Saturday, September 3, 2011

ஒரு .......டைரி....!!!-----3


                      ஜுலை 2010
      ரூம் மேட்டுடன் ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம் சிட்டியை  வலம் வந்தோம் . பேசிக்கொண்டே  வரும் போது அவன் சொன்னான் . காலையிலிருந்தே காது லேசாக அடைப்பது போல இருக்கு  பேசுவது எதுவும் சரியா கேக்கலன்னு சொன்னான் .((ஒரு வேள நம்ம போடும் மொக்கைக்கு பயந்துட்டானோ )) இங்கே ஒரு சையண்டிஸ்ட் வேஸ்டா ((யாரு நாந்தேன் )) இருக்கும் போது கிடைச்ச சான்ஸ விடலாமா வா பக்கத்திலிருக்கும் கிளினிக்குக்கு போகலாமுன்னு வலு கட்டாயமாக கூட்டிகிட்டு  போனேன் . 
        போன  இடத்தில் ஒரு ரிஷப்ஷனிஸ்ட் புன்சிரிப்புடன் (ஆடு மாட்டிகிச்சுங்கிரமாதிரி )டாக்டரிடம் உள்ளே அழைத்துப்போனாள்.அங்கே இருந்ததோ மொத்தமே எங்களை சேர்ந்தது நாலே பேர்தான் . ரூம் மேட்டை அந்த ராட்சத நாற்காலியில் உட்கார வைத்து காதுக்குள் லேசான சுடுதண்ணியை ஸ்பிரே செய்து ஒரு ரூபாய்க்கு பஞ்சை வைத்து சுத்தம் செய்து  (ரெண்டு காதுக்கும் சேர்த்து ) 150 Dhs   வாங்கிகிட்டார் . நண்பன் அழுதுகிட்டே மொய் வச்சான் .
    திரும்ப வரும் போது அமைதியா வந்தான் . ஏண்டா என்ன ஆச்சி இப்பதான் காது நல்லா கேட்குமே ஏன் பேசாமல் வருகிறாய்ன்னு கேட்ட்துக்கு . ஏதாவது ஒன்னு தப்பி தவறி என் வாயில் வந்தா நீ உடனே என்னை ஐ சி யூ விலேயே அட்மிட் செய்துடுவாய் அதான் வாயை திறக்கவே பயமா இருக்குன்னு சொன்னானே பார்க்கலாம் .
     இப்பல்லாம் எந்த பிரச்சனை இருந்தாலும் உஷரா வாயை திறப்பதே இல்லை. ஒரு வேளை பயபுள்ள திருந்திட்டானோ ...!! 

                    ஆகஸ்ட் 2010
இந்த தொடர் இதிலாவது முடியுமா..??  பொறுமையை சோதிக்கிறானே...!!!

      ஒரு கஞ்சப்பய  அன்னைக்கி பார்த்துதான் விருந்துக்கு கூப்பிட்டான் , என்னது இது ஏதாவது மழைவறதுக்கு அறிகுறியா ?  இல்லை , நம்ம ஏழரை என்னைய விட்டுட்டு  போய்ட்டுதான்னு சந்தேகப்பட்டுகிட்டே கூட போனேன் . ஏதோ வீட்டுல சந்தோஷமான விஷயம் நடந்திருக்குப்போல . ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்தான் . (( நானும் அவனும் மட்டுமே )).
     எதை பத்தியும் கவலைப்படாதேன்னு நிறைய  ஐட்டங்கள் ஆர்டர் செய்தான் .அன்லிமிட் பஃபே டைப்  ஒரு வழியா சாப்பிட்டு முடிந்ததும். தன்னோட கிரடிட் கார்டை குடுத்தான் . கொண்டு போன சர்வர் அதே வேகத்துடன் திரும்ப வந்தான் . கார்டு வேலை செய்யலையாம் . இதென்ன சோதனைன்னு நினைச்சிகிட்டே  டெபிட் கார்டை சர்வரிடம் நீட்டினான் . திரும்பவும் சர்வர்  அதே வேகத்துடன் திரும்ப வந்து இந்த கார்டும் வேலை செய்யலைன்னு திரும்ப குடுத்துட்டான்.
      இரெண்டு கார்டும் ஒரே பேங்க்தான் .என்ன பிரச்சனைன்னு தெரியல , வெளியே இருக்கும் ஏ டி எம்மில்  போய் என்னை எடுத்து வரும் படி சொன்னான் . நானும் ரெண்டு கார்டையும் வாங்கி கிட்டு வெளியே வந்தேன் .   கார்டு இரெண்டுமே  ஏ டி எம்மில் சரியாகவே வேலை செய்தது . பணம்  எடுத்துக்கிட்டு வரும் போது சரியாக என் பாஸ் வந்து என் கையபிடிச்சி உடனே வா (ஹெட்) ஆஃபீஸில நெட் ஒர்க் வேலை செய்யலன்னு காருக்குள்ளே தள்ளி விட்டார் .
    நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர்  போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி .கொலவெறியில உட்கார்ந்திருந்ததா  தகவல் .((நான் ஒரு 10 நாள் கழிச்சிதான் அவனையே பார்த்தேன்)) .ம்ம்ம்ம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்  ஹோட்டல் போகும் போது என்னிடம் போன் கையில் இல்லை ரூமிலேயே மறந்து வச்சிட்டு போய்ட்டேன்    
                        செப்டம்பர்  2010
      ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில  15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஆண்களை  விட பெண்களே  அதிகம் . ஒரு வேளை ஆண்களுக்கு படிப்பே ஏறாதோ  என்னவோ .  
    முதல் நாள் புரபஷர் மாதிரி ஒருத்தர் வந்து அரைமணி நேரம் சொந்த புராணத்தை பாடினார் . என்ன கொடுமை இது எங்கே போனாலும் இவனுங்க தொல்லை தாங்கமுடியலைப்பா ..!!  அதுல முக்கியமா  அவர் சொன்னது இதுதான் .அவரும் அதே ((இதே))  இன்ஸ்டிடியூஷனில் படித்து அங்கேயே அவருக்கு வேலை கிடைத்து இருக்கு அதை பெருமையா சொன்னார் .
     இங்கே படிப்பு அவ்வளவு மட்டமாவா இருக்கு .வெளியே வேலை கிடைக்காமதான் .இவர் இங்கேயே  வேலை பார்க்குறார்  போல. இதுல நாம் இங்கே படிச்சால் என்ன ஆகுறது அவ்வ்வ்வ்.. அடுத்த நாளிலிருந்து இந்த ஏரியா பக்கமே தலை வச்சி படுக்கல..ஹி...ஹி...
நா வரமாட்டேன் ....நா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...!!

                 அக்டோபர்  2010     
      ஒரு யூ எஸ் பி டிரைவை வைரஸ் செக் செய்துகிட்டு இருக்கும் போது அதுல ஏகப்பட்ட மால்வேர் டிடக்ட் ஆகிட்டே இருந்துச்சி . அதுல இருக்கும் ஒவ்வொரு exe ஃபைலையும்  போல்டர் exe பைலா அது டூப்ளிகேட்டா காப்பி செய்து இருந்தது தெரிய வந்துச்சி .  ஒரு கட்டத்துல அது அப்படியே மேற்கொண்டு  தொடராம அப்படியே நின்னுடுச்சி  .எந்த ஒரு கீபோர்ட் , மவுஸும் செயல்படல .
      கம்ப்யூவை ஒரு தடவை அப்படியே ஸ்விட்ஜ் ஆஃப் செய்துட்டு திரும்ப ஆன் செய்தால் கருப்பு ஸ்கிரீனில்  சீடி டிரைவில இருப்பதை வெளியே எடுத்து விட்டு ஆன் செய்யும் படி சொன்னது . அப்படி இல்லாவிட்டால் ரீஸ்டார்ட்  செய்யும் படி சொன்னது . உள்ளே இருக்கும் 80 ஜிபி ஐட்டமும் காலி ப்போலன்னு நினைச்சி ஒரே பீலீங் .
     என்ன செய்தாலும் அதே கருப்பு ஸ்கிரீன் அதே ரீஸ்டார்ட் . கிட்ட தட்ட 3 மணி நேரமும்  டிரை செய்தும் ஒன்னும் ஆகல . கடைசியா  பி சி பின் பக்க கதவை திறந்து விட்டு காற்று அடிக்கும் ஏர் புளோரை வைத்து நன்றாக ((பிராச்சர் ஃபேன் , பவர் சப்ளை உள்ளே , அவுட் ஃபேன் )) காற்றடித்து உள்ளே இருக்கும் தூசியை வெளியேற்றினேன்.
     திரும்ப ஆன் செய்யும் போது எந்த தொந்திரவும் செய்யாமல் நல்ல பிள்ளையை போல அமைதியா வேலை செய்தது.  பவர் சப்ளையிலோ  அல்லது பிராச்சர் மேலே இருக்கும் ஃபேன் இதுல ஏதாவது தூசி சேர்ந்தாலோ  அல்லது சின்ன எலக்டிரிக் தடங்கல் வந்தாலும் கம்ப்யூ ஸ்லோவா ஆகிடும்.
இதுல உள்ள நீதி என்னன்னா  அவரசப்பட்டு  எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்)  களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்
                 நவம்பர்  2010   
            இது வரை மத்தவங்களுக்கு பல்ப் குடுத்து வந்த எனக்கு மொத்தமா பல்ப் கிடைச்ச கதை இது அவ்வ்வ்வ்...மேலே நன்பணின் கிரெடிட் கார்டு அனுபவங்களால், கிரெடிட் கார்டுகளை வெளியே கொண்டு போவதில்ல்லை . அதுக்கு பதில் டெபிட் கார்டை கொண்டு போனேன். ஒரு ஷாப்பிங்  மாலில் மாடியில் 50 க்கு பர்ஸேஸ் செய்தேன் . அதுக்கு பிறகு கீழே வந்து 500க்கு பர்ஸேஸ் செய்யும் போது பணம் இல்லைன்னு ரிசிப்ட்  வந்தது. இதென்ன கொடுமை
     மூனு தடவை புல்லிங் செய்தும் இல்லைன்னே வந்தது .பிலிப்பைனி பொன்னு ஒரு மாதிரியா என்னை பார்க்க இப்பதான் மேலே பர்ஸேஸ் செய்தேன் பார்ன்னு ரிசிப்டை காட்ட வேறு ஆள் மூலம் மேலே கொண்டு போய் புல்லிங் செய்ய சரியா ரிசிப்ட் வந்துச்சி . நான் பழைய மூனு பில்லையும்  கையோடு கொண்டு வந்துட்டேன். ( இதான் என்னோட புத்திசாலிதனம் )இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க
     அடுத்த அரை மணிநேரம் கழிச்சு அதே பேங்கில் போய் பனம் எடுக்க போகும் போது 2000 திரம்ஸ்   குறைவா காட்டியது . பயந்து போய் மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க பர்ஸேஸ்  500 நாலு தடவை காட்டியது .இதுல வேடிக்கை ஒரு தடவைதான்  சரியான பில் மற்ற மூனும் தவறான பில்லே வந்தது.  ஆக பர்ஸேஸ் செய்த நேரம் இரவு என்பதால் பொழுது விடியும் வரை பொறுமையா இருந்தேன்
    மறு நாள் காலை ரிஜக்டாக இருந்த மற்ற மூனு பில்லும் என் கைவசம் இருந்த்தால் பேங்கில் காட்ட நீன்ன்ன்ன்ண்ட இடைவேளைக்கு (எதுக்கும் ஒரு லிட்டர் பால் குடிச்சிட்டு போங்க  நிறைய பேச தெம்பு வேனும் )பிறகு ஃபார்ம் எழுதி கொடுத்து அது செக் செய்து திரும்ப வர 15 நாள் பிடிச்சது. அது வரை டென்ஷன் தான் . அன்றிலிருந்து எங்கே போனாலும் நோ டெபிட் கார்டு  , ஒன்லி கேஷ்தான் .
   இதில் உள்ள நீதி : கார்டு யூஸ் செய்பவர்கள் . பண்ம் இல்லைன்னு வந்தாலும் அந்த துண்டு சீட்டை பத்திரமா வாங்கி வைக்கனும் , முடிந்த வரை அடுத்த அரை மணி நேரத்தில் சரியான அளவு பணம்தான் எடுக்கப்பட்டிருக்குதான்னு  உங்க பேங்க் அக்கவுண்டை செக் செய்யனும் .இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்படனும் . தப்பாக தெரிந்தால் 2 நாட்களுக்குள் பேங்கிற்கு உடனே போகனும் .இல்லாவிட்டால் பணம் கிடைக்காது .
                      டிஸம்பர் 2010 
யப்பா கடிதாங்க முடியல..!!  யாராவது காப்பாத்துங்கோவ்வ்வ்வ்வ்வ்

     வேலை நேரத்துல நம்ம ஃபிரண்டுக்கு அவன் லவர் கிட்டேயிருந்து போன் .(( இந்த பொண்ணுகளுக்கு மிஸ்டு காலை தவிர வேறு ஒன்னுமே தெரியாது )) கிட்ட தட்ட முக்கால் மணி நேரமா பேசினான் .திரும்ப வர மாதிரி தெரியல இதுவேலைக்காகாதேன்னு   கிட்டக்க போய் கேட்டதுல முக்கிய விஷயம்  இதுதான்  
      சீக்கிரமா அவனையே  கல்யாணம் செய்துக்குறேன் நம்புன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்கு . இவன் நம்பாத மாதிரியே  பேசிசிகிட்டு இருந்தான் . இந்த லவ்வு கிட்டதட்ட ஓரு வருஷமா ஓடிகிட்டு இருந்தது .இப்ப நம்ம்மாட்டேங்கிறானேன்னு எனக்கும் வருத்தம் . ஆண்கள் ஏமாற்றிதான் நாம இது வரை கேட்டிருக்கோம் .இங்கே இதென்ன புதுசா நம்ம பய கொ(கெ)ஞ்சிறானேன்னு எனக்கு ஆச்சிரியம் .
     இருந்தும் அவங்கள் பேச்சில நாம குறுக்கே போக்க்கூடாதுன்னு பேசாம இருந்தேன். கடைசியா இவன் சொன்னான் உங்க வீட்டில யாரையும் நான் நம்பமாட்டேன் அதுவும் கடைசியா கேட்டது. ஏன் நம்ம மாட்டேங்கிறே .அதுக்கு இவன் சொல்றான் இதையே தான் உங்க மூத்த அக்கா என்னிடம் சொல்லிச்சு , அப்புரம் வெளிநாட்டு மாப்பிள்ளையை பாத்ததும்  என்னைய கைவிட்டுடுச்சி “  பிறகு உன்னோட இன்னொரு அக்காவும் அதேதான் சொல்லிச்சு , அப்புறம் வசதியா ஒருத்தனை பாத்ததும் அவனையே  கல்யாணம் செய்துகிச்சு .
     இப்ப நீயும் அதே டயலாக்கை சொல்றே. அதான் நம்ம முடியலே”  ன்னு  சொன்னானே  பார்க்கலாம். அதுக்கு பிறகு எதிர் முனையிலிருந்து பதிலையே கானோம் போன் கட்..      
   விடாமுயற்சி கேள்விபட்டு இருக்கேன் .இது மாதிரி ஒரே வீட்டில ரூட் விடற  விடாமுயற்சியை கேட்டதே இல்லை .இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி  அவ்வ்வ்வ்வ்J)

    ஒரு வழியா தொடரை முடிச்சிட்டேன்னு நினைக்காதீங்க .இன்னும் நாலு வேற தொடர் பாக்கி இருக்கு .யாரோ  கூப்பிட்ட நினைவு இருக்கு ஆனா சட்டென்னு நினைவுக்கு வரல :-)

பிளேடு குறிப்பு :- ஒரு அன்பு சகோதரியின்  வேண்டுக்கோளுக்காக மட்டும் சில  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அவருக்கு என் நன்றி :-)

88 என்ன சொல்றாங்ன்னா ...:

மாய உலகம் said...

டைரியின் முதல் வரி....

மாய உலகம் said...

ஹோட்டல்ல காத்திருந்த பய மேல ரொம்ப நாளா காண்டு வச்சிருந்து தீத்துக்கிட்ட மாறி தெரியுது... பாஸ் கார்ல தள்ளி 20 கிலோமீட்டர் போறவரைக்கும் சைலண்டா இருந்துருக்கியேப்பா ஹா ஹா ஹா....

மாய உலகம் said...

நல்ல வேளை இந்த வாரம் நான் பார்ட்டிக்கு உங்கள கூப்பிட்டு போலம்னு இருந்தேன்... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்....

இமா க்றிஸ் said...

ஒரு மூச்சுப் பிடிச்சு எழுதி முடிச்சிட்டீங்க. ;)

அது சரி... டைரின்னா?? ஒவ்வொரு மாசத்துக்கும் ஒரு நாள்தானா?? எப்புடி????

Mohamed Faaique said...

august'க்கு பிறகு டைரியே இருக்காது`னு நெனச்சேன், அந்தக் பய கஞ்சனா இருந்தாலும் நல்ல பையனா இருப்பான் போலிருக்கு,...

Mohamed Faaique said...

///இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க ///

இந்த வரிய பாத்துடு மறுபடி மேல இருந்து படிச்சுடு வந்துட்டேன்.. ச்சே.. என் கடமை உணர்ச்சி கூடிக்கிட்டே போகுது பாஸ்..

சி.பி.செந்தில்குமார் said...

>>இதில் உள்ள நீதி : கார்டு யூஸ் செய்பவர்கள் . பண்ம் இல்லைன்னு வந்தாலும் அந்த துண்டு சீட்டை பத்திரமா வாங்கி வைக்கனும் , முடிந்த வரை அடுத்த அரை மணி நேரத்தில் சரியான அளவு பணம்தான் எடுக்கப்பட்டிருக்குதான்னு உங்க பேங்க் அக்கவுண்டை செக் செய்யனும் .இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்படனும் . தப்பாக தெரிந்தால் 2 நாட்களுக்குள் பேங்கிற்கு உடனே போகனும் .இல்லாவிட்டால் பணம் கிடைக்காது .

அய்யோ. குண்டைத்தூக்கிப்போட்டீங்களே?

மாய உலகம் said...

.இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி அவ்வ்வ்வ்வ்J)//

நண்பேண்டா

மாய உலகம் said...

கடைசியா இவன் சொன்னான் ”உங்க வீட்டில யாரையும் நான் நம்பமாட்டேன்” அதுவும் கடைசியா கேட்டது. ”ஏன் நம்ம மாட்டேங்கிறே” .அதுக்கு இவன் சொல்றான் ”இதையே தான் உங்க மூத்த அக்கா என்னிடம் சொல்லிச்சு , அப்புரம் வெளிநாட்டு மாப்பிள்ளையை பாத்ததும் என்னைய கைவிட்டுடுச்சி “ பிறகு உன்னோட இன்னொரு அக்காவும் அதேதான் சொல்லிச்சு , அப்புறம் வசதியா ஒருத்தனை பாத்ததும் அவனையே கல்யாணம் செய்துகிச்சு .
இப்ப நீயும் அதே டயலாக்கை சொல்றே. அதான் நம்ம முடியலே”//

ச்சே எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க்ய...பாவம் அவனும் எத்தனை பேருக்கிட்டதான் ஏமாறுவான்... நம்ம செய்லானி அண்ணே மாறி வெவராமாருக்கோனுமுள்ள அவ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

தமிழ் மணம் மூணு போட்டது நானு

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல நான் என்னை திருத்திக்கிறேன். அப்புறமா ஊரை திருத்த வாரேன் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் அநேக ஆயிரம் பலப் வாங்கி நாசமா போவ....

MANO நாஞ்சில் மனோ said...

மூணு மணி நேரமா உக்கார்ந்து இருந்த நண்பனாக நான் இருந்தா அருவா கண்டிப்பா ரத்தம் பார்த்திருக்கும் நல்லவேளை தப்பித்தீர் படுபாவி....

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பெருநாள் வாழ்த்துக்கள்.

தொடர் இன்னும் முடியவில்லையா ?

ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }

ஸாதிகா said...

//ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//
ஆயிஷா..ஹா..ஹா..ஹா..எப்படிப்பா இப்படி எல்லாம் கேட்கறீங்க?

அந்நியன் 2 said...

கதை படிப்பதற்கு அருமையாக இருக்கு பாஸ்.

நல்ல காமெடியாவும் போகுது வாழ்த்துக்கள் பாஸ்.
தமிழ்மணமும் போட்டாச்சு.

குறையொன்றுமில்லை. said...

படிக்கலாம் சுவாரசியமாத்தான் இருக்கு. இன்மேல தப்பித்தவறிக்கூட உங்களை யாரும் தொடர்பதிவு எழுதச்சொல்லி மாட்டிக்கமாட்டாங்கன்னு நினைக்கிரேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

எல்லா நீதியும் ஓகே.டைரியின் கடைசி கதை ஓவரா இருக்கே

Angel said...

டைரி சுவாரஸ்யமா போகுது .தொடருங்கள்

Angel said...

கமென்ட் போட்டேன் எனக்கு சொர்க்கம் தெரியும்தானே

எம் அப்துல் காதர் said...

// கமென்ட் போட்டேன் எனக்கு சொர்க்கம் தெரியும்தானே //

ஆமா .... அந்த சொர்க்கம் கண்ணிலிருந்து வெளியாகி சொட்டு சொட்டாய் வடியும் பாருங்க... அடடா அதற்கு ஈடு இணை இல்லை..

எம் அப்துல் காதர் said...

//ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//

ஸாதிகா said...

ஆயிஷா..ஹா..ஹா..ஹா..எப்படிப்பா இப்படி எல்லாம் கேட்கறீங்க?

....கவலையை கேட்டா எப்படி கொடுப்பதென்று தான்....!!!

எம் அப்துல் காதர் said...

// வேலை நேரத்துல நம்ம ஃபிரண்டுக்கு அவன் லவர் கிட்டேயிருந்து போன்//

அந்த பிரெண்ட் யாரு பாஸ்... அது நீங்க தானே!! என் கிட்ட மட்டும் சொல்லுங்க!!

Asiya Omar said...

ஒன்றுக்கு இரண்டு தடவை வாசிக்கனும் போல..புரியுது ஆனால் புரியலை..

மாய உலகம் said...

ஆயிஷா அபுல். said...
14
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பெருநாள் வாழ்த்துக்கள்.

தொடர் இன்னும் முடியவில்லையா ?

ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//

ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா நான் கேக்க மறந்த கேள்விய இவங்க கேட்டுட்டாங்க... ஹா ஹா ஹா ஹா ஹா.. என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்....

மாய உலகம் said...

ஸாதிகா said...
15
//ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//
ஆயிஷா..ஹா..ஹா..ஹா..எப்படிப்பா இப்படி எல்லாம் கேட்கறீங்க?//


நீங்க வேற ரிப்பீட்டா என்னால ஏற்கனவெ சிரிப்ப அடக்க முடியல...

மாய உலகம் said...

angelin said...
20
கமென்ட் போட்டேன் எனக்கு சொர்க்கம் தெரியும்தானே//

சொர்க்கம் தெரியுனுமுன்னா நீங்க மாய உலகத்தை சுத்த போனுமாக்கும் அவ்வ்வ்வ்

Philosophy Prabhakaran said...

மதுரை முத்துன்னு ஒருத்தர் வரிசையா ஜோக் சொல்லுவாரே... அந்த மாதிரி கலக்கலா இருந்துச்சு பதிவு...

ப.கந்தசாமி said...

காலங்கார்த்தால தெரியாம உள்ள வந்துட்டேன். இன்னக்கிப் பூராவும் கடிதான்னு தலைல எழுதியிருந்தா மாத்தவா முடியும்???!!!

அஸ்மா said...

சலாம் சகோ!

//நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர் போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி//

அடப்பாவமே..!

//இதுல உள்ள நீதி என்னன்னா அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்) களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்//

உண்மைதான் சகோ. அங்கங்கே 'நீதி' சொல்லியிருப்பது அருமை!

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

ரொம்ப்ப்ப்ப்ப்ப நாள் கழிச்சி........... படிக்கலாம்னு வந்தால் அடுத்தடுத்து அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள், உரைநடையில், சொல்லப்படும் விஷயங்களில், சொல்லப்படும் தொனியில்.... பாய்.... கவனமாக இருக்கவும். ஒரு கேமரா ஆஃப் ஆவதே இல்லையாம்....!!

ஆமினா said...

:-)

Jaleela Kamal said...

mm oஒ oஒரு வழியா இழு இழுனு இழுத்து மூடிச்சிட்டீங்க போல

இராஜராஜேஸ்வரி said...

ஆப்பு அசைத்த குரங்கு, வெளியே வராத பூனையார், கடி வாங்கும் நாயார் அருமையான சிம்பாலிக் ஷாட்ஸ். சூப்பர். பாராட்டுக்கள்.

Aashiq Ahamed said...

சகோதரர் ஜெய்லானி,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

தாங்கள் பதிவில் உபயோகப்படுத்தியுள்ள பின்வரும் வாக்கியங்கள்...

====
அங்கே நிறைய பாலி கிளினிக்குகள் இருந்தது . அதில் ஒரு மலையாளி பச்சைகிளி வரு வருன்னு வரவேற்று உள்ளே டாக்டரிடம் கூட்டி போனது
.......
ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஏகப்பட்ட சிட்டுக்குருவிகளும் , மைனாக்கள் , பஞ்ச வர்ன கிளிகளும் வந்திருந்துச்சி.
=====

இதற்கு உங்களின் விளக்கம் வேண்டும் சகோதரர்.

ஒரு முஸ்லிம் சகோதரர், சகோதரிகளை நோக்கி இப்படியான வார்த்தைகள் உபோகிக்கலாமா?, இது இஸ்லாம் அனுமதித்த ஒன்றா?, இது நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? இவ்வாறான வார்த்தை உபயோகம் இறைவனிடத்தில் அங்கீகரிக்கபடுமா?

உங்களின் இந்த செயல் பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாங்கள் விளக்கம் கூற வேண்டும். தங்களின் பதில் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன். இன்ஷா அல்லாஹ்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

சாந்தி மாரியப்பன் said...

உண்மையிலேயே தொடர் பதிவுன்னா அது இதான். வருஷக்கணக்கா இல்லே தொடருது. ஜூப்பரு. இப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க :-)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

//அங்கே நிறைய பாலி கிளினிக்குகள் இருந்தது . அதில் ஒரு மலையாளி பச்சைகிளி வரு வருன்னு வரவேற்று உள்ளே டாக்டரிடம் கூட்டி போனது //

வேண்டாமே இது போன்ற வார்த்தைகள்.

//ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஏகப்பட்ட சிட்டுக்குருவிகளும் , மைனாக்கள் , பஞ்ச வர்ன கிளிகளும் வந்திருந்துச்சி.//

இது போன்ற உவமானங்கள் பல சகோக்களின் மனதில் உங்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும். அதை விடுங்கள், மார்க்கம் சொல்லித்தராத, வெறுக்கின்ற செயல்களை நாம் செய்யும் போது மற்ற சகோக்கள் இவர்களும் இப்படித்தான் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்தும்.

Mrs.Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

மாய உலகம் said...

பதிவ எழுதிட்டு பயந்து எஸ்கேப் ஆகிட்டாரா ஆளேயே காணோம்.... அப்ப தளத்தையே சுட்டர வேண்டியதான்...//ஜெய்லானி
நாம் மகிழ்வதைக் காட்டிலும், பிறரை மகிழ்விப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது// எல்லாரும் பாத்துக்குங்கப்ப இன்று முதல் என் தளம்.. யார்யா திட்றது... இல்லைங்க இது என் தளம் இல்ல சத்தியமா இது ஏன் தளம் இல்ல சொன்னா நம்ப மாட்றாங்க்ய அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

நினைவுப் பகிர்வுகளைச் சுமந்தபடி டைரி நகர்கின்றது.
மொக்க போட்டே ஒருவனோட காதை அடைச்சீங்க என்றா நீங்க எம்புட்டுப் பெரிய ஆளுங்களா
இருப்பீங்க;-)))))))))))))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஹா...ஹா..ஹா... டயறி முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்:)). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும் தேவையும் இல்லாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

நில்லுங்க படிச்சிட்டு வாறன்:)).

முதலில் பார்த்தது படங்களைத்தான்... என்னா கடி அது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))...

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//மாய உலகம் said...
10

தமிழ் மணம் மூணு போட்டது நானு
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாயாவின் இந்த வோட்டுப் போடும் தொல்லை தாங்க முடியலியே:))))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஏகப்பட்ட சிட்டுக்குருவிகளும் , மைனாக்கள் , பஞ்ச வர்ன கிளிகளும் வந்திருந்துச்சி. //

அடடா எழுத்திலேயே 1000 வோல்ட்டு பல்ப் எரியுதே அப்போ முகத்தில?... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

/பி சி பின் பக்க கதவை திறந்து விட்டு காற்று அடிக்கும் ஏர் புளோரை வைத்து நன்றாக ((பிராச்சர் ஃபேன் , பவர் சப்ளை உள்ளே , அவுட் ஃபேன் )) காற்றடித்து உள்ளே இருக்கும் தூசியை வெளியேற்றினேன். //

இப்பூடி நாங்களும் வீட்டில செய்யலாமா? எங்கட டெஸ்க்ரொப்பும் பலமா ஃபான் சத்தம் போடுது... புசுக்கென நிண்டிடுமோ (நான் பிசியைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனப் பயம்மாக் கிடக்கு:)).
5/9/11 11:03 AM

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//.இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி அவ்வ்வ்வ்வ்J)//


இப்போ எனக்கு மூட் அவுட் வந்துருச்சே அவ்வ்வ்வ்வ்:))).. ஏன் எதுக்கென ஆரும் கேய்க்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//டைரியின் முதல் வரி.. //
வாங்க வாங்க ..!! இன்னுமா புரியல மூனாவதும் முடிஞ்சிப்போச்சே ஹா..ஹா.. :-)

//ஹோட்டல்ல காத்திருந்த பய மேல ரொம்ப நாளா காண்டு வச்சிருந்து தீத்துக்கிட்ட மாறி தெரியுது... பாஸ் கார்ல தள்ளி 20 கிலோமீட்டர் போறவரைக்கும் சைலண்டா இருந்துருக்கியேப்பா ஹா ஹா ஹா....//

பாயிண்ட கப்புன்னு பிடிச்சிகிட்ட மாதிரி தெரியுதே ஹி..ஹி.. அப்போது பார்த்து ரோடில எந்த டிராஃபிக்கும் இல்லை அதான் அந்த ஆளோட கெட்ட நேரம் :-)
//நல்ல வேளை இந்த வாரம் நான் பார்ட்டிக்கு உங்கள கூப்பிட்டு போலம்னு இருந்தேன்... நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்....//


அடடா நல்ல சான்ஸ் மிஸ்ஸாகிப்போச்சே அவ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//ஒரு மூச்சுப் பிடிச்சு எழுதி முடிச்சிட்டீங்க. ;) //

வாங்க வாங்க ..!! மொத்தம் 356 பதிவுகள் இருக்கு , மொத்தமா போட்டா நீங்க பதிவுலகத்தை விட்டே பயந்து ஓடிட்டீங்கள்னா என ஆகிறது அதுக்குதான் முன்யோசனை ஹா..ஹா..

அது சரி... டைரின்னா?? ஒவ்வொரு மாசத்துக்கும் ஒரு நாள்தானா?? எப்புடி????

ஆஹா...என் சந்தேகத்தை எல்லாம் நீங்களே கேட்டா எப்பிடி :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//august'க்கு பிறகு டைரியே இருக்காது`னு நெனச்சேன், அந்தக் பய கஞ்சனா இருந்தாலும் நல்ல பையனா இருப்பான் போலிருக்கு,... //

வாங்க வாங்க ..!! இன்னும் சில தொடர்கள் பாக்கி இருப்பதால் அதையும் முடிக்கனுமே பாஸ் , அதான் சீக்கிரமே முற்றும் போட்டாச்சு , அட நம்ம நண்பருக்கு ஒரு ஓட்டு எக்ஸ்டிராவா விழுதே , ஆனாலும் நீங்க ரொம்பவும் அப்பாவீஈஈஈ... ஹி..ஹி..

/////இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க ///

இந்த வரிய பாத்துடு மறுபடி மேல இருந்து படிச்சுடு வந்துட்டேன்.. ச்சே.. என் கடமை உணர்ச்சி கூடிக்கிட்டே போகுது பாஸ்..//

ரொம்பவும் வெய்யில் (நோன்பு முடிந்ததும் திரும்ப ) அடிக்க ஆரம்பிச்சிடுச்சி அதானுங்க விஷயம் ஹா..ஹா.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார்--//

>>இதில் உள்ள நீதி :

அய்யோ. குண்டைத்தூக்கிப்போட்டீங்களே? //

வாங்க வாங்க ..!! உண்மைதான் பாஸ் ,இந்த விஷயத்துல எப்பவும் ஜாக்கிரதையா இருங்க .ஒரு சிறு தவறால நிறைய அலைய வேண்டி வரும் .:-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--//இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி அவ்வ்வ்வ்வ்J)//

நண்பேண்டா //

வாங்க வாங்க ..!! ஹா.ஹா.. அதேதான் :-))

//ச்சே எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க்ய...பாவம் அவனும் எத்தனை பேருக்கிட்டதான் ஏமாறுவான்... நம்ம செய்லானி அண்ணே மாறி வெவராமாருக்கோனுமுள்ள அவ்வ்வ்வ்வ்வ்வ் //

ஆஹா..சைக்கிள் கேப்பில ஏதோ சொல்ல வறமாதிரி இருக்கே மாட்டிக்காத கைப்புள்ளே எஸ்கேப்பாயிடூஊஊஊ

//தமிழ் மணம் மூணு போட்டது நானு // அட நேராகவா..? கிடைமட்டமாவா? அவ்வ்வ் :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//முதல்ல நான் என்னை திருத்திக்கிறேன். அப்புறமா ஊரை திருத்த வாரேன் ஹி ஹி.. //

வாங்க வாங்க ...!! ஜிம்மி வால் எப்பவாவது நிமிர்ந்து இருக்கா ? எதுக்குய்யா இந்த விஷப்பரிட்சை .

//இன்னும் அநேக ஆயிரம் பலப் வாங்கி நாசமா போவ....//

என்னது இது ஆசிர்வாதம் ரொம்பவும் குறைச்சலா இருக்கு இன்னும் கொஞ்சம் மீட்டருக்கு மேலே போட்டு குடுக்க ராஸா:-)

//மூணு மணி நேரமா உக்கார்ந்து இருந்த நண்பனாக நான் இருந்தா அருவா கண்டிப்பா ரத்தம் பார்த்திருக்கும் நல்லவேளை தப்பித்தீர் படுபாவி....//

அவசரப்படாதீரும் ஓய் , நான் மனாமா வரும் போது ஒரு மீட்டீங் போடலாம் ராயல் மெரீடியன்ல சரியா பரவாயில்லை நீரே பில் பே செய்யும் ஹி...ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆயிஷா அபுல்--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ //

வ அலைக்கும் வஸ்ஸாலாம் (வரஹ் )

//பெருநாள் வாழ்த்துக்கள். //

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் . ((ஸாரி வேலை பிசியில எநத பிளாகுக்கும் வந்து சொல்ல முடியவில்லை ))

// தொடர் இன்னும் முடியவில்லையா ? //

இன்னும் 4அ தொடர் பாக்கி இருக்குன்னு நினைக்கிரேன் :-)
// ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ } //

சகோன்னு சொல்லிட்டு இது மாதிரி கேட்டா என்ன சொல்றது , நீங்களும் நம்ம இனமா ஆகிட்டீங்களே அவ்வ்வ்வ் . இன்னும் கொஞ்சம் டிரை பண்ணுங்க ஜோக் தானா வரும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா-- //ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//
ஆயிஷா..ஹா..ஹா..ஹா..எப்படிப்பா இப்படி எல்லாம் கேட்கறீங்க? //

வாங்க வாங்க ..!! ஸாதிகாக்காவ் , நம்ம பிளாக் வரவங்களுக்கு நகைச்சுவை உணர்வு தானாவே சுரக்கும் , நமக்கும் அதான் பிடிக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதானே ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--//கதை படிப்பதற்கு அருமையாக இருக்கு பாஸ். //

வாங்க பாஸ் வாங்க ..!! சந்தோஷம் டேக் இட் பாலிஸிதானே நம்மோடது :-)

//நல்ல காமெடியாவும் போகுது வாழ்த்துக்கள் பாஸ்.
தமிழ்மணமும் போட்டாச்சு. //

சந்தோஷமா இருந்தா சந்தோஷம்தான் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi --//படிக்கலாம் சுவாரசியமாத்தான் இருக்கு. இன்மேல தப்பித்தவறிக்கூட உங்களை யாரும் தொடர்பதிவு எழுதச்சொல்லி மாட்டிக்கமாட்டாங்கன்னு நினைக்கிரேன். //

வாங்க வாங்க ..!! ஹி..ஹி... நானும் அப்படித்தான் நினைக்கிறேன் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar --//எல்லா நீதியும் ஓகே.டைரியின் கடைசி கதை ஓவரா இருக்கே //

வாங்க வாங்க ..!! பாத்தீங்களா படிச்ச உங்களுக்கே ஓவரா இருந்த கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும் அவ்வ்வ் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin--//டைரி சுவாரஸ்யமா போகுது .தொடருங்கள் //


வாங்க வாங்க ..!!என்னது தொடரவா...? நல்லா கேளுங்க பொது ஜனங்களே இந்த தொடரை தொடரச்சொல்லி கேட்கிறாங்க . சரின்னு சொல்றவங்க மட்டும் கையை அங்கிருந்தே தூக்குங்க பார்க்கலாம் ...!! எங்கே யாரையுமே காணோம் ..??? இப்பதானே நிறைய பேர் இங்கே இருந்த மாதிரி தெரியுது ..!! அவ்வ்வ்வ்

//கமென்ட் போட்டேன் எனக்கு சொர்க்கம் தெரியும்தானே //

ஏஞ்சல்ன்னு பேரை வச்சிகிட்டு இந்த கேள்வி கேக்குறீங்களே அவ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--// கமென்ட் போட்டேன் எனக்கு சொர்க்கம் தெரியும்தானே //

ஆமா .... அந்த சொர்க்கம் கண்ணிலிருந்து வெளியாகி சொட்டு சொட்டாய் வடியும் பாருங்க... அடடா அதற்கு ஈடு இணை இல்லை. //

வாங்க வாங்க ..!! அனுபவஸ்தன் நீங்க சொன்னா அப்போ சரியாதான் இருக்கும் ஹி..ஹி...

// //ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//

ஸாதிகா said...

ஆயிஷா..ஹா..ஹா..ஹா..எப்படிப்பா இப்படி எல்லாம் கேட்கறீங்க?

....கவலையை கேட்டா எப்படி கொடுப்பதென்று தான்....!!! //

ஆஹா... நமக்கு அதானே பெரிய கவலை :-))

//
அந்த பிரெண்ட் யாரு பாஸ்... அது நீங்க தானே!! என் கிட்ட மட்டும் சொல்லுங்க!! //

நீங்க வந்தா இந்த கேள்வியைதான் கேப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் , ஆனா சொல்லமாட்டேனே ஹை ...அஸ்கு புஸ்கு..:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar-//ஒன்றுக்கு இரண்டு தடவை வாசிக்கனும் போல..புரியுது ஆனால் புரியலை..//

வாங்க...வாங்க..!! புத்திசாலி நீங்க , நான் அங்கே போட்டதை அப்படியே இங்கே போட்டுட்டீங்க :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--//ஆமா சகோ ஏன் ரெம்ப கவலையா உட்கார்ந்து இருக்கீங்க ?{ஆகஸ்ட் 2010 போட்டோ }//

ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா நான் கேக்க மறந்த கேள்விய இவங்க கேட்டுட்டாங்க... ஹா ஹா ஹா ஹா ஹா.. என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்....//

வாங்க ..வாங்க ..!!ஹி..ஹி...இதை கேட்டதும் எனக்கே சிரிப்பு தாங்கல :-))

//நீங்க வேற ரிப்பீட்டா என்னால ஏற்கனவெ சிரிப்ப அடக்க முடியல. //

நல்ல வேளை இன்னும் அதையே யாரும் கேடகவில்லை தப்பிச்சேன் ஹா..ஹா..

//சொர்க்கம் தெரியுனுமுன்னா நீங்க மாய உலகத்தை சுத்த போனுமாக்கும் அவ்வ்வ்வ் //

எதுக்கும் ஒரு ஹெலி இருந்தா வசதியா இருக்குமுன்னு சொல்லிடப்போராங்க மக்கா ஜாக்கிரத :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Philosophy Prabhakaran--//மதுரை முத்துன்னு ஒருத்தர் வரிசையா ஜோக் சொல்லுவாரே... அந்த மாதிரி கலக்கலா இருந்துச்சு பதிவு...//

வாங்க ..வாங்க..!! சந்தோஷம் , நீங்க ஒரு தொடருக்கு என்னைய கூப்பிடுங்களேன் பார்க்கலாம் ஹி...ஹி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD -//காலங்கார்த்தால தெரியாம உள்ள வந்துட்டேன். இன்னக்கிப் பூராவும் கடிதான்னு தலைல எழுதியிருந்தா மாத்தவா முடியும்???!!! //

வாங்க ..வாங்க..!!ஹி...ஹி... கூச்சமா இருக்கு ரொம்பவும் என்னைய புகழ்றீங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஸ்மா--//சலாம் சகோ! //

வ அலைக்கும் வஸ்ஸலாம்(வரஹ் )

//நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர் போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி//

அடப்பாவமே..! //

வாங்க ..வாங்க..!!ஆமா பாவம்தான் நானு என்னைய பிடிச்சு கொண்டுப்போனா அந்த நேரத்துல நான் என்னதான் செய்யுறதாம் ஹா..ஹா.. :-)

//இதுல உள்ள நீதி என்னன்னா அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்) களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்//

உண்மைதான் சகோ. அங்கங்கே 'நீதி' சொல்லியிருப்பது அருமை! //
எப்போதுமே நம்முடைய விஷயங்கள் கூடுமான வரை வெளியே போகாமல் இருப்பதுதான் சேஃப்டி. அதுவுமில்லாம இடைவெளி விட்டு இரெண்டு காப்பி எடுத்து வைப்பது எப்போதுமே நலம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--//அஸ் ஸலாமு அலைக்கும் பாய், //

வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ் )
//ரொம்ப்ப்ப்ப்ப்ப நாள் கழிச்சி........... படிக்கலாம்னு வந்தால் அடுத்தடுத்து அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள், உரைநடையில், சொல்லப்படும் விஷயங்களில், சொல்லப்படும் தொனியில்.... பாய்.... கவனமாக இருக்கவும். ஒரு கேமரா ஆஃப் ஆவதே இல்லையாம்....!! //

வாங்க ..வாங்க..!!இங்கே மாற்றுக் கருத்துக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும். கமெண்ட் மாடரேஷனே கிடையாது . அனானிக்கு மட்டும் அலவ்டு இல்லை .உங்கள் மனதில் உள்ளதை தைரியமா சொல்லலாம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா --// :-) //

வாங்க வாங்க..!! இந்த புன்னகைக்கும் வருகைக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//mm oஒ oஒரு வழியா இழு இழுனு இழுத்து மூடிச்சிட்டீங்க போல //

வாங்க ...வாங்க..!! இன்னும் இழுக்கலாம்தான் ஆனா பிளாக்ஸ்பாட் தாங்குமான்னு சந்தேகமா இருக்கு ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி--//ஆப்பு அசைத்த குரங்கு, வெளியே வராத பூனையார், கடி வாங்கும் நாயார் அருமையான சிம்பாலிக் ஷாட்ஸ். சூப்பர். பாராட்டுக்கள்//

வாங்க ..வாங்க ..!! சில பொருத்தமான படங்கள் யோசிச்சதுல இது சரிவரும் போல தோன்றியதால் இதைப்போட்டேன் . என்னோட அனுபவங்களும் சில இதுப்போலதானே அவ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Aashiq Ahamed --//சகோதரர் ஜெய்லானி, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு... //

வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)

// தாங்கள் பதிவில் உபயோகப்படுத்தியுள்ள பின்வரும் வாக்கியங்கள்...

====
அங்கே நிறைய பாலி கிளினிக்குகள் இருந்தது . அதில் ஒரு மலையாளி பச்சைகிளி வரு வருன்னு வரவேற்று உள்ளே டாக்டரிடம் கூட்டி போனது //


வாங்க ..வாங்க ..!! நீங்க கேட்பது பொருட் குற்றமா , இல்லை சொல் குற்றமான்னு தெரியலையே ..!!

எப்படி பார்த்தாலும் ஒரு மொக்கை பிளாகில இது வரை யாருமே கேள்வி கேட்டது இல்லை .நான் மட்டும்தான் சந்தேகமா கேட்டுகிட்டு இருக்கேன் .இதுல ஏகப்பட்ட பதிவு சந்தேகப்பதிவுதான் :-)
வருன்னு சொன்னா மலையாளத்துல வாங்கன்னு அர்த்தம்
// ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஏகப்பட்ட சிட்டுக்குருவிகளும் , மைனாக்கள் , பஞ்ச வர்ன கிளிகளும் வந்திருந்துச்சி. //

இதில் அழகை கழுதை, பன்னி , நாய்ன்னு மக்கள் வெறுக்கும் பெயர்களில் சொல்லாமல் மக்கள் விரும்பும் பெயரில் சொன்னேன் . என் மனதில் என் மனதில் எந்த கெட்ட எண்ணமுமில்லை .((ஆண்களை ஆண்களே வர்னித்தா அதுக்கு அசிங்கமான ஆங்கில பெயர் ஒன்னு இருக்கு )) அதுவுமில்லாம இதில் உடல் அங்கங்களை பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை :-)
=====

// இதற்கு உங்களின் விளக்கம் வேண்டும் சகோதரர்.

ஒரு முஸ்லிம் சகோதரர், சகோதரிகளை நோக்கி இப்படியான வார்த்தைகள் உபோகிக்கலாமா?, இது இஸ்லாம் அனுமதித்த ஒன்றா?, இது நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையா? இவ்வாறான வார்த்தை உபயோகம் இறைவனிடத்தில் அங்கீகரிக்கபடுமா? //

இந்த ஜெய்லானி பிளாக் ஒரு மொக்கைகளின் கதம்பம் இதில் நான் மதத்தை திணிக்க விரும்பவில்லை . அதற்கு வேறு என்னுடைய இன்னொரு பிளாக் இருக்கு .அதில் வீண் பேச்சுக்களே கிடையாது :-)

// உங்களின் இந்த செயல் பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.//

அவர்கள் தைரியமாக கமெண்ட் இடலாமே ..!! அதுவுமில்லாமல் என்னுடைய மெயில் புரோஃபைலில் இருக்கே .!! கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் :-)

//இது குறித்து தாங்கள் விளக்கம் கூற வேண்டும். தங்களின் பதில் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன். இன்ஷா அல்லாஹ்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ //

எப்போது வேண்டுமானாலும் வரலாம் .கமெண்ட் ஆப்ஷன் திறந்தே இருக்கு :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர் --// :) //

வாங்க..வாங்க..!! ஆஆஆஆ..நம்ம அக்பர்ர்ர்.. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம்.. பதிவு எதுவும் எழுதுவதில்லையா..? இல்லை என்னுடைய ரீடரில் காட்டுவதில்லையா..? நல்லா இருக்கீங்களா பாஸ் :-)குரு இல்லாம சிஷ்யர் மட்டுமே அங்கே ஓட்டுவது கஷ்டம்தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --//உண்மையிலேயே தொடர் பதிவுன்னா அது இதான். வருஷக்கணக்கா இல்லே தொடருது. ஜூப்பரு. இப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க :-) //

வாங்க சாரலக்கா வாங்க..!! இன்னும் இரெண்டு பதிவு இழுக்கலாமுன்னு பார்த்தேன் . இப்பவே கையில ஏகே 47னோட கொலைவெறியில சுத்துரதா கேள்வி . இதுல மெயிண்டெயினா க்கி..க்கி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) --//
அஸ்ஸலாமு அலைக்கும் //

அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ் )



வேண்டாமே இது போன்ற வார்த்தைகள்.



இது போன்ற உவமானங்கள் பல சகோக்களின் மனதில் உங்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும். அதை விடுங்கள், மார்க்கம் சொல்லித்தராத, வெறுக்கின்ற செயல்களை நாம் செய்யும் போது மற்ற சகோக்கள் இவர்களும் இப்படித்தான் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்தும். //

வாங்க ..வாங்க .!! ஒரு சகோஸின் தனிப்பட்ட வேண்டுதலால் அந்த வார்த்தைகளை நீக்கி விட்டேன் :-) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mano Saminathan --//வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/ //

வாங்க.. வாங்க..!!ரொம்பவும் சந்தோஷம் , என்னுடைய பழைய வலைசர நினைவுகளும் நினைவில் வருது :-) எனனியும் அதில் குறிப்பிட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி.

லிங்க் குடுக்கும் போது தலைப்பை ஒரு முறை கிளிக்கி விட்டு வரும் மேலே வரும் அடரஸை குடுத்தால் நேரடியாக அந்த இடுகைக்கு போய் விடலாம் .இல்லாவிட்டால் இந்த வாரம் முடிந்தாலோ இல்லை அடுத்த மாதம் வந்தாலோ சரியான லிங்க் இல்லாமல் வலைசர முகப்பு பக்கத்துக்கே போய் விடும் . :-)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//பதிவ எழுதிட்டு பயந்து எஸ்கேப் ஆகிட்டாரா ஆளேயே காணோம்.... அப்ப தளத்தையே சுட்டர வேண்டியதான்...//

வாங்க.. வாங்க..!!ஓடி விடலை பிரதர், சில கடமைகளில் ரூமுக்கு வரவே நேரம் கிடைப்பதில்லை , வேண்டுமானால் நல்ல விலைக்கு எடுத்துக்கோங்க.. 200 சதம் டிஸ்கவுண்ட் கூட கிடைக்கும் போதுமா . இந்த பிளாக் வாங்கினா இன்னும் ரெண்டு பேரின் பிளாகையும் நான் சுட்டு தருகிரேன் யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க . ஹி..ஹி..
//ஜெய்லானி
நாம் மகிழ்வதைக் காட்டிலும், பிறரை மகிழ்விப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது// எல்லாரும் பாத்துக்குங்கப்ப இன்று முதல் என் தளம்.. யார்யா திட்றது... இல்லைங்க இது என் தளம் இல்ல சத்தியமா இது ஏன் தளம் இல்ல சொன்னா நம்ப மாட்றாங்க்ய அவ்வ்வ்வ்வ்வ்வ் //

இந்த வார்த்தையை போட்டது யாருன்னு நான் சொல்ல மாட்டேனே ஹி..ஹி... :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira -//ஹா...ஹா..ஹா... டயறி முடிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்:)). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லும் தேவையும் இல்லாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))./

வாங்க ..வாங்க .!! போன பதிவில நீங்க மிரட்டிட்டு போனதால பயந்துபோயிட்டேன் .ஒரு சின்ன பிள்ளய கர்ர்ர்ர் சொன்ன பயந்துடாதா அவ்வ்வ்

// நில்லுங்க படிச்சிட்டு வாறன்:)). //

கால் வலிக்குது அவ்வ்வ்...அவ்வ்வ்..அவ்வ்

// முதலில் பார்த்தது படங்களைத்தான்... என்னா கடி அது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))... //

கடி வாங்கிய ஆள்தானே அவ்வ்வ் சொல்லனும் இப்ப நீங்க சொல்றீங்க அவ்வ்வ்வ்வ் :-))

//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாயாவின் இந்த வோட்டுப் போடும் தொல்லை தாங்க முடியலியே:)))) //

இன்னொரு முதலையை எடுத்து வெளியே விட்டுடுவோமா? ஹி..ஹி..
//அடடா எழுத்திலேயே 1000 வோல்ட்டு பல்ப் எரியுதே அப்போ முகத்தில?... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

யாரு நானா கிரேட் எஸ்கேப்தான் . அரைகுறை ஆடைகளுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான் . ஒரு முறை கம்ப்யூ படிக்க சேரும் போது இதே தொல்லையால் படிக்காமலே வந்துட்டேன் .படித்திருந்தால் ஃபிரெஞ்ச் சர்டிஃபிகேட் கிடைத்து இருக்கும் .சான்ஸ் போச் :-(

//இப்பூடி நாங்களும் வீட்டில செய்யலாமா? எங்கட டெஸ்க்ரொப்பும் பலமா ஃபான் சத்தம் போடுது... புசுக்கென நிண்டிடுமோ (நான் பிசியைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனப் பயம்மாக் கிடக்கு:)).//

தாராளமா செய்யலாம் . பிசியை ஆஃப் செய்து விட்டுதான் செய்யனும் . காற்றடிச்சால் ஃபேன் சத்தம் போடுவது நின்று விடும்.தூசி அதிகம் ஆனால் சீக்கிரம் சூடாகி எஸ் எம் பி எஸ் பவர் சப்ளை , பிராசசர் சூடாகி கெட்டுப்போகும் (எரிந்து போகும் )

// இப்போ எனக்கு மூட் அவுட் வந்துருச்சே அவ்வ்வ்வ்வ்:))).. ஏன் எதுக்கென ஆரும் கேய்க்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). //

ஹி...ஹி... இதெல்லாம் பிளாக் வாழ்கையில சகஜம்ப்பா கூல்ல்ல்ல்ல் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன் --// நினைவுப் பகிர்வுகளைச் சுமந்தபடி டைரி நகர்கின்றது. //

வாங்க ..வாங்க..!!அட நீங்க வேர நினைவா ஒரே எரிச்சல் பாஸ் ஹி..ஹி.. :-))
// மொக்க போட்டே ஒருவனோட காதை அடைச்சீங்க என்றா நீங்க எம்புட்டுப் பெரிய ஆளுங்களா
இருப்பீங்க;-))))))))))))) //

இந்த பிளாகே அப்படிதானே ஓடிகிட்டு இருக்கு பாஸ் ஹா..ஹா.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

சஜோ.ஜெய்லானி...

//வாங்க ..வாங்க ..!! நீங்க கேட்பது பொருட் குற்றமா , இல்லை சொல் குற்றமான்னு தெரியலையே ..!!//

பதிவு எழுதும் முஸ்லிம் பதிவர்களுக்கான ஒழுக்கக்குற்றம். அதை உணர்ந்து நீக்கியமைக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி. சுட்டிக்காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.

//எப்படி பார்த்தாலும் ஒரு மொக்கை பிளாகில இது வரை யாருமே கேள்வி கேட்டது இல்லை.//---அப்படியா சங்கதி..? இனி கேட்டுட வேண்டியதுதான்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நீங்கள் சகோ.ஆஷிக் கிற்கு கொடுத்த மறுமொழியில் முந்தய திருத்தப்படாத பதிவை விட இன்னும் பெரிய தவறுகள் உள்ளனவே சகோ.ஜெய்லாணி.

//இந்த ஜெய்லானி பிளாக் ஒரு மொக்கைகளின் கதம்பம் இதில் நான் மதத்தை திணிக்க விரும்பவில்லை . அதற்கு வேறு என்னுடைய இன்னொரு பிளாக் இருக்கு .அதில் வீண் பேச்சுக்களே கிடையாது :-)//

எப்படி..?
இந்த ரெண்டு பிளாக்கையும் எழுதுவது ஒரே மூளைதானே..?
சகோ.அன்னு சொன்ன அந்த கேமிராவில் இரண்டு ஜெய்லானிகளின் பிம்பமா பதிகிறது..?

இதுபோல பத்தோ நூறோ மொக்கை பிளாக் வைத்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு முகம்-குணம் காட்டினாலும் அவை அனைத்துக்கும் ஒரே ஆள்தானே சகோ அங்ங்ங்ங்ங்ங்கே பதில் சொல்லியாக வேண்டும்..?

சரிதானே நான் கேட்பது..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இதில் அழகை கழுதை, பன்னி , நாய்ன்னு மக்கள் வெறுக்கும் பெயர்களில் சொல்லாமல் மக்கள் விரும்பும் பெயரில் சொன்னேன் .//

---இதெல்லாம் அழகானவைதான் என கொடுக்கி பதிவர் இக்பால் செல்வன் மற்றும் அவரின் நாத்திக சகாக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவர்கள் உங்கள் மொக்கை வாசகர்கள் எனில் அதற்காக அப்படியும் சொல்வீர்களா..?

மனிதனை மனிதன் என்றே சொல்லலாமே..!

சரி... நீங்கள் சொன்னதற்கு என்ன அர்த்தம் படிப்பவர்களால் புரிந்து கொள்ளப்பட்டது என்பதை உங்கள் சக பதிவர் சகோ.அதிரா தெளிவாகவே சொல்லிவிட்டாரே..!

///////////////////////////////////////////////
athira said...
44

//பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஏகப்பட்ட சிட்டுக்குருவிகளும் , மைனாக்கள் , பஞ்ச வர்ன கிளிகளும் வந்திருந்துச்சி. //

அடடா எழுத்திலேயே 1000 வோல்ட்டு பல்ப் எரியுதே அப்போ முகத்தில?... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
5/9/11 11:01 AM
///////////////////////////////////////////////

அப்புறம் நான்கு நாள் கழிச்சி நீங்கள் விளக்கம் சொல்லி என்ன பலன்...? எல்லாரும் படிச்சிட்டு புரிஞ்சிட்டு போய்ட்டாங்களே சகோ..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//அவர்கள் தைரியமாக கமெண்ட் இடலாமே ..!! அதுவுமில்லாமல் என்னுடைய மெயில் புரோஃபைலில் இருக்கே .!! கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் :-)//

எனக்கு இது ஏற்புடையாக இல்லை சகோ.ஜெய்லானி.

பதிவில் ஒரு தவறை ஒரே ஒருவர் சுட்டிக்காட்டினால் மெஜாரிட்டி இல்லை என்பீர்களா..? தவறா... என்ன தவறு... என்று ஆராய மாட்டீர்களா..?

உங்கள் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்தான். சந்தேகமில்லை. அனைவரின் கருத்தும் அறிந்தால்தான் உண்மையை ஏற்றுக்கொள்வேன் என்றால் அனைவரிடமும் இந்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அதை விட்டுவிட்டு.... இதற்காகவெல்லாம் போய் ஜோசியகாரனிடம் விழுந்து மூடநம்பிக்கையை கற்றுக்கொள்ளாதீர்கள். அதன்மூலமெல்லாம் மற்றவரின் மனதில் இருப்பதை அறிய முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அப்படி 'முடியும்' என்று மட்டும் இருந்திந்தால்... இந்நேரம் உலகின் மிக அதிகமாக பீஸ் புடுங்கி பணம் சம்பாரிக்கும் காலேஜ்... ஜோசியம் சொல்லித்தரும் காலேஜ் ஆகத்தான் இருந்திருக்கும்..!

அதை கற்றவர்தான் உலகம் முழுக்க பிரதமர் அதிபர் அரசர் என்றெல்லாம் பெரும் பதவியில் இருந்திருப்பார்கள்..!!

பித்தனின் வாக்கு said...

akkka ithukkththan unnai manguni kuda serathey sonnan ketitaya?. intha kadi thanga mudiyalai.

but nalla solliyiruka jai. padikka suvarasyama irukku.

ஜெய்லானி said...

@@@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ --//
//வாங்க ..வாங்க ..!! நீங்க கேட்பது பொருட் குற்றமா , இல்லை சொல் குற்றமான்னு தெரியலையே ..!!//

பதிவு எழுதும் முஸ்லிம் பதிவர்களுக்கான ஒழுக்கக்குற்றம். அதை உணர்ந்து நீக்கியமைக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி. சுட்டிக்காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.

முஸ்லீம் பதிவர்ன்னா வெறும் சமையல் பதிவு மட்டுமே எழுதனுமுன்னு போயிடும் போலிருக்கே....!! ஏன்னு கேட்டா அதுக்கு மட்டுமே நல்லா இருக்கு , ஆகா , சூப்பர்ன்னு பதில் போட முடியும் ஹா..ஹா..:-)
வாங்க ..வாங்க..!!
//எப்படி பார்த்தாலும் ஒரு மொக்கை பிளாகில இது வரை யாருமே கேள்வி கேட்டது இல்லை.//---அப்படியா சங்கதி..? இனி கேட்டுட வேண்டியதுதான்.

ஆனா என் சந்தேகத்துக்கு சரியா பதில் சொல்வீங்கதானே ஹி..ஹி.. எப்படியும் சொல்லிக்காம எஸ்கேப் ஆகிடக்கூடாது :-)

//எப்படி..?
இந்த ரெண்டு பிளாக்கையும் எழுதுவது ஒரே மூளைதானே..?
சகோ.அன்னு சொன்ன அந்த கேமிராவில் இரண்டு ஜெய்லானிகளின் பிம்பமா பதிகிறது..? //
பாஸ் எப்பவும் தினமும் ஒரே சமையலை சாப்பிட முடியாதில்லையா..? இன்னைக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சி இருக்கேன் போல ..நீங்களும் என்னைய அடிச்சி பெரியளாக பாக்குறீங்களா..? நான் அந்தளவுக்கு வொர்த் இல்லையே ஹி..ஹி...

//இதுபோல பத்தோ நூறோ மொக்கை பிளாக் வைத்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் ஓவ்வொரு முகம்-குணம் காட்டினாலும் அவை அனைத்துக்கும் ஒரே ஆள்தானே சகோ அங்ங்ங்ங்ங்ங்கே பதில் சொல்லியாக வேண்டும்..?

சரிதானே நான் கேட்பது..? // யார் மனதில் என்ன உள்ளது அந்த இறைவன் நன்கறிவான்

//அப்புறம் நான்கு நாள் கழிச்சி நீங்கள் விளக்கம் சொல்லி என்ன பலன்...? எல்லாரும் படிச்சிட்டு புரிஞ்சிட்டு போய்ட்டாங்களே சகோ..! //

எனக்கு பிளாக் ஒரு வருமானம் இல்லை , ஒரு வடிகாலமட்டுமே, ரிலாக்ஸ் செய்ய .. ஆனா இன்னும் ””சில இடத்தில்”” வேலையை விட்டுட்டு என்னைய போட்டு பந்தாடிகிட்டுதானே இருக்காங்க .ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ -//அவர்கள் தைரியமாக கமெண்ட் இடலாமே ..!! அதுவுமில்லாமல் என்னுடைய மெயில் புரோஃபைலில் இருக்கே .!! கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் :-)//

எனக்கு இது ஏற்புடையாக இல்லை சகோ.ஜெய்லானி.
பதிவில் ஒரு தவறை ஒரே ஒருவர் சுட்டிக்காட்டினால் மெஜாரிட்டி இல்லை என்பீர்களா..? தவறா... என்ன தவறு... என்று ஆராய மாட்டீர்களா..? //

அதுக்கு நான் கமெண்ட் மாடரேஷன் வைக்க வில்லையே , அதுவுமில்லாம புரோஃபைலில் மெயில் ஐடியும் இருக்கே . இதுக்கு எதுக்கு மெஜாரிட்டி ..?

//உங்கள் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்தான். சந்தேகமில்லை. அனைவரின் கருத்தும் அறிந்தால்தான் உண்மையை ஏற்றுக்கொள்வேன் என்றால் அனைவரிடமும் இந்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்ளுங்கள். //

யாராவது ஒரு ஆல் அடிச்சால் பத்தாதா ..? அதுக்கு ஒரு குருப் சேர்த்து ஆள் தேடனுமா..? அவ்வ்வ்வ்..
நான் என்ன ஆராய்ச்சி கட்டுரையா எழுதுறேன் .ஹா..ஹா. :-)

//இதற்காகவெல்லாம் போய் ஜோசியகாரனிடம் விழுந்து மூடநம்பிக்கையை கற்றுக்கொள்ளாதீர்கள்.//

ஜோசியம் பத்தி ஒரு பதிவு ரெடியா இருக்கு. இந்த மூனு டைரி குறிப்புக்கு நடுவில் போடுவதாக இருந்தேன் . ஆனா போடலை . அடுத்த பதிவு அது இல்லை அதுக்கு அடுத்து போடுவேன் கண்டிப்பாக உங்கள் பதிலை அதில் எதிர் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ஜெய்லானி,
நீங்கள் எழுதிய அனைத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பாளி. அது அனைவராலும் வாசிக்கப்படும் தளமாக இருந்தாலும் சரி. அல்லது மொக்கை போடுகின்ற தளமானாலும் சரி. ஏனெனில் ஜெய்லானி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். அதை நோக்கி பிறரை அழைப்பவர். மனிதன் என்ற முறையில் நாம் அனைவரும் நம்மையறியாமல் தவறு செய்யக் கூடியவர்கள தாம். ஆனால் தவறை யாராவது சுட்டினால் திருத்திக் கொள்பவர்கள் சிறந்தவர்கள். நான் ஜெய்லானி பாயை சிறந்தவர்கள் பட்டியலில் இறைவன் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//akkka ithukkththan unnai manguni kuda serathey sonnan ketitaya?. intha kadi thanga mudiyalai.//

வாங்க வாங்க..!! என்னங்க செய்யுறது பழகக் தோஷம் விடுமா ? ஹா..ஹா..:-)

// but nalla solliyiruka jai. padikka suvarasyama irukku. //

அதே சுவாரஷ்யமா தொடர்ந்து எழுத பார்க்கிரேன் , ஆனா சில பல தொல்லையால் பிளாக் பக்கம் அதிகம் வர முடிவதில்லை . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பி.ஏ.ஷேக் தாவூத் --//அஸ்ஸலாமு அலைக்கும்
//
வ அலைக்கும் வ அஸ்ஸலாம்
அன்பின் சகோதரர் ஜெய்லானி,
நீங்கள் எழுதிய அனைத்திற்கும் நீங்கள் தான் பொறுப்பாளி. அது அனைவராலும் வாசிக்கப்படும் தளமாக இருந்தாலும் சரி. அல்லது மொக்கை போடுகின்ற தளமானாலும் சரி. ஏனெனில் ஜெய்லானி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். அதை நோக்கி பிறரை அழைப்பவர். மனிதன் என்ற முறையில் நாம் அனைவரும் நம்மையறியாமல் தவறு செய்யக் கூடியவர்கள தாம். ஆனால் தவறை யாராவது சுட்டினால் திருத்திக் கொள்பவர்கள் சிறந்தவர்கள். நான் ஜெய்லானி பாயை சிறந்தவர்கள் பட்டியலில் இறைவன் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.//

வாங்க ..வாங்க ..!! உங்கள் துவா இன்ஷா அல்லாஹ் விரைவில் பலிக்கட்டும் , ஆமீன் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Aashiq Ahamed said...

சகோதரர் ஜெய்லானி,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

முதலில் தாங்கள் அந்த பகுதியை திருத்தியதற்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் (அதற்கு தாங்கள் சொல்லியுள்ள காரணத்தில் மீண்டும் குழப்பம். இன்ஷா அல்லாஹ் பின்னர் பாப்போம்). நீங்கள் பதிவில் (உங்களையும் அறியாமல் இருக்கலாம்) சிற்சில இடங்களில் சொல்லும் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு முரணாக இருப்பதானலேயே அது சுட்டிக்காட்டபடுகின்றது. இதில் தவறிருந்தால் தாராளமாக தாங்கள் சொல்லலாம்.

தங்களின் பதிவு பொதுவில் வைக்கப்பட்டுள்ளதால், சில தவறான தகவல்கள் அனைவருக்கும் போய் சேர்ந்துள்ளதால், விளக்கத்தையும் பொதுவிலேயே வைக்க வேண்டியதாக போகின்றது.

நான் முன்னர் கேட்ட கேள்வி ரொம்ப சிம்பிலானது. நீங்கள் பதிவில் உபயோகப்படுத்திய வார்த்தைகள் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதா??, இறைவனால் அங்கீகரிக்கப்பட கூடிய வார்த்தைகளா? என்பது மட்டுமே...

இதற்கு தாங்கள் ஆம் என்றோ அல்லது இல்லை என்றோ சொல்லிருக்கலாம். ஆம் என்றால் நீக்கி இருக்கலாம். இல்லையென்றால், அது எப்படி இஸ்லாத்திற்கு உட்பட்டது என்று விளக்கம் சொல்லிவிட்டு அப்படியே வைத்திருக்கலாம். விஷயம் முடிந்தது. ஒன்றை நீக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இஸ்லாம் தானே நம்முடைய அளவுகோல்? இல்லை இஸ்லாம் தாண்டிய வேறு அளவுக்கொலை நாம் வைத்திருக்கின்றோமா??

ஆனால், அதற்கு தாங்கள் பதில் என்ற பெயரில் சொன்னது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விசயம்.

///இந்த ஜெய்லானி பிளாக் ஒரு மொக்கைகளின் கதம்பம் இதில் நான் மதத்தை திணிக்க விரும்பவில்லை . அதற்கு வேறு என்னுடைய இன்னொரு பிளாக் இருக்கு .அதில் வீண் பேச்சுக்களே கிடையாது :-)////

மார்க்கத்தை உங்களை யாரும் திணிக்க சொல்லவில்லை. நமக்கு அதற்கு அனுமதியும் கிடையாது. இன்று பல முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஆரோக்கியமான முறையில் அரசியல், சமையல், சமூக விமர்சனம், நகைச்சுவை என்று தங்களுக்கே உரிய பாணியில் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றனர். இவர்கள் யாரும் இஸ்லாத்தை திணிப்பது இல்லை...ஆனால் தாங்கள் எழுதும் வார்த்தைகள் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்கின்றார்கள். தங்களின் சொல், செயல் இஸ்லாம் சார்ந்தே இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அப்படி அவர்களையும் அறியாமல், அல்லது அது தவறென்றே தெரியாமல் சில வார்த்தைகள் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் வந்து விடுவதுண்டு. நம்மில் சிலர் அதை காணும் போது, இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை என்று எடுத்து சொல்கின்றோம். புரிந்துக்கொண்டு அவர்களும் செயல்படுகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

அந்த அடிப்படையிலேயே உங்களிடம் இது சுட்டிக்கட்டப்பட்டது. இறைநம்பிக்கையாளர்களின் இந்த சிற்சில விசயங்கள் கூட புதிய முஸ்லிம் பதிவர்களுக்கு, முஸ்லிம் வாசகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக போய்விடும். 'ஓ, மார்க்கத்திற்கு ஒரு தளம்...அதில் பக்திபழமாக இருந்துக்கொள்ள வேண்டியது. வேறொரு commercial தளத்தை ஆரம்பித்து அதில் எப்படி வேண்டுமென்றாலும் நடந்துக்கொள்ளலாம் போல' என்பது போன்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடலாம்.

நமக்கு என்ன நாடுகின்றோமோ அதையே அடுத்தவருக்கு நாட சொல்கின்றது இஸ்லாம். நிச்சயமாக நம் வீட்டு பெண்கள் அரைக்கால் சட்டையுடன் இருந்தால் அதனை ஊக்குவிக்க மாட்டோம். அவர்களை படம் எடுக்க மாட்டோம். அந்த படத்தை தளங்களில் போடவும் மாட்டோம். ஆனால் இந்த தொடரின் முதல் பதிவில் ஒரு பெண் அரைக்கால் சட்டையுடன் (விளையாடுவது போன்று. இந்த படத்தை போடவில்லை என்றாலும் இந்த பதிவிற்கு ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை) இருப்பது போன்ற படத்தை போட்டிருக்கிண்றீர்கள். நீங்கள் உங்களுக்கு விரும்பாத ஒன்றை ஏன் அடுத்தவருக்கு செய்ய வேண்டும்?...இதை கூட தாங்கள் தவறென்று நினைக்காமல் செய்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். அப்படி இருந்தால் இஸ்லாம் என்னும் அளவுக்கோலை வைத்து யோசித்து பாருங்கள். நான் சொன்னது சரியாக இருந்தால் அந்த படத்தை நீக்குங்கள். இல்லையென்றால் வைத்துக்கொள்ளுங்கள்.

Aashiq Ahamed said...

அதுபோலவே தாங்கள் பெண்களை வர்ணித்த அந்த வார்த்தைகள். இங்கே கமெண்ட் போட்டிருக்கும் அனைத்து முஸ்லிம்களிடமும் மெயில் அனுப்பி கேட்டுவிட்டேன். ஒருவரை தவிர (அவர் இன்னும் பதில் அனுப்பவில்லை) எல்லாரும் அந்த வார்த்தைகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்லிவிட்டார்கள். நிச்சயமாக, தங்கள் வீடு பெண்களை இப்படி வர்ணிப்பதை எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டார் என்பது அவர்களுடைய பதில்கள் மூலமாக தெரிகின்றது. நீங்கள் இந்த வார்த்தைகளை எந்தவொரு கெட்ட எண்ணத்திலும் போடவில்லை என்று சொல்லிவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் நம்முடைய சுய விருப்பு வெறுப்பு தான் அளவுக்கோலா?.

சர்தார்ஜி ஜோக்-குகள் பதிவுகளாக ஆக்கப்படுகின்றன. இதையும் எந்த முஸ்லிமும் கெட்ட எண்ணத்தோடு செய்வதில்லை. அவர்களுக்கு இது தவறென்று தெரியவில்லை. அவ்வளவே. நம் சகோதரர்களை தாழ்த்துவதை இஸ்லாம் அனுமதிக்காது என்று எடுத்து சொல்லும்போது புரிந்துக்கொள்கின்றனர், மாற்றிக்கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஆக, 'நான் கெட்ட எண்ணத்துடன் செயல்படவில்லை என்ற உங்களது கருத்து', இறைவனிடத்தில் உங்களை குற்றவாளியாக நிறுத்த போவதில்லை. அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில் அந்த வாக்கியங்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றும் இல்லை. தவறை இஸ்லாமிய அடிப்படையில் உணர்ந்து அதனை சரி செய்வது தான் அழகான அணுகுமுறையாக இருக்க முடியும்.

ஆக, நம்முடைய அளவுகோல் என்பது, நாம் உயிரினும் மேலாக மதிக்கும் மார்க்கம் மட்டுமே.

சக சகோதருக்கு எடுத்து சொல்வது மற்றொரு சகோதரனின் கடமை என்ற முறையிலேயே இங்கு உங்களிடம் எடுத்துப்சொல்லப்படுகின்றது. சொல்ல வேண்டியது மட்டுமே என்னுடைய கடமை. சொல்லப்பட்டதை எடுத்துக்கொள்வதும் விடுவதும் உங்கள் இஸ்டம். ஒருவருடைய மனதை நாம் மாற்ற முடியாது அல்லவா??. அது இறைவனுடைய நாட்டம் அல்லவா??

என்னுடைய முதல் பின்னூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு தாங்கள் நேரடியான பதிலை சொல்லவில்லை. இப்போதும் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன்.

முழுமையான முஸ்லிமாக வாழ நினைக்கும் ஒரு பதிவர், மார்க்க தளங்களுக்கு என்று ஒரு நிலையையும், முஸ்லிம்களின் மற்ற commercial தளங்களுக்கு என்று வேறொரு நிலையும் எடுக்கலாமா?

இந்த கேள்விக்கு, 'இல்லை, ஒரு முஸ்லிமின் சொல் செயல் எல்லாமே ஒன்றாக தான் இருக்கமுடியும்" என்று தாங்கள் சொன்னால் அடுத்த உரையாடலுக்கு வருவேன். இல்லையென்றால் சுட்டி காட்டவேண்டியது கடமை. காட்டியாகி விட்டது என்று இறைவனிடம் மேட்டரை ஒப்படைத்துவிட்டு சென்றுக்கொண்டே இருப்பேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//யார் மனதில் என்ன உள்ளது அந்த இறைவன் நன்கறிவான்//---நன்றி சகோ.ஜெய்லானி.

//ஜோசியம் பத்தி ஒரு பதிவு ரெடியா இருக்கு. இந்த மூனு டைரி குறிப்புக்கு நடுவில் போடுவதாக இருந்தேன் . ஆனா போடலை . அடுத்த பதிவு அது இல்லை அதுக்கு அடுத்து போடுவேன் கண்டிப்பாக உங்கள் பதிலை அதில் எதிர் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//---உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பாத்துள்ளேன் சகோ.ஜெய்லானி.

///நான் ஜெய்லானி பாயை சிறந்தவர்கள் பட்டியலில் இறைவன் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.///---நானும் அவ்வாறே ஆசைப்படுகிறேன்.

///வாங்க ..வாங்க ..!! உங்கள் துவா இன்ஷா அல்லாஹ் விரைவில் பலிக்கட்டும் , ஆமீன் :-)///---ஆமீன் :-)

தங்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))