Showing posts with label சமையல் குறிப்பு டிவி. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு டிவி. Show all posts

Saturday, July 9, 2011

ஆஹா ... சமையல் ..!!

56 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :- இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி.. 

இதுக்கே இப்பிடி முழிச்சா என்னாகிறது
   
  எளிமையா அழகா வாசனையா சமையல் குறிப்பு கேட்டு நிறைய பேர் மெயில் செஞ்சாங்க.  தனிதனியா பதில் போடுறதை விட ஒரு பதிவா போட்டா நல்லா இருக்குமேன்னு போட்டிருக்கேன் .
      எப்பவுமே  ஹைஜெனிக்கா சாப்பிட விரும்புகிறவங்க அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம் . ( ஆனா வாசனை பிடிக்குமான்னு நீங்கதான் சொல்லனும் )
     பிரியாணி எப்பவுமே  ஒரே கலரில்தானா செய்யனும்  கொஞ்சம் வித்தியாசமா  கருப்பு கலரில் செஞ்சிப்பாருங்க . ( கலர் தேவைப்பட்டா உங்க பையனோ  பொண்ணோ பேனாவுக்கு போடும் கருப்பு இங்கை பயன் படுத்தலாம்  )
      ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்.
     இட்லியை ஆவியில் வேக வச்சி சாப்பிட்டு போரடிச்சி விட்டதா   கவலையே  படாதீங்க . அதை முறுக்கு பிழியும் குழாயில போட்டு அப்படியே  எண்ணெயில் பொரிச்சி வையுங்க . வித்தியாசமான இட்லி தயார் ( சட்டினின்னு தனியா வேர சைடு டிஷ் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் )
     பருப்பு போட்டாதான் சாம்பாரா  அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும்
     அசைவம் சமைக்கும் போது என்ன தான் சுத்தம் செஞ்சாலும் சில நேரம் ஸ்மெல் போகாது . அதுக்கு  கவலை படாதீங்க கொஞ்சமா பினாயில் விட்டு கழுவினா வாடை போயிடும் .
     நீங்க வச்சிருந்த மாவுல பூச்சிகள்  வந்திட்டுதா அதை தூக்கியே  போடவேனாம் . அப்படியே  மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினா பூச்சி காணாம போகிடும் ஹி..ஹி... ( வந்தவங்களுக்கு தெரியவா போகுது )
     லெமன் ஜீஸ் பழசு மாதிரி தெரியுதா ..அதுல ரோஸ் மில்க் எஸன்ஸை கலந்துட்டா . ஏதோ  காக்டெயில்ன்னு நினைச்சி வந்தவங்க ஏமாந்துடுவாங்க  (  பால் செலவு மிச்சம் )
      மதியம் திடீர்ன்னு யாராவது விருந்துக்கு வந்துட்டா சமையல் செய்ய நேரம் இல்லையா நோ டென்ஷன் ஒரு வயத்து வலி மாத்திரையை  டீ , காஃபி  யில கலந்து குடுத்துட்டா அவங்களுக்கு சாப்பிட எதுவுமே கேக்க மாட்டாங்க ( டீ ,காபியே  சாப்பிடாதவங்களுக்கு மோர் , ஜுஸ் இருக்கவே இருக்கு )
      சிலருக்கு கருவாடு , கத்திரிகாய் என்றால் அலர்ஜின்னு சொல்லுவாங்க . அப்படி பட்டவங்களுக்கு  ஹமாம் சோப் , லைஃப் பாய் சோப் , சிந்தால் சோப்  இதுல ஏதாவது ஒன்னால அதை கழுவிட்டு சமைச்சா அலர்ஜி வராது .. (இதை போட்டு குளிச்சா அலர்ஜி வராதுங்கிர போது  கழுவினாலும் அலர்ஜி வராதுதானே   ஹி..ஹி...)
     வைட்டமின்    E  குறைவினால  நிறைய வியாதிகள் வராதா டாக்டர்கள் சொல்றாங்க .அதனால  முடிஞ்சளவு  உங்க வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா  பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க . ( உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே )   
  டிஸ்கி :-  யார் மெயில் செஞ்சி கேட்டாங்கன்னு  நீங்களும் கேட்க வில்லை அதை நானும் சொல்ல வில்லை

Saturday, December 4, 2010

ஜெய்லானி டீவியில்-சமையல்--2

90 என்ன சொல்றாங்ன்னா ...
                        நமது ஜெய்லானி டீ வி நிலையத்துக்கு கிட்டதட்ட 2 ஆயிரம் போன்கால் , நாலாயிரத்து சொச்சம் ஃபேக்ஸ் , ஈ மெயில்ன்னு ஓவர் பிசி ,ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை. உங்களால்தான் சுடுதண்ணி வைப்பது , லெமன் ஜுஸ் போடுவது இப்படி நாங்க தெளிவா கத்துகிட்டு இருக்கோம் அதனால் சீக்கிரம் ஒரு குறிப்பு போடுங்க .அப்படி இல்லாட்டி உங்க சேனல் முன்னால போராட்டம் பண்ணுவோமுன்னு அன்பு மிரட்டல் அதனால நமது சேனலில் மீ ண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்
என்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே

                    அப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி?  , ஆம்லட்  போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...!!

தேவையான பொருள்கள்

முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))
உப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))

ஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .
மஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்

செயல் முறை
முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .

இப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்

ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.

இப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .

வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முடியல  இம்சை  .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .
இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்

படங்கள் உதவி : கும்மி டெர்ரர்

Tuesday, May 25, 2010

வீட்டிலேயே பழரசம் செய்வது எப்படி !!

112 என்ன சொல்றாங்ன்னா ...

         ஜெய்லானி டீவியில் இன்று வீட்டிலேயே பழ ரசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம். நாம இந்த கோடை காலத்துல வெயிலால  ரொம்பவே எரிச்சல் படறோம். அதுக்கு அக்காமாலா , கப்ஸின்னு அதிகம் செலவு பண்ணி கடைகடையா ஏறி இறங்கி குடிச்சி உடம்பை கெடுத்துக்காம அருமையா வீட்டிலேயே எழுமிச்சை பழரசம் செய்வது எப்படின்னு இன்னைக்கி பாக்க போரோம்.

        இந்த பழரசத்தில இரண்டு வகை இருக்கு. ஒன்னு சாதாரன தண்ணிலயும் மற்றும் பச்சை தண்ணிலயும் ( ஐஸ் வாட்டருங்கோ ) செய்யறது .

முதல்ல உங்களுக்கு தேவையானது :

எழுமிச்சை அல்லது லெமன்     தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு  அல்லது சால்ட்  - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க
பன்ணீர் (ரோஸ் வாட்டர் )--10 சொட்டுக்கள் எண்ணி ஊத்துங்க
முக்கியமா வெட்ட கத்தி வேணும்.
கண்டிப்பா கலக்க தண்ணி வேணும் மறந்துராதீங்க
பாதுகாப்புக்கு கையுரை -1 செட் ,
டிஞ்சர் அயோடின் சின்ன பாட்டில் போதும்
ரெடிமேட் பிளாஸ்திரி உங்க வெட்டும் திறமைய பொருத்து

செயல் முறை விளக்கம்:

       இதை செய்ய நீங்க கிச்சனுக்குள்ள போக அவசியமில்லை. ஆனா பாருங்க கத்தியோ இல்ல மத்த சாமானை எடுக்க கிச்சனுக்குள்ள போய்தான் தீரணும். அதனால உஷாரா எல்லாத்தையும்  முதல்ல ரெடியாக்கி வையுங்க .எழுமிச்சை பழத்த வெட்ட தனிதிறமை வேணும் . வழுக்காம அடுத்த வங்க மேல தெரிச்சு கண் கலங்காம வெட்டுறத்துக்கு

          கத்தி நல்ல கூர்மையா இருக்கனும் தேவைப்பட்டா இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு நல்லா கூர்தீட்டிக்குங்க. அந்த கேப்புல அடுப்புல கொஞ்சம் சுடுதண்ணி  வையுங்க .அது வைக்க தெரியாதவங்க இங்கு பாருங்க புரியும். இப்ப அந்த சுடுதண்ணியில பழத்தை 2 நிமிஷம் போட்டு எடுத்தா பழம் அறுக்கும் போது அழாது , ஓடாது , வழுக்காது. பின்ன அதுல நிறைய சாறும் வரும் . பழத்தை இடது கை கட்டைவிரல் மற்றும் ஆள் காட்டி விரலால் மெதுவா பிடிச்சிகிட்டு இப்ப வலது கையில் கத்தியால் மெதுவா அறுக்கவும் வரும் சாறை மட்டும் பாத்திரத்தில் ஊத்துங்க ( மக்கள் கேட்டுக்கொண்டால் மீதி வரும் சக்கையில  எலுமிச்சை ஊருகாய் செய்வது எப்படின்னு அடுத்த பதிவில் போடப்படும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறோம் ) தேவைக்கு தகுந்தளவு தண்ணிய சேருங்க.( டாஸ்மாக் தண்ணியான்னு கேக்கப்பிடாது.)

        இதில குடிக்கப்போறவங்க வெளியிலிருந்து வெய்யிலால கஷ்டப்பட்டு வந்தா அவங்களுக்கு அதில உப்பை போட்டு சாதா தண்ணியில குடுங்க. நீங்க வீட்டுக்குள்ளவே இருந்தா அதில சீனிப்போட்டு ஜில்தண்ணியில குடிங்க. வாசனை தேவை படறவங்க . அதுல ஏலகாய் விதைய போட்டும் இல்லாட்டி பண்ணீர் ஊத்தியும் குடிக்கலாம்.

        இதில சைட் எஃபக்ட் எதுவும் இல்லை ஏன்னா நாம ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செஞ்சிருக்கோம் இல்லயா ?. இதை குடிச்சி பாத்துட்டு ஜெய்லானி டீவிக்கு எப்படின்னு தகவல் தரலாம். இதுவரை ஜெய்லானி டீவியுடன் இனைந்திருத்ததுக்கு மிகவும் நன்றி வணக்கம்.

டிஸ்கி : நமது கதை அரசி வாணி அவர்கள் என் வீரத்தை உசுப்பேத்தி விட்டதால் ( நமக்கு ஏதுங்க வீரம் ) வந்தது. இது ஒரு உடனடிப்பதிவு .நாம யாரு. அந்த நரிக்கே ஊளையிட கத்துக்குடுக்கிற ஆளாச்சே!!

Friday, April 23, 2010

ஜெய்லானி டீவியில் ---நீங்களும் சமைக்கலாம்

85 என்ன சொல்றாங்ன்னா ...
                        இன்று முதல் நமது ஜெய்லானி டீவியில் சமைப்பது எப்படி என்பதை நாம் பார்க்கப் போகிறோம் .

           இன்றைய நீங்களும் சமைக்கலாம் பகுதியில் சுடுதண்ணீர் வைப்பது எப்படின்னு பாக்கலாம். சுடுதண்ணீர் வைக்கிறதுக்கு முன்னே யாருக்கு அது குடிக்கவா இல்ல குளிக்கவா, எத்தனை பேருக்கு , சூடு சொரனை ஆளுக்கு எத்தனைன்னு ஒரு பிளான் பண்ணிக்கோங்க. . அப்படி பண்ணாட்டி அது உங்க மேலயே யாரும் டெஸ்ட் பண்ணிட்டா ? அப்புறம் என் மீடியா மீது கேஸ் போடக்கூடாது என்ன புரிஞ்சிதா ?ஓகே..

          அயோடக்ஸ் இல்லாட்டி நிவியா மாதிரி கிரீம் ஒன்னு கை வசம் இருக்கட்டும் சுட்டுட்டா தடவ வேனாமா அதுக்குதாங்க., மொபைல் போன் ரெடியா இருக்கட்டும் 108 ஆம்புலன்சுக்கு இல்ல உங்க குடும்ப டாக்டருக்கு போன் பண்ண வசதியா இருக்கும். சூடு எப்படின்னு அளக்க ஒரு தெர்மா மீட்டரை ரெடியா வச்சுகோங்க ஏன் விரலை விட்டா பாப்பீங்க அதுக்குதான். தரையில ஒரு காலி அரிசி சாக்கு துணியை போட்டு வையுங்க. இல்லாட்டி தூக்கும் போது வழுக்கி விழுந்துடுவீங்க .

         அடுத்ததா பாத்திரம் சின்ன குவளையா , இல்லை பெரிய அண்டாவா , சின்ன குண்டாவா என்பதை தீர்மாணிக்க வேண்டியது உங்க பொருப்பு கடைசில தூக்க கஷ்டப்படக்கூடாது பாருங்க அதுக்குதாங்க இது, ஒரு நல்ல பிராண்ட் தீப்பொட்டியா பாருங்க கடைசி நேரத்துல கழுத்து அறுக்கும் மொத்த வேலைக்கும் ஆப்பு வைத்து நம்மை திட்டு வாங்க வச்சுடும். ஜாக்கிரத சில நேரம் அடி உதைகூட கிடைக்கும் வீட்டில உள்ள மரியாதையை பொருத்து. சிலிண்டருல  கேஸ் இருக்கான்னு பாருங்க ,அண்டா குண்டாவுக்கு கேஸ் அடுப்பு சரிஆவாது . வெறகு கட்டை போட்டு எரிக்கும் அடுப்பு சரிவரும் ஓகே..


         இப்ப நீங்க எல்லா சாமானுடன் ரெடியா இருக்கீங்க. மறந்து போனா இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க ஒரு ரெஃபரண்ஸ்சுக்கு உதவும். தெரியமா பானையை அடுப்பில வையுங்க . எத்தனை கிளாஸ் அல்லது எத்தனை அளவு என்று தீர்மானிச்சு வச்ச அளவை தண்ணீரை பானையில ஊத்துங்க. பின்ன மூடியை போடுங்க இல்லாட்டி அதுல பல்லி விழுந்து தற்கொலை பண்ணிக்கும் .கொலை கேசில உள்ள போய்டுவீங்க இதுக்கு ஜாமீன் எல்லாம் கிடைக்காது 

         நெருப்பை பத்த வச்சிட்டு ஒரு நாலு அடிதூரம் போய் குந்துங்க . ஒரு சேஃப்டிக்கு .அம்மனிகளுக்கு முன்ன ஒரு கோணி துணியை பிடிச்சிகிட்டு உட்காருவது இன்னும் நல்லது. பின்ன சேலை விக்கிற விலைக்கு  துணில ஓட்டை விழுந்தா யாரு அதுக்கு வைத்தியம் பாக்குறது. பழகிட்டா நாலு அடியை ரெண்டு அடியா கூட கொறச்சுக்கலாம். கொஞ்ச நேரத்துல கொதிக்கிற சத்தம் கேக்கும் மெதுவா ஒரு கிடுக்கியால திறந்து பாருங்க


        தெர்மாமீட்டரால மெதுவா தண்ணிக்கு மேல பிடிச்சு பாருங்க அதுல வரும் அளவு உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும் நெருப்பை அனைச்சிடுங்க . யாரையாவது தெம்பு உள்ள ஆளை கூப்பிட்டு பானையை இறக்கி வைக்க சொல்லுங்க. ஏன் விஷப்பரிச்சை . இப்ப நீங்க வெற்றிகரமா சுடுதண்ணீரை தயாரிச்சிட்டீங்க . வரும் பதிவுகளை தொடர்ந்து பாருங்க விரைவில நீங்களும் சமைக்கலாம்.