டிஸ்கி :- ஜோசியத்தை நம்பாதவங்களுக்கு இந்த பதிவு இல்லை
கடிகாரம் கண்டுப்பிடிக்காத காலங்களில் சூரிய , சந்திரனின் நிலையை வைத்து பருவகாலங்களை கணக்கிட்டான், அதை வைத்தே விவசாயம் நடந்தது. மழைக்காலங்களில் வேலை இல்லாத போது இருக்கும் அறிவை பயன் படுத்தி சேமிப்பை வளர்த்தான். ஜோதிடம் என்பது இவர்களை பொறுத்த வரை வான சாஸ்திரம், அறிவியல் .ஜோதிடம் ஆரம்பிச்சது அதிகமில்லை சுமார் கிமு 1200 லிருந்து கி மு 400 வரை தான்னு வாக்கிய பஞ்சாங்கம் சொல்லுது . இதுக்கு பிறகு வந்தது எண் கணிதம் ஏன்னு கேட்டா அப்போ டெலஸ்க்கோப் கண்டுப்பிடிக்க படல அதனால துல்லியமா எதுவும் சொல்வதுக்கில்லையாம் .
இதை இன்னும் நல்லா படிக்க உள்ளே போனா ((குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுபவனுடைய நிலைதான்னு இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்றது )) கிணற்று தவளை மாதிரி 7 கிரகம்+ 2 நிழல் கிரகம் உள்ளேயேதான் சுற்றி சுற்றி வரனும். நமது கேலக்சியில(பால் வீதி மண்டலம் ) லட்சக்கணக்குல சூரியனும் சந்திரனும் , நட்சத்திரங்களும் கண்டுபிடிச்சு அதுக்கு பேர் வைச்சு கட்டு படியாகாததால, அதுக்கு நெம்பர் போட்டு வச்சிருக்கான் இப்போதுள்ள மனுஷன் .ஆனால் அங்கே ..?
அந்த கிரகத்துக்கும் நம்ம மனுஷ உடலுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா உடனே பதில் வருவது சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வருது , அது இல்லாம உயிர் வாழ முடியாது , சந்திரன் சுழற்சியால அமாவாசை , பவுர்ணமி அன்னைக்கி அலை அதிகம் இருக்கும் . இதை தவிர வேறு லாஜிக் பதில் வரவே வராது . ((இதை பத்தி சொல்லப் போனா பெரிய தொடரா போயிடுங்கிறதால இதோடு நிறுத்திக்கிறேன் )).
ஒரு வேளை கடிகாரமே கண்டுப்பிடிகாத காலத்தில் மழை எந்த மாசத்துல பெய்யும் , காற்று எந்த திசையில் அடிக்குமுன்னு எழுதி வச்சதுக்கு இது தேவைப்படலாம். ஆனா அதுபடியா நடக்குது.? மனித உடலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை .அப்புறம் அதனால் தோஷம் எப்படி வரும் ((ஹய்யோ ஒரு வழியா பாயிண்டுக்கு வந்துட்டேன் )) மனிதனை படைத்த அந்த இறைவன், உடலில் எங்காவது ஒரு குறை வைத்தானா .? இல்லையே .இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்க்காமல், இரவு பகல் பாராமல் உழைக்குதே..!! அப்படி இருக்கும் போது, இவன் வேலை எதுவும் செய்யாமல், சோம்பேறியா இருப்பதுக்கு, ராகு காலம் எமகண்டம்ன்னு, தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் . எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் .
எனக்கு தெரிஞ்ச ஒருவர் சுமார் 10 வருச காலமா பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். இந்த தோஷம் உள்ளதால லேட்டாகிட்டே போதுன்னு ஒரே புலம்பல் . இவ்வளவுக்கும் அவர் குடும்பம் படிக்காத குடும்பம் இல்லை . அறிவு ஜீவிகள்தான் . ஆனா வேலைக்காகல . நானும் எவ்வளவோ சொல்லியும் சரி வரல. எறும்பு ஊர கல்லும் தேயும் ஒரு நாள், தேய்ந்தது ஆனால் காலம் போனதே..நான் சொன்னது இதுதான்.
எத்தனையோ தெய்வங்களை வணங்குகிறீர்கள் ஓக்கே , இதுவும் போதாமல் கூடவே ஒரு குல தெய்வம் .அதுக்கூடவா உங்களுக்கு நல்லது செய்யாது. அதன் மீதுமா நம்பிக்கை இல்லை .இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன் என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும் உறக்கம் இல்லாமல் வேலை செய்யுதே .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்கா..?
மேலே சொன்னது நம்முடைய கன்ட்ரோல் இல்லை ஓக்கே . இந்த நேரங்களில் நீங்க சாப்பிடாமல் , குடிக்காமல் இருந்து இருக்கீங்களா..? அட்லீஸ்ட் யூரின், டாய்லட் போகாமல்..? ஒரு வேளை பயணத்தில் இருந்தால் ஓடிக்கிட்டு இருக்கும் வாகனத்தை விட்டு இறங்கி அங்கேயே நிற்பீங்களா..? ஏற்போர்ட்டில், பஸ் ஸ்டாண்டுகளில் , ரயில்வே ஸ்டேஷன்களில் அந்த நேரங்களில் எதுவும் இயங்காதுன்னு சொன்னால் நீங்கள் அங்கேயே அமைதியா இருப்பீங்களா..?
இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் .பூனை குறுக்கே போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது. ((உண்மை காரணம் அது ஓடி விட்டதாக நினைத்து பயந்து அங்கேயே சிறிது நின்று விடுகிறது , நமது கவனமும் சிதறி, அதன் மேலே வண்டியை ஏற்றி விடுகிறோம் )).
உங்கள் ஜாதகத்தை (ஙே ) இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள், .அந்த பத்து பேரும் பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் . கொடுக்கும் பணத்துக்கேற்ப பலன் கிடைக்கும் .
இருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்கையில் வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை . இதை எல்லாம் நினைத்து பின்னால் அழுவதுக்கு பதில் இப்போதே ஒருமுடிவுக்கு வாங்கன்னு சொன்னேன் .நான் இத்தனை சொல்லிய பிறகு இப்போது ஒரு வழியா மனம் திருந்தி மணம் செய்யப்போகிறார். அவருக்கு என வாழ்த்துக்கள் .
-இல்லை இதில் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்பவர்கள் உங்கள் ஜோதிடரிடம் கீழே உள்ள கேள்வியை கேளுங்கள். போட்டிக்கு வருபவர்கள் கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் .அப்படி சரியாக சொன்னால்............ ..
என்னுடைய வரும் அடுத்த இரெண்டு வருட சம்பளம் மொத்தமாக தருகிறேன். அப்படி அவர் போட்டியில் தோற்றுவிட்டால், அவருக்கு அரேபிய படி ........தண்டனை (( அது எதுவா வேண்டுமானாலும் இருக்கும் )) ரெடி ஸ்டாட் மியூசிக்
1 .அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?
2 . நான் என்ன வேலையில் இருப்பேன். எனக்கு என்ன சம்பளம் கிடைக்கும் ...?
3. அப்போது நான் என்ன கலர் டிரஸ் போட்டிருப்பேன் ..?.
4 .என் பக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் .?.
5 . தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
6 . இதே நேரம் என்ன செய்து கிட்டு இருப்பேன் .
இறைவன் கொடுத்த சுய அறிவை கொண்டு மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள் .அடுத்த வேளை தான் என்ன சாப்பிடப்போகிறோம் என்று சொல்ல முடியாதவர்களா நமது எதிர் காலத்தை சரியா சொல்ல முடியும் .