Saturday, January 7, 2012

விழிப்புணர்வு ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

           
             கால நேரங்களை படைத்தது  இறைவன் செயல்தான். அந்த நேரங்களில்  நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது  பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா  நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம் நாம வாய திறந்து சொல்லி அது மாதிரியே ஏதாவது நடந்திட்டால்  அவ்வளவுதான் . ஒரு பக்கம் நமக்கு நல்லபேர் கிடைக்கும்  அடுத்த பக்கமோ  கெட்டபேர்தான் .
        
    இந்த வகையில பிளாக் வாழ்க்கையில விழிப்புணர்வு  பதிவு அவசியமாங்கிற கேள்வி மனசுல ஓடிகிட்டு இருக்கு . பல சமயம்   மொக்கையா ஓட்டுறது பெட்டரோன்னும் தோனுது . நியூட்டனின் எதிர்வினை கொள்கைதான் காரணம் ஹா..ஹா..
    பொதுவா எல்லாருடைய வீடுகளிலும்  கிச்சனில்தான் ஃப்ரிட்ஜ்   இருக்கும் . காரணம் ஏதாவது அவசரத்துல எடுக்க வசதியான இடம் கிச்சன்தான். ஆனா மாத்தி யோசிக்கும்  போது  ரொம்பவும் டேஞ்சரா  தெரிஞ்சுது. இதை ஒரு அரபி வீட்டில  சொன்னேன் . அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே  உள்ளே நுழைக்கலாம்  அவ்வளவு பெரிசு .
    ஆனா அவர் கண்டுக்கல..இத்தனை  வருஷமா இருக்கு , தான் பார்த்த வரை பல பேர் வீட்டில இப்பிடிதானே  இருக்கு எந்த பிராப்ளமும் இல்லையேன்னு அவர் கவலை படல. நான் சொல்லிய நாலாம் நாள்  காலையிலேயே என்னைய தேடி வந்துட்டார்  .காரணம் ஃபயர் ...  கிச்சன் , அதை ஒட்டிய இரெண்டு ரூம் ,ஒரு பாத்ரூம் , ஃபிலிபைனி ரெஸ்ட் ரூம் எல்லாமே  காலி ..  இது நடந்தது எல்லாம் அரைமணி நேரத்துக்குள்ளேயே  ....அந்த இடத்தில் பிலிபைனி 2 பேர் மட்டுமே இருந்ததால்  எஸ்கேப்...இது நடந்தது அதிகாலை  3 மணி போல 

     விஷயம்  இதுதான் அவர்கள் வீட்டில இருந்த குழந்தைகள் கேஸ் பர்னரை லேசாக திருகி விட்டிருக்கு இரவின் கடைசி நேரமா இருந்ததால  யாரும் கவனிக்கல..  லேசா  லீகேஜ்  ஆன கேஸ் கிச்சன் பூரா ஆகிருக்கு. எந்த லைட்டும் , எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடல..  தற்போது குளிர் காலமா இங்கே  இருப்பதால   லேட்டா ஆட்டோமேடிகா ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் ஆன் ஆனதால அதோட ஸ்விட்ஜில எழுந்த லேசான தீப்பொறி (ஸ்பார்க்)  ஒட்டு மொத்த ஃபயரா மாறிட்டுது .
    ஏற்கனவே  அறை முழுக்க கேஸ் பரவி இருந்ததால ஆயில் பெயிண்டிங் சுவர் வரை தொடர்ந்து எரிந்து விட்டது .ஃபிலிபைனி  பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டது .சுவர் வரை கிரேக் ஆகிட்டுது
    மொத்த வீடும் கரெண்ட் இல்லாமல் இருக்க டெம்ரவரியா அந்த ஏரியாவை மட்டும்  விட்டு விட்டு மற்றதை ஆன் செய்து குடுத்தேன் .அரபி  :   நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..???  என் வீடு எரியப்போவது  உனக்கு தெரியுமா..??? 
நான் :  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .

67 என்ன சொல்றாங்ன்னா ...:

இமா க்றிஸ் said...

;))
//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது.// ம். ம். ;)
ஒண்ணுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது. ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா... முழிச்சுட்டு இருக்கறப்பவும் தெரியாமப் போனாலு போய்ரும். எது ஆனாலும் ஆகாட்டாலும் அது சொன்னவங்க குற்றம் இல்லை, நம்ம ந.நே / கெ.நே தான் :-)))

இமா க்றிஸ் said...

வாயை திறக்கக்கூடாதுன்னு சொன்னதைப் படிச்சும்.. திறந்துட்டேனே! என்ன ஆகப் போகுதோ!! ;D

Jaleela Kamal said...

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷியம்,
நிறைய வீட்டில் பிரிட்ஜ் கிச்சனில் தான், நாங்க ஹாலில் தான் வைத்து இருக்கோம்

படுக்க போகும் போது எல்லாத்தையும் ஒரு முறை செக் பண்ணிகொள்வது நல்லது
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கனும்.

Jaleela Kamal said...

.//அரபி : நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..??? என் வீடு எரியப்போவது உனக்கு தெரியுமா..???
நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது ..

ம்ம்ம்ம்ம் சொல்லும் போது கேட்டு இருகக்லாம். .

dheva said...

எரிக்கறதையும் எரிச்சுப் புட்டு....ஒண்ணும் தெரியாத மாதிரி பதிவு வேற போடுறீரார்...

இருய்யா.. உம்ம வைச்சுக்கிறேன்...!

ஹேமா said...

நீதி சரிதான்.ஆனா வெளிலயும் சொல்லக்கூடாது.ஜெய்...உங்க நாக்கு கரிநாக்கோ.வெளில சொலாதேங்கோ !

Mohamed Faaique said...

ஃப்ரிட்ஜ் இல்லாட்டி, யாராவது ஆளுதானே காலைல நெருப்பு பற்ற வைக்கப் போய் எரிஞ்சிருப்பாங்க.... ஃப்ரிட்ஜ் இருக்குரதும் நல்லதோ???

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி வாயை வச்சி உடம்பை புன்னாக்குறது இப்பிடிதானோ...?

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடியோ உயிர் சேதமில்லாமல் தப்பிச்சது புண்ணியம்தான்....!!!

குறையொன்றுமில்லை. said...

இது மஹா அவஸ்தைதான். தெரிஞ்சதை சொல்லப்போனே நீ சொன்னதாலத்தனே இப்படி ஆச்சுன்னு வேர வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கே.

vanathy said...

என்னவோ போங்க. நீங்க சொல்லி எரிஞ்சுதுன்னு அவர் கடுப்பிலை இருக்கிறார். உயிர் சேதம் இல்லாம போனதே பெரிசு. நாங்கள் முன்பு குடியிருந்த அப்பார்மென்ட் கீழ் ஃப்ளோர் எரிய, நாங்கள் எதுவுமே தெரியாமல் மேல் ஃப்ளோரில் இருந்தோம். அது பழைய கால கட்டிடம். நல்ல உறுதியா கட்டியிருந்தார்கள். இதே வீடாக இருந்தா எல்லாமே சாம்பல் தான். ஆட்கள் உட்பட.

Asiya Omar said...

அட இப்படி புளியை வயிற்றில் கரைக்க கூடாது.அட எங்க வீட்டில் ஃப்ரிட்ஜ் கிச்சனில் இருக்கு.உஷாரோ உஷார்.

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இல்லாத நேரம் பார்த்து கரெக்ட்டா தலைப்பைப் போட்டு, எனக்கு வடை கிடைக்காமல் பண்ணினதும் இல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நில்லுங்க வாறேன்... என்னாது அரபி விட்டுக்குள் ஒட்டகமோ? அவ்வ்வ்வ்வ்வ் அங்கின ஒட்டகம் பூராம பின்ன என்ன எலியோ பூரும்... ஹையோ காலுக்கு கீழ ஏதோ ஓடின மாதிரி இருக்கே....:)).

athira said...

//அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே உள்ளே நுழைக்கலாம் அவ்வளவு பெரிசு .//
அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

அதெதுக்கு அதிகாலை 3 மணிக்கு கீழ கரெக்ட்டா “அந்தப்படம்” போட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:).

athira said...

//ஃபிலிபைனி பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள்///

இதெப்பூடி ஜெய்க்குத் தெரியும்? ஹையோ நானில்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))

athira said...

//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .///

இல்ல திட்டு வாங்குவதுதான் விதி என இருந்தால் அதை மாற்ற முடியாது, வாய் திறக்காட்டிலும் கேட்பினம், உனக்குத் தெரியும்தானே, இதை முதல்லயே வாயைத் திறந்து சொல்லியிருக்கலாமெல்லோ என..

ஜெய்லானி said...

////ஃபிலிபைனி பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள்///

இதெப்பூடி ஜெய்க்குத் தெரியும்? ஹையோ நானில்ல நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)) //


நல்ல வேளை நான் பதிவு எழுதுவது அந்த அரபிக்கு தெரியாது இதை படிச்சாலே போதும் என் கதி அதோ கதிதா அவ்வ்வ்வ்வ் :-)))

athira said...

ஹா..ஹா...ஹா... பயப்புடுறமாதிரி நடிச்சுக்காட்ட்டுறீங்க இல்ல??:))).. ஜெய்யாவது பயப்புடுறதாவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

Anonymous said...

நல்ல விழிப்புணர்வு பதிவுதான் ஆனா என் தூக்கத்த கெடுத்திட்டிங்க. எங்க வீட்டுலயும் கிச்சென் ல தான் பிரிட்ஜ் இருக்கு!! எப்போதும் ஜாக்கிரதையா இருக்கணும் ஜலீலா சொன்னது போல

ப.கந்தசாமி said...

//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது.//

இப்பத்தான் உங்களுக்குத் தெரிந்ததா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

யோசிக்கவேண்டிய விசயம். நல்லாதான் யோசிச்சுருக்கீங்க..

பாவம் அந்த அரபியா?.. இல்ல ஜெய்லானியா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

r.v.saravanan said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Mahi said...

உபயோகமான தகவல் ஜெய் அண்ணா. யு.எஸ்.ல எல்லா வீட்டிலும் மோஸ்ட்லி கிச்சன்லதான் ப்ரிட்ஜ் இருக்கு.:)

உங்களுக்கு நேரம் கெட்டுக்கிடக்கு போல..சாக்கிரதையாவே இருங்க,எதுக்கும்! ;):)

ஜெய்லானி said...

@@@இமா--//;))
//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது.// ம். ம். ;)//

வாங்க ...வாங்க..!! நல்லாவே தலையை ஆட்டுறீங்க இது ஆமாவா ..?? இல்லையா..??? ஹி...ஹி... :-))
//ஒண்ணுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது. ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா... முழிச்சுட்டு இருக்கறப்பவும் தெரியாமப் போனாலு போய்ரும். எது ஆனாலும் ஆகாட்டாலும் அது சொன்னவங்க குற்றம் இல்லை, நம்ம ந.நே / கெ.நே தான் :-))) //

அட மேலேயே சொல்லிட்டேனே ... ந.நே./ கெ.நே அப்பிடின்னு ஒன்னுமே இல்லை :-)

//வாயை திறக்கக்கூடாதுன்னு சொன்னதைப் படிச்சும்.. திறந்துட்டேனே! என்ன ஆகப் போகுதோ!! ;D //

இது தெரிஞ்சி செய்யக்கூடியவங்களுக்கு தெரியாம செய்யக்கூடியவங்களுக்கு இல்லை ஹா..ஹா.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷியம்,நிறைய வீட்டில் பிரிட்ஜ் கிச்சனில் தான், நாங்க ஹாலில் தான் வைத்து இருக்கோம் //

வாங்க வாங்க..!! இதுவே பழைய கால ஓட்டு வீடா இருந்தா அதுவா எக்ஸாஸ்டாகிடும் இப்போது ஸீலிங் வீடா இருப்பதால கேஸ் வெளியேற இடம் கிடைப்பதில்லை .

//படுக்க போகும் போது எல்லாத்தையும் ஒரு முறை செக் பண்ணிகொள்வது நல்லது
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கனும். //

ம்..ஆமா ..அதேப்போல அடிக்கடி கேஸ் பைப்பையும் கவணிக்கனும் வெடிப்பு இல்லாம இருக்கான்னும் :-)

//டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது ..

ம்ம்ம்ம்ம் சொல்லும் போது கேட்டு இருகக்லாம். //


அதுக்குதான் இப்போ சொல்லிட்டேனே ஹி... ஹி... :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@dheva--//எரிக்கறதையும் எரிச்சுப் புட்டு....ஒண்ணும் தெரியாத மாதிரி பதிவு வேற போடுறீரார்...

இருய்யா.. உம்ம வைச்சுக்கிறேன்... //

வாங்க பாஸ் வாங்க ..!! நீங்களே மாட்டி விட்டுடுவீங்கப்போலிருக்கே அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --//ஃப்ரிட்ஜ் இல்லாட்டி, யாராவது ஆளுதானே காலைல நெருப்பு பற்ற வைக்கப் போய் எரிஞ்சிருப்பாங்க.... ஃப்ரிட்ஜ் இருக்குரதும் நல்லதோ??? //


வாங்க ஃபாயிக் வாங்க..!! நீங்க சொல்றதும் ஒரு வகையில நல்லதுதான் . இதுல கொடுமை என்னன்னு சொன்னா ஹீட்டரும் (கெய்சர்) வெடிச்சதுதான் .அதனாலதான் சேதம் அதிகம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//நீதி சரிதான்.ஆனா வெளிலயும் சொல்லக்கூடாது.ஜெய்...உங்க நாக்கு கரிநாக்கோ. வெளில சொலாதேங்கோ ! //

வாங்க குழந்தை நிலா வாங்க..!! என் அம்மா விற்கு பிறகு இப்போது நீங்கதான் அதே டைலாக்கை சொல்லி இருக்கீங்க . எல்லாம் அவன் செயல் ஹா...ஹா... :-))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//அடப்பாவி வாயை வச்சி உடம்பை புன்னாக்குறது இப்பிடிதானோ...? //

வாங்க ..வாங்க..!! எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாக்க மாட்டோமா ..!! ( உபயம் : விஜய்) ஹா..ஹா..

//எப்பிடியோ உயிர் சேதமில்லாமல் தப்பிச்சது புண்ணியம்தான்....!!!//

இப்போ அந்த ஆள் என்னைய பார்த்தாலே நடுங்குகிறார் ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--//இது மஹா அவஸ்தைதான். தெரிஞ்சதை சொல்லப்போனே நீ சொன்னதாலத்தனே இப்படி ஆச்சுன்னு வேர வாங்கி கட்டிக்க வேண்டி இருக்கே. //


வாங்க..வாங்க..!! இப்போ அதுதான் நடந்துகிட்டு இருக்கு ஹா..ஹா.. :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//என்னவோ போங்க. நீங்க சொல்லி எரிஞ்சுதுன்னு அவர் கடுப்பிலை இருக்கிறார். உயிர் சேதம் இல்லாம போனதே பெரிசு. //

வாங்க வான்ஸ் வாங்க ..!! இங்கே அரபி வீடுகள் கிச்சன் , ஸ்டோர் ரூம் + ஹவுஸ் மேட் ரூம் எல்லாமே தனியா வீட்டை விட்டு தள்ளிதான் இருக்கும் . நம்ம வீடுகள் போல ஒரே போர்ஷனா இருக்காது .

//நாங்கள் முன்பு குடியிருந்த அப்பார்மென்ட் கீழ் ஃப்ளோர் எரிய, நாங்கள் எதுவுமே தெரியாமல் மேல் ஃப்ளோரில் இருந்தோம். அது பழைய கால கட்டிடம். நல்ல உறுதியா கட்டியிருந்தார்கள். இதே வீடாக இருந்தா எல்லாமே சாம்பல் தான். ஆட்கள் உட்பட.//

கேட்கவே டெரரா இருக்கு :-( .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//இப்படி புளியை வயிற்றில் கரைக்க கூடாது.அட எங்க வீட்டில் ஃப்ரிட்ஜ் கிச்சனில் இருக்கு. உஷாரோ உஷார். //

வாங்க..வாங்க..!! முதல்ல இடத்தை மாத்துங்க . கேஸ் வேலை முடிஞ்சதும் மறக்காம ரெகுலேட்டரை நல்லா குளேஸ் செய்து வையுங்க :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இல்லாத நேரம் பார்த்து கரெக்ட்டா தலைப்பைப் போட்டு, எனக்கு வடை கிடைக்காமல் பண்ணினதும் இல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//
வாங்க அதிஸ் வாங்க..!! போஸ்ட் போடும் நேரம் பூஸ் வீட்டில இருக்கான்னு பார்த்து போடுறேன் ஹி..ஹ்.ஹி... அதே நேரம் அங்கே டீச்சர் தூங்கிகிட்டு இருப்பாங்க .அப்புறம் தலையில நங்குன்னு குட்டினா ..?????
//நில்லுங்க வாறேன்... என்னாது அரபி விட்டுக்குள் ஒட்டகமோ? அவ்வ்வ்வ்வ்வ் அங்கின ஒட்டகம் பூராம பின்ன என்ன எலியோ பூரும்... ஹையோ காலுக்கு கீழ ஏதோ ஓடின மாதிரி இருக்கே....:)). //

ஹா.....ஹா.... நல்லா பாருங்க குட்டி எலியா இருக்க போகுது ...ஐ..நான் ஒன்னுமே சொல்லலை....:-)))
////அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே உள்ளே நுழைக்கலாம் அவ்வளவு பெரிசு .//
அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) //

பழைய காலத்து மர பீரோ போல பெரிய சைஸ் .

//அதெதுக்கு அதிகாலை 3 மணிக்கு கீழ கரெக்ட்டா “அந்தப்படம்” போட்டிருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:).//

ஆஹா....வாய திறக்க வச்சிடுவீங்கப்போலிருக்கே அவ்வ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira-//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .///

இல்ல திட்டு வாங்குவதுதான் விதி என இருந்தால் அதை மாற்ற முடியாது, வாய் திறக்காட்டிலும் கேட்பினம், உனக்குத் தெரியும்தானே, இதை முதல்லயே வாயைத் திறந்து சொல்லியிருக்கலாமெல்லோ என.. //

ஓஹ்ஹ்...நீங்க அந்த ரூட்டில வறீங்களா..?? ஆனாலும் வாய திறக்கக்கூடாது .அதான் உடலுக்கும் மனசுக்கும் நல்லது ஹா..ஹா.. :-))

ஜெய்லானி said...

@@@athira--//ஹா..ஹா...ஹா... பயப்புடுறமாதிரி நடிச்சுக்காட்ட்டுறீங்க இல்ல??:))).. ஜெய்யாவது பயப்புடுறதாவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). //

வாங்க வாங்க..!! இப்பிடி எல்லாருமே கோத்து விட்டுதான் ஒரே ரண களமா இருக்கு . நான் ரொம்ப நல்ல பிள்ள பிறக்கிறதுக்கு முன்னாலிருந்தே ஹி...ஹி... :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@En Samaiyal --//நல்ல விழிப்புணர்வு பதிவுதான் ஆனா என் தூக்கத்த கெடுத்திட்டிங்க. எங்க வீட்டுலயும் கிச்சென் ல தான் பிரிட்ஜ் இருக்கு!! எப்போதும் ஜாக்கிரதையா இருக்கணும் ஜலீலா சொன்னது போல //

வாங்க வாங்க..!! உண்மைதான் .முடிஞ்ச வரை நாம சேஃப்டியா இருப்பது நல்லதுதானே. நமது பாதுகாப்பிற்காக ஐந்து நிமிடம் செலவு செய்வது நல்லதுதானே :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பழனி.கந்தசாமி--//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது.//

இப்பத்தான் உங்களுக்குத் தெரிந்ததா? //

வாங்க வாங்க ..!! ஆமாங்க ரொம்ப லேட் ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//யோசிக்கவேண்டிய விசயம். நல்லாதான் யோசிச்சுருக்கீங்க.. //

வாங்க பாஸ் வாங்க ..!! தியேட்டருக்கு போனாலே கார்னர் சீட்தான் அவ்வளளோ பயம்ம்ம்ம்ம்ம் ஹா..ஹா..

//பாவம் அந்த அரபியா?.. இல்ல ஜெய்லானியா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

நான் தாங்க பாவம் சும்மா லேசா மிரட்டினாலே போதும் பயந்துகிட்டு திரும்பி பாக்காம தலைதெறிக்க ஓடிடுவேன் ஹி...ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan --//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

வாங்க ..வாங்க..!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--//உபயோகமான தகவல் ஜெய் அண்ணா. யு.எஸ்.ல எல்லா வீட்டிலும் மோஸ்ட்லி கிச்சன்லதான் ப்ரிட்ஜ் இருக்கு.:) //

வாங்க ..வாங்க..!! இங்கேயும் இப்போ புதுசா கட்டும் பில்டிங்..ஃபிளாட்டுகளில் அமேரிக்க டைப்பிலதான் கட்டுறாங்க ..என்ன டேஸ்டியோ தெரியல...வீடுக்குள்ளே போனதும் முதல்ல கிச்சன்தான் வருது ..

//உங்களுக்கு நேரம் கெட்டுக்கிடக்கு போல.. சாக்கிரதையாவே இருங்க,எதுக்கும்! ;):) //

ஏங்க மஹி நீங்களும் என்னைய பயமுறுத்துறீங்களே அவ்வ்வ்வ் :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எலிக்குட்டி said...

அண்ணேஏஏஏ அண்ணேஏஏஏ உங்களை டீச்சரம்மா புடிச்சிடாங்களா அண்ணேஏஏ!!!

Angel said...

நல்லதுக்கே காலமில்லை !!.
உதவி செஞ்சாலும் தப்பு /டவுட்டை கேட்டாலும் தப்பு /சந்தேகத்தை கேக்காட்டியும் தப்பு ...என்ன செய்ய .ஆனாலும் .சிறு பிள்ளைகள் இருக்கற
வீட்ல கவனமாதான் இருக்கணும் .
நேற்று IKEA சென்றிருந்தோம் அங்கே ஷோ ரூம்ல வச்சிருக்க ஓவனை ஒரு சின்ன குட்டி பெண் நோப்ஸ் எல்லாம் திருப்பி திருப்பி பாக்குது ....வீட்லயும் இதே தானே செய்யும் .இந்த கால பசங்களுக்கு க்யுரியாசிடி அதிகம் .
பெரியவங்க கவனமா இருக்கணும் .யாராவது நல்லவங்க(ஜெய் மாதிரி ) சந்தேகத்தை அல்லது எச்சரிக்கை செய்தாலும் எடுத்துக்கணும்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

பச்சைப்பூவுக்குச் சோடியா எலிக்குட்டி பச்சைச் சட்டை போட்டு வந்திருக்கே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... இன்னும் என்ன வெல்லாம் முளைக்கப்போகுதோ?:)))

இமா க்றிஸ் said...

//உங்களை டீச்சரம்மா புடிச்சிடாங்களா அண்ணேஏஏ!!!// ஆமாம். ;)
சட்டை கலர் நல்லாருக்கு எலீ..

ஜெய்லானி said...

@@@எலிக்குட்டி --//அண்ணேஏஏஏ அண்ணேஏஏஏ உங்களை டீச்சரம்மா புடிச்சிடாங்களா அண்ணேஏஏ!!! //

வாங்க புது வரவு வாங்க ..!! டீச்சரம்மா புடிக்கிரது இருக்கட்டும் .. உங்க ஏரியா சவுதி, இல்ல கத்தார்-ன்னு சொல்லுதே உண்மையா ஹா..ஹா.. :-) இன்னொரு தடவை வாங்க கரெக்டா சொல்ரேன் ஹா..ஹா.. :-))உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//வாங்க புது வரவு வாங்க ..!! டீச்சரம்மா புடிக்கிரது இருக்கட்டும் .. உங்க ஏரியா சவுதி, இல்ல கத்தார்-ன்னு சொல்லுதே உண்மையா ஹா..ஹா.. :-) இன்னொரு தடவை வாங்க கரெக்டா சொல்ரேன் ஹா..ஹா.. :-))உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி///

என்னாது... புதுக்கதையாக் கிடக்கே, ஜெய் என்ன சொல்றீங்க?... சவூதி, ஹத்தாரா? ஹையோ.... எனக்கு காலைக் கீழ வைக்கவே பயமாக்கிடக்கே:)... எல்லா வீட்டிலயும் எலிப்பொறி, நல்ல ஸ்ரோங்கா வச்சிட்டுக் காவல் இருந்தால் மாட்டாமல் போகாது, இனி வரட்டும் என் பக்கம், நானும் கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டிருக்கிறேன்:).

ஜெய்லானி said...

@@@angelin--//நல்லதுக்கே காலமில்லை !!.
உதவி செஞ்சாலும் தப்பு /டவுட்டை கேட்டாலும் தப்பு /சந்தேகத்தை கேக்காட்டியும் தப்பு ...என்ன செய்ய .//

வாங்க வாங்க..!! பிளாக் பக்கமே வராம இருந்தா ஒரு வேளை தொந்திரவு இருக்காதோ என்னவோ ஹா..ஹா... :-)))

//ஆனாலும் .சிறு பிள்ளைகள் இருக்கற
வீட்ல கவனமாதான் இருக்கணும் .
நேற்று IKEA சென்றிருந்தோம் அங்கே ஷோ ரூம்ல வச்சிருக்க ஓவனை ஒரு சின்ன குட்டி பெண் நோப்ஸ் எல்லாம் திருப்பி திருப்பி பாக்குது ....வீட்லயும் இதே தானே செய்யும் .இந்த கால பசங்களுக்கு க்யுரியாசிடி அதிகம் .
பெரியவங்க கவனமா இருக்கணும் .//

பாத்தீங்களா....எம் டி ஸ்டவ்விலேயே இப்பிடின்னா வீட்டில டேஞ்சர்தான் . முடிஞ்ச வரை குழந்தைகள் நம் பார்வையிலேயே இருக்கனும் இது ஒன்றுதான் தீர்வு :-)

//யாராவது நல்லவங்க(ஜெய் மாதிரி ) சந்தேகத்தை அல்லது எச்சரிக்கை செய்தாலும் எடுத்துக்கணும் //

இங்கேயுமா....??அவ்வ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//பச்சைப்பூவுக்குச் சோடியா எலிக்குட்டி பச்சைச் சட்டை போட்டு வந்திருக்கே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்.... இன்னும் என்ன வெல்லாம் முளைக்கப்போகுதோ?:))) //

வாங்க...வாங்க ..!! ஸ்டிராங்கான பொரி வச்சிருக்கேன் வரட்டும் வரட்டும் ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//உங்களை டீச்சரம்மா புடிச்சிடாங்களா அண்ணேஏஏ!!!// ஆமாம். ;)
சட்டை கலர் நல்லாருக்கு எலீ.. //

வாங்க ...வாங்க..!! சட்டை கலர் மட்டுமா கையில ஸ்கார்ஃப் இருப்பதை கவனிக்கலையா ((எங்கேயோ இடிக்குதே ))ஹா..ஹா... :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//என்னாது... புதுக்கதையாக் கிடக்கே, ஜெய் என்ன சொல்றீங்க?... சவூதி, ஹத்தாரா? ஹையோ.... எனக்கு காலைக் கீழ வைக்கவே பயமாக்கிடக்கே:)... எல்லா வீட்டிலயும் எலிப்பொறி, நல்ல ஸ்ரோங்கா வச்சிட்டுக் காவல் இருந்தால் மாட்டாமல் போகாது, இனி வரட்டும் என் பக்கம், நானும் கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டிருக்கிறேன்:).//

வாங்க...வாங்க..!!! நான் இருக்கும் போது (ஆன் லைனில்) வந்தால் உடனே பிடிச்சுடுவேன் :-)) .நீங்க பார்பிகியூ மிஷினை ரெடியா பிரிஹீட் செய்து வையுங்க ..:-)))ஆடோமேடிக்கா ரெக்கார்ட் ஆகும் ஸிஸ்டம் வச்சிருக்கேன் ஹா..ஹா... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இமா க்றிஸ் said...

//ஆடோமேடிக்கா ரெக்கார்ட் ஆகும் ஸிஸ்டம் // !!! அது எல்லா விதமான எலியையும் புடிக்குமா!! ம்ஹும்! புடிக்காதுன்னு தோணுது ஜெய். ;D

*anishj* said...

//அரபி : நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..??? என் வீடு எரியப்போவது உனக்கு தெரியுமா..??? //

”என் வீடு எரியப்போவது உனக்கு தெரியுமா..???”-- இதுதான் உண்மைனு நினைக்கிறேன்...!
ஹை... நீங்க சொல்றது அப்படியே நடந்திடும்போல... 2012ல உலகம் அழிஞ்சிடும்னு இங்க “சிலர்” சொல்லிட்டுதிரியுறாங்க... அது உண்மையானு ஒருவாட்டி பார்த்து சொல்லுங்களேன்... ;)

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி பாஸ்...! :)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

///ஹை... நீங்க சொல்றது அப்படியே நடந்திடும்போல... 2012ல உலகம் அழிஞ்சிடும்னு இங்க “சிலர்” சொல்லிட்டுதிரியுறாங்க... அது உண்மையானு ஒருவாட்டி பார்த்து சொல்லுங்களேன்... ;)//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன உலகம் அழிவதைப் பார்த்திட்டுச் சொல்லவேணுமோ? ஹையோ ஹையோ அப்போ கவிக்காவை எங்கின தேடிப் புடிப்பது...?:)) உஸ் சும்மா இருந்தாலும் என் வாயை கிளறி என்னை ரொம்ப நல்ல பொண்ணாக்கப்பார்க்கினமே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))

Priya said...

//இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது// யோசிக்க வேண்டிய விஷ‌யம்......:-)

சென்னை பித்தன் said...

உங்களுக்கு ஈ.எஸ்.பி.இருக்குதோ?

அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

/நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..??? என் வீடு எரியப்போவது உனக்கு தெரியுமா..??? / இது நல்ல பிஸினஸா இருக்கே....அப்படியே ஒரு குடுகுடுப்பையை எடுத்துகிட்டு டெய்லி ஒரு ஏரியா கவர் பண்றது?! கிடைக்கிற கமிஷன் (காசுல மட்டும்) 50 50... அப்பப்ப போலீஸ் தர்ற அவார்டு, ஊக்கத்தொகை இதெல்லாம் நீங்க வச்சுக்கங்க... டீல் எப்டி?! ;-) அப்புறம் துபை, அபு தாபினு பிஸினஸ டெவெலப் பண்ணிக்கலாம்...

பித்தனின் வாக்கு said...

இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது ..

ம்ம்ம்ம்ம் சொல்லும் போது கேட்டு இருகக்லாம். .

ha ha ha jailanikku marriage aakum thakuthi vanthu vittathu.. imm seekiram dum dum kottungappa....

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஜெய்... பொறுத்ததுபோதும் விழித்தெழுங்க:)).. நெடுகவும் தூங்கப்பூடா:)).

எம் அப்துல் காதர் said...

பாஸ் கொஞ்சம் சூடா டீ கிடைக்குமா? இங்க வெளில ரொம்ப குளிரா இருக்கு ஹி.. ஹி..

மனோ சாமிநாதன் said...

தீ பிடித்த வித‌ம் அறிய பயங்கரமாகத்தான் இருக்கிறது. யாராக இருந்தாலும் படுக்கச் செல்லும்போது சமையலறைக்கு ஒரு விசிட் அடித்து கண்காணித்து வந்து படுப்பது இந்த மாதிரி விபத்துக்களைக் குறைக்கும்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//எம் அப்துல் காதர் says:
22/1/12 6:01 PM

//
பாஸ்//

எங்கேயோ இடிக்குதே அவ்வ்வ்வ்வ்வ்:)) ஜெய் கண்டுபிடிச்சாச்சு... பச்சைச்சட்டை அவ்வ்வ்வ்வ்வ்:))).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//எம் அப்துல் காதர் says:
22/1/12 6:01 PM
பாஸ் கொஞ்சம் சூடா டீ கிடைக்குமா? இங்க வெளில ரொம்ப குளிரா இருக்கு ஹி.. ஹி.//

சும்மா இருக்கிற சிங்கத்தை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... குளிர்ந்தால் சுவெட்ட்டர் போடுங்கோவன்... ஹையோ என் வாய் அடங்காதாமே....:)))

ஜெய்லானி said...

@@@இமா--//ஆடோமேடிக்கா ரெக்கார்ட் ஆகும் ஸிஸ்டம் // !!! அது எல்லா விதமான எலியையும் புடிக்குமா!! ம்ஹும்! புடிக்காதுன்னு தோணுது ஜெய். ;D //

வாங்க..வாங்க..!! பார்பிகியூ..வச்சி க்கூட சிலப்பேரு டிரை செய்யுராங்க அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@*anishj*--// இதுதான் உண்மைனு நினைக்கிறேன்...!
ஹை... நீங்க சொல்றது அப்படியே நடந்திடும்போல ... 2012ல உலகம் அழிஞ்சிடும்னு இங்க “சிலர்” சொல்லிட்டுதிரியுறாங்க... அது உண்மையானு ஒருவாட்டி பார்த்து சொல்லுங்களேன்... ;)

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி பாஸ்...! :) //

வாங்க ...வாங்க..!! அந்த ஒரு சிலர் என்னை நதியில தூக்கி போட்டுடுவாங்கன்னு ஒரு பயமா இருக்கு.அதனால சொல்லமாட்டேனே ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன உலகம் அழிவதைப் பார்த்திட்டுச் சொல்லவேணுமோ? //

வாங்க வாங்க..!! அதான் 2012 படம் வந்துச்சே இன்னும் பார்க்கலையா ஹா..ஹா.. :-)))
//ஹையோ ஹையோ அப்போ கவிக்காவை எங்கின தேடிப் புடிப்பது...?:)) உஸ் சும்மா இருந்தாலும் என் வாயை கிளறி என்னை ரொம்ப நல்ல பொண்ணாக்கப்பார்க்கினமே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))) //
வெனிஸ் எரிஞ்சப்போ நீரோ மன்னன்ஃபிடில் வாசிச்சதைப்போல அப்பவும் கவிக்கா எங்கையாவது கவிதைதான் எழுதிகிட்டு இருப்பார் போல ..விடுங்க பூஸ் எபப்டியும் தேடி கண்டு பிடிச்சிடலாம் ஹா..ஹா.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் -//பாஸ் கொஞ்சம் சூடா டீ கிடைக்குமா? இங்க வெளில ரொம்ப குளிரா இருக்கு ஹி.. ஹி.. /

வாங்க ..வாங்க..!! குளிருக்கு டீ காஃபி எதுக்கு ஒரு கிளாஸ் மிளகாய் தூளை சுடுதண்ணீரில கரைச்சு குடிங்க ..அப்புரம் பாருங்க குளிராவது ஒன்னாவது ஹி...ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))