Wednesday, January 5, 2011

கம்ப்யூ டிரிக்ஸ் -- 3 நெட் ஒர்க்

       கம்ப்யூட்டர் சம்பந்தமா பதிவு போட்டு நாளாயிடுச்சி  அதனால இந்த பதிவுல ((புது வருஷ  ஆரம்பத்திலேயே  மொக்கை போடக்கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணம்தான் ))
       நெட் யூஸ் செய்யக்கூடிய பல பேர் வயர்லஸ் தான் யூஸ் செய்யுறாங்க . அதுதான் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை உபயோகிக்க ஈஸியா இருக்கும் . அதுவுமில்லாம நோட் பேட் , லேப்டாப்  வச்சி இருப்பவங்களுக்கு ரொம்பவும் வசதி .
ரெண்டு குடிச்சும் தாகம் அடங்கலையே...
புது வருஷத்துல மொக்கை போடாம ஒரு பதிவு வந்திருக்கு பிளீஸ்  கெட்டப்
        இதுல ஒரு சிக்கல் இருக்கு . அதாவது அது டெலிகாஸ்ட் செய்யும் சிக்னல்  நமக்கு மட்டும் கிடைக்காது. அது எல்லாருக்குமே  கிடைக்கும் . ஆனா பாஸ்வேர்ட் போட்டு இருப்பதால அவங்களுக்கு உள்ளே போக முடியாது . அது மட்டுமே  அவங்களுக்கு சிக்கல். இதுல சில கில்லாடிகள் டிரோஜான் வைரஸ்களை வச்சி ஈஸியா பாஸ்வேர்டை திருடிடலாம் ((எப்படின்னு கேக்கக்கூடாது )) . சில பேர் பாஸ்வேர்டே போடாம (போடத்தெரியாம ) இருப்பாங்க
       அது மாதிரி உள்ள சிக்னல் நிறைய இடங்கள்ள தேடினால் கிடைக்கும் . அப்படி ஓசியில நெட் வச்சி பதிவு போடுபவர்களும் நிறைய பேர் இருக்காங்க (யாருன்னு கேக்கப்பிடாது ) . அப்படி நம்ம நெட் யாருக்கும் வெளியே  தெரியாம உபயோகிக்க ஒரு வழி இருக்கு. பேர் வெளியே  தெரிஞ்சாதானே  கிராக் செய்ய முடியும் . அதுக்கு
முதல்ல  நெட் புரவுசர்ல அதிக பட்சமா http://192.168.1.1 . ன்னு டைப் செய்தா உங்க வயர்லஸ் செட்டின் யூசர் இண்டர்ஃபேஸ்  வரும் .இது ஒரு பொதுவான ஐ பி .உங்ககிட்ட அந்த ரூட்டரின் யூசர் கைட் இருந்தால் பார்த்துக் கொள்ளவும் . அதுல உங்க யூசர் பாஸ் வேர்ட் குடுங்க . அதுவும் நார்மலா அட்மின்/அட்மின் அப்படிதான் இருக்கும்
        அதுல வயர்லஸ்  டேப்ஐ கிளிக்கி  அதுல வயர்லஸ் நெட் வொர்க் நேம்  (SSID)ன்னு இருக்கும் .அதுல உங்களுக்கு பிடிச்ச பேரை ஈஸியா ஞாபகம் வச்சிருகிற பேரா குடுங்க 
கட்டிலுக்கு அடிலதான் தூங்கவிடறது இல்ல இங்கேயுமா...?  அவ்வ்வ்வ்

       அடுத்ததா  வயர்லஸ் SSID  பிராட் காஸ்ட் செக்‌ஷன் ஐ டிஸேபிள்  செய்யுங்க . இதை வயர்லஸ் சேனல் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸில பார்க்கலாம் .இதை எல்லாம் சேவ் செய்துட்டு வெளியே வந்தால் உங்க சிக்னஸ் வெளியே  தெரியாது .
      இதை உங்க கம்ப்யூட்டருக்கு சொல்லனும் .இல்லாட்டி அது திருதிருன்னு முழிக்கும் . உங்க கம்ப்யூல வலது பக்கம் கீழே இருக்கும் நோட்டிஃபிகாஷன் ஏரியாவுல இருக்கும் வயர்லஸ் பாக்ஸை  கிளிக்கி சேன்ஜ் அட்வான்ஸ் செட்டிங் அதில வயர்லஸ் நெட் ஒர்க்  டேபை கிளிக்குங்க
       அதில் ஆட் பட்டனை தட்டினால் பிரிஃபேர்ட் நெட் ஒர்க் செக்‌ஷன் வரும் அதில்  ஏற்கனவே அங்கே  நீங்க குடுத்த SSID  பேரை குடுக்கவும் . இதை சேவ் செய்யவும் .
       இதன் படி செய்யும் போது  உங்க கம்ப்யூ  , நெட் ரூட்டர் தவிர மூணாவதா யாருக்கும் தெரியாது . நம்ம ஆளு ஒருத்தன் இப்படிதான் சொன்னான் .எனக்கும் இது மாதிரி செட் பண்னிக்குடுன்னு ஒரே அழிச்சாட்டியம் .சரின்னு போய் பார்த்தா கம்ப்யூ ஆனே ஆகல .கேட்டா நான் போன வருஷம் ஆன் செய்தேன் .அதுக்கு பிறகு மூட் இல்ல இப்ப வந்திருக்குன்னு சொன்னான் . கடைசியில உள்ளே திறந்து பார்த்தா ..அதை நீங்களே  பாருங்க .கொடுமையை . நம்ம ஆளு கார் பேனட்டுக்குள்ள வளர்த்தாங்க .இவன் என்னடான்னா கம்ப்யூ உள்ளேயே  வளர்க்கிறான்  

55 என்ன சொல்றாங்ன்னா ...:

Porkodi (பொற்கொடி) said...

!!!!!!

Mahi said...

:)

Philosophy Prabhakaran said...

படங்கள் ரசிக்க வைத்தன...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே..அப்படியே.. ஸ்விஸ்பேங்க் பாஸ்வேர்டை எப்படி crack செய்வதுனு சொல்லிக்கொடுத்தா, நாங்களும் ஆட்சிக்கு வருவமில்ல... ஹி..ஹி

ஆமாண்ணே.. இந்த Wi-Fi..Wi-Fiனு சொல்லிக்கிட்டு இருக்காங்களே.. அப்படீனா என்னாங்கோ?...

cheena (சீனா) said...

சரி சரி - நான் வயர்லெஸ் எல்லாம் பயன் படுத்தறது இல்ல - எனக்கு கண்ணு எப்பவும் தெரியணும் - அதுக்குத்தான் இது. வர்ட்டா

Unknown said...

படங்கள் அருமை.

vanathy said...

Porkodi said
!!!!!!!
repeatuuuuuuu...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said... 4

ஏண்ணே..அப்படியே.. ஸ்விஸ்பேங்க் பாஸ்வேர்டை எப்படி crack செய்வதுனு சொல்லிக்கொடுத்தா, நாங்களும் ஆட்சிக்கு வருவமில்ல... ஹி..ஹி

ஆமாண்ணே.. இந்த Wi-Fi..Wi-Fiனு சொல்லிக்கிட்டு இருக்காங்களே.. அப்படீனா என்னாங்கோ?...
///

Wife (மனைவி) யை செல்லமா கூபிடுரதுதான் WIFI

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jailani Ur 1st photo super

சசிகுமார் said...

பயனுள்ள இடுகை நண்பா

பொன் மாலை பொழுது said...

நாங்க இருக்கும் ஏரியாவுல நிறைய இது போல சிக்னல்கள் வரும். ஆனா நான் நல்ல புள்ளயா தனியே இணைப்பை வாங்கி விட்டேன். அது சரி, உரிமையாளர் தன் இணைப்பை பார்க்கும்போது பிறர் அதனை பயன் படுத்துவதும் தெரிந்து விடுமே ஜெய்லா?! மாட்டிகொள்ள மாட்டார்களா?

சாந்தி மாரியப்பன் said...

இந்த வயர்லெஸ் ரொம்ப பிரச்சினை கொடுக்கும் போலிருக்கே :-))

குறையொன்றுமில்லை. said...

மிகவும் பயனுள்ள பதிவு. படங்கள் சூப்பர்.

ஆயிஷா said...

பயனுள்ள பதிவு.படங்கள் அருமை.

Anonymous said...

நல்ல சிக்னல் உள்ள பதிவு

Chitra said...

HAPPY NEW YEAR!!!!

அந்நியன் 2 said...

Super.....பயனுள்ள பதிவு.

sathishsangkavi.blogspot.com said...

Very Good Post...

ஸாதிகா said...

நல்ல தகவல்.எப்படி உங்களுக்கேன்னு இப்படி படமெல்லாம் கிடைக்கிறது?

ம.தி.சுதா said...

யாரைக் கேட்டு நான் தண்ணியடிக்கும் படத்தை போட்டுள்ளிர்கள்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

காஞ்சி முரளி said...

‎///கடைசியில உள்ளே திறந்து பார்த்தா ..அதை நீங்களே பாருங்க .கொடுமையை . நம்ம ஆளு கார் பேனட்டுக்குள்ள வளர்த்தாங்க .இவன் என்னடான்னா கம்ப்யூ உள்ளேயே வளர்க்கிறான்////

எலே... ஜெய்லானி...
ஓவர் குசும்புலே...!

சிநேகிதன் அக்பர் said...

அசத்தல் பதிவுதான். பாஸ்வேர்ட் எப்படி ஹேக் பண்ணுறதுன்னு சொல்லிக்கொடுங்களேன் :)

athira said...

ஜெய், படங்கள் பார்த்ததும் பொறுக்கவே முடியாமல் ஓடிவந்தேன்... மங்கியார், பூஸார், எலியார்.... என்னா ஒரு combination:).

பதிவைக் காட்டிலும் படங்களுக்கே என் அவார்ட்... சீயா மீயா.

எம் அப்துல் காதர் said...

//((புது வருஷ ஆரம்பத்திலேயே மொக்கை போடக்கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்)) //

ஆஹா என்னா ஒரு நல்ல எண்ணம்?? நற.. நற..

எம் அப்துல் காதர் said...

//ஓசியில நெட் வச்சி பதிவு போடுபவர்களும் நிறைய பேர் இருக்காங்க (யாருன்னு கேக்கப்பிடாது) //

யாரு பாஸ் அந்த பிழைக்கத் தெரிந்த ஃபேமஸ் பதிவர்!! (என்னை சொல்லலேல. அவ்வ்வ்வவ்..!!

எம் அப்துல் காதர் said...

பாஸ் இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புரியல!! டீம் வியூவர்ல வந்து சொல்லிக் கொடுத்துட்டு போங்க!! சரியா. ஹி.. ஹி...(நமக்கு எப்பவுமே முன் யோசனை ஜாஸ்தி)

ஆமினா said...

//பாஸ் இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புரியல!! டீம் வியூவர்ல வந்து சொல்லிக் கொடுத்துட்டு போங்க!! சரியா. ஹி.. ஹி.//
மீ......டூ...............

ஆமினா said...

ஒரு வேளை நமக்கு தான் மூள கம்மியோ.....

நாளு தடவ படிச்சும் மண்டைல ஏறலையே!!!!

Jaleela Kamal said...

போட்டோவுக்கும் , பதிவுக்கும் என்ன சம்மந்தம்,

எனக்கும் மண்டையில் எட்டலப்பா ஆமினா. இன்னொரு தடவ வந்து படிக்கனும்.

மின்மினி RS said...

நல்ல தகவல்கள். அருமையான பகிர்வு

Jaleela Kamal said...

இதுல சில கில்லாடிகள் டிரோஜான் வைரஸ்களை வச்சி ஈஸியா பாஸ்வேர்டை திருடிடலாம்??????

r.v.saravanan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

ஒரு வேளை நமக்கு தான் மூள கம்மியோ.....

நாளு தடவ படிச்சும் மண்டைல ஏறலையே//

எனக்கு மூளை இல்லவேயில்லை அது அண்ணாத்தேக்கும் தெரியும்.

போட்டோக்களில் ரொம்ப நல்லாயிருக்கீங்கன்னு சுஜி சொல்லச்சொன்னா..

மனோ சாமிநாதன் said...

பயனுள்ள‌ தகவலுக்கு நன்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை said...

பயனுள்ள‌ தகவலுக்கு நன்றி!
தல குசும்பு ரொம்ப ஜாஸ்தி தான். மூன்றாவது படம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//புது வருஷத்துல மொக்கை போடாம ஒரு பதிவு வந்திருக்கு பிளீஸ் கெட்டப்///
அப்படியா...? எங்க? எங்க? ஹா ஹா ஹா....just kidding...useful post

RAZIN ABDUL RAHMAN said...

நீங்க நாலு எழுத்து படிச்சதுனால ஏதேதோ சொல்ரீங்க..
பட்...எனக்குத்தா ஒன்னுமே பிரியல...நானும் என்னோட கொம்ப்பியூட்டர்ல நீங்க சொன்ன,ஏதாச்சும் செஞ்சுரலாம்னு பாத்தா...கழுதை நம்ம அறிவுக்கு எட்டவே மாடேங்குது...மொத்தத்துல கமல் படம் பாத்த ஒரு எஃபெக்ட்....

அன்புடன்
ரஜின்

MANO நாஞ்சில் மனோ said...

"ங்கே" ஒரு மண்ணும் புரியலை....
ஏதோ வந்துட்டோம்....குத்திட்டு போயிருவோம்.....:]

கோநா said...

very useful...

IlaVeera said...

Good One !

சிநேகிதன் அக்பர் said...

தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.

http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_10.html

ஜெய்லானி said...

@@@Porkodi (பொற்கொடி)--// !!!!!! //

வாங்க..வாங்க.. எதை பார்த்து ஆச்சிரியமுன்னு சொல்லிட்டு போயிருந்தா நானும் ஆச்சிரியப்பட்டு போயிருப்பேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi --// :) //

வங்க ..வாங்க..!! அளவோட புன்னகையா ..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Philosophy Prabhakaran--// படங்கள் ரசிக்க வைத்தன...//

வாங்க..நண்பா.. அதானே நம்க்கு முக்கியம் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஏண்ணே..அப்படியே.. ஸ்விஸ்பேங்க் பாஸ்வேர்டை எப்படி crack செய்வதுனு சொல்லிக்கொடுத்தா, நாங்களும் ஆட்சிக்கு வருவமில்ல... ஹி..ஹி //

வாங்க பாஸ் ...இப்போ அந்த ஆராய்ச்சியிலதான் இருக்கேன் ... இத்தாலி உங்களுக்கு இந்தேனேஷியா எனக்கு ..ச்சே ..ஆப்கானிஸ்தான் எனக்கு ஹி..ஹி... ((ஆஃப்கானி ரேட் தெரியுமில்ல ))

//ஆமாண்ணே.. இந்த Wi-Fi..Wi-Fiனு சொல்லிக்கிட்டு இருக்காங்களே.. அப்படீனா என்னாங்கோ?...//

லேசில கிடைக்காது அப்படி கிடைச்சா சுலபமா போகாது .... நீங்க கேட்டது இதான்னே..? !!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@cheena (சீனா)--!!சரி சரி - நான் வயர்லெஸ் எல்லாம் பயன் படுத்தறது இல்ல - எனக்கு கண்ணு எப்பவும் தெரியணும் - அதுக்குத்தான் இது. வர்ட்டா //

வாங்க ஐயா..வாங்க..!! உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் இருக்கு ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--// படங்கள் அருமை. //

வாங்க ..வாங்க.. இதை தேடி போட்டது மட்டுமே நான் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//

@@@Porkodi
!!!!!!!
repeatuuuuuuu... //

வாங்க வான்ஸ்...நீங்களுமா..? அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
@@பட்டாபட்டி

ஏண்ணே..அப்படியே.. ஸ்விஸ்பேங்க் பாஸ்வேர்டை எப்படி crack செய்வதுனு சொல்லிக்கொடுத்தா, நாங்களும் ஆட்சிக்கு வருவமில்ல... ஹி..ஹி //

வாங்க போலீஸ்...கரெக்டா மோப்பம் பிடிச்சிட்டீங்களே...அவ்வ்வ்வ் ஓக்கே உங்களுக்கும் ஒரு பங்கு குடுத்திடுவோம்

//ஆமாண்ணே.. இந்த Wi-Fi..Wi-Fiனு சொல்லிக்கிட்டு இருக்காங்களே.. அப்படீனா என்னாங்கோ?...
///

Wife (மனைவி) யை செல்லமா கூபிடுரதுதான் WIFI //

ஓவ்வ்வ்வ் இதுக்கு இப்படி வேர ஒரு அர்த்தம் இருக்கா ...!!! இத்தனைநாள் தெரியாம போச்சே ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

Jailani Ur 1st photo super //

ஆமா பிரதர்...ஆகா...செம உள் குத்தால்லா இருக்கு ..எப்படியோ சமாளிச்சிட்டேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//பயனுள்ள இடுகை நண்பா //

வாங்க ..வாங்க..!!சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//நாங்க இருக்கும் ஏரியாவுல நிறைய இது போல சிக்னல்கள் வரும். ஆனா நான் நல்ல புள்ளயா தனியே இணைப்பை வாங்கி விட்டேன். //

வாங்க..வாங்க... நல்ல சான்ஸ விட்டுட்டீங்க ஹி..ஹி..

//அது சரி, உரிமையாளர் தன் இணைப்பை பார்க்கும்போது பிறர் அதனை பயன் படுத்துவதும் தெரிந்து விடுமே ஜெய்லா?! மாட்டிகொள்ள மாட்டார்களா? //

அந்த அளவு யாரும் டெக்னிக்கலா செக் செய்வது இல்லை ..
தன் கம்ப்யூவில தன் அட்ரஸை மறைத்து வைக்கும் சாஃப்ட் வேரும் இருக்குமானால் ..ஒவ்வொரு பத்து(வினாடி) நிமிடத்துக்கும் மாற்றலாம் (( கமல் ஒரு படத்தில இதைதான் செய்து காட்டினார் -தி வெட்னஸ்டே ஹிந்தி டப்பிங்கில் )) அப்புறம் எப்படி கண்டு பிடிப்பது :-)) வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன் மாலை பொழுது said...

ஜெய்லா , அந்த கலர் குடிக்கும் கொரங்கை கொஞ்சம் நம்ம பக்கம் அனுப்பி வையுங்க . இந்த பன்னி குட்டி தொல்ல தாங்கல. அதுக்கு ஜோடியா இதனை உட்டா ரெண்டும் ஜாலியா குஷாலா கெடக்குமுள்ள ? அதான். எனக்கும் நிம்மதி . இல்ல, விலை சொன்னீங்கன்னா வாங்கிடுலாம். இந்த கொரங்கு குட்டியோட ஜட்டி சைசும் சொல்லுங்க . பன்னி இத பாக்கறதுக்கு முன்னாலேயே இதுக்கு ஜட்டிய போட்டு தொலைக்கணும் சாமீ.

ஆர்வா said...

பதிவைவிட படங்கள் ரொம்ப சுவாரஸ்யம் தலைவா

isaianban said...

சூப்பரு மிகவும் பயனுள்ள தகவல் ஹிஹிஹிஹி 100லய்க் சாரி பேஸ்புக் ஞாபகம் ஹாஹா

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))