சிலரோட பேச்சை நாள் முழுதும் கேட்டுகிட்டே இருக்கலாம் . அதுக்கு காரணம் அறிவா அழகா பேச்சு சாதூர்யமா நம்மை கட்டிப்போட்டுடும் .உதாரணத்துக்கு அறிஞர் அண்ணா , நெடுஞ்செழியன் , வை கோ ..இப்படியே சொல்லிகிட்டு போகலாம் . இன்னும் சிலர் வாயை திறந்தாலே போதும் குயிலின் குரல் கேட்கும் அப்படி. ஒரு. குரலில் அழகு இவர்களை பாட சொல்லி கேட்டால் ஆஹா......
குரலில் என்ன இருக்கு கேட்டால் அது இறைவன் கொடுத்த வரமுன்னு சொல்லுவாங்க . காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க .. ஒவ்வொன்னும் குரல் வளம் வித்தியாசமாதான் இருக்கு. (( ஆஹா..உணர்ச்சி வசப்பட்டாச்சே.. விடுங்க மனித இனத்திற்கே வருவோம்))
![]() |
இங்கதானே சுத்திகிட்டு இருந்தான் , எங்கே போயிருப்பான்..??? |
பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு இருப்பவங்களுக்கே குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில் ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது இதிலதான் .
நான் ஆரம்பத்தில இருந்த ருமில ( நாலுமே தமிழ்நாடுதான் ) இருந்த ஒருத்தருக்கு பெண் குரல். யாருமே முகம் பார்க்காம பேசினா கண்டு பிடிப்பது கஷ்டம் . என்னோட கிண்டல் தாங்காம நான் தூங்கிய பிறகே ரூமுக்குளே பயபுள்ள வரும் . இப்படி இருக்கும் போது ஒரு நாள் கூடவே இருக்கும் நண்பர் குளிக்க போனதும் ஊரிலிருந்து அவர் மனைவி போன் செய்ய யாரும் எடுக்காததால் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிந்தது
நான் தலையை மட்டும் தூக்கி பார்த்துட்டு திரும்ப படுத்துட்டேன் . இவர் எடுத்து அவர் பாத்ரூமில குளிச்சிகிட்டு இருக்கார் கால் மணி நேரம் கழிச்சி திரும்ப செய்யுங்கன்னு சொல்லிட்டு போனை கட் செய்துட்டு அவர் டியூட்டிக்கு போய் விட்டார். பின்னாலேயே நீங்க யாரு என்னனுன்னு கேக்குரதுக்கு முன்னாலேயே போன் கட் .
வந்தது வினைப்பாருங்க ஏழறை எட்டரை சனி எல்லாம் அன்னைக்கி அவர் தலை மேலே தான். மனுஷன் லீவு போடுட்டு அழுதுகிட்டு இருந்தார். யாரது புதுசா ஒரு பெண் குரல் கேட்குதே..!! புதுசா எதுவும் ஸ்டெப்னி வச்சிருக்காரான்னு அவர் மனைவிக்கு ஒரு சந்தேகம் .இவர் எது சொல்லியும் அவர் மனைவி கேட்பதா இல்லை (அவ்ளோ நம்பிகை அவர் மேலே ஹி..ஹி..)) நான் சொல்லியும் எனக்கு ஒரு அர்ச்சனை ஜால்ரா போட வேண்டாமுன்னு ((நீங்களும்தானே இத்தனை நாளா ஏன் சொல்ல வில்லைன்னு... அவ்வ்வ் )) .அடுத்த கால் மணி நேரத்துல பஹ்ரைனிலிருந்து அவர் மாமனார் , போன்.செய்து நலன் விசாரிப்பு. அடுத்து கத்தாரிலிருது மச்சான் , அவரும் எவ்வளவோ சொல்லியும் அவர் மனைவி நம்பவில்லை
இந்த பிரச்சனை மூனு நாளா அவருக்கும் டென்ஷன் நமக்கும் ஒரு வித எரிச்சல் ((எதை சொல்லியும் நம்பாவிட்டால் என்ன் செய்வது )) கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே நம்பிக்கையே வந்தது. அதுக்குள்ளே இவருக்கு ஊர் பணம் ரூ பத்தாயிரத்துக்கு மேலே டெலிபோனில சமாதானம் பேசியே போச்சு. அதுக்கு பிறகு அவர் மொபைல் போனை வெளியே வைப்பதே இல்லை .ஒன்னு அவர் கூடவே டாய்லட் போனாலும் இருக்கும் .அப்படி இல்லாட்டி சுவிட்ச் ஆஃப் செய்து வச்சிருப்பார் .
![]() |
ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்........ யாரை பார்த்து இன்னாங்கிரே |
என்னதான் இருந்தாலும் நம்ம கலாச்சாரமே கலாச்சாரம்தான் .எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க. அப்போ இலக்கியத்தில கண்ணகி , மாதவி ..??? கதை படிக்க இண்டரஸ்டிங்க இருக்கும் .ஆனா அனுபவம் ..? யப்பா ஆளை விடுங்க