நாம உன்னும் பொருட்களை பல வகையா பிரிச்சி வச்சிருக்கோம் . அரிசி முதல் அனு ஆயுதம் வரை ஒவ்வொன்னுக்கும் தனித் தனியா பெயர் இருக்கு . சிலதுக்கு குடும்பமுன்னு சொல்லி அதுக்கு ஒரு பட்ட பெயர் .வேற இருக்கு. சயன்ஸ் படிச்சவங்களா இருந்தா இருந்தா நான் சொல்றது இன்னும் புரியும் . மால்வேசி அசிங்கமா நெனக்காதீங்க இது ஒரு குடும்பம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனான்ஸிஸ் அதுல ஒரு வகை ஒன்னுமில்லீங்க நம்ம செம்பருத்தி பூவு க்கு அப்படி ஒரு பாட்டனி பேரு.
எதுக்கு இது ஒரு பில்டப்புக்குதான் .அதுக்காக ஒரு பிரிவுயூதான் இது ..ஓக்கே ..இப்படி எல்லா பொருட்களையும் தனித்தனியா கிழங்கு , பட்டாணி வகைகள் , பூக்கள் , காய்கள் , கனிகள் ( பழங்கள் ) இப்படி வச்சவங்க . கடைசியா என்கிட்ட இப்ப மாட்டப்போறாங்க பாருங்க .ஏன் நீங்க என்கிட்ட மாட்டலையா அப்படிதான் சந்தேகம் இப்ப கேக்கப்போறேன்.
தரைக்கு கீழே முளைப்பது எல்லாம் கிழங்கு வகைகள் . உதாரணம் இஞ்சி , உருளை கிழங்கு , பீட்ருட் , வெங்காயம் , புல் பூண்டுகள் சரியா .
இதில தரைக்கு கீழே விளையும் நிலக் கடலை (ஹைய்யா...... .ஹை...ஹை..) வேர் கடலை. மல்லா கொட்டை பயிறு . கிரவுன்நெட் மூங்பலி இப்படி சொல்லுகிற அந்த கடலையை ஏன் கிழங்கு ஐட்டத்துல சேர்க்காம . பட்டாணி , பயிறு ஐட்டத்துல சேர்த்து சொல்றீங்கன்னு இன்னும் புரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிட்டு போனா கொஞ்சம் புண்ணியமா போகும் . சொல்லுங்களேன்.
இது கொலஸ்டிரால் உள்ளவங்க விலக்க வேண்டிய பொருள்களில் இதுவும் ஒன்னு . இதன் எண்ணெய் கொலஸ்டிரால் நீக்கி இப்ப வருது ஆனா கேரண்டிதான் இல்ல . டாக்டரின் படிப்பு சர்டிபிகேட் பாத்தா போறோம் ஹாஸ்பிட்டலுக்கு எல்லாரும் போறாங்க நாமும் போறோம்.(அது தனி பதிவு )
இப்ப சொல்லுங்க நிலக்கடலைங்கிற பேர் சரியா ! இல்லையா ? அதை ஏன் கடலைன்னு சொல்லனும் . கடுகு பிரச்சனையே இன்னும் தீரல, அதுக்குள்ள இது தேவையா ? இது யாரின் சதி.. கூட்டு குடும்பத்தில இந்த குழப்பம் தேவையா ? எல்லா எண்ணெய் பொருள்களும் சண்டைக்கு வராதா.. அதனால தான் கடுகை போட்டதும் ,ஒருவேளை வெடிக்குதா . பெரிய அளவில் சண்டை வருவதுக்குள் பெயரை என்ன செய்யலாம் என் சந்தேகத்தை தீருங்க
டிஸ்கி : சந்தேகம் தொடரும் பதில் கிடைக்கும் வரையில் ( இது என் ஐம்பதாவது பதிவு )
117 என்ன சொல்றாங்ன்னா ...:
/////////கடுகு பிரச்சனையே இன்னும் தீரல, அதுக்குள்ள இது தேவையா ? /.///
தெரிந்துதான் நடக்கிறதா எல்லாம் !
நீங்களே சந்தேகமும் கேட்டு,நீங்களே வடையையும் சாப்ட்டா எப்புடி? அந்த ஆயா ரீபைன்ட் ஆயில்-ல வடை சுடலியாம்..சாப்புடாதீங்கோ!!:):)
கடலை செடியோடு போட்டு பச்சை கடலைய ஞாபகப்படுத்தறீங்க!
கடலை கிடைச்சா, வறுத்தோ இல்லைன அவித்தோதின்னுட்டு போர சாதிங்னா நாங்க, இருந்தாலும் உங்க சந்தேகத்த போக்க முயற்சி செய்றோம்( கியாரண்டியெல்லாம் இல்லை)
உங்கள யாரு இப்டில்லாம் “மாத்தி யோசி”க்க சொல்றா??
இனிமே கடலையே சாப்பிடலை.. போதுமா..
ஆஹா...பயங்கர சந்தேகம்....சூப்பர்ப்...நானும் இப்படி தான் ஒரு முறை நினைத்தேன்...அப்புறம்...நானே நினைத்து கொண்டேன்..இதனை யாரிடமாவது கேட்டால்..இது சரியான லூசு...என்று சொல்லுவாங்களே என்று கேட்பது இல்லை...ச்...சா....அதனை மறந்தேவிட்டேன்...பதிலுடன் வருகிறேன்...நன்றி...
@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ //கடுகு பிரச்சனையே இன்னும் தீரல, அதுக்குள்ள இது தேவையா ? /.///
தெரிந்துதான் நடக்கிறதா எல்லாம் ! //
இன்னுமா நீங்க என்னை நம்பளை.. ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஐம்பாவது பதிவில் - நூறு சந்தேகங்களை கேட்ட ஜெய்லானிக்கு பாராட்டுக்கள்!
@@@Mahi--//நீங்களே சந்தேகமும் கேட்டு,நீங்களே வடையையும் சாப்ட்டா எப்புடி? அந்த ஆயா ரீபைன்ட் ஆயில்-ல வடை சுடலியாம்..சாப்புடாதீங்கோ!!:):) //
உங்க க்மெண்ட பார்த்ததும் அதை உடனே தூக்கிட்டேன் இப்ப சரியா
//கடலை செடியோடு போட்டு பச்சை கடலைய ஞாபகப்படுத்தறீங்க! //
ஏங்க அங்க கிடைக்கரதில்லையா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Jey-//கடலை கிடைச்சா, வறுத்தோ இல்லைன அவித்தோதின்னுட்டு போர சாதிங்னா நாங்க, இருந்தாலும் உங்க சந்தேகத்த போக்க முயற்சி செய்றோம்( கியாரண்டியெல்லாம் இல்லை)//
என்ன தலைவா இப்படி இருந்தா எப்படி . வாழ்கையில எப்பவும் மாத்தி யோசிக்கனும் அப்பதான் வாழ்க்கை தத்துவம் புரியும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சுசி--//உங்கள யாரு இப்டில்லாம் “மாத்தி யோசி”க்க சொல்றா?? //
ஹி..ஹி..க்கி..க்கி...
//இனிமே கடலையே சாப்பிடலை.. போதுமா..//
இப்பிடியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக்கூடாது தெரியுமா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL--//ஆஹா...பயங்கர சந்தேகம்....சூப்பர்ப்...நானும் இப்படி தான் ஒரு முறை நினைத்தேன்...அப்புறம்...நானே நினைத்து கொண்டேன்..இதனை யாரிடமாவது கேட்டால்..இது சரியான லூசு...என்று சொல்லுவாங்களே என்று கேட்பது இல்லை...ச்...சா....அதனை மறந்தேவிட்டேன்...பதிலுடன் வருகிறேன்... நன்றி..//
அப்ப என்னை பாத்தா லூசா தெரியுதா..ஹி..ஹி.. வாங்க நம்ம சந்தேகத்தை யாரிடமிருந்தாவது கேட்டு தெரிஞ்சிக்கலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Chitra--//ஐம்பாவது பதிவில் - நூறு சந்தேகங்களை கேட்ட ஜெய்லானிக்கு பாராட்டுக்கள்! //
வாங்க டீச்சர் !!! அதுக்குள்ள நூறு ஆயிடுச்சா ..உங்க ஜோடி போட்டோ சூப்பர். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//ஆஹா...பயங்கர சந்தேகம்....சூப்பர்ப்...நானும் இப்படி தான் ஒரு முறை நினைத்தேன்...அப்புறம்...நானே நினைத்து கொண்டேன்..இதனை யாரிடமாவது கேட்டால்..இது சரியான லூசு...என்று சொல்லுவாங்களே என்று கேட்பது இல்லை...ச்...சா....அதனை மறந்தேவிட்டேன்...பதிலுடன் வருகிறேன்...நன்றி...// கீதா இது உங்களுக்கே ஒவரா இல்லை...ஜெய்லானி இதுலருந்து என்ன தெரியுதுன்னா உங்களை லூசுன்னு சொல்லாம சொல்லிருக்காங்க..ஹா...ஹா..
அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படில்லாம் தோனுது...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
ஜெய்...எப்பவும் வியாழக்கிழமையிலதானே சந்தேகம் வரும் உங்களுக்கு.எப்பிடி புதன் கிழமையில வந்திச்சு.இந்தச் சந்தேகத்தை தீர்த்து வையுங்க.
உங்களுக்குக் குடுக்கிற ஒரு நாள் லீவையும் குடுக்காமப் பண்ணனும்.அப்போ சந்தேகம் எல்லாம் வர நேரமே கிடைக்காது !
ஆஆஆஆஅ.. நான் பார்ப்பதற்குள், ஆயாவைக்கூடக் கடத்திட்டுப்போயிட்டாங்கோஒ... இட்ஸ் ஓக்கை.... அழக்கூடாது.. நான் எனக்குச் சொன்னேன்.
50 ஆவது சந்தேகப்பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜெய்..லானி. எந்தச் சந்தேகத்துக்காவது விடை கிடைத்ததோ? இல்லையெனில்... வேறென்ன.. நேரே இங்க வாங்கோ....., தேம்ஸ் நதிக்கு போக “மப்” தாறேன்:)....
பழசுகளுக்கெல்லாம் சந்தேகம் கேட்பதை விட்டுவிட்டு, 51 ஆவது பதிவில், புதுசா ஏதாவது கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.... .
அடுத்த சந்தேகம், கழுகு ஏன் பறக்குது? பென்குயின் ஏன் பறப்பதில்லை, இரண்டுக்குமே இறகு இருக்குத்தானே.... இப்பூடித்தான் மாத்தி யோசிக்கோணும்... மீ எஸ்ஸ்ஸ்..
இப்ப சொல்லுங்க நிலக்கடலைங்கிற பேர் சரியா ! இல்லையா ? அதை ஏன் கடலைன்னு சொல்லனும் /// இப்பூடியெல்லாம் கேட்பீங்க எனத் தெரிந்துதான், நாங்கள் அதைக் கடலை எனச் சொல்லாமல், “கச்சான்” என்றுதான் சொல்வோம் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ
போன பதிவுல ஒரு எலுமிச்சம்பழ வைத்தியம் சொல்லியிருந்தேன். அந்தக் கமெண்ட்ட காணமே?
நான் நிலக்கடலைலதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். அந்த கடலையினுடைய தொழில் நுட்பம் ரொம்ப சீக்ரெட். மொதல்ல எல்லாம் கடலை நிலத்துக்கு மேலதான் இருந்துச்சு. உங்க மாதிரி ஆளுகளெல்லாம் அதைப்புடுங்கி சாப்பிட்டு இருந்தாங்க. இனப்பெருக்கம் நின்னு போச்சு. கடலை கடவுள் கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணிச்சு. அதைக்கேட்ட கடவுள் சரீன்னுட்டு இனிமேல் உன்னுடைய கடலையெல்லாம் மண்ணுக்குள்ள போயிடும். மசக்கவுண்டன் மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க மட்டும் அதைப்புடுங்கி சாப்பிட்டுக்குவாங்க அப்படீன்னு வரம் கொடுத்துச்சாம். அதுல இருந்துதான் கடலை மண்ணுக்குள்ளே போயிடுச்சு.
உங்க சந்தேகம் தெளிஞ்சுதுங்களா? இல்லைன்னா எலுமிச்சம்பழம் வைத்தியம்தானுங்க வழி.
லெமன் ஜூஸ் கொடுங்க ஜெய்லானி முதல்ல.. அப்புறமாத் தான் படிக்க ஆரம்பிப்பேன் :))
நல்ல சந்தேகம்தான் பாஸ்..
என்ன 5 வகுப்போட நிறுத்திட்டதாலே..என்னால இதுக்கு பதில் சொல்லமுடியலே..
ஆனாலும் நீங்க விடாம கேட்கும் ஸ்டைல் பிடிச்சிருக்கு..கேளுங்க..கேளுங்க..
கேட்டுக்கிட்டே இருங்க..ஹி..ஹி
அக்ரி ஆபீசர்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டீங்க போல இருக்கிது.
ஆஹா...மறுந்துட்டேனே....வாழ்த்த....வாழ்த்துகள் ஜெய்லானி...இன்னும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....நன்றி...
மண்டையைப் பிய்க்க வேண்டிக் கிடக்குது. சந்தேகம் அருமை. ஆனாலும் பதில் தெரியவில்லை.
உங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தொடருங்கோ! இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!
இப்படி எல்லாம் கேள்வி கேட்க உங்களை சொல்லுறது யாரு?...(கவுண்டமணி ஸ்டைலில் படிச்சா நான் பொறுப்பில்லை...ஹி..ஹி...)
50க்கு வாழ்த்துக்கள்....
கடலை அமோக விளைச்சல் .. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ...
மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்
நண்பா இது 49 பதிவு. இப்படி கடலை போடாதிங்க
// மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும் //
இன்று ஒரு தகவல்.. சூப்பர்...
பதிய விசயத்தை தெரிந்துகொண்டேன்.. நன்றி...
@@@Mrs.Menagasathia--// கீதா இது உங்களுக்கே ஒவரா இல்லை...ஜெய்லானி இதுலருந்து என்ன தெரியுதுன்னா உங்களை லூசுன்னு சொல்லாம சொல்லிருக்காங்க..ஹா...ஹா..//
ஹா..ஹா. நல்ல வேளை வான்ஸ் பக்கம் அவங்க போகலை . அங்க என்னை வச்சி பெரிய காமெடி ஷோவே நடந்துச்சி.
//அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படில்லாம் தோனுது...50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! //
மாணவனுக்கு சந்தேகம் வந்தா வாத்தியார் சரியில்லைன்னுதானே அர்த்தம் .வாழ்த்துக்கு மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் , சௌந்தர் அவர்கள் இது 49 ஆவது பதிவுன்னு சொல்றார் முதல்ல இந்த சந்தேகத்தை போக்குங்க.
எப்பா நீங்க உங்க பெற மாத்தி சந்தேகலாணி என்று வச்சிகோங்க சரியா இருக்கும். எப்படி தான் தோணுதோ ரூம் போட்டு யோசிப்பாங்களோ
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அரைசதத்திற்கு வாழ்த்துக்கள் தல!
சார், நீங்க உங்க சந்தேகத்த எல்லாம் தூக்கிட்டு செம்மொழிமாநாட்டுக்கு போய் கேளுங்க, அங்க தான் நெறைய தமிழ் அறிஞர்கள் இருக்காங்க...உங்க சந்தேகத்த அவங்க தீர்த்து வைப்பாங்க.
MY BEST WISHES FOR YOUR 50th POST!
SEMMOZHI TAMIL VAZHGA!
@@@ஹேமா--//ஜெய்...எப்பவும் வியாழக்கிழமையிலதானே சந்தேகம் வரும் உங்களுக்கு.எப்பிடி புதன் கிழமையில வந்திச்சு.இந்தச் சந்தேகத்தை தீர்த்து வையுங்க. //
அடிச்ச வெய்யிலுக்கு ரூமை விட்டே வெளியே போகல . அந்த கேப்பில போட்டதுதான் இந்த பதிவு
//உங்களுக்குக் குடுக்கிற ஒரு நாள் லீவையும் குடுக்காமப் பண்ணனும்.அப்போ சந்தேகம் எல்லாம் வர நேரமே கிடைக்காது ! //
ஏங்க ஹேமா ஏன் இந்த கொல வெறி..க்கி...க்கி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்கள மொதல்ல கிச்சன் பக்கமே விடக்கூடாது... :)
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்..
சந்தேகம் - ஊஹும்.
ஏதோ தேடி பார்த்ததில் கண்டுபிடிச்சது....// Peanuts are technically legumes, which makes them much more closely related to lentils, peas, and beans than to hazelnuts, and other true nuts.
The reason peanuts suffer from an identity crisis is because they are used in the same ways nuts are in our diets even though they are not nuts in the pure botanical sense. They also have characterisitics of both legumes and nuts.
What's the difference between the two groups? Legumes have edible seeds enclosed in (and often attached to) a pod that splits along both sides. Picture a pea pod.
Nuts, on the other hand, are essentially the seed and fruit together. Nuts usually only have one seed (on rare occassions two) and don't open on their own.
Peanuts are legumes because they have a pod and are grown underground instead of on bushes and trees (as nuts are), according to a spokesperson from The Peanut Institute. //
சரியான தின்னிப்பண்டாரமா இருப்பீங்க போல..
என்னைப்போலவே..
ஹீ ஹீ ஹீ
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம்.
சரி எவ்வளவு கடலை உடைச்சிருப்போம் அந்த அனுபவத்துல சொல்றேன்.பூமிக்கு கீழே விளையிற எல்லா கிழங்களையும் கழுவி அப்படியே சாப்பிடலாம். கடலையை மட்டும் உடைச்சு அதிலுள்ள விதையை சாப்பிடுறோம் அதனால இருக்குமோ. ( சே! காலங்காத்தால யோசிக்க வச்சுட்டீங்களே).
எனக்கு ஒரு டவுட் வெங்காயம் எந்த வகையில சேரும். பெருங்காயம் வகையிலா :)
50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
கிரவுன்நெட் மூங்பலி இப்படி சொல்லுகிற அந்த கடலையை ஏன் கிழங்கு ஐட்டத்துல சேர்க்காம . பட்டாணி , பயிறு ஐட்டத்துல சேர்த்து சொல்றீங்கன்னு இன்னும் புரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிட்டு போனா கொஞ்சம் புண்ணியமா போகும் . //
ஹிஹிஹி ஜெய்லி எங்களுக்கும் அதே சந்தேகம்தான் .யாராவது சொன்னா எங்களுக்கும் சொல்லுங்க
ஹ்ம்ம்ம்ம்...நாங்கள்லாம் எங்கே போய் முட்டிக்கறது??
evuruku yaravathu ethir kelvi pathivu podungappa.. please :)
கொலெஸ்ட்ராளுக்கும் வேர்க்கடலைக்கும் உள்ள சம்பந்தம் [ஒதுக்கிடனும்] இது அப்படி ஒன்றும் பெரிதாக நிரூபிக்கபடவில்லை. ஏதோ ஒரு நாடு வேர்க்கடலை பயிரிடும் நாட்டின்மீது உள்ள பொறாமையில் "பத்தவச்ச' பொரளி இது.
ZAKIR HUSSAIN
ஆஹா.. திரும்பவுமா.. குடும்ப பிரச்சினையில நான் தலையிட விரும்பல்ல ஒதுங்கிக்கிறன்..
வாழ்த்துக்கள் 50 க்கு...
நான் கொஞ்சம் லேட்டு வர்ரதுக்குள்ள் வடை இருந்த தடயம் கூட இல்ல.. அவ்வ்வ்வ்வ் அடுத்த தடவ பார்சல் அனுப்பனும்..
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. சரியான சந்தேகம்தான். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்....
50வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஜெய்லானி.
ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :D :D
உங்க 50 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)))
சரி இப்ப உங்க சந்தேகங்களை ஒன்று, இரண்டு, என்று வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.. :D :D
நமக்கு இந்த பிகருக்க கூட போடுவமே அந்த கடலைய தவிரே , மத்த கடலைகளை பற்றி கவலை கொள்வதில்லை (என்னா தமிழ் வாக்கியம் , அதுவா வந்துருச்சுப்பா ) அந்த கடலை பத்தி ஏதாவது சம்தேகம் இருந்தால் கேள் ??? சும்மா பிரிச்சு மேஞ்சுடுறேன்
அம்பதா ???? அசத்து
@@@athira--//ஆஆஆஆஅ.. நான் பார்ப்பதற்குள், ஆயாவைக்கூடக் கடத்திட்டுப்போயிட்டாங்கோஒ... இட்ஸ் ஓக்கை.... அழக்கூடாது.. நான் எனக்குச் சொன்னேன்.//
அடுத்த பதிவு போடும் போது மிஸ்ட் கால் தரேன். போதுமா ஹி...ஹி.. யார் நெம்பர் எந்த நெம்பர்ன்னு எல்லாம் கேக்கப்பிடாது ( நீங்கதான் கோட்டில வச்சி அனுப்பினீங்களே..!!)
//50 ஆவது சந்தேகப்பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜெய்..லானி. எந்தச் சந்தேகத்துக்காவது விடை கிடைத்ததோ? இல்லையெனில்... வேறென்ன.. நேரே இங்க வாங்கோ....., தேம்ஸ் நதிக்கு போக “மப்” தாறேன்:)....//
வாழ்த்துக்கு நன்றி . இன்னும் கிடைக்கல .இங்கு பக்கத்தில கடல் இருக்கு . இருங்க அதிலேயே நீந்தி வரேன். தலையெழுத்து தேம்ஸ்-ன்னா என்ன செய்யுறது.
//பழசுகளுக்கெல்லாம் சந்தேகம் கேட்பதை விட்டுவிட்டு, 51 ஆவது பதிவில், புதுசா ஏதாவது கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.... //
இன்னைக்கும் நாளைக்கும் லீவுதான் . இருங்க புதுசா சொல்றேன்.ஹி...ஹி...
//அடுத்த சந்தேகம், கழுகு ஏன் பறக்குது? பென்குயின் ஏன் பறப்பதில்லை, இரண்டுக்குமே இறகு இருக்குத்தானே.... இப்பூடித்தான் மாத்தி யோசிக்கோணும்... மீ எஸ்ஸ்ஸ்..//
ஆ...இதுவும் நல்ல கேள்விதான் . இதை என்னுடைய நூறாவது பதிவில் கேட்கிறேன்.
//.இப்பூடியெல்லாம் கேட்பீங்க எனத் தெரிந்துதான், நாங்கள் அதைக் கடலை எனச் சொல்லாமல், “கச்சான்” என்றுதான் சொல்வோம் கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈ //
தெரியும் இப்படி சொல்லிதான் நீங்க எஸ்ஸ் ஆவீங்கன்னு கிட்னி ஓவர் டைம் வேலை செய்யுது உங்களுக்கு( இந்த சந்தேகம் போடும் போதே நினைச்சேன் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எனக்கும் ஒரு சந்தேகம், நம்ம விஜயகாந்த் முதல்வர் ஆவாரா?, அப்படி ஆனால்,
அவர் எத்தனையாவது முதல்வர்?.
இந்த கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் எப்படி கேட்பது?.
இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு, உயர்திரு. ஜெய்லானி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ஆ 50 வது பதிவா, எல்லொருக்கும் விருதுகளை அள்ளி வழங்குற ஜெய்லானிக்கு என்ன விருது தரலாம்?.
@@@DrPKandaswamyPhD--//போன பதிவுல ஒரு எலுமிச்சம்பழ வைத்தியம் சொல்லியிருந்தேன். அந்தக் கமெண்ட்ட காணமே? //
வாங்க !! இருக்குமே.. நான் யாருடைய கமெண்டையும் இது வரை டெலிட் பன்னியதில்லை. அனானி ஆப்ஷன் மட்டும் எடுத்து விட்டு இருக்கிறேன் . எது போட்டாலும் உடனே பப்லீஷ் ஆகும் .
//நான் நிலக்கடலைலதான் என்னுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். அந்த கடலையினுடைய தொழில் நுட்பம் ரொம்ப சீக்ரெட். மொதல்ல எல்லாம் கடலை நிலத்துக்கு மேலதான் இருந்துச்சு. உங்க மாதிரி ஆளுகளெல்லாம் அதைப்புடுங்கி சாப்பிட்டு இருந்தாங்க. இனப்பெருக்கம் நின்னு போச்சு. கடலை கடவுள் கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணிச்சு. அதைக்கேட்ட கடவுள் சரீன்னுட்டு இனிமேல் உன்னுடைய கடலையெல்லாம் மண்ணுக்குள்ள போயிடும். மசக்கவுண்டன் மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க மட்டும் அதைப்புடுங்கி சாப்பிட்டுக்குவாங்க அப்படீன்னு வரம் கொடுத்துச்சாம். அதுல இருந்துதான் கடலை மண்ணுக்குள்ளே போயிடுச்சு.//
ஆஹா கதை நல்லா இருக்கே..!!!.அதே மாதிரி அரிசி கோதுமை ஏன் கடவுள் கிட்ட கேக்கல . பொட்டு கடலை , என் கேக்கல.ஒரு வேளை கேட்டிருந்தா நல்லா இருந்திருக்குமே..!!!
//உங்க சந்தேகம் தெளிஞ்சுதுங்களா? இல்லைன்னா எலுமிச்சம்பழம் வைத்தியம்தானுங்க வழி. //
ஹா..ஹா...இதுக்கு பதில் போன பதிவில சொல்லிட்டேனேஏஏஏஏஏஏ....!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//லெமன் ஜூஸ் கொடுங்க ஜெய்லானி முதல்ல.. அப்புறமாத் தான் படிக்க ஆரம்பிப்பேன் :)) //
க்கி..க்கி...லெமன் ஜூஸா வாண்டடா வந்து கேக்குறீங்க..http://kjailani.blogspot.com/2010/05/blog-post_25.html ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--//நல்ல சந்தேகம்தான் பாஸ்..என்ன 5 வகுப்போட நிறுத்திட்டதாலே..என்னால இதுக்கு பதில் சொல்லமுடியலே..//
பரவாயில்ல பட்டா நம்ம செட்டிலேயே அதிகம் படிச்சவன் நீ .நா எல் கே ஜி ஃபெயிலு . அப்ப யாரை தான் கேக்குறது ..
//ஆனாலும் நீங்க விடாம கேட்கும் ஸ்டைல் பிடிச்சிருக்கு..கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க..ஹி..ஹி //
இதே இன்னைக்கும் நாளைக்கும் லீவு ..கேள்வி ரெடி.. நாளைக்கு புதிய சந்தேகம் வரும் க்கி..க்கி...ஹூம் ..ஒன்னும் பன்ன முடியாது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@தாராபுரத்தான்--//அக்ரி ஆபீசர்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டீங்க போல இருக்கிது.//
வாங்க !! சார் ..சார்..சந்தேகம் கேட்டா கதை சொல்றார் சார்...கையில பிரம்பு வேற இருக்கு சார்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL--// ஆஹா... மறுந்துட்டேனே.... வாழ்த்த....வாழ்த்துகள் ஜெய்லானி...இன்னும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....நன்றி...//
ஏதோ தட்டு தடுமாறி 50 வரை வந்திருக்கு. வாழ்த்துக்கும் ம்ற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@தமிழ் மதுரம்--//மண்டையைப் பிய்க்க வேண்டிக் கிடக்குது. சந்தேகம் அருமை. ஆனாலும் பதில் தெரியவில்லை.//
சிலதுக்கு விளக்கம் கிடைப்பதில்லை. நாமும் சொல்லிட்டு போறோம். அவ்வள்வுதான்.
//உங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தொடருங்கோ! இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!//
வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@நாடோடி--//இப்படி எல்லாம் கேள்வி கேட்க உங்களை சொல்லுறது யாரு?...(கவுண்டமணி ஸ்டைலில் படிச்சா நான் பொறுப்பில்லை.. .ஹி..ஹி...) //
வாங்க !! யாருமில்லீங்க ..தனியா மல்லாந்து படுத்து கிட்டு வானத்தை பார்த்தா ஆயிரம் சந்தேகம் வருது. அம்புட்டுதேங்..( சுருளீராஜன் ஸ்டைலில் படிச்சா நானும் பொருப்பில்லை ஹா..ஹா.. )
// 50க்கு வாழ்த்துக்கள்....//
வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கே.ஆர்.பி.செந்தில்--//கடலை அமோக விளைச்சல் .. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ... //
வாங்க சார்.!!வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும் //
வாங்க ரமேஷ் !! நீங்க ஜோசியமா பாக்குறீங்க. சொல்லவே இல்லை. பாக்காமலேயே கரெக்டா சொல்றீங்க...ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
Hearty Congradulate....
Kanchi Murali...
@@@சௌந்தர--//நண்பா இது 49 பதிவு. இப்படி கடலை போடாதிங்க //
ஆஹா.. நல்ல சந்தேகமா தான் இருக்கு . ஆனா மாசக்கணக்குல கடாயில தனியா குதிச்சிட்டு இருந்தேனே அதுவும் ஒரு பதிவுவா போன வருஷம் இருக்கே நண்பா..!! முதன் முதலில் போட்டது அதை எடுக்க மனசு வரலை. இப்ப கணக்கு சரியா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--// மூக்கு புடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும் //
இன்று ஒரு தகவல்.. சூப்பர்...
பதிய விசயத்தை தெரிந்துகொண்டேன்.. நன்றி...//
பாருய்யா எதுஎதுல டவுட் கிளியர் ஆகுது..!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சாருஸ்ரீராஜ்--//50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் , சௌந்தர் அவர்கள் இது 49 ஆவது பதிவுன்னு சொல்றார் முதல்ல இந்த சந்தேகத்தை போக்குங்க.//
அட , உங்களுக்குமா ? மேல பாருங்க பதில் போட்டாச்சு.. வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சசிகுமார்--//எப்பா நீங்க உங்க பெற மாத்தி சந்தேகலாணி என்று வச்சிகோங்க சரியா இருக்கும். எப்படி தான் தோணுதோ ரூம் போட்டு யோசிப்பாங்களோ //
இது எதுக்கு பாஸ் ரூம் போட்டு யோசிக்கனும் . தலைக்கீழா ஐஞ்சி நிமிஷம் நின்னா தானா வரப்போகுது . வெறும் வயித்துல நிக்கனும்.
//50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வால்பையன்--//அரைசதத்திற்கு வாழ்த்துக்கள் தல!//
வாங்க பாஸ் எல்லாம் உங்க ஆசிர்வாதங்கள்தான் . வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Phantom Mohan-//சார், நீங்க உங்க சந்தேகத்த எல்லாம் தூக்கிட்டு செம்மொழிமாநாட்டுக்கு போய் கேளுங்க, அங்க தான் நெறைய தமிழ் அறிஞர்கள் இருக்காங்க...உங்க சந்தேகத்த அவங்க தீர்த்து வைப்பாங்க.//
ஏன் இந்த கொலவெறி..அங்க டாஸ்மாக் கடையை தவிர வேற கடையெல்லாம் மூடியிருக்காமே.. பதிலுக்கு பதிலா அடிகிடைச்சா என்ன் செய்ய
//MY BEST WISHES FOR YOUR 50th POST! //
வாழ்த்துக்கு நன்றி அண்ணாச்சி..!!
// SEMMOZHI TAMIL VAZHGA! //
அதையேன்யா ரஷ்யா பாஷையில சொல்ரே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜெய்--//உங்கள மொதல்ல கிச்சன் பக்கமே விடக்கூடாது... :) //
அப்படியா சொல்றீங்க ..!! அப்ப சந்தேகத்தை கிச்சனுக்கு வெளிய வச்சிக்கலாம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ஆ! ஜெய் ! ஒரு மார்க்கமாத்தான்ய்யா திரியுறாய்ங்க.... சரி சரி.. முதல்ல 50 சந்தேகம் கேட்டு முடிங்க.."கடல"யில என்ன சந்தேகமோ... காலேஜ்ல அதுக்கு தனி வகுப்பே எடுக்கறாங்களாம்...ஈவினிங் காலேஜ் போய் கத்துக்கோங்க...
ஜெய்லானி, நான் புதல் பதிவ போட்ருக்கேன், பந்து படிக்கவும், கைவசம் விருது ஏதும் இருந்தால் அதயும் கொண்டுவரவும்.
முதல் பதிவு பொட்டிருக்கிறேன், வந்து படிக்கவும்.
Jey said...
ஜெய்லானி, நான் புதல் பதிவ போட்ருக்கேன், பந்து படிக்கவும், கைவசம் விருது ஏதும் இருந்தால் அதயும் கொண்டுவரவும்.
///
யோவ், நக்கல் பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா ???? (அப்பாடா கோத்து விட்டாச்சு )
ஜெய்லானி said .....
/////மங்குனி அமைச்சர் said...
நமக்கு இந்த பிகருக்க கூட போடுவமே அந்த கடலைய தவிரே , மத்த கடலைகளை பற்றி கவலை கொள்வதில்லை (என்னா தமிழ் வாக்கியம் , அதுவா வந்துருச்சுப்பா ) அந்த கடலை பத்தி ஏதாவது சம்தேகம் இருந்தால் கேள் ??? சும்மா பிரிச்சு மேஞ்சுடுறேன்
////
அது எங்களுக்கும் தெரியும் , நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை ??? (...ங்கோய்யாலே என்னங்கடா இந்த ஸெல்ப் சர்வீஸ் மாதிரி நாமலே நமக்கு பதில் கமன்ட் போட்டுக்கணும் போல )
///Ananthi said...
ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :ட் :ட்///
ஹைய்யா.. அப்ப நான் 50வது கமாண்ட்டா.. மகிழ்ச்சி.
@@@வித்யா--//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்..//
வாழ்த்துக்கு நன்றி மேடம்
//சந்தேகம் - ஊஹும்.//
சந்தேகம் கேட்டதும் எஸ்கேப் ஆயிடுறீங்களே.. ஹி..ஹி.. விடமாட்டோம்ல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL--//ஏதோ தேடி பார்த்ததில் கண்டுபிடிச்சது....// Peanuts are technically legumes, which makes them much more closely related to lentils, peas, and beans than to hazelnuts, and other true nuts.
The reason peanuts suffer from an identity crisis is because they are used in the same ways nuts are in our diets even though they are not nuts in the pure botanical sense. They also have characterisitics of both legumes and nuts.
What's the difference between the two groups? Legumes have edible seeds enclosed in (and often attached to) a pod that splits along both sides. Picture a pea pod.
Nuts, on the other hand, are essentially the seed and fruit together. Nuts usually only have one seed (on rare occassions two) and don't open on their own.
Peanuts are legumes because they have a pod and are grown underground instead of on bushes and trees (as nuts are), according to a spokesperson from The Peanut Institute. //
இப்ப தான் ரஷ்யன் பாஷை கத்துகிட்டு வரேன். கோர்ஸ் முடிஞ்சதும் வந்து அதுல கேட்டுகிறேன். எனக்காக தேடி பிடிச்சி போட்டதுக்கு ரொம்ப நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@இந்திராவின் கிறுக்கல்கள்--//சரியான தின்னிப்பண்டாரமா இருப்பீங்க போல.. என்னைப் போலவே.. ஹீ ஹீ ஹீ //
உஸ்..சீக்ரெட்ட வெளிய பப்ளிக்கா சொல்லாதீங்க ...!! . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அக்பர்--//உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம்.//
ஹா..ஹா..ஒரு திரட் கொஞ்சம் டைட்டா இல்ல அதான் பாஸ்
//சரி எவ்வளவு கடலை உடைச்சிருப்போம் அந்த அனுபவத்துல சொல்றேன்.பூமிக்கு கீழே விளையிற எல்லா கிழங்களையும் கழுவி அப்படியே சாப்பிடலாம். கடலையை மட்டும் உடைச்சு அதிலுள்ள விதையை சாப்பிடுறோம் அதனால இருக்குமோ. ( சே! காலங்காத்தால யோசிக்க வச்சுட்டீங்களே).//
யோசிங்க பாஸ்..நல்லா யோசிங்க. ஆனா தூங்குறதுக்கு முன்ன மட்டும் யோசிக்காதீங்க அப்புறம் தூக்கம் வராது
//எனக்கு ஒரு டவுட் வெங்காயம் எந்த வகையில சேரும். பெருங்காயம் வகையிலா :) //
வெம்மை + காயம் = வெங்காயம்.. ஓ.. கொப்புளமா..? !!! அது லேசா இருந்தா பர்னால் போடுங்க .. கொப்புளம் உடைஞ்சி போயிட்டா பெருங்காயம் .அப்ப ஏ டி சி ஊசிதான் போடனும்..ஆங்..அக்பர் நீங்க கேட்டதுக்கு பதில் சரியா..ஹி..ஹி...
//50 வது பதிவுக்கு வாழ்த்துகள். //
வாழ்த்திற்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அடுத்த பதிவு போடும் போது மிஸ்ட் கால் தரேன். போதுமா ஹி...ஹி.. யார் நெம்பர் எந்த நெம்பர்ன்னு எல்லாம் கேக்கப்பிடாது ( நீங்கதான் கோட்டில வச்சி அனுப்பினீங்களே..!!) /// சொறி/சாரி ஜெய்..லானி தப்பு நடந்துபோச்சு, அது ரோங் நம்பர்... இனி புது நம்பருக்கே அடிங்க:) நான் கோலைச் சொன்னேன்.
கடலை ஆராய்ச்சி அற்புதம்.
நிலக்கடலைங்கிற பேர் சரியா ! இல்லையா ? அதை ஏன் கடலைன்னு சொல்லனும்
நிலத்துக்கு அடியில் முளைத்த வேறு ஏந்த கிழங்க்காவது பீச் பக்கம் போகுமா...இந்தக் கடலை மட்டும்தானே கடலை போடும் கடலையாகிறது....அதான் கடலைன்னு சொல்றோம்.
சொல்லணும்
லெமன் ஜூஸு ஜூப்பரு.. அது கொடுத்த தெம்புல கொஞ்சம் கல்லகாய வேக வச்சு தின்னுட்டேன்.. இப்போச் சொல்லுங்க.. என்ன சந்தேகம் கேட்டீங்க?
@@@thenammailakshmanan--//ஹிஹிஹி ஜெய்லி எங்களுக்கும் அதே சந்தேகம்தான் .யாராவது சொன்னா எங்களுக்கும் சொல்லுங்க //
வாங்க.!! அப்ப சரி பல பேருக்கும் இப்படி சந்தேகம் இருக்குமுன்னு இப்பதான் எனக்கும் தெரியுது.ஹா..ஹா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஸாதிகா--//ஹ்ம்ம்ம்ம்...நாங்கள்லாம் எங்கே போய் முட்டிக்கறது?? //
ஹா..ஹா...இன்னும் கணக்குல வராத எவ்வளவோ இருக்கே..பொருங்க அவசரப்படாதீங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Mythili--//evuruku yaravathu ethir kelvi pathivu podungappa.. please :) //
வாங்க மேடம் .புகழ்ச்சி எனக்கு பிடிக்காது விட்டுடுங்க.(நல்ல வேளை யாருக்கும் இங்கிலிபீஸ் தெரியாது. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி வருது. க்கி..க்கி. )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Zakir Hussain--//கொலெஸ்ட்ராளுக்கும் வேர்க்கடலைக்கும் உள்ள சம்பந்தம் [ஒதுக்கிடனும்] இது அப்படி ஒன்றும் பெரிதாக நிரூபிக்கபடவில்லை. ஏதோ ஒரு நாடு வேர்க்கடலை பயிரிடும் நாட்டின்மீது உள்ள பொறாமையில் "பத்தவச்ச' பொரளி இது.//
வாங்க ஜாக்கிர் , பொதுவா வரும் மேட்டர் எல்லாம் வெளிநாட்டுகாரன் கண்டு பிடிச்சு தரதுதானே. ஒரு சமயம் ஆமா மற்றொரு சமயம் இல்லை. ஆக எதை நம்புரது எதை நம்பக்கூடாது புடியது இல்லையே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Riyas--//ஆஹா.. திரும்பவுமா.. குடும்ப பிரச்சினையில நான் தலையிட விரும்பல்ல ஒதுங்கிக்கிறன்.. //
ஹி..ஹி..ரியாஸ் இப்படி சொல்லிட்டு எஸ் ஆகக்கூடாது..
//வாழ்த்துக்கள் 50 க்கு...//
வாழ்த்துக்கு மிக்க நன்றி..
//நான் கொஞ்சம் லேட்டு வர்ரதுக்குள்ள் வடை இருந்த தடயம் கூட இல்ல.. அவ்வ்வ்வ்வ் அடுத்த தடவ பார்சல் அனுப்பனும்..//
ஓக்கே..ஓக்கே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜெயந்தி--//எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. சரியான சந்தேகம்தான். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! //
இல்லைங்க அப்ப அப்ப தலைக்கீழா நின்னு பார்த்தா நிறைய மேட்டர் வரும் . அதுல ஒன்னு இது. வாழ்த்துக்கும் ம்ற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Starjan ( ஸ்டார்ஜன் --//எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்....//
சொல்லுங்க ஷேக்..!!!எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
//50வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஜெய்லானி.//
வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Ananthi--// ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :D :D //
வாழ்த்துக்கள்..அரை செஞ்சுரிக்கு..
// உங்க 50 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :-))) //
வாழ்த்துக்கு மிக்க நன்றி
//சரி இப்ப உங்க சந்தேகங்களை ஒன்று, இரண்டு, என்று வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.. :D :D //
அடப்பாவமே..!! அவ்வ்வ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மங்குனி அமைச்சர்--//நமக்கு இந்த பிகருக்க கூட போடுவமே அந்த கடலைய தவிரே , மத்த கடலைகளை பற்றி கவலை கொள்வதில்லை (என்னா தமிழ் வாக்கியம் , அதுவா வந்துருச்சுப்பா ) அந்த கடலை பத்தி ஏதாவது சம்தேகம் இருந்தால் கேள் ??? சும்மா பிரிச்சு மேஞ்சுடுறேன் //
யோவ்..!! இதெல்லாம் பப்ளிக்கில் பேசக்கூடாது. இதூஊஊஉவேற அது வேற..
//அம்பதா ???? அசத்து //
தட்டுதடுமாறி இப்பதான் ஐம்பது வந்திருக்கு. போன வருஷம் முதல் முதலாய் ஒன்னு போட்டதை அழிக்க விரும்பல தேதியை பார்த்தா தெரியும்.வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Jey--//எனக்கும் ஒரு சந்தேகம், நம்ம விஜயகாந்த் முதல்வர் ஆவாரா?, அப்படி ஆனால்,
அவர் எத்தனையாவது முதல்வர்?.//
கண்டிப்பா ஆவார் . ஆனா அதை பார்க்க அவரும் இருக்க மாட்டார் நாமும் இருக்க மாட்டோம்
//இந்த கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் எப்படி கேட்பது?.//
அப்ப இது ஆங்கிலம் இல்லையா. கேள்வி ஃபோர்வேட் டூ பட்டா
//இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு, உயர்திரு. ஜெய்லானி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.//
இரு மக்கா அடுத்த சந்தேகத்துல வச்சுக்கிரேன்..!!
//ஆ 50 வது பதிவா, எல்லொருக்கும் விருதுகளை அள்ளி வழங்குற ஜெய்லானிக்கு என்ன விருது தரலாம்?.//
அதான் சைடுல நிறைய தொங்குதே பாஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//காஞ்சி முரளி--//50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
Hearty Congradulate....
Kanchi Murali...//
வாங்க..!! பாஸ்.வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@asiya omar--//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//
வாங்க!! வாங்க!! .வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@இலா--//ஆ! ஜெய் ! ஒரு மார்க்கமாத்தான்ய்யா திரியுறாய்ங்க....//
ஆமாங்க , வேற வழி தெரியல கண்னை கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு.
//சரி சரி.. முதல்ல 50 சந்தேகம் கேட்டு முடிங்க..//
வாவ்..!! சீக்கிரமாவே கேட்டுடறேன்... இப்பவே தலையில ஐஸ் கட்டிய வச்ச மாதிரி இருக்கே..!!
//"கடல"யில என்ன சந்தேகமோ... காலேஜ்ல அதுக்கு தனி வகுப்பே எடுக்கறாங்களாம்...ஈவினிங் காலேஜ் போய் கத்துக்கோங்க...//
எந்த காலேஜ் , அட்ரஸ் , கோ எட்டா விவரம் பிஸீஸ் இன்னைக்கே ஜாயின் பன்னிடறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Jey--//ஜெய்லானி, நான் புதல் பதிவ போட்ருக்கேன், பந்து படிக்கவும், கைவசம் விருது ஏதும் இருந்தால் அதயும் கொண்டுவரவும்.//
இதோ வந்து கிட்டே இருக்கேன்.. விருதுக்கு ஆர்டஎ குடுத்து இருக்கு மாம்ஸ்..
//முதல் பதிவு பொட்டிருக்கிறேன், வந்து படிக்கவும்.//
கலக்கலா இருக்கு . இந்த ஆரஞ்சு தோல்.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மங்குனி அமைச்சர்--//யோவ், நக்கல் பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா ???? (அப்பாடா கோத்து விட்டாச்சு )//
இருய்யா நீ கோத்து விடுறது இருக்கட்டும் . ஆம்பிளைங்க நாங்க விருது குடுத்தா நீ பிளாக்கில போட் மாட்டீரா ..?. இரு.. இரு.. இதுக்குனே ஒரு பொண்னு பேரால பிளாக் ஆரம்பிச்சு உனக்கு விருது தரேன். அப்ப இருக்குடி உனக்கு திருவிழா,...
//அது எங்களுக்கும் தெரியும் , நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை ??? (...ங்கோய்யாலே என்னங்கடா இந்த ஸெல்ப் சர்வீஸ் மாதிரி நாமலே நமக்கு பதில் கமன்ட் போட்டுக்கணும் போல )//
மாம்ஸ் இவ்வளவு வேகமா இருந்தா சரிவருமா என்ன ..ஆமா இந்த கடலை போடறதுன்னா என்னா..?ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Starjan ( ஸ்டார்ஜன் )
@@@Ananthi said...
ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :ட் :ட்///
ஹைய்யா.. அப்ப நான் 50வது கமாண்ட்டா.. மகிழ்ச்சி.//
ஆஹா ..!! இன்று போல் என்றும் வாழ்க ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--//அடுத்த பதிவு போடும் போது மிஸ்ட் கால் தரேன். போதுமா ஹி...ஹி.. யார் நெம்பர் எந்த நெம்பர்ன்னு எல்லாம் கேக்கப்பிடாது ( நீங்கதான் கோட்டில வச்சி அனுப்பினீங்களே..!!) /// சொறி/சாரி ஜெய்..லானி தப்பு நடந்துபோச்சு, அது ரோங் நம்பர்... இனி புது நம்பருக்கே அடிங்க:) நான் கோலைச் சொன்னேன்.//
அப்ப அதுல ஒரு பூஸ் சத்தம் கேட்டுச்சே அது யாரு...ஓ..அப்ப அது வெட்டினரி கிளினிக்கா.ஆஆஆஆ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும், அவித்த கடலையை வீட்டில் இருக்கும்போதும் சாப்பிட்டால் நல்லா இருக்கும் :)
@@@goma--//கடலை ஆராய்ச்சி அற்புதம்.//
வாங்க..!!ஓ....
//நிலக்கடலைங்கிற பேர் சரியா ! இல்லையா ? அதை ஏன் கடலைன்னு சொல்லனும்
நிலத்துக்கு அடியில் முளைத்த வேறு ஏந்த கிழங்க்காவது பீச் பக்கம் போகுமா...இந்தக் கடலை மட்டும்தானே கடலை போடும் கடலையாகிறது....அதான் கடலைன்னு சொல்றோம்.
சொல்லணும் //
ஆஹா.. டெரரா..இல்ல பதில சொல்லுவீங்க. ஆமாக்கா..ச்சே..கோமாக்கா கடல்கரை இல்லாத ஊரிலும் ஏன் கடலைன்னு சொல்றாங்க.ஹி..ஹி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//லெமன் ஜூஸு ஜூப்பரு.. அது கொடுத்த தெம்புல கொஞ்சம் கல்லகாய வேக வச்சு தின்னுட்டேன்.. இப்போச் சொல்லுங்க.. என்ன சந்தேகம் கேட்டீங்க? //
ஹா..ஹா.. அப்ப மேல கேட்டது மறந்து போச்சா..போனாப்போகுது அடுத்த சந்தேகம் ரெடி ரெண்டு நாளைக்குள்ள வரேன் அப்ப தெம்பா யோசிச்சு வையுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@SUFFIX--//வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும், அவித்த கடலையை வீட்டில் இருக்கும்போதும் சாப்பிட்டால் நல்லா இருக்கும் :)//
உண்மைதான் , அந்த அனுபவம் நிறைய இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிவுலகுக்கு வந்து சில மாதங்களிலே 50 பதிவு , எல்லாம் பிளாக்கர் டிப்ஸ், சமையல் டீவி, இப்ப ஒளியும் ஒலியும், டிப்ஸ் டிப்ஸ், சந்தேகம் என பல பதிவுகள் போட்டு,
இராப்பகலா வைர கீரீடம் தயாரித்து பதிவுலக சொந்தஙக்ளை எல்லாம் தேடி பிடித்து கீரிடம் அனிவித்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
@@@Jaleela Kamal--// பதிவுலகுக்கு வந்து சில மாதங்களிலே 50 பதிவு , எல்லாம் பிளாக்கர் டிப்ஸ், சமையல் டீவி, இப்ப ஒளியும் ஒலியும், டிப்ஸ் டிப்ஸ், சந்தேகம் என பல பதிவுகள் போட்டு,//
ஒரே மாதிரி போட்டா போரடிச்சிடும் அதனாலதான் இப்படி . கடிக்கிறதுன்னு முடிவு பன்னிய பிறகு வித்தியாசமா கடிக்கிறதுதானே முறை.
//இராப்பகலா வைர கீரீடம் தயாரித்து பதிவுலக சொந்தஙக்ளை எல்லாம் தேடி பிடித்து கீரிடம் அனிவித்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.//
வாங்க ..!!வாங்க..!! வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். அப்புறம் என்ன கேட்டீங்க நிலக்கடலை...கிழங்கு... இதெல்லாம் என்ன? எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.
மேல ஒரு செடி படம் போட்டிருக்கீங்களே அதுல வேர்ப்பக்கம் கோழிக்குஞ்சு மாதிரி இருக்கே அது பேர் என்ன வேர்க்கோழியா?!
ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்களை சமாளித்தாரோ தெரியவில்லை. நீங்கள் எப்பவும் இப்படியா? அல்லது திடீரென்று தோன்றிய மாற்றமா???
அது வேறு ஒண்ணுமில்லை அப்பூ... இந்த கிழங்கில் இருந்து எண்ணெய் எடுக்க முடியாது... ஆனால் நட்ஸ் வகைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதால் அதை அப்படி வகைப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாரும் அடிக்க வராதீங்கப்பா.
@@@kavisiva--//அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். //
ரொம்ப நன்றி
//அப்புறம் என்ன கேட்டீங்க நிலக்கடலை... கிழங்கு... இதெல்லாம் என்ன? எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.//
ஆஹா..கிரேட் எஸ்கேப்பா.. அடேங்கப்பா
//மேல ஒரு செடி படம் போட்டிருக்கீங்களே அதுல வேர்ப்பக்கம் கோழிக்குஞ்சு மாதிரி இருக்கே அது பேர் என்ன வேர்க்கோழியா?! //
அடப்பாவமே..!!இது உங்களுக்கே அடுக்குமா !! சேம் பிளட் ஹா..ஹா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@vanathy--//ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்களை சமாளித்தாரோ தெரியவில்லை.//
அதெல்லாம் பெரிய மெகா சீரியல். சொல்ல ஆரம்பிச்சா.மெட்டி ஒலி எல்லாம் பக்கத்திலேயே வர முடியது .
//நீங்கள் எப்பவும் இப்படியா? அல்லது திடீரென்று தோன்றிய மாற்றமா??? //
ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம். எப்பவுமே இப்படித்தான் . இப்பவும் அப்படித்தான்.
//அது வேறு ஒண்ணுமில்லை அப்பூ... இந்த கிழங்கில் இருந்து எண்ணெய் எடுக்க முடியாது... ஆனால் நட்ஸ் வகைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதால் அதை அப்படி வகைப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாரும் அடிக்க வராதீங்கப்பா.//
ஏங்க கேரட்டிலிருந்து ஜுஸ் எடுக்கும் போது எண்ணெய் எடுக்க முடியதா. பயோ டீஸல் எல்லாம் எடுக்க முடியாதா. அதுக்காக குடும்பத்தையே மாத்திடுவாங்களா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))