போன பதிவுவில் விருது குடுக்க , மற்றும் அதுக்கு லிங்க் குடுக்கவும் இல்லாமல் வீடுவீடாக போய் சொல்லிட்டு வருவதுக்குள் மண்டை காய்ந்து விட்டது (( மண்டை இருக்கான்னு யாராவது பின்னுட்டமிட்டால் அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) அதனால் வழக்கமா போகும் எந்த பதிவிலும் போகமுடியல , ஓட்டும் போடமுடியல அதுவுமில்லாம நெட் நத்தை வேகத்தில் அசைந்து நடந்து போனதால் எந்த பதிவும் படிக்க முடியல சாரி மக்கள்ஸ்….
விருது குடுத்துட்டு பின்னாடியே சந்தேகம் கேக்குறேனேன்னு நினைக்காதீங்க... இதை வச்சே நம்ம சொந்த பந்தம் ஒரு பதிவே போட்டுட்டாங்க வாழ்க...( அப்பா ஒரு வழியா பிரபல பதிவராயாச்சி...ஹி..ஹி..) ஓக்கே இப்ப என் சந்தேகத்தை ஆரம்பிக்கிறேன்.
இந்த அரபு நாட்டில பெண்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு மேக்கப் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் செலவிடுகிறார்கள் .ஏற்கனவே அழகா இருக்கிறவங்களுக்கு ஏங்க இந்த தொல்லை.. ஆனா பியூட்டி பார்ல இருந்து வருபவர்களை கண்டால் இன்னும் அழகா இருக்கும் மருதானி , மற்றும் லிப்ஸ்டிக் , தலைமுடி டிஸைன் . சில சமயம் ஜொள்ளே வடியும் நமக்குதான் .அழகை அழகுன்னு சொல்லலாம் அதுக்காக அசிங்கமா சொல்லக்கூடாது .அதுப்போல செண்ட் யானை விலை குதிரை விலை. நடந்து போய் பத்து நிமிஷம் வரை வாசனை வரும் . மோப்ப நாய்க்கு வேலையே இல்லை.
இதைப்போல நம்ம ஊர் பெண்களையும் இதுக்கு அடிமையா மாத்ததான் உலக அழகி பட்டம் , பிரபஞ்ச அழகி பட்டம் , எல்லாம் அப்ப தான் நாம் ஏமாந்து அந்த பொருட்களை வாங்கி முகத்தில அப்பி கொள்வோம் ..இது இன்னைக்கு நேத்தைக்கு இல்ல இங்கிலீஷ் காரன் எப்ப நம்ம ஊருக்கு வந்தானோ அப்பவே தொடங்கிடுச்சி. ஆனா காக்கா மயிலா ஆகவுமில்ல . குயில் சந்தன நிறத்தில் மாறவுமில்ல .
ஒரு பொருள் ரொம்பவும் விலை அதிகம் ஆனால் மக்கள் அது பின்னாடி ஓடுறாங்க . அது என்னன்னா குங்குமப்பூ (( அப்பாடி ஒரு வழியா வந்தாச்சி சந்தேகம் கேக்க .)) அவங்க கொல்லும் ..ச்சே..சொல்லும் காரணம் அதை சாப்பிட்டா பிறக்கும் குழந்தை நல்லா சிவப்பா பிறக்கும் அப்படின்னு. ஆனா நிசத்தில அப்படி இல்லையே ஏன் . அப்ப டப்பா டப்பாவா ஏன் சாப்பிடனும். எல்லாத்திலயும் அறிவா சோதனை செய்யும் நம் நாட்டு சோதனைக்கூடம் இதை ஏன் சரியா செக் பண்ணுவது இல்ல.
நம்ம நாட்டு கிளைமேட் கொஞ்சம் சூடு . அதனால பலவிதமான நிறத்தில ஆண் , பெண் இருக்காங்க .இங்க குங்கும்ப்பூவ பாலில் கலந்து சாப்பிட்டாஒரு வேளை நல்ல கலர் கிடைக்கும் அப்ப நீக்ரோன்னு ஒரு இனம் இருக்கே .நல்ல அண்டங்காக்கா கலர்ல பல்லை தவிர மத்த எல்லாமே கருப்பா ஆப்பிரிகாவில.!! ஏன் அவங்களுக்கு இதை பத்தி யாரும் சொல்லல. இல்ல அங்க இது சூப்பர் மார்கட்ல அவங்களுக்கு கிடைக்கலையா..?
அட அட்லீஸ்ட் .ஒரு எருமை மாட்டுக்காவது குடுத்து செக்பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா (( ப்ளூ கிராஸ் யாரும் வந்திடாதிங்கப்பா )) போடுற புண்ணாக்குல கலந்து இல்லட்டி கழுநீர் (( பழைய சாதம் + சோறு வடித்த நீர் + அரிசி கழுவிய நீர் )) பானையில கலந்து செக் பண்ணலாம். ஏன் செய்யல..?
அப்படி செக் பண்ணினால் அதன் தரம் புரியும் . உண்மையில அது பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு போகும் முன் குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும் அதே நேரம் வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும். சளி, இருமல் இருந்தால் அதுக்கு குங்குமப்பூ சிறந்த மருந்து . இதனலேயே அரபிகள் டீயுடன் மற்றும் அரபி பிரியாணியுடன் கலந்து தினமும் சாப்பிடுகிறார்கள் .
இப்ப சொல்லுங்க. அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில.
டிஸ்கி : சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..!!
142 என்ன சொல்றாங்ன்னா ...:
அட!! நாந்தான் முதல் போணியா???
ம்ம் மறுபடியும் சந்தேகமா?? மீ எஸ்கேப்பு??????
ok....ok..
பயங்கர பயங்கரமாக சந்தேகம் கேட்கின்றிங்க....குங்குமபூ சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை கலராக பிறப்பது என்று சொல்லுவது எல்லாம் சும்மா....பொதுவாக யார் குங்குமபூ சாப்பிட்டால் பசி அதிகம் எடுக்கும். அதனால் கர்பமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை கலராக பிறக்கும் என்று சொன்னால் பின்ன எவ்வளவு விலையாக இருந்தாலும் குங்குமபூ சாப்பிடுவாங்க...அதான்...காரணம்...
ஐயோ!!!! தாங்கமுடியல ஜெய்லானி. டைகருக்கு கொடுத்துப் பார்த்தீங்களா?
//பலவிதமான நிறத்தில ஆண், பெண் இருக்காங்க // எங்கள் பாடசாலையில் பெருமையாகப் பேசப்படும் விடயம்... 'வைப்ரன்ட் கலர்ஸ்' என்போம். பாடசாலைக் கீதத்திலும் இது பற்றி ஒரு வரி இருக்கிறது.
இங்கு எல்லா இன மக்களும் வாழ்வதால் இது புதினமான விடயம் அல்ல. இருப்பினும் ஒருமைப்பாட்டைச் சொல்லிக் கொள்வதில் ஒரு சந்தோஷம்.
ம். எனக்கும் இப்ப சந்தேகம் வந்தாச்சு.. ஏற்கனவே கலரா இருக்கிறவங்க ஏன் சம்மர்ல பீச்ல போய் கலர் மாறத் தவம் கிடக்கிறாங்க. இக்கரைக்கு அக்கரை பச்சையா!
சிவப்போ, கருப்போ நல்லபடியா இருந்தபோதும்....
//நடந்து போய் பத்து நிமிஷம் வரை வாசனை வரும் //
குங்குமப் பூவும், பத்தாவது நிமிசமும்.
அப்பறம் ஜெய்லானி, எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஏன் உங்க பதிவு "லோட்" ஆவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? கிளிக் பண்ணிட்டுப்போய் பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு வந்தப்புறம்தான் லோடு ஆகுது.
//பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு// இத எல்லாம் ஏன் விலாவாரியா சொல்றேன்னா, நான் இந்த வளக்கமெல்லாம் வச்சிருக்கேன்னு நாலு பேருக்குத் தெரியட்டும்னுதான்.
Medicinally, saffron has a long history as part of traditional healing; modern medicine has also discovered saffron as having anticarcinogenic (cancer-suppressing),anti-mutagenic (mutation-preventing), immunomodulating, and antioxidant-like properties
ஜெய், குழந்தையின் கலருக்கும் குங்குமபூவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட பாட்டி... இப்படி யாராவது சிவப்பா/ கருப்பா இருந்தா குழந்தை அதே கலரில் பிறக்கும். இலங்கையில்/இந்தியாவில் சில பெண்கள் பளிச் என்று வெள்ளைக்காரிகள் போல இருப்பார்கள். அதெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட போது தோன்றிய கலப்புகள்.
பொது நிறமாக, கறுப்பாக இருப்பவர்களின் முகம் மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எல்லாவற்றையும் விட டாக்டர். கந்தசாமி அண்ணாச்சியின் கமென்ட் சூப்பர்.
குங்குமம் சாப்பிட்டா குழந்தை சிவப்பாகும் என்பதெல்லாம் சும்ம்ம்மா...
இதெல்லாம் ஜீன் சம்பந்தப்பட்டது.....
என்னோட பாட்டியோட பாட்டி குட்டையா 5அடி கூட வளராம இருந்திருப்பா...[ஆனா அறிவு 10 அடி]ரெண்டும் எனக்கு வாச்சுது....உயரத்தை நினைச்சு அழாம அறிவை நினைச்சு ஆறுதலா இருக்கேன்...
இன்மேல் இப்படியெல்லாம் சந்தேகப்டக்கூடாது சரியா
irunga ru auto anupaeren unga veetukkku
அக்ஷ்யதிருதியிலே தங்கம் வாங்கு வெள்ளி வாங்குன்னு ,இந்த ஜோஸ்ய சிகாமணிகளெல்லாம் வாங்கு வாங்குன்னு வாங்குறாங்களே ..அதே மாதிரிதான் குங்குமப் பூவே கதையும் குங்குமப்பூ தோட்டக்காரன் கட்டி விட்ட கதை இது
அது என்னங்க் ஆட்டொ அனுப்றது ...யாருக்கு எதுக்கு
குங்குமபூவ சாப்பிடறத விட்டுட்டு ..............
வலைபூக்களை சாப்பிடுங்க (கண்ணால) ..........
குழந்தை அறிவா பிறக்கும.....
நல்ல பதிவு...(உங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள்-உங்கள் லிங்க்கில் வேலை செய்யவில்லை)
வாழ்க வளமுடன்,
வேலன்
//கழுநீர் (( பழைய சாதம் + சோறு வடித்த நீர் + அரிசி கழுவிய நீர் ))//
உங்கள் சந்தேகம் தீர்ந்ததோ இல்லையோ எனக்கு ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது...நன்றி...ஜெய்லானி :)))))
@@@Mrs.Menagasathia--//அட!! நாந்தான் முதல் போணியா???//
ஆமாங்க முதல் வடை உங்களுக்கே..!!
// ம்ம் மறுபடியும் சந்தேகமா?? மீ எஸ்கேப்பு?????? //
சந்தேகம் மாதிரி ஆனா சந்தேகமில்லை.. எப்படி. குழப்பிட்டேனா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@கே.ஆர்.பி.செந்தில--//ok....ok..//
வாங்க செந்தில்சார்..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//வீடுவீடாக போய் சொல்லிட்டு வருவதுக்குள் மண்டை காய்ந்து விட்டது //
எதுக்கு? இல்ல எதுக்குன்னு கேட்டேன்.. யே யப்பா கொஞ்சம் பேருக்கு லிங்கு கெடைக்கல, நீங்களே எடுத்துகோங்கனு சொன்னா எடுத்துக்க போறோம் :)
@@@GEETHA ACHAL--//பயங்கர பயங்கரமாக சந்தேகம் கேட்கின்றிங்க....குங்குமபூ சாப்பிட்டால் கண்டிப்பாக குழந்தை கலராக பிறப்பது என்று சொல்லுவது எல்லாம் சும்மா...//
ஓக்கே.. இது வரைக்கும் நான் சொன்னதுதான். பரவாயில்லை
.//பொதுவாக யார் குங்குமபூ சாப்பிட்டால் பசி அதிகம் எடுக்கும். அதனால் கர்பமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை கலராக பிறக்கும் என்று சொன்னால் பின்ன எவ்வளவு விலையாக இருந்தாலும் குங்குமபூ சாப்பிடுவாங்க...அதான்...காரணம்...//
என்னங்க இப்ப என்னைய திரும்பவும் குழப்புறீங்களே..ஆமாங்கிறீங்களா..?இல்லைங்கிறீங்களா..? ஹி..ஹி.. பசிஎடுக்கிற டானிக் டாக்டரே தராங்களே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@இமா--//ஐயோ!!!! தாங்கமுடியல ஜெய்லானி. டைகருக்கு கொடுத்துப் பார்த்தீங்களா? //
டெஸ்டிங் நடக்குது. ஆனா அது ஏற்கனவே வெள்ளையா இருக்கே!!
//பலவிதமான நிறத்தில ஆண், பெண் இருக்காங்க // எங்கள் பாடசாலையில் பெருமையாகப் பேசப்படும் விடயம்... 'வைப்ரன்ட் கலர்ஸ்' என்போம். பாடசாலைக் கீதத்திலும் இது பற்றி ஒரு வரி இருக்கிறது.
இங்கு எல்லா இன மக்களும் வாழ்வதால் இது புதினமான விடயம் அல்ல. இருப்பினும் ஒருமைப்பாட்டைச் சொல்லிக் கொள்வதில் ஒரு சந்தோஷம்.//
அப்படிதாங்க இருக்கனும். அதுதான் ஆரோக்கியமான விஷயம் . ஆப்பிரஹம் லிங்கன் போராடியதே அதுக்குதானே
//ம். எனக்கும் இப்ப சந்தேகம் வந்தாச்சு.. ஏற்கனவே கலரா இருக்கிறவங்க ஏன் சம்மர்ல பீச்ல போய் கலர் மாறத் தவம் கிடக்கிறாங்க. இக்கரைக்கு அக்கரை பச்சையா!//
குளிர் நாடுகளில் வெய்யில் குறைவு. அவங்க வைட்டமின் ' D 'ஐ ஓசியில் வாங்க பீச்சில் காத்திருப்பது. சூரிய ஒளியில் அதிகளவு வைட்டமின் ' D 'இருக்கு.
சின்ன அளவுகளில் கமெண்ட் போடும் நீங்க ஒரு வழியா கொஞ்சம் பெரிசா போட்டது ஹா..ஹா..எனகு சக்ஸஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@rk guru--//சிவப்போ, கருப்போ நல்லபடியா இருந்தபோதும்....//
வாங்க குரு..!!உண்மைதான் ஆனா நிறைய பேர் அது பின்னாடி ஓடுறாங்களே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@கொல்லான்--//நடந்து போய் பத்து நிமிஷம் வரை வாசனை வரும் //
குங்குமப் பூவும், பத்தாவது நிமிசமும். //
அட..தலைப்பு நல்லா இருக்கே..!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாத்தி யோசி... கரெக்டா ஜெய்லானி..
@@@DrPKandaswamyPhD--//அப்பறம் ஜெய்லானி, எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஏன் உங்க பதிவு "லோட்" ஆவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? கிளிக் பண்ணிட்டுப்போய் பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு வந்தப்புறம்தான் லோடு ஆகுது.//
வாங்க டாக்டர்..!! ஐ.ஈ 8 , ஃபையர் ஃபாக்ஸ் 3.6.6 ல சரியா திறக்குதே...!! நீங்க யூஸ் செய்வது எது ? . இந்த பிரச்சனை இப்ப மட்டுமா? இல்ல முன்னாலிருந்தா . எதற்கும் வேறு பிரவுசரில் செக் பண்றேன். உங்க தகவலுக்கு மிகவும் நன்றி
//பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு// இத எல்லாம் ஏன் விலாவாரியா சொல்றேன்னா, நான் இந்த வளக்கமெல்லாம் வச்சிருக்கேன்னு நாலு பேருக்குத் தெரியட்டும்னுதா //
பாத்திங்களா நீங்க சாயந்திரம் பண்ணுறதை சொல்றீங்க..!! ஆனா நான் காலையில கட்டாயம் இதை பண்ணூவேன் ..க்கி..க்கி..( ஐ..ஐ.. நீங்க எப்பன்னு சொல்லையே..ஐ..ஐ..)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் வந்திருக்கேன்
@@@கலாநேசன்--//Medicinally, saffron has a long history as part of traditional healing; modern medicine has also discovered saffron as having anticarcinogenic (cancer-suppressing),anti-mutagenic (mutation-preventing), immunomodulating, and antioxidant-like properties//
ஓக்கே..!! கேன்சர் வராம தடுக்கும் பொருள் கேரட் ஆனா வந்தால் தடுக்காது. இதுப்போல பல காய்கறிகள் இருக்கு . அப்படி இருக்கும் போது 1 கிராம் உள்ள குங்குமப்பூ சுமார் 300 லி 400 ரூபாய்க்கு ஏன் விக்குது . பொதுவா குங்குமப்பூ பலன் பத்தி யாரிடமாவது கேட்டா அவங்க தரும் விளக்கம் ..?உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@vanathy--// ஜெய், குழந்தையின் கலருக்கும் குங்குமபூவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட பாட்டி... இப்படி யாராவது சிவப்பா/ கருப்பா இருந்தா குழந்தை அதே கலரில் பிறக்கும். இலங்கையில்/இந்தியாவில் சில பெண்கள் பளிச் என்று வெள்ளைக்காரிகள் போல இருப்பார்கள். அதெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட போது தோன்றிய கலப்புகள்.//
கரெக்ட் இது நமது ஜீன்களின் வேலை .பிறக்க ப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா , கருப்பா , சிவப்பா , நெட்டையா , குட்டையா தீர்மானிப்பது குரோமோசோம் மற்றும் ஜீன்களே. ஆனா மக்கள் சொலறது வேற ஆச்சே..!!
//பொது நிறமாக, கறுப்பாக இருப்பவர்களின் முகம் மிகவும் அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.//
ஒரு பாட்டே இருக்கே..கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..அழகு என்பது வெளிகலரை வைத்து இல்லை. உள் மனதின் எண்ணங்களை பொருத்தது என்பது என் அபிப்பிராயம். மனசு விட்டு சிரிக்கும் போது பாருங்கள் முக அழகை ஆஹா....
//எல்லாவற்றையும் விட டாக்டர். கந்தசாமி அண்ணாச்சியின் கமென்ட் சூப்பர்.//
அவருக்கு குடுத்த பதிலை பாருங்க..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@goma--//குங்குமம் சாப்பிட்டா குழந்தை சிவப்பாகும் என்பதெல்லாம் சும்ம்ம்மா...//
கோமாக்கா..!!ஆனா நிறைய பேர் இதையே சொல்லி சொல்லி திரியறாய்ங்களே..
//இதெல்லாம் ஜீன் சம்பந்தப்பட்டது.....
என்னோட பாட்டியோட பாட்டி குட்டையா 5அடி கூட வளராம இருந்திருப்பா...[ஆனா அறிவு 10 அடி]ரெண்டும் எனக்கு வாச்சுது....உயரத்தை நினைச்சு அழாம அறிவை நினைச்சு ஆறுதலா இருக்கேன்...//
உண்மைதான். அதுக்கு நீங்க ஏன் மனசு வருத்த படனும். ஜப்பான் , கொரியா ,சீனா , பிலிப்பைனி நேரில பாத்திருகீங்களா ? அதிலும் பிலிப்பைனி பொண்ணுங்க ஆக குட்டை , ஆனா வயசு அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியாது. அவர்களிம் உணவு முறை அப்படி
பர்கர் , பச்சைகாய்கறி , கெண்டகி சிக்கன் , ஃபிரஸ் ஜுஸ் , என் இத்தனை வருட வெளிநாட்டு வாழ்கையில் அவர்கள் மலையாளி , பாக்கிஸ்தானி ஹோட்டலில் சாப்பிட்டதை இது வரை பார்த்ததில்லை .
//இன்மேல் இப்படியெல்லாம் சந்தேகப்டக்கூடாது சரியா //
சரிங்க அடுத்ததில் வேற மாதிரி கேக்கிரேன். ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ம்ம்ம்ம் நல்ல சந்தேகம் .....
இப்ப சொல்லுங்க. அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில. ///
ஜெய்லானி, அதோட கொஞ்சம் செங்கல் பௌடர் சேத்துகிட்டா இன்னும் சிகப்பா வராது
இந்தியத் தொலைக்காட்சிகளில் குறிப்பா தமிழ்நாட்டுலே இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலெல்லாம் 18 ரூபாய்க்கு என்னத்தையோ வாங்கித்தடவுனா ரெண்டு வாரத்துலே வெள்ளைக்காரரா ஆகிடலாமுன்னு காமிச்சுக்கிட்டு இருக்காங்க:(
என்னதான் மார்கெட்டிங்குன்னு சொன்னாலும் பச்சைப்புழுகு சொன்னா அடுக்குமா? இது ஏமாத்து வேலைதானே? இதுக்கெல்லாம் புடிச்சுப்போடமாட்டாங்களா உள்ளே?
தமிழனை சிகப்பாக்காம விடமாட்டாங்க போல!
என்னவோ போங்க.
அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அதில் ஒன்றும் இல்லை
கர்பமா இருக்கும் பெண்களுக்கு அதில் ஒரு ஆசை :)
உங்களுக்கு விஜய் டிவி ல கேட்டு குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் டீவீடி வாங்கி தரேன்
@@@LK--//irunga ru auto anupaeren unga veetukkku //
ஹி..ஹி.. நான் இப்ப வீட்டில இல்லயே அட்ரஸ் மாத்திட்டேனே !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@goma--//அக்ஷ்யதிருதியிலே தங்கம் வாங்கு வெள்ளி வாங்குன்னு ,இந்த ஜோஸ்ய சிகாமணிகளெல்லாம் வாங்கு வாங்குன்னு வாங்குறாங்களே ..அதே மாதிரிதான் குங்குமப் பூவே கதையும் குங்குமப்பூ தோட்டக்காரன் கட்டி விட்ட கதை இது //
உண்மை. உண்மையை தவிர வேறு எதுவுமில்லை.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)--//
குங்குமபூவ சாப்பிடறத விட்டுட்டு ..............
வலைபூக்களை சாப்பிடுங்க (கண்ணால) ..........
குழந்தை அறிவா பிறக்கும.....//
அது எந்த கடையில கிடைக்கும் , அலோபதியா , ஆயுர்வேதிக்கா ?ஒ...ஓ.. சொட்டு மருந்தா ஆஆஆ..!! ஓக்கே..!! ஓக்கே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆமா.. எனக்கும் இந்த சந்தேகம்தான்..
//ஆனா காக்கா மயிலா ஆகவுமில்ல. குயில் சந்தன நிறத்தில் மாறவுமில்ல//
ஆஹா கவித கவித soooper எப்பூடி தலஇதெல்லாம்??
//இதை வச்சே நம்ம சொந்த பந்தம் ஒரு பதிவே போட்டுட்டாங்க வாழ்க...( அப்பா ஒரு வழியா பிரபல பதிவராயாச்சி...ஹி..ஹி..)//
அப்பா என்னை சொல்லல.. க்கி..க்கி. (நல்ல வேலை யாரும் பார்க்கல. பாஸ் இது நமக்குள்ள இருக்கட்டும்)
//கரெக்ட் இது நமது ஜீன்களின் வேலை .பிறக்க ப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா, கருப்பா, சிவப்பா , நெட்டையா , குட்டையா தீர்மானிப்பது குரோமோசோம் மற்றும் ஜீன்களே. //ஆனா மக்கள் சொலறது வேற ஆச்சே..!!//
அது இன்னா பாஸ் எனக்கும் கொஞ்சம் காதோடு சொல்லுங்க ஹி..ஹி..(இப்ப க்கி கிக்கியா)
//இந்த அரபு நாட்டில பெண்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு மேக்கப் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் செலவிடுகிறார்கள்//
அப்ப வேலைக்கு போகாதவர்கள், வருமானமில்லாதவர்கள் எல்லாம் எப்படி?? அழகா இருக்காங்கன்னு அர்த்தமா?? இல்ல புருஷன் பாக்கெட்டில் கை வைத்து விடுவார்களா?
//அப்ப நீக்ரோன்னு ஒரு இனம் இருக்கே .நல்ல அண்டங்காக்கா கலர்ல பல்லை தவிர மத்த எல்லாமே கருப்பா ஆப்பிரிகாவில.!! //
'நீ-grow' என்று சொன்னதால நெட்டையா வளர்ந்துட்டான் தல. அவங்களை யாரும் சிகப்பாகுன்னு சொல்லல அதனால தான்னு எடுத்துக்கலாமா பாஸ். ஹி..ஹி..
இந்த சந்தேகத்துக்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்க. அப்புறம் உங்க கேளிவிக்கு நான் பதில் சொல்றேன் பாஸ்!! ஹி ஹி வர்ர்ட்டா :)))
நல்ல சந்தேகம். அதுக்கு பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே.
:) 47
: )) 48
:)) நடுவுல ஒன்னு விட்டுப் போச்சோ HIGH JUMP 50..
டப்பா டப்பாவா குங்குமப்பூ சாப்பிட்டேன்.கலர் சுமாராக ஒருமகன்.வெறுத்துப்போய் குங்குமப்பூவே சாப்பிடாமல் அது வாங்கற காசை பத்திரமா பேங்கிலே போட்டு வச்சேன்.பிறந்தது இன்னொரு மகன் தும்பை பூவாட்டம்.இப்ப என்ன சொல்லுறீங்க?
//.ஏற்கனவே அழகா இருக்கிறவங்களுக்கு ஏங்க இந்த தொல்லை..//நல்லாவே ஆழ்ந்து கவனித்து இருக்கீங்க பிரதர்!
//நாம் ஏமாந்து அந்த பொருட்களை வாங்கி முகத்தில அப்பி கொள்வோம்//
'நானும் ஏமாந்துட்டேன்; பார்த்துக்குங்க' என்பதை
முகக்குறிப்பு மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்
என்கிறீர்கள், சரியா?
குங்குமப்பூவ மூஞ்சியில பூசிக்கிட்டா வேணா அந்த நேரத்துக்கு செகப்பா மாறலாம்.
//அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில.//
வணக்கம் சகோதரரே.
இதுதான் ரொம்ப சரியான டிப்ஸ்.
அட சாமி...என்னடா...இந்த வாரம் இன்னும் ஜெய்க்கு சந்தேகம் வரலேயேன்னு யோசிச்சேன் !
சந்தேகமா கேட்குற இரு உனக்கு ஒரு வில்லங்கத்தை இழுத்து விட்டால் தான் சரியா வரும்
உன் சந்தேகம் அனைத்திற்கும் விடை வேண்டும் என்றால் பன்னியை கூலிங் கிளாஸ் இல்லாமல் வர சொல்லு சொல்லுறேன்
//என்னங்க இப்ப என்னைய திரும்பவும் குழப்புறீங்களே..ஆமாங்கிறீங்களா..?இல்லைங்கிறீங்களா..? ஹி..ஹி.. பசிஎடுக்கிற டானிக் டாக்டரே தராங்களே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//உண்மையில் குங்குமபூ சாப்பிட்டா நல்லா பசிஎடுக்கும்...இந்த காலத்தில் தான் டானிக் எல்லாம் இருக்கு...அந்த காலத்தில் எல்லாம் இதனை தான் சாப்பிடுவாங்க....சிஅல் பேருக்கு டானிக் குடிக்க பிடிக்காது...ஆனால் இது சூப்பராக இருக்கும்...வேண்டும் என்றால் நல்லா நெட்டில் தேடி பாருங்க...
ஆமாம் பாம்பு விஷம் கூட புரதம் தானே பின் ஏன் அதை சாப்பிட்டா செத்து போவாங்களாமே?
நல்ல சந்தேகம்தான் அண்ணாத்தே!அதெல்லாம் சும்மா அது ரத்தத்தை சுத்திகரிக்கும் என்று உம்மம்மா சொல்வார்கள். அவ்வளவுதான் சிவப்பாக குழந்தை பிறக்கனுமுன்னா சிகப்பு ரோஜாவை சாப்பிடச்சொல்லுங்க [ஏதோ நம்மால் முடிஞ்சது]
//அப்பறம் ஜெய்லானி,அண்ணாத்தே எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஏன் உங்க பதிவு "லோட்" ஆவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? கிளிக் பண்ணிட்டுப்போய் பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு வந்தப்புறம்தான் லோடு ஆகுது.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு நானும்
ஜெய்..லானி!! ஏதோ வயிற்றில் வளரும் குழந்தைக்கு எனச் சொல்லி, பெரியவங்க விஷயங்களெல்லாம்:), கதைக்கிறீங்க போல இருக்கு, இதுக்கு நான் ஏதும் சொல்லமாட்டேன், அம்மா சொல்லியிருக்கிறா, பெரியவர்கள் கதைக்கும்போது, குறுக்க பேசப்பூடாது என்று....
இங்கே இமா மாமி, வாணிப் பெரியம்மா,ஸாதிகா அத்தை, எல்கே அங்கிள்... மற்றும் ஹை... வாணாம்.. பிறகு பிரச்சனையாகிடும்:)... எல்லோரும் கதைக்கும்போது, நான் சின்னப்பிள்ளை:):) ஒண்ணுமேயில்லை சொல்ல.... அதுதான் பேசாமல் போகிறேன்... வேணுமெண்டால்,எந்த கிரைப் வோட்டர், எந்தப்புட்டிப்பால்... சிறந்தது... இப்படியானதில் ஏதும் சந்தேகம் வந்தால்... வடைக்கு முன்பே நான் வந்து நிற்பேன்... இப்போ....
பூ.... எ.......
//ம். எனக்கும் இப்ப சந்தேகம் வந்தாச்சு.. ஏற்கனவே கலரா இருக்கிறவங்க ஏன் சம்மர்ல பீச்ல போய் கலர் மாறத் தவம் கிடக்கிறாங்க. இக்கரைக்கு அக்கரை பச்சையா!//
குளிர் நாடுகளில் வெய்யில் குறைவு. அவங்க வைட்டமின் ' D 'ஐ ஓசியில் வாங்க பீச்சில் காத்திருப்பது. சூரிய ஒளியில் அதிகளவு வைட்டமின் ' D 'இருக்கு.///
உங்கட கருத்து சரிதான் ஜெய்..லானி, ஆனால் இங்குள்ள மக்கள் ஆரோக்கியம் கருதி இப்படிச் செய்வதாகத் தெரிவதில்லை,(நோய் வந்தபின்புதானே, ஆரோக்கியம்பற்றி நினைக்கிறோம்... அதுவரை உப்படியான நினைப்பு யாருக்குமே இல்லையே) நிறத்தை, தோலைக் கறுப்பாக்கவே பாடுபடுகிறார்கள்... எவ்வளவோ காசு செலவழித்து body tan பண்ணுகிறார்கள். நாங்கள் fair and lovely ஐ அள்ளிப்பூசுவதைப்போல:):), இக்கரைக்கு அக்கரைப்பச்சை...
ஆனாலும் தினமும் கரட் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தை மட்டுமில்லை, எம்மைப்போன்றவர்களின் தோலும் நிறம்பெறும் என்பது உண்மையே....
ஒரு கறுப்பு டைகரைப் பிடிச்சு, கத்தக்கத்த தினமும் தீத்திப்பாருங்கோவன் கரட்டை:)))...
நெடுகவும் சந்தேகம் சந்தேகம் எனப் புலம்பக்கூடாது... என்போன்ற பெரியவர்களின்:):) பொன்னான கருத்துக்களையும் அப்பப்ப கேட்கோணும் ஓக்கை.... இனியும் இங்கிருந்தால் ஆபத்து, நான் பிறகு வாறேன்.... மீ...எஸ்ஸ்ஸ்ஸ்
இரத்தத்தை சுத்திகரிக்கும் என்றுதான் டாக்டர் எனக்கும் சொன்னார். குங்குமப்பூ சாப்பிட்டதால் குழந்தை கருப்பாக பிறந்தது என கூறியவர்களை நான் பார்த்திருக்கேன்.
நல்ல சந்தேகம் தான் , குங்குமபூ சாப்பிடுறதுனால குழந்தை சிகப்பாக பிறக்காது , எல்லாமே ஜீன்ஸ் தான் காரணம்
எங்க... மாமா...சே...! மாமன்னர் ஜெய்லானி சந்தேகம் தீர்த்து வைப்பவருக்கு....
தினம் நானூறு சவுக்கடி இனாமாய் அளிக்கப்படும்..
ஹி.... ஹி.... ஹி....
நீங்க சமீபத்துல சிவாஜி தி பாஸ் படம் பாத்தீங்களோ??? அப்புறம் ஆப்ரிக்கா பக்கம் போய்டாதீங்க ரெடி எ இருக்காங்களாம் உங்கள சுட்டு தள்ள! :P
//சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..//
எனக்கு தான் அது, நம்பி வந்தேன் இப்படி குழப்பிடீங்களே
ஐயோ.........நாதான் வழக்கம் போல லேட்டா?
ஒரு ஆளு வர்றதுக்குள்ள எல்லாரும் கும்மி அடிச்சி
கோலாட்டம் ஆடி முடிச்சிட்டீங்களே!
குங்குமபூ பதிவு நல்லாஇருக்கு. இதெல்லாம் ஒரு வியாபார
தந்திரம் தான் . நாம தான் அதுகள புரிஞ்சுகணம்.
ஜெய்லா....நல்ல கவனியுங்கள். நம்மகிட்ட ஒருத்தர்
வசமா மாட்டி இருக்காரே! .................ஆமா ...அவுரேதான்.!!
கும்மி கொட்ட ரொம்பவும் ஆசை போல தெரியுது
ஆனா அவரு பக்கம் யாரையும் காணோம்.
புரியுதா..??
சந்தேகம் கேக்கற ப்ளாக் எல்லாம் சத்தமில்லாம கடத்தபட்றதா கேள்வி பட்டேன்... உண்மையா? சும்மா உங்க காதுல விசியத்த போடலாம்னு வந்தேன்... (ஹி ஹி ஹி... எப்பா எல்லாரும் சேந்து எனக்கு பாராட்டு விழா எல்லாம் வேண்டாமே... இட்ஸ் ஒகே.... இட்ஸ் ஒகே... ஹி ஹி ஹி)
குங்கும பூ பத்தி இப்படி ஒரு தப்பான அபிராயம் இருக்கு... ஒரு வேளை இப்படி சொன்னா கண்டிப்பா சாப்பிடுவாங்க... கர்பிணிக்கு நல்லதுன்னு அந்த காலத்துல சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... கரெக்ட்ஆ?
ஜெய்..லானி, இப்பத்தான் கவனித்தேன், முதலாவது படத்திலிருப்பதுதான் குங்குமப்பூவோ? எனக்குத் தெரியாதே.
அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? )
hello jailani sir evlo kastapattu tamilla rendu aruvaya pottu neenga paratuveenga periya thanga mahan viruthu kudupeenganna ponga sir aluhuni aattam aadringa mmmm.
//பியூட்டி பார்ல இருந்து வருபவர்களை//
என்னாது? பாரா? அவங்களையும் உங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா? :))
// அட அட்லீஸ்ட் .ஒரு எருமை மாட்டுக்காவது குடுத்து செக்பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா//
அட அட்லீஸ்ட்.. நம்ம ஜெய்லானி அண்ணாத்தைக்காவது குடுத்து செக் பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா??
//உண்மையில அது பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு போகும் முன் குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும் அதே நேரம் வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும். சளி, இருமல் இருந்தால் அதுக்கு குங்குமப்பூ சிறந்த மருந்து .//
அப்புறம் ஏன், அஜீரணக் கோளாறுக்கெல்லாம் கொடுக்கறதில்ல? ஏன் வாயில புண் இருந்தா அதுக்கு கொடுக்கறதில்ல? ஏன் அநீமியாவுக்கு இதக் கொடுக்கறதில்ல? இருமல் சளிக்கு கொடுக்கறதில்ல? இத்தனை சந்தேகத்துக்கும் பதில் சொல்லுங்க..
@@@velan --//நல்ல பதிவு...(உங்கள் இ-மெயில் முகவரி தாருங்கள்-உங்கள் லிங்க்கில் வேலை செய்யவில்லை)
வாழ்க வளமுடன்,
வேலன் //
வாங்க பாஸ் ..!!மெயில் என்னுடைய புரோஃபைலில் இருக்கே பாக்கலையா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@seemangani--//கழுநீர் (( பழைய சாதம் + சோறு வடித்த நீர் + அரிசி கழுவிய நீர் ))//
உங்கள் சந்தேகம் தீர்ந்ததோ இல்லையோ எனக்கு ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது...நன்றி...ஜெய்லானி :))))) //
ஹா..ஹா.. வாங்க .. உங்க முதல் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@@@பிரசன்னா--//வீடுவீடாக போய் சொல்லிட்டு வருவதுக்குள் மண்டை காய்ந்து விட்டது //
எதுக்கு? இல்ல எதுக்குன்னு கேட்டேன்.. யே யப்பா கொஞ்சம் பேருக்கு லிங்கு கெடைக்கல, நீங்களே எடுத்துகோங்கனு சொன்னா எடுத்துக்க போறோம் :) //
வாங்க சார் வாங்க..!! உங்களுக்கு கல்யாணம் ஆயிடிடுச்சா..ஏன் கேக்கிறேன்னா.. பத்திரிக்கை சமாச்சாரமுன்னு ஒன்னு இருக்கே அதுக்காக சொல்றேன். வீட்டில போய் சொல்றதுதானே முறை.. தமிழர் பண்பாடு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//vanathy said...
அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? )/// ஆஹா.... விளக்கெண்ணெயும் கையுமாகவெல்லோ அலையினம்.... நான் இந்தப்பக்கம் யாருமில்லையென நினைத்திட்டேனே.... இனிக் கொஞ்சம் சாக்கிரதையாகவே இருக்கோணும்....:) .. நான் எனக்குச் சொன்னேனாக்கும் ம்ஹூம்....
@@@நாடோடி--//மாத்தி யோசி... கரெக்டா ஜெய்லானி..//
வாங்க ஸ்டீபன் .நீங்க சொன்னா சரிதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@A.சிவசங்கர்--//ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் வந்திருக்கேன் //
வாங்க !! சிவ சங்கர் ,பூலோகத்தில் மும்மாறி பொழிகிறதா..? தாங்கள் வந்ததன் காரணம் விருதை எவராவது திருடிக்கொண்டு போய் விட்டாரா ..? அதுக்கு கம்பெனி கேரண்டி தரமுடியாது..ஹா..ஹா..அடிக்கடி வாங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@செந்தில்குமார்--//ம்ம்ம்ம் நல்ல சந்தேகம் .....//
வாங்க செந்தில்..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மங்குனி அமைச்சர்--//
இப்ப சொல்லுங்க. அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில. ///
ஜெய்லானி, அதோட கொஞ்சம் செங்கல் பௌடர் சேத்துகிட்டா இன்னும் சிகப்பா வராது //
அட மரந்துபோச்சப்பா..!! ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி. ஆனா அதுக்கூட சுண்ணாம்பு சேர்த்தா இன்னும் நல்லா செவக்கும் தோல் உரிஞ்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@துளசி கோபால்--//இந்தியத் தொலைக்காட்சிகளில் குறிப்பா தமிழ்நாட்டுலே இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலெல்லாம் 18 ரூபாய்க்கு என்னத்தையோ வாங்கித்தடவுனா ரெண்டு வாரத்துலே வெள்ளைக்காரரா ஆகிடலாமுன்னு காமிச்சுக்கிட்டு இருக்காங்க:( //
நீங்க பாக்குறதாலதானே போடுறாங்க. பாக்காட்டி போடமாட்டாங்க
//என்னதான் மார்கெட்டிங்குன்னு சொன்னாலும் பச்சைப்புழுகு சொன்னா அடுக்குமா? இது ஏமாத்து வேலைதானே? இதுக்கெல்லாம் புடிச்சுப்போடமாட்டாங்களா உள்ளே? //
எதுக்கு மக்கள் தான் தண்டனை தரனும் .அந்த பொருளை வாங்காம..
//தமிழனை சிகப்பாக்காம விடமாட்டாங்க போல!
என்னவோ போங்க. //
கஸ்தூரி மஞ்சள் , மருதாணி இப்படி நிறைய இயறக்கை பொருள் இருக்கே அதை ஏன் வாங்க மாட்டேங்கிறாங்க மக்கள் .யாரோ ஒரு நடிகை சொன்னதும் வாங்குறாங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..!!
எப்புடி இப்படிலாம் யோசிகிறீங்க ஜெய்லானி
குங்குமபூ ஆராச்சி எல்லாம் சரிதான். சந்தர்ப்பம் பார்த்து அந்த மேக் அப் மேட்டர் போட்டு உடைத்து விட்டீர்.
நீங்க வேற பாஸ்..
ஆமா...எதுக்கு இப்படி சந்தேகமா வந்துக்கிட்டு இருக்கு உங்களுக்கு?...
@@@சௌந்தர்--//அது ஒரு நம்பிக்கை மட்டுமே. அதில் ஒன்றும் இல்லை //
வாங்க சௌந்தர்.. ஆமா அதான் உண்மை
//கர்பமா இருக்கும் பெண்களுக்கு அதில் ஒரு ஆசை :)//
அது ஏன் அப்ப மட்டும் அவங்களுக்கு அந்த ஆசை வருது தெரியுமா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// உங்களுக்கு விஜய் டிவி ல கேட்டு குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் டீவீடி வாங்கி தரேன் //
தலைவா நான் டீவீயே பாக்குறதில்லை இதுல சீரியல் டீவிடியா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஆமா.. எனக்கும் இந்த சந்தேகம்தான்..//
ஆஹா..என் இனம் நீங்க . கண்டிப்பா வரனும் இப்படிபட்ட சந்தேகங்கள்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எம் அப்துல் காதர்--//ஆனா காக்கா மயிலா ஆகவுமில்ல. குயில் சந்தன நிறத்தில் மாறவுமில்ல//
ஆஹா கவித கவித soooper எப்பூடி தலஇதெல்லாம்?? //
ஹி..ஹி..ஒரு ஃபுளோல வருது பாஸ் கண்டுகாதீங்க
//இதை வச்சே நம்ம சொந்த பந்தம் ஒரு பதிவே போட்டுட்டாங்க வாழ்க...( அப்பா ஒரு வழியா பிரபல பதிவராயாச்சி...ஹி..ஹி..)//
அப்பா என்னை சொல்லல.. க்கி..க்கி. (நல்ல வேலை யாரும் பார்க்கல. பாஸ் இது நமக்குள்ள இருக்கட்டும்)//
இன்னெரு இடமும் இருக்கு அப்துல் அங்க தொவச்சி காயப்போட்டுட்டாங்க நம்மளை .க்கி..க்கி..
//எம் அப்துல் காதர் said...
//கரெக்ட் இது நமது ஜீன்களின் வேலை .பிறக்க ப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா, கருப்பா, சிவப்பா , நெட்டையா , குட்டையா தீர்மானிப்பது குரோமோசோம் மற்றும் ஜீன்களே. //ஆனா மக்கள் சொலறது வேற ஆச்சே..!!//
அது இன்னா பாஸ் எனக்கும் கொஞ்சம் காதோடு சொல்லுங்க ஹி..ஹி..(இப்ப க்கி கிக்கியா)//
சந்தேகத்த ஒரு குருப் விடச்சொல்லுது. நீங்க கேக்குறீங்களே
//
அப்ப வேலைக்கு போகாதவர்கள், வருமானமில்லாதவர்கள் எல்லாம் எப்படி?? அழகா இருக்காங்கன்னு அர்த்தமா?? இல்ல புருஷன் பாக்கெட்டில் கை வைத்து விடுவார்களா?//
தாய்குலங்கள் என்னை மொத்துவதை பாக்க எத்தனை நாளா ஆசை தல உங்களுக்கு..ஹி..ஹி..
//'நீ-grow' என்று சொன்னதால நெட்டையா வளர்ந்துட்டான் தல. அவங்களை யாரும் சிகப்பாகுன்னு சொல்லல அதனால தான்னு எடுத்துக்கலாமா பாஸ். ஹி..ஹி.//
அப்ப நீ- குரே ன்னு யாராவது ஒரு வேளை சொல்லியிருக்கலாம். அதான் காக்கை கலர்
//இந்த சந்தேகத்துக்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்க. அப்புறம் உங்க கேளிவிக்கு நான் பதில் சொல்றேன் பாஸ்!! ஹி ஹி வர்ர்ட்டா :)))//
ஹா..ஹா..நீங்க இன்னும் சந்தேகமே கேக்கலியே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அக்பர்--//நல்ல சந்தேகம். அதுக்கு பதிலையும் நீங்களே சொல்லிட்டிங்களே.//
வாங்க அக்பர்.. வித்தியாசமா இருக்கட்டு மேன்னுதான் . இந்த குருட்டு நம்பிக்கை நிறைய இருக்கு ஊரில அதான் இப்படி போட்டது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உள்ளேன் அய்யா
உங்க ப்ளாக் லோட் ஆகா லேட் ஆகுது
@@@எம் அப்துல் காதர்--//
:) 47 //
:)) 48 //
:)) நடுவுல ஒன்னு விட்டுப் போச்சோ HIGH JUMP 50..//
பாஸ்..!!இதுக்குதான் தாண்டும் போது 49 சொல்லிட்டு தாண்டனும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அது எப்படி நான் வரும் போது ஒரு பய புள்ளையும் இருக்க மாட்டுது
@@@ஸாதிகா--//டப்பா டப்பாவா குங்குமப்பூ சாப்பிட்டேன்.கலர் சுமாராக ஒருமகன்.வெறுத்துப்போய் குங்குமப்பூவே சாப்பிடாமல் அது வாங்கற காசை பத்திரமா பேங்கிலே போட்டு வச்சேன்.பிறந்தது இன்னொரு மகன் தும்பை பூவாட்டம்.இப்ப என்ன சொல்லுறீங்க? //
ஸாதிகாக்கா அதான் நான் மேலயே சொல்லிட்டேன் .இதெல்லாம் சும்மா ஆளை ஏமாற்றும் செயல்
////.ஏற்கனவே அழகா இருக்கிறவங்களுக்கு ஏங்க இந்த தொல்லை..//நல்லாவே ஆழ்ந்து கவனித்து இருக்கீங்க பிரதர்!//
ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@NIZAMUDEEN--//நாம் ஏமாந்து அந்த பொருட்களை வாங்கி முகத்தில அப்பி கொள்வோம்//
'நானும் ஏமாந்துட்டேன்; பார்த்துக்குங்க' என்பதை
முகக்குறிப்பு மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்
என்கிறீர்கள், சரியா? //
ஆமா அக அழகு சரியானால் முக அழகு தன்னால சரியாகும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜெயந்தி--//குங்குமப்பூவ மூஞ்சியில பூசிக்கிட்டா வேணா அந்த நேரத்துக்கு செகப்பா மாறலாம்.//
அதுக்கு ஏங்க அவ்வளவு செலவு.. பீட்ருட் இருக்கே சீப்பான விலையில் , கஸ்தூரி மஞ்சள் இருக்கே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Kousalya--//அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில.//
வணக்கம் சகோதரரே.
இதுதான் ரொம்ப சரியான டிப்ஸ்.//
ஆமாங்க . உண்மைதான்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹேமா--//அட சாமி...என்னடா...இந்த வாரம் இன்னும் ஜெய்க்கு சந்தேகம் வரலேயேன்னு யோசிச்சேன் ! //
வாங்க குழந்தை நிலா ..உங்க ஆசையை நா ஏன் கெடுக்க அதான் கரெக்டா போட்டுட்டேன்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தங்களின் விருதுக்கு மிக்க நன்றிங்க.
இந்த குங்குமப்பூ.... குழந்தை சிவப்பா பிறப்பதற்கு அல்ல.... மாறாக நோய் எதிர்ப்பு சக்திக்காகத்தான்னு கேள்வி பட்டிருக்கேன்.... நீங்க யாரிடமாவது கேட்டு பாருங்க (ஒரு சந்தேகமாக)
தலைப்பைப் பார்த்தவுடனே சந்தேகப் பட்டேன்.. ஹா ஹா ஹா வழக்கம்போல விஷயம் ப்ளஸ் நகைச்சுவை.. அருமை ஜெய்
நானும் ப்ரசென்ட் ஜெய் அண்ணா!
உங்க பதிவை விட இங்கு வந்திருக்கும் கமெண்ட்டெல்லாம் படிச்சேனா,என்ன கமெண்ட் எழுதறதுன்னு ஒண்ணும் புரியலை..அப்பறமா அடுத்த பதிவுக்கு வந்து கமெண்ட்டறேன்.ஹிஹி!
@@@முத்து--//சந்தேகமா கேட்குற இரு உனக்கு ஒரு வில்லங்கத்தை இழுத்து விட்டால் தான் சரியா வரும்//
ஹி..ஹி.. வில்லங்கம் உங்க சொந்தமா.?
//உன் சந்தேகம் அனைத்திற்கும் விடை வேண்டும் என்றால் பன்னியை கூலிங் கிளாஸ் இல்லாமல் வர சொல்லு சொல்லுறேன் //
ஆத்தாடி என்னா வில்லத்தனம்..ஏன் இந்த கொலவெறி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL said... //உண்மையில் குங்குமபூ சாப்பிட்டா நல்லா பசிஎடுக்கும்...இந்த காலத்தில் தான் டானிக் எல்லாம் இருக்கு...அந்த காலத்தில் எல்லாம் இதனை தான் சாப்பிடுவாங்க....சிஅல் பேருக்கு டானிக் குடிக்க பிடிக்காது...ஆனால் இது சூப்பராக இருக்கும்...வேண்டும் என்றால் நல்லா நெட்டில் தேடி பாருங்க.//
அந்த காலத்தில எல்லோரும் கடும் உழைப்பாளியா இருந்ததால டானிக் இஞ்சி சாறு , சுக்கு காப்பி , செந்தூரம் , கேழ்வரகு புட்டு இப்பிடி இருந்துச்சி . குங்குமப்பூ விலை..?...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹைஷ்126--//ஆமாம் பாம்பு விஷம் கூட புரதம் தானே பின் ஏன் அதை சாப்பிட்டா செத்து போவாங்களாமே? //
(((சூப்பர் பதில் )))புரோட்டீன் நம்ம உடல்ல ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல சேராது . என்னதான் நாம நிறைய சாப்பிட்டாலும் தேவைக்கு மேல் உள்ளதை கழிவா வெளியேற்றிடும் . ஆனா நம் உடலுக்கு தினமும் புரோட்டீன் தேவை. முக்கிய உறுப்புக்கள் வேலை செய்ய .கார்பேஹைட்டிரேட் கொழுப்பா மாறி உடல்ல தங்கும் பின்ன அதுவா ரிட்டனா சக்தியா மாறி உடலுக்கு பலம் தரும் ஆனா புரோட்டீனால் முடியாது .
ராஜ நாகம் கிங் கோப்ரா விஷமானது ஒரு துளியை சுமார் 500லிட்டர் தண்ணீரில் கலந்து விட்டு அதில் 50 மில்லி குடித்தால் யாரும் சாக மாட்டாங்க . நமக்கு ஒரு நாளைக்கு தேவையான அள்வு புரோட்டீன் அதில் இருக்கு .
’’அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சி ‘’
இதில் அமுதம் என்பது புரதம் ஆகிய புரோட்டீன் தான். என்பதில் எள் ,கடுகு , அளவுக்கு சந்தேகமே வேண்டாம்....இது சின்ன வயதில் படித்த ஞாபகம்.
((இனி மொக்கை பதில் )) நாம எலியா இருப்பதால் தான் சாகுரோம் .மன அளவில் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அன்புடன் மலிக்கா--//நல்ல சந்தேகம்தான் அண்ணாத்தே!அதெல்லாம் சும்மா அது ரத்தத்தை சுத்திகரிக்கும் என்று உம்மம்மா சொல்வார்கள். அவ்வளவுதான் சிவப்பாக குழந்தை பிறக்கனுமுன்னா சிகப்பு ரோஜாவை சாப்பிடச்சொல்லுங்க [ஏதோ நம்மால் முடிஞ்சது] //
யக்கா அதுகு பேரு குல்கந்து . ரோஜாப்பூவு + தேனில் ஊறவச்சது
//அப்பறம் ஜெய்லானி,அண்ணாத்தே எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஏன் உங்க பதிவு "லோட்" ஆவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது? கிளிக் பண்ணிட்டுப்போய் பல்லு வெளக்கிட்டு, வெளிக்குப்போயிட்டு, குளிச்சுட்டு, காபி குடிச்சுட்டு வந்தப்புறம்தான் லோடு ஆகுது.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு நானும் //
நீங்களுமா..? அவ்வ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--//ஜெய்..லானி!! ஏதோ வயிற்றில் வளரும் குழந்தைக்கு எனச் சொல்லி, பெரியவங்க விஷயங்களெல்லாம்:), கதைக்கிறீங்க போல இருக்கு, இதுக்கு நான் ஏதும் சொல்லமாட்டேன், அம்மா சொல்லியிருக்கிறா, பெரியவர்கள் கதைக்கும்போது, குறுக்க பேசப்பூடாது என்று....//
ஆமா பேபி அதிஸ்
//இங்கே இமா மாமி, வாணிப் பெரியம்மா,ஸாதிகா அத்தை, எல்கே அங்கிள்... மற்றும் ஹை... வாணாம்.. பிறகு பிரச்சனையாகிடும்:)... எல்லோரும் கதைக்கும்போது, நான் சின்னப்பிள்ளை:):) //
நம்ம மட மங்குவை விட்டுடீங்களேஏஏஏஏஎ
//ஒண்ணுமேயில்லை சொல்ல.... அதுதான் பேசாமல் போகிறேன்... வேணுமெண்டால்,எந்த கிரைப் வோட்டர், எந்தப்புட்டிப்பால்... சிறந்தது... இப்படியானதில் ஏதும் சந்தேகம் வந்தால்... வடைக்கு முன்பே நான் வந்து நிற்பேன்... இப்போ....
பூ.... எ.......//
ஹா..ஹா..அப்ப அடுத்த சந்தேகம் கண்டிப்பா உங்களுக்குதான் பேபி கரெக்டா வந்துடுங்க சரியா...
//
ஒரு கறுப்பு டைகரைப் பிடிச்சு, கத்தக்கத்த தினமும் தீத்திப்பாருங்கோவன் கரட்டை:)))...//
ஹா..ஹா.. சிரிச்சி சிரிச்சி..வயத்த வலிக்குது...நினைச்சி பாத்தால் வெடிச்சிரிப்பு வருது. அப்ப உங்கட வீட்டில டிரைனிங் ஆரம்பிச்சிடுச்சின்னு சொல்லுங்க அதான் அனுபவம் பேசுது கத்த... கத்த...ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வித்யா--//இரத்தத்தை சுத்திகரிக்கும் என்றுதான் டாக்டர் எனக்கும் சொன்னார். குங்குமப்பூ சாப்பிட்டதால் குழந்தை கருப்பாக பிறந்தது என கூறியவர்களை நான் பார்த்திருக்கேன்.//
குறிப்பா அதனால இல்ல பரம்பரை எப்படியோ அப்படி வரும் குழந்தையின் நிறம் அதான் உண்மை. ஆனா ஊரில இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கு இது சாப்பிட்டா குழந்தை கலரா பிறக்கும்ன்னு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சாருஸ்ரீராஜ்--//நல்ல சந்தேகம் தான் , குங்குமபூ சாப்பிடுறதுனால குழந்தை சிகப்பாக பிறக்காது , எல்லாமே ஜீன்ஸ் தான் காரணம் //
வாங்க...!! அதான் உண்மையும் கூட . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//மங்குனி அமைச்சர் said...
ஜெய்லானி, அதோட கொஞ்சம் செங்கல் பௌடர் சேத்துகிட்டா இன்னும் சிகப்பா வராது//
கொஞ்சம் மாத்தி சொல்லுங்க அமைச்சரே.. செங்கல் பௌடரை நல்லா "கர கர"னு சிகப்பு கலர் (அதாவது ரத்தம்) வரும் வரை தேய்ச்சிகிட்டா வரும்.. என்ன வரும்ன்னு கேட்குறீங்களா "ஆம்புலன்ஸ்". நான் சொல்றது சரிதானே சரியா ஜெய்லானி?
@@@காஞ்சி முரளி--//எங்க... மாமா...சே...! மாமன்னர் ஜெய்லானி சந்தேகம் தீர்த்து வைப்பவருக்கு....
தினம் நானூறு சவுக்கடி இனாமாய் அளிக்கப்படும்..
ஹி.... ஹி.... ஹி....//
நானூறா..ஏன் ஓன்னு ரெண்டு அட்ஜஸ் கிடையாதா..அவ்வ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Harini Sree--//நீங்க சமீபத்துல சிவாஜி தி பாஸ் படம் பாத்தீங்களோ??? அப்புறம் ஆப்ரிக்கா பக்கம் போய்டாதீங்க ரெடி எ இருக்காங்களாம் உங்கள சுட்டு தள்ள! :P //
நா அங்கிட்டுதான் தப்பிச்சி வந்திருக்கேன், திரும்பவுமா..... ஜெய்லானி எஸ்கேப்ப்ப்ப்ப்ப். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சசிகுமார்--//சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..//
எனக்கு தான் அது, நம்பி வந்தேன் இப்படி குழப்பிடீங்களே //
வாங்க நண்பா..!!ஒரு லெமன் ஜுஸ் தரவா ரொம்பவும் டயர்டா இருக்கிற மாதிரி தெரியுது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கக்கு - மாணிக்கம்--//ஐயோ.........நாதான் வழக்கம் போல லேட்டா? ஒரு ஆளு வர்றதுக்குள்ள எல்லாரும் கும்மி அடிச்சி கோலாட்டம் ஆடி முடிச்சிட்டீங்களே! //
பாருங்க அவ்வளவு கொலவெறி அப்ப நா அவங்க கையில கிடைச்சா அன்னைக்கு சமையல் குழம்பு நாந்தான் அவங்க வீட்டில.
குங்குமபூ பதிவு நல்லாஇருக்கு. இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான் . நாம தான் அதுகள புரிஞ்சுகணம். //
ஆமா அதான் ஆனா நிறைய பேர் அது பின்னாடி ஓடுவதால் அதன் விலை அதிகமா போய்டுச்சி
//ஜெய்லா....நல்ல கவனியுங்கள். நம்மகிட்ட ஒருத்தர் வசமா மாட்டி இருக்காரே! .................ஆமா ...அவுரேதான்.!! //
அட ஆமாம்ல டார்கெட் போட்டாச்சி.
//கும்மி கொட்ட ரொம்பவும் ஆசை போல தெரியுது
ஆனா அவரு பக்கம் யாரையும் காணோம்.
புரியுதா..?? //
குழந்தைக்கு உடவார்ட்ஸ் கிரைப் வாட்டர் பாட்டில் குடுத்திட வேண்டியதுதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அப்பாவி தங்கமணி--//சந்தேகம் கேக்கற ப்ளாக் எல்லாம் சத்தமில்லாம கடத்தபட்றதா கேள்வி பட்டேன்... உண்மையா? சும்மா உங்க காதுல விசியத்த போடலாம்னு வந்தேன்... (ஹி ஹி ஹி... எப்பா எல்லாரும் சேந்து எனக்கு பாராட்டு விழா எல்லாம் வேண்டாமே... இட்ஸ் ஒகே.... இட்ஸ் ஒகே... ஹி ஹி ஹி)//
ஆஹா..இப்பதான் புரியுது இதெல்லாம் உங்க வேலையா.ஏன் இந்த பிளாக் லோட் ஆக லேட் ஆகுதுன்னு . அப்ப எதிர் சட்னி போட்டுட வேண்டியதுதான். ஹி..ஹி.. :-))
//குங்கும பூ பத்தி இப்படி ஒரு தப்பான அபிராயம் இருக்கு... ஒரு வேளை இப்படி சொன்னா கண்டிப்பா சாப்பிடுவாங்க... கர்பிணிக்கு நல்லதுன்னு அந்த காலத்துல சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... கரெக்ட்ஆ?//
ஆமா இருக்கலாம் . விலை அதிகம் அதனால்தான் போலிகள் நிறைய வருது கலர் சாயம் கலந்து. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--// ஜெய்..லானி, இப்பத்தான் கவனித்தேன், முதலாவது படத்திலிருப்பதுதான் குங்குமப்பூவோ? எனக்குத் தெரியாதே.//
ஆமாம் . இது அதிகம் சேறு உள்ள இடத்தில் வளரும் . தனியா வளர்க்க முடியாது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@vanathy--//அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? ) //
ஆஹா....சின்ன கேப்பில லாரியே ஓட்டிட்டீங்களே வான்ஸ் . அதே நேரம் பெரியம்மான்னு ஒத்துகிட்டீங்களே :( . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@pinkyrose--//hello jailani sir evlo kastapattu tamilla rendu aruvaya pottu neenga paratuveenga periya thanga mahan viruthu kudupeenganna ponga sir aluhuni aattam aadringa //
அதான் அப்பவே சொன்னேனே எழுதுரதை ஊக்குவிக்கவும் , ஒரு ஃபிரன்ஷிப்காகவுமேன்னு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//பியூட்டி பார்ல இருந்து வருபவர்களை//
என்னாது? பாரா? அவங்களையும் உங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா? :)) //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அட அட்லீஸ்ட்.. நம்ம ஜெய்லானி அண்ணாத்தைக்காவது குடுத்து செக் பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா??//
ஹி..ஹி.. ரெண்டுமே ஒன்னுங்கிறீங்களா , ஆனா பிறக்கிற குழந்தயை பத்திதானே பேச்சி.நா எப்படி......
//அப்புறம் ஏன், அஜீரணக் கோளாறுக்கெல்லாம் கொடுக்கறதில்ல? ஏன் வாயில புண் இருந்தா அதுக்கு கொடுக்கறதில்ல? ஏன் அநீமியாவுக்கு இதக் கொடுக்கறதில்ல? இருமல் சளிக்கு கொடுக்கறதில்ல? இத்தனை சந்தேகத்துக்கும் பதில் சொல்லுங்க..//
சபாஷ் சரியான போட்டி . அப்ப நீங்களும் என்னைய மாதிரி குழம்ப ஆரம்பிச்சீடீங்க. ஓக்கே...ஓக்கே..ஸ்டாட் மியூசிக்....>உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--
//vanathy said...
அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? )/// ஆஹா.... விளக்கெண்ணெயும் கையுமாகவெல்லோ அலையினம்.... நான் இந்தப்பக்கம் யாருமில்லையென நினைத்திட்டேனே.... இனிக் கொஞ்சம் சாக்கிரதையாகவே இருக்கோணும்....:) .. நான் எனக்குச் சொன்னேனாக்கும் ம்ஹூம்....//
அதிஸ் இனி சாக்கிரதையா கதைங்கோ என் காதில மட்டும் யாருக்காவது கேட்டுடப்போகுது .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@r.v.saravanan--//சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..!!
எப்புடி இப்படிலாம் யோசிகிறீங்க ஜெய்லானி //
ஹா..வாங்க சார் , இல்லாட்டி தலைப்ப பாத்துட்டு ஒடிட்டா என்ன செய்ய ..அதில இன்னெரு லேபிளை கவனிச்சீங்களா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில் வைரஸ் ஏத்தி விடறேன்
@@@இளம் தூயவன்--//குங்குமபூ ஆராச்சி எல்லாம் சரிதான். சந்தர்ப்பம் பார்த்து அந்த மேக் அப் மேட்டர் போட்டு உடைத்து விட்டீர்.//
மேட்டரை உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க போல இருக்கு சந்தேகத்தைதவிர ஓக்கே..ஓக்கே.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--//நீங்க வேற பாஸ்..//
ஏன் என்ன ஆச்சி ..?
//ஆமா...எதுக்கு இப்படி சந்தேகமா வந்துக்கிட்டு இருக்கு உங்களுக்கு?...//
பக்கத்தில டெம்ப்ரேச்சர் விட்ஜட் பாக்குரதில்லையா அடிக்குற சூட்டுல முட்டை தானா ஃபிரை ஆகுது பாஸ் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@முத்து--//உள்ளேன் அய்யா //
வாங்கய்யா நான் ஆனி பிடுங்க போகும் போதுதான் வருவீங்க போலிருக்கு
//உங்க ப்ளாக் லோட் ஆகா லேட் ஆகுது //
அது கூகிள் சர்வர் பிராப்ளம் சிலருக்கு கமெண்ட் பிராப்ளம் இருக்கு
//அது எப்படி நான் வரும் போது ஒரு பய புள்ளையும் இருக்க மாட்டுது//
அதுக்குதான் குளிச்சிட்டு சுத்தமா வரனும்க்கிரது ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...??
குங்கமப்பூ சாப்பிட்டு தான் காஷ்மீர்-ல எல்லாரும் கலரா இருக்காங்களா?? :D :D
அங்கே தானே குங்கும பூ விளையுது.. :-)))
innoru doubt varuthu..thirumba varaen..
hello jailani sir ithu aniyaayam enna neenga ookuvikkavae matukreenga apram naan alukuvan... en
ok ok ok en eluthukkum unga comments thevai plz comment..n give ideas coz idea la thaan namma vandi voduthu...
//அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) //
S.T.COURIER ல அனுப்புங்க .. அதுதான் பக்கத்துல இருக்கு ..!!
@@@சி. கருணாகரசு--//தங்களின் விருதுக்கு மிக்க நன்றிங்க. இந்த குங்குமப்பூ.... குழந்தை சிவப்பா பிறப்பதற்கு அல்ல.... மாறாக நோய் எதிர்ப்பு சக்திக்காகத்தான்னு கேள்வி பட்டிருக்கேன்.... நீங்க யாரிடமாவது கேட்டு பாருங்க (ஒரு சந்தேகமாக)//
ஹா..ஹா.. அதென்னங்க கடைசியில ஒரு சந்தேகமான்னு அதானே டாப்பிக்கே..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@thenammailakshmanan--//தலைப்பைப் பார்த்தவுடனே சந்தேகப் பட்டேன்.. ஹா ஹா ஹா வழக்கம்போல விஷயம் ப்ளஸ் நகைச்சுவை.. அருமை ஜெய் //
வாங்க தேனக்கா..!! உங்களுக்கு தலைப்ப வச்சே சந்தேகம் வந்துடுச்சா ஹா..ஹா.. இந்த சந்தோஷம் தொடரட்டும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Mahi--//நானும் ப்ரசென்ட் ஜெய் அண்ணா! //
வாங்க..!!வாங்க .!!
//உங்க பதிவை விட இங்கு வந்திருக்கும் கமெண்ட்டெல்லாம் படிச்சேனா,என்ன கமெண்ட் எழுதறதுன்னு ஒண்ணும் புரியலை..அப்பறமா அடுத்த பதிவுக்கு வந்து கமெண்ட்டறேன்.ஹிஹி!//
ஆஹா..இதுக்கு பேர்தான் எஸ்கேப்புன்னு சொலறது ஹி..ஹி..:-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@திவ்யாஹரி--//
@@மங்குனி அமைச்சர் --//
ஜெய்லானி, அதோட கொஞ்சம் செங்கல் பௌடர் சேத்துகிட்டா இன்னும் சிகப்பா வராது//
கொஞ்சம் மாத்தி சொல்லுங்க அமைச்சரே.. செங்கல் பௌடரை நல்லா "கர கர"னு சிகப்பு கலர் (அதாவது ரத்தம்) வரும் வரை தேய்ச்சிகிட்டா வரும்.. என்ன வரும்ன்னு கேட்குறீங்களா "ஆம்புலன்ஸ்". நான் சொல்றது சரிதானே சரியா ஜெய்லானி? //
இல்லைங்க அவர் அடிக்கடி செய்யிரதை சொல்றார் உங்களுக்கு புரியலை..ஹி..ஹி..(( அதான் பாவி பய செங்கல் சூளை பக்கமே சுத்திகிட்டு இருக்கானா ))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@முத்து--//அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில் வைரஸ் ஏத்தி விடறேன் //
வைரஸா அப்பிடின்னா இன்னா தலீவா..? ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Ananthi--// எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...?? //
அட உங்களுக்குமா..?? என்னை பாத்தா கண்டிப்பா வரனுமே
//குங்கமப்பூ சாப்பிட்டு தான் காஷ்மீர்-ல எல்லாரும் கலரா இருக்காங்களா?? :D :D //
ஆமா அங்க எருமைமாடு ,காக்கா , குயில் கூட வெள்ளையாதான் இருக்கும்
//அங்கே தானே குங்கும பூ விளையுது.. :-))) //
அப்ப விளையாத அமெரிக்கா,ரஷ்யா எப்படி எப்படி கலரா இருக்காங்க..?
//innoru doubt varuthu..thirumba varaen..//
கண்டிப்பா வாங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@pinkyrose--//hello jailani sir ithu aniyaayam enna neenga ookuvikkavae matukreenga apram naan alukuvan... en //
நான் ஊக்கு , விக்கிறேன்னு எந்த படுபாவி சொன்னான் .ஒரு வேளை முத்துவா இருக்குமோ..?
// ok ok ok en eluthukkum unga comments thevai plz comment..n give ideas coz idea la thaan namma vandi voduthu...//
ஃபாலோயர் போட்டாச்சி இனி வருவேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ப.செல்வக்குமார்--//அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) //
S.T.COURIER ல அனுப்புங்க .. அதுதான் பக்கத்துல இருக்கு ..!! //
ஹா..ஹா.. அப்ப ரெடியா இருங்க பார்ஸல் ரெடியாகுது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
super
Haha superoo super, sirichi sirichi kannula thanni vanthuduchu, mukiyama unga santhegam regarding africans super ponga...kalakuringa..
@@@RasaRasaChozhan--//super //
வாங்க..!!ராச ராச சோழன்..!!எத்தனையோ நூற்றாண்டுக்கு பிறகு இப்பிடிஒரு பேர கேக்குறேன்.சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Priya--//Haha superoo super, sirichi sirichi kannula thanni vanthuduchu, mukiyama unga santhegam regarding africans super ponga...kalakuringa.. //
வாங்க ..பிரியா..!!சிரிப்பு வருதா .அதான் முக்கியம்.ஆனா பதில் ஒன்னும் சொல்லலியே. பரவயில்லை அடுத்து வருவதில சொல்லுங்க. உங்கள முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))