Monday, March 7, 2011

மகளிர் தினம்


           ஒவ்வொரு  வருடமும் உலக மகளிர் தினம் வந்து கிட்டும் போய் கிட்டுந்தான் இருக்கு . ஆனா அதனால பலன் ஏதாவது இருக்கான்னு பார்த்தா ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லனும். அட அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே  நமக்கும் நினைவுக்கு வரும் .(( நம்ம கவலை  நமக்கு )) ஆஹா...லீவான்னுன்னு சொல்லிட்டு  அதுக்காக வீட்டில சமைக்காம  இருந்துடாதீங்க .பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வந்துடும்
            பெண்கள்  இல்லாத துறைன்னு ஒன்னு சொல்லவே முடியாத அளவில இப்போ அவங்க எல்லா வேலைகளிலும் திறமையா செஞ்சிகிட்டு வராங்க .எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில  அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??    
எனக்கு...எனக்கு...எனக்கூஊஊஊஊஊஊ
                             
               அதுவுமில்லாம  நெட்டில பாதிக்கு மேலே பிளாக் வச்சி இருப்பதும் அவங்கதான் .ஒரு பக்கம் பாராட்ட வேண்டிய விஷயம்தான். இனையம்  வந்த பிறகுதான் அதிகமா  பெண்களோட உணர்வுகள் வெளியே  தெரிய வந்திருக்கு . ஒரு வேளை மாட்டிகிட்டான் அடிமைங்கிற  மாதிரி போட்டு தொவச்சி எடுக்கிறாங்களோ ..? இதே  ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ
            அதே நேரத்துல டீவி பார்த்தே விதம் விதமா எதிர் பேச்சுக்களை கற்றுக்கொள்வதும் பல இடங்களில் நடக்குது. காரணம் தமிழ் அழுகை சீரியல் களை அதிகம் சப்போட் செய்வதும் இவங்கதான் .இல்லாட்டி  மெகா சீரியல்னு போட்டு மனுஷனை வருஷக்கணக்குல தாளிப்பானுங்களா..?? இந்த சீரியல்களாலேயே  பல வீடுகளில் உரிமை பிரச்சனைகள்  வந்து விடுகிறது
           மகளிர் தினம்  ஆரம்பிச்ச நோக்கமே  உழைக்கும் பெண்கள் தங்களுக்கு சமமான உரிமையை அடையவேனுங்கிற எண்ணத்திலதான் ஆனா இன்னும் சிலர் எது சமஉரிமைங்கிறது தெரியாமலோ இல்லை புரியாமலோ  பேரில  ஆண்களை மாதிரி உடை அணிவதும் , அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் , காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .
            என்னத்தான்  நல்லா படிச்சிருந்தாலும் , கடுமையா உழைச்சாலும் அவங்களுக்கு தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை. ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைப்ப்து இல்லை. கேட்டால ஆணாதிக்கமுன்னு ஈசியா சொல்லிடுவீங்க .இதே பெண்களே  நடத்தும் எத்தனையோ  நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில்  இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே  இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை.
         ஒரு சராசரி  பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை  குடுத்து இருந்தாலும்  இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான்  தெரிகிறது.
உலக மகளிர்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள் ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே   )) 

98 என்ன சொல்றாங்ன்னா ...:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் ,//

இத இத இதத்தான் ஆணாதிக்கம்ன்னு சொல்றது :))

ஜெய்யி.. ஏகப்பட்ட புகைச்சலோட எழுதியிருக்கற மாதிரி தெரியுது.. :)) பார்த்து, வீட்டுல மொளகாப்பொடி அதிகமாகப் போட்டு தாளிச்சிடப் போறாங்க.. (நான் சமையலைச் சொன்னேன்..)

நீங்க சொல்றத முழுமையா ஏத்துக்க முடியல ஜெய்.. இன்னும் நிறைய நாடுகள்ள நிலைமை முன்னேறாம தான் இருக்கு..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அதுக்காக பெண்கள் எல்லாருமே நல்லவங்கன்னு சொல்ல மாட்டேன்.. சொல்லவே மாட்டேன்.. :))

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
இன்றைய கால கட்டத்தில் சமூகத்தில் ஆணுக்கு சரி சமமாக பெண்கள் உள்ளார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், நீங்கள் பதிவில் சொல்வது போல ஊதிய அடிப்படையில் பெண்கள் பின் தங்கி உள்ளார்கள் என்பது கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது.
ஆனாலும் ஒவ்வோர் துறைகளிலும் ஆண்களிற்கு நிகராக பெண்கள் இருக்கும் போது ஆண்களிற்கு வழங்கும் அதேயளவு ஊதியத்தை வழங்கும் படி பெண்களால் சம உரிமை கேட்க முடியாதா?
இவ் இடத்தில் பெண்களின் சம உரிமைத் தராசைக் குறைத்துக் காட்டும், நீங்கள், அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்தால் அது பதிவிற்கு இன்னும் சிறப்பாக இருக்கும்,

நிரூபன் said...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் கனவு இன்று நிஜமாகி வருகிறது என்றாலும், ஈழத்திலும், இந்தியாவிலும் ஒவ்வோர் குக் கிராமங்களிலும் அடுப்பூதும் பெண்களினூடாகவும், அடுத்தடுத்துப் பிள்ளை பெறும் பெண்களூடாகவும் இந்த புதுமைப் பெண்கள், புரட்சிப் பெண்கள் எனும் விடயம் பேச்சளவில் உள்ளது. பெண்களின் உரிமைகள் பற்றி, பெண்களைப் பற்றி எழுதும் அதிக வலைப்பதிவர்களாக பெண்களே இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். அந்த பெரும்பான்மை வலைப்பதிவர்களாக உள்ள பெண்களால் ஏன் ஒவ்வோர் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடிமைப்படும் பெண்களை அரியணையில் ஏற்ற( நல்வாழ்வு வாழும் வகையில் உருவாக்க) முடியாது?

நிரூபன் said...

இன்று மகளிர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!


he he he he

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////ஆனா அதனால பலன் ஏதாவது இருக்கான்னு பார்த்தா ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லனும். அட அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே நமக்கும் நினைவுக்கு வரும் .(( நம்ம கவலை நமக்கு )) ////

i agreee.......

ஹேமா said...

ம்....பரவால்ல ஜெய்.நான் நினைச்சேன் மகளிர் தினம் பற்றி ஏதாச்சும் சந்தேகமோன்னு !

athira said...

ஆ... விழுந்தடிச்சு ஓடி வாறதுக்குள்ள வட போச்சே.... சந்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

பொறுங்க படிச்சுட்டு வாறேன்....

athira said...

என்ன சொல்ல வாறீங்க ஜெய்? ஒண்ணுமே பிரியல்லே... சரி அதை விட்டிடறேன்..

பாவம் அந்தக் குருவிக் குஞ்சு.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தா என்னவாம்.... நான் புறாவுக்குச் சொன்னேன்...

ஜெய் படம் போதவில்லை..:((.

போன வருடம் ஹைஷ் அண்ணன்... பெண்கள் படை அணி போட்டு நட்பில வாழ்த்தியது நினைவுக்கு வருது...

அது ஒரு அழகிய நிலாக் காலம்...:((((((((((((((.

....... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.

vanathy said...

பெண்கள் தினத்தன்று லீவா??? அன்று ஆண்களை சமைக்க சொல்லணும். எதுக்கு ஆண்களுக்கு ஒரு தினம். அவங்களுக்கு தான் தினமும் ஒரு தினமா இருக்கே.
மற்றும் படி பார்ட்டிக்கு போவது, தண்ணி அடிப்பது, அசிங்கமா ஆடைகள் அணிவது தான் பெண்ணுரிமைன்னு நினைக்கிறாங்க போல.

சி.கருணாகரசு said...

மகளிர் தினம் ஆரம்பிச்ச நோக்கமே உழைக்கும் பெண்கள் தங்களுக்கு சமமான உரிமையை அடையவேனுங்கிற எண்ணத்திலதான் ஆனா இன்னும் சிலர் எது சமஉரிமைங்கிறது தெரியாமலோ இல்லை புரியாமலோ பேரில ஆண்களை மாதிரி உடை அணிவதும் , அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் , காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .//

மிக நேர்மையான பகிர்வுங்க... பாராட்டுக்கள்.

DrPKandaswamyPhD said...

என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

Chitra said...

எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.

Check this out:
http://4.bp.blogspot.com/_mWmoI6fxFQ8/TJGB4pBq1nI/AAAAAAAAAFo/qC89xQk1g84/s1600/janet_plucking_coconut.JPG

Chitra said...

அதே நேரத்துல டீவி பார்த்தே விதம் விதமா எதிர் பேச்சுக்களை கற்றுக்கொள்வதும் பல இடங்களில் நடக்குது. காரணம் தமிழ் அழுகை சீரியல் களை அதிகம் சப்போட் செய்வதும் இவங்கதான் .


.....பெண்கள் தினம்..... பெண்கள் என்றால், இந்த உலகம் முழுவதும் இருக்கிற பெண்கள் தான்.... சீரியல்ஸ் பார்த்து அழுவுறது, அவர்களில் எத்தனை சதவீதம் இருப்பாங்க?

Chitra said...

ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.

......குறிப்பாக தமிழ் நாட்டில்...

Ramani said...

நீங்கள் சொல்வது சரி
பதிவுலகில் பெண்கள் அதிகம்
இப்போது உலவுவது
பெருமைகொள்ளத்தக்கதாய் உள்ளது
அவர்களது பதிவுதான் இயல்பாகவும்
பயனுள்ளதாகவும் உள்ளது
பெண்கள் அதிகம் உள்ள
பெண்கள் அதிகம் பங்கெடுத்துக்கொள்ளும் எதுவும்
சிறந்ததாகத்தான் விளங்கும்
சிறு உதாரணம் கோவில்
மகளிர் குழுக்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கலாநேசன் said...

என்ன சொல்ல வரீங்க...ஓ மகளிர் தினப் பதிவா?

ஸாதிகா said...

ஏனுங்கையா இந்த கொலவெறி..?

ஸாதிகா said...

//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??// ஏன் தமிழ் நாட்டிலேயே ஒரு தகப்பனில்லாத பெண் தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளியாக இருக்கின்றார்.இது பத்திரிகையில் முன்பு படித்த செய்தி.

ஸாதிகா said...

//இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ// ஹி..ஹி..

asiya omar said...

அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.

சரியாச்சொன்னீங்க.

கக்கு - மாணிக்கம் said...

நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!

ஸாதிகா said...

//வர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும்// இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பயணமும் எண்ணங்களும் said...

இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்//

பாருங்க இத்தகவலை மறுப்பதும் இங்கே இரு பெண்கள் .. :))

தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள்னு நினைக்கிறேன்..

//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில் இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை//

சரியான கேள்வி..

ஆனந்தி.. said...

//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்..//

கேரளா பக்கம் இதையும் சில பெண்கள் செய்றாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்..:)))

ஆனந்தி.. said...

//நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//

:-))

அமைதிச்சாரல் said...

//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது//

உண்மைதான்..

Jaleela Kamal said...

////நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!////

ஜெய்லானி எனன் செய்ய போறீங்க வெனுமுன்னா தலைய ஹெல்மட் போட்டுட்டு போங்க

வேலன். said...

எங்கள் ஊரில் 20 வருடத்திற்கு முன்பே ஒரு பெண்மணி புல்லட் ஓட்டுவதும் - தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பதும் செய்தார்..அவரை கண்டு வியந்ததுண்டு...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Harini Nathan said...
This comment has been removed by the author.
Harini Nathan said...

உங்கள் கருத்து ஓரளவு உண்மைத்தான் சகோ
இருந்தாலும் உண்மையில் உழைத்துக்கொண்டு இன்னும் அடிமைப்படுக்கொண்டு இருக்கும் பெண்கள் இனம் இன்னும் இருக்கிறது உதரணமா இலங்கையில் பெருந்தோட்ட துறையில் உழைப்பின் சக்தியாக இருக்கும் மலையாக பெண்கள் உண்மையில் சிலருக்கு தகளது உரிமைகள் தரப்படுவதில்லை :( குறிப்பாக சில தினங்கள் அதன் அர்த்தம் தெரியாமலே கொண்டடப்பட்டுவருகிறது என்பது கவலைக்குரியது :(
சில பெண்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமே பெண்கள் என்பது அதை விட கொடுமை :(

ஹுஸைனம்மா said...

//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும்//

வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு சரியான சம்பளம் தராமல் சில வீட்டம்மாக்கள் ஏமாற்றுவதுபோல, கொஞ்சம் இளகிய மனம்கொண்ட வீட்டம்மா என்றால், ஒழுங்காக வேலைக்கு வராமல் டபாய்க்கும் பெண் வேலைக்காரர்களும் கூட உண்டு.

ஹுஸைனம்மா said...

//DrPKandaswamyPhD said... 13
என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.//

ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?

r.v.saravanan said...

அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஜெய்லானி

apsara-illam said...

சலாம் ஜெய்லானி சகோதரரே...,பரவாயில்லை மகளிர் தினத்தையோட்டி பதிவை போட்டு இருக்கீங்க...
நல்ல விஷயம்.இதிலேயும் குற்றம் குறை கண்டுபிடிச்சு சொல்ல எனக்கு தோணலைங்க...
ஏனென்றால் நடைமுறையில் இருப்பதை சொல்லிக்காட்டியிருக்கீங்க அவ்வளவுதான்.
ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அவரவர் நல்ல எண்ணங்களோடு நல்ல மனுஷங்களாக இருக்கணும் என்பதுதான் என் கருத்து.
சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொல்லி பதிவை போட்ட(ஜெய் சகோக்கே உரிய பாஷையில்)உங்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்,.
அப்சரா.

கே. ஆர்.விஜயன் said...

தென்னை மரத்திலேயும் ஏறீட்டாங்களா? அடப்பாவிமக்கா அதுக்கும் ஆப்பா ? நல்லா கொண்டாடுங்கப்பா மகளீர் தினத்த.

அன்புடன் மலிக்கா said...

//DrPKandaswamyPhD said... 13
என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.//

ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?//

மிகச்சரியான கருத்துக்கள்..

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

ங்க ...........வாங்கடி........வாங்க... ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப
வசிக்கிறோம் கச்சேரிய.

என்ன எல்லாரும் கிளம்பியாச்சா யாருப்பா இதுக்கு தல.. அவுகமட்டும் பெரிய கட்டை மத்தவாயெல்லாம் பூரிக்கட்டை ஓகேவா..


நல்ல பதிவு அண்ணாத்தே.
மகளீர்தின வாழ்த்துக்கள்[ உங்களுக்கல்ல] மச்சிக்கும் மற்ற தோழிகளுக்கும். சகோதரிகளுக்கும்..

MANO நாஞ்சில் மனோ said...

//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??//

இந்த லொள்ளுக்கு மட்டும் குறைவில்லை....
இரும் படிச்சிட்டு வர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ//

உம்ம பிரச்சினை உமக்கு.....

MANO நாஞ்சில் மனோ said...

//காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .//

யோவ் ஒட்டகம்.....எதுக்குய்யா எங்க ஹோட்டல் ஃபீல்'டுக்கு ஆப்பு வைக்கிறீர்....அவிங்க கும்மாளம் போட்டாதானே நமக்கு வருமானம்...

MANO நாஞ்சில் மனோ said...

// ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே ))//

செர்ந்திருக்குற கூட்டம் அப்பிடி ஹா ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

//கக்கு - மாணிக்கம் said... 23
நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//

ஐயம் ஆல்சோ வெயிட்டிங் பாஸ்.....

அப்துல்மாலிக் said...

ஒரு மாதிரி எழுதி ஹீரோவாகிட்டீங்க வாழ்த்துக்கள் பெண்களுக்கு @

S.Menaga said...

இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?? ஹா ஹா எனக்கு இங்க இருக்கிற கஎண்ட் படிச்சு சிரிப்புதான் ஜெய்..

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..--//

//அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் ,//இத இத இதத்தான் ஆணாதிக்கம்ன்னு சொல்றது :))//

வாங்க சந்தூஸ் வாங்க..!! முதல் வடை இன்னைக்கு உங்களுக்குதான் .யாருக்கும் தராம பிச்சி பிச்சி சாப்பிடுங்க
அவசிய தேவை இல்லாம நானும்தான் என் விருப்படிசெய்வேன்னு சொல்லி தேவையிலாத பொருட்களை சேர்க்கும் ஈகோ பழக்கமும் வளருகிறதே :-))

// ஜெய்யி.. ஏகப்பட்ட புகைச்சலோட எழுதியிருக்கற மாதிரி தெரியுது.. :)) பார்த்து, வீட்டுல மொளகாப்பொடி அதிகமாகப் போட்டு தாளிச்சிடப் போறாங்க.. (நான் சமையலைச் சொன்னேன்..) //

நான் வீட்டிலேயும் எலிதான் வெளியிலேயும் எலிதான் ஹி..ஹி... அதனால பயமில்ல

// நீங்க சொல்றத முழுமையா ஏத்துக்க முடியல ஜெய்.. இன்னும் நிறைய நாடுகள்ள நிலைமை முன்னேறாம தான் இருக்கு //

இது 20 வருஷத்துக்கு முன்னே இருந்த போது அப்படி..இண்டெர் நெட் , கம்ப்யூட்டர் வந்த பிறகு ஒவ்வொரு நாட்டின் புள்ளி விவரங்களை பாருங்க .. வளர்ச்சி விகிதம் எப்படி இருக்குதுன்னு தெரியும் (( சில அரசியல் சதி உண்மைய சொல்லாது ))

//அதுக்காக பெண்கள் எல்லாருமே நல்லவங்கன்னு சொல்ல மாட்டேன்.. சொல்லவே மாட்டேன்.. :)) //
ஆஹா ..செம உள்குத்தால்ல இருக்கு.. அவ்வ்வ்வ்... இதையே நான் சொன்னா ஆணாதிக்கமா..ஹா..ஹா.. பெண்ணுக்கு பெண்ணே எப்பவும் எதிரி :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிரூபன் --//வணக்கம் சகோதரம்,
இன்றைய கால கட்டத்தில் சமூகத்தில் ஆணுக்கு சரி சமமாக பெண்கள் உள்ளார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், நீங்கள் பதிவில் சொல்வது போல ஊதிய அடிப்படையில் பெண்கள் பின் தங்கி உள்ளார்கள் என்பது கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது.//

வாங்க.. வாங்க...!! நீங்க அரசு வேலையை மட்டும் பார்க்காதீங்க ..அதே அரசு வேலையா இருந்தா அங்கேயும் சில தகிடுதத்தம் இருக்கும் அதில் பதிவு மூப்புங்கிற அடிப்படையில கீழே தள்ளிடுவாங்க ..இல்லாட்டி வேற ஊர் மாற்றி போட்டுடுவேன்னு சொல்லி தடுத்துடுவாங்க

// ஆனாலும் ஒவ்வோர் துறைகளிலும் ஆண்களிற்கு நிகராக பெண்கள் இருக்கும் போது ஆண்களிற்கு வழங்கும் அதேயளவு ஊதியத்தை வழங்கும் படி பெண்களால் சம உரிமை கேட்க முடியாதா? //

அப்படி போடுங்க அருவாளை....பெண் தொழிளாளார்களுக்கு ஆண்களுக்கு இனையா சம்பளம் கிடைக்காததாலதான் போராட்டத்தில குதிச்சாங்க . அதன் விளைவுதான் இதெல்லாம் ..

// இவ் இடத்தில் பெண்களின் சம உரிமைத் தராசைக் குறைத்துக் காட்டும், நீங்கள், அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்தால் அது பதிவிற்கு இன்னும் சிறப்பாக இருக்கும், //

ஏனுங்க இந்த கொலவெறி..உள்ள விஷயத்தை நான் ஆரம்பிக்கவே இல்லை வாயதிறக்கும் முன்னே வாயிலேயே அடிச்சா என்ன செய்வது அவ்வ்வ்வ்

//பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் கனவு இன்று நிஜமாகி வருகிறது என்றாலும், ஈழத்திலும், இந்தியாவிலும் ஒவ்வோர் குக் கிராமங்களிலும் அடுப்பூதும் பெண்களினூடாகவும், அடுத்தடுத்துப் பிள்ளை பெறும் பெண்களூடாகவும் இந்த புதுமைப் பெண்கள், புரட்சிப் பெண்கள் எனும் விடயம் பேச்சளவில் உள்ளது. பெண்களின் உரிமைகள் பற்றி, பெண்களைப் பற்றி எழுதும் அதிக வலைப்பதிவர்களாக பெண்களே இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். அந்த பெரும்பான்மை வலைப்பதிவர்களாக உள்ள பெண்களால் ஏன் ஒவ்வோர் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடிமைப்படும் பெண்களை அரியணையில் ஏற்ற( நல்வாழ்வு வாழும் வகையில் உருவாக்க) முடியாது? //

கண்டிப்பா முடியும் ..இப்ப இந்த 20 வருஷத்திலே தானே தவழ ஆரம்பிச்சி இருக்காங்க ..((அதுவும் மீடியா வந்ததும்தான் வெளி உலகமே தெரியுது )) அடுத்த நூற்றாண்டில முழு வளர்ச்சி தெரியும் ..ஆனா அதை பாக்க நாம இருக்க மாட்டோம்
//இன்று மகளிர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

வாழ்த்துக்கள் ஃபேர்வேட் செய்துட்டேன்..:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@♔ℜockzs ℜajesℌ♔™--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
he he he he //

வாங்க ..வாங்க.!! சந்தோஷம்

//ஆனா அதனால பலன் ஏதாவது இருக்கான்னு பார்த்தா ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லனும். அட அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே நமக்கும் நினைவுக்கு வரும் .(( நம்ம கவலை நமக்கு )) ////

i agreee.......// கரெக்டா பாயிண்டை பிடிச்சிட்டீங்களே புத்தி சாலி...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ம்....பரவால்ல ஜெய்.நான் நினைச்சேன் மகளிர் தினம் பற்றி ஏதாச்சும் சந்தேகமோன்னு ! //

வாங்க குழந்தை நிலா வாங்க..!! சந்தேகமா இருந்தா நெம்பரோட வரும் ..தொடர்ந்து கேட்டா உதைக்க மாட்டீங்க ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஆ... விழுந்தடிச்சு ஓடி வாறதுக்குள்ள வட போச்சே.... சந்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

பொறுங்க படிச்சுட்டு வாறேன்..../

வாங்க ..வாங்க..!! ஆஹா...ஹஸ்ட் மிஸ்..ஆகிடுச்சே..பரவாயில்லை உங்களுக்காக லெமன் ஜுஸ் இருக்கு குடிக்கிறீங்களா..ஹி..ஹி..
கூலா ஃபிரிட்ஜில எடுத்து ஸ்பெஷலா வச்சிருக்கேன்

//என்ன சொல்ல வாறீங்க ஜெய்? ஒண்ணுமே பிரியல்லே... சரி அதை விட்டிடறேன்..//

ஆஹா..தப்பிச்சேன்..நல்ல வேளை கண்ணில் படவில்லை ஹா..ஹா..

//பாவம் அந்தக் குருவிக் குஞ்சு.. கொஞ்சம் விட்டுக்கொடுத்தா என்னவாம்.... நான் புறாவுக்குச் சொன்னேன்... //

ம்..நானும்தான் சொன்னேன்புறா கேக்கலையே.. இந்த படம்தான் இந்த பதிவுக்கு பொருத்தமா இருக்குமுன்னு நினைக்கிறேன்

//ஜெய் படம் போதவில்லை..:((. //

இதோ அடுத்து ரெடியாகிடுச்சி..மிட் நெட்டில கூகிள்
சதி செய்வதால் படம் அப்லோட் ஆக நேரம் பிடிக்குது
//போன வருடம் ஹைஷ் அண்ணன்... பெண்கள் படை அணி போட்டு நட்பில வாழ்த்தியது நினைவுக்கு வருது...

அது ஒரு அழகிய நிலாக் காலம்...:((((((((((((((.

....... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ் //

ம் ..அதை பார்க்க கூட முடியாமல்.சஸ்பெண்டில இருக்கே.. :-( உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

isaianban said...

S.Menaga said... 48

இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?? ஹா ஹா எனக்கு இங்க இருக்கிற கஎண்ட் படிச்சு சிரிப்புதான் ஜெய்..

அதேதான் எனக்கும்....ஹிஹிஹிஹிஹி

ஜெய்லானி said...

@@@vanathy--//பெண்கள் தினத்தன்று லீவா??? அன்று ஆண்களை சமைக்க சொல்லணும். எதுக்கு ஆண்களுக்கு ஒரு தினம். அவங்களுக்கு தான் தினமும் ஒரு தினமா இருக்கே.//

வாங்க வான்ஸ் வாங்க..!! ம்..குடுத்தால் எனன்வாம் குறைஞ்சா போகும் :-)
// மற்றும் படி பார்ட்டிக்கு போவது, தண்ணி அடிப்பது, அசிங்கமா ஆடைகள் அணிவது தான் பெண்ணுரிமைன்னு நினைக்கிறாங்க போல. //

அதேதான்..இப்போ அதுமாதிரி நாகரீகம்தான் வளர்ந்துகிட்டு வருது . ஆனா மகளிர் தினம் ஆரம்பிச்ச நோக்கமே பலருக்கு புரிவதில்லை அதான் வேதனையான விஷயம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

isaianban said...

ஜெய்லானி அண்ணாச்சி நாம ஆண்கள் நல பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிப்போம், நீங்க தலைவரு, நான் செயலாளரு, உங்க பொறந்த நாள ஆண்கள் தினமா மாத்திரலாம் என்ன செல்றீங்க..

ஜெய்லானி said...

@@@சி.கருணாகரசு--//

மகளிர் தினம் ஆரம்பிச்ச நோக்கமே உழைக்கும் பெண்கள் தங்களுக்கு சமமான உரிமையை அடையவேனுங்கிற எண்ணத்திலதான் ஆனா இன்னும் சிலர் எது சமஉரிமைங்கிறது தெரியாமலோ இல்லை புரியாமலோ பேரில ஆண்களை மாதிரி உடை அணிவதும் , அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் , காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .//

மிக நேர்மையான பகிர்வுங்க... பாராட்டுக்கள். //

வாங்க..வாங்க..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--// என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.//

வாங்க ..வாங்க..!! நீங்க சொல்றது சரிதான்..ஆனால் இங்கே உழைப்பதுக்கு பலன்தான் முக்கிய மேட்டரே..!!இதை விளக்கி சொல்ல ஆரம்பிச்சா ஒரு தொடர் போலதான் போட வேண்டிவரும் ..

உடல் , சூழ்நிலை போனறவற்றில் இயற்கையை மிஞ்சவே முடியாது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra -//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.

Check this out:
http://4.bp.blogspot.com/_mWmoI6fxFQ8/TJGB4pBq1nI/AAAAAAAAAFo/qC89xQk1g84/s1600/janet_plucking_coconut.JPG //


வாங்க சகோ..வாங்க..!! நின்னு கிட்டே பறிப்பதை பார்த்தா பயமாதான் இருக்கு..:-)) நன்றி படம் லிங்க் குடுத்துக்கு
//
.....பெண்கள் தினம்..... பெண்கள் என்றால், இந்த உலகம் முழுவதும் இருக்கிற பெண்கள் தான்.... சீரியல்ஸ் பார்த்து அழுவுறது, அவர்களில் எத்தனை சதவீதம் இருப்பாங்க? //

நீங்க ””நைல் சாட் “” (( யூரோபியன் அரப் )) பார்ப்பது இல்லையா..போர போக்கை பார்த்தா அங்கும் வந்துடும் போலிருக்கு .முன்னால் தி போல்ட் அண்ட் பியூடி ஃபுல் சீரியல் அமேரிக்கன் சேனலில் பார்த்த நினைவு எனக்கு :-))

//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.

......குறிப்பாக தமிழ் நாட்டில்...//

ம் ஆமாம் நாம எங்கிருந்தாலும் நமது நாடு அதேனே ..அதுதானே முக்கியமா பார்க்கனும் ..
தொடர்ந்து ஹாட்ரிக் அடித்ததுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

அன்புள்ள ஜெய்லானி அக்காவுக்கு மகளிர் தின வாழ்த்துகள்!!

இருங்க படிச்சிட்டு வர்றேன்!!

சீமான்கனி said...

நானும் சில கருத்துகளோடு உடன்படுகிறேன் அண்ணாத்தே...சூப்பர்

மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...

அருமையான பதிவு இண்ட்லியில் வாக்களித்துவிட்டேன்

எம் அப்துல் காதர் said...

// ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் அன்று அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே நமக்கும் நினைவுக்கு வரும்.((நம்ம கவலை நமக்கு)) //

எப்போதும் லீவில் இருக்கும் உங்களுக்கு (அய்யா உங்களுக்கு தான்) எதுக்கு இன்னொரு லீவு அவ்வ்வ்வ்..!!

எம் அப்துல் காதர் said...

// உலக மகளிர்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள்//

மகளிர் தினம் என்று தனியாய் ஒன்று பிரித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. மகளிர் இல்லாமல் நாமில்லை. அதனால் எல்லாமே நமது தினம் தான்.

Lakshmi said...

மிகவும் நல்லபதிவு.

Aashiq Ahamed said...

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும், (உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக)

------
இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்
--------

ல பான் போன்ற விஞ்ஞானிகளின் அதே கருத்தை இன்று ஐயா கந்தசாமி அவர்கள் கூறியிருக்கிறார். ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி, இயற்கையை மீறக்கூடாது என்கின்றீர்கள். சரி, அதற்கான வரையறையையும் கூறிவிடுங்கள். எது போன்ற செயல்களை செய்தால் பெண்கள் இயற்கையை மீறியவர்களாக கருதப்பட மாட்டார்கள்? அல்லது எந்தெந்த செயல்கள் எல்லாம் (பெண்களுக்கு) இயற்கைக்கு உட்பட்ட செயல்கள்...அதையும் தெளிவாக கூறுங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...நல்ல எழுத்து...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..

மதுரை சரவணன் said...

//பெண்களும் தங்களுக்கு கீழே இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை.
ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.//

naanum oththukk oklkiren... vaalththukkal

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.//


உண்மையான வரிகள்

மகி said...

அண்ணே,ப்ரசென்ட்! :)

virutcham said...

கேரளாவில் ஒரு கணவனும் மனைவியுமாக தென்னை மரம் ஏறித் தேங்காய் பறிக்கிறார்கள்.

ஜெய்லானி said...

@@@Ramani --//

நீங்கள் சொல்வது சரி
பதிவுலகில் பெண்கள் அதிகம்
இப்போது உலவுவது
பெருமைகொள்ளத்தக்கதாய் உள்ளது
அவர்களது பதிவுதான் இயல்பாகவும்
பயனுள்ளதாகவும் உள்ளது
பெண்கள் அதிகம் உள்ள
பெண்கள் அதிகம் பங்கெடுத்துக்கொள்ளும் எதுவும்
சிறந்ததாகத்தான் விளங்கும்
சிறு உதாரணம் கோவில்
மகளிர் குழுக்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் //

வாங்க..வாங்க....!! கரெக்ட்..சரியான முறையில் ஊக்கம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக வர சான்ஸ் இருக்கு .உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன் --//
என்ன சொல்ல வரீங்க...ஓ மகளிர் தினப் பதிவா?//

வாங்க ..வாங்க..!! பாதிதான் சொன்னேன் ..அதுக்குள்ளே அவ்வ்வ்வ்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// ஏனுங்கையா இந்த கொலவெறி..? //

வாங்க ஸாதிகாக்கா வாங்க...!! இதை பப்லிஷ் செய்யும் போதே நீங்க இதைதான் சொலுவீங்கன்னு நினைச்சேன் சொல்லிட்டீங்க ஹி..ஹி..

////எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??// ஏன் தமிழ் நாட்டிலேயே ஒரு தகப்பனில்லாத பெண் தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளியாக இருக்கின்றார்.இது பத்திரிகையில் முன்பு படித்த செய்தி //

ஆஹா...இது எனக்கு தெரியாம ப்போச்சே..தெரிஞ்சிருந்தா பனை மரமுன்னு போட்டிருப்பேனே :-))

////இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ// ஹி..ஹி..//

பாருங்கய்யா இந்த அநியாயத்தை முதல் கமெண்டுக்கும் கடைசி கமெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வ்வ்வ்வ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//

அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது.

சரியாச்சொன்னீங்க. //

வாங்க ஆசியாக்கா வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம் --//நீ ..... இருடீ ......face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய. //

வாங்க..வாங்க..!! நீங்க தூங்கிய பின்னால நட்டநடு ராத்திரி மட்டும் நைஸா வந்துட்டு ஓடிடுவேன் ஹி..ஹி..

// அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!! //

ஒருத்தங்க கிட்ட மட்டும்தான் கொஞ்சம் பயம் ..வந்தா ஹெல்மெட்டோடதான் வரனுமா அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vanathy said...

//ஒருத்தங்க கிட்ட மட்டும்தான் கொஞ்சம் பயம் ..வந்தா ஹெல்மெட்டோடதான் வரனுமா //
REALLY??? Who is that?????

goma said...

நாலு பேர் கருத்தைக் கேட்டாத்தானே உண்மை என்னன்னு புரியும்....உங்கள் கருத்தும் ஆய்வுக்கு எடுக்கப் பட்டு விட்டது...
யாருங்க ஆய்வாளர்?
ஹி ஹி நாநன்தாங்கோ

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--////வர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும்// இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.//

வாங்க..ஸாதிகாக்க்கா வாங்க..!! ஆஹா.. வீட்டில ஏகப்பட்ட செலவு உங்களாலதான் வருதுப்போல.. யோசனை பண்ணிப்பார்த்து விட்டு வந்து திட்டுறீங்களே ஹி..ஹி.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பயணமும் எண்ணங்களும்--//இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்//

பாருங்க இத்தகவலை மறுப்பதும் இங்கே இரு பெண்கள் .. :)) //

வாங்க ...வாங்க..!! ஒருவேளை தெரியாம உளறிட்டேனோ என்னவோ..எக்ஸ்பீரியன்ஸ் பத்தலை போலிருக்கு நான் என்னைய சொன்னேன் ...அவ்வ்வ்வ்

// தொலைக்காட்சியிலும் காண்பித்தார்கள்னு நினைக்கிறேன்.. //

ஆனா நா பாக்கலையே...நீங்க பாத்தீங்களா..? :-))

//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில் இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை//

சரியான கேள்வி. //

இதுதான் என்னுடைய மெயின் கேள்வியே... என்னன்னுதான் புரியாத புதிரா இருக்கு ....!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//ஒரு சராசரி பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை குடுத்து இருந்தாலும் இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது//

உண்மைதான்..//

வாங்க சாரலக்கா வாங்க..!! இந்தியாவில 50 சதம் இட ஒதுக்கீடு குடுத்தாலும் நடக்குமா ?சந்தேகம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆனந்தி--//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்..//

கேரளா பக்கம் இதையும் சில பெண்கள் செய்றாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்..:))) /

வாங்க..வாங்க..!! அங்கேதான் மரம் ஏற காலேஜே வச்சிருக்காங்களாம் .ஆனா மரம் ஏற ஆள்கிடைக்கலன்னு என் கேரள நண்பர்கள் வருத்தப்பட்டார்கள்.

////நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//

:-)) //

ஓஹ்..அப்ப நீங்களும் ரெடியாதான் இருக்கீங்களா..? அவ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal --//நீ ......இருடீ ........face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!////

ஜெய்லானி எனன் செய்ய போறீங்க வெனுமுன்னா தலைய ஹெல்மட் போட்டுட்டு போங்க //

வாங்க ஜலீலாக்கா வாங்க..!! நீங்க சொன்னத நினைச்சா ஆனந்த கண்ணீரே வருது ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.--//எங்கள் ஊரில் 20 வருடத்திற்கு முன்பே ஒரு பெண்மணி புல்லட் ஓட்டுவதும் - தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பதும் செய்தார்..அவரை கண்டு வியந்ததுண்டு...
வாழ்க வளமுடன்.
வேலன். //

வாங்க அண்ணாத்தே வாங்க..!! அந்த டைம்ல ஸ்கூல் பிள்ளைகள் லூனா- ஒட்டிக்கொண்டு வரும் .பார்த்திருக்கிறேன் .ஆனால் தென்னை மரம் ஏறியதை கேட்டதில்லை. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Harini Nathan --//This post has been removed by the author. //

வாங்க ..வாங்க..!! என்னவோ சொல்லிட்டு டெலிட் போட்டுட்டீங்க ..போனாப்போகுது பிளாக் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரனம்ப்பா..:-)))))

// உங்கள் கருத்து ஓரளவு உண்மைத்தான் சகோ
இருந்தாலும் உண்மையில் உழைத்துக்கொண்டு இன்னும் அடிமைப்படுக்கொண்டு இருக்கும் பெண்கள் இனம் இன்னும் இருக்கிறது //

இப்ப மீடியாவில பெண்கள் வந்ததாலதான் ஓரளவு விஷயம் வெளையே வருது .சீனாவில , ரஷ்யாவில இன்னும் முழுமையா மேட்டர் வெளியே வருவதே இல்லை
//உதரணமா இலங்கையில் பெருந்தோட்ட துறையில் உழைப்பின் சக்தியாக இருக்கும் மலையாக பெண்கள் உண்மையில் சிலருக்கு தகளது உரிமைகள் தரப்படுவதில்லை :( குறிப்பாக சில தினங்கள் அதன் அர்த்தம் தெரியாமலே கொண்டடப்பட்டுவருகிறது என்பது கவலைக்குரியது :( //

உண்மைதான் அதுக்காகதான் இந்த பதிவே நான் போட்டது .உங்களுக்கு புரிந்ததில் சந்தோஷமே

//சில பெண்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு காரணமே பெண்கள் என்பது அதை விட கொடுமை :( //

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனபதன் அர்த்தம் இதிலும் வருவது வேதனையான விஷயம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//பெண்களே நடத்தும் எத்தனையோ நிறுவனங்களிலும்//

வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு சரியான சம்பளம் தராமல் சில வீட்டம்மாக்கள் ஏமாற்றுவதுபோல, கொஞ்சம் இளகிய மனம்கொண்ட வீட்டம்மா என்றால், ஒழுங்காக வேலைக்கு வராமல் டபாய்க்கும் பெண் வேலைக்காரர்களும் கூட உண்டு.//

வாங்க சகோஸ் வாங்க..!! நீங்க புத்திசாலிங்கிரதை இன்னொரு தடவை நிருப்பிச்சி இருக்கீங்க .இதுதான் இப்ப நிறைய வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனை. நான் பதிவுல நேரடியா சொல்லல. சில வீடுகளில் விஷயம் விவாகரத்து வரை கூட போய் இருக்கு. இன்னும் சிலதில் லோக்கல் ரேடியோ போல் நம்வீட்டு விஷயம் பல வீடுகளில் எதிரொலிக்கும் :-))

////DrPKandaswamyPhD said... 13
என்ன சொன்னாலும் பெண் ஆணுக்கு சமமாக முடியாது. இதை ஆணாதிக்கம் என்று சொன்னாலும் சரி, பிற்போக்குவாதி என்று சொன்னாலும் சரி. இயற்கை சற்று ஏறுமாறாகத்தான் படைத்திருக்கிறது. இயற்கையை மீறுபவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.//

ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?//
ஒரு சிலர் செய்வதால் சிலநேரம் ஒட்டு மொத்தமாக எல்லேரையும் நாம் வெறுப்பதில்லையா..!! அது மாதிரி கண்னோட்டத்தில சொல்லி இருக்கலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan --// அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துக்கள். //
வாங்க ஆர் வி எஸ் வாங்க..!! சந்தோஷம் .ஃபேர்வேர்ட் மெசேஜ் செய்தாச்சு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இந்திரா--//மங்கையர் தின வாழ்த்துக்கள் ஜெய்லானி//

வாங்க..வாங்க..!!சந்தோஷம் .ஃபேர்வேர்ட் மெசேஜ் செய்தாச்சு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@apsara-illam --//சலாம் ஜெய்லானி சகோதரரே...,பரவாயில்லை மகளிர் தினத்தையோட்டி பதிவை போட்டு இருக்கீங்க...//

வ அலைக்கும் வஸ்ஸலாம்(வரஹ்) வாங்க சகோஸ் வாங்க ..!! ஒரு வேலை ஒரு லீவு கிடைச்சி இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்..லீவு போச்சே..!!

// நல்ல விஷயம்.இதிலேயும் குற்றம் குறை கண்டுபிடிச்சு சொல்ல எனக்கு தோணலைங்க...
ஏனென்றால் நடைமுறையில் இருப்பதை சொல்லிக்காட்டியிருக்கீங்க அவ்வளவுதான். //


குற்றம் குறையை சொல்லுங்க . அப்பதான் அதை திருத்திக்க முடியும் .இல்லாட்டி அது உண்மைன்னு தப்பாவே நினைக்க தோனும் :-))

//ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அவரவர் நல்ல எண்ணங்களோடு நல்ல மனுஷங்களாக இருக்கணும் என்பதுதான் என் கருத்து. //

அடடா ரொம்பவும் சின்னதா அழகா சொல்லிட்டீங்க .இது இல்லாத்தாலதான் உலகத்தில் பல வேண்டாத பிரச்சனைகள் கிளம்புது

// சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொல்லி பதிவை போட்ட(ஜெய் சகோக்கே உரிய பாஷையில்)உங்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

அன்புடன்,.
அப்சரா. //
என் பாசையிலயா..????? எதுவும் உள்குத்து இருக்கா ?? ஒன்னுமே புரியலையே அவ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே. ஆர்.விஜயன்--//தென்னை மரத்திலேயும் ஏறீட்டாங்களா? அடப்பாவிமக்கா அதுக்கும் ஆப்பா ? நல்லா கொண்டாடுங்கப்பா மகளீர் தினத்த.//

வாங்க..வாங்க..!! ஏன் இப்பிடி பயப்படுறீங்க ..ஒரு வேளை உங்க வேலைக்கு ஆப்பு வந்துடுச்சா..?ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//ஆண், பெண் படைப்புகளில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், அது பெண்ணை இழிவாக நடத்த ஆணுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டப்பட்டதாக சிலர் தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாதல்லவா சார்?//

மிகச்சரியான கருத்துக்கள்..//
வாங்க மலீக்கக்கா வாங்க..!! ஓகே..போலாம் ..ரைட்..உய்ய்ய்ய்ய்ய் //

//This post has been removed by the author.//

ஏனுங்கோ அம்மினி ..இப்டி திட்டி போட்டு டெலிட் பண்னிட்டீங்..!! கூல் டவுன் ..கூல் டவுன்.. :-))

//ங்க .....வாங்கடி.....வாங்க... ..........face book பக்கம் வருவீங்கல்ல அப்ப
வசிக்கிறோம் கச்சேரிய.

என்ன எல்லாரும் கிளம்பியாச்சா யாருப்பா இதுக்கு தல.. அவுகமட்டும் பெரிய கட்டை மத்தவாயெல்லாம் பூரிக்கட்டை ஓகேவா.. //

ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா...இனி ஹெல்மேட்டோட கூட வரமுடியாதுப்போல ..அவ்வ்வ்வ்

//நல்ல பதிவு அண்ணாத்தே.
மகளீர்தின வாழ்த்துக்கள்[ உங்களுக்கல்ல] மச்சிக்கும் மற்ற தோழிகளுக்கும். சகோதரிகளுக்கும்.//

மச்சி ஃபேர்வேர்ட் செய்தாச்சி மற்றவருக்கும் செய்துடுறேன் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??//

இந்த லொள்ளுக்கு மட்டும் குறைவில்லை....
இரும் படிச்சிட்டு வர்றேன்..//

வாங்க...வாங்க..!! இந்த லொள்ளு இல்லாட்டி நான் இல்லயே மக்கா ஹா..ஹா..

////இதே ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ//

உம்ம பிரச்சினை உமக்கு.....//

யோவ் வீட்டில மாவாட்டுற உமக்கும் சேர்த்துதாம்லே இங்கே கத்திகிட்டு இருக்கேன்.ஏதோ உமக்கு சம்மந்தம் இல்லாத மாதிரி சொல்றீரூ..ஹய்யோ..ஹய்யோ.((ஓஹ் இது ஃபேஸ்புக் இல்லையா..சரி விடும் ஓய் ))

////காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .//

யோவ் ஒட்டகம்.....எதுக்குய்யா எங்க ஹோட்டல் ஃபீல்'டுக்கு ஆப்பு வைக்கிறீர்....அவிங்க கும்மாளம் போட்டாதானே நமக்கு வருமானம்...//

பார்யா..நானும் நினைச்சேன்..ஏதோ இனனிக்கி நல்லதா நினைக்கிதேன்னு அதுக்கு அர்த்தம் இதானா விளங்கிரும் நாடு ஹி..ஹி..

//// ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே ))//

செர்ந்திருக்குற கூட்டம் அப்பிடி ஹா ஹா ஹா ஹா...//

ஹா..ஹா..ஹா..
////கக்கு - மாணிக்கம் said... 23
நீ ...................... இருடீ ...........................face book பக்கம் வருவீங்கல்ல அப்ப வசிக்கிறோம் கச்சேரிய.
அம்மணிகளே எல்லாரும் ரெடியா அப்பளகட்டயோட ஆஜர் ஆயிடுங்க தாயே!!//

ஐயம் ஆல்சோ வெயிட்டிங் பாஸ்.....//

போய்யா..போஓஓஓஓ...எப்படியும் 9 மணிக்கே ஓடுடுறா ஆள்தானே நீரு.. நா 12 மணிக்கு அப்பால வரேன் .ஹி.ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்துல்மாலிக்--//ஒரு மாதிரி எழுதி ஹீரோவாகிட்டீங்க வாழ்த்துக்கள் பெண்களுக்கு @ //

வாங்க..வாங்க..!! நா எப்பவுமே ஜீரோவா இருக்கவே விருப்பம் ..:-))பக்கத்தில இருப்பவங்களை பொருத்து எனது வேலிவேஷன் ஹி.ஹி.. நீண்ட நாள் கழிச்சி வந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@S.Menaga--// இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க?? ஹா ஹா எனக்கு இங்க இருக்கிற கஎண்ட் படிச்சு சிரிப்புதான் ஜெய்.//

வாங்க மேனகாக்கா வாங்க..!! ஏன் உங்களிக்கும் புரியலையா ...யப்பா தப்பிச்சேன் .அது வரைக்கும் சந்தோஷம் . நம்ம ஏரியா சிரித்து சந்தோஷமா இருந்தா அதுவே போதும் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

jothi said...

//எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??//

இல்லை , நான் ஒரு ப‌த்து வ‌ருஷ‌ம் முன் கேர‌ளாவில் பெண் தென்னை ம‌ர‌ம் ஏறுவ‌தைப்ப‌ற்றி விக‌ட‌னிலோ குமுத‌த்திலோ ப‌டித்த‌ நினைவு

Pavi said...

ஜெய் கலக்கிடீங்க ..............................
அசத்தல் பதிவு

பாச மலர் / Paasa Malar said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது..

ராஜவம்சம் said...

கசப்பு மருந்தை தேனில் கலந்து கொடுப்பது போல் அழகாக சொல்லியிறுக்கிறீர் ஓய்
வாழ்த்துக்கள்.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))