என்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே |
அப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி? , ஆம்லட் போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...!!
தேவையான பொருள்கள்
முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))
உப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))
ஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .
மஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்
செயல் முறை
முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .
இப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்
ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.
இப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .
வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முடியல இம்சை .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ |
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .
இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்
படங்கள் உதவி : கும்மி டெர்ரர்
90 என்ன சொல்றாங்ன்னா ...:
//சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் //என்னது திடீர்னு வெண்ணெய்? கொஞ்சம் வித்தியாசமான ஆம்லட்டோ!
//அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .//
மனிதநேயம்!
// இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.//
Family Counselling!
கடைசி ஒரு கேள்வி முட்டை இல்லாம எப்படி ஆம்லட்???
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........
மக்கா...நீங்களே நியாயம் சொல்லுங்க..இப்பூடி எல்லாம் கொடுமைப்படுத்தும் அண்ணன் ஜெய்லானியை என்ன செய்யலாம். மேற்கண்ட குரங்கை வைத்தே துவம்சம் பண்ணச்சொல்லலாமா?
@@@எஸ்.கே ..//
//சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் //என்னது திடீர்னு வெண்ணெய்? கொஞ்சம் வித்தியாசமான ஆம்லட்டோ! //
வாங்க ..அண்ணே..வாங்க..!! இன்னைக்கு வடை ...சார்...ஆம்லட் உங்களுக்குதான் ஹா..ஹா..
ஆமா கொஞ்சமா வித்தியாசமான ஆம்லட் தான்
//மனிதநேயம்! //
ஆமாப்பா..ஆமாம்...
//Family Counselling! //
ஹி..ஹி... என்னை ரொம்பவும் புகழ்றீங்க ஹி..ஹி..
//கடைசி ஒரு கேள்வி முட்டை இல்லாம எப்படி ஆம்லட்??? //
நீங்க இவ்வளோ நல்லவரா..!! தெரியாமப் போச்சே...அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஸாதிகா--//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........//
வாங்க ஸாதிக்காக்கா..வாங்க ..ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுது கொஞ்சம், ஆம்லட் சாப்பிடுறீங்களா ஹி..ஹி..
//மக்கா...நீங்களே நியாயம் சொல்லுங்க..இப்பூடி எல்லாம் கொடுமைப்படுத்தும் அண்ணன் ஜெய்லானியை என்ன செய்யலாம். மேற்கண்ட குரங்கை வைத்தே துவம்சம் பண்ணச்சொல்லலாமா?//
ஹாஅ..ஹா... அதே என்னோட இம்சை தாங்காம கத்தி கதறது தெரியலையா ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தேவையான பொருள்கள்
முட்டை - பல்லி முட்டையா? ஆமை முட்டையா? dinosaur முட்டையா? னு சொல்லவே இல்லை.
///உப்பு - இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு ,///
..........அப்போ கூல் personality உள்ளவங்களுக்கு?
ஜெய்லானி கலக்குறிங்க...எப்படி இப்படி எல்லாம்...
சரி ..நீங்க எப்ப எங்க வீட்டிக்கு வரிங்க...வரும்பொழுது மறக்காம வேப்பேண்ணெய கொண்டு வருங்க...எல்லோருக்கும் usefulஆக இருக்கும் இல்ல....
@@@Chitra--//
தேவையான பொருள்கள்
முட்டை - பல்லி முட்டையா? ஆமை முட்டையா? dinosaur முட்டையா? னு சொல்லவே இல்லை.//
வாங்க ..!!வாங்க...!! என் கேள்வியையே திரும்ப என்கிட்டயே கேட்டுட்டீங்களே..!! அவ்வ்வ் எறும்பு ,இல்லாட்டி கொசு முட்டையில செய்யனும் ஹி..ஹி..
///உப்பு - இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு ,///
..........அப்போ கூல் personality உள்ளவங்களுக்கு? //
உப்பே வேனாம் ..அதுக்கு பதிலா ரெட் சில்லி பவுடர் 4 ஸ்பூன் போட வேண்டியதுதான் ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL--//ஜெய்லானி கலக்குறிங்க...எப்படி இப்படி எல்லாம்...//
வாங்க ..வாங்க ..!! எப்பவும் பெண்களே சமையல் போடறாங்களா அதான் நாமும் போடுவோமுல்ல ஹா..ஹா..
// சரி ..நீங்க எப்ப எங்க வீட்டிக்கு வரிங்க...//
வரும் போது விரதம் வச்சிகிட்டுதான் வருவேன் ..எதுக்கு வம்பு (எனக்குதான் )
//வரும்பொழுது மறக்காம வேப்பேண்ணெய கொண்டு வருங்க...எல்லோருக்கும் usefulஆக இருக்கும் இல்ல....//
ஹை இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே வரும் விருந்தாளியை அவங்க கிட்டேயே வாங்கி அவங்களையே கவிழ்பது ..தேங்ஸ் சூப்பர் ஐடியா :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
டெட்டால் ஊற்றுவதால் வரும் 'பின்' விளைவு பத்தி ஒன்னுமே சொல்ல்லல...
ஆம்லெட் போடற ஆளா நீங்க?? எல்லாம் நோட் பண்ணி வச்சுக்குவோம்.. ரொம்ப சந்தேகம் கேக்கறவங்களுக்கு ஆயில் இல்லாம ஆம்லெட் .....
ஏண்ணே.. இவ்வளவு கஷ்டத்தை பார்த்து கண் கலங்கித்தான், திரைபடத்தில், ”படுக்க வெச்சு ஆம்லெட் போடுவது எப்படி?னு” படம் எடுத்திருக்காங்.. பார்த்து பழகிக்கீங்க..
:-)
வனவிலங்குகளே கலங்கி கையேடுத்து கும்பிடுது உங்க சமையலைபார்த்து...பாவங்க பதிவர்கள்...எல்லோரைவிடவும் பாவம் உங்க வீட்டில் இருப்பவர்கள்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
//..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்//
அண்ணே இது உங்களுக்குத்தான் ரெடி பண்ணி வச்சி இருக்கேன்... வாங்க . எப்ப வரீங்க
ஜெய்....கண்டிப்பா இதே முட்டைப்பொரியல் உங்களுக்கே யாராச்சும் செய்து தருவாங்க.வினை விதைச்சா அறுக்கணும்ல ஒருநாள் !
நல்ல குறிப்பா இருக்கே!!!
ஜெய் எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? ;)
அந்த குரங்குகளோட ரியாக்ஷனை பாத்த்தா, செஞ்ச ஆம்லெட்டை அதுகளுக்கு கொடுத்திட்டீங்க போலிருக்கு :-))))
//
ஸாதிகா said... 6
மக்கா...நீங்களே நியாயம் சொல்லுங்க..இப்பூடி எல்லாம் கொடுமைப்படுத்தும் அண்ணன் ஜெய்லானியை என்ன செய்யலாம். மேற்கண்ட குரங்கை வைத்தே துவம்சம் பண்ணச்சொல்லலாமா?///
என்னங்க இப்படி சொல்லிடீங்க. அந்த குரங்கே நம்ம ஜெய்......................தான
//திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை///
யாரை ஏமாத்துற. எங்க பொண்ணுங்க சமைக்கிறாங்க. எல்லா வீட்டுலையும் ஆம்பளைங்கதான..ஹிஹி
//முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை//
அண்ணே உங்க ஸ்கூல் ரெங்க் கார்டு இல்ல பரிச்சை பேப்பர் கொடுங்களேன் அதுலதான் நிறைய முட்டை இருக்கும்னு கேள்விப்பட்டேன்
//அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க//
மஞ்சள் பொடி என்ன கலர்ல இருக்கணும்#டவுட்டு
//ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும்//
மிளகாயோட அப்பா பேரு என்ன. பச்ச முத்தா?
மீண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்
//முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் //
சில்வர் பக்கெட்டா பிளாஸ்டிக் பக்கேட்டான்னு சொல்லலை?
//வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி ///
அதுக்கு சின்ன வெங்காயமே வச்சிகிலாமே..
/வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம்///
எங்க வீட்டுல விளக்கெண்ணை இல்லை. நீ வரியா ராசா?
அ கோ மு எப்பிடி பண்ணுரதுன்னும் சொல்லித் தாங்கோ :)
உங்க வீட்டம்மா உங்களுக்கு என்ன எண்ணெய் உபயோகிப்பாங்க? (சும்மா டவுட்டு :) )
@@@கே.ஆர்.பி.செந்தில்--// டெட்டால் ஊற்றுவதால் வரும் 'பின்' விளைவு பத்தி ஒன்னுமே சொல்ல்லல..//
வாங்க அண்ணே வாங்க ..!! ”பின்” விளைவு டெட்டாலை விட மற்ற எண்ணெய் ஊற்றும் போது அனுபவத்துல தெரியுமே ஹா...ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம்///
எங்க வீட்டுல விளக்கெண்ணை இல்லை. நீ வரியா ராசா?//ஹே..ஹே..
@@@இலா--//ஆம்லெட் போடற ஆளா நீங்க?? எல்லாம் நோட் பண்ணி வச்சுக்குவோம்.. ரொம்ப சந்தேகம் கேக்கறவங்களுக்கு ஆயில் இல்லாம ஆம்லெட் .....//
வாங்க மயில்..வாங்க ..!! இது சந்தேகம் இல்ல ..மனையல் குறிப்பு ஹா...ஹா.. தவறாம செஞ்சி சாப்பிட்டு பாருங்க.முன் ஜென்மமே ஞாபகத்துக்கு வரும் ஹா..ஹா....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--//ஏண்ணே.. இவ்வளவு கஷ்டத்தை பார்த்து கண் கலங்கித்தான், திரைபடத்தில், ”படுக்க வெச்சு ஆம்லெட் போடுவது எப்படி?னு” படம் எடுத்திருக்காங்.. பார்த்து பழகிக்கீங்க..
:-) //
வாங்க ..வாங்க..!! ம்..எனக்கும் அதான் தோனுது..அதுக்கு சுகன்யா ஒத்துகனுமே..!! அடப்பாவி என்வாயை கிளறத்தான் இப்படி ஒரு கமெண்டா அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இதை யெல்லாம் செய்து அப்படி ஒரு முட்டையே வேண்டாம் எதுக்கு அது
@@@வேலன்--//வனவிலங்குகளே கலங்கி கையேடுத்து கும்பிடுது உங்க சமையலைபார்த்து...பாவங்க பதிவர்கள்...எல்லோரைவிடவும் பாவம் உங்க வீட்டில் இருப்பவர்கள்...
வாழ்கவளமுடன்.
வேலன். //
வாங்க..வாங்க ..!!ஹா..ஹா ..அதுக்காக அப்படியே விட்டுறதா செஞ்சிப்பாருங்க அப்புறம் ஆம்லட் ஆசையே இருக்காது :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@LK --//..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்//
அண்ணே இது உங்களுக்குத்தான் ரெடி பண்ணி வச்சி இருக்கேன்... வாங்க . எப்ப வரீங்க //
வாங்க ..வாங்க...!! எனக்கு முட்டைன்னா அலர்ஜி நான் சாப்பிடுவதை விட்டு வருஷகணக்காச்சி ((இப்ப என்னா செய்வீங்க.....இப்ப என்னா செய்வீங்க )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹேமா--// ஜெய்....கண்டிப்பா இதே முட்டைப்பொரியல் உங்களுக்கே யாராச்சும் செய்து தருவாங்க.வினை விதைச்சா அறுக்கணும்ல ஒருநாள் !/
வாங்க குழந்தை நிலா ..!!யாராச்சும்...!! நீங்க மட்டும் குடுத்துடாதீங்க ..நான் பாவம் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஐயா ராசா.. முடியல...
நம்ம முன்னோர்கள் கமெண்ட்ஸ் அட்டகாசம் :)
என்னப்பா இப்பதான் கோமாவில் இருந்து எழுந்து வந்தீங்களா.
ஸ்மெல் வந்தா டெட்டால் ஊத்தலாம்னு சொல்றீங்க. பெனாயிலும் ஊத்தலாமா?
///அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்///
........ கேள்விபட்டிருக்க..!
............... கேள்விபட்டிருக்க..!
............................. கேள்விபட்டிருக்க..!
ஆனா...
இதமாதிரி ஆள பார்த்ததே இல்லப்பா...?
ஆள... விடுடா சாமி...!
டெரர்....
எங்கிருந்தாலும்... உடனே ஜெய்லானி பதிவுக்கு வரவும்...!
ஓஹ் இப்படித்தான் உங்களுக்கு மிசஸ் ஜெய் ஆம்லெட் பண்ணித் தருவாங்களா?! அதான் தலைமறைவா இருக்கீங்களோ :)
என்ன ஜெய்லானி ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு
நான் சைவம் என்பதால் வெளிநடப்பு செய்யாலாமா என்று யோசிக்கிறேன்
வந்துட்டேன்...
மஞசள் கருவை மட்டும் எப்படி ஆம்லட் போடுறது?
வெள்ளை கருவில் மட்டும் எப்படி ஆம்லட் போடுவது?
சொல்றீங்களா ராசா?
வடை (50)!
// ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள், புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை!!//
ஹி..ஹி.. யாருங்க அது பேரச் சொல்லுங்க!! நம்மகிட்ட இந்த உடான்ஸ் எல்லாம் ஆகாது பாஸ் ..ஹக்காங்!!
// ஆம்லட் போடுவது எப்படி? //
க்கி.. க்கி.. ஸ்கூல்ல வாங்குனதெல்லாத்தையும் இப்படி போட்டு ஓடைக்கனுமாக்கும்!!
// முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை//
ஸ்கூல்ல வாங்கினது எத்தன??
// அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி) யா//
அத நாங்க சொல்லணும். நீங்களே சொல்லிக்கிட்டா அதுக்குபேரு தம்பட்டம்...!!???
// இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்//
ஜெய்லானி ப்ளாக் ஸ்பாட்டில் இனி சமையல் நிகழ்ச்சி தானா?? சந்தேகப் பதிவு-6 வராதா?? நான் தொடரட்டுமா??
சமையல் குறிப்பு அருமை :)
@@@ஆமினா--//நல்ல குறிப்பா இருக்கே!!! //
வாங்க ..வாங்க..!! ம்..செஞ்சிப்பாருங்க ..இன்னும் நல்லா இருக்கும் ஹா..ஹா..
//ஜெய் எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க? ;) //
வேணாம்..பயமா இருக்கு கூட்டிகிட்டு போய் கிணத்துல தள்ளிட்டா ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அமைதிச்சாரல்-//அந்த குரங்குகளோட ரியாக்ஷனை பாத்த்தா, செஞ்ச ஆம்லெட்டை அதுகளுக்கு கொடுத்திட்டீங்க போலிருக்கு :-)))) //
வாங்க அமைதியக்கா..!! இன்னும் குடுக்கல அதுக்குள்ள கதிகலங்கி அழுவுது ,குடுத்தா என்ன ஆகுமோ ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// ஸாதிகா said... 6
மக்கா...நீங்களே நியாயம் சொல்லுங்க..இப்பூடி எல்லாம் கொடுமைப்படுத்தும் அண்ணன் ஜெய்லானியை என்ன செய்யலாம். மேற்கண்ட குரங்கை வைத்தே துவம்சம் பண்ணச்சொல்லலாமா?///
என்னங்க இப்படி சொல்லிடீங்க. அந்த குரங்கே நம்ம ஜெய்......................தான //
வாங்க போலீசு..!! இப்பிடி பப்ளிக்குல போட்டு குடுக்கலாமா.. நமக்குள்ள உள்ள டீலீங் அவ்வ்வ்வ்
//யாரை ஏமாத்துற. எங்க பொண்ணுங்க சமைக்கிறாங்க. எல்லா வீட்டுலையும் ஆம்பளைங்கதான..ஹிஹி //
ஒரு சில நல்லவங்களும் அப்பாவிகளும் இருக்காங்க
ளே கிராமத்துல அவங்க கேட்டது இது ஹி..ஹி..
//This post has been removed by the author. //
ம் என்னவோ அசிங்கமா திட்டின மாதிரி இருக்கு பரவாயில்ல பிளாக் உலகில இதெல்லாம் சகஜ மப்பா ..!! :-))
// அண்ணே உங்க ஸ்கூல் ரெங்க் கார்டு இல்ல பரிச்சை பேப்பர் கொடுங்களேன் அதுலதான் நிறைய முட்டை இருக்கும்னு கேள்விப்பட்டேன் //
ம்...யாருப்பா அது என் ரகசியத்தை லீக் அவுட் செஞ்சது...மகனே கையில கிடைச்சே சிரிப்பு போலீசு கையில பிடிச்சி குடுத்துடுவேன்
//மஞ்சள் பொடி என்ன கலர்ல இருக்கணும்#டவுட்டு //
தட்ஸ் யெல்லோ கலர் .. நஹித்தோ பீலா ரங் மே . எதுக்கும் நல்லா பாருங்க பச்சை கலர்ல இருக்கும் ஹா..ஹா..
//மிளகாயோட அப்பா பேரு என்ன. பச்ச முத்தா? /
ம்..அம்மா பேரு செவ்வந்தி ..இப்போ ஓக்கேயா
//மீண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம் //
விளம்பரம் நல்லா இருக்கே ஹி..ஹி..
//சில்வர் பக்கெட்டா பிளாஸ்டிக் பக்கேட்டான்னு சொல்லலை? //
அது வெள்ளி பாத்திரம்
//அதுக்கு சின்ன வெங்காயமே வச்சிகிலாமே..//
ம்..வச்சிக்கலாம் ஆனா அப்பவும் வெங்காயம் முழுசா இல்ல இருக்கும்
//எங்க வீட்டுல விளக்கெண்ணை இல்லை. நீ வரியா ராசா? //
இதாம் செம கமெடி கமெண்ட் ஹா...ஹா....ஹா....ஹா....ஆனா என்னைய வீட்டுக்கு கூட்டுகிட்டு போனா ஆமைய கூட்டிகிட்டு போன மாதிரி இருக்குமே பரவாயில்லையா ஹய்யோ..ஹய்யோ..
@@@இமா --// ;) //
வாங்கோ மாமீஈஈஈஈஈ ..!! உங்கள் அதே புன்னகைக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.--// அ கோ மு எப்பிடி பண்ணுரதுன்னும் சொல்லித் தாங்கோ :) //
வாங்க சந்தூஸ்,,வாங்க ..!! இந்த கேள்விக்கு பூஸார் வந்திருந்தா இது வரை பதில் கிடைத்திருக்கும் :-( ..ஓக்கே அடுத்த சமையல் குற்ப்பில் விடை கிடைக்கும் :-)
// உங்க வீட்டம்மா உங்களுக்கு என்ன எண்ணெய் உபயோகிப்பாங்க? (சும்மா டவுட்டு :) ) //
ஆஹா வில்லங்கமான கேள்வியா இருக்கே..!! அதை இங்கே சொன்னா அப்புறம் கிடைக்கும் எண்ணெயே சுத்தமா கிடைக்காது..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஸாதிகா --///வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம்///
எங்க வீட்டுல விளக்கெண்ணை இல்லை. நீ வரியா ராசா?//ஹே..ஹே.. //
வாங்க யக்கா வாங்க..!! என்னைய கூட்டிகிட்டு போய் அவர் படும் அவஸ்தையை கேட்டா, பார்த்தா இன்னும் சிரிப்பு தாங்காது உங்களுக்கு ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
(::;அருமை
ஆம்லேட் போடா கத்துக் குடுக்கறேன்னு இப்டி ஊற ஏமாத்தி இருக்கேளே யாராவது என்ன போல சைவம் சாப்டரவா பாத்து இது தான் நெஜமாவே ஆம்லேட் செய்யற விதம்னு நெனச்சு செஞ்சு பாத்தாங்கனா அப்புறம் உங்க கதி என்ன ஆகறது?? அவங்க கதியே அதோ கதி இதுல என்னை என்ன பண்ண முடியும்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது!
I got few useful tips from this recipe Jai anna!
I never add turmeric powder in Omlet and the idea of frying onion with butter,then adding with egg sounds interesting.
Keep rocking! :)
ஜெய் !!மறுபடியுமா??
ஓகே.ஓகே...ஸ்டார்ட் .
@@@சௌந்தர்--//இதை யெல்லாம் செய்து அப்படி ஒரு முட்டையே வேண்டாம் எதுக்கு அது //
வாங்க செளந்தர்..!! எதுக்கு கோவம்..?,,நான் ஊட்டி விடுகிறேன் நல்ல பிள்ளயா சாப்பிடுங்க..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வெறும்பய--//ஐயா ராசா.. முடியல...//
வாங்க ஜெயந்த்..!! ஏன் ஆம்லட் போட்டு அதுக்குள்ள டிரை பண்ணிட்டீங்களா..ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Prasanna--//நம்ம முன்னோர்கள் கமெண்ட்ஸ் அட்டகாசம் :) //
வாங்க ..வாங்க..!! செம உள் குத்தால்ல இருக்கு ..ஹா..ஹா.. யாருக்கும் புரியலன்னு நினைக்கிறேன் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சசிகுமார்--// என்னப்பா இப்பதான் கோமாவில் இருந்து எழுந்து வந்தீங்களா.//
வாங்க சசி..!! யாரோ சூனியம் வச்சிட்டாங்கப்பா ..பிளாக் பக்கம் வர விடாம ..வந்தாலே ஏதாவது தடங்கல் வருது அவ்வ்வ்வ்வ்..!! எனக்கு என்னமோ மங்கு மேலதான் சந்தேகமா இருக்கு ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜெயந்தி --//ஸ்மெல் வந்தா டெட்டால் ஊத்தலாம்னு சொல்றீங்க. பெனாயிலும் ஊத்தலாமா? //
வாங்க சகோஸ்..!! பிடிக்காதவங்களுக்கு டெட்டால் போதும் , ரொமப் பிடிக்காதவங்களுக்கு பெனாயில் ஊத்துங்க ஹா..ஹா... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு .((நீங்க இருக்கும் ஊர் பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாங்க )).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@காஞ்சி முரளி--
///அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்///
........ கேள்விபட்டிருக்க..!
............... கேள்விபட்டிருக்க..!
............................. கேள்விபட்டிருக்க..!
ஆனா...
இதமாதிரி ஆள பார்த்ததே இல்லப்பா...?
ஆள... விடுடா சாமி...!
டெரர்....
எங்கிருந்தாலும்... உடனே ஜெய்லானி பதிவுக்கு வரவும்...! //
வாங்க சகோ..!! சில பல பேர்கள் அன்போட கேட்பதால சில பல குறிப்புக்கள் வருது....!!உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள்..சமையல் குறிப்புக்கள் தேவைப்பட்டால் தயங்காம ஜெய்லானி டீவிக்கு எழுதி கேக்கலாம் ..!!
ஆ...டெரார் தங்கையாஆஆஆஆஆஆ எஸ்கேப்ப்ப்ப் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிவு அருமை.படங்கள் அதை விட அருமை. (மிரட்டல்!)
//யாரோ சூனியம் வச்சிட்டாங்கப்பா ..பிளாக் பக்கம் வர விடாம ..வந்தாலே ஏதாவது தடங்கல் வருது அவ்வ்வ்வ்வ்..!! //
கண்ணுபட்டு இருக்குமோ?
சீக்கிரமா ஒரு முழு சமையல் ப்ளாக் ஆரம்பிங்க ஜெய்லானி...உங்ககிட்ட சந்தேகம் கேட்டவங்கள்லாம் உங்களுக்கு சமைச்சு விருந்துவைக்கணும்னு ஆசைப்படுறாங்களாம்.
@@@kavisiva--//ஓஹ் இப்படித்தான் உங்களுக்கு மிசஸ் ஜெய் ஆம்லெட் பண்ணித் தருவாங்களா?! அதான் தலைமறைவா இருக்கீங்களோ :) //
வாங்க கவி..!! ஆஹா யாரோ ரகசியத்தை போட்டு குடுத்துட்டாங்கப்பா ..!! எலேய் யாருலே அது ..? !! .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@r.v.saravanan--//என்ன ஜெய்லானி ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு //
வாங்க ஆர் வி எஸ்..!! மேலேயே சொல்லி இருக்கேன் பாருங்க ..!! அவ்வ்வ்வ்
//நான் சைவம் என்பதால் வெளிநடப்பு செய்யாலாமா என்று யோசிக்கிறேன் //
இருங்க ஓடிடாதீங்க .! அடுத்த குறிப்பு சைவ ஸ்பெஷலா போட்டுடறேன்..ஆனா செஞ்சிப்பார்க்கனும் சரியா..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@NIZAMUDEEN --//வந்துட்டேன்...//
வாங்க நிஜாம் பாய்..!! இருங்க கூலா நான் போட்ட லெமன் ஜுஸ் சாப்பிடுங்க
//மஞசள் கருவை மட்டும் எப்படி ஆம்லட் போடுறது?
வெள்ளை கருவில் மட்டும் எப்படி ஆம்லட் போடுவது?
சொல்றீங்களா ராசா? //
ஓக்கே..ரெடி..> மஞ்சள் கருவை தனியா எடுத்து வேப்பெண்ணெயில ஃபிரை பண்ணுங்க
வெள்ளை கருவை தனியா எடுத்து விளெக்கெண்னெயில ஃபிரை பண்ணுங்க சரியா ஹைய்யோ..ஹைய்யோ..
//வடை (50)! //
ஹி..ஹி.. ஆம்லெட் ராஸா அது :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எம் அப்துல் --//ஹி..ஹி.. யாருங்க அது பேரச் சொல்லுங்க!! நம்மகிட்ட இந்த உடான்ஸ் எல்லாம் ஆகாது பாஸ் ..ஹக்காங்!! //
வாங்க பாஸ் ..!! அது டீவீ சேனல் சீக்ரெட் தர்மம் ஸாரி சொல்வதுக்கில்லை (( ஆஹா விட்டா என் வாயாலேயே உளரிடுவேன் போலிருக்கே ))
//
க்கி.. க்கி.. ஸ்கூல்ல வாங்குனதெல்லாத்தையும் இப்படி போட்டு ஓடைக்கனுமாக்கும்!! //
இப்பதான் நா எல் கேஜி சோ இன்னும் அங்கே முட்டை கிடைக்கல ஹி..ஹி.. எப்பூடீ ..!!
//
ஸ்கூல்ல வாங்கினது எத்தன?? //
மேலே பாருங்க
//அத நாங்க சொல்லணும். நீங்களே சொல்லிக்கிட்டா அதுக்குபேரு தம்பட்டம்...!!???//
எனக்கு எப்பவுமே மத்தவங்க என்னை புகழ்ந்தா பிடிக்காது ஹி..ஹி..
//ஜெய்லானி ப்ளாக் ஸ்பாட்டில் இனி சமையல் நிகழ்ச்சி தானா?? சந்தேகப் பதிவு-6 வராதா?? நான் தொடரட்டுமா?? //
சந்தேகமா ..? அது இல்லாம நானா நம்பவே முடியாதே..!! அடுத்தது ஆன் தி வே ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சிநேகிதன் அக்பர்--// சமையல் குறிப்பு அருமை //
வாங்க அக்பர் ..!! எப்போ ஊரிலிருந்து வந்தீங்க ..!! ஊரில இப்போ நல்ல மழையாமே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நானும் வந்துட்டேன். முட்டை வெலயெல்லாம் ஏறிப்போச்சு. முட்டையில்லாம ஆம்லெட் போடறது எப்படீன்னு சீக்கிரம் சொல்லுங்க.
டெரர்....
எங்கிருந்தாலும்... உடனே ஜெய்லானி பதிவுக்கு வரவும்//
அப்பாடா அதுகு பதிலா வந்துட்டோமுல்ல. என்ன ஒரு அழிச்சாட்டியம் இந்தபக்கம் வரமுடியவேயில்லை.
எதோ யாரோ சூன்யம் வச்சுட்டாங்கபோல அதேன்
சரி சரி வித்தியாச ஆம்லெட்ட் எங்கேப்பு அதை அப்படியே கருவேலங்காட்டுக்கு அனுப்புஇடுங்க. அங்கே வாரவுக பிக்கப் பண்ணிடுவாக..
அது ஏனெல்லாம் கேள்விமேல கேள்வி கேக்கக்கூடாது ஓகே..
@@@sivatharisan--//(::;அருமை //
வாங்க சார்..!!! எனந்து அதுக்குள்ள செஞ்சி பாத்துட்டீங்களா..? யாருக்கும் ஒன்னும் ஆகலையே ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Harini Sree--//ஆம்லேட் போடா கத்துக் குடுக்கறேன்னு இப்டி ஊற ஏமாத்தி இருக்கேளே யாராவது என்ன போல சைவம் சாப்டரவா பாத்து இது தான் நெஜமாவே ஆம்லேட் செய்யற விதம்னு நெனச்சு செஞ்சு பாத்தாங்கனா அப்புறம் உங்க கதி என்ன ஆகறது?? //
வாங்க..சகோஸ்..வாங்க ..!! என் கதி ஒன்னும் ஆகாது ஏன்னு கேட்டா நான் சமைச்சா முக்கியாமா நான் உப்பு புளி டேஸ்ட் கூட பாக்க மாட்டேன் அவ்வளவு கான்ஃபிடெண்ட் ..(( தற்கொலைக்கு எவ்வளவோ வழி இருக்கு ))
//அவங்க கதியே அதோ கதி இதுல என்னை என்ன பண்ண முடியும்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது! //
புத்திசாலி கண்டுபிடிச்சிட்டீங்களே ..ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Mahi --//I got few useful tips from this recipe Jai anna! //
வாங்க சிஸ்...!! அட அப்படியா..? எனக்கு தெரியாம
// I never add turmeric powder in Omlet and the idea of frying onion with butter,then adding with egg sounds interesting. //
ம் அதுவரையில் சரிதான் ..ஓக்கே..!! ஆனா அதுக்கெ மேலே ஆயில் மேட்டரை போட்டுடதீங்க மாம்ஸ் பாவம் ஹி..ஹி..
// Keep rocking! :) //
அட அப்படிங்கிறீங்க ஓக்கே இனி நிறைய போட்டு சமையல் உலகத்தை ஒரு வழி பண்ணிடலாம் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Geetha6--// ஜெய் !!மறுபடியுமா??
ஓகே.ஓகே...ஸ்டார்ட் . //
வாங்க ..வாங்க .. நான் எப்போ சமையலை , சந்தேகத்தை நிறுத்தி இருக்கேன்..ஹி..ஹி.. கிரீ ஸிக்னல் குடுத்துட்டீங்க ஓக்கே இனி டபுள் ஸ்பீட்ல போகலாம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பாரத்... பாரதி--// பதிவு அருமை.படங்கள் அதை விட அருமை. (மிரட்டல்!) //
வாங்க சார் ..!! செஞ்சிப்பார்த்தா அப்புறம் அருமைன்னு சொல்ல மாட்டீங்க ஹா..ஹா..
///யாரோ சூனியம் வச்சிட்டாங்கப்பா ..பிளாக் பக்கம் வர விடாம ..வந்தாலே ஏதாவது தடங்கல் வருது அவ்வ்வ்வ்வ்..!! //
கண்ணுபட்டு இருக்குமோ? //
நானும் அதான்னு நினைக்கிறேன் . ஒரு வெளி படத்துல இருக்கிறவர் எதுவும் சாபம் குடுத்துட்டாரா..அவர்தான் அதிகம் வரார் ஒரு வேளை அதனால இருக்குமோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சுந்தரா--//சீக்கிரமா ஒரு முழு சமையல் ப்ளாக் ஆரம்பிங்க ஜெய்லானி...//
வாங்க மேடம்..!! சமையல் பிளாக் ஆரம்பிக்கலாம் தான் ..சமையல் ப்ளாக் வச்சிருக்கிற சகோஸ் அப்புறம் எதுவுமே அவங்க பிளாக்கில புதுசா போட மாட்டாங்க அதான்
//உங்ககிட்ட சந்தேகம் கேட்டவங்கள்லாம் உங்களுக்கு சமைச்சு விருந்துவைக்கணும்னு ஆசைப்படுறாங்களாம//
அந்த பயத்துல தான் நான் புதுசா திறக்கல ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@DrPKandaswamyPhD --// நானும் வந்துட்டேன். முட்டை வெலயெல்லாம் ஏறிப்போச்சு. முட்டையில்லாம ஆம்லெட் போடறது எப்படீன்னு சீக்கிரம் சொல்லுங்க.//
வாங்க..வாங்க..!!ரொம்ப ஈஸி ..அடுத்த சமையல் தொடர் வரும் போது சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அன்புடன் மலிக்கா --//டெரர்....
எங்கிருந்தாலும்... உடனே ஜெய்லானி பதிவுக்கு வரவும்//
அப்பாடா அதுகு பதிலா வந்துட்டோமுல்ல. என்ன ஒரு அழிச்சாட்டியம் இந்தபக்கம் வரமுடியவேயில்லை.//
வாங்க அக்கா வாங்க..!! ரொம்ப நாள் கழிச்சி வந்ததால சூடா சில்லுன்னு நானே போட்ட ஜுஸ் இருக்கு சாப்பிடுறீங்களா...
// எதோ யாரோ சூன்யம் வச்சுட்டாங்கபோல அதேன்
சரி சரி வித்தியாச ஆம்லெட்ட் எங்கேப்பு அதை அப்படியே கருவேலங்காட்டுக்கு அனுப்புஇடுங்க. அங்கே வாரவுக பிக்கப் பண்ணிடுவாக..//
ஆஹா...பாவங்க அவர் விட்டுடூங்க ..ஹி...ஹி..
// அது ஏனெல்லாம் கேள்விமேல கேள்வி கேக்கக்கூடாது ஓகே.//
நான் கேக்கலையே..கேக்கலையே...அப்புறம் அவ்வ்வ்வ் சத்தம்மட்டுமே கேக்கும் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
படங்களும் ஆம்லேட்டும் யூஸ் பண்ணிய எண்ணையும்
பின்னூட்டங்களும் அருமை.
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))