Showing posts with label டைவேர்ஸ். Show all posts
Showing posts with label டைவேர்ஸ். Show all posts

Monday, October 17, 2011

தமிழ்மணம் பெயரில் மட்டும்

60 என்ன சொல்றாங்ன்னா ...

     இந்த உலகத்திலே யாராக இருந்தாலும் ஏன் எதற்கு எப்படின்னு கேள்வி கேட்டே அதற்கு பிறகு ஒத்துக்கொள்கிறான். அது அவனை படைத்த இறைவனே நேரில் வந்த போது கூட நீ யார் என்ற கேள்வியையே கேட்டிருக்கின்றனர். விமர்சனத்திறகு  அப்பாற்பட்டு யாரும் இல்லை.
     ஒரு இயக்கத்தை நடத்துபவர் என்றால் அதில் ஆயிரம் கேள்விகள் வரத்தான் செய்யும் .முடிந்தவரை  நாகரிகமாக அதற்கு பதில் சொல்லலாம். இல்லை இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லைன்னு ஒதுங்கி விடலாம் . அதை விட்டு விட்டு படிக்கவே  கண் கூசும் அளவிற்கு கேவலமாக காலையிலிருந்து மாலை வரை அங்கேயே  உட்கார்ந்தூ வேலை வெட்டி இல்லாமல் பதில் போட்டுக்கொண்டு தன்னுடைய கீழ்தர புத்தியை காட்டிய கொடுமையை என்னவென்று சொல்வது .
     இப்போது நமது  சகோதர , நண்பர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவருவதால்  திரும்பவும்  அதே வார்த்தைகளை  இங்கே உபயோகிக்க விரும்ப வில்லை ..டெரார் கும்மியில் அந்த கேவலப் பேச்சுக்களை கேட்டு எனக்கு ரத்தம் கொதித்தாலும் சக நண்பர்கள் பொருமை காத்ததால் அங்கே கமெண்ட் இடாமல் விட்டு விட்டேன் .
    பதிவுக்கும் , அங்கே இருக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல்
 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."  
     இந்த  வார்த்தை அங்கே வரவேண்டிய அவசியம் என்ன ..?அதுவும் எந்த ஒரு முஸ்லீமும் அடுத்தவரை முதலில் பார்க்கும் போது சொல்லும் அழகிய வார்த்தை “உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் “ இதை திரித்து கேவலமாக பேச யார் உரிமை கொடுத்தது. ஒரு தனி பதிவர் சொன்னால் ஏதோ அறியாமல் உளறிவிட்டார் என்று 0.001ன்னாவது நினைக்கலாம் .ஒரு தள நிர்வாகியே  சொல்லுவதென்றால் ....??????
     இதை தனிப்பட்ட மெயிலில் கேட்கும் போதே சாக்கு போக்கு சொன்னவர். உடனே அவருடைய பிளாகில்  இது உனது தனிப்பட்ட மொழியா..??? அரசியல்வாதி சொல்லவில்லையா..?? கோயில் கும்பாபிஷேகத்தில் சொல்லவில்லையா..?? என்று பதிவிட என்ன அவசியம்..!! இந்த வார்த்தை அரசியல்வாதி  ஓட்டு கேட்டுவரும் போது மட்டுமே  சொல்வான் , கோயில் கும்பாபிஷேகம் தினமுமா நடக்கிறது ..ஆனால் ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பார்த்தாலே  சொல்லுவானே...!!! பெரியவர் சிரியவர் என்ற அளவுகோல் இல்லாமல் இல்லாமல் எல்லோரும் சொல்லும் சொல் அல்லவா..!!! அரபு நாடுகள் போய் வந்தவரை கேட்டால் அதன் பெருமையை சொல்வாரே
எச்சரிக்கை :
    உடனே தமிழ்மனத்திலோ  இல்லை தன்னோட பிளாகிலோ  கண்டிப்பாக மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் . இந்த அறிவிப்பு  இந்த வாரத்துக்குள்  வரவேண்டும் .கொஞ்ச நாள் போனால் மறந்து விடுவார்கள்
    இவர்களால் என்ன செய்யமுடியும் என்று நினைத்தால் ...??? அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து  அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் .
      இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும்
வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்  .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே

டிஸ்கி :- இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே  என் பிளாகில தமிழ்மண ஓட்டுபட்டை இருக்கும் . யாராவது ஓட்டுபோடாம இதுவரை இருந்தா சந்தோசமாகவோ  இல்லை துக்கமாகவோ  ஒரு தடவை வந்து குத்திட்டு போங்க . என் அடுத்த பதிவிலிருந்து நான் தமிழ்மணத்தை டைவேர்ஸ் செய்கிரேன் ஆர்டர்..ஆர்டர்......!!!!J