ஜுலை 2010
ரூம் மேட்டுடன் ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம் சிட்டியை வலம் வந்தோம் . பேசிக்கொண்டே வரும் போது அவன் சொன்னான் . காலையிலிருந்தே காது லேசாக அடைப்பது போல இருக்கு பேசுவது எதுவும் சரியா கேக்கலன்னு சொன்னான் .((ஒரு வேள நம்ம போடும் மொக்கைக்கு பயந்துட்டானோ )) இங்கே ஒரு சையண்டிஸ்ட் வேஸ்டா ((யாரு நாந்தேன் )) இருக்கும் போது கிடைச்ச சான்ஸ விடலாமா வா பக்கத்திலிருக்கும் கிளினிக்குக்கு போகலாமுன்னு வலு கட்டாயமாக கூட்டிகிட்டு போனேன் .
போன இடத்தில் ஒரு ரிஷப்ஷனிஸ்ட் புன்சிரிப்புடன் (ஆடு மாட்டிகிச்சுங்கிரமாதிரி )டாக்டரிடம் உள்ளே அழைத்துப்போனாள்.அங்கே இருந்ததோ மொத்தமே எங்களை சேர்ந்தது நாலே பேர்தான் . ரூம் மேட்டை அந்த ராட்சத நாற்காலியில் உட்கார வைத்து காதுக்குள் லேசான சுடுதண்ணியை ஸ்பிரே செய்து ஒரு ரூபாய்க்கு பஞ்சை வைத்து சுத்தம் செய்து (ரெண்டு காதுக்கும் சேர்த்து ) 150 Dhs வாங்கிகிட்டார் . நண்பன் அழுதுகிட்டே மொய் வச்சான் .
திரும்ப வரும் போது அமைதியா வந்தான் . ஏண்டா என்ன ஆச்சி இப்பதான் காது நல்லா கேட்குமே ஏன் பேசாமல் வருகிறாய்ன்னு கேட்ட்துக்கு . ஏதாவது ஒன்னு தப்பி தவறி என் வாயில் வந்தா நீ உடனே என்னை ஐ சி யூ விலேயே அட்மிட் செய்துடுவாய் அதான் வாயை திறக்கவே பயமா இருக்குன்னு சொன்னானே பார்க்கலாம் .
இப்பல்லாம் எந்த பிரச்சனை இருந்தாலும் உஷரா வாயை திறப்பதே இல்லை. ஒரு வேளை பயபுள்ள திருந்திட்டானோ ...!!
ஆகஸ்ட் 2010
 |
இந்த தொடர் இதிலாவது முடியுமா..?? பொறுமையை சோதிக்கிறானே...!!! |
ஒரு கஞ்சப்பய அன்னைக்கி பார்த்துதான் விருந்துக்கு கூப்பிட்டான் , என்னது இது ஏதாவது மழைவறதுக்கு அறிகுறியா ? இல்லை , நம்ம ஏழரை என்னைய விட்டுட்டு போய்ட்டுதான்னு சந்தேகப்பட்டுகிட்டே கூட போனேன் . ஏதோ வீட்டுல சந்தோஷமான விஷயம் நடந்திருக்குப்போல . ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்தான் . (( நானும் அவனும் மட்டுமே )).
எதை பத்தியும் கவலைப்படாதேன்னு நிறைய ஐட்டங்கள் ஆர்டர் செய்தான் .அன்லிமிட் பஃபே டைப் ஒரு வழியா சாப்பிட்டு முடிந்ததும். தன்னோட கிரடிட் கார்டை குடுத்தான் . கொண்டு போன சர்வர் அதே வேகத்துடன் திரும்ப வந்தான் . கார்டு வேலை செய்யலையாம் . இதென்ன சோதனைன்னு நினைச்சிகிட்டே டெபிட் கார்டை சர்வரிடம் நீட்டினான் . திரும்பவும் சர்வர் அதே வேகத்துடன் திரும்ப வந்து இந்த கார்டும் வேலை செய்யலைன்னு திரும்ப குடுத்துட்டான்.
இரெண்டு கார்டும் ஒரே பேங்க்தான் .என்ன பிரச்சனைன்னு தெரியல , வெளியே இருக்கும் ஏ டி எம்மில் போய் என்னை எடுத்து வரும் படி சொன்னான் . நானும் ரெண்டு கார்டையும் வாங்கி கிட்டு வெளியே வந்தேன் . கார்டு இரெண்டுமே ஏ டி எம்மில் சரியாகவே வேலை செய்தது . பணம் எடுத்துக்கிட்டு வரும் போது சரியாக என் பாஸ் வந்து என் கையபிடிச்சி உடனே வா (ஹெட்) ஆஃபீஸில நெட் ஒர்க் வேலை செய்யலன்னு காருக்குள்ளே தள்ளி விட்டார் .
நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர் போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி .கொலவெறியில உட்கார்ந்திருந்ததா தகவல் .((நான் ஒரு 10 நாள் கழிச்சிதான் அவனையே பார்த்தேன்)) .ம்ம்ம்ம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ஹோட்டல் போகும் போது என்னிடம் போன் கையில் இல்லை ரூமிலேயே மறந்து வச்சிட்டு போய்ட்டேன்
செப்டம்பர் 2010
ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில 15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஆண்களை விட பெண்களே அதிகம் . ஒரு வேளை ஆண்களுக்கு படிப்பே ஏறாதோ என்னவோ .
முதல் நாள் புரபஷர் மாதிரி ஒருத்தர் வந்து அரைமணி நேரம் சொந்த புராணத்தை பாடினார் . என்ன கொடுமை இது எங்கே போனாலும் இவனுங்க தொல்லை தாங்கமுடியலைப்பா ..!! அதுல முக்கியமா அவர் சொன்னது இதுதான் .அவரும் அதே ((இதே)) இன்ஸ்டிடியூஷனில் படித்து அங்கேயே அவருக்கு வேலை கிடைத்து இருக்கு அதை பெருமையா சொன்னார் .
இங்கே படிப்பு அவ்வளவு மட்டமாவா இருக்கு .வெளியே வேலை கிடைக்காமதான் .இவர் இங்கேயே வேலை பார்க்குறார் போல. இதுல நாம் இங்கே படிச்சால் என்ன ஆகுறது அவ்வ்வ்வ்.. அடுத்த நாளிலிருந்து இந்த ஏரியா பக்கமே தலை வச்சி படுக்கல..ஹி...ஹி...
 |
நா வரமாட்டேன் ....நா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...!! |
அக்டோபர் 2010
ஒரு யூ எஸ் பி டிரைவை வைரஸ் செக் செய்துகிட்டு இருக்கும் போது அதுல ஏகப்பட்ட மால்வேர் டிடக்ட் ஆகிட்டே இருந்துச்சி . அதுல இருக்கும் ஒவ்வொரு exe ஃபைலையும் போல்டர் exe பைலா அது டூப்ளிகேட்டா காப்பி செய்து இருந்தது தெரிய வந்துச்சி . ஒரு கட்டத்துல அது அப்படியே மேற்கொண்டு தொடராம அப்படியே நின்னுடுச்சி .எந்த ஒரு கீபோர்ட் , மவுஸும் செயல்படல .
கம்ப்யூவை ஒரு தடவை அப்படியே ஸ்விட்ஜ் ஆஃப் செய்துட்டு திரும்ப ஆன் செய்தால் கருப்பு ஸ்கிரீனில் சீடி டிரைவில இருப்பதை வெளியே எடுத்து விட்டு ஆன் செய்யும் படி சொன்னது . அப்படி இல்லாவிட்டால் ரீஸ்டார்ட் செய்யும் படி சொன்னது . உள்ளே இருக்கும் 80 ஜிபி ஐட்டமும் காலி ப்போலன்னு நினைச்சி ஒரே பீலீங் .
என்ன செய்தாலும் அதே கருப்பு ஸ்கிரீன் அதே ரீஸ்டார்ட் . கிட்ட தட்ட 3 மணி நேரமும் டிரை செய்தும் ஒன்னும் ஆகல . கடைசியா பி சி பின் பக்க கதவை திறந்து விட்டு காற்று அடிக்கும் ஏர் புளோரை வைத்து நன்றாக ((பிராச்சர் ஃபேன் , பவர் சப்ளை உள்ளே , அவுட் ஃபேன் )) காற்றடித்து உள்ளே இருக்கும் தூசியை வெளியேற்றினேன்.
திரும்ப ஆன் செய்யும் போது எந்த தொந்திரவும் செய்யாமல் நல்ல பிள்ளையை போல அமைதியா வேலை செய்தது. பவர் சப்ளையிலோ அல்லது பிராச்சர் மேலே இருக்கும் ஃபேன் இதுல ஏதாவது தூசி சேர்ந்தாலோ அல்லது சின்ன எலக்டிரிக் தடங்கல் வந்தாலும் கம்ப்யூ ஸ்லோவா ஆகிடும்.
இதுல உள்ள நீதி என்னன்னா அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்) களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்
நவம்பர் 2010
இது வரை மத்தவங்களுக்கு பல்ப் குடுத்து வந்த எனக்கு மொத்தமா பல்ப் கிடைச்ச கதை இது அவ்வ்வ்வ்...மேலே நன்பணின் கிரெடிட் கார்டு அனுபவங்களால், கிரெடிட் கார்டுகளை வெளியே கொண்டு போவதில்ல்லை . அதுக்கு பதில் டெபிட் கார்டை கொண்டு போனேன். ஒரு ஷாப்பிங் மாலில் மாடியில் 50 க்கு பர்ஸேஸ் செய்தேன் . அதுக்கு பிறகு கீழே வந்து 500க்கு பர்ஸேஸ் செய்யும் போது பணம் இல்லைன்னு ரிசிப்ட் வந்தது. இதென்ன கொடுமை
மூனு தடவை புல்லிங் செய்தும் இல்லைன்னே வந்தது .பிலிப்பைனி பொன்னு ஒரு மாதிரியா என்னை பார்க்க இப்பதான் மேலே பர்ஸேஸ் செய்தேன் பார்ன்னு ரிசிப்டை காட்ட வேறு ஆள் மூலம் மேலே கொண்டு போய் புல்லிங் செய்ய சரியா ரிசிப்ட் வந்துச்சி . நான் பழைய மூனு பில்லையும் கையோடு கொண்டு வந்துட்டேன். ( இதான் என்னோட புத்திசாலிதனம் )இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க
அடுத்த அரை மணிநேரம் கழிச்சு அதே பேங்கில் போய் பனம் எடுக்க போகும் போது 2000 திரம்ஸ் குறைவா காட்டியது . பயந்து போய் மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க பர்ஸேஸ் 500 நாலு தடவை காட்டியது .இதுல வேடிக்கை ஒரு தடவைதான் சரியான பில் மற்ற மூனும் தவறான பில்லே வந்தது. ஆக பர்ஸேஸ் செய்த நேரம் இரவு என்பதால் பொழுது விடியும் வரை பொறுமையா இருந்தேன்
மறு நாள் காலை ரிஜக்டாக இருந்த மற்ற மூனு பில்லும் என் கைவசம் இருந்த்தால் பேங்கில் காட்ட நீன்ன்ன்ன்ண்ட இடைவேளைக்கு (எதுக்கும் ஒரு லிட்டர் பால் குடிச்சிட்டு போங்க நிறைய பேச தெம்பு வேனும் )பிறகு ஃபார்ம் எழுதி கொடுத்து அது செக் செய்து திரும்ப வர 15 நாள் பிடிச்சது. அது வரை டென்ஷன் தான் . அன்றிலிருந்து எங்கே போனாலும் நோ டெபிட் கார்டு , ஒன்லி கேஷ்தான் .
இதில் உள்ள நீதி : கார்டு யூஸ் செய்பவர்கள் . பண்ம் இல்லைன்னு வந்தாலும் அந்த துண்டு சீட்டை பத்திரமா வாங்கி வைக்கனும் , முடிந்த வரை அடுத்த அரை மணி நேரத்தில் சரியான அளவு பணம்தான் எடுக்கப்பட்டிருக்குதான்னு உங்க பேங்க் அக்கவுண்டை செக் செய்யனும் .இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்படனும் . தப்பாக தெரிந்தால் 2 நாட்களுக்குள் பேங்கிற்கு உடனே போகனும் .இல்லாவிட்டால் பணம் கிடைக்காது .
டிஸம்பர் 2010
 |
யப்பா கடிதாங்க முடியல..!! யாராவது காப்பாத்துங்கோவ்வ்வ்வ்வ்வ் |
வேலை நேரத்துல நம்ம ஃபிரண்டுக்கு அவன் லவர் கிட்டேயிருந்து போன் .(( இந்த பொண்ணுகளுக்கு மிஸ்டு காலை தவிர வேறு ஒன்னுமே தெரியாது )) கிட்ட தட்ட முக்கால் மணி நேரமா பேசினான் .திரும்ப வர மாதிரி தெரியல இதுவேலைக்காகாதேன்னு கிட்டக்க போய் கேட்டதுல முக்கிய விஷயம் இதுதான்
சீக்கிரமா அவனையே கல்யாணம் செய்துக்குறேன் நம்புன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்கு . இவன் நம்பாத மாதிரியே பேசிசிகிட்டு இருந்தான் . இந்த லவ்வு கிட்டதட்ட ஓரு வருஷமா ஓடிகிட்டு இருந்தது .இப்ப நம்ம்மாட்டேங்கிறானேன்னு எனக்கும் வருத்தம் . ஆண்கள் ஏமாற்றிதான் நாம இது வரை கேட்டிருக்கோம் .இங்கே இதென்ன புதுசா நம்ம பய கொ(கெ)ஞ்சிறானேன்னு எனக்கு ஆச்சிரியம் .
இருந்தும் அவங்கள் பேச்சில நாம குறுக்கே போக்க்கூடாதுன்னு பேசாம இருந்தேன். கடைசியா இவன் சொன்னான் ”உங்க வீட்டில யாரையும் நான் நம்பமாட்டேன்” அதுவும் கடைசியா கேட்டது. ”ஏன் நம்ம மாட்டேங்கிறே” .அதுக்கு இவன் சொல்றான் ”இதையே தான் உங்க மூத்த அக்கா என்னிடம் சொல்லிச்சு , அப்புரம் வெளிநாட்டு மாப்பிள்ளையை பாத்ததும் என்னைய கைவிட்டுடுச்சி “ பிறகு உன்னோட இன்னொரு அக்காவும் அதேதான் சொல்லிச்சு , அப்புறம் வசதியா ஒருத்தனை பாத்ததும் அவனையே கல்யாணம் செய்துகிச்சு .
இப்ப நீயும் அதே டயலாக்கை சொல்றே. அதான் நம்ம முடியலே” ன்னு சொன்னானே பார்க்கலாம். அதுக்கு பிறகு எதிர் முனையிலிருந்து பதிலையே கானோம் போன் கட்..
விடாமுயற்சி கேள்விபட்டு இருக்கேன் .இது மாதிரி ஒரே வீட்டில ரூட் விடற விடாமுயற்சியை கேட்டதே இல்லை .இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி அவ்வ்வ்வ்வ்J)
ஒரு வழியா தொடரை முடிச்சிட்டேன்னு நினைக்காதீங்க .இன்னும் நாலு வேற தொடர் பாக்கி இருக்கு .யாரோ கூப்பிட்ட நினைவு இருக்கு ஆனா சட்டென்னு நினைவுக்கு வரல :-)
பிளேடு குறிப்பு :- ஒரு அன்பு சகோதரியின் வேண்டுக்கோளுக்காக மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அவருக்கு என் நன்றி :-)