![]() |
| என்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே |
அப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி? , ஆம்லட் போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...!!
தேவையான பொருள்கள்
முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))
உப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))
ஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .
மஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்
செயல் முறை
முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .
இப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்
ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.
இப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .
வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
![]() |
| முடியல இம்சை .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ |
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .
இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்
படங்கள் உதவி : கும்மி டெர்ரர்



