Wednesday, June 16, 2010

சந்தேகம்-2

                                 போன பதிவில் ஒரு சந்தேகம் கேட்டு யாரும் சொல்லாத்தால் அந்த சோகம் தீரும் முன்ன இன்னெரு சந்தேகம் வந்துட்டுது. இது சின்னதா இருந்தாலும் அதோட வேகம் யப்பா துப்பாக்கியிலிந்து வரும் தோட்டா ரேஞ்சிக்கு இல்ல அடிக்கிது , இல்ல இல்ல வெடிக்கிது

                               இப்ப தெரியுதா அதாங்க கடுகு. பாருங்க. நம்ம ஆள் இதுக்கும் ஒரு பழமொழி கண்டு பிடித்து வச்சீருக்கான் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. ஏன் அந்த காலத்தில கடுகு என்ன வெங்காயம் சைசிலா இருந்துச்சி. உறிச்சி உறிச்சி சிறுத்து போக..அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.

                              கடுகின் சுவை காரம்ன்னு சொன்னா அப்ப மிளகாயின் சுவை இனிப்பா ? ஏன் இந்த முரண்பாடு !! ஒரு சுவைன்னு சொன்னா அது ஒரு சுவை மட்டுமே வேறு பேச்சே கிடையாது. உதாரணம் இனிப்பு . அது சீனியில , வெல்லத்தில , கருப்பட்டியில செஞ்ச எந்த பொருளா இருந்தாலும் எத்தனை விதமா செஞ்சாலும் இனிப்பு சுவை ஒன்னுதான் . அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ? அய்யா சாமீ தாய்குலங்களே கொஞ்சம் சொல்லுங்க !!

                                பழமொழிகள் வெறும் பேச்சுக்கு மட்டும்ன்னு சொன்னா யாரும் பெரிசுகள் இனி அதைபத்தி பேசாதீங்க சிறுசுகள் கொஞ்ச நாள் நல்லா இருக்கட்டும்.
                                            அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

                                 அதில எண்னெய் இருக்கு ..மக்கள் அதை எப்படியாவது யூஸ் பன்னட்டும் எனக்கு என்ன !! ஆனா அதை பாத்திரத்தில வச்சி அதுவும் எண்ணெய ஊத்தி சூடுபடுத்திடினா வெடிக்குதே ஏன்?. மத்த ஐட்டங்கள் சும்மா இருக்கும் போது இதுக்கு ஏன் இந்த கொலவெறி. கொஞ்சம் ஜாக்கிரதையா இல்லாட்டி நம்ம மேல பட்டு எரிச்சலை உண்டாக்குதே ஏன்? சிலநேரம் பாம் ஸ்குவாட் மாதிரி டிரஸ் எல்லாம் போட வேண்டி வருதே!!

                               அப்பவும் நல்லா காய ( வெய்யில்ல ) வச்சுதான் யூஸ் பன்னுரோம் . அதுல தண்ணீர் ஈரபசை இல்லை. ஆனா எண்ணெய் இருக்கு. அப்ப எண்ணெய எண்ணெயுடன் சேர்த்தா ஏன் வெடிக்கனும் ?..யோசிக்க வேண்டிய கேள்வி.. எனக்காக யாராவது யோசிச்சு சொல்லுங்களேன். பேசாம அதை பொடிச்சி பவுடராக்கி போட்டா என்ன . எப்படியும் வயித்துக்குள்ள போரதுதானே . எதுக்கு இத்தனை சிக்கல்

பாட்டி வைத்தியம் :

(1)            கடுகை கொஞ்சம் அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். கிட்னியில கல் சேராது . கிட்னி வீக்கம் நேய் வராது
(2)               விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்
(3)               ஆரம்ப கால கர்பிணி பெண்கள் கடுகு பொருட்களை சேர்காமல் இருப்பது நல்லது

டிஸ்கி:   கடைசியில ஒன்னு சொல்லிட்டு போறேன். என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்

136 என்ன சொல்றாங்ன்னா ...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

1-st

எல் கே said...

//ஆரம்ப கால கர்பிணி பெண்கள் கடுகு பொருட்களை சேர்காமல் இருப்பது நல்லது //

appadiyaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடுகு மாதிரி இருந்துட்டு இந்த பையன் தொல்லை தாங்கலியே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரலே..ஆமா..கடுகு..மிளகாய் அப்படீனா என்னா சார்?...

காரம்னா என்னா சார்?..
இனிப்புனா என்னா சார்?..


(முள்ளை..முள்ளால் எடுக்கவேண்டும்..ஹி..ஹி)

ஸாதிகா said...

ஆரம்பிச்சாச்சா?அப்புறமா வர்ரேன்.

ஸாதிகா said...

ஏன் சார்?கடுகு வெடிக்குங்களா?எப்பூடி டமார்ன்னா?டுமீர்ன்னா?அந்த சப்தத்தை கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்.நாங்களும் கேட்டுக்கறோம்.

யாசவி said...

படிச்சப்புறம் கடு(கு) கடு(கு)ன்னு இருக்கு.

நல்ல மரண மொக்கை. நடத்துங்க :)

ஸாதிகா said...

கடைசியா மூன்று வைத்திய குறிப்பு திருஷ்டி பரிகாரத்திற்கா?

ஸாதிகா said...

நீங்க கேட்கிற கெள்களுக்கெல்லாம் மனுஷன் மூளை வைத்து யோசிக்கமாட்டாங்க சாமீ.கிட்னியை வைத்துத்தான் யோசிப்பாய்ங்க.கிட்னியால் யோசிக்கறவர் இதோ இப்ப வந்துடுவார்,அதற்குள் நான் ஜூட்..

Vidhya Chandrasekaran said...

வெயில் கூட அதிகமில்லயே. அப்புறம் ஏன்??

அருண் பிரசாத் said...

இந்த மாதிரி டவுட் எனக்கும் இருக்கு - இந்த நடு செண்ட்ரு, மூளை Corner, இதெல்லாம் எப்படி வந்தது?

// விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //

இவ்வளவும் செய்றதுக்குள்ள விக்கல் தன்னால நின்னுடும்

dheva said...

Sollave illa...! athu neengathaana....!

avasiyamaana pathivu Boss!

Ahamed irshad said...

சரியான மொக்கை... இதுக்கு மொக்கையா பதில் சொல்ல மொக்கையா யோசிச்சிட்டு,மொக்கையா ரூம் போட்டுவிட்டு,மொக்கையாஆஆஆஆஆஆஆஆ.........

இமா க்றிஸ் said...

//என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம். //
தீர்த்தால்... இன்னொன்று தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம். ;)

பருப்பு (a) Phantom Mohan said...

ஆமாயில்ல!

ஆமாவா? இல்லையா? எனக்கே சந்தேகமா இருக்கு.

பருப்பு (a) Phantom Mohan said...

அப்புறம் தயிர் ல கடுகு நெறைய போட்டு அப்டியே கடிச்சு தின்னா, மூலம் சரியாப் போகும்!

பருப்பு (a) Phantom Mohan said...

அப்ப எண்ணெய எண்ணெயுடன் சேர்த்தா ஏன் வெடிக்கனும் ..யோசிக்க வேண்டிய கேள்வி..
///////////////////////////////////

வெண்ணை வெண்ணையுடன் சேர்த்து அடுப்புல வச்சா அதுவும் எண்ணெய் மாதிரி ஆகுதே ஏன்?

முதல்ல கடுகுக்கு கடுகுன்னும், எண்ணைக்கு எண்ணெய்ன்னும் பேரு வச்ச வெண்ணை யாரு?

Jey said...

தல நீ போற வேகத்துல போ தல, பின்னடி வந்து சேர்ந்துக்கிறோம்.

அன்புத்தோழன் said...

அய்யய்யோ!!!!!!!!!!!!! பதிவுல தான் மொக்கை தாங்கலனா, பின்நூட்டத்துளையுமா.....???? அவ்வ்வ்வ்.... ஏன் இந்த கொல வெறி...

Philosophy Prabhakaran said...

நீங்கள் எனக்கு கொடுத்த விருதினை பகிர்ந்திருக்கிறேன்... எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html

Btc Guider said...

சந்தேகம் பதிவர்க்கு கூடாது. அப்படின்னு புதுமொழி உருவாக்கனுமோ.

Riyas said...

NAAN VARALLA.. ESCAPE..

Riyas said...

WHY.. NOT PUBLISH YET TAMILISH ANY PROBLEM SAME PROBLEM ME ALSO.. ANY IDEA

GEETHA ACHAL said...

ஆஹா..கடுகுன் மேல் இவ்வளவு பாசமா.... இவ்வளவு இருக்கின்றது...

அன்புடன் நான் said...

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.... ஆராயக்கூடாது!

ஹேமா said...

ஜெய்....கடுகுன்னா எண்ணெயில வெடிக்கும்.அவ்ளோதான் அம்மா
சொல்லித் தந்திருக்காங்க.

//கடுகின் சுவை காரம்ன்னு சொன்னா அப்ப மிளகாயின் சுவை இனிப்பா ? ஏன் இந்த முரண்பாடு !! ஒரு சுவைன்னு சொன்னா அது ஒரு சுவை மட்டுமே வேறு பேச்சே கிடையாது. உதாரணம் இனிப்பு . அது சீனியில , வெல்லத்தில , கருப்பட்டியில செஞ்ச எந்த பொருளா இருந்தாலும் எத்தனை விதமா செஞ்சாலும் இனிப்பு சுவை ஒன்னுதான் . அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ? அய்யா சாமீ தாய்குலங்களே கொஞ்சம் சொல்லுங்க !!//

ஒரு நாள் லீவு கிடைக்கிறதை வச்சிக்கிட்டு இவ்ளோ யோசிச்சு அழிச்சாட்டியம் பண்றிங்களே !

அந்தப் படத்தில நீங்கதானே அழுவுறீங்க.
நாய்க்குட்டிகூடப் பாத்துச் சிரிக்குது !
படம் அழகு ஜெய்.

சசிகுமார் said...

//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்//

என்னங்க சாதாரணமா தண்ணி குடிச்சாலே விக்கல் நின்று விடும். இதுக்காக இவ்ளோ வேலையா. இதுல வேற உடனே நிக்கும்ன்னு வேற சொல்றிங்க. இத செய்யறதுக்கே 10 நிமிடம் ஆகுமே நண்பா

kavisiva said...

அண்ணா ரொம்ப நல்ல பதிவுங்ண்ணா... உருப்படியான சந்தேகம்ங்ண்ணா... தொடருங்ண்ணா.. எங்களை உட்டுடுங்ண்ணா... இதுக்கு சுறா படமே தேவலீங்ண்ணா

அடேய் யாருடா அங்க இந்த கொடுமையெல்லாம் கேக்க மாட்டீங்களாடா... அய்யோ இப்படி பொலம்ப வுட்டுட்டாய்ங்களே!

முத்து said...

எனக்கும் ஒரு சந்தேகம்
ஜெய்லானி அப்படினா என்ன?
யாரு வைச்ச பேரு?
எதுக்கு வைச்சாங்க?
உங்களுக்கு அந்த பேரு பிடிச்சு இருக்கா?
பிடிச்சு இருந்தால் ஏன் பிடிச்சு இருக்கு?
சந்தேகங்கள் தொடரும்.............................. ....................................

ஜெய் said...

இனிமே கடுகைப் பார்த்தாலே இந்த பதிவுதான் ஞாபகத்துக்கு வரும்...

நாடோடி said...

மொக்கையில் புகுந்து விளையாடி இருக்கீங்க‌ ஜெய்லானி... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ள்..

தூயவனின் அடிமை said...

நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே ,
பாவம் ஜெய்லானி வீட்டில் உள்ளவங்க.
பொறுமை கடலினும் பெரிது .
கவலை படாதிங்க, எல்லாரும் கண்ணை தொடைத்து கொள்ளுங்கள்.

சுசி said...

கடவுளே.. எங்கள காப்பாத்த யாருமே இல்லையாஆ..

Chitra said...

உங்கள் சந்தேகங்கள் தொடரட்டும்..... அப்போதான் இந்த மாதிரி நல்ல பதிவுகள் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்கும்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

காஞ்சி முரளி said...

பதிவில்...

கவிதை வடித்து பேர் வாங்குபவர்கள் உண்டு...

கட்டுரை எழுதி பாராட்டு பெறுவோர் உண்டு...

நற்சிந்தனை இட்டு சிறந்த பதிவர் பேர் பெறுவோர் உண்டு...

நல்ல பயனுள்ள (அனைவருக்கும்) செய்திகளை இட்டு பெயர் பெறுவோர் உண்டு...

சிரிக்காதீர்....

இதில் தாங்கள்...
எந்த வகையைச் சார்ந்தவர்....!
என்பது தங்களுக்கே தெரியும்....!

ஒவராஆஆஆஆஆஆஆ....! கண்ணக்கட்டுதே...!
ஜெய்லானி....!

ஆயிரம் இருந்தாலும்...
வைத்தியம்.... super....!

நட்புடன்...
காஞ்சி முரளி....

Menaga Sathia said...

ஐயோ ஏன் இந்த கடுகு மேல் கோபம்.....தாங்க முடியல்..மறுபடியும் சந்தேகம் வருமா??? என்னை விட்டுடுங்க இந்த பக்கம் தலை வைத்துகூட வரமாட்டேன்....ஹி..ஹி...

சிநேகிதன் அக்பர் said...

ஜெய்லானி கடுகு கண்ணுல பட்டுருச்சா...

நோ ஃபீலிங். நல்ல பொரிஞ்சிருக்கீங்க கடுகு மாதிரி... :)

ஆமா அந்த டிப்ஸ் உண்மையா!

vanathy said...

ஹையா!!! நம்ம ஜெய்க்கு சந்தேகம் வந்தாச்சு. யாராவது தீர்த்து வைங்கப்பா. அதிரா தான் சரியான நபர். அதீஸ் எங்கிருந்தாலும் வரவும்!!!! " சயன்டிஸ்ட் " ஜெய்லானியின் சந்தேகத்தை கேளுங்கோ????

Starjan (ஸ்டார்ஜன்) said...

தொடரட்டும் தொடரட்டும்..

Thenammai Lakshmanan said...

வெடிக்காட்டா கடுகுன்னு ஒத்துக்குவீங்கலா ஜெய்லானி அதுதான்..:))

அப்புறம் சூப்பர் கமெண்ட் போட்ட கருணாகரசு.. :))

சாமக்கோடங்கி said...

கடுகு வெடிப்பதற்கான அறிவியல் காரணம் எனக்குத் தெரியும் .. ஆனா இந்த இடத்துல நான் அதைச் சொன்னா கூடி இருந்து பின்னூட்டம் போடுறவங்க அனைவரும் என்ன கும்மி எடுத்துருவாங்க...

கும்முங்கோ, கும்முங்கோ...

athira said...

ஐயா சாமீ.... ஜெய்..லானி டாக்டரே.. சயன்ரிஸ்ட்டே..... வழக்கறிஞரே.... தத்துவ ஞானியே... இத்தனை பெரிய பட்டங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் உங்கள்ளுக்கு சந்தேகம் வரலாமோ? அதுவும் ஒரு இம்மாந்துண்டு கடுகுமேல:).... ஏன் உள்ளி, மிளகு, இஞ்சி, வெங்காயம், மிளகாய்.... இவையெல்லாம் உயிரோடிருக்க, பாவம் குட்டிக்குட்டி உருண்டையாய்... கறுப்பாய், தானும் தன்பாடுமாக இருக்கும் கடுகைப் போய்.... ஏன் காரமாயிருக்குது? ஏன் வெடிக்குது என்றெல்லாம் சந்தேகப்படலாமோ? இது ஞாயமோ???

athira said...

ஸாதிகா said...
நீங்க கேட்கிற கெள்களுக்கெல்லாம் மனுஷன் மூளை வைத்து யோசிக்கமாட்டாங்க சாமீ.கிட்னியை வைத்துத்தான் யோசிப்பாய்ங்க.கிட்னியால் யோசிக்கறவர் இதோ இப்ப வந்துடுவார்,அதற்குள் நான் ஜூட்../// ஸாதிகா அக்கா...ஓடாதீங்கோ... என் சந்தேகத்தையாவது தீர்த்துவிட்டுப்போங்கோஓஓஓஓஒ... கடுகு ஏன் உருண்டையாக இருக்கு உலகத்தைப்போல.... ஒருவேளை அதிலயும் ஜெய்..லானி மாதிரி ஆட்கள் இருக்கினமோ????.

vanathy said...அதிரா தான் சரியான நபர். அதீஸ் எங்கிருந்தாலும் வரவும்!!!! " சயன்டிஸ்ட் " ஜெய்லானியின் சந்தேகத்தை கேளுங்கோ????/// வாணீஈஈஈஈஈஈ , முதலில் என் 90 அ.கோ.முட்டைகளையும் தரச் சொல்லுங்கோவன்..... நான் கேட்காட்டில் எல்லோரும் மறந்தமாதிரி விட்டுவிடுவினம்போல இருக்கே...

athira said...

டிஸ்கி: கடைசியில ஒன்னு சொல்லிட்டு போறேன். என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம் ///

அம்மா வாங்கோ..ஐயா வாங்கோ, அண்ணா வாங்கோ, அக்கா வாங்கோ, தம்பி வாங்கோ..., தங்கச்சி..(மன்னிக்கவும் இங்கு தங்கை நான் மட்டும்..தேன்).... எல்லோருக்கும் போற வழியில புண்ணியம் கிடைக்கும்... கொஞ்சம் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒ... தொல்லை தாங்க முடியேல்லை... நான் கொசுவைச் சொன்னேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட... என்னங்க, சின்னப்பிள்ள மாதிரி
இப்படி சந்தேகம்லாம் கேட்டுக்கிட்டு,
இதெல்லாம் நல்லாயில்லையே.

(எனக்கும்தான் தெரியாது; ஆனா
நான் இந்தமாதிரி இடுகையா
போட்டேன்?)

Unknown said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.
உங்கள் பதிவும் கடுகைவிட காரமாகத்தான் இருக்கிறது.
அடுத்த சந்தேகம் எப்பம் வரும் ஜெய்லானி.
தொடரட்டும்........

எம் அப்துல் காதர் said...

//ஏன் அந்த காலத்தில கடுகு என்ன வெங்காயம் சைசிலா இருந்துச்சி. உறிச்சி உறிச்சி சிறுத்து போக..அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.//

இது ஒரு நல்ல கேள்வி தல. நீங்க படிக்கிற காலத்திலேயே இது மாதிரி அடிக்கடி வர்ற(உங்க சந்தேகத்தை) தீர்த்து வைக்காத வாத்திமார்களை (அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்) விட்டா போதும்னு சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினாங்க பாருங்க ...அவங்களை...

(((இருங்க கதவை திறந்து வச்சுட்டு வர்றேன்))))

எம் அப்துல் காதர் said...

// கடுகின் சுவை காரம்ன்னு சொன்னா அப்ப மிளகாயின் சுவை இனிப்பா?//

நேத்து வீட்ல ஏதும் கோபமா பாஸ். சட்னி செய்து எடுத்தாரதுக்கு முந்தி மிளகாய ஏதும் கடிச்சிடீங்களா தல. விடுங்க லூஸ்ல. நோ டென்சன் நோ bp நமக்கு இதெல்லாம் சகஜம் தானே. நான் யார் கிட்டயும் சொல்லிக்க மாட்டேன். சரியா..

(((இருங்க சூவை கையில எடுத்துக்கிறேன் - வேணாம் கையிலேயே எடுத்துக்கிறேன்)))

எம் அப்துல் காதர் said...

//அப்ப எண்ணெய எண்ணெயுடன் சேர்த்தா ஏன் வெடிக்கனும்//

நல்லா அடிச்சி விளையாடுங்க பாஸ். எங்க தலைல தான். அது இருந்த தானே இந்த சந்தேக தொல்லைலாம்.

(((ரோட்ல அங்கே இங்கே திரும்பி பார்க்கம ஓட்றேங்க)))

எம் அப்துல் காதர் said...

///வைத்தியம்: என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ///

வாஸ்தவம் தாங்க. நாங்க உயிரோட இருந்தா தானே. இப்படி தலைல அடிச்சு விளையாடினா உயிர் என்னா..சுத்தமா முடிகூட..

((((இன்னுமா....ஐயையோ.... என்னை காப்பாத்த யாருமே இல்லையாஆஆஆஆ )))))

athira said...

அவோட்டை அயகா இணைத்தமைக்கு நன்றி கதாசிரியர் ஜெய்..லானி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.//
உங்க கேள்வி எல்லாம் கேட்டு தான் அப்படி ஆய்டுச்சுன்னு எனக்கு தோணுது...

//அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ?//
எப்படிங்க இப்படி எல்லாம்? தாளிச்சுகிட்டே யோசிப்பீங்களோ.....

//மத்த ஐட்டங்கள் சும்மா இருக்கும் போது இதுக்கு ஏன் இந்த கொலவெறி.//
இப்படி எல்லாம் கேள்வி கேட்டு எங்களுக்கு ஏன் இப்ப கொலைவெறி ஏத்தரீங்கன்னு மட்டும் சொல்லுங்க... அப்புறம் நான் சொல்றேன்....

//. பேசாம அதை பொடிச்சி பவுடராக்கி போட்டா என்ன//
போடாமையே விட்டாதான் என்ன? எங்களை உடுங்க சாமி.....

//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்//
அது சரி... ஆன இந்த சந்தேகத்த எல்லாம் படிச்சா விக்கல் இல்ல எல்லாமே நின்னுரும் போல இருக்கே...

//சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம் //
வேண்டாங்க...நான் வேணா இட்லி செய்யறதையே விட்டுடறேன்....

ஷார்ஜால வெள்ளிகிழமை கூட வேலை வெக்கணும்னு உத்தரவு போடுங்கப்பா...........

பனித்துளி சங்கர் said...

வைத்தியத்தகவல்கள் அருமை .

அப்பறம் அந்த பாப்பா எதற்கு அழுவுது அழாமல் இருக்க சொல்லுங்க

athira said...

ஜெய்..லானி, அந்தக்குட்டி...., பப்பியைப் பார்த்தால் மட்டும்தான் அழுவாரோ? பூஸுக்கெல்லாம் அழமாட்டாரோ?:).

மசக்கவுண்டன் said...

அதெப்படீங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சந்தேகங்களா வந்துட்டிருக்கு. எதுக்கும் தினம் ஒரு எலுமிச்சம்பழத்தை ரண்டா அறுத்து, அந்த சாறு தலைல இறங்கற மாதிரி சூடு பறக்க தேய்ச்சு, ஒரு மணி நேரம் களிச்சு, ஒரு மண்டலம் (48 நாள்) குளிச்சுப்பாருங்க. சந்தேகமெல்லாம் ஓடியே போயிடுமுங்க.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி-// 1-st //

வாங்க பாஸ்,!! ஐந்நூறு குரங்கு வேனுமே அனுப்ப முடியுமா ?...ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@LK--//ஆரம்ப கால கர்பிணி பெண்கள் கடுகு பொருட்களை சேர்காமல் இருப்பது நல்லது //

appadiyaa //

ஆமாங்க , உண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//கடுகு மாதிரி இருந்துட்டு இந்த பையன் தொல்லை தாங்கலியே //

ஆமாங்க ரமேஷ் நீங்க சத்தியமா என்னை சொல்லலியே .கடுகைதனே சொன்னீங்க..ஹி..ஹி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//இந்த ஆட்டத்துக்கு நான் வரலே..ஆமா..கடுகு..மிளகாய் அப்படீனா என்னா சார்?...//

நல்ல கேள்வி !! இருங்க அதுக்கும் ஒரு பதிவு போட்டுடலாம்

//காரம்னா என்னா சார்?..
இனிப்புனா என்னா சார்?.. //

ஒரு தொடர் எழுதும் அளவுக்கு கேள்வி இது எப்படி இதை நா சிம்பிளா சொல்ல முடியும்..!!

//(முள்ளை..முள்ளால் எடுக்கவேண்டும். .ஹி..ஹி) //

நீங்க எந்த முள்ளை சொல்றீங்க பாஸ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஆரம்பிச்சாச்சா? அப்புறமா வர்ரேன்.//

பாத்ததும் எஸ்ஸ்ஸா ஆ
//ஏன் சார்?கடுகு வெடிக்குங்களா?எப்பூடி டமார்ன்னா?டுமீர்ன்னா?அந்த சப்தத்தை கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்.நாங்களும் கேட்டுக்கறோம்.//

குட் கொஸ்டின் .இதுக்கு ஒரு பதிவு தனியா போட்டுடறேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@யாசவி--//படிச்சப்புறம் கடு(கு) கடு(கு)ன்னு இருக்கு.//

பாத்தீங்க்களா உங்களுக்கே இப்படி இருக்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும் .

//நல்ல மரண மொக்கை. நடத்துங்க :) //

வாழ்த்துக்கு வந்தனம். இது மாதிரி அப்ப அப்ப போட்டாதான் பதிவுலகில் சீரியஸ் இருக்காது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//கடைசியா மூன்று வைத்திய குறிப்பு திருஷ்டி பரிகாரத்திற்கா? //

க க க போ ( கருத்தை கச்சிதமா கவ்விகொண்டீர் போங்கள் )
//நீங்க கேட்கிற கெள்களுக்கெல்லாம் மனுஷன் மூளை வைத்து யோசிக்கமாட்டாங்க சாமீ.
கிட்னியை வைத்துத்தான் யோசிப்பாய்ங்க.கிட்னியால் யோசிக்கறவர் இதோ இப்ப வந்துடுவார்,அதற்குள் நான் ஜூட்.//

ஆஹா !! திரியை கொளுத்திட்டீங்களே !! எப்படி வெடிக்க போகுதோ ?!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@வித்யா--//வெயில் கூட அதிகமில்லயே. அப்புறம் ஏன்?? //
என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க !! காலையில எட்டு மணிக்கே 102 டிகிரி வெயில் அடிக்குது இங்கே!! சைடுல விட்ஜட் இருக்கே பாக்கலயா ? . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@அருண் பிரசாத்--//இந்த மாதிரி டவுட் எனக்கும் இருக்கு -//

நீ என் இனமப்பா !!

//இந்த நடு செண்ட்ரு, மூளை Corner, இதெல்லாம் எப்படி வந்தது? //

தல !!என்னுடைய கோழி முட்டை பதிவை நீங்க பாக்கலைன்னு நெனைக்கிறேன்...பாத்திருந்தா இந்த கேள்வி வந்திருக்காது ஹி..ஹி..

// விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //

இவ்வளவும் செய்றதுக்குள்ள விக்கல் தன்னால நின்னுடும் //

இது வறட்டு விக்கல் . சிலருக்கு தொடர்ந்து நாள் முழுக்க இருக்கும் . உள் நாக்கு மேல ஒட்டிக்கொண்டு வரும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@dheva--//Sollave illa...! athu neengathaana....! //

ஆமாப்பா ஆமாம் ஹி..ஹி.. அவ்வ்வ்வ்வ்வ்

//avasiyamaana pathivu Boss! //

சந்தேகம்ன்னு போட்டதும் படிக்காம எஸ்ஸ்ஸ் ஆன மாதிரி தெரியுது பாஸ்..ரொம்ப உஷார்தான் போங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--//சரியான மொக்கை... இதுக்கு மொக்கையா பதில் சொல்ல மொக்கையா யோசிச்சிட்டு,மொக்கையா ரூம் போட்டுவிட்டு, மொக்கையாஆஆஆஆஆஆஆஆ........ //

வாங்க !! எப்படி வந்தாலும் பதில் மட்டும் சொல்லிடுங்க பிளீஸ்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@இமா--//என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம். //
தீர்த்தால்... இன்னொன்று தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம். ;) //


புத்திசாலி நீங்கன்னு நிருபிச்சிட்டீங்க..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

மின்மினி RS said...

ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத்தேய தேடி வந்தேன். கடுகுதான் இருக்கு. எவ்வளவு பெரிய சந்தேகம்.. :))

ஜெய்லானி said...

@@@Phantom Mohan--//ஆமாயில்ல!
ஆமாவா? இல்லையா?
எனக்கே சந்தேகமா இருக்கு.//

வாத்யாரே!! எப்பவும் முதல்ல நாம கொழம்பி அப்புறம் மத்தவங்களையும் நல்லா கொழப்பினாதான் பதில் சரியா கிடைக்கும்..ம்...ஸ்டாட் மியூஸிக்

// அப்புறம் தயிர் ல கடுகு நெறைய போட்டு அப்டியே கடிச்சு தின்னா, மூலம் சரியாப் போகும்!//


ஓரே இடத்துல ஆணி அடிச்ச மாதிரி உட்காந்து இருந்தா மூலமும் வரும் கடைசியும் வரும்

//வெண்ணை வெண்ணையுடன் சேர்த்து அடுப்புல வச்சா அதுவும் எண்ணெய் மாதிரி ஆகுதே ஏன்?

//முதல்ல கடுகுக்கு கடுகுன்னும், எண்ணைக்கு எண்ணெய்ன்னும் பேரு வச்ச வெண்ணை யாரு? //

யோவ் வெண்ணெய் அதை உன் பிளாக்கில கேளு.ந அங்க வந்து பதில தரேன் ஹி..ஹி...
என் சந்தேகம் தீராம உன் சந்தேகத்தை அவ்வளவு சீக்கிரம் தீர்த்திடுவேனா என்ன ? !! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Jey--//தல நீ போற வேகத்துல போ தல, பின்னடி வந்து சேர்ந்துக்கிறோம். //

ஹா..ஹா....சிரிச்சி வயிறு வலிக்குது...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன்--//அய்யய்யோ!!!!!!!!!!!!! பதிவுல தான் மொக்கை தாங்கலனா, பின்நூட்டத்துளையுமா.....???? அவ்வ்வ்வ்.... ஏன் இந்த கொல வெறி...//

ஓடாடதீங்க அன்பு..!! டேக் இட் ஈஸி.. இதுக்கே இப்பின்னா அப்ப மீதிக்கு என்ன செய்வீங்க..ஹி...ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--//நீங்கள் எனக்கு கொடுத்த விருதினை பகிர்ந்திருக்கிறேன்... எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/06/blog-post.html //

பார்த்தேன் பிரபா !!நீங்க சொன்ன முறை ரொம்ப வித்தியாசமா இருந்துச்சி..வாழ்த்துக்கள் இன்னும் நிறைய விருது வாங்க..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ரஹ்மான்--//சந்தேகம் பதிவர்க்கு கூடாது. அப்படின்னு புதுமொழி உருவாக்கனுமோ.//

உங்களுக்கும் எதுவும் சந்தேகம் இருக்கா ..!!
(( வெறும் ரஹ்மான் என்று போடாதீங்க . அது சரியில்லை :-).....))

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Riyas--//NAAN VARALLA.. ESCAPE..//

என்ன ரியாஸ் இதுக்கே இப்பிடின்னா ..ஹி..ஹி..

//WHY.. NOT PUBLISH YET TAMILISH ANY PROBLEM SAME PROBLEM ME ALSO.. ANY IDEA //

எடிசலாட் சர்வர் பிராப்ளம் ...சில சமயம் அந்த பிளாக்க அடல்ஸ் ஒன்லின்னு சொல்லிவிடுவதால் வரும் குழப்பம்..சரியாகும்ன்னு நினைக்கிறேன். இல்லாட்டி வேற யோசிக்கலாம் கிரிமினலா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//ஆஹா..கடுகுன் மேல் இவ்வளவு பாசமா.... இவ்வளவு இருக்கின்றது...//

வாங்க!!! எனக்கு எல்லாத்துக்கும் மேல ஆசை , பாசம் நிறைய இருக்கு .. உங்க சந்தேகத்தையும் தீத்துடலாம் அடுத்த பதிவுல...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//பழமொழி சொன்னா அனுபவிக்கனும்.... ஆராயக்கூடாது! //

ஆஹா... என் சந்தேக லிஸ்டில் இதுவும் இருக்கே ..!! நீங்க எப்ப சார் பாத்தீங்க என் பேப்பரை...

(( ஜெய்லானீஈஈஈ கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகி போச்சி கேள்விய மாத்தூஊஊஊஊ )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்....கடுகுன்னா எண்ணெயில வெடிக்கும்.அவ்ளோதான் அம்மா
சொல்லித் தந்திருக்காங்க.//

வாங்க குழந்தை நிலா .ப்ச்..என்ன அப்பாவியா இருக்கீங்களே..!!


//ஒரு நாள் லீவு கிடைக்கிறதை வச்சிக்கிட்டு இவ்ளோ யோசிச்சு அழிச்சாட்டியம் பண்றிங்களே ! //

ரெண்டு நாளுங்க..ரெண்டு பதிவா போட்டா தாங்காது. அதனால் கொஞ்சமா கடிக்கிறது.ஹி..ஹி..

//அந்தப் படத்தில நீங்கதானே அழுவுறீங்க.
நாய்க்குட்டிகூடப் பாத்துச் சிரிக்குது !
படம் அழகு ஜெய்.//

நெட்டில சுட்டது..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

கமலேஷ் said...

எப்படி இப்படி பட்ட சந்தேகம் எல்லாம் வருது....

ரூம் போட்டு யோசிப்பீங்களா இதை எல்லாம்....

என் வீட்ல இந்த சந்தேகத்தை கேட்டா இனிமே சமைக்கும் பொது எதுக்கும் கடுகு போடவே மாட்டாங்கன்னு நினைச்சேன்...

ஆனா உங்களால எனக்கு வீட்ல இப்ப சோறே போடா மாட்டேன்குறாங்க...

Geetha6 said...

இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு? போனா போகுதுன்னு ஓட்டு போட்டிருக்கேன் ! ம்...

மங்குனி அமைச்சர் said...

அது ஒன்னும் இல்லை ஜெய்லானி வாரா வாரம் சனிக்கிழமை தளிக்கு என்னை தேய்த்து குளிச்சா எல்லாம் சரியாபோகும்

மங்குனி அமைச்சர் said...

யாசவி said...

படிச்சப்புறம் கடு(கு) கடு(கு)ன்னு இருக்கு.

நல்ல மரண மொக்கை. நடத்துங்க :)
///


கொஞ்சம் விளகெண்ணை குடிங்க சரியா போகும்

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

நீங்க கேட்கிற கெள்களுக்கெல்லாம் மனுஷன் மூளை வைத்து யோசிக்கமாட்டாங்க சாமீ.கிட்னியை வைத்துத்தான் யோசிப்பாய்ங்க.கிட்னியால் யோசிக்கறவர் இதோ இப்ப வந்துடுவார்,அதற்குள் நான் ஜூட்..
///


மேடத்துக்கு ஒரு கிட்னி பிரை பார்சல்

மங்குனி அமைச்சர் said...

மின்மினி said...

ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத்தேய தேடி வந்தேன். கடுகுதான் இருக்கு. எவ்வளவு பெரிய சந்தேகம்.. :))
///


கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்

வேலன். said...

ஆமா....ஏன் தமிலிஷ்ஷில் சப்மிட் பண்ணவில்லை..?
வெயில் அதிகமோ?
வாழ்க வளமுடன்,
வேலன்.

Mahi said...

ஹஹ்..ஹா! சூப்பர் டவுட்டு ஜெய் அண்ணா! இந்த கடுகு இருக்கே,தாளிக்கும்போது பட்டுப்பட்டுன்னு தெறிச்சு, கை,முகமெல்லாம் காயப்படுத்தும்..சரியான வில்லத்தனமான பொருள்.
அதை நீங்க ரொம்ப நல்லா தாளிச்சுட்டீங்க.சந்தோஷமா இருக்கு!ஹிஹி!

எப்படியும் யாரும் உங்க சந்தேகத்தை தீர்க்கப் போறதில்லை,அடுத்த சந்தேகம் தயாராயிடுச்சுங்களா?? :)

Madumitha said...

கடுகு புராணம் நல்லாருக்கு.

மின்மினி RS said...

//மங்குனி அமைச்சர் said...

மின்மினி said...

ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத்தேய தேடி வந்தேன். கடுகுதான் இருக்கு. எவ்வளவு பெரிய சந்தேகம்.. :))
///


கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்.///

மங்குனியாரே எங்க அண்ணாத்தய வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆத்தா.. இப்பத்தான் ரெண்டாவது சந்தேகம் வந்திருக்கா? எங்க போயி முடியப் போவுதோ..

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//என்னங்க சாதாரணமா தண்ணி குடிச்சாலே விக்கல் நின்று விடும். இதுக்காக இவ்ளோ வேலையா. இதுல வேற உடனே நிக்கும்ன்னு வேற சொல்றிங்க. இத செய்யறதுக்கே 10 நிமிடம் ஆகுமே நண்பா //

இது வறட்டு விக்கல் நண்பா!! சிலருக்கு வந்தா ஈஸியா போகாது . நாள் பூராவும் இருக்கும் . அதுக்கு தான் இது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@kavisiva--//அண்ணா ரொம்ப நல்ல பதிவுங்ண்ணா... உருப்படியான சந்தேகம்ங்ண்ணா... தொடருங்ண்ணா.. எங்களை உட்டுடுங்ண்ணா... இதுக்கு சுறா படமே தேவலீங்ண்ணா //

வாங்க கவி..!! நீங்க சுறா படமெல்லாம் பாத்திருக்கிறீங்களா.. அப்ப சரி...

//அடேய் யாருடா அங்க இந்த கொடுமையெல்லாம் கேக்க மாட்டீங்களாடா... அய்யோ இப்படி பொலம்ப வுட்டுட்டாய்ங்களே! //

எல்லாருமே எஸ்ஸ்ஸ் ஆகிடாங்க . ஆமா நீங்க இப்ப யாருகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@முத்து--// எனக்கும் ஒரு சந்தேகம்
ஜெய்லானி அப்படினா என்ன?
யாரு வைச்ச பேரு?
எதுக்கு வைச்சாங்க?
உங்களுக்கு அந்த பேரு பிடிச்சு இருக்கா?
பிடிச்சு இருந்தால் ஏன் பிடிச்சு இருக்கு?
சந்தேகங்கள் தொடரும்.... //

நல்ல சந்தேகந்தான் . இது தொடர் பதிவு வரும் போது வரும். ய்ப்பா இத்தனை சந்தேகமா ஒரே நேரத்தில கேப்ப ..!!!ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஜெய்--//இனிமே கடுகைப் பார்த்தாலே இந்த பதிவுதான் ஞாபகத்துக்கு வரும்...//

இன்னும் லிஸ்டில நிறைய இருக்கு .. இப்ப்வே ஓடிடாதீங்க. நினைக்க நிறைய இருக்கு...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@நாடோடி--//மொக்கையில் புகுந்து விளையாடி இருக்கீங்க‌ ஜெய்லானி... தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ள்..//

வாங்க ஸ்டீபன் !!வாழ்த்துக்கு நன்றி. இனி தெம்பா கேப்போமில்ல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே ,//

ஓ.. அப்படியாஆஆஆஆஆஆ...!!!

//பாவம் ஜெய்லானி வீட்டில் உள்ளவங்க.பொறுமை கடலினும் பெரிது .கவலை படாதிங்க, எல்லாரும் கண்ணை தொடைத்து கொள்ளுங்கள்.//

அங்க பூரி கட்டை அடி தாங்காமதான் இப்ப உங்க கிட்ட கேக்கிரேன் தல கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@சுசி--//கடவுளே.. எங்கள காப்பாத்த யாருமே இல்லையாஆ..//

ஹி..ஹி..அப்படியே எனக்காகவும் வேண்டிகுங்க.. இந்த மாதிரி சந்தேகம் எதுவும் வராம இருக்க... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Chitra--// உங்கள் சந்தேகங்கள் தொடரட்டும்..... அப்போதான் இந்த மாதிரி நல்ல பதிவுகள் தொடர்ந்து எங்களுக்கு கிடைக்கும்..... ஹா,ஹா, ஹா,ஹா, ஹா.... //

வாங்க டீச்சர்.. ஆமா ? ஏன் அடிக்கடி போட்டோவை மாத்திகிட்டே இருக்கீங்க . யக்கா இது சந்தேக மில்ல ..சந்தேகமில்ல.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//பதிவில்...

கவிதை வடித்து பேர் வாங்குபவர்கள் உண்டு...

கட்டுரை எழுதி பாராட்டு பெறுவோர் உண்டு...

நற்சிந்தனை இட்டு சிறந்த பதிவர் பேர் பெறுவோர் உண்டு...

நல்ல பயனுள்ள (அனைவருக்கும்) செய்திகளை இட்டு பெயர் பெறுவோர் உண்டு...//

ஓக்கே...இன்னும்..இன்னும்...

//சிரிக்காதீர்.... //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//இதில் தாங்கள்...
எந்த வகையைச் சார்ந்தவர்....!
என்பது தங்களுக்கே தெரியும்....! //

பிரபோ!!! அரசே !! அதில் உமக்கும் சந்தேகமா..?

//ஒவராஆஆஆஆஆஆஆ....! கண்ணக்கட்டுதே.. .! ஜெய்லானி....! //

கடுகுக்கு பதில் இதுவல்லவே அமைச்சரே..!!

///ஆயிரம் இருந்தாலும்...வைத்தியம்.... super....! நட்புடன்... காஞ்சி முரளி.... //

ஆயிரம் கேள்வி சந்தேகம் கேட்க சொன்ன நண்பர் முரளி வாழ்க...வாழ்க...!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//ஐயோ ஏன் இந்த கடுகு மேல் கோபம்.....தாங்க முடியல்..மறுபடியும் சந்தேகம் வருமா??? என்னை விட்டுடுங்க இந்த பக்கம் தலை வைத்துகூட வரமாட்டேன்....ஹி..ஹி...//

என்னங்க நீங்க .ஒரு சின்ன சந்தேகத்துக்கே இப்பிடி எஸ் ஆகுறீங்க.. வாழ்கையில இதெலாம் சகஜமப்பா!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@அக்பர்--//ஜெய்லானி கடுகு கண்ணுல பட்டுருச்சா...
நோ ஃபீலிங். நல்ல பொரிஞ்சிருக்கீங்க கடுகு மாதிரி... :) //

நாவெல்லாம் கிச்சனுகுள்ள போனா முழு சேஃப்டியோடதான் போவேன் தெரியுமா அக்பர்.. இது என்ன சின்னபுள்ள தனமா கேள்வி.. ஆள் அடையாளமே தெரியாது..ஹி..ஹி..

//ஆமா அந்த டிப்ஸ் உண்மையா! //

ஆமா பாஸ் !! அதான் வைத்தியமுன்னு போட்டிருக்கேன்... எதில விளையாடினாலும் வைத்தியத்தில விளையாடக்கூடாது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@vanathy--//ஹையா!!! நம்ம ஜெய்க்கு சந்தேகம் வந்தாச்சு. யாராவது தீர்த்து வைங்கப்பா. அதிரா தான் சரியான நபர். //

ஆஹா.. வில்லங்கம் கூரியர்ல வருதே ..!!!

//அதீஸ் எங்கிருந்தாலும் வரவும்!!!! " சயன்டிஸ்ட் " ஜெய்லானியின் சந்தேகத்தை கேளுங்கோ???? //

கிட்னியால யோசிப்பவரை ரெண்டு பேர் கூப்பிட்டுட்டாங்களே.. ஜெய்லானீஈஈஈ உஷாரா ஆகிக்கோ..!!ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

r.v.saravanan said...

ஒரு சந்தேகத்துக்கு பதில் கிடைக்கலைன்னு இப்படியா

எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பீங்களா

அஷீதா said...

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ முடியலங்க. சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது. கலக்கல் :)))

இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் கூட சூப்பர் :))

ஜெய்லானி said...

Starjan ( ஸ்டார்ஜன் )--//தொடரட்டும் தொடரட்டும்..//

வாங்க ஷேக்!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//வெடிக்காட்டா கடுகுன்னு ஒத்துக்குவீங்கலா ஜெய்லானி அதுதான்..:)) //

என்னங்க நீங்க அதையே திருப்பியும் கேக்குறீங்களே.. இது நியாயமா ?...!!

//அப்புறம் சூப்பர் கமெண்ட் போட்ட கருணாகரசு.. :)) /

நிசந்தாங்க!! என்னமா புள்ள பயந்திருக்கு.. ஹி.. ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//கடுகு வெடிப்பதற்கான அறிவியல் காரணம் எனக்குத் தெரியும் .. ஆனா இந்த இடத்துல நான் அதைச் சொன்னா கூடி இருந்து பின்னூட்டம் போடுறவங்க அனைவரும் என்ன கும்மி எடுத்துருவாங்க...

கும்முங்கோ, கும்முங்கோ...//

ஹா..ஹா...அறிவியலா அப்படின்னா..? !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@athira--//ஐயா சாமீ.... ஜெய்..லானி டாக்டரே.. சயன்ரிஸ்ட்டே..... வழக்கறிஞரே.... தத்துவ ஞானியே... இத்தனை பெரிய பட்டங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் உங்கள்ளுக்கு சந்தேகம் வரலாமோ?//

என்னவோ வந்து போச்சுங்க பேபி அதிராஆஆஆ

//அதுவும் ஒரு இம்மாந்துண்டு கடுகுமேல:).... ஏன் உள்ளி, மிளகு, இஞ்சி, வெங்காயம், மிளகாய்.... இவையெல்லாம் உயிரோடிருக்க, //

அதுவும் அப்புரமா வரும்ம்ம்ம்ம்ம்ம்ம். இப்ப் ஐதுக்கு பதில் சொல்லுங்க.ஹி..ஹி..

//பாவம் குட்டிக்குட்டி உருண்டையாய்... கறுப்பாய், தானும் தன்பாடுமாக இருக்கும் கடுகைப் போய்....//

அப்ப ஏன் அதை பிடிச்சு என்னெயில போடுறீங்க பாவம் விட்டுட வேண்டியதுதானே ..!!

//ஏன் காரமாயிருக்குது? ஏன் வெடிக்குது என்றெல்லாம் சந்தேகப்படலாமோ? இது ஞாயமோ???//

கேள்வி கேக்குரது தப்பா..இல்ல கேள்வி கேக்குறது தப்பான்னு கேக்குறேன் ( வடிவேல் மாதிரி படிக்கவும் )

// ஸாதிகா அக்கா...ஓடாதீங்கோ... என் சந்தேகத்தையாவது தீர்த்துவிட்டுப் போங்கோஓஓஓஓஒ... //


அவங்க தான் எஸ் ஆயிட்டாங்க , நீங்க வாங்க

/கடுகு ஏன் உருண்டையாக இருக்கு உலகத்தைப்போல.... ஒருவேளை அதிலயும் ஜெய்..லானி மாதிரி ஆட்கள் இருக்கினமோ????.//

அநியயம் , அக்கிரமம் . கேள்வியை நாந்தான் கேக்கோனம் நீங்க கேக்ககூடாது .. அவ்வ்வ்வ்வ்வ்வ்

//வாணீஈஈஈஈஈஈ , முதலில் என் 90 அ.கோ. முட்டைகளையும் தரச் சொல்லுங்கோவன்..... நான் கேட்காட்டில் எல்லோரும் மறந்தமாதிரி விட்டுவிடுவினம்போல இருக்கே...//

கோழி கிட்ட சொன்னேன் அது 120 நாள் கேக்குது . ஏன்னு தெரியல லீவுல போய் இருக்கு வந்ததும் அனுப்புறேன்

//அம்மா வாங்கோ..ஐயா வாங்கோ, அண்ணா வாங்கோ, அக்கா வாங்கோ, தம்பி வாங்கோ..., தங்கச்சி..(மன்னிக்கவும் இங்கு தங்கை நான் மட்டும்..தேன்).... எல்லோருக்கும் போற வழியில புண்ணியம் கிடைக்கும்... கொஞ்சம் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கோஓஓ ஓஓஓஓஓஓஓஓஒ... தொல்லை தாங்க முடியேல்லை... நான் கொசுவைச் சொன்னேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //

அப்ப நீங்களும் எஸ்கேப்பாஆஆஆஆ . கொசுவை இன்னும் மறக்கலையா க்கி..க்கி.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//அட... என்னங்க, சின்னப்பிள்ள மாதிரி இப்படி சந்தேகம்லாம் கேட்டுக்கிட்டு, இதெல்லாம் நல்லாயில்லையே.//

ஆமாங்க ஆமாம்..சரி சொல்லுங்க ..

//(எனக்கும்தான் தெரியாது; ஆனா நான் இந்த மாதிரி இடுகையா போட்டேன்?) //

அதுசரி அப்ப நீங்க என் கட்சிதான் ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டு கேப்போம் ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@abul bazar/அபுல் பசர்--//கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். //

வாங்க அபுல்.!! மேல படிக்கலையா இதே கேள்விதான் மேல கேட்டது..!!

//உங்கள் பதிவும் கடுகைவிட காரமாகத்தான் இருக்கிறது. அடுத்த சந்தேகம் எப்பம் வரும் ஜெய்லானி. தொடரட்டும்........//

ஆஹா..அப்ப சீக்கிரமாவே கேட்டுட வேண்டியதுதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஏன் அந்த காலத்தில கடுகு என்ன வெங்காயம் சைசிலா இருந்துச்சி. உறிச்சி உறிச்சி சிறுத்து போக..அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.//

இது ஒரு நல்ல கேள்வி தல. நீங்க படிக்கிற காலத்திலேயே இது மாதிரி அடிக்கடி வர்ற(உங்க சந்தேகத்தை) தீர்த்து வைக்காத வாத்திமார்களை (அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்) விட்டா போதும்னு சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினாங்க பாருங்க ...அவங்களை...//

குட் கொஸ்டின் ...உங்களமாதிரி வாத்தியார் வந்திருந்தா இந்தமாதிரியெல்லாம் நான் கேள்வி கேக்க வந்திருக்குமா என்ன !!அப்துல்..

//(((இருங்க கதவை திறந்து வச்சுட்டு வர்றேன்))))//

அட நீங்களும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்பாஆஆஆ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--// நேத்து வீட்ல ஏதும் கோபமா பாஸ். சட்னி செய்து எடுத்தாரதுக்கு முந்தி மிளகாய ஏதும் கடிச்சிடீங்களா தல. விடுங்க லூஸ்ல. நோ டென்சன் நோ bp நமக்கு இதெல்லாம் சகஜம் தானே. நான் யார் கிட்டயும் சொல்லிக்க மாட்டேன். சரியா.. //

பாஸ் மிளகாய் பொடி இல்லாம இட்லி , தேசை இறங்காது பாஸ் எனக்கு.. ஆனா இந்த கடுகு இருக்கே.......

//(((இருங்க சூவை கையில எடுத்துக்கிறேன் - வேணாம் கையிலேயே எடுத்துக்கிறேன்)))//

நீங்க சூ வெல்லாம் போடுவீங்களாஆஆஆஆ

//நல்லா அடிச்சி விளையாடுங்க பாஸ். எங்க தலைல தான். அது இருந்த தானே இந்த சந்தேக தொல்லைலாம்.//

ஹி..ஹி..க.க.க.போ.

//(((ரோட்ல அங்கே இங்கே திரும்பி பார்க்கம ஓட்றேங்க))) //

இருங்க ..இருங்க...நானும் வறேன்ன்ன்ன்ன்ன்...


// என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.. ///

வாஸ்தவம் தாங்க. நாங்க உயிரோட இருந்தா தானே. இப்படி தலைல அடிச்சு விளையாடினா உயிர் என்னா..சுத்தமா முடிகூட.. //

அச்சோ...ஒன்னு ரெண்டு சந்தேகத்துக்கே இந்த கதியா...

((((இன்னுமா....ஐயையோ.... என்னை காப்பாத்த யாருமே இல்லையாஆஆஆஆ )))))

இருங்க வேற கேள்வியோட வறேன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//அவோட்டை அயகா இணைத்தமைக்கு நன்றி கதாசிரியர் ஜெய்..லானி. //

இருங்க கொஞ்சம் ஆணி இருக்கு முடிஞ்சதும் அடுத்தது கதை எழுத வேண்டியதுதான். அவார்ட்டுக்கு நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--//அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.//
உங்க கேள்வி எல்லாம் கேட்டு தான் அப்படி ஆய்டுச்சுன்னு எனக்கு தோணுது...//

அப்ப அது பெரிசாதான் இருந்துச்சா..அடப்பாவமே எனக்குதான் கண்ணு தெரியல போலிருக்கு.

//அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ?//
எப்படிங்க இப்படி எல்லாம்? தாளிச்சுகிட்டே யோசிப்பீங்களோ.....//

ஹி..ஹி..

//மத்த ஐட்டங்கள் சும்மா இருக்கும் போது இதுக்கு ஏன் இந்த கொலவெறி.//
இப்படி எல்லாம் கேள்வி கேட்டு எங்களுக்கு ஏன் இப்ப கொலைவெறி ஏத்தரீங்கன்னு மட்டும் சொல்லுங்க... அப்புறம் நான் சொல்றேன்....//

எல்லாம் ஒரு சந்தேகந்தான் இட்லி மாமி..

//. பேசாம அதை பொடிச்சி பவுடராக்கி போட்டா என்ன//
போடாமையே விட்டாதான் என்ன? எங்களை உடுங்க சாமி.....//

அவ்வ்வ்வ்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்//
அது சரி... ஆன இந்த சந்தேகத்த எல்லாம் படிச்சா விக்கல் இல்ல எல்லாமே நின்னுரும் போல இருக்கே... //

இதுவும் நல்ல ஐடியாவாதான் இருக்கே..!!

//சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம் //
வேண்டாங்க...நான் வேணா இட்லி செய்யறதையே விட்டுடறேன்.... //

வேர்ட் ஃபேமஸ் இட்லியை இப்பிடி திடீர்ன்னு நிறுத்தினா அப்புறம் கிரைண்டர் கோவிச்சுக்கும் . என்னை மாதிரி ஒரு கல்லு குறையுதேன்னு ஹி..ஹி..

//ஷார்ஜால வெள்ளிகிழமை கூட வேலை வெக்கணும்னு உத்தரவு போடுங்கப்பா...........//

ஹைய்யா..!!அப்பவும் சனிக்கிழமை லீவு இருக்கே..!! விட்டுடுபோமா என்ன ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ --//
வைத்தியத்தகவல்கள் அருமை .
அப்பறம் அந்த பாப்பா எதற்கு அழுவுது அழாமல் இருக்க சொல்லுங்க//

வாங்க சார் !!என் சந்தேகத்தை கேட்டுட்டு அழுவுது போல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்..லானி, அந்தக்குட்டி...., பப்பியைப் பார்த்தால் மட்டும்தான் அழுவாரோ? பூஸுக்கெல்லாம் அழமாட்டாரோ?:). //

பாப்பா அழரதை பாத்துதான் பப்பி பாக்குது என்னன்னு கேட்டுடலாம்.. ஒரு வேளை ஒரு வேளை பூஸ் வரலைன்னு நெனசோ என்னவோ..?..!!

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//
அதெப்படீங்க உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சந்தேகங்களா வந்துட்டிருக்கு. எதுக்கும் தினம் ஒரு எலுமிச்சம்பழத்தை ரண்டா அறுத்து, அந்த சாறு தலைல இறங்கற மாதிரி சூடு பறக்க தேய்ச்சு, ஒரு மணி நேரம் களிச்சு, ஒரு மண்டலம் (48 நாள்) குளிச்சுப்பாருங்க. சந்தேகமெல்லாம் ஓடியே போயிடுமுங்க.//

ஏங்க ஆப்பிள தேச்சா சரிஆகாதா...?..!!கொய்யா பழத்த தேச்சா சரியாகாதா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சௌந்தர் said...

இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வாழ விருப்பம் இல்லை

ஜெய்லானி said...

@@@மின்மினி--//ஹைய்யா இங்க ஜெய்லானின்னு ஒரு அண்ணாத்தேய தேடி வந்தேன். கடுகுதான் இருக்கு. எவ்வளவு பெரிய சந்தேகம்.. :)) //

ஆமாங்க .. கடுகு சின்னது ஆனா சந்தேகம் பெரிசு ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கமலேஷ்--//எப்படி இப்படி பட்ட சந்தேகம் எல்லாம் வருது....ரூம் போட்டு யோசிப்பீங்களா இதை எல்லாம்.... //

தலை கீழா நின்னு பாருங்க கொஞ்ச நேரம்.. ஆட்டோமேடிக்கா நீங்களே கேப்பீங்க யாரு நான்னு..

//என் வீட்ல இந்த சந்தேகத்தை கேட்டா இனிமே சமைக்கும் பொது எதுக்கும் கடுகு போடவே மாட்டாங்கன்னு நினைச்சேன்...

ஆனா உங்களால எனக்கு வீட்ல இப்ப சோறே போடா மாட்டேன்குறாங்க...//

அய்யோ பாவம் . அப்ப பரோட்டா சாப்பிடுங்க உடலுக்கு நல்லது. சேறு கொலஸ்டிரால் வேண்டாம்.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha6--/இது கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கு? போனா போகுதுன்னு ஓட்டு போட்டிருக்கேன் ! ம்...//

ஹி..ஹி.. சந்தேகத்துக்கு பதில் சொல்லுவிங்கன்னு பாத்தால் இப்பிடி சின்ன புள்ளைய பயங்காட்டுறீங்..அவ்வ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//அது ஒன்னும் இல்லை ஜெய்லானி வாரா வாரம் சனிக்கிழமை தளிக்கு என்னை தேய்த்து குளிச்சா எல்லாம் சரியாபோகும் //

புண்ணாக்கு என்னைய் இந்த ஊருல கிடைக்க மாட்டேங்குதே.. மங்கு..!!

@@@யாசவி
படிச்சப்புறம் கடு(கு) கடு(கு)ன்னு இருக்கு.

நல்ல மரண மொக்கை. நடத்துங்க :)


கொஞ்சம் விளகெண்ணை குடிங்க சரியா போகும் //

புள்ள தெரியாம கேட்டுடுச்சி விட்டுடு மங்கு ..அது விளக்கெண்ணய் இல்ல கிருஷ்னாயில், பாமாயில்/ஹி..ஹி..

//மேடத்துக்கு ஒரு கிட்னி பிரை பார்சல் /

பரோட்டா எத்தனை வைக்க..!!

//கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்//

மாப்பி அங்கிருந்துதான் நேரா வரேன். அவ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//ஆமா....ஏன் தமிலிஷ்ஷில் சப்மிட் பண்ணவில்லை..? //

தமிழிஷ் முடியல ஏன்னு தெரியல. சர்வர் பிராப்ளம் யூ ஏ இ ல...

//வெயில் அதிகமோ?
வாழ்க வளமுடன்,
வேலன்//

ஆமாங்க பக்கத்துல விட்ஜட் இருக்கே பாருங்க . காலையில எட்டு மணிக்கே 40 டிகிரி வெய்யில் அடிக்குது. மதிய்ம் தாங்கல 48 வரை போகுது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mahi--//ஹஹ்..ஹா! சூப்பர் டவுட்டு ஜெய் அண்ணா! இந்த கடுகு இருக்கே,தாளிக்கும்போது பட்டுப்பட்டுன்னு தெறிச்சு, கை,முகமெல்லாம் காயப்படுத்தும்..சரியான வில்லத்தனமான பொருள்.
அதை நீங்க ரொம்ப நல்லா தாளிச்சுட்டீங்க. சந்தோஷமா இருக்கு!ஹிஹி! //


பின்ன விட்டுடுவோமா என்ன பிச்சி பீசாக்கிடவேண்டாம் .ஹி..ஹி..

//எப்படியும் யாரும் உங்க சந்தேகத்தை தீர்க்கப் போறதில்லை,அடுத்த சந்தேகம் தயாராயிடுச்சுங்களா?? :) //

ரொம்ப புத்திசாலி நீங்க க க க போ ( கருத்தை கச்சிதமா கவ்விகொண்டீங்க போங்கள் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Madumitha--//கடுகு புராணம் நல்லாருக்கு.//

ஆஹா.... எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க நான் கதை எழுதலைன்னு யாரும் இனிமே சொல்லக்கூடாது. மது அக்கா சொல்லிட்டாங்க இது கதைதான்னு. வாழ்க மது அக்காஆஆ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மின்மினி--//கீழ்பாக்கம் போங்க உங்க அண்ணாத்தே அங்க தான் இருக்கார்.///

மங்குனியாரே எங்க அண்ணாத்தய வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதா..//

பாவம் விடுங்க நா வந்துட்டேன் மங்கு வரல வர இன்னும் நாலு வருஷமாகும் அந்த கோபம்தான் இப்படி வருதுஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//ஆத்தா.. இப்பத்தான் ரெண்டாவது சந்தேகம் வந்திருக்கா? எங்க போயி முடியப் போவுதோ..//

ச்சே..ச்சே..ஒரு நூறோ இருநூறோ கேள்வி இருக்கு அம்புட்டுதேங்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//ஒரு சந்தேகத்துக்கு பதில் கிடைக்கலைன்னு இப்படியா //

பின்ன லூசுல விட்டுடலாமா சார்...

//எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் உட்கார்ந்து யோசிப்பீங்களா //

இல்லீங்னா மரத்துல தலைகீழா தொங்கிகிட்டு ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அஷீதா--//ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ முடியலங்க. சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது. கலக்கல் :))) //

இதாங்க எனக்கு வேனும் சீரியஸா எழுதரவங்க ஏதாவது எழுதட்டும் . சிரிப்பு மனுசனுக்கு அவசியம்..ரிலாக்ஸ் வேனும்..

//இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் கூட சூப்பர் :)) //

பின்ன நம்ம குருப்பே அப்படித்தாங்க ..எப்பவும் ஜாலிதான் ..சீரியஸ் எல்லாம் கிடையாது. எப்படி வேனா கும்மலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@soundar--//இவ்வளவு சந்தேகம் இருக்குற உன் கூட வாழ விருப்பம் இல்லை //

இப்பிடியெல்லாம் சொன்னா நான் விட்டுடுவேனா என்ன .. ராஸா ஓடாதீங்க ...ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி தல, நம்ம கடைப்பக்கம் வந்து சொல்லியிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எவனோ வெளங்காத மண்டையன், அந்தக் காலத்துல கடுகப் போயி சின்ன சைஸ் மிளகுன்னு நெனச்சிக்கிட்டு சொல்லித்தொலச்சிட்டான், அத எதுக்கு இப்போப் போயி நோன்டிக்கிட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த டவுட்ட பீரு ஆன்லைன்ல போயி கேட்டுபாருங்க, உடனே கிளியர் ஆகும்!

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//சாரி தல, நம்ம கடைப்பக்கம் வந்து சொல்லியிருக்கலாம்ல? //

வரலாம்ன்னுதான் பாத்தேன். எதுக்கு ரிஸ்க்குன்னு வரல ...ஹி..ஹி..

//எவனோ வெளங்காத மண்டையன், அந்தக் காலத்துல கடுகப் போயி சின்ன சைஸ் மிளகுன்னு நெனச்சிக்கிட்டு சொல்லித்தொலச்சிட்டான், அத எதுக்கு இப்போப் போயி நோன்டிக்கிட்டு? //

சந்தேகமுன்னு வந்துட்டா தலை சும்மா கிர்ருன்னு சுத்துது பாஸ்..அதான் இப்பிடி அப்பாலிக்கா கேட்டு வச்சா பெரிய மனுசங்க யாராவது ஐடியா தருவாங்க இல்ல..அம்புட்டுதேங்...

//இந்த டவுட்ட பீரு ஆன்லைன்ல போயி கேட்டுபாருங்க, உடனே கிளியர் ஆகும்!//

கேட்டேனே..!! அவங்க சொல்றாங்க ..சல்பேட்டா ஆஃப் லைனில் கேக்கவாம் என்னத்த சொல்ல அவ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Harini Nagarajan said...

//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //

shabbaaa athukulla vikkale ninnudum! aangilaththil type seithathirkku mannichukkonga! seekrama naanum en computer dabbaava sari seyyaren! naan intha santhegaththa theethu vekkarathaa illa yenna pona vaati theeththu vekka poi neenga melum keta kelvigal enakku puthiya pala santhegangala uruvaakki irukku! :P

ஜெய்லானி said...

@@@Harini Sree--//விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும் //

shabbaaa athukulla vikkale ninnudum! //

இதுக்கு மேல பதில் சொல்லியிருக்கேனே பாக்கலியா.!! இது ஒரு வரட்டு விக்கல். சிலருக்கு மேல் நாக்கு மேலன்னத்துல ஒட்டிகிட்டு வரும் சில நேரத்தில நாள் முழுக்க இருக்கும் அதுக்கு வைத்தியம் இது.

//aangilaththil type seithathirkku mannichukkonga! seekrama naanum en computer dabbaava sari seyyaren!//

இந்த பிளாக் மேல இடது ஓரமா N H M ரைட்டரை கிளிக் பன்னினா நேரடியா டவுன்லோட் ஆகும் . இன்ஸ்டால் பன்னிட்டு யூஸ் பன்னுங்க

//naan intha santhegaththa theethu vekkarathaa illa yenna pona vaati theeththu vekka poi neenga melum keta kelvigal enakku puthiya pala santhegangala uruvaakki irukku! :P //

புதிய சந்தேகம் உங்களுக்கா அல்லது எனக்கா ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

goma said...

ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் தல இந்த கடுகு.
எல்லோர் சார்பிலும் கேட்கிறது
“எங்களையெல்லாம் கொதிக்கும் எண்ணையில் போட்டு துன்புறுத்திவாட்டி வதக்கி .....அப்படி என்ன உங்கள் பசியை ஆத்ரது...?பச்சையா தின்னா ஆகாதா

சட சட சட சட

ஜெய்லானி said...

@@@goma--//ஓட்டுமொத்த சாப்பாட்டு சாமான்களுக்கும் தல இந்த கடுகு.//


’’தல ‘’ ...ஹி..ஹி..ஹா..ஹா...
//எல்லோர் சார்பிலும் கேட்கிறது
“எங்களையெல்லாம் கொதிக்கும் எண்ணையில் போட்டு துன்புறுத்திவாட்டி வதக்கி .....அப்படி என்ன உங்கள் பசியை ஆத்ரது...?பச்சையா தின்னா ஆகாதா

சட சட சட சட //

அப்ப பூண்டு , இஞ்சி போட்டால் சத்தம் அதாவது வெடிக்கிற சத்தம் வரலியே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))