Wednesday, September 7, 2011

வாங்க பழகலாம் ...1

61 என்ன சொல்றாங்ன்னா ...

      எவ்வளவு நாளைக்குதான் இப்படி காதில ரத்தம் வரும் அளவுக்கு மொக்கையா பதிவு எழுதுவீங்க . மாறுதலுக்காக நானே பாராட்டுர மாதிரி ஒரு டெக்னிகல்  பதிவு எழுதுங்களேன்னு  கேட்டுக்கொண்ட இவருக்கு  இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.

(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..!! ))

        மின்சார வீட்டு உபயோக பொருட்களில் பொதுவா இந்திய தயாரிப்புகளில் இல்லாத சிறப்பு ஜப்பான் , இத்தாலி  , சில ஃபிரான்ஸ் தயாரிப்புகளில்  இருக்கு .அது சில நேரங்களில்  நன்றாக இருந்தாலும் தவறாக நினைப்பதால் நிறையப்பேர் இதனை தெரிந்திருப்பார்களான்னு எனக்கு தெரியல .உதாரணம்  இஸ்திரி பெட்டி , எக்ஸாஸ்ட்  பேன் , எலக்டிரிக் இண்டக்‌ஷன்  அடுப்பு  , எலக்டிரிக் குக்கர் , வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை)) .
        இந்திய தயாரிப்புகளில் இது வைக்காததுக்கு காரணம் இது தான்  மிகச் சரியாக 220 , 240 ஓல்டேஜ் வருவதில்லை .இது சில நேரங்களில் வெறும் 80 லிருந்து 280 வரை கூட வரும் . அதுக்கு தகுந்த மாதிரி வைண்டிங்க காயில் உள்ளே இருக்கும் .  ஆனால் இங்கே வெளி நாட்டில (துபாய் ) மிகச்சரியாக ஓல்டேஜ் இருக்கும் .ஒரு சில மில்லி கூட,  கூட குறைய இருக்காது. அதை சரிகட்ட கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும் .
((  இது ஹீட்டர்ல இருக்கும் ))
      
    எங்காவது ஓல்டேஜ் குறைய ஆரம்பிச்சால் இந்த கெப்பாஸிட்டர் பேங்க் அதை சரி கட்டும் .நம்ம் ஊரில இந்த வசதி வர எனக்கு தெரிஞ்சி இன்னும் 100 வருஷம் ஆகுமுன்னு நினைக்கிறேன். ஓக்கே அந்த ஐட்டம் என்னன்னு இன்னும் சொல்லலையே  அதான் தெர்மல் ரெஸிஸ்டெர். இது நாம உபயோகிக்கும் எலக்டிரிக் பொருட்களுக்கு அதன் வாட்டேஜ் ( சாப்பிடும் அளவு ) க்கு தகுந்த மாதிரி அதன் ஆம்பியர்களில் ((சாப்பிடும் அளவு அதாவது பெருந்தீனி ))  வைத்திருப்பார்கள் .
     இது அதன் சூடு (ஹீட்) தேவையான அளவுக்கு மேல் போனால் உடனே இது எரிந்துப்போகும் . அதாவது மேலே நான் குறிப்பிட்ட உங்க எலக்டிரிக் சாமான்கள் வீனாகிப்போச்சுன்னு அர்த்தம் . அதை குப்பையில்தான் போடனும் . இதுதான் இது வரை நடந்து வரும் வழக்கம் . ரிப்பேர் செய்யும் அளவுக்கு  செய்யும் பணத்தில்  ஒன்று புதுசாவே வாங்கிடலாம் . ஆனால் உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில்  ஹீட்டரோ  , காயிலோ  கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.
     இந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது  அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும்  ஹி..ஹி..
(( இந்த மாடல் ஃபேனில் இருக்கும் ))

     சரி இதை எப்படி கண்டுப்பிடிப்பது . உங்கள் எலெக்டிரிக் குக்கர் , இண்டெக்‌ஷன் அடுப்பு , எலெக்டிரிக்  இஸ்திரி பெட்டி , பின் பக்க கதவை அதன் ஸ்குருவை கழட்டி விட்டு பார்த்தால் பின்னால் தெரியும் ஹீட்டர்  பிளேட்டில் ஒரு சின்ன உருளை ( உருளைகிழங்கு இல்லை மக்கா ))  சிலிண்டரில் அதனை வைத்து ஸ்குரு செய்திருப்பார்கள். அதிலிருந்து ஒரே கலரில் மெல்லிய வயரில் பார்க்கும் போதே தெரியும் . இதை பெண்கள் கூட செய்யலாம் .
           ஆனால் எக்ஸாஸ்ட் ஃபேனில் , வால் பேனில் ஹீட்டர் கிடையாது  அதுக்கு  பதிலாக சிங்கிள் காயில் இருக்கும் . அந்த காயில் இருக்கும் பின் பக்க டோரை கழற்றி விட்டு  பார்க்கும் போது அது தெரியாது .ஆனால் காயிலை சுற்றி மொத்தமான பேப்பர் , பேப்பரால் ஒட்டி இருப்பார்கள் . நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் .அந்த மொத்த பேப்பரை கவணமாக பிய்த்து வெளியே எடுக்கனும் .
         அதுக்குள்ளே போகும் இரெண்டு வயரிகளில் ஏதாவது ஒரு பக்கம் வயரில் இந்த தெர்மல் ரெஸிஸ்டரை இனைத்து இருப்பார்கள் . இங்கே உள்ள தெர்மல் ரெஸிஸ்டர் முன்பு பார்த்த அளவுக்கு இருக்காமல்  சின்னதா மஞ்சள் கலரில் இருக்கும் .((முன்பு சொன்ன  ஐட்டங்களில் வெள்ளை கலரில் இருக்கும் ))இங்கே வாட்டேஜ் அதிகம் இருக்காததால் அளவில் சின்னதா இருக்கும் . தெர்மல் ரெஸிஸ்டரை மெதுவாக கட் செய்து விட்டு வயரை நேரிடையாக சால்டரோ இல்லை அப்படியே ஜாயின் செய்து டேப் ஒட்டி விட்டால் போதும் . பிய்த்த மொத்த பேப்பரை திரும்ப ஒட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது
      திரும்ப கழட்டிய ஸ்குருக்களை அதன் அதன் இடத்தில் மாட்டி ஓட விடுங்கள் இப்போது ஃபேன் இயங்க ஆரம்பிச்சுடும் . புதுசாக ஒன்னு வாங்க வேண்டியதில்லை .இந்த வேலையை செய்ய அதிக பட்சம் உங்களுக்கு அரை மனிநேரம் கூட ஆகாது .இதுக்காக வெளியே யாரையும் எதிர்பார்க்கவும் தேவை இருக்காது .பணமும்  மிச்சமாகும் J

  டிஸ்கி :-  உங்களையும்  ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது . தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில்  தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை  விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..