Friday, April 1, 2011

சந்தேகம்-7 பாம்பூஊஊஊ

    
         நம்ம மக்களில் ஒரு சிலரை தவிர பலப்பேருக்கு பேரை கேட்டாலே  சும்மா அதிரும் .  திடீர்ன்னு சொன்னாப் போதும்.  கைக்கால்  ஆட்டோமேடிக்கா உதறல் எடுக்கும்  . இன்னும் சிலருக்கு படத்தை  பார்த்தாலே  பிளாகோ , வெப்ஸைட்டோ  , இல்ல வீடியோவோ  எதுவா இருந்தாலும் பார்க்காமலோ  ஓடி விடக்கூடிய  வியாதியும்  இருக்கு .அதுக்கு ஏதோ ஒரு போபியான்னு சொல்லுவாங்க (ஏதாவது சொல்லிட்டு போவட்டும்  நமக்கென்ன )  . அந்த பேருக்கு சொந்தக்காரர்  திருவாளர் பாம்பு அவர்கள்தான் .
அடிக்கடி  நாம ரெண்டு பேரும் இப்படி ஓடி ஒளியரதா இருக்கே  என்ன செய்யுறது ..!! அவ்வ்
       
      இதுல அதிக விஷம் உள்ளது .ஒரே  கடியில்  ஒரு யானையையே  சாகடித்து விடும் பவர் .சக பாம்பு இனத்தையே சாப்பிடும் குணம் , தைரியமா நிமிர்ந்து அது 6 அடியா இருந்தாலும்  எந்த வித கிராபிக்ஸும் இல்லாம ஸ்டைலா படம் எடுத்து நிக்கிறது நல்ல பாம்புதான் .  இவ்வளவு  டெரரா இருந்தாலும் அதுக்கு நம்ம மனுஷ இனம் குடுத்த பேர் நல்ல பாம்பு “ 
       அது மட்டும் நல்லதா இருந்தா , ஒன்னும் வேலைக்கு ஆகாத  ((அட கடிச்சாலும் தான் ))  தண்ணீப் பாம்புக்குதானே நல்ல பேரை குடுத்து இருக்கனும்.. இதை எழுதும் போதுதான் அந்த பாட்டும் நினைவுக்கு வருது “”  நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே  உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே  “”  .அந்த நாவுக்கரசர்  ( சிவாஜி ) கேட்டப்போ  கூட புஸ்ஸு..புஸ்ஸுன்னு சவுண்டுதான் குடுத்துச்சி .  ((ஒரு வேளை குஷ்பு..குஷ்புன்னு சொல்லிச்சோ  என்னவோ  யாரு கண்டது )) ஆனா ஆள் யாருன்னு கடைசி வரை அதுவும் சொல்லலை ..உங்கள்ள யாருக்காவது  தெரிஞ்சா சொல்லுங்க .பின்னால வரும் சந்ததிகளாவது தெரிஞ்சிக்கட்டும்
     இதுல அடுத்த சந்தேகம் என்னன்னா..பாம்புக்கு காது இருக்கா..???  இது வரை என்னை தவிர எல்லாமே குழப்பவாதியாதான் இருப்பாங்க போலிருக்கு ..ஹி..ஹி... உதா:-  மகுடி  ஊதினா  அது ஆடுவது பார்ப்பது எல்லாமே காது கேட்பதால இல்ல , ஏன்னா அதுக்கு காது இல்ல , அதுக்கு முன்னால அதை ஆட்டுவதால அது இடவலமா பார்ப்பதா  சொல்றாங்க ....அதே சயண்டிஸ்டு  பயபுள்ள சொல்லுது .கீழ் உடல்ல இருக்கும் செதில்களால அது பூமி அதிர்வுகளை வச்சி கண்டுப்பிடிக்குது .  இதுல எது நிஜம், எது பொய்ன்னு   கொஞ்சம் சொன்னா தேவலாம் . சத்தமுன்னு சொன்னா  அது அதிர்வு தானேங்க அது காத்தில போனா என்ன(ரேடார்) கடல் தண்ணீயில போனாதான் என்ன  (சோனார் ) பூமி அதிர்வை தானே சீஸ்மோ கிராஃப் படம் படமா  ((ஹைய்யா.. பாயிண்டுக்கு வந்துட்டேனே ))  காட்டுறாங்க ... அப்போ  அதிர்வு இல்லாம  இருக்கும் இடமே இல்லையே...  (( வெற்றீடத்தில வச்சா  காத்து இல்லாம பாம்பே  செத்துப்போயிடுமே )) இதனால சொல்ல வருவது பாம்புக்கு  காது கேட்குமா  ??? கேட்காதா????

கால்ல ஆணிங்கிறாங்களே  அப்படின்னா  என்னது??????

     மூனாவது  சந்தேகம் (( மூனும் தனி தனி பதிவா போட்டு  அப்புரம் நீங்க ஒரு பாம்போட என்னை தேடி வந்துட்டா )) இந்த பாம்பாட்டிகளும்  இன்னபிற ஆட்களும் ஏன் நல்ல பாம்பை மட்டும் பிடிச்சிகிட்டு வந்து  மகுடி ஊதுறாங்க ....மத்த பாம்பை  பிடிச்சுகிட்டு வந்து  ஊத வேண்டியதுதானே... ஊதிகிட்டே  இருக்க வேண்டியது தானே....  அதுப்போல கீரிப்பிள்ள கூட  சண்டை போட கூட இவங்களுக்கு ஒரு நல்ல பாம்புதானா கேட்குது . மத்த பாம்புகளுக்கு ஒரு தவளை கூட கிடைக்காத பட்சத்துல  இதுக்கு மட்டும் முட்டையும் பாலும் குடுத்து ஏன் அழகுபாக்குறாங்க (வருமானம் வருதுங்கிறதுக்கா)
     பாம்புகள் பொதுவா மரம் ஏறி மற்ற பறவை இனங்கள் கட்டி இருக்கிற கூட்டில உள்ள முட்டைகளை  சாப்பிடுவதா ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுவே ஏகப்பட்ட முட்டை போடுதே...!! அப்போ அந்த முட்டைகளை மட்டும் ஏன் அது சாப்பிடுவதில்லை...அந்த நேரம் எதுவும் விரதமா..??  இல்லை நாள் நட்சத்திரம் சரியில்லையா..?
   
எனக்கு தயாரிக்கிறத மனுஷ பயலே நீங்க ஏண்டா குடிக்கிறீங்க...????  :-))

    அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு  8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால  சாகிறாங்க ..மொத்த  உலகத்துல  சுமார்  ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாகிறாங்க ..ஒரு புள்ளி விவரம் சொல்றாங்க ..ஆனா சீனாக்காரங்க  எத்தனை பாம்பை வருஷத்துக்கு  சாப்பிட்டு தீர்க்கிறாங்கன்னு  எந்த புள்ளி விவரமும் இல்ல ..நான் வளார்கிறேனே  ம்ம்மி......அப்படித்தான் போய்கிட்டு இருக்கு .. எப்பவாவது  பாம்பை  பார்த்தா  சைனான்னு  சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல  எஸ்கேப்பாயிடும்  J)   

58 என்ன சொல்றாங்ன்னா ...:

ராஜவம்சம் said...

ஐயா புண்ணியவானே பாம்புன்னாலே நமக்கு ஒரு உதறல்யா அதனால சந்தேகத்துக்கு வேரயாராவது பதில் சொல்றாங்களான்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

r.v.saravanan said...

present sir

athira said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆஅ...... எனக்கு வடை தந்தாலும் வாணாம்... பாம்பாஆஆஆஆஆஆஆஆஆ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

புடிச்சிட்டு செ..சே... இதென்ன இது படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்ன்ன்

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் இப்போ மும்பையிலும் பாம்பு கறி கிடைக்குது...

MANO நாஞ்சில் மனோ said...

//அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு 8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால சாகிறாங்க//

இப்பிடியாவது அங்கே இருக்குறவன் சாகட்டும்...

MANO நாஞ்சில் மனோ said...

//சைனான்னு சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல எஸ்கேப்பாயிடும் J) //


சைனா சைனா சைனா சைனா.....

Paleo God said...

இதுல அதிக விஷம் உள்ளது .ஒரே கடியில் ஒரு யானையையே சாகடித்து விடும் பவர் .சக பாம்பு இனத்தையே சாப்பிடும் குணம் , தைரியமா நிமிர்ந்து அது 6 அடியா இருந்தாலும் எந்த வித கிராபிக்ஸும் இல்லாம ஸ்டைலா படம் எடுத்து நிக்கிறது நல்ல பாம்புதான் //

தவறு அதிக பட்சமே ஆறு அடிகளுக்குள்தான் நல்ல பாம்பு வளரும். பாம்பையே சாப்பிடக்கூடியது ராஜ நாகம் எனப்படும் கிங் கோப்ரா சுமார் 25 அடிகளுக்கும் மேலாக வளரக்கூடியது. விருப்ப உணவு சாரைப் பாம்பு.

இதுல அடுத்த சந்தேகம் என்னன்னா..பாம்புக்கு காது இருக்கா..???//

இல்லை.

கீழ் உடல்ல இருக்கும் செதில்களால அது பூமி அதிர்வுகளை வச்சி கண்டுப்பிடிக்குது .//
சரி

. சத்தமுன்னு சொன்னா அது அதிர்வு தானேங்க அது காத்தில போனா என்ன(ரேடார்) கடல் தண்ணீயில போனாதான் என்ன (சோனார் ) பூமி அதிர்வை தானே சீஸ்மோ கிராஃப் படம் படமா ((ஹைய்யா.. பாயிண்டுக்கு வந்துட்டேனே )) காட்டுறாங்க ... அப்போ அதிர்வு இல்லாம இருக்கும் இடமே இல்லையே...//

அதிர்வு ஏற்படுத்தக்கூடிய ஒலி அதன் உடலில் பட்டால் நிச்சயம் உணர்ந்துகொள்ளும். நீங்களும் நானும் ஏய் என்று குரல் கொடுக்கும் ஒலி அதனை அதிர்வாய் பாதிக்காதவரை அதற்கு எதுவும் தெரியாது.

இந்த பாம்பாட்டிகளும் இன்னபிற ஆட்களும் ஏன் நல்ல பாம்பை மட்டும் பிடிச்சிகிட்டு வந்து மகுடி ஊதுறாங்க ...//

ஏனென்றால் விஷப் பாம்பில் நல்ல பாம்பிற்கு மட்டுமே அதன் பல்லைப் பிடுங்கினாலும் அது உயிர் வாழும் மற்ற விஷப் பாம்புக்கள் இறந்துவிடும். மேலும் நல்ல பாம்பு மட்டுமே படம் எடுக்கிறது. அது மக்களை ஈர்க்கிறது. மற்ற வகைகளில் சுவாரஸ்யமில்லை:))

பாம்புகள் பொதுவா மரம் ஏறி மற்ற பறவை இனங்கள் கட்டி இருக்கிற கூட்டில உள்ள முட்டைகளை சாப்பிடுவதா ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுவே ஏகப்பட்ட முட்டை போடுதே...!! அப்போ அந்த முட்டைகளை மட்டும் ஏன் அது சாப்பிடுவதில்லை...அந்த நேரம் எதுவும் விரதமா..?? இல்லை நாள் நட்சத்திரம் சரியில்லையா..?///

எந்த இனமும் அதனதன் குட்டிகளையோ முட்டைகளையோ காக்குமே ஒழிய உண்ணாது சில விலக்குகள் உண்டு.

ஜெய்லானி பாம்பைப்பற்றிய அறிவில் நாம் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். அது நம்மைக் கண்டு பயப்படும் ஒரு ஜீவன். மேலும் அது இயற்கை சமன் பாட்டிற்கு பேருதவி செய்யும் ஒரு விலங்கு. மனிதனுக்கு முன்னால் பூமியில் தோன்றிய உயிரினம்.

இது தொடர்பான எனது இடுகைகள் :))

http://palaapattarai.blogspot.com/view/flipcard/2327164605780895085/2010/06/blog-post_18.html

http://palaapattarai.blogspot.com/view/flipcard/85466735287933458/2010/12/blog-post.html

இமா க்றிஸ் said...

அது கால்ல ஆணி இல்ல ஜெய். கால் ஆணில. ;))

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல சந்தேகம்.ஆனால் பதிவின் சந்தேகத்துக் குரிய பாம்பு புகைப்படும் ஒன்னு கூட இல்லையே?

கழுகுக்கும் பாம்புக்கும் சண்டை வந்திடும்னா படத்தைக் காணோம்?

“காலனி”படம் சூப்பர்

vanathy said...

//அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு 8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால சாகிறாங்க//

இப்பிடியாவது அங்கே இருக்குறவன் சாகட்டும்...///
அங்கிள், நானும் இங்கன தான் இருக்கேன். இப்பூடி சாபம் போடுறீங்களே!!!!

பா...பு என்று பார்த்ததும் தயங்கி தயங்கியே வந்தேன். நல்ல வேளை படம் எதுவும் போடாமல் எழுதி இருக்கிறீங்க.
அதுக்கு காது இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? மற்றவர்களை எப்படி விரட்டுது!!!

Menaga Sathia said...

பாம்பாஆஆஆஆ நான் எஸ்கேப்...

GEETHA ACHAL said...

எனக்கும் பாம்புக்கும் ரொம்ப தூரம் ...சாரி நானும் எஸ்கேப்...

GEETHA ACHAL said...

நல்ல வேலை பதிவில் எந்த பாம்பு படமும் போடவில்லை...

பொன் மாலை பொழுது said...

எனக்கு ஒரு சந்தேகம்.......அயய்யோ ...இது ஒட்டுவாரொட்டி சீக்கு போல.

இந்த புள்ள ஜெய்லானி ராத்திரில தூங்குமா தூங்காதா?

பொன் மாலை பொழுது said...

கடைசில ஜெய்லானி கொக்க கோலா குடிக்கிற படம் ரொம்ப பிரமாதம்.
நான் என்ன பண்றது, அது லேட்டாதான் திறந்தது.

athira said...

முதலாவது படத்தில கட்டிலுக்கு கீழ ஒளிச்சிருப்போர் ஆரூஊஊஊஉ?... சூப்பர் போஸ்:)))).

2 வது பயம்... சொறி படம் சகிக்கேல்லை.....:))

மூன்றாவது கலக்கல் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

என்னது அமெரிக்காவில எல்லோரும் பா...பு க்கடியால சாகினமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன கொடுமை இது.... எங்கட வான்ஸ் அங்கதானே?... கொஞ்ச நாளா ஆளைக் காணல்லியே..... எனக்கு நெஞ்செல்லாம் பக்..பக்....
ஜெய் ஒருக்காப் போய் பார்த்து வந்து புதினம் சொல்லப்பூடாதோ எங்களுக்கு?:))))

சாருஸ்ரீராஜ் said...

சகோதரர்க்கு பொழுது போகலையோ,சந்தேகம் எல்லாம் பயங்கரமா இருக்கு

இராஜராஜேஸ்வரி said...

சந்தேகம் எல்லாம் நல்லா இருக்கு. பதில் கண்டுபிடித்து ஒரு பதிவு போடுங்களேன்.

vanathy said...

ஜெய் ஒருக்காப் போய் பார்த்து வந்து புதினம் சொல்லப்பூடாதோ எங்களுக்கு?///
ஒரு மனுஷன் பா..பு விடம் கடி வாங்குறது புதினமா போச்சு! நான் சேஃப் ஆஆஆ தான் இருக்கிறேன். மிருக காட்சி சாலை பக்கம் போவது கூட இல்லை. இந்த ஐந்துக்கு பயந்து.

athira said...

vanathy said...
19 ஜெய் ஒருக்காப் போய் பார்த்து வந்து புதினம் சொல்லப்பூடாதோ எங்களுக்கு?///
ஒரு மனுஷன் பா..பு விடம் கடி வாங்குறது புதினமா போச்சு! நான் சேஃப் ஆஆஆ தான் இருக்கிறேன். மிருக காட்சி சாலை பக்கம் போவது கூட இல்லை. இந்த ஐந்துக்கு பயந்து
/// ஆஆஆஆ வான்ஸ் சேவ் ஆஆ(இது வேற சேவ்:)) இருக்கிறீங்க.... இப்பத்தான் நெஞ்சுக்குள்ள ரீ வந்தமாதிரி இருக்கு...

இதுக்கேல்லாம் பயப்பூடாதீங்க வான்ஸ்ஸ், நான் இப்பவெல்லாம் பயப்புடுறதேயில்லை... மருந்து சொல்ல ஜெய் இருக்க பயமேது?:)))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாம்பாஆஆஆஆஆஆஅ...... நா வரல இந்த பாம்பாட்டத்துக்கு..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

எல்லாரும் அரசியல் பதிவ போட்டுக்கிட்டு இருக்கிற நேரத்துல , நீங்களாவது வித்தியாசமான பதிவு போட்டுடிங்க . . .
நன்றி . . .

ஹேமா said...

பாம்புக்குத் தலைக்குள்ளதான் காது இருக்குன்னு படிச்சிருக்கேன்.வெளில தெரியாது.அதனால பாம்புக்கு காது இல்லன்னும் சொல்லலாம் !

பொறுப்பா பதில் சொல்லியிருக்கேன் ஜெய் !

athira said...

நல்லவேளை, ~அந்தக்~ காலில "B" எண்டுதான் இருக்கூஊஊஊஊஊஊ:)))))

Anisha Yunus said...

//இதுல அடுத்த சந்தேகம் என்னன்னா..பாம்புக்கு காது இருக்கா..??? //

பக்கத்துல உக்காந்து பவ்யமா கேட்டுப்பாருங்களேன்... சொன்னாலும் சொல்லும், ஏன்யா சும்ம கிடந்த என்னையும் வம்புக்கு இழுக்கறேன்னு!!

:)))

Anisha Yunus said...

//மூனாவது சந்தேகம் (( மூனும் தனி தனி பதிவா போட்டு அப்புரம் நீங்க ஒரு பாம்போட என்னை தேடி வந்துட்டா )) இந்த பாம்பாட்டிகளும் இன்னபிற ஆட்களும் ஏன் நல்ல பாம்பை மட்டும் பிடிச்சிகிட்டு வந்து மகுடி ஊதுறாங்க ....மத்த பாம்பை பிடிச்சுகிட்டு வந்து ஊத வேண்டியதுதானே... ஊதிகிட்டே இருக்க வேண்டியது தானே.... அதுப்போல கீரிப்பிள்ள கூட சண்டை போட கூட இவங்களுக்கு ஒரு நல்ல பாம்புதானா கேட்குது . மத்த பாம்புகளுக்கு ஒரு தவளை கூட கிடைக்காத பட்சத்துல இதுக்கு மட்டும் முட்டையும் பாலும் குடுத்து ஏன் ”அழகு”பாக்குறாங்க (வருமானம் வருதுங்கிறதுக்கா)//

உங்களை மாதிரி சொல்பேச்சு கேக்காத புள்ளை இல்லை அது. ஒரு முட்டை தந்தாலே போதும், பவ்யமா நாம சொல்றதெல்லாம் கேக்கும். சந்தேகத்தின் பிறப்பிடத்தை கொஞ்சம் எச்சரிச்சுட்டு வான்னு சொன்னாக்கூடா...!!! ஹி ஹி ஹி சொல்பேச்சு கேக்கும் பிள்ளய நல்ல பிள்ளைன்னுதானே சொல்வோம், அது மாதிரிதேன் ‘நல்லபாம்பு’ன்னு பேரும்!!

ஸ்ஸ்ஸ் அப்பா... இதுக்கு பாம்போடவே உக்கார்ந்து பேசியிருக்கலாம்...!!

Anisha Yunus said...

//மொக்கைகளும் பின்னே ஞானும்//

GRRRRRrrrrrrrrrrrrrrr..........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//சைனான்னு சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல எஸ்கேப்பாயிடும் J) //
மைனா-னு சொல்லிப்பாருங்க.. 12 மடங்கு.. விடுங்க..ஹி..ஹி

Anisha Yunus said...

//2 வது பயம்... சொறி படம் சகிக்கேல்லை.....:))//
same blood...!!!!

Asiya Omar said...

பாம்புன்னால் படையும் நடுங்கும்னு சொல்வாங்க,ஆனால் ஜெய்க்கு சந்தேகம் வந்திச்சுன்னால் பதிவுலகமே நடுங்கும்,ஸ்ஸ்ஸ்சப்பா.....முடியலைடா சாமி.

சி.பி.செந்தில்குமார் said...

நஞ்சுபுரம் படம் பார்க்காதீங்கன்னு அண்ணன் கிட்டே தலை தலையா அடிச்சுக்கிட்டேன்.. ஹூம்.. கேட்கலை...

isaianban said...

அண்ணாத்தே நான் படிச்சுட்டேன் மத்தபடிக்கு, உங்கள் கதாநாயகன் விஷயத்துல நான்... கொ..ஞ்...ச..ம்... வீக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்......

எம் அப்துல் காதர் said...

// இதனால சொல்ல வருவது பாம்புக்கு காது கேட்குமா ??? கேட்காதா???? //

இதனால நான் 'கேட்க' வருவதுன்னு இருக்கணும்... புஸ்ஸ்ஸ்...ஹி...ஹி (same blood )

எம் அப்துல் காதர் said...

// அதுப்போல கீரிப்பிள்ள கூட சண்டை போட கூட இவங்களுக்கு ஒரு நல்ல பாம்புதானா கேட்குது . //

கீரிப்பிள்ளை கூட சண்டை விட்டு நீங்க பார்த்திருக் கீங்களா? சும்மா அதெல்லாம் பம்மாத்து. அப்புறம் ஒரு ஜந்துக்கு கீரிப்பிள்ளை என்று ஏன் பேர் வந்ததுன்னு அடுத்தப் பதிவ போட்டுடாதீங்கய்யா. மீ எஸ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பாம்பை பற்றி ஆராய்ச்சில நான ஈடுபடல ஆனா இன்று தொடங்க போகின்றேன்.

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//ஐயா புண்ணியவானே பாம்புன்னாலே நமக்கு ஒரு உதறல்யா அதனால சந்தேகத்துக்கு வேரயாராவது பதில் சொல்றாங்களான்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//

வாங்க..வாங்க..!!பேரை மட்டும் ஸ்டைலா வச்சிகிட்டு சின்னூண்டு பூச்சிக்கு பயப்படுறீங்களே ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//present sir //

வாங்க..வாங்க..!! பக்கத்துல வந்து சொன்னீங்களா.இல்ல தலைப்ப பார்த்துட்டு தூரத்திலிருந்து சொல்றீங்களா..ஹா..ஹா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஅ...... எனக்கு வடை தந்தாலும் வாணாம்... பாம்பாஆஆஆஆஆஆஆஆஆ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. //

வாங்க..வாங்க..!! ஓடாதீங்க ..அது அதுக்குள்ள பெட்டியிலதான் இருக்கு

// புடிச்சிட்டு செ..சே... இதென்ன இது படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்ன்ன் //

எனக்கு தெரிஞ்சி ஒரு பூஸ் பாம்பையே பிடிச்சி பீஸ்.பீஸ் ஆக்கிடுச்சி நீங்க இப்படி பயப்படறீங்களே ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --//யோவ் இப்போ மும்பையிலும் பாம்பு கறி கிடைக்குது //

வாங்க..வாங்க..!! அங்கே சைனாக்காரன் தனியாவே கடைப்போட ஆரம்பிச்சிட்டானா ..!!

////அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு 8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால சாகிறாங்க//

இப்பிடியாவது அங்கே இருக்குறவன் சாகட்டும்..//

யோவ் அங்கே நம்ம பிள்ளைகளும் இருக்கப்போவ்..அமெரிக்ககாரன்னு மட்டும் சொல்லும் ஓய்

///சைனான்னு சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல எஸ்கேப்பாயிடும் J) //

சைனா சைனா சைனா சைனா....//

அது பாம்பை பார்த்தும் சொல்லனும் ..இல்லாட்டி உம்ம மனைவி பிச்சி புடும் பிச்சி ஜாக்கிரதை ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

எங்கே இருந்து தான் இப்படி போட்டோக்கள் கிடைக்குதோ
பூஸ் குட்டிகள் பிரமாதம்
பாம்பாஆஆஆஆ
இப்ப தான் மற்ந்து இருந்தேன் அந்த பெயரை கேடாலே இனி கனவில் ஒரே வருமே

athira said...

///அந்த நாவுக்கரசர் ( சிவாஜி ) கேட்டப்போ கூட புஸ்ஸு..புஸ்ஸுன்னு சவுண்டுதான் குடுத்துச்சி ///

என்னாது பாம்புகூட பூஸைத்தான் கூப்பிடுதோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... எகயின்(again) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

பாம்பை பற்றி எழுதி ரொம்ப பயமுறுத்திட்டீங்க. உங்க சந்தேகங்களில் பல எனக்கும் இருக்கு.ஷங்கர் சிலவற்றை தீர்த்துவைத்திருக்கிறார்.நன்றி.

நண்பன் said...

nalla padaippu ariyamaiyil irunthu vidubada vaikkum nalla karuthtukkal niraintha pathivu

சாமக்கோடங்கி said...

எனக்குப் பூனைக்குட்டிகள் என்றால் கொள்ளைப் பிரியம்.. எங்கள் வீட்டிலும் ரெண்டு இருக்கு..

அந்தப் படத்தில் உள்ள ரெண்டு பூனைக்குட்டிகளும் மிக அழகாக இருக்கு ஜெய்லானி...

மத்தபடி பாம்பு டவுட்டு அதுகிட்டையே கேட்டுகிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வெளக்கமா இடுகை போட்டே சொல்றேன்.. கொஞ்சம் பொறுங்க :-))

சிநேகிதன் அக்பர் said...

ஏன் ஆளாளுக்கு கொலை வெறியோட அலையுறீங்க.

மாய உலகம் said...

ஆஹா மாய உலகம் வந்திருச்சி ஒளிஞ்சிக்கோன்னு சொல்லுதோ முதல் படம் பூனைக்குட்டி

ஜெய்லானி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ ...//

சுவாரஸ்யமான பல தகவல்கள் உங்க லிங்கில் இருக்கு .இன்னும் நிறைய சந்தேகங்கள்தான் வருது . கேட்க ஆரம்பிக்கும் போது அது ஒரு விவாதம் போல் ஆகிவிடும் .:-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//அது கால்ல ஆணி இல்ல ஜெய். கால் ஆணில. ;)) //

வாங்க மாமீஈஈ..வாங்க ..!! ஆஹா..நல்லவேளை கால்ல குத்திடிகிட்டு இருக்குன்னு சொல்லாம விட்டீங்களே... அது வரை சந்தோஷம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar --//நல்ல சந்தேகம். ஆனால் பதிவின் சந்தேகத்துக் குரிய பாம்பு புகைப்படும் ஒன்னு கூட இல்லையே? //

வாங்க சகோஸ் வாங்க...!! அந்த படம் போட்டா உங்களுக்கும் கீழே கமெண்ட் போட்டவங்கலுக்கு குளிர் ஜுரம் வந்துடும் பார்த்துட்டு பயந்துடுவாங்க அதனாலதான் போடல :-))

//கழுகுக்கும் பாம்புக்கும் சண்டை வந்திடும்னா படத்தைக் காணோம்? ///
வீடியோ போடலாமுன்னு நினைச்சேன் .கடைசி நேர யோசனை அதான் போடல் :(

// “காலனி”படம் சூப்பர் // அட நீங்க ஒன்னு நானே அதை பார்த்துட்டு டெரரா இருக்கேன் .இந்த கலாச்சாரம் எங்கே போய் முடியுமோன்னு ..அவ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy -//

//அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு 8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால சாகிறாங்க//

இப்பிடியாவது அங்கே இருக்குறவன் சாகட்டும்...///
அங்கிள், நானும் இங்கன தான் இருக்கேன். இப்பூடி சாபம் போடுறீங்களே!!!! /


வாங்க வான்ஸ் வாங்க ..!! ச்சே..ச்சே..அங்கே வந்தா பிடிச்சு வச்சு உங்க கதையை அதுகிட்ட சொல்லுங்க அழதுகிட்டே போயுடும் :-))

// பா...பு என்று பார்த்ததும் தயங்கி தயங்கியே வந்தேன். நல்ல வேளை படம் எதுவும் போடாமல் எழுதி இருக்கிறீங்க. /

மற்றவங்களை படம் காட்டி பயமுறுத்தும் ஐடியா எதுவும் என்னிடம் இல்லை :-))

// அதுக்கு காது இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? மற்றவர்களை எப்படி விரட்டுது!!! //

ஓடாம தைரியமா நின்னுப்பாருங்க அது ஓட ஆரம்பிச்சுடும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@S.Menaga --///பாம்பாஆஆஆஆ நான் எஸ்கேப்.//

வாங்க மேனகக்காவ் வாங்க ...!! ஓடாதீங்க ..பக்கத்து ஊரா இருந்துகிட்டெ இப்பிடி பயப்படலாமா சேம் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL --// எனக்கும் பாம்புக்கும் ரொம்ப தூரம் ...சாரி நானும் எஸ்கேப்..//

வாங்க சகோஸ் வாங்க ..!! நீங்களுமா எஸ்கேப் அவ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL --/// நல்ல வேலை பதிவில் எந்த பாம்பு படமும் போடவில்லை //

பிளாகின் தலைப்பில் லோகோவா போடலாமுன்னு நினைச்சிருந்தேன் . .எல்லோருமே பயப்படுவதால் அந்த ஐடியா கேன்சல் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//எனக்கு ஒரு சந்தேகம்.......அயய்யோ ...இது ஒட்டுவாரொட்டி சீக்கு போல. //

வாங்க பாஸ் வாங்க ..!! ஹா..ஹா.. என்ன் ஆச்சு ...ஏன் இந்த டென்ஷன் :-))

// இந்த புள்ள ஜெய்லானி ராத்திரில தூங்குமா தூங்காதா? //

மோன தவத்தில இருப்பேன் ..அதாவது தூங்குவது மாதிரி ஆனா தூங்காம ..ஹி..ஹி..
//கடைசில ஜெய்லானி கொக்க கோலா குடிக்கிற படம் ரொம்ப பிரமாதம். //

பாஸ் பாராட்டுக்கு ரொம்ப சந்தோஷம் :-))
//நான் என்ன பண்றது, அது லேட்டாதான் திறந்தது.//

நல்ல வேளை ஒட்டகத்துக்கு பதில் வேற எதுவும் தெரியாமல் விட்டதே..!! ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--// முதலாவது படத்தில கட்டிலுக்கு கீழ ஒளிச்சிருப்போர் ஆரூஊஊஊஉ?... சூப்பர் போஸ்:)))). //

வாங்க பூஸ் வாங்க ..!!2 பேர் இருபப்து தெரியுதா ஹி..ஹி.. இப்போ புரிஞ்சிருக்குமே :-))

// 2 வது பயம்... சொறி படம் சகிக்கேல்லை.....:)) // ஆமா எனக்கும் தான் பிடிக்கல இது என்ன ஸ்டைல் :-;(

//மூன்றாவது கலக்கல் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). // ஹி..ஹி.. :-)) நான் சிரிக்கல...சிரிக்கல.. :-))

//என்னது அமெரிக்காவில எல்லோரும் பா...பு க்கடியால சாகினமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்ன கொடுமை இது.... எங்கட வான்ஸ் அங்கதானே?... கொஞ்ச நாளா ஆளைக் காணல்லியே..... எனக்கு நெஞ்செல்லாம் பக்..பக்.... //

நெஞ்செல்லாம் புஸு..புஸுன்னுதான் அடிக்குமே இதெப்படி அவ்வ்வ்வ்
// ஜெய் ஒருக்காப் போய் பார்த்து வந்து புதினம் சொல்லப்பூடாதோ எங்களுக்கு?:)))) //

ஹா..ஹா.. ஒரு வேளை நான் புதினம் சொன்னால் அது சரிவராதே..!! வான்ஸ் ஸ்டைலில் அவங்களே சொன்னால்தான் இண்டிரஸ்டிங்கா இருக்கும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//சகோதரர்க்கு பொழுது போகலையோ , சந்தேகம் எல்லாம் பயங்கரமா இருக்கு //

வாங்க சகோஸ் வாங்க ..!!அதெப்படி கரொக்டா கண்டுப்பிடிச்சீங்க :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//ஜெய் ஒருக்காப் போய் பார்த்து வந்து புதினம் சொல்லப்பூடாதோ எங்களுக்கு?///
ஒரு மனுஷன் பா..பு விடம் கடி வாங்குறது புதினமா போச்சு! நான் சேஃப் ஆஆஆ தான் இருக்கிறேன். மிருக காட்சி சாலை பக்கம் போவது கூட இல்லை. இந்த ஐந்துக்கு பயந்து. //

வான்ஸ் , அவங்க எவ்வளவு அக்கரையா விசாரிக்கிறாங்கன்னு பாக்கலையா ஹி...ஹி... கேட்டா 3 வயசுலேந்து ரொம்பவும் சமத்தாம் :-))). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))