Saturday, March 26, 2011

குரல் வளம்


          சிலரோட பேச்சை நாள் முழுதும் கேட்டுகிட்டே இருக்கலாம் . அதுக்கு காரணம் அறிவா அழகா பேச்சு சாதூர்யமா நம்மை கட்டிப்போட்டுடும் .உதாரணத்துக்கு அறிஞர் அண்ணா , நெடுஞ்செழியன் , வை கோ ..இப்படியே சொல்லிகிட்டு போகலாம் . இன்னும் சிலர் வாயை திறந்தாலே போதும் குயிலின் குரல் கேட்கும்  அப்படி. ஒரு. குரலில் அழகு இவர்களை  பாட சொல்லி கேட்டால் ஆஹா......
      குரலில் என்ன இருக்கு  கேட்டால் அது இறைவன் கொடுத்த வரமுன்னு சொல்லுவாங்க . காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க ..  ஒவ்வொன்னும் குரல் வளம் வித்தியாசமாதான் இருக்கு. (( ஆஹா..உணர்ச்சி வசப்பட்டாச்சே.. விடுங்க  மனித  இனத்திற்கே வருவோம்)) 
இங்கதானே  சுத்திகிட்டு இருந்தான் , எங்கே போயிருப்பான்..???

        பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு  இருப்பவங்களுக்கே  குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில்  ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு  மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது  இதிலதான் .
     நான் ஆரம்பத்தில இருந்த ருமில ( நாலுமே தமிழ்நாடுதான் ) இருந்த ஒருத்தருக்கு  பெண் குரல். யாருமே  முகம் பார்க்காம பேசினா  கண்டு பிடிப்பது  கஷ்டம் . என்னோட கிண்டல் தாங்காம நான் தூங்கிய பிறகே ரூமுக்குளே பயபுள்ள வரும் . இப்படி இருக்கும் போது ஒரு நாள் கூடவே இருக்கும் நண்பர்  குளிக்க போனதும் ஊரிலிருந்து  அவர் மனைவி  போன் செய்ய யாரும் எடுக்காததால் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிந்தது 
      நான் தலையை மட்டும் தூக்கி  பார்த்துட்டு திரும்ப படுத்துட்டேன் . இவர் எடுத்து அவர்  பாத்ரூமில குளிச்சிகிட்டு இருக்கார் கால் மணி நேரம் கழிச்சி  திரும்ப செய்யுங்கன்னு சொல்லிட்டு போனை கட் செய்துட்டு  அவர் டியூட்டிக்கு போய் விட்டார். பின்னாலேயே  நீங்க யாரு என்னனுன்னு கேக்குரதுக்கு முன்னாலேயே போன் கட் .
ஒரு வேளை என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கா..????

          வந்தது வினைப்பாருங்க ஏழறை எட்டரை சனி எல்லாம் அன்னைக்கி அவர் தலை மேலே தான். மனுஷன் லீவு போடுட்டு அழுதுகிட்டு இருந்தார். யாரது புதுசா ஒரு பெண் குரல் கேட்குதே..!!  புதுசா எதுவும் ஸ்டெப்னி வச்சிருக்காரான்னு அவர் மனைவிக்கு ஒரு சந்தேகம் .இவர் எது சொல்லியும் அவர் மனைவி கேட்பதா இல்லை (அவ்ளோ  நம்பிகை  அவர் மேலே  ஹி..ஹி..)) நான் சொல்லியும் எனக்கு ஒரு அர்ச்சனை ஜால்ரா போட வேண்டாமுன்னு ((நீங்களும்தானே  இத்தனை நாளா ஏன் சொல்ல வில்லைன்னு... அவ்வ்வ் )) .அடுத்த கால் மணி நேரத்துல  பஹ்ரைனிலிருந்து  அவர் மாமனார் , போன்.செய்து நலன் விசாரிப்பு. அடுத்து கத்தாரிலிருது மச்சான்  , அவரும் எவ்வளவோ   சொல்லியும்  அவர் மனைவி  நம்பவில்லை

          இந்த பிரச்சனை மூனு நாளா அவருக்கும் டென்ஷன் நமக்கும் ஒரு வித எரிச்சல் ((எதை சொல்லியும் நம்பாவிட்டால் என்ன் செய்வது ))  கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து  சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே  நம்பிக்கையே  வந்தது.  அதுக்குள்ளே இவருக்கு ஊர் பணம் ரூ பத்தாயிரத்துக்கு  மேலே  டெலிபோனில சமாதானம்  பேசியே போச்சு. அதுக்கு பிறகு அவர் மொபைல் போனை  வெளியே  வைப்பதே  இல்லை .ஒன்னு அவர் கூடவே டாய்லட் போனாலும் இருக்கும் .அப்படி இல்லாட்டி சுவிட்ச்  ஆஃப்  செய்து வச்சிருப்பார்  .
ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்........ யாரை பார்த்து இன்னாங்கிரே
     என்னதான் இருந்தாலும் நம்ம கலாச்சாரமே  கலாச்சாரம்தான் .எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க. அப்போ  இலக்கியத்தில கண்ணகி , மாதவி ..???  கதை படிக்க  இண்டரஸ்டிங்க இருக்கும் .ஆனா அனுபவம் ..?  யப்பா ஆளை விடுங்க  
    
     நான் என்ன செய்திருப்பேன்னு  நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே  வைபிரேட் மோடிலேயே  இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி 

75 என்ன சொல்றாங்ன்னா ...:

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆ..வட வட.... நேக்குத்தேன்ன்ன்ன்ன்ன்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

///என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி
// ஹா...ஹா...ஹா.. உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும்...:):).

ப்ரியமுடன் வசந்த் said...

//உதாரணத்துக்கு அறிஞர் அண்ணா , நெடுஞ்செழியன் , வை கோ ..இப்படியே சொல்லிகிட்டு போகலாம் .//

எங்க தானைதலைவி நமீதாவ சொல்லாததை கண்டிக்கிறேன்..!

ப்ரியமுடன் வசந்த் said...

// காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க .. //

எங்க அவங்க மாதிரி குரல் கொடுத்து காட்டுங்க பார்க்கலாம்

ப்ரியமுடன் வசந்த் said...

//பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . //

ஜெயலலிதாவை தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது

ப்ரியமுடன் வசந்த் said...

//கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே நம்பிக்கையே வந்தது. //

சந்தேகப்பிராணியா இருப்பாங்க போல பாவம் நண்பரின் வாழ்க்கையில இன்னும் இதுபோல எத்தனை விஷயங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேண்டியிருக்குமோ?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஜெய்... இம்முறை வடை எடுத்த சந்தோசத்தில, உண்மையிலயே கண்ணு தெரியேல்லை:)).... அதுசரி முதல் பதிவு போட்ட என்னைமாதிரி ஆட்களுக்குப் பரிசேதும் இல்லையோ? 200 மைல் வேகத்தில ஓடிவந்தேன் தெரியுமோ.. அப்பா மூச்சு வாங்குது ஒரு லெமன் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்..

அட கடவுளே... பழக்கதோசத்தில கேட்டிட்டேன் சத்தியமா எனக்கு வாணாம் நான் அஜீஸ் பண்ணிக்கொள்கிறேன்.....

படங்கள் இம்முறை கலக்கல். பார்த்துச் சிரிச்சதில கொழுவிட்டுது(எங்கே என ஆரும் கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)....

மங்கி பிள்ளையைக் ஹப்பியா இருக்கச் சொல்லுங்கோ... பூஸார் தேடியது அவரை அல்ல:)))))).

ஹுஸைனம்மா said...

//என்னோட கிண்டல் தாங்காம நான் தூங்கிய பிறகே ரூமுக்குளே பயபுள்ள வரும் //

:-((( ஏன் கிண்டல் செய்யணும்?

Chitra said...

பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது இதிலதான் .


....என்னே ஒரு கண்டுபிடிப்பு! கல்வெட்டுல எழுதி வைக்க மறக்காதீங்க...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் என்ன செய்திருப்பேன்னு நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி
35 Views

சூப்பர் ஐடியாங்க! இனிமேல் நாமளும் இதையே பின்பற்றனும்!

ப.கந்தசாமி said...

//எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க.//

இதென்னங்க புது பழமொழியா இருக்குது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. அந்த குரலை சரி செய்ய.. வெந்தயத்தை எடுத்து, 10 நாள் ஊறவெச்சு-னு ஆரம்பிச்சிருப்பீங்கனு நினச்சு படிக்க ஆரம்பிச்சேன்..

கடைசியா, இப்படி கொண்டுவந்து முடிச்சிட்டீங்களே..!!!

சரிண்ணே.. வந்ததுக்கு ஏதாவது சொல்லிட்டுப்போறேன்..

எந்த போன் இருந்தாலும், வைப்ரேட்டர்-ல வெச்சிருந்தாலும்.. எடுத்து ஊருக்கு போன் பண்ணி பிரச்சனைய கிளப்பிவிடலாம்..ஹி..ஹி
இதோ வரோம்....

Mahi said...

போட்டோஸ் க்யூட்டா இருக்கு ஜெய் அண்ணா! குரல் கதையும் காமெடியா இருக்கு.//பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது இதிலதான்.// நல்லா அனலைஸ் பண்ணியிருக்கீங்க. ;) :)

Mahi said...

டெம்ப்ளேட் அழகா இருக்கு! :)

Unknown said...

ஹா ஹா!

ஸாதிகா said...

நல்ல அலசல்,சுவாரஸ்யமான தகவல்.

GEETHA ACHAL said...

வைப்ரேடில் வைப்பதும் நல்லது தான்..புதுசா டெம்பிளேட்...அழகாக இருக்கு...

எப்படி தான் ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக டெல்பிளேட் மாத்திரிங்களே...எனக்கு அப்பாடா என்று இருக்கு...

Mohamed Faaique said...

ஆஹ்ஹ்ஹா......ஆஹ்ஹ்ஹா.... இதே மேட்டர் நம்மளுக்கும் நடந்திருக்கு பாஸ். அடுத்த பதிவுக்கு மேட்டர் கிட்டிடுச்சு.. போட்டு அசத்திர வேண்டியதுதான்...

Unknown said...

வணக்கம் பாஸ்....
நல்லா ஓட்டுறீங்க கடைய..
பதிவுன்னா இது பதிவு..
போன் வைச்சு இப்பிடியா ??
.பிரயோசனமான தகவல்க எதுவா இருந்தாலும் நாம வாசிப்பம்லே
அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

பாட்டு ரசிகன் said...

சுவையான கட்டுரை..

middleclassmadhavi said...

உருவத்துக்கும் குரலுக்கும் உள்ள சம்பந்தம் இது வரை யோசிக்காத ஒன்று! நன்றி!

Unknown said...

குரலைப் பற்றி பெரிய ஆராய்ச்சியே செஞ்சுருபீங்க போல?

ஜெய்லானி said...

@@@athira--//ஆ..வட வட.... நேக்குத்தேன்ன்ன்ன்ன்ன்//

வாங்க...வாங்க..!!இந்த தடவை உங்களுக்குதான் :-))யாருக்குமில்லை கெட்டி சட்னியும் உங்களுக்குதான்
/////என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி
// ஹா...ஹா...ஹா.. உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும்...:):).

ஹி..ஹி... நான் ஒரு அப்பாவி தெரியுமில்ல .. இது வேற ..அது வேற... இதே கேள்வியை அங்கே வான்ஸும் கேட்டிருக்காங்க... அவ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன் வசந்த்--//உதாரணத்துக்கு அறிஞர் அண்ணா , நெடுஞ்செழியன் , வை கோ ..இப்படியே சொல்லிகிட்டு போகலாம் .//

எங்க தானைதலைவி நமீதாவ சொல்லாததை கண்டிக்கிறேன்..! //

வாங்க பாஸ் வாங்க..!! நீங்களே சொல்லிட்டீங்க.. தானைத்தலைவின்னு ..ஆனா எங்க சங்க செயலாளர் அனுஷ்கா கோவிச்சிகிட்டா என்ன செய்யுதாம் அவ்வ்வ்வ்

////பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . //

ஜெயலலிதாவை தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது //
ஆஹா.. செம உள் குத்தால்ல இருக்கு ..நா வரல இந்த ஆட்டைக்கி ..ஹி..ஹி...

//
சந்தேகப்பிராணியா இருப்பாங்க போல பாவம் நண்பரின் வாழ்க்கையில இன்னும் இதுபோல எத்தனை விஷயங்களுக்கு சர்டிஃபிகேட் கொடுக்க வேண்டியிருக்குமோ?//

ச்சே.ச்சே..அப்படி இருக்க சான்ஸ் இருக்காது . அவர் மேலே அவங்களுக்கு பாசம் கொஞ்சம் அதிகம் .அதான் வீட்டில உள்ள எல்லாரையும் ஓட வச்சி இருக்காங்க ..((( ஒரு வேளை இதை படிச்சிட்டு என்னைய போட்டு காய்ச்சி எடுத்துட்டா..!! நா பாவம் ))ஹி..ஹி..

// காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க .. //

எங்க அவங்க மாதிரி குரல் கொடுத்து காட்டுங்க பார்க்கலாம்//
சில குரல்ல நான் சவுண்ட் விட்டா அதுகளே பயப்படும் ஹி..ஹி...(( கழுத்து வரை தண்ணீரில நின்னு டிரை செய்யுங்க 10 நாளில் தானா வரும் ))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//ஜெய்... இம்முறை வடை எடுத்த சந்தோசத்தில, உண்மையிலயே கண்ணு தெரியேல்லை:))....//

வாங்க..வாங்க..!! உங்களுக்காக டைம் ஃபிக்ஸ் பண்ணி போட்டதா ””அங்கே””வான்ஸ் காதுல புகை விட்டிருக்காங்க ஹா..ஹா..
// அதுசரி முதல் பதிவு போட்ட என்னைமாதிரி ஆட்களுக்குப் பரிசேதும் இல்லையோ? //
எனன் வேனும் ஒரு லிட்டர் பாலை 100 கிராமா சுண்ட காய்ச்சியது இருக்கு வேனுமா..? இல்லை விட்டுப்போன அ கோ மு மீதி 90 அப்படியே இருக்கே அது வேனுமா..??

//200 மைல் வேகத்தில ஓடிவந்தேன் தெரியுமோ.. அப்பா மூச்சு வாங்குது ஒரு லெமன் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்..//

ஆஹா..ஆடு தானா வந்து தலையை குடுக்குதே..அப்ப மஞ்சள் தண்ணீயை தெளிச்சிட வேண்டியதுதான் :-)) . இருங்கோ.. இருங்கோ... இதோ ஒரே நிமிஷத்துல ஒரு குடம் நிறைய கொண்டு வரேன் :-))

//அட கடவுளே... பழக்கதோசத்தில கேட்டிட்டேன் சத்தியமா எனக்கு வாணாம் நான் அஜீஸ் பண்ணிக் கொள்கிறேன்.....//

அடடா ...!! எலக்காய் எல்லாம் போட்டு கொண்டு வந்தேனே ..சரி ..சரி..வேற யாராவது மாட்டாமலா போய்டுவாங்க :-))

//படங்கள் இம்முறை கலக்கல். பார்த்துச் சிரிச்சதில கொழுவிட்டுது(எங்கே என ஆரும் கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)....//

கதைக்கேத்த படம்தான் கிடைக்க மாட்டேங்குது :-))

// மங்கி பிள்ளையைக் ஹப்பியா இருக்கச் சொல்லுங்கோ... பூஸார் தேடியது அவரை அல்ல:))))))./
ஹி..ஹி... யப்பா இப்பதான் சந்தோஷமா இருக்கும் ..நா மங்கி பிள்ளையை சொன்னேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//என்னோட கிண்டல் தாங்காம நான் தூங்கிய பிறகே ரூமுக்குளே பயபுள்ள வரும் //

:-((( ஏன் கிண்டல் செய்யணும்? //

வாங்க..வாங்க.!! நான் இருக்கும் இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும் ..யாரு யாரை டீஸ் செய்தாலும் கோவப்படுவதில்லை . சீரியஸா நினைப்பதுமில்லை ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra --//பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது இதிலதான் .
....என்னே ஒரு கண்டுபிடிப்பு! கல்வெட்டுல எழுதி வைக்க மறக்காதீங்க//

வாங்க..வாங்க.!! கல் வெட்டு மாதிரிதானே இந்த பிளாக் ஸ்பாட்டும் ..அதான் நினைச்சி எழுதிட்டேன் :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி --//
நான் என்ன செய்திருப்பேன்னு நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி
சூப்பர் ஐடியாங்க! இனிமேல் நாமளும் இதையே பின்பற்றனும்! //

வாங்க...வாங்க..!!இந்த மாத்தி யோசிக்கிறது நா பல வருஷமாவே ஓட்டிகிட்டு இருக்கேன் ..லேபிளில் பார்த்தால் புரியும் ...ஓனர்ன்னு போர்டை போட்டதுக்கு இது மாதிரி பதில் சொல்லாதீங்க ..கொஞ்சம் வித்தியாசமா சொல்லுங்க நோ பிராப்ளம் ..!!
சைலண்டில இருப்பது எப்பவுமே நல்லது.. சவுண்ட் குடுத்து நம்மை காட்டிக் குடுக்காது.சில இடங்களில் ரிங்க் டோன் அடுத்தவங்களுக்கு எரிச்சலை குடுக்கும் . அடிக்கடி ரிங்க் டோன் மாத்த வேண்டிய தேவை இருக்காது. தூங்கும் போது திடீரென அடிச்சி நமக்கு பீப்பியை உண்டாக்காது . இதுப்போல பல விஷயங்கள் இருக்கு :-)) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

isaianban said...

தலைவா மாத்தி யோசிக்கறத உருப்படியா யோசிப்போம் நான் இன்னா சொல்றேன்னா போன் அப்படின்னு ஒன்னு இருந்தாதானே பிரச்சினை அதுவே இல்லாட்டி... ””இல்ல சும்மா கேட்டேன்”””” ஹிஹி

பொன் மாலை பொழுது said...

அப்பாடா......சந்தேகமே கேக்காம ஜெய்லானி கிட்டே இருந்து ஒரு நல்ல............பதிவு.
எனக்கு தெரியும் உங்கபோன்ல ரிங் டோன் வராதே!. வந்தாதானே லப்புடா..... மொபைல வாஷிங் மெஷின்ல வாரா வாரம் போட்டு சுத்தம் பண்ணும் ஒரு ஆத்மா நீங்கதான்.

பொன் மாலை பொழுது said...

//கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே நம்பிக்கையே வந்தது. //

இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்.புதுசா ஸ்டெப்னி இருந்தா, அத விட்டா பொண்டாட்டிகிட்ட பேச விடுவாங்க??
இந்த பொம்பளங்களே ரொம்ப தான் அலம்பல் பன்னுவாஹா .....(எனக்கும் வந்துவிட்டது அதிரை slang)
உண்மையில் அந்த பெண் குரல் நண்பர்தான் பாவம்.

டெம்ப்ளேட் முன்பை விட நல்ல இருக்கு ஜெய்லா ..

பொன் மாலை பொழுது said...

// எந்த போன் இருந்தாலும், வைப்ரேட்டர்-ல வெச்சிருந்தாலும்.. எடுத்து ஊருக்கு போன் பண்ணி பிரச்சனைய கிளப்பிவிடலாம்..ஹி..ஹி
இதோ வரோம்....//



சீக்கிரம் ஷார்ஜா போங்க பட்டா.

பொன் மாலை பொழுது said...

இன்னா நைனா நம்ம வூட்டு பக்கமே வராமக்கீர?

MANO நாஞ்சில் மனோ said...

//காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க //

டகால்ட்டி நக்கலை பாரு லொள்ளை பாரு...

MANO நாஞ்சில் மனோ said...

//இங்கதானே சுத்திகிட்டு இருந்தான் , எங்கே போயிருப்பான்..???//

யாரு மொக்கையன் செல்வா'தானே...?

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த பிரச்சனை மூனு நாளா அவருக்கும் டென்ஷன் நமக்கும் ஒரு வித எரிச்சல் ((எதை சொல்லியும் நம்பாவிட்டால் என்ன் செய்வது )) கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே நம்பிக்கையே வந்தது.//

இது நாங்களும் இப்பிடி பேசி நண்பர்களின் மனைவிகளை கலாயிப்பது [கடுப்பு]உண்டு ஆனால் சீரியஸ் ஆக விடமாட்டோம்...

MANO நாஞ்சில் மனோ said...

//நான் என்ன செய்திருப்பேன்னு நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி //

ஒரு நாள் உம்ம போனுக்கு எரிமலை, சூறாவளி, பூகம்பமே வர போகுது நாஞ்சில் மனோ வடிவில்.....எஸ் மக்கா அலைஞ்சி திரிஞ்சி உம்ம நம்பரை கண்டு பிடிச்சிட்டேனே. பஹ்ரைன்ல இருந்து போன் வந்தால் சூதனமா இரும் ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//கக்கு - மாணிக்கம் said...
34 இன்னா நைனா நம்ம வூட்டு பக்கமே வராமக்கீர?//


ஆங்.....நீங்க நமீதா ஸ்டில் போடுறது இல்லியாம் அதான் கி கி கி கி....

MANO நாஞ்சில் மனோ said...

//வாங்க..வாங்க.!! நான் இருக்கும் இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும் ..யாரு யாரை டீஸ் செய்தாலும் கோவப்படுவதில்லை . சீரியஸா நினைப்பதுமில்லை ..!!//

நாசமா போச்சு போ....

அந்நியன் 2 said...

பாஸ்....

அந்த பயவுள்ளையை இனிமேல் அடுத்தவர் போனை,எடுப்பியா.. எடுப்பியா.. என்று,வாயிலியே அடிக்க வேண்டியதுதானே.(விளையாட்டுக்கு சொன்னேன்)

ஹேமா said...

ஜெய்...இப்பல்லாம் சந்தேகம் போய் கண்டுபிடிப்பா.குரலால குறளிவித்தையெல்லம் காட்டறாங்கள் சிலர்.எல்லாம் படங்களும் அந்த வசனங்களும் அசத்தல்.சிரிப்புத்தான் வருது.

எங்க குழந்தைநிலா,
உப்புமடச் சந்திப்பக்கம் காணவே இல்ல !

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. படங்களும், அதுக்கு பொருத்தமா உங்க டயலாக்ஸ்ம் சூப்பர்.. :)

எனக்கு ஒரு டவுட்ட்டு...

அதென்னதுங்க....

//எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க.//

எனக்கு தெரிந்து.. கல்லானாலும் தான் கணவன்னு கேள்விப் பட்டிருக்கேன். :)

jothi said...

//எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க.//

த‌மிழ் எவ்வ‌ள‌வு ஆப‌த்தான‌ மொழி.? மேட்ட‌ரையே சுத்த‌மா மாத்திருச்சே,..

சி.பி.செந்தில்குமார் said...

>>பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் .

ம்ஹூம்.. அண்னனுக்கு அனுபவம் பத்தலை.. கலைஞர் டி வி ல நைட் 9 டூ 10 பாடவா டூயட் பாடலை நிகழ்ச்சியை பாருங்கண்ன்ண்னே

சாந்தி மாரியப்பன் said...

//என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும்//

ஜூப்பரு :-))

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க.//

இதென்னங்க புது பழமொழியா இருக்குது? //

வாங்க...வாங்க..!! இது புது மொழி மாதிரிதான்..நேரிடையான அர்த்தமே தான் . அதாவது திருடனா இருந்தாலும் புருஷந்தான். அவங்க மேலே இருக்கும் பாசம் போகாதுதானே ...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஏண்ணே.. அந்த குரலை சரி செய்ய.. வெந்தயத்தை எடுத்து, 10 நாள் ஊறவெச்சு-னு ஆரம்பிச்சிருப்பீங்கனு நினச்சு படிக்க ஆரம்பிச்சேன்.. //

வாங்க குருவே வாங்க..!! நமக்கு எப்பவும் மொக்கைதானே சரிப்படும் .நடுநடுவே போரடிக்காம இருக்க அதுமாதிரி போடறது. :-))

// கடைசியா, இப்படி கொண்டுவந்து முடிச்சிட்டீங்களே..!!! //

இன்னும் கொஞ்சம் போடலாமுன்னு நினைச்சா அப்புறம் பொய் தமிழன் மாதிரி என் பதிவுஆகிடும் மக்கள் அப்புறம் பாய பிறாண்ட ஆரம்பிச்சுடுவாங்க ஹி..ஹி...

//சரிண்ணே.. வந்ததுக்கு ஏதாவது சொல்லிட்டுப்போறேன்.. //

வந்ததே போதுமே...!! டெம்பிளேட் கமெண்ட் போடாம எதுவா இருந்தாலும் சும்ம தைரியமா சொல்லிட்டுப் போங்க

//எந்த போன் இருந்தாலும், வைப்ரேட்டர்-ல வெச்சிருந்தாலும்.. எடுத்து ஊருக்கு போன் பண்ணி பிரச்சனைய கிளப்பிவிடலாம்..ஹி..ஹி
இதோ வரோம். //

நான் வச்சிக்கிறது பட்டாப்பட்டிக்குள்ளேதானே ஹி..ஹி...இப்ப என்னா செய்வீங்க இப்ப என்னா செய்வீங்க ....!! :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தூயவனின் அடிமை said...

பாஸ், டைம் போகாததற்கு இப்படியா ஹி......ஹி.....

ஜெய்லானி said...

@@@Mahi--//போட்டோஸ் க்யூட்டா இருக்கு ஜெய் அண்ணா! குரல் கதையும் காமெடியா இருக்கு.//

வாங்க...வாங்க..!! சந்தோஷம்..இந்த கதை நடந்ததும்தான் நான் அவரை அதிகமா கிண்டலடிக்க ஆரம்பிச்சதே...ஹா..ஹா..

//பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது இதிலதான்.// நல்லா அனலைஸ் பண்ணியிருக்கீங்க. ;) :) //

எனக்கு பொதுவா நல்ல குரல் வளத்தை ரசிக்கக்கூடிய ஆர்வம் அதிகம் .அது யாரா இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைச்சா பாராட்டவும் தயங்குவதில்லை .:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--//டெம்ப்ளேட் அழகா இருக்கு! :)//

ரொம்ப நாளா மாத்தனுமுன்னு நினைச்சி எதுவுமே பிடிக்கல.கலர் சரியிருந்தா மாடல் பிடிக்கல. சில கோடிங் இன்னும் இதுல வரவே மாட்டேங்குது. இதுல லோடிங் டைமை குறைக்க டிரை பண்ணிகிட்டு இருக்கேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன் --//ஹா ஹா! //

வாங்க...வாங்க.!! சந்தோஷம் அப்படியே எதை நினைச்சி சிரிச்சிங்கன்னு சொல்லிட்டா தேவலாம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நல்ல அலசல்,சுவாரஸ்யமான தகவல்.//

வாங்க...வாங்க..!! சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//வைப்ரேடில் வைப்பதும் நல்லது தான்..புதுசா டெம்பிளேட்...அழகாக இருக்கு...//

வாங்க..வாங்க..!! வைப்ரேடில வைப்பதை பத்தி நெ 29 ல கொஞ்சம் சொல்லி இருக்கேன் பாருங்க..அது பல விஷயங்களுக்கு நல்லது

//எப்படி தான் ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக டெல்பிளேட் மாத்திரிங்களே...எனக்கு அப்பாடா என்று இருக்கு...//

உண்மைதான் நான் 6 மாசமா நல்ல டைப் , கண்ணுக்கு கூசாம ஈஸியா தேடிகிட்டு இருந்தேன் . கிடைக்கல.. கிடைச்சாலும் ரன் டைம் எர்ரர் பல வருது .ஒரு வழியா இதை கொஞ்சம் மாடிஃபை பண்ணி போட்டிருக்கேன் .முன்னால இருந்ததுல.. சிலருக்கு திறக்கலங்கிற கம்ளைண்டும் இருந்திருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--// ஆஹ்ஹ்ஹா...... ஆஹ்ஹ்ஹா.... இதே மேட்டர் நம்மளுக்கும் நடந்திருக்கு பாஸ். அடுத்த பதிவுக்கு மேட்டர் கிட்டிடுச்சு.. போட்டு அசத்திர வேண்டியதுதான்...//

வாங்க...வாங்க..!! போடுங்க ...போடுங்க ..படிக்க ரெடியா இருக்கேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மைந்தன் சிவா--//வணக்கம் பாஸ்....
நல்லா ஓட்டுறீங்க கடைய..//

வாங்க..வாங்க..!! ரொம்ப நால் கழிச்சி வந்திருக்கீங்க ..என்ன சாப்பிடுறீங்க ..சூடா ஆம்லெட இருக்கு கொண்டு வரவா..ஹி..ஹி.. :-))
// பதிவுன்னா இது பதிவு..
போன் வைச்சு இப்பிடியா ??
.பிரயோசனமான தகவல்க எதுவா இருந்தாலும் நாம வாசிப்பம்லே //

மொக்கைகள் இடத்துல பிரயோஜனமான பதிவா..??அவ்வ்வ்வ்வ்
//அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என?? //

கோவத்துக்கும் நமக்கும் சூரியனுக்கும் புளுட்டோவுக்கும் உள்ள தூரம் மாதிரி ..:-))

// தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html //

வந்துகிட்டே இருக்கேன் .அது எந்த பேரா இருந்தா என்ன ஹா..ஹா.. :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பாட்டு ரசிகன்--//சுவையான கட்டுரை..//

வாங்க...வாங்க..!! சந்தோஷம்.. நானும் பாட்டுக்கு ரசிகந்தான் ..!!

//என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html//

இது என்னோட ஆல் டைம் ஃபேவரைட் பாட்டு ..பார்த்துட்டும் வந்துட்டேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@middleclassmadhavi --//உருவத்துக்கும் குரலுக்கும் உள்ள சம்பந்தம் இது வரை யோசிக்காத ஒன்று! நன்றி!/

வாங்க...வாங்க..!!சந்தோஷம்.. மெயின் மேட்டரை சும்மா கப்புன்னு பிடிச்சிட்டீங்க..!! :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜிஜி--//குரலைப் பற்றி பெரிய ஆராய்ச்சியே செஞ்சுருபீங்க போல? //

வாங்க...வாங்க..!! இதுப்போல நிறைய ஆராய்ச்சி இருக்கு ஆனா எல்லாத்தையுமே இங்கே போட முடியாதே...!! தொடர்மாதிரி ஆகிடும் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@isaianban --//தலைவா மாத்தி யோசிக்கறத உருப்படியா யோசிப்போம் நான் இன்னா சொல்றேன்னா போன் அப்படின்னு ஒன்னு இருந்தாதானே பிரச்சினை அதுவே இல்லாட்டி... ””இல்ல சும்மா கேட்டேன்”””” ஹிஹி //

வாங்க...வாங்க..!! இந்த காலத்தில முகத்துக்கு சோப்பு போடுறோமோ இல்லையோ தொலை பேசுறதுக்கு செல் போன் ரொம்ப முக்கியம் வாத்யாரே..!! உங்களுக்கு வேனாட்டி உங்ககிட்ட இருக்கிற சாம்செங் போனை எங்கிட்டே குடுத்துடுங்களேன் ஹி.ஹி. :-)) ((எங்கிட்டேயேவா நக்கலு ஹா..ஹா.. )) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராஜவம்சம் said...

உங்கள் திறமை யாருக்கு வரும்ண்ணே மொபைலே இல்லாட்டி இன்னும் நிம்மதியா இருக்கலாம்.

எம் அப்துல் காதர் said...

// ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன்?//

நீங்கள் போட்டோவில் ஒல்லியா இருக்கீங்க. உங்க குரல் அழகா இருக்கே!! அது எப்படி?? //டவுட்டு// ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

// நான் என்ன செய்திருப்பேன்னு நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான். என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும். ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி//

ரிங் அடிச்சா எடுத்து பதில் சொல்லாத ஒரு மொபைல், அதுக்கொரு ஸிம் கார்ட், அதுக்கொரு நம்பர் தேவையா? (உங்க அலும்பு ரொம்ப ஓவருங்க!!)

இலா said...

என் குரலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு தெரியுமோன்னோ ??!!!
ஹி.. ஹி..ஹி.. சும்மா உல்லாலயீக்கு சொன்னேன்.

போன் அடிச்சா கேக்காத மாதிரி வச்சிருப்பீங்களா? டுபாகூர் போனா??

THivya said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!....... அக்கா உங்க ப்ளாக் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்... அன்புடன் -புதியவன்-

@புதுமை விரும்பிகளுக்கான நம்-1 தமிழ் இணையத்தளம்
நீங்களும் ஒருமுறை வாருங்கள் எனது புதியஉலகத்துக்குள்...நன்றி- http://puthiyaulakam.com

r.v.saravanan said...

படங்களும் கமெண்ட்ஸ் ம் சூப்பர் ஜெய்லானி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலாய்க்கலாம்னு வந்தேன்... இப்படி எழுதினா ரசிக்கத்தானே முடியும்... :))

Unknown said...

//பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் .//

யாருமே சொல்லாத விஷயம்... உண்மைதானோ....?

படங்கள் மிகவும் அருமை

kavisiva said...

//நான் என்ன செய்திருப்பேன்னு நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி//

எதுக்கு ஃபோன் எல்லாம் காசு கொடுத்து வாங்கிட்டு அப்புறம் அதை அணைச்சு வைக்கணும். அது இல்லேன்னா இன்னும் நிம்மதியா இருக்கலாம்ல :)

நிரூபன் said...

வணக்கம் சகோ, குரப் பற்றிய பதிவின் மூலம் கணவன் மனைவிக்கு இடையிலை உள்ள நம்பிக்கையினையும் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள். போனிலை குரலைக் கேட்டவரின் மனைவி கணவனை கடிச்சுக் குதறியிருப்பாரில்ல.

Anisha Yunus said...

திங்க திங்க ஆசாஇ பாடியவரின் குரல் வளம் கூட நல்லாத்தான் இருந்தது. ஒரியாக்காரர் கூட ரெக்கமண்டு செஞ்சாரு!! ஹி ஹி

ஆச்சி ஸ்ரீதர் said...

//நான் இருக்கும் இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும் ..யாரு யாரை டீஸ் செய்தாலும் கோவப்படுவதில்லை . சீரியஸா நினைப்பதுமில்லை//

உங்க பதிவுகளை படிக்கும்போது புரிகிறது.

உங்களுடைய இந்த பதிவை ரசித்ததைவிட

//அந்த பயவுள்ளையை இனிமேல் அடுத்தவர் போனை,எடுப்பியா.. எடுப்பியா.. என்று,வாயிலியே அடிக்க வேண்டியதுதானே.(விளையாட்டுக்கு சொன்னேன்//

இந்த பின்னூட்டம் என்னை மிக சிரிக்க வைத்தது.

apsara-illam said...

சலாம் சகோதரரே...,தங்கள் பதிவை படிப்பதற்க்கு முன் ஒரு சின்ன வேண்டுக்கோள்.???
குப்புறப்படுத்து,மல்லாக்கபடுத்தெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம் நானே சொல்லிடுறேன்.
தாங்களுக்கு ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.அவ்வளவே தான்....
நன்றி.

அன்புடன்,
அப்சரா.

மாதேவி said...

/என் போன் எப்பவுமே வைபிரேட் மோடிலேயே இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும்// :)

மாய உலகம் said...

பேச்சு சாதூரியம் பற்றி சொல்லும்போது அதில் அண்ணாவைப்பற்றி குறிப்பிட்டீர்ந்தீர்கள்... அவர் தாமதமாக ஒரு மேடைக்கு வந்ததும்..மக்கள் அவர் என்ன பேச போகிறார் என பார்த்தபோது... அண்ணா அவர்கள் உடனடியாக ... நேரமோ நித்திரை.. மணியோ பத்தரை மாதமோ சித்திரை...நீங்கள் மறக்காமல் இடவேண்டும் முத்திரை என சொல்லவும் கைதட்டல் விண்ணை தொட்டது... அப்பறம் அந்த பூனையும் எலியும் இருக்கும் படம் சூப்பர்..

மாய உலகம் said...

உங்க கதைய கேட்டதும் மாதவன் படம் ஞாபகம் வந்தது... இப்போ உள்ளது போல் வீடியோ சாட்டிங் இருந்தாலும் தப்பித்து விடலாம்... அப்ப பட்ட கஷ்டத்தை நினைத்ததும் சிரிப்பு வருது..... ஹி ஹி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))