Friday, August 12, 2011

ஒரு ............டைரி....!!!


             இந்த தொடர் பதிவை  விஜி கிரியேஷன்ஸ் ஆரம்பிச்சி வச்சி நமக்கு பிட் நோட்டிஸ்அழைப்பிதழ் அனுப்பினாங்க அதுவும் இந்த மாசம் கடைசிக்குள்ள போடுங்கன்னு அன்பு கட்டளையோட அதாவது போன டிஸம்பர்ல... அதுக்கு பிறகு  குட்டி சுவர்கமும்  கூப்பிட்டு  பார்த்தாங்க .அதுக்குள்ள புது வருஷமும் ஆரம்பிச்சி ஜனவரியும் ஓடி இப்போது ஆகஸ்டு பாதி முடியப்போகுது , நேரம் ஆக இரெண்டு காரணம்  ஒன்னு  ஆனி பிடுங்கல்  அடுத்தது  ஒரே நேரத்தில இதே மாதிரி பதிவு எல்லா இடத்திலும் வந்தா கொஞ்சம் போர் அடிச்சுடுற மாதிரி தெரியும் அதான் ஹி..ஹி.. :-)
      எனக்கு டைரி எழுதப் பிடிக்காது.. பிடிக்காதுன்னு கிடையாது ஆனால் , என்னிக்காவது  எதிலாவது மாட்டினால் இதுவே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி ஆகிடும் . வேற  வினையே  வேனாம் ஹி..ஹி..  ((சோம்பேறின்னு சொல்ல அசிங்கம்)) இதுல ஒரு பக்கத்துல ஒரு வருஷத்தை அடைக்க முடியுமா சந்தேகம்தான் அதனால முடிஞ்சளவு  போட்டுகிட்டு வரேன் .
                 ஜனவரி 2010

          சில்லென்று வீசும் ஒரு பொன்மாலை பொழுதுல பக்கத்தில இருக்கும் பார்க்கில போய் உட்கார்ந்தேன் . மீடியமான கூட்டம் குழந்தைகளின் தத்தி தத்தி  நடக்கும் அழகும் , பாட்டிகளின் ((ஆண்டீஸ்)) வாக்கிங்கும் அழகாய் போய் கொண்டு இருந்துச்சி .  அதுக்கும் பக்கத்தில  ஒரு புல் வெளியில இங்கே பால் விளையாடாதிங்கன்னு போட்ட இடத்தில்  அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது  யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .
          கரெக்டா பத்தாவது நிமிஷம் அனுஷ்கா விட்ட அடியில பந்து என் பக்கம் எதிர்பாராம திடீர்ன்னு வந்ததுல நான் கொஞ்சமா தடுமாறினதுல கால் வழுக்கியதுதான் தெரியும் எண்ட அம்மேஏஏஏஏஏன்னு ஒரு பயங்கர சத்தம்.,  வந்த சத்தத்தில  பயந்து போய்  நானும் ஐயோன்னு கத்த பிறகுதான் தெரிஞ்சுது ..நான் கட்டில விட்டு கீழே விழுந்தது.  சாரி , விழுந்தது ஒரு ஆள் மேலே., .என்னோட கை அந்த ஆள் தொண்டைகுழியை  அழுத்த, என்னோட மொத்த வெயிட்டும்  அந்த  ஆள் வயித்துல ....

         அப்பவும் பாதி தூக்கத்துல ஒரு சந்தேகம் யாரு இது புதுசா நம்ம ரூமில நமக்கு தெரியாம வந்து என் பெட்டுக்கு கீழே படுத்து கிடக்கிறது  .ஒரு வேளை திருடனோன்னு பயம் .நாம ரெண்டு பேரும் போட்ட சத்தத்துல.ரூம் ஃபிரெண்ட் அவனோட சொந்த காரன் மலையாளி  ஓடி வந்து என் கையை எடுத்து விட்டு  டேய் விட்றா  செத்துடப்போறான்னு சொல்ற வரை கை குரல் வளையை விட்டு எடுக்கல (( யாருக்கு தெரியும் தூக்கக் கலக்கத்துல)) 
        விஷயம் இதுதான் ..ஆள் இருப்பது அபுதாபியில , ஊரிலிருந்து  வந்ததும் நைட்  பிளைட்டா இருப்பதால தங்கிட்டு காலையில போக ரூமிற்கு வந்து இருக்கு . எனக்கு நேர் எதிரே ஏசி இருப்பதால குளிர் காற்றுக்காக பயபுள்ள என் கட்டிலுக்கு கீழே  படுத்திருக்கு. ஒரு வழியா அவரை  சமாதானப்படுத்தி  படுக்க வச்சா இதோ  வரேன்னு வெளியே போனவர்தான் திரும்ப ரூம் பக்கம் வரவே  இல்லை . பக்கத்தில  இருக்கிற பள்ளிவாசல்ல தூங்கிட்டு  அப்படியே ஆள் எஸ்கேப்..
ரூம் மேட்டுகிட்ட கேட்டேன். எங்கேடா அவரையும் கானோம் அவரோட பெட்டியையும்  கானோமேன்னு .பெட்டியை நீயே எடுத்து வந்து அங்க குடுன்னு சொல்லி வாங்கிட்டு அங்கிருந்தே போயிட்டார். இப்பல்லாம் யாருமே ரூம் பக்கமே   வரதில்லை ஏன்னு தெரியல . உங்கள் யாருக்காவது காரணம் தெரியுமா ?  தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்..  

                பிப்ரவரி 2010  

            இதுவும் அதே  சில்லென்று வீசும் ஒரு பொன் மாலை பொழுதில் திரும்பவும் அதே பார்க் அதே  வேடிக்கை .ஆனா இது கனவல்ல நிஜம் .புல் வெளியில்  உட்கார்ந்து  வேடிக்கை பார்க்கும் போது  காலில் எதோ ஒரு உணர்வு சின்னதா பிடிச்சி இழுப்பது மாதிரி . விட்டேன் ஒரு உதை.ஏதோ ஒன்னு பறந்து போய்  தூர விழுந்தது. திரும்பவும் வேடிக்கை  தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில  அதே உணர்வு  என்னடா இது ஜெய்லானிக்கு வந்த சோதனைன்னு பார்த்தா ஒரூ ஆ மை.,  
         ஆஆஆஆஆமையா இது எப்படி வந்துச்சின்னு   ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை ரொம்பவும் பொடிசா இருக்கவே  சரி வரட்டுமேன்னு சொல்லி பக்கத்தில கிடந்த சிகரெட் பாக்கெட்டில போட்டு ரூமிற்கு கொண்டு வந்துட்டேன் . வீட்டுக்கு ஆமை வந்தா வீடு உருப்படாதுன்னு எங்கோ  படிச்ச ஞாபகம் . நாமலே உருப்படாத ஆளு, இதுல ஆமை வந்தா ஒரு வேளை உருப்படுட்டுமோன்னு  நினைச்சு தைரியமா கொண்டு வந்துட்டேன் .
        அது என்ன சாப்பிடும் என்று சரியா தெரியாததால. ஒரு பக்கெட் முக்கால் வாசி தண்ணீர் நிறப்பி அதில் ஆமையை விட அழகா நீந்திகிட்டு இருந்தது. கொஞ்சமா அதுல சோறுப்போட அதை லேசா அது சாப்பிட்டதா ஞாபகம் . வழக்கம் போல மறு நாள் காலை பாத்ரூமில் குளிக்கப் போக பக்கெட்டை பார்க்க..!! பக்கெட் காலி ஆமையை கானலே..!!  சரி ஒரு வேளை எங்காவது ஓரமா இருக்கும் அதுவும் குளிக் போயிருக்குமுன்னு நினைச்சி  நானும் மறந்துட்டேன். 

   திரும்பவும் மதியம் வரும் போது ரூம் மேட் கேட்டான் , அடோய் ஜெய்லானி பாருய்யா அதிசயத்தை ராத்திரி ரூமுக்கு வரும் போது பார்க்கிறேன் உன்னோட பக்கெட்டுக்குள் ஒரு ஆமை நீந்திகிட்டு  இருந்துச்சி .பார்த்துமே  அப்படியே  ஷாக்காகிட்டேன் ..!!  நானும் சரி அப்புறம் ..? அப்புறமென்ன அப்படியே  பக்கெட்டோட டாய்லெட்டுக்குள்ள விட்டு ஃபிளாஷ் அடிச்சிட்டேன் ..ஆனாலும் 5 நிமிஷம் கழிச்சி அது திரும்பவும் வெளியே வந்துச்சி , நான் விடல கடைசியா சுடு தண்ணி ஒரு பக்கெட் விட்டேன் . அது திரும்ப வரவே இல்லைன்னு சொன்னான் .அவ்வ்வ்வ்வ்வ்வ்
   அடேய் படுபாவி அதை கொண்டு வந்ததே  நாந்தாண்டா ..!! அநியாயமா அதை கொன்னுட்டியேன்னு சொல்ல , யாருக்கு  தெரியும் நான் வரும் போது இரவு 2 மணி நீ நல்லா தூங்கிட்டு இருந்தேன்னு கூலா  சொல்ல ...  என்ன செய்ய ..!!  என் கிட்ட வந்த ஆமைக்கு நேரம் சரியில்லை .
நீதி  :-   ஆமை புகுந்தா வீடு இல்ல , ஆமை  உருப்படாது ..!!
இந்த ரெண்டு  மாசத்துக்கே  கதை ஓவரா போனதால மீதி மாதங்கள் தொடரும்...............................................................................................!!                   

59 என்ன சொல்றாங்ன்னா ...:

மாய உலகம் said...

டைரியின் முதல் வரி

அந்நியன் 2 said...

//இதோ வரேன்னு வெளியே போனவர்தான் திரும்ப ரூம் பக்கம் வரவே இல்லை .//

எப்படி வருவார்?

ஒரு இரவு தங்கிவிட்டு போறதுக்காக பணத்தை கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார் இல்லை ஏதாவது பொருளை கேட்டிருந்தாலும் தந்திருப்பார் இல்லை இனிமேல் வராதிர்கள் என்று சொல்லி இருந்தாலும் இனி வராமல் இருந்திருப்பார்.

பொசுக்குனு உயிர் மீது கையை வைத்தால்....எவன் வருவான்?

பெட்டியே வேண்டாம்னு சொல்லுகிற அளவிற்கு பயந்து ஓடி இருக்கான் என்றால் கண்டிப்பாக அவன் மளையாளியாகத்தான் இருந்திருப்பான்(எப்பூடி...)

மாய உலகம் said...

ஆஹா டாய்லெட்டுக்குள்ள விட்டு ஃபிளாஷ் அடிச்ச ஆமையத்தான் ப்பிர்ர்ரியாஆஆணியில் ஸ்பிரேயா அடிச்சு கொடுக்க சொன்னது.. ஆமையை கொண்ணு புட்டாங்களே பாஸூ பாவி பய புள்ள

மாய உலகம் said...

ஏம்பாஸூ பேட்மிண்டன் விளையாடற பாப்பாவோட மூஞ்சிய மறைச்சு புட்டீக அட போங்க பாஸூ உங்க கட்சி கா

மாய உலகம் said...

வாடகைக்கு தேள், பெருச்சாளிய கொண்டு போயி என்ன பண்ண ஒரு முடிவோட தான் இருக்கீக போல

சாந்தி மாரியப்பன் said...

டைரியின் ரெண்டு பக்கங்களுக்கே கண்ணைக்கட்டுதே சாமி :-)))))))

Mahi said...

மீ த 7! :)

Mahi said...

ஜனவரி மட்டும்தான் படிச்சிருக்கேன்,ஆனாலும் அநியாயத்துக்கு அனுஷ்கா-நமீதா நெனைப்பிலயே இருப்பீங்க போல இருக்கே? ;) மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன் ஜெய் அண்ணா! :)

khandvi என்னை வாவா-ன்னு கூப்பிடுதுல்ல?! ;) :)

vanathy said...

ஜெய், என்ன இது அனுஷ்கா ( பெயரே வாயில் நுழையாதாம் ) வந்தாங்களா? இருந்தாலும் அந்த ஆளை இப்படி கொலை செய்ய முயற்சி செய்தது நல்லா இல்லை. இங்கே ( அமெரிக்காவில் ) அட்டெம்டட் மேர்டர்ன்னு சொல்லி ஜெயில்ல தள்ளி இருப்பாங்க.
என்னது உங்க டைரியில் இரண்டே இரண்டு மாசங்கள் தான் இருக்கா? மீதி மார்ச், ஏப்ரல், மே, ஜூன்.... இவை எல்லாம் எங்கே????

Chitra said...

தொடர் பதிவா? தொடரும் பதிவா? ஹா,ஹா,ஹா,ஹா....

ஆமினா said...

புது வருஷம் கொலை முயற்சியோட தொடக்கம். இரண்டாம் மாதம் கொலையோடவா? :)

இமா க்றிஸ் said...

கோவம். கோவம். கோவம். கோவம். கோவம்..

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;(

தரைல ஓடுற ஆமையை தண்ணில யாரு போடச் சொன்னா! அந்த வரிக்கே கண்ணுல தண்ணி வந்துச்சு. மீதி... கொடுமை. க்ர்ர்... உங்களையும் ரூம் மேட்ஸையும் புடிச்சுட்டு போக ப்ளூ க்ராசுக்கு சொல்லி அனுப்பி இருக்கேன் ஜெய். ;((((((((((

மகேந்திரன் said...

வீடு புகுந்தா ஆமை உருப்புடாது
அட.. இது நல்லா இருக்கே..
தொடருங்கள்.

கூடல் பாலா said...

உங்க நீதி புதுசா இருக்கே !

athira said...

.....ஆஆஆஆஆஆஅ நான் 14 ஆவதாப் போயிட்டனா இண்டைக்கு... இட்ஸ் ஓக்கே.. நானே கண்ணைத் துடைச்சுக்கொள்கிறேன்... இருங்க வாறேன்... ஆரோ தெரிஞ்சாக்களிண்ட படம் போட்டமாதிரி இருக்கூஊஊஊஊஊஉ:))

athira said...

அடடா... இத்தால் சகலருக்கும் அறியத் தருவதென்ன வென்றால்.. ஜெய்க்கும் கனவு வரத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊ:))).

//அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .// அவ்வ்வ்வ்வ் எதை?:))).

Mohamed Faaique said...

உங்க ரூமுக்கு வந்தா ஆமை கூட உருப்படாதோ!!!
பதிவு இத்தோடு முடிஞ்சுதா??? இன்னும் பாதிக்கப் பட்டவங்க இருக்காங்களா???

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதையெதை எல்லாமோ கொமேட் ல போட்டு ஃபிளஸ் பண்ணியது அறிந்திருக்கிறேன், ஆனா ஆமையையா? நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன் இதை, நண்பனை சும்மா விட்ட ஜெய்க்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

தொடர்ப்பதிவையே தொடராக்கிய முதேல் ஆள் ஜெய்..தேன்ன்ன்ன்ன்:)).

ஸாதிகா said...

// நாமலே உருப்படாத ஆளு, இதுல ஆமை வந்தா ஒரு வேளை உருப்படுட்டுமோன்னு//
தம்பி ஜெய்லானிக்கு எவ்வளவு தன்னம்பிக்கை!!

//அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .// இது வேறா?கிழிஞ்சது போங்க.

athira said...

ஜெய்ட கையா அது?:)))... வெள்ளைக்காரண்ட கைமாதிரியே இருக்கே அவ்வ்வ்வ்வ்:)). ஏன் இருக்கப்பிடாதோ எண்டெல்லாம் கேய்க்கப்பிடா.. :)).

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

என்னது???
தொடருமா???

Anonymous said...

Mee the 22nd .. Not lucky number

Anonymous said...

// கரெக்டா பத்தாவது நிமிஷம் அனுஷ்கா விட்ட அடியில // கன்னத்துல தானே ஹீ டவுட் சாரி
//நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் . // எனக்கும் பூசுக்கு வந்தே சேம் டவுட்
//இப்பல்லாம் யாருமே ரூம் பக்கமே வரதில்லை// உங்கள தூக்கு தண்டனையில இருந்து காப்பாத்த இருக்குமோ ?? அகைன் டவுட்
சரி இந்த டவுட் இப்பத்தைக்கு போதும் நான் வேலைய பார்க்க போறேன்

குறையொன்றுமில்லை. said...

தொடர் பதிவுக்கே தொடருமா. சூப்பர். தொடருங்க, தொடருங்க. காத்துகிட்டேதான் இருக்கோ. இந்த வருஷம் முடியரதுக்குள்ளயாவது முற்றும் போட்டு
வீங்கதானே????

athira said...

//En Samaiyal said...
22

Mee the 22nd .. Not lucky number
//

karrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrr 22ஐ அன் லக்கி எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))))).

வேலன். said...

ஆமா அடுத்து மார்ச்...ஏப்ரல் மாதம் எல்லாம் எப்போது சார்...?
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பாவம் அந்த மலையாளியும் ,ஆமையும்

தொடருங்கள் .......

Anonymous said...

//karrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrr 22ஐ அன் லக்கி எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))))).// ஒய் யா ?? உங்களுக்கு 22 லக்கி நம்பரோ?? பூஸ் பொறந்தது 22 வா

Jaleela Kamal said...

ஆஹா டைரி எழுத ஆரம்பித்து 2 மாதம் தான் முடிந்து இருக்கா, இது கற்பனையா நிஜமா?

தொடரும் , எப்படி தொடர் பதிவா?

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--//டைரியின் முதல் வரி //

வாங்க மாயா வாங்க ..!! சந்தோஷமுங்கோவ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--//இதோ வரேன்னு வெளியே போனவர்தான் திரும்ப ரூம் பக்கம் வரவே இல்லை .//

எப்படி வருவார்? //

வாங்க பாஸ் வாங்க ..!! ஏனுங்கோ நா செஞ்சது தப்பா ..? அவ்வ்வ்

// ஒரு இரவு தங்கிவிட்டு போறதுக்காக பணத்தை கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார் இல்லை ஏதாவது பொருளை கேட்டிருந்தாலும் தந்திருப்பார் இல்லை இனிமேல் வராதிர்கள் என்று சொல்லி இருந்தாலும் இனி வராமல் இருந்திருப்பார்.

பொசுக்குனு உயிர் மீது கையை வைத்தால்....எவன் வருவான்? //

பயப்புள்ள என் காலடியில் வந்து படுக்குமுன்னு யாருக்கு தெரியும் ஹி...ஹி...

// பெட்டியே வேண்டாம்னு சொல்லுகிற அளவிற்கு பயந்து ஓடி இருக்கான் என்றால் கண்டிப்பாக அவன் மளையாளியாகத்தான் இருந்திருப்பான்(எப்பூடி...) //

கரெக்டா கண்டுப்பிடிச்சீட்டிகளே பாஸ் சூப்பர் :-). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம்--//ஆஹா டாய்லெட்டுக்குள்ள விட்டு ஃபிளாஷ் அடிச்ச ஆமையத்தான் ப்பிர்ர்ரியாஆஆணியில் ஸ்பிரேயா அடிச்சு கொடுக்க சொன்னது.. ஆமையை கொண்ணு புட்டாங்களே பாஸூ பாவி பய புள்ள //

வாங்க ..வாங்க..!!கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்களே புத்திசாலிதான் நீங்க :-))

//ஏம்பாஸூ பேட்மிண்டன் விளையாடற பாப்பாவோட மூஞ்சிய மறைச்சு புட்டீக அட போங்க பாஸூ உங்க கட்சி கா //

முகத்தை போட்டுட்டு அப்புறம் வீட்டுக்குள்ளே யார் போய் அடிப்படுறது ...ஹி..ஹி..

//வாடகைக்கு தேள், பெருச்சாளிய கொண்டு போயி என்ன பண்ண ஒரு முடிவோட தான் இருக்கீக போல//

இதுக்கு பேர் சுய..வேலை.. வாய்ப்பு.. திட்டம் ஹி.ஹி.. எப்பூடீ..!!! :-))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்-//டைரியின் ரெண்டு பக்கங்களுக்கே கண்ணைக்கட்டுதே சாமி :-))))))) //

வாங்க சாரலக்கா வாங்க.!! இன்னும் பத்து மாசம் இருக்கே இதுக்கே அசந்தா எப்பிடி..ஹா.. ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி--//மீ த 7! :) //

வாங்க மஹி வாங்க..!! சந்தேகமே இல்லை நீங்கதான் லேடி ஜேம்ஸ் பாண்ட் 007 :-))

// ஜனவரி மட்டும்தான் படிச்சிருக்கேன்,ஆனாலும் அநியாயத்துக்கு அனுஷ்கா-நமீதா நெனைப்பிலயே இருப்பீங்க போல இருக்கே? ;) //

அநியாயத்துக்கு எல்லாம் இல்ல அந்த குழந்தைதனமான முகம் பிடிக்கும் அவ்வளவே :-))((இதுக்கு மேலே வாய திறந்தா டேஞ்சர் .அவ்வ்வ்))
//மீதிய அப்புறம் வந்து படிக்கிறேன் ஜெய் அண்ணா! :) //
இத படிச்சதுக்கே உங்களுக்கு ஸ்பெஷல் ஜுஸ் தரணும் . ஆல்வேஸ் வெல்கம் :-))

//khandvi என்னை வாவா-ன்னு கூப்பிடுதுல்ல?! ;) :) // எதோ மிஸ்ஸிங் ஆகி இருக்கும் போல ஓக்கே..ஓக்கே..:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//ஜெய், என்ன இது அனுஷ்கா ( பெயரே வாயில் நுழையாதாம் ) வந்தாங்களா? இருந்தாலும் அந்த ஆளை இப்படி கொலை செய்ய முயற்சி செய்தது நல்லா இல்லை. இங்கே ( அமெரிக்காவில் ) அட்டெம்டட் மேர்டர்ன்னு சொல்லி ஜெயில்ல தள்ளி இருப்பாங்க.//

வாங்க வான்ஸ் வாங்க.!! அவர்கள் கனவில வந்தது என் தவறா..? நான் கட்டிலில் கீழே விழுந்த்து தவறா..? விருந்தாளி பயபுள்ள என் காலடியில் படுத்து என் தவறா..? நான் அவர் கழுத்தில் கை வைத்தது என் தவறா..? சொல்லுங்க வான்ஸ் சொல்லுங்க ...(( இதை சிவாஜி ஸ்டைலில் படிங்க ))
//என்னது உங்க டைரியில் இரண்டே இரண்டு மாசங்கள் தான் இருக்கா? மீதி மார்ச், ஏப்ரல், மே, ஜூன்.... இவை எல்லாம் எங்கே???? //

ஹா..ஹா.. கடைசி வரியை நீங்க படிக்கல ப்போலிருக்கு..ஹய்யோ..ஹய்யோ... :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra --//தொடர் பதிவா? தொடரும் பதிவா? ஹா,ஹா,ஹா,ஹா.. //

வாங்க டீச்சர் வாங்க..!! இதை வச்சே ஒரு பத்து பதிவு தேத்திடமாட்டேனா ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா--//புது வருஷம் கொலை முயற்சியோட தொடக்கம். இரண்டாம் மாதம் கொலையோடவா? :) //

வாங்க சகோஸ் வாங்க..!! ஒரு வருஷத்து டைரி வேணுமின்னு கேட்டுட்டு இதுக்கே பயந்தா எப்படி..ஹா.ஹா. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//கோவம். கோவம். கோவம். கோவம். கோவம்.. //

வாங்க மாமீஈஈஈஈ...வாங்க...!! சூடா தெரியுது...ஐஸ் போடாத லெமன் ஜுஸ் குடிக்கிறீங்களா :-))

// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;( // ஆஹா.. பல்லை கடிக்க்கிற சவுண்டும் கேட்குதே அவ்வ்வ்வ்வ்

// தரைல ஓடுற ஆமையை தண்ணில யாரு போடச் சொன்னா! //

கடலுக்குள்ளே மேய்ஞ்சிகிட்டு இருக்கே அதுக்கு பேரு ஆமை இல்லாம இமையா ஹி..ஹி...
/அந்த வரிக்கே கண்ணுல தண்ணி வந்துச்சு. மீதி... கொடுமை. க்ர்ர்... உங்களையும் ரூம் மேட்ஸையும் புடிச்சுட்டு போக ப்ளூ க்ராசுக்கு சொல்லி அனுப்பி இருக்கேன் ஜெய். ;(((((((((( //

அதுக்கு கெட்ட நேரமா இருந்தா நான் என்ன செய்ய அவ்வ்வ்வ்...சைனா கிராஸ் தெரியும் அதுல ஜெல்லி செய்வாங்க . புளு கிராஸுல இடியாப்பம் செய்ய முடியுமா..? ஹி...ஹி.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

M.R said...

இருந்தாலும் ஆமை பாவம் சகோ.... முதல் மாதம் ஒரு உயிர் போக இருந்தது இரண்டாவது மாதம் ஒரு உயிர் போயிடுச்சி மூன்றாவது மாதம் ?????????????????????

vettha.(kovaikavi) said...

நகைச்சுவையாக இருக்கிறது யெய்லானி. எனக்கு வித்தியாசமாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஜெய்லானி said...

@@@மகேந்திரன் --//வீடு புகுந்தா ஆமை உருப்புடாது
அட.. இது நல்லா இருக்கே..
தொடருங்கள். //

வாங்க..வாங்க..!! ஆமாம் பாஸ் அதுதான் உண்மையாகிப்போச்சி என்னோட வாழக்கையில் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@koodal bala --//உங்க நீதி புதுசா இருக்கே ! //

வாங்க...வாங்க..!! இது அனுபவ நீதி அதான் வித்தியாசமா இருக்கு :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//.....ஆஆஆஆஆஆஅ நான் 14 ஆவதாப் போயிட்டனா இண்டைக்கு... இட்ஸ் ஓக்கே.. நானே கண்ணைத் துடைச்சுக்கொள்கிறேன்... இருங்க வாறேன்... ஆரோ தெரிஞ்சாக்களிண்ட படம் போட்டமாதிரி இருக்கூஊஊஊஊஊஉ:)) //

வாங்க அதிஸ் வாங்க..!! நீங்க முழிச்சிகிட்டு இருக்கும் போதுதான் போட்டேன் :-))இதுல தெரிஞ்ச ஆள் யார்..? ஹி..ஹி... :-)))

//அடடா... இத்தால் சகலருக்கும் அறியத் தருவதென்ன வென்றால்.. ஜெய்க்கும் கனவு வரத் தொடங்கிட்டுதூஊஊஊஊஊஊ:))).//

முக்கியமா ஒன்னை விட்டுட்டீங்களே அதுவும் கட்டிலிருந்து கிழே விழும் அளவுக்கு கனவு .அவ்வ்வ்வ்

//அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .// அவ்வ்வ்வ்வ் எதை?:))).

இப்பிடி எல்லாம் கேட்டா நான் சொல்வேனா..? அப்புறம் யார் வீட்டில அடி வாங்குவது ..!!அவ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//உங்க ரூமுக்கு வந்தா ஆமை கூட உருப்படாதோ!!! //

வாங்க...வாங்க...!! அதை அந்த ஆமையைதான் கேட்கனும் ஹி.ஹி..
// பதிவு இத்தோடு முடிஞ்சுதா??? இன்னும் பாதிக்கப் பட்டவங்க இருக்காங்களா??? //

தொடரும் போட்டேனே கவனிக்கலையா பாஸ் ? இன்னும் பத்து மாசம் முழுசா இருக்கே ?-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதையெதை எல்லாமோ கொமேட் ல போட்டு ஃபிளஸ் பண்ணியது அறிந்திருக்கிறேன், ஆனா ஆமையையா? நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன் இதை, நண்பனை சும்மா விட்ட ஜெய்க்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

வாங்க...வாங்க..!!போனதை நினைத்து என்ன செய்ய..? அதனால அந்த ஆளை அப்போது விட்டுவிட்டேன் .கடைசியில் என்ன செய்தேன்னு தொடர் கடைசியில் வரும் பாருங்க :-))

//தொடர்ப்பதிவையே தொடராக்கிய முதேல் ஆள் ஜெய்..தேன்ன்ன்ன்ன்:)). //

நிறைய மேட்டர்ஸ் இருக்கே ஒரு வருஷத்தை ஒரு பக்கத்துல முடிக்க முடியுமா..? :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நாமலே உருப்படாத ஆளு, இதுல ஆமை வந்தா ஒரு வேளை உருப்படுட்டுமோன்னு//
தம்பி ஜெய்லானிக்கு எவ்வளவு தன்னம்பிக்கை!!//

வாங்க ஆண்ட்டி வாங்க ..!!தன்னம்பிக்கை கொஞ்சம் ஓவர் அதான் இப்பிடி ஹி..ஹி.. :-)

//அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .// இது வேறா?கிழிஞ்சது போங்க. //

அவ்வ்வ்வ்வ்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//ஜெய்ட கையா அது?:)))... வெள்ளைக்காரண்ட கைமாதிரியே இருக்கே அவ்வ்வ்வ்வ்:)). ஏன் இருக்கப்பிடாதோ எண்டெல்லாம் கேய்க்கப்பிடா.. :)). //

வாங்க ...வாங்க..!!இது கூகிள்ள சுட்டது அதான் கொஞ்சம் வெளுப்பா இருக்கு :-))))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --// என்னது???
தொடருமா??? //

வாங்க பாஸ் வாங்க ..!! என்னது ஒரு தொடருமுக்கே அதிர்ச்சி ஆகுறீங்க ..? இன்னும் நிறைய தொடரும் இருக்கே அவ்வ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@En Samaiyal --//Mee the 22nd .. Not lucky number //

வாங்க ..வாங்க..!! இதை நீங்க முன்னாலேயே சொல்லி இருந்தா அந்த நெம்பரை லிஸ்டிலிருந்தே தூக்கி இருந்திருப்பேனே..!! 21 க்கு அப்புறம் டைரக்டா 23 தான் :-))

// கரெக்டா பத்தாவது நிமிஷம் அனுஷ்கா விட்ட அடியில // கன்னத்துல தானே ஹீ டவுட் சாரி //

ச்சே..ச்சே.. இதை யெல்லாம் பப்ளிக்குல கேக்கலாமா அவ்வ்வ்வ்

//நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் . // எனக்கும் பூசுக்கு வந்தே சேம் டவுட் //

நான் தான் எப்பவும் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பேன் .இப்ப நீங்களும் ஆரம்பிச்சாச்சா சூப்பர் :-))
//இப்பல்லாம் யாருமே ரூம் பக்கமே வரதில்லை// உங்கள தூக்கு தண்டனையில இருந்து காப்பாத்த இருக்குமோ ?? அகைன் டவுட் //

இதுக்கெல்லாமா தூக்குதண்டனை தருவாங்க ச்சே மோசம் நீங்க :-))
//சரி இந்த டவுட் இப்பத்தைக்கு போதும் நான் வேலைய பார்க்க போறேன் //

பிரவுனி பார்ட் டூ போடப்போறீங்களா..ஹி..ஹி.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--//தொடர் பதிவுக்கே தொடருமா. சூப்பர். தொடருங்க, தொடருங்க. காத்துகிட்டேதான் இருக்கோ. இந்த வருஷம் முடியரதுக்குள்ளயாவது முற்றும் போட்டு
வீங்கதானே???? //

வாங்க..வாங்க..!! ச்சே..ச்சே..அந்தளவுக்கு போகாதுன்னுதான் நினைக்கிறேன் ஹி..ஹி.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira --//En Samaiyal said...
22

Mee the 22nd .. Not lucky number
//

karrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrr 22ஐ அன் லக்கி எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))))). //

வாங்க..வாங்க..!! கூல்ல்ல்ல்...அதுக்கு தண்டனையா அவங்க சமையலை அவங்களையே சாப்பிட வச்சிடலாம் ஓக்கை ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//ஆமா அடுத்து மார்ச்...ஏப்ரல் மாதம் எல்லாம் எப்போது சார்...?
வாழ்க வளமுடன்.
வேலன். //

வாங்க..வாங்க..!! அடுத்ததும் இதே பார்ட் 2 வரும் .விரைவில் பதிவிடுகிரேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஆயிஷா அபுல்.--//அஸ்ஸலாமு அழைக்கும் //

வாங்க..வாங்க..!!அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)

//பாவம் அந்த மலையாளியும் ,ஆமையும் //

நீங்க என்னைய பாவமுன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் அவ்வ்வ்வ் :-))

// தொடருங்கள் ....... //

அடுத்தும் இதே பதிவுதான் இன்ஷா அல்லாஹ் :-))
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@En Samaiyal --//karrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrr 22ஐ அன் லக்கி எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:))))).// ஒய் யா ?? உங்களுக்கு 22 லக்கி நம்பரோ?? பூஸ் பொறந்தது 22 வா //

வாங்க..!! வாங்க..!! ஒரு வேளை டிவின்ஸா இருந்தா பிடிச்சிருக்கும் போல நான் நெம்பரை சொன்னேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal --//ஆஹா டைரி எழுத ஆரம்பித்து 2 மாதம் தான் முடிந்து இருக்கா, இது கற்பனையா நிஜமா? //

வாங்க ஜலீலக்கா வாங்க ..!! இன்னும் சில மாதங்கள் அடுத்த பதிவில் , நீங்க நிஜமுன்னு நினைச்சா நிஜம் தான் , கற்பனைன்னு நினைச்சா கற்பனைதான் எப்பூடீ ...ஹி..ஹி..

// தொடரும் , எப்படி தொடர் பதிவா? //

ம்..ஆமாம் ..கூப்பிட்டே வருஷக்கனகாகப் போகுதே..!! ஹா..ஹா.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@M.R --//இருந்தாலும் ஆமை பாவம் சகோ.... முதல் மாதம் ஒரு உயிர் போக இருந்தது இரண்டாவது மாதம் ஒரு உயிர் போயிடுச்சி மூன்றாவது மாதம் ????????????????????? //

வாங்க ..வாங்க..!! இது நானாக செய்தது இல்லை .அதுவாக நடந்தது..பயப்படாதீங்க மூனாவது மாதம் வேறு விஷயங்கள் தொடரும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பாரத்... பாரதி.--// ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. //

வாங்க ..வாங்க..!! உங்களும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் :-)

//இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..//
மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vettha.--//நகைச்சுவையாக இருக்கிறது யெய்லானி. எனக்கு வித்தியாசமாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com //

வாங்க மேடம் வாங்க..!! சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தமிழ்தோட்டம் --//
கலக்கல்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in //

வாங்க ..வாங்க..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))