எத்தன சிக்சரு... நல்ல விழிப்புணர்வுப் பதிவு...//
வாங்க..வாங்க..!! அப்போ சிக்ஸருன்னு நம்பிட்டீங்க .ஹி.ஹி...ஓக்கே ..ஓக்கே..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹுஸைனம்மா --//ஒன்பது கிரகம் மட்டும்தானா? அப்பப் புதுசாக் கண்டுபிடிச்சாங்களே பத்தாவதா ஒண்ணு, அது? //
வாங்க..வாங்க..!! அட அந்த நியூஸ இன்னுமா நீங்க பார்க்கல .அது கிரகம் இல்லையாம் .அதுவும் ஒரு நட்சத்திரமாம் .அதுக்கும் ஒரு நெம்பரை குடுத்துட்டாங்களே .http://news.nationalgeographic.com/news/2006/08/060824-pluto-planet.html
//ஜாதக ஜோசியத்தை மட்டும் சொல்லிருக்கீங்க, இந்த நியூமராலாஜி, நேமாலாஜி, ஜெம்மாலாஜி, நாடியாலாஜி.. ச்சே.. நாடி ஜோஸ்யம், கைரேக, கிளி, வாஸ்து, இன்னபிற.. இதுக்கெல்லாம் ஒவ்வொரு பதிவா வருமா? :-))))) //
ஹா..ஹா.. ஜோதிடமே பித்தலாட்டமுன்னு இருக்கும் போது அது பெத்த பிள்ளையா உண்மையா இருக்கும் .ஹா.....ஹா... :-)))))))
//ஜாதகமும் நானும்! - மனோ அக்கா எழுதிய அனுபவப்பதிவு இது, வாசிச்சுப் பாருங்க.//
முன்பே அதன் இரெண்டாம் பாகம் மட்டும் படிச்ச நினைவு ..ஆனால் அதில் ஒரு முஸ்ஸீம் ஜோதிடம் பார்த்(ப்ப)தாக சொல்வது .......!! நான் மேலே ஒரு போட்டி வைத்திருக்கிறேனே பார்த்தீர்களா..? :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@MANO நாஞ்சில் மனோ--// உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள்.///
ஹா ஹா ஹா ஹா ரைட்டு....//
வாங்க..வாங்க..!! என்னாதூஊஊ ரைட்டா அடப்பாவமே..அவ்வ்வ்வ்
//நமக்கு ஜாதகமும் கிடையாது, ஜோசியமும் கிடையாது நேரே கையை பிடிச்சி கையில குடுத்து, இனி நீயாச்சு என் தங்கச்சியாச்சுன்னு மூணு அண்ணன்மார் அருவாளோட ஆசீர்வாதம் பண்ணுனாணுக சீவலப்பேரி'காரனுவளாச்சே ம்ஹும்...//
யோவ் பார்த்துயா.ஜாக்கிரதை..எனக்கு சின்ன தம்பி , காதலுக்கு மரியாதை படம் நினைவுக்கு வருது ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@kavithai--//யோசியம்!!!!!!!...எமது முயற்சி தான் மிகப் பொரிய யோசியம் சகோதரி...
வேதா. இலங்காதிலகம்.
http://www. kovaikkavi.wordpress.com //
வாங்க..வாங்க..!! மிக சரியா சொல்லி இருக்கீங்க :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அந்நியன் 2--//
ஓட்டு போட்டுட்டேன்.
நல்லதொரு அலசல்.
வாழ்த்துக்கள்.//
வாங்க..வாங்க..!! சந்தோஷம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஆயிஷா அபுல்.--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ //
வாங்க..வாங்க.. அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)
// டிஸ்கி படித்துவிட்டு உள்ளே வந்ததற்கு சாரி.//
அட, இதுல சாரி கேட்க என்ன இருக்கு ..? தைரியமா இங்கே கேட்வி கேட்கலாம் :-)
// ஆஹா ...அவசியம்...அருமை...
அப்புறம் ஏன் பதிவுக்கு சம்மந்தமில்லாத டிஸ்கி.//
யாரும் உண்ணாவிரதம் , போராட்டடமுன்னு கொடி பிடிக்க கூடாதுப்பாருங்க ஹி..ஹி... அதுக்குதான் முன்னெச்சரிக்கை :-))
///இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும்//
உண்மைதான் சகோ. இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும் என்று நம்பிக்கை வைத்து மூடநம்பிக்கை அழிந்தால் ஜோசியமும் அழிந்து விடும். //
இதை வைத்து பணம் சம்பாத்தியம் இல்லாமல் போய்டுமே அவர்கள் விடுவார்களா என்ன ..?? :-))
ஜோசியம், ஜாதகம் நம்புறவங்களும் பரிகாரம்ங்க்ர பேர்ல சாமிக்குத்தானே பண்ணூராங்க. அப்போ பக்தியும் ஜோசியம், ஜாதகம் எல்லாமே ஒன்னிக்குள்ள ஒன்னாதானே இருக்கு?
@@@! ❤ பனித்துளி சங்கர் ❤ ! --//விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறந்த பதிவு . பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி //
வாங்க ..வாங்க..!! சந்தோசம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@காஞ்சி முரளி--//ஹலோ...!எங்க....
அந்தப் பக்கம் ஆளையே காணோம்....! //
வாங்க..வாங்க..!! அங்கே கல்யானத்துக்கு போய்ட்டு பிரியாணியை பத்தி ஒரு கவிதை படம் போடுவீங்கன்னு பார்த்தேன் ஏமாத்திட்டீங்களே அவ்வ்வ் :-))/
// இப்படியா....!
ஆணியப் புடுங்கறது....!
சரி...சரி...!
Advance பிறந்த நாள் வாழ்த்துக்கள்...! //
வாழ்த்துக்கு +உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@angelin --// FANTASTIC FABULOUS SUPERB.எனக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது சில வருஷம் முன்பு ஒருவர் வாஸ்து வாஸ்து என்று அவர் வீட்டை மாத்தி கட்டினார் கொஞ்ச நாளில் எதோ சின்ன தீபொறி பட்டு பெரிய சேதாரம் .வாஸ்துபடி மாத்தி கட்டினா தனம் பெருகும் என்று நினைத்தார் ,கடைசியில் பெரிய சேதாரம் .//
வாங்க..வாங்க..!! சிலர் ஜோதிடம் நம்ம மாட்டாங்க அவங்களிடம் காசு பிடுங்க அருமையான வழி வாஸ்து ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஸாதிகா --//உருப்படியான பதிவு ஜெய்லானி.//
வாங்க ..ஸாதிகாகா வாங்க..!! ஒரே வரியில சொல்லிட்டீங்க பாட்டி வாயால பேரன் வாழ்த்து வாங்கின மாதிரி இருக்கு ஹி..ஹி... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--//5 . தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
7692.//
ஹா..ஹா..ஹா... ஜெய்... இது மட்டும் கரெக்ட்டா எண்ணி, பதில் சொல்லோணும் ஓக்கை? எண்ணுவதுக்கு ஆள் தேவையெண்டால் மாயாவை அனுப்பி வைக்கலாம்.... வித் முதலை பெர்மிஷன்:))))). //
வாங்க ..வாங்க..!! ஹா..ஹா. அதிஸ் இதை அவர் பார்த்தால் ஆனியே பிடிங்க வேணாமுன்னு ஒரே ஓட்டமா ஓடிடுவார் ஹய்யோ..ஹய்யோ..
//முதலையை எப்பூடியெல்லாம் சமாளிக்கிறீங்க? :)).... சூப்பர்..:))அப்போ “மாயா” அசைவமா?:))) ஹா..ஹா..ஹா..:)).//
முதலைகிட்டே மாட்டிகிட்டு இருந்தா முதலை அசைவம் . இவர் சைவமாதான் இருக்கோணும் ஹா..ஹா.. :-)))))))))
//ஹா....ஹா..ஹா...அது பாறையில்லை, முதலையின் வாலாக்கும்:))).//
பாவம் ..நான் சொன்னது முதலையை ஹி..ஹி...
//சாத்திரமும் சில நேரங்களில் அப்படி அமைந்துவிடுகிறது.
மாயா சொன்னதுபோல, இதுவும் ஒரு கணிப்புத்தான், சரியாக கணிக்கப்படவேண்டும், இப்போ எல்லாமே பணத்துக்காகத்தான்.//
இறைவன் வைத்த விதியை ஒன்றே ஒன்றுதான் மாற்ற முடியும் அது பிராத்தனை மட்டுமே ..!!, அப்போ நான் மேலே வைச்சிருக்கும் போட்டிக்கு வறீங்களா ஹா..ஹா.. :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சிசு--//உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் .//
நெசமோ நெசம்....
எல்லாம் அனுபவம்தாங்கோ... //
வாங்க..வாங்க..!! உண்மைதான்.. :-))அவர்கள் தலைவிதி அவர்களுக்கே தெரியாதே..அப்புறம் உங்கள் தலைவிதி யை எப்படி சொல்ல முடியும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சின்னதூரல் --//
ஜோசியம் மூடநம்பிக்கை..,
தற்போதைக்கு.....
தற்போதைக்கு.....
நல்ல தொழில் //
வாங்க.வாங்க..!! சும்ம நச்சுன்னு சொல்லிட்டீங்க :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Lakshmi --//ஜோசியம், ஜாதகம் நம்புறவங்களும் பரிகாரம்ங்க்ர பேர்ல சாமிக்குத்தானே பண்ணூராங்க. அப்போ பக்தியும் ஜோசியம், ஜாதகம் எல்லாமே ஒன்னிக்குள்ள ஒன்னாதானே இருக்கு? //
வாங்க..வாங்க..!! அருமையான கேள்வி கேட்டிருக்கீங்க :-)) . ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் , உங்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை , அவர்களுக்கு பணம் இல்லை யாருக்கு ? தரகருக்கு ..அவரும், ஆயிரம் பொய் சொல்லி அலைய தேவை இருக்காது . நிறைய தேடியதில் இந்த ஜாதகத்துக்கு பெண் (ஆண் ) தேடினேன் 5 ஆயிரம் , 10 ஆயிரம் குடுங்கன்னு உங்களிடம் கேட்க முடியாது . செவ்வாய் , நாக தோஷமுன்னு சொல்லி சாமிக்கு அர்ச்சனைன்னு சொல்லி ஆயிரக்கணக்கில பணம் பிடுங்க முடியாது. கோவிலில் அர்ச்சகருக்கு தட்டில் விழுவது 5 ரூபாய்க்கு மேல் கிடையாது .ஆனால் இதே ஜோதிடர் உங்களிடம் 500க்கு குறையாமல் பிடுங்கி விடுகிறாரே...:-)))))))) .இப்போது புரிகிறதா .? சாமி யார்..? ஆசாமி யார்..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))