ஊரில அடிக்கடி விஷேஷங்கள் நிறைய நடக்கும். யாருக்காவது கல்யாணம் , காது குத்தல் , இப்பிடி நிறைய நடக்கும் போது பத்திரிக்கைகள் அடிக்கடி வரும் .சிலநேரம் ஓரே நேரத்தில மூனு கூட வருவதுண்டு .நானும் போய் சில கூடமாட உதவிகள் செய்வதுண்டு .ஓரே ஊர் , சொந்த பந்தங்கள் என்று விழாகளை கட்டும்.
ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது கடைசி வரை ஒரு மாதிரியே இருந்தான் பேசவா வேண்டாமான்னு. சரி நானும் ஏதோ கல்யாண டென்ஷன் போலன்னு நினைச்சிகிட்டு மொய் எழுதிட்டு வந்தேன் .
வீட்டில மாலை நேரத்தில பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை.. ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது
மறுநாள் அந்த தெரு வழியா போகும் போது , அந்த பய வீட்டிற்கு வெளியே நின்னுகிட்டு இருந்தவன் . ஓடி வந்து கையை பிடிச்சிகிட்டான் ..மாப்ளே என்னை மன்னிச்சிடுடா...!!! நானும் மவுனம் சாதிக்க..” உனக்கு எவ்வளவு பெரிய மனசு “ உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து உதவி செய்தும் மொய்யும் வச்சிகிட்டு போனே..!!
இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. வந்துச்சே ஆத்திரம் என்ன சொல்ல ” திருடனுக்கு தேள் கொட்டினாற் போல” பழமொழி படிச்சிருக்கேன் .ஆனா எந்நிலை அப்படி ஆச்சேன்னு ஆத்திரம் பிளஸ் அவமானம். எனக்குள்ள..அவ்வ்வ்வ்
மனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. பய புள்ள விடவே இல்ல. நான் இத்தனை நாளா உன்கிட்டே பேசவே இல்லை பத்திரிக்கையும் வைக்கல ஆனா நீ எதையும் மனசில வைக்காம வந்தியேன்னு ஓரே ஃபீலிங்..
அப்புற மென்ன அவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு போய் திரும்பவும் விருந்து சாப்பாடுதான்..ஹி...ஹி.. வீட்டிற்கு வந்து விஷயதை சொல்ல கிண்டலும் கேலியும் மாசம் பூரா போனது தான் மிச்சம் . இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...
அதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...??? ஹா..ஹா...
87 என்ன சொல்றாங்ன்னா ...:
அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான்////
ஹி ஹி ஒன்னும் செய்ய முடியாது
இவ்வளவு நல்லவனா நீ.///
இன்னும் இந்த ஊர் உங்களை நம்புது
இந்த ஜெய்லானி ரொம்ப நல்லவன்யா!
ரெண்டாவது படம் எங்கிருந்துங்கே எடுக்குறீங்க.. அலும்பு தாங்கல..
ரொம்ப கஷ்டம் தான் போங்க...நல்ல வேளை நான் வெளியூரில் இருப்பதால் அன்பு தொல்லைகளில் இருந்து தப்பித்தேன்...
ஏதாச்சும் கேள்விகள்/ சந்தேகங்கள் கேட்டீங்களா? அதான் ஆள் எஸ்கேப் ஆகிறார்.
//இந்த ஜெய்லானி ரொம்ப நல்லவன்யா!// அட! நிசம் தான். நம்புங்கப்பா.
இப்படி சொல்ல சொல்லி ஜெய் எவ்வளவு பணம் குடுத்தார்!!!!
//ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது //
இதை படிச்சதில இருந்து....
//இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல ///
// இவ்வளவு நல்லவனா//
அது தான் எங்களுக்கே தெரியுமே.. சரி அவருக்கும் தெரிஞ்சிடுச்சா...
//ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான்//
ஜெய் நீங்கல்லாம் நல்ல நண்பரா?? அவசரமான்னு வேற போட்டு :)).. நல்ல நண்பனென்றால் .. பாவம் அவனுக்கென்ன அவசரமோன்னு சொல்லணும். அத விட்டுபோட்டு :)))
//இவ்வளவு நல்லவனா நீ//... பாவம் அந்த நண்பர்;(
ok....... ok.....
ஜெய்லானி நல்லா பல்பு வாங்கிட்டு வந்து இங்க சமாளிக்கிர....:)
ஹி ஹி...
haahhaa!
unga kalyaanaththukku correct aa poyi serndheengalaa jailani? :)))))
என்ன மாப்பு ..ரெண்டாவது போட்டோ ரெஸ்லிங் வீரர் பூக்கரும், எட்ஜும் மாதுரி தெரியுது.
நாட்டாமை தம்பி நீங்கதான் ஒரு நல்ல தீர்ப்பை சொல்லணும்.
ஏலே,என்னலே இப்புடி பண்ணிபுட்டே,இது நம்ம ஜாதி சனங்களுக்கு தெரிஞ்சா என்னாவும்லே,அந்த பயவுல்லேதேன் கலயாணத்திற்கு கூப்பிடலேலே, பின்ன எதுக்குலே அந்த வீட்டு வாசப் படியை மிதிச்சே?.
இதுக்கு என்ன தண்டனைன்னு உனக்கு நல்லா தெரியும்லே?
போனதும் இல்லாமல், மொய்யும் வேரே கொடுத்துட்டு வந்திருக்கே அதுனாலே நீ செய்த முதல் குற்றத்திற்கு அந்த பயவுல்லைக்கு எவ்வளவு மொய் எழுதினியோ, அதிலே பத்து மடங்கு அதிகமாக பஞ்சாயத்தில் கெட்டனும்,இல்லைனா அம்பது சவுக்கடி அடியை எற்றுக்கோணும்.
என்னலே சரிதானே பஞ்சாயத்து தீர்ப்பு.
நாட்டாமை அய்யா, நான் பணத்தை கட்டிபுட்றேன்.
நாட்டாமை தம்பி ...பி ..பி ..பி.
நாட்டாமை : யாருலே அது ஊதி ஊதறது ?
அய்யா ....அவருக்கு சவுக்கு அடியே கொடுத்துடுங்கோ, அவர் மொய்ப்பணம் வெறும் ஒரு ரூபாய்தான் எழுதி இருக்காரு, முன்னாடி மூணு சைபர் போட்டு,அப்புறம் ஒண்ணுப் போட்டுருக்கார் எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுனாலே ஆயிரம்னு நினைச்சுக்குட்டேன்.
நாட்டாமை : அப்படி போடுலே,புலிக்கு பொறந்தது எலியாகுமா?
நாங்கூட உந்திர கல்யாணத்திலே கையை நனைச்சதுக்காக, தீர்ப்பு சொல்லலைலே, அநியாயமா மொய் பணம் எழுதினாரே பாரு, அதுக்குத்தான்லே தண்டனைக் கொடுத்தேன்.
நல்ல வேலை நீ வந்து நல்ல சமயத்தில் வந்து உண்மையை சொன்னே.
நாட்டாமை : ரெண்டாவது ஒன்னு சொன்னியலே..
என்னது தலையைப் பார்த்ததும் சந்துக்குலே ஓடிரானு..ஏலே நீ ஹெல்மட் போட்டு நடலே பயவுள்ளைக்கு தெரியாது அது நீ என்று.
( அண்ணன் சீரியஸா எடுத்துக்குற வேணாம் )
//கல்யான மாலை...!!! //
யோவ் அது கல்யாண மாலை. ஒழுங்கா எழுது. இந்த டெரர் பயபுள்ள கூட சேர்ந்தா இப்படித்தான்...
அழையா விருந்தாளியாக போய் மொய் எழுதி,நல்லா கட்டு கட்டிட்டு வந்த ஜெய்லானி வாழ்க!
கல்யாண சாப்பாடு பலமா இருந்ததா.. அத சொல்லுங்க முதல்ல.. புல்கட்டு கட்டலாமுல்ல.. ஹி ஹி ஹி ஹி...
///அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...///
காலம் எல்லாத்தையும் மாத்தும்..
எல்லாம் சரி... இந்த படத்துக்கும் போஸ்ட்க்கும் என்ன சம்மந்தம்... சொல்லாம இன்னிக்கி விடறாத இல்ல சார்... சொல்லைனா இனி அடிக்கடி பல்பு வாங்குவீங்கன்னு சாபம் போடுவேன்... எப்படி வசதி? (ஆனாலும் நீங்க பல்பு வாங்கினதுக்கு why me சோ ஹாப்பினு மட்டும் புரியல... இது தான் my today 's சந்தேகம்... இனிமே சந்தேகம் கிந்தேகம் கேப்பீங்க...ஹா ஹா ஹா )
வணக்கம்
நான் ஏதாவது கல்யாணத்துக்கு போனா சின்ன வாண்டுகளோட சேட்டைகள பார்க்கவே போவேன் நினைவுகளை அசைபோட
கல்யாண மாலை அல்ல, இது கல்யாண கலாட்டா .......
இந்த லேடீஸ் டிரஸ்ஸ போட்டுக்கிட்டு அப்டீக்கா திரும்பி நின்னா நீங்க யாருன்னு எங்களால கண்டு பிடிக்க முடியாதா பாஸ்? ஹய்யோ.. ஹய்யோ.. மார்ஃபிங்க்ல வேற அந்த பையன கை கோத்துக்கிட்டு.. க்கி.. க்கி.. ச்சே கொஞ்சம் கூட நல்லாவே இல்ல!! ஹா.. ஹா..
//கல்யாண மாலை அல்ல, இது கல்யாண கலாட்டா .......//
அதானே நல்லா சொல்லுங்க!!
//இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க.//
ஜெராக்ஸ் காபி எடுத்தீங்க சரி; அத ஏன் ஸ்கேன் பண்ணி எனக்கு மெயில் ஃபார்வர்ட் பண்றீங்க; அத ஏன்னு மட்டும் இப்ப சொல்லுங்க பாஸ் க்கி.. க்கி..
இப்ப யெல்லாம் பல்ப வெல கொடுத்தே வாங்குறீங்களா பாஸ்? ஏன் அப்படி ??
நல்ல பதிவு. ஆனா அந்த போகாத கல்யாணக்காரனை எப்படி டீல் பண்றதுன்னு தனியா ஒரு பதிவு போடுங்க. எங்களுக்கெல்லாம் ரொம்ப உபயோகமா இருக்கும்.
எப்படியோ ஒரு பல்ப் வெல கொடுத்து வாங்கிட்டிங்க.
ஹீ..ஹீ.
ஹெய் ரொம்ப நல்லவர் என்று மார்ஸ்ல கூட சொல்லிகிறாங்க.
:-))))
எப்படியோ வச்ச மொய்க்கு நால்லா சாப்பிட்டீங்களா இல்லையா?.. :)
இது தான் கல்யாண கலாட்டாவா.... பல்பு வாங்கிய ஜெய்லானி வாழ்க...
இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து////
ஜெய்லானி இந்த இடம் எனக்கு புரியல , அந்த இன்னொரு வீடு யாருது ?
அதுக்கு பேரு பல்பு இல்ல. மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம தவிச்ச நேரம்னு சொல்லனும்.
ரைட்டு :))
ஜெய்லானி இதை படிச்சப்புறம் நான் வாங்கின பல்பெல்லாம் ஜுஜூபின்னு புரிஞ்சிடுச்சு :)
நீங்களாவது கல்யாணவீடு மாறி போனாலும் இன்னொரு நண்பர் கல்யாணத்துக்குதான் போயிருக்கீங்க. நிறைய பேர் கல்யாணமண்டபம் மாறி யாருன்னே தெரியாத கல்யாணங்களுக்கெல்லாம் போயிருக்காங்க:). முகூர்த்த நாட்களில் இதெல்லாம் சகஜமப்பா.
பல்பு வாங்கிட்டு கூடவே விருந்து சாப்பாடும்.... ம்ம்ம்ம்...
:-))
இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...??? ஹா..ஹா...
நாங்க எல்லாம் ஸ்கேன் பண்ணி வச்சுக்கிறோம் ஹா ஹா
நல்ல பகிர்தல்
நாலு ஜெராக்ஸ் எடுத்தாலும் கல்யாணத்துக்கு ஒரு முறைதான் பாஸ் போக முடியும்.
அனியாயத்திற்கு நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க...
வாழ்க வளமுடன்.
வேலன்.
////உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து ////
உன் கல்யாந்த்த்துக்கு மட்டுமா அப்படி வரோம்.. நாம போற எல்லா கல்யாணமும் அப்படித்தான்...
தங்களை அன்புடன் ஜும்ஆவிற்கு அழைக்கின்றோம்.
www.jumma.co.cc
;))
ஹி ஹி...
இந்த பக்கம் திரும்பி "cat walk" வரமாட்டீங்களா பாஸ்!! ஹி.. ஹி..
அன்பின் ஜெய்லாணி
சில சமயங்களீல் இவ்வாறு நடந்து விடுகிறது. என்ன செய்வது.....
நகைச்சுவையுடன் இடுகையும் மறுமொழிகளும்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
யோவ் ...நீ பாட்டுக்க, பதிவைப் போட்டுட்டு ஓடி ஒளிஞ்சுக்கிட்டே. நாங்களும் எத்தனைத் தடைவைதான், ஜெய்லானி என்ன சொல்லிர்ப்பார்? என்று தினம் ..தினம் ..இல்லை ..இல்லை நிமிசத்திற்கு நிமிஷம் வந்து எட்டிப் பார்க்கிறோம்.
வாயைத் தொறந்து பேசுயா..வாயிலே என்ன கீரை போண்டாவா வச்சுருக்கே ?
என்று எல்லோரும் கேக்குறாங்க அண்ணா.......
;) பத்திரிக்கைய தொலைச்சுட்டீங்களா இல்லை மாறிடுச்சா? பல்பா?
@@@சௌந்தர்--
அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான்////
ஹி ஹி ஒன்னும் செய்ய முடியாது //
வாங்க செளந்தர்..அதான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கேன் முடியல...
//இவ்வளவு நல்லவனா நீ.///
இன்னும் இந்த ஊர் உங்களை நம்புது //
அதானே..!! நல்ல கேள்வி கேட்டீங்க..!!உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//இந்த ஜெய்லானி ரொம்ப நல்லவன்யா! //
வாங்க பன்னி சார்...நீங்களும் நம்புறீங்களா சார்..ரொமப நன்றி பன்னி சார்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அஹமது இர்ஷாத்--// ரெண்டாவது படம் எங்கிருந்துங்கே எடுக்குறீங்க.. அலும்பு தாங்கல..//
வாங்க இர்ஷாத்..!! எல்லாம் கூகிளார் மகிமை..ஹி..ஹி.. இந்த அலும்பு என் கூடவே பிறந்தது..மாத்த முடியல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@GEETHA ACHAL--//ரொம்ப கஷ்டம் தான் போங்க...நல்ல வேளை நான் வெளியூரில் இருப்பதால் அன்பு தொல்லைகளில் இருந்து தப்பித்தேன்..//
ஹா..ஹா. கொஞ்ச நாளைக்கு சமையல விட்டுட்டு இது மாதிரி உங்க அனுபவத்தை போடுங்களேன் ..நாங்களும் தெரிஞ்சிக்குவோமுல்ல..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@vanathy--/// ஏதாச்சும் கேள்விகள்/ சந்தேகங்கள் கேட்டீங்களா? அதான் ஆள் எஸ்கேப் ஆகிறார்.//
இல்லிங்க அவன் பத்திரிக்கை குடுத்தான் நான் தான் கவனிக்காம இடம் மாறி போயிட்டேன்..ஹி..ஹி..
//இந்த ஜெய்லானி ரொம்ப நல்லவன்யா!// அட! நிசம் தான். நம்புங்கப்பா.
இப்படி சொல்ல சொல்லி ஜெய் எவ்வளவு பணம் குடுத்தார்!!!! //
ரொம்ப சிம்பிள் ஒரு மட்டன் பிரியானி + ...அதான் குடுத்தேன் பயபுள்ளங்க அப்படியே நம்பிபுடுதுங்க ..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹைஷ்126--//ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது //
இதை படிச்சதில இருந்து....//
பழைய நண்பன் எதிரியாகி இப்ப திரும்பவும் நன்பனா மாறிட்டான் இல்லையா..அதான் பழைய நண்பன் பிராக்கெட்டில எதிரி ...இதுக்ல்கு மேல கேட்டா நா குழம்பிடுவேன்..ஹி..ஹி..
//இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல ///
அப்படின்னு அவந்தான் சொன்னான்..க்கி..க்கி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@இலா --//
// இவ்வளவு நல்லவனா//
அது தான் எங்களுக்கே தெரியுமே.. சரி அவருக்கும் தெரிஞ்சிடுச்சா...//
வாங்க ..வாங்க ..!! ஹி..ஹி.. ஆனா ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுது போல
//ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான்//
// ஜெய் நீங்கல்லாம் நல்ல நண்பரா?? அவசரமான்னு வேற போட்டு :))//
அதானே அது என்னை பார்த்து மட்டும் அப்பிடி தலைதெரிச்சு ஓடினா அதுக்கு என்ன அர்த்தம் க்கி..க்கி..
//.. நல்ல நண்பனென்றால் .. பாவம் அவனுக்கென்ன அவசரமோன்னு சொல்லணும். அத விட்டுபோட்டு :))) //
சொல்ல தயங்குறானோ என்னவோ..? யார் கண்டது. அடுத்த தடவை எந்த சந்துலையாவது மாட்டாமதான் போவானா அதையிம் பார்த்துடுறேன்க்கி..க்கி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Priya--//இவ்வளவு நல்லவனா நீ//... பாவம் அந்த நண்பர்;( //
வாங்க ..வாங்க..!! ஏங்க என்னை பார்த்தா அப்படி தெரியலையா..அவ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Riyas --// ok....... ok.....//
வாங்க ரியாஸ்... !!இந்த ஓக்கே யாருக்கு எனக்கா இல்லை ஓடறானே அவனுக்கா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//இவ்வளவு நல்லவனா நீ//
இந்த ஊரு இன்னுமாடா நம்மல நம்பிகிட்டு இருக்கு
"அதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...??? ஹா..ஹா..."
குசும்பு ரொம்ப ஜாஸ்தி தான் உங்கள்கு ஜெய்லானி சார்...தமாஷா எழுதறிங்க ..லேட் ஆ கமெண்ட் போட்டதுக்கு மன்னிக்கவும் ..இனிமேல் போட்ட அன்னிக்கே வந்து படிச்சு கமெண்ட் போடுவேன் சரியா ..நன்
///இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே ///
அவர இன்னொரு தடவ கல்யாணம் பண்ணிக்க சொல்லுறதுக்கு பதில் நீங்க இன்னொரு தடவ கல்யாணம் பண்ணிக்கோங்க. அந்த கல்யாணத்துக்கு அவர கூப்பிட்டு விருந்து போட்டா முடிஞ்சது. முரற்சி பண்ணி பாருங்க ..
dear sir ur blogger v nice
im working in kitchen arts of kuwait hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession
@@@Jey--// ஜெய்லானி நல்லா பல்பு வாங்கிட்டு வந்து இங்க சமாளிக்கிர....:) //
வாய்யா..வா.. இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அன்பரசன்--//ஹி ஹி...//
வாங்க ..அன்பு ..!! ஹா..ஹா...நேரம் அப்படி ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--// haahhaa!
unga kalyaanaththukku correct aa poyi serndheengalaa jailani? :))))) //
வாங்க ..!!சந்தூஸ்...!!ஹி..ஹி.. அது தனி மெகா தொடர்..இங்கோ போட்டா 12 வாரம் போகும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வீட்டில மாலை நேரத்தில பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை.. ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது
//
ஆணாதிக்கம்ன இது தானோ?
கல்யாண விருந்துல பாயாசம் இருந்ததா?
அடராமா! நீங்களாவது வேர கல்யாணத்துக்கு போனேள்!
நான் வேற ஊருக்கே பேருக்கேன்!
ஹிஹிஹிஹி!
ஜெய்...எனக்கு முன்னமே தெரியும் நீங்க ரொம்ப நல்லவர்ன்னு !
இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. //
செமத்தியா காமெடி பீஸ் ஆ ஆயாச்சா..இருந்தாலும் உங்க பெர்பாமன்ஸ் அமர்க்களம் பா..
ஈத் முபாரக் ஜெய் அண்ணா!
ஹா ஹா காமடியான கல்யாண மாலை ,
மனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. ஹிஹி
அன்புள்ள சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!
சகோ ஜெய்லானிக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!
வ ஸலாம்
அன்னு
ஈத் முபாரக்
ஜெய்லானி குடும்பத்தாருக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....
******************************************************
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"!
*******************************************************
இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும்
இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...
"இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!
அனைவருக்கும்
என் இனிய நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
ஈத் முபாரக்!
eid mubarack my dear friend. how are u?
may the god inshah Allah will fullfil all desires and wealth and health to you and your family.
கல்யாண கலாட்டா சூப்பர்......
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்!
விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க
http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html
saaptaachchulla?? athu onnu thaane matter...! apram enna? :)
good narration!
பரவால்லே....பரவால்லே... நீங்க நல்லவர்தான் ஒத்துக்கறோம்....
@@@Mohamed Ayoub--//நாட்டாமை : ரெண்டாவது ஒன்னு சொன்னியலே..
என்னது தலையைப் பார்த்ததும் சந்துக்குலே ஓடிரானு..ஏலே நீ ஹெல்மட் போட்டு நடலே பயவுள்ளைக்கு தெரியாது அது நீ என்று. //
வாங்க நாட்டாமை ஐய்யா..!!ஹெல்மெட் இல்ல . என் வாசனையை கண்டாலே ஏரிய பக்கமே வரதில்ல .இவனால ஹெல்மெட் என்ன பர்தாகூட போட்டு பார்த்துட்டேன் ஊஹும்..வேலைக்காகல..
//( அண்ணன் சீரியஸா எடுத்துக்குற வேணாம் ) //
என் ஏரியாவுல வந்து இப்பிடி சொன்னா அது தப்பு.. எதையுமே நா சீரியஸா எடுக்கறதில்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஹாஹாஹாஹா அய்யோ அய்யோ இன்னுமா இந்த அப்பாவி ஊர் உங்கள நம்புது
:))
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))