இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்
இசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை
நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம் இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல
நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம் இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல
நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
தண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ
நான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ
மழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ
நான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு யாரோ
வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும் கருப்பா கருத்து போனதப்பாரு
மழையும் வந்தா குட்டையும் நிரம்பும்
என் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு
நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்
நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம் இருந்தும் குட்டை இருந்தும்
மீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல
டிஸ்கி: 1 இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))
டிஸ்கி :2 பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))
54 என்ன சொல்றாங்ன்னா ...:
என்ன் ஒரு வார்தை ஜாலம்...அடடா....அண்ணாதே...ஆமா இதேல்லாம் உங்க வீட்டுகாரம்மாக்கு தேரியுமா##டவுட்டு...எப்டிதான் சமாளிகிறாங்களோ....
ஐ!!! வடை எனக்கே எனக்கா....
ஏண்ணே, இந்த கொலைவெறி?..
:-)
ஜெய்...இந்தப் பாட்டை என்ன ராகம் ,தாளத்தில பாடணும்.ஆனாலும் வரிகள் விஷயம் சொல்லுது.இது நகைச்சுவை அல்ல !
//படம் : கொக்கு பைரவி
இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்
இசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை//
இந்தக் கொடுமையைக் கேக்க ஆருமே இல்லையா?? :))
//இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))//
குறிப்பிட்டு யாரைச் சொல்லியிருக்கீங்கன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு.. அவங்களைத் தானே? :)))))))
ஹாஹ்ஹா.. நல்ல நகைச்சுவை.. ரசித்தேன்..
:))
ஏனிந்தக் கொலை வெறி
அடடா...கொஞ்சம் முன்னாலே தெரிந்திருந்தால் விஜய் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கலாமே....
ரைட்..ரைட்..அடுத்த முறை பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
கொக்கு பாடும் குளோபல் வார்மிங் பாடல் அருமை.
உல்டா பாடல்கள் என்றால் எனக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு... இது ஒரு நல்ல முயற்சி... தொடர்ந்து இதுபோல வேறு ஏதாவது பாடல்களையும் உல்டா செய்யுங்கள்...
ரொம்ப நாளாயிடுச்சேன்னு இந்த பக்கம் வந்தது என் தப்புங்க பாய். இனி தப்பித் தவறி கூட இந்தப் பக்கம் வர மாட்டேனே...!!
பி.கு:
//அமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே//
அதுக்கு நேர் மேலதான் பெரிய ஓசோன் ஓட்டை இருக்கு தெரியுமோ??
ரைட்டு நடத்துங்க!
நல்லா இருக்கு. உங்கள் கற்பனைத் திறன் வாழ்க.
அமேசான் காட்டுக்குள் போன யாரும் திரும்பி வந்ததில்லையாம்.
பாட்டு நல்லாத்தான் இருக்கு எந்த பல்லவியில் பாடணும்னு தெரியாமல் கவிதையாய் படித்தேன்.
எல்லா விசயங்களும் நல்ல கருத்துடையவை அதில் ரெண்டு மூணு இடத்தில் சரணம் விட்டுப் போயிருக்கு அடுத்தப் பதிவில் சரி பண்ணிடுங்கோ.
ராகத்தை இழுக்கும்போது உல் நாக்கை கொஞ்சம் அப்படியே மேலேயும் கீழேயுமா அசைத்துப் பாடினிர்கள் என்றால் அந்த மெட்டு அப்படியே நம்ம காதில் ஒளிக்கும்.
சா..ச...ம...மா..க...கா..கி....கீ. இது சின்னப் பிள்ளைகளில் பாட்டி எனக்கு சொல்லித்த் தந்தது உங்களுக்கும் பயன் படும் என்று எழுதுகிறேன்.
கிராமிய கிழவிகளுக்கு ஒப்பாரி வைத்து பாடுவதற்கு இந்தப் பாட்டை ஸ்பான்சர் செய்யப் படுகிறது.
வளரட்டும் கிராமிய கலை.
ஓ...
இதுக்குப் பேரு தான் சமூக அக்கறையோ..
ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்..
மொக்கைன்னு சொன்னாலும், விஷயமும் இருக்கு...
ஓ இப்ப படமும் எடுக்க ஆரம்பிச்சா.
ஜெய்லாணி டீவியில் சமையல், நகைச்சுவை, பிளாக்கர் டிப்ஸ் ம்ம்ம்ம் இப்ப படம் ம்ம்ம் கலக்கல் தான் இதுக்காகவே( எல்லாத்துக்குமாசேர்த்து) அவார்டு கொடுக்கனும்.
//அடடா...கொஞ்சம் முன்னாலே தெரிந்திருந்தால் விஜய் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கலாமே....
ரைட்..ரைட்..அடுத்த முறை பார்க்கலாம்.//
வேலன் சார் ஏன் அடுத்து அஜீத் வருவார் ஞாபகமா அங்கு சேர்த்து கொள்ளுங்கள்
பாட்டெல்லாம் நல்லா தான் இருக்கு...
இந்த மொக்கைக்கு அதான் குறை!!
நல்லா இருக்கு.Congratulations .
வந்துட்டேன் , இருந்தாலும் ஒரு ராஜேந்தரை வச்சிக்கிட்டு சமாளிக்க முடியல தமிழ் நாட்டில் ? ம் முயற்சி திருவினையாக்கும்.
இந்தப் பாட்டின் ராகம் "நானொரு சிந்து காவடி சிந்து" பாடலை இயற்றி இசையமைத்துப் பாடுபவர் கவிஞர் ஜெய்லானி ... இருங்க மக்கா எங்க ஓடுறீங்க... மரம் வளர்க்கவா? கொக்கு பிடிக்கவா? ஹி.. ஹி.. அசத்துறீங்க தல!!
தொடர்ந்து டிவிச்சேனலில் பிரகாசித்து வரும் ஜெய்லானி டிவியின் வளர்ச்சி தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் கொடிகட்டி பறக்கிறது. இதையெல்லாம் கண்ட தாத்தா குழுவினரின் அவசர கூட்டத்தில், "ஜெய்லானி டிவியில் ஒளிபரப்பப்படும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நமது அலைவரிசையில்தான் ஒளிபரப்ப வேண்டும். இதற்கு மாறாக ஜெய்லானி டிவி செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்." என்ற முடிவு எடுக்கப்படுகிறது.
ஜெய்லானி டிவியின் அலுவலகத்தில், "அய்யய்யோ இதென்ன சோதனை!.. பாருங்கய்யா.. ஜெய்லானி டிவிக்கு வந்த கஷ்டகாலத்தை... சே.. கொஞ்சம் பாப்புலரானா விடமாட்டாங்களே.. நாமளே அப்படியும் இப்படியுமா தத்துபித்துன்னு ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வச்சிட்டாங்கய்யா ஆப்பு."
(1) "அந்த கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்கிது?"
"கொக்கு என்ற எழுத்தில் ஒத்த 'கால்' தான் இருக்கு அதனால"
(2) "அந்த கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்கிது?"
"அது ரெண்டு கால்ல தான் நிக்கிது. இங்கிருந்து பார்க்கும் போது ஒத்த கால் மாதிரி தெரியுது"
(3) "அந்த கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்கிது?"
"அந்த பாட்டு நல்லா இருக்காம்" நற.. நற..
(4)"அந்த கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்கிது?"
எங்க ஓடுறீங்க மக்கா ........!!
மொதல்ல தலைய நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்துறேன்...!!ஆஆஆஆஆஆ
மெட்டால் பாட்டெழுதி மனதை மட்டும் தொடவில்லை உணர்வையும் தொட்டு விட்டீர்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
it's Good...!
mokkai with Message...!
//வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும் கருப்பா கருத்து போனதப்பாரு//
//இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே//
//கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்//
இந்த வரிகள் ரசனையான வரிகள்.
மொக்கையும் கருத்தும் இணைந்து என்னே அதிசயம்!???
அடுத்த பாடல் எப்போ?
உங்கள் கற்பனைத் திறன் நல்லா இருக்கு jailani
@@@சீமான்கனி--////என்ன் ஒரு வார்தை ஜாலம்...அடடா....அண்ணாதே...ஆமா இதேல்லாம் உங்க வீட்டுகாரம்மாக்கு தேரியுமா##டவுட்டு...எப்டிதான் சமாளிகிறாங்களோ....//
வாங்க அண்ணாச்சி வாங்க..!!ரொம்ப கஷ்டம்தான் ..கம்பெனி சீக்ரெட்டை வெளியே சொல்ல முடியுமா..ஹா..ஹா..
//ஐ!!! வடை எனக்கே எனக்கா....//
அதுல சந்தேகமே வேண்டாம் முதல் இரெண்டாவது வடை எல்லாம் உங்களுக்குதான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--//ஏண்ணே, இந்த கொலைவெறி?..
:-) //
வாங்க குருவே..!! எல்லாம் நீங்க குடுத்த ஆசிர்வாதம்தான் ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹேமா--//ஜெய்...இந்தப் பாட்டை என்ன ராகம் ,தாளத்தில பாடணும்.ஆனாலும் வரிகள் விஷயம் சொல்லுது.இது நகைச்சுவை அல்ல ! //
வாங்க குழந்தை நிலா...!!சந்தோஷமா இருந்தா ஆனந்த பைரவி , சோகமா இருந்தா முகாரி ..ஹி..ஹி... மீடியமா இருந்தா நாட்டை குறிச்சி (( ஜெய்லானீஈஈஈ..இப்பிடியே பிட்டை போடு ..உனக்கும் ராகம் வருமுன்னு நம்பிடுவாங்க ஹய்யோ..ஹய்யோ..))பாடி பார்த்துட்டு சொல்லுங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..--//
//படம் : கொக்கு பைரவி
இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்
இசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை//
இந்தக் கொடுமையைக் கேக்க ஆருமே இல்லையா?? :)) //
வாங்க சந்தூஸ்..!! ஒருத்தர்தான் ஆனா அவங்களைதான் கானோம் :-(
//இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))//
குறிப்பிட்டு யாரைச் சொல்லியிருக்கீங்கன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு.. அவங்களைத் தானே? :))))))) //
ஐயய்யோ...!! வில்லங்கமான கேள்வியா கேக்குறாங்களே மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்
// ஹாஹ்ஹா.. நல்ல நகைச்சுவை.. ரசித்தேன்..//
இந்த சிரிப்பு வாழ்வில் தொடரட்டும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Balaji saravana--// :)) //
வாங்க சார் ..!!அப்படியே எதை பார்த்து மவுனமா சிரிச்சீங்கன்னு கொஞ்சம் சொன்னால் தேவலாம் :-)))))))))))))) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@LK--//ஏனிந்தக் கொலை வெறி //
வாங்க அண்ணாச்சி ..!!ஆஹா..அடுத்த படத்துக்கு தலைப்பு கிடைச்சிடுச்சி :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வேலன்.-// அடடா...கொஞ்சம் முன்னாலே தெரிந்திருந்தால் விஜய் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கலாமே....
ரைட்..ரைட்..அடுத்த முறை பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன். //
வாங்க ஐயா..!!!அச்சோ...மக்கள் தப்பிச்சிட்டாங்களே..!!அடுத்து இறா-ன்னு படம் வராமலா போய்டும் அப்போ பார்த்துக்கலாம் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இப்போதான் டிவில பார்த்தேன் சூப்பர் ஜெய்லானி :)
ஓ............. அவனா நீ ???? ஓகே விடு ஒரு நல்ல மெச்செஜ் சொல்லி இருக்க மன்னிச்சு விட்ருர்றேன்..... அப்புறம் எங்கவீட்டுல காலி இடமே இல்ல ..... மொட்ட மாடில மரம் வழக்க ஒரு ஐடியா குடேன்
அகா...
என்னா ஒரு அதகளம்..
அசத்திட்டீங்க போங்க..!!
ஹா ஹா ஹா ஹா என்ன மக்கா புலம்பல் பயங்கரமா இருக்கு,
ஒட்டகத்தை மேச்சி மேச்சியே நல்லா எழுத படிச்சிகிட்டீர் ஓய்...
கொக்கு பைரவி பாடிய ஜெய் அண்ணாவின் ஸ்டைலைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared!! :))))))
http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html
நல்லா இருக்கு. உங்கள் கற்பனைத் திறன்.அசத்திட்டீங்க
// இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))//
நல்லாருக்கு தொடருங்கள்.........
உங்களுக்கு "அவார்ட்" கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
samuthaaya nalam karuthi mokkai podum jailaani vaazhka! ;)
bt on a serious note.. this is a serious issue that people need to take up!
kudos!
கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. வைரமுத்து, பா. விஜய், முத்துக்குமார் எல்லாரும் வந்து உங்களைப்பாட்டெழுதி தர சொல்லப்போராங்க.
ஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் யாரங்கே.. எங்கே அந்தப் பொற்காசுப் பை.. நம்ம பாணருக்கு கொண்டுவா..பிடி ஜெய்.. மரம் வளர்த்திடுவோம்.. நாட்டில்மும்மாரி பெய்ய..:))
என்ன ஜெய் ஹோம் வொர்க் குடுத்தா ஒழுங்கா செய்ய மாட்டிங்களா?
நான் தான் இந்த பக்கம் வர இயலவில்லை. என் கம்யூட்டர் ப்ராப்ளம், இப்ப தான் சரியாச்சு. இதோ ஒடோடி வந்துட்டேன்.
உங்க கற்பனை திறன் சூப்பருங்க.
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹெய்.
என்ன புத்தாண்டு ரிசல்யூஷன்ஸ். எடுத்து விடுங்க.
வெயிட்டிங். வெயிட்டிங்க்.
நன்றி.
நண்பருக்கும்...
நண்பர் குடும்பத்தாருக்கும்....!
மற்றும்
வலையுலக நண்பர்களுக்கும்...
எனது "இனிய 2011ன் புத்தாண்டு வாழ்த்துக்கள்".....!
;)))
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))