Saturday, January 15, 2011

நியூட்டன் சந்தேகம்-6

             இன்று ஒரு பிரபலம் நிகழ்ச்சியில யாருமே கிடைக்காததால இன்னும் சொல்ல போனா பக்கத்தில பார்தாலே நிறைய பேர் ஓடிடறதால நம்ம எம் டி ஜெய்லானியிடம் மினி பேட்டி

நிகழ்ச்சி தொகுப்பாளர் : வாங்க டாக்டர் ஜெய்லானி
ஜெய்லானி  : என்னது டாக்டரா ..?  இது எப்போ ? எனக்கு தெரியாம
நி தொ   :- எல்லா சந்தேகமும் நினைவுக்கு இருக்கு இது மட்டும் இல்லையா..?
ஜெ  :  ம்..ஆமா .. இவர் குடுத்தாரே   ஹி..ஹி.. (காலரை உயர்த்தி )ம்..ஓக்கே  ..ஓக்கே...
நி தொ  : உங்க ஸ்கூல் வாழ்க்கையை பத்தி சொல்லுங்க . எப்படி சந்தேகம் உங்களுக்கு வருதுன்னு
ஜெ : சரி இன்னைக்கு ஆள் யாரும் கிடைக்காத்தால ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ரேன் ..அடுத்த நிகழ்ச்சிக்கு ரெண்டு நாள் முன்னாடியே ஆளை பிடிச்சி அடைச்சி வச்சிடுங்க
என்னா நக்கலு..!!  ஹி..ஹி..
              
               ஒரு தடவை ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருந்தார்..ரொம்பவும் சுவாரஸியமா ,ரசனையோட சயன்ஸ் பாடம் அது . நியூட்டனின் விதிகளுன்னு பல உதாரணத்தோட சொன்னார் .. அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன் .. ஏன்னா கேக்குறீங்க ..
அது எனக்கு கொஞ்சமாவது புரிஞ்சாதானே..!!
    என்னையே பார்த்துகிட்டு நடத்திகிட்டு இருந்தவர்   கடைசியா ஒரு கேள்வி கேட்டார்.. மூனாவது விதிக்கு ஒரு உதாரணம் சொல்லுன்னு ..  நான் சொன்னேன்  சார் இதுல முதல் விதியே  இன்னும் புரியல ..அதுக்குள்ள மூனாவது
விதிக்கு உதாரணம் கேக்குறீங்களேன்னு சொன்னேன் . சரி அந்த விதியாவது சொல்லுன்னார் .
’’  ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ‘’  அதாவது  ‘ ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு’     அப்படின்னு சொன்னேன் ..
    
ங்கொய்யால என்னை விட்டுட்டு ஒரு பதிவா ...!!!

     பரவாயில்லை தெளிவாதான் இருக்கிறே.. அதுக்குதான் ஏகப்பட்ட விளக்கம் குடுத்தேனே  இன்னும் என்னன்னு கேட்டார் .. சார் ஒரு பூனை நின்ன இடத்திலிருந்து ஒரே ஜம்பில ஒரு சுவத்து மேலே  ஏறுதே  அது எப்படி ...?  ஒரு பல்லி  அம்மாம் பெரிய சுவத்திலிருந்து கீழே விழுந்தும்  ஆடாம  அசையாம அப்படியே நிக்குதே அது எப்படி ? அங்கே நியூட்டனின் மூனுமே நிக்கலையே ஏன்  அப்படின்னு அவர்கிட்ட ஒரு பிட்டை போட்டேன் .
நி தொ ..பாஸ் இப்பவே எனக்கு தலையை சுத்துது ...

ஜெ  : இதுக்கே அசந்தா எப்படி இன்னும் கேளுங்க
ஒரு வேளை நியூட்டன் இது ரெண்டையும்  பார்கலையா..?  இல்லை அவர் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டேன் மெதுவா என்னை கூர்ந்து பார்த்தவர் அப்புறம் வந்துச்சே கடுமையா கோவம் அவருக்கு அப்படியே  கிளாசை விட்டு போனவர்தான் . திரும்ப அன்னைக்கு பூரா கிளாஸ் பக்கமே  வரல். அப்புரம் நானா போய் பார்த்து சார் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் . அதுக்காக கிளாஸ் பக்கம் வராம இருந்துடாதீங்கன்னு சொன்னேன் .
வராட்டி விட்டுடுவோமா ஹா..ஹா..

      சரி இனிமே  என் கிட்ட எதுவுமே  கேக்காதே. நானும் உன் கிட்ட எதுவுமே கேக்க மாட்டேன் .நானும் கோட்டை தாண்டி வரல நீயும் வராதேன்னு சொல்லிட்டார் அந்த பாவி மனுஷன்

     அடப்பாவி மக்கா  சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நீ(ரே)யே  இப்படி சொன்னா  நம்ம பதிவுலகமா என் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் .. சயன்ஸுல டிப்ளமா , டாக்டர்  , விஞ்ஞானி பட்டம் வாங்கினவங்க கொஞ்சம் முன்னே வந்து விளக்கினா நல்லா இருக்கும் .  சரியா பதில் சொன்னா இதுல இன்னும் 200 சந்தேகம் கேப்பேன் . சரியா சொல்லாட்டி இன்னும் நாலாயிரம் சந்தேகம் சேர்த்து கேப்பேன்  எப்பூடி வசதி  ஹி...ஹி...

நி தொ :  பாஸ்  . இப்பவே நிறைய பேர் இந்த சேனல் வேனாம் காதுல ரத்தம் வருதுன்னு சொல்றாங்க .நீங்க சந்தேகமாவே கேட்டா அப்புரம் . நாட்டில ஜனத்தொகை  குறைஞ்சிடும் . இல்லாட்டி நம்மளை நாடு கடத்திடப்போறாங்க

ஜெ : விடுய்யா  எங்கே போனாலும் யாவது நம்ம கிட்ட மாட்டாமலா போய்ட போறாங்க . ஹி..ஹி...
      நிகழ்ச்சி  தொகுப்பாளர்  மயங்கி விழுகிறார் .கேமரா ஓடிக்கொண்டு இருக்கிறது


உலக தமிழ் நெஞ்சங்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
   

56 என்ன சொல்றாங்ன்னா ...:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

எம் அப்துல் காதர் said...

வடை!!!

எம் அப்துல் காதர் said...

படிச்சிட்டு நாளைக்கி வர்றேன் இப்ப எனக்கும் மயக்கம் ச்சே ச்சே தூக்கம் வருது. ஹி. ஹி..

எம் அப்துல் காதர் said...

நம்ம பட்டா, மங்குனி, பன்னி இவங்களெல்லாம் இத பார்த்தாங்கன்னு வச்சுங்க கெடா வெட்டி, நாளைக்கி பொங்கல் வச்சிடுவாங்க சொல்லிப்புட்டேன். நீங்களா அந்த பூனை மாதிரி குதிச்சி ஓடிப்போய்டுங்க ஆமா. க்கி.. க்கி..

Philosophy Prabhakaran said...

// ம்..ஆமா .. இவர் குடுத்தாரே //

யாருங்க அவரு... பதிவுலகத்துல எல்லாருக்கும் டாகுடர் பட்டம் கொடுத்திட்டாரா...

Philosophy Prabhakaran said...

படங்கள் நல்லா இருக்கு... அப்படின்னா பதிவு நல்லா இல்லையான்னு கேட்கக்கூடாது...

அந்நியன் 2 said...

/ஒரு தடவை ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருந்தார்..ரொம்பவும் சுவாரஸியமா ,ரசனையோட சயன்ஸ் பாடம் அது . நியூட்டனின் விதிகளுன்னு பல உதாரணத்தோட சொன்னார் .. அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன்//

இதைத்தான் நாங்களும் செஞ்சோம் பாஸ்,நம்ம விதியே சரியில்லை இதுலே நியுட்ட்டனின் விதியை ஏன் தெரிஞ்சுக்கணும் அப்படித்தானே பாஸ்.

கலக்குங்க.....

ஆமினா said...

அந்த பக்கம் போகாதா.... ஜெய்லானி ப்ளேடோட காத்திருக்கார்ன்னு சொல்லியும் கேக்காம வந்தேனே....

எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்

Philosophy Prabhakaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

Anonymous said...

//அந்த பக்கம் போகாதா.... ஜெய்லானி ப்ளேடோட காத்திருக்கார்ன்னு சொல்லியும் கேக்காம வந்தேனே....

எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்//

ஐ செக்கன்ட் தாட். ஜெய்லானியப் பத்தி தெரிஞ்சு இங்க வந்ததே தப்பு. போகாதேன்னு பலர் சொல்ல சொல்ல வந்ததே பெரும் தப்பு. அதற்குப் பிறகு படங்களைப் பார்த்த பிறகும் படிக்காதேன்னு புத்தி சொல்ல சொல்ல படிச்சதும் தப்பு. இத்தனை தப்பும் எங்க மேல இருக்கறப்போ உங்கள குறை சொல்லி என்ன செய்றது சார்.

ம.தி.சுதா said...

ஹ...ஹ...ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

பொன் மாலை பொழுது said...

பொங்கலும் அதுவாய் ஏன் இப்படி வர்ரவுகள தொரத்தி அடிக்கணும்? இணைப்பு தப்பா போயாச்சே செல்லம்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

இதேன்ன் இன்று பொங்க்ல் ரீலீஸா,

சோபாவில் ஹாயா படுத்து கொண்டு கதை சொல்லும் ( சந்தேகத்த) தீர்த்து வைக்கும் ஜெய்லானியா?
அதே பச்சை கலரில்

அட நம்ம பூஸார் வந்து காதுல புகை விட்டு எட்டி பார்க்கிறார்,
சூப்பர் படம் எப்படி தான் இப்ப்படி ?

காஞ்சி முரளி said...
This comment has been removed by the author.
காஞ்சி முரளி said...

ஜெய்லானி...!
முதலில் இதை வாங்கிக்கீங்க...!
என் இதயமார்ந்த "தமிழர்... தை.. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்"...
தங்களுக்கும்.. தங்கள் குடும்பத்தாருக்கும்.... மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும்...!

ஏய்யா...! ஜெய்லானி...!
ஒரு நல்ல நாள்லகூடவா சந்தேகம்...!
விடமாட்டபோலிருக்க....!

நல்ல சந்தேகம்...!

MANO நாஞ்சில் மனோ said...

எனது உள்ளம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

//விடுய்யா எங்கே போனாலும் யாவது நம்ம கிட்ட மாட்டாமலா போய்ட போறாங்க . ஹி..ஹி//மொக்கையன் செல்வாவின் பக்கத்து சீட்ல இவருக்கு இடம் போடுங்கலே....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏய்யா...! ஜெய்லானி...!
ஒரு நல்ல நாள்லகூடவா சந்தேகம்...!
விடமாட்டபோலிருக்க....!///


ஒட்டகம் பாயா குடிக்காதே திங்காதேன்னு எத்தனை தடவையும் சொல்லியும் கேட்டாதானே, அதான் இப்பிடிபட்ட சந்தேகம் எல்லாம் பயபுள்ளைக்கு.....
ம்ம்ம்ம் விடியுறது நம்ம தலையில.....

MANO நாஞ்சில் மனோ said...

//பொங்கலும் அதுவாய் ஏன் இப்படி வர்ரவுகள தொரத்தி அடிக்கணும்? இணைப்பு தப்பா போயாச்சே செல்லம்.//

நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

//ஐ செக்கன்ட் தாட். ஜெய்லானியப் பத்தி தெரிஞ்சு இங்க வந்ததே தப்பு. போகாதேன்னு பலர் சொல்ல சொல்ல வந்ததே பெரும் தப்பு. அதற்குப் பிறகு படங்களைப் பார்த்த பிறகும் படிக்காதேன்னு புத்தி சொல்ல சொல்ல படிச்சதும் தப்பு. இத்தனை தப்பும் எங்க மேல இருக்கறப்போ உங்கள குறை சொல்லி என்ன செய்றது சார்.//

அதனால நான் ஓடியே போயிட்டேன்....

எம் அப்துல் காதர் said...

பாஸ் ஃஷோபாவுல சாஞ்சுக்கிட்டு அதென்ன எகத்தாள சிரிப்பு வேண்டிகெடக்கு, ரொம்ப தான். அவ்வ்வ்வ்...

ஸாதிகா said...

படிக்கறவங்களில் பாதிபேரும் மயங்கி விழுந்துடுவாங்க.

எம் அப்துல் காதர் said...

ஆமா கொரங்கு போயி பூனை (வந்தது டும்..டும்..)வந்திடிச்சே, ஆஹா ஒங்க பரிணாம வளர்ச்சிய என்னன்னு சொல்ல.. க்கி..க்கி

எம் அப்துல் காதர் said...

இன்றையிலிருந்து நாங்கள் கொடுத்த "வலைஞாநி ஜெய்லானி" பட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, "சந்தேக விபூஷன்" விருதை உலகளாவிய அளவில் உங்களுக்கு வழங்கி மகிழ்கிறோம். ஹி..ஹி..(என்ன பண்றது நெலம அப்படி ஆகிப் போச்சு..!!!)

இப்படிக்கு
கட்டிலுக்கு கீழே படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம். தம்மாம், சவுதி அரேபியா (எங்களுக்கு அல் ஹஸா, அல்கோபரை தவிர்த்து வேறெங்கும் கிளைகளில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 'கொல்லு'கிறோம்)

எம் அப்துல் காதர் said...

அது சரி டாக்டர் பட்டம் வேணாம்னு உதார் விட்டீங்களே, இப்ப எப்புடி போய் வாங்குனீங்க!! பிலிப்பைனி நர்ஸ யாருக்கு தெரியாம 'கக்கு' சார் அனுப்பிட்டாரோ?? க்கி.. க்கி..

ஜெய்லானி said...

அது சரி டாக்டர் பட்டம் வேணாம்னு உதார் விட்டீங்களே, இப்ப எப்புடி போய் வாங்குனீங்க!! பிலிப்பைனி நர்ஸ யாருக்கு தெரியாம 'கக்கு' சார் அனுப்பிட்டாரோ?? க்கி.. க்கி..

அடங்கொக்காமக்கா ...எல்லா ரகசியமும் வெளியே வருதுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..இருங்க செல்லம் ...பொருமையா வந்து பதில் சொல்றேன் :-))

அன்புடன் நான் said...

உங்க நீயுட்டன் விதி ... நிகழ்ச்சி தொகுப்பாளர் விதியை முடிக்க பாக்குதே??

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

//பாஸ் ஃஷோபாவுல சாஞ்சுக்கிட்டு அதென்ன எகத்தாள சிரிப்பு வேண்டிகெடக்கு, ரொம்ப தான். அவ்வ்வ்வ்...///

நாமெல்லாம் அவர் பதிவை படிக்கிறோமாம்.....

சிநேகிதன் அக்பர் said...

அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்கணும்னு தோணுது?

கலையன்பன் said...

நானும் இந்தப் பதிவைப் படிச்சிட்டேன்;
எல்லோரும் இந்த ஒரு தபா என்னைய
மன்னிச்சி வுட்ருங்க...
இனிமே வரமாட்டேன்... x 100.

சிநேகிதன் அக்பர் said...

டாக்டரு பட்டம் வாங்கின பிறகு உங்க சந்தேகம் ரொம்ப கூடி போச்சே.

Jayadev Das said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//
என்னத்த சொல்ல, நான் தெரியாத் தனமா இயற்பியல் படிச்சவனா போயிட்டேனே!

ஜெய்லானி said...

@@@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)--//

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! //

வாங்க ..வாங்க.. முதல் வடை உங்களுக்கே.. உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//வடை!!! //

வாங்க..வாங்க... இன்னைக்கு வடை இல்லை கரும்பு தான் ஹ..ஹா..

//படிச்சிட்டு நாளைக்கி வர்றேன் இப்ப எனக்கும் மயக்கம் ச்சே ச்சே தூக்கம் வருது. ஹி. ஹி.. //

அதானே அங்கிட்டு டைம் மிட் நைட் 12.50 வரை என்ன வேலை குடும்பத்தை விட்டுட்டு அவ்வ்வ்வ்

//நம்ம பட்டா, மங்குனி, பன்னி இவங்களெல்லாம் இத பார்த்தாங்கன்னு வச்சுங்க கெடா வெட்டி, நாளைக்கி பொங்கல் வச்சிடுவாங்க சொல்லிப்புட்டேன். நீங்களா அந்த பூனை மாதிரி குதிச்சி ஓடிப்போய்டுங்க ஆமா. க்கி.. க்கி..//

அவங்க எல்லாம் பொங்கல் சாப்பிட்ட மயக்கத்தில இருக்காங்க இப்ப வரமாட்டாங்க தெளிய நாலு நாள் ஆகும் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தூயவனின் அடிமை said...

பாஸ் நம்ம வாத்தி ரொம்ப நல்லவரு.......................

ஜெய்லானி said...

@@@Philosophy Prabhakaran --//ம்..ஆமா .. இவர் குடுத்தாரே //

யாருங்க அவரு... பதிவுலகத்துல எல்லாருக்கும் டாகுடர் பட்டம் கொடுத்திட்டாரா...//

வாங்க பாஸ் ஏன் அந்த விழாவுக்கு நீங்க போகலையா..?

//படங்கள் நல்லா இருக்கு... அப்படின்னா பதிவு நல்லா இல்லையான்னு கேட்கக்கூடாது...//

ம்..ஏதாவது ஒன்னு நல்லா இருந்தா சரிதான். நல்ல பதிவுன்னு வந்தா சந்தேகத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும் தப்பிச்சீங்க ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--///ஒரு தடவை ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருந்தார்.. ரொம்பவும் சுவாரஸியமா ,ரசனையோட சயன்ஸ் பாடம் அது . நியூட்டனின் விதிகளுன்னு பல உதாரணத்தோட சொன்னார் .. அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன்//

இதைத்தான் நாங்களும் செஞ்சோம் பாஸ்,நம்ம விதியே சரியில்லை இதுலே நியுட்ட்டனின் விதியை ஏன் தெரிஞ்சுக்கணும் அப்படித்தானே பாஸ்.

கலக்குங்க.... //

வாங்க சகோ..வாங்க... சரியா சொன்னீங்க ..அவர் எப்ப பாடம் நடத்த ஆரம்பிச்சாலும் எனக்கு சந்தேகம் அப்படியே கொப்பளிக்கும் கடல் மாதிரி ஆனா பதில்தான் வராது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா--// அந்த பக்கம் போகாதா.... ஜெய்லானி ப்ளேடோட காத்திருக்கார்ன்னு சொல்லியும் கேக்காம வந்தேனே.... //

வாங்க...வாங்க..வந்துட்டு சும்மா போகலாமா ..இருந்து ஜுஸ் குடிச்சிட்டு போங்க ..இல்லாட்டி ஆம்லட்டாவது சாப்பிட்டுட்டுதான் போகனும் அதுவும் நானே போட்டது ஹி..ஹி..

//எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்//

இன்னுமா...வாவ்... ஒன் மினிட் வெயிட்..ஒரு டஜன் சுட்டு தரேன் . லேகின் வாரண்டி நஹி மிலேகா டீக்ஹே.... :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Philosophy Prabhakaran --// உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...//

வாங்க பாஸ்...உங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

// என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html //

வந்துகிட்டே இருக்கேன் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//அந்த பக்கம் போகாதா.... ஜெய்லானி ப்ளேடோட காத்திருக்கார்ன்னு சொல்லியும் கேக்காம வந்தேனே....

எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்//

ஐ செக்கன்ட் தாட். ஜெய்லானியப் பத்தி தெரிஞ்சு இங்க வந்ததே தப்பு. போகாதேன்னு பலர் சொல்ல சொல்ல வந்ததே பெரும் தப்பு. அதற்குப் பிறகு படங்களைப் பார்த்த பிறகும் படிக்காதேன்னு புத்தி சொல்ல சொல்ல படிச்சதும் தப்பு. இத்தனை தப்பும் எங்க மேல இருக்கறப்போ உங்கள குறை சொல்லி என்ன செய்றது சார்.//

வாங்க சகோ ..வாங்க... அப்போ என் டீவி ஸ்டேஷனை கியூபாவுக்குதான் கொண்டு போக வேண்டி வரும் போலிருக்கே அவ்வ்வ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ம.தி.சுதா--//

ஹ...ஹ...ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..//

வாங்க ஐயா..வாங்க.. ஏன் சிரிச்சீங்க ..எதை பார்த்து சிரிச்சீங்கன்னு கொஞ்சம் சொன்னா தேவலாம் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//பொங்கலும் அதுவாய் ஏன் இப்படி வர்ரவுகள தொரத்தி அடிக்கணும்? இணைப்பு தப்பா போயாச்சே செல்லம். //

வாங்க பாஸ் ..வாங்க..!! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு ஆறுதல் ஹி..ஹி.. அந்த லிங்க் திரும்ப தேடினால் கிடைக்கல அதான் மொத்தமா போட்டுட்டேன் :-)

// இனிய பொங்கல் வாழ்த்துக்கள் //

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

படங்கள் நல்லா இருக்கு.பதிவும் நல்லா இருக்கு.நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஹேமா said...

ஜெய்....இந்த வருஷத்திலாயவது சந்தேகங்கள் கூடுமா இல்ல குறையுமா !

சரி...சரி எல்லாத்துக்குமான வாழ்த்துகள் !

இமா க்றிஸ் said...

ஒண்ணு

;)

//சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது//ல்ல ;)))

அன்புடன் மலிக்கா said...

//விடுய்யா எங்கே போனாலும் யாவது நம்ம கிட்ட மாட்டாமலா போய்ட போறாங்க . ஹி..ஹி...//
அதான் மாட்டியாச்சில்ல

ஒன்னு சொல்லிட்டேன். ஏன்ன

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது ல்ல

Jey said...

//அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன் .. ஏன்னா கேக்குறீங்க ..//

எவனாவது ஏன்னு கேட்டா செருப்பால் அடிடட மச்சான், நான் இருக்கேன்.!!!!!( தைரியமா செருப்பால அடிங்க நானும் கூட சேர்ந்து அடிக்கிறேன்!!)

மனோ சாமிநாதன் said...

இப்போ இருக்கிற டிவி சானல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான்! போர் அடிக்குது! ஜெய்லானி டிவி உண்மையிலேயே சுவார‌ஸ்யமாயும் சிரிப்பாவும் இருக்கிறது!!

athira said...

ஜெய்லா (சிங்கப்பூர், மலேசியா போனதில இருந்து ஒரே “லா” வா வருது அதேன்:)) மன்னிச்சிடுங்க. தாமதமாகிட்டுது.. உங்க பக்கம் வர.

தண்ணிக்குள்ள ஒளித்திருந்தாலும் கலக்கலா(மீண்டும் “லா”) பதிவு போடுறீங்க. விதி விதி என்கிறீங்க அது எந்த விதி என்றுதான் தெரியவில்லை:). எனக்கும் விதியில சந்தேகம்தான்.

athira said...

பட விமர்சனம்(இது வேற படம்).

1வது: பச்சோந்திப்பிள்ளையின் வாலா(மீண்டும் “லா”) அது?:) பார்த்ததும் ஏங்கிட்டேன்.

2வது படம்: அதுதானே பூஸார் இல்லாமல் நெட்டா? பிசீயா?:)

3வது:) இதுதான் பெஸ்டு(best), எனக்கொரு சந்தேகம் ஜெய்லா... தண்ணிக்குள் இருக்கும் ஜெய்யை பார்த்துத்தான் இப்பாச்சல் பாய்கிறாரோ பூஸார்?:).

வழமைபோல படங்கள் கலக்கல்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாத்தியார் கிட்டயே... சந்தேகத்த பின்னி பெடல் எடுத்திருக்கீங்க போல... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))

நன்பேண்டா...! said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா..?

Thenammai Lakshmanan said...

என்ன பாஸ் வழக்கம் போல நச்சுனு இல்லையே..

அது சரி உங்க கிட்ட அவார்டு செய்து தாங்கன்னு கேட்டமில்லா..

இல்லாட்ட இந்த பச்சை ரோசாவை எடுத்து காபி பண்ணி இதுதான் அவார்டுனு அறிவிச்சுறப் போறேன்..ஹிஹிஹி

athira said...

பின்னூட்டங்களுக்கு பதில் போடாமல் “ஊர்” சுற்றிப் பாட்டுப் பாடினால்.... தூக்கத்தில கண்ணு தெரியாமல் போயிடும் புளொக்கோட ஓனருக்கு, சொல்லிட்டேன் ஆஆஆஆஆஆஆஆஆமாஆஆஆ...

S. Robinson said...

please remove widgio gadget from your blog it is very hazard for your blog...........your post is intresting keep it up.................

Bdfy said...

casino android

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))