Sunday, March 14, 2010

எனக்குப் பிடித்த பத்து பெண்கள்

இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.

ஏதோ ப்ளாக் வைத்து மொக்கை போட்டுக் கொண்டு இருந்த என்னையும் மதித்து (??????) தொடர் பதிவிற்கு அழைத்ததால் இதோ இப்போது உங்கள் முன்னே..ஏதும் தவறுகள் இருந்தால் தாய்குலங்கள் கண்டிப்பாக மன்னிக்கவும்!!! ( வேற வழி . )

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

பெண்மனிகளா!! கூப்பிட்டுவிட்டு கண்டிஷன்வேறயா. இந்திய பெண்களைஇதற்குமுன் உள்ளவர்கள்பயன்படுத்திவிட்டதால்உலகத்தில் உள்ளஅனைத்து பெண்களும்நமது
தாய்குலமாக நினைத்து இதைஎழுதுகிறேன். தாய் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிபின் இங்கேயேவருவோம்


( 1 ) செல்வி ஜெயலலிதா ( மக்கள் ஆளுமைத்திறன் )


இவருடயைதன்னம்பிக்கை , மற்றும்எதையும் எதிர்நோக்கும் மனோவலிமை , ஒருலேடி ஹிட்லர் என்றேசொல்லலாம். ஹிட்லர் என்பதால் சர்வாதிகாரி என்று நினைக்ககூடாது. அதை விட பல நல்லவிஷயங்கள் இருப்பதால் இவர் எனக்குபிடித்தமானவர்..

( 2 )
மேரி க்யூரி ( அறிவியல் ) கேன்சர் என்ற கொடிய உயிகொல்லி நோயை குணப்படுத்த தனது கனவருடன் இரவு பகல் பாராமல் போராடி அயராமல் உழைத்து ரேடியத்தை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர். ஆனால் அதனாலேயே உயிரையும் விட்டவர். தன் நோயையும் பாராமல் உழைத்த இவர் எனக்குபிடித்தமானவர்..

( 3 )
ப்ளேரன்ஸ் நைட்டிங்கேல் ( சமூக சேவை ) ஒரு சமுக சேவகி எப்படி எல்லாம் இருக்கவேண்டும் .என்று நினைக்கிறோமோ, அதற்கு உண்டான அத்தனை தகுதியுமே உள்ள ஒரு பெண்மனி இவர். போரில் காயம் பட்ட ரானுவ வீரர்களுக்கு உதவியதை மட்டுமே சில புத்தகங்களில் வந்தாலும் சிறு வயது முதலே தாதியாக (நர்ஸ்) பல இடங்களில் உதவி புரிந்தவர். தன்னலமற்ற இவர் எனக்குபிடித்தமானவர்..

( 4 ) மடோனா
( டான்ஸர் )

முதல் அமேரிக்க பாப் டான்ஸர் , இசை தொகுப்பாளர் , நடிகை , நல்ல நடன கலைஞர் , பாஷன் டிசைனர் ( உடை வடிவமைப்பாளர் ) , எழுத்தாளர் , இப்படி ஒரு பெண் இருப்பாரா என்று சந்தேகப்படக்கூடிய திறமைசாலி. அழகு தேவதை என்று சொல்லாவிட்டால் பதிவுலகம் போர்கொடி உயர்த்தும். இத்தனை திறமையுள்ள இவர் எனக்குபிடித்தமானவர்..

( 5 )
ஐஸ்வர்யா ராய் ( மாடல் )
இந்தியர்களும் அழகுதான் என்று உலகிற்கு உணர்தியவர் இவர்., இப்போது எந்த பெண்னை பார்தாலும் , கொஞ்ஜம் பிகு பண்ணினால் நீ என்ன .............என்று இவர் பெயரைத்தான் எல்லோரும் சொல்லும்படி செய்த 50 கே ஜி தாஜ்மஹால். (திருமணம் ஆகிவிட்டதால் நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ், கணவரின் சாபம் சிலசமயம் பலிக்கும்). உலகையே வியக்க வைத்த இவர் எனக்கு பிடித்தமானவர்..

( 6 ) சானியா மிர்ஜா ( விளையாட்டு புலி )
ஆண்களே அதிகம் விளையாடும் டென்னிஸ் என்ற பணக்கார விளையாட்டில் இந்தியாவையும் , அதுவும் எங்கள் பெண்களும் கூட விளையாடி உலக தர வரிசையில் முன்னிலை பெறமுடியும் என்று சாதித்து காட்டிய இளவயது பெண்புலி . வளையத்தை கண்ட இடத்தில் மாட்டி அழகு(???) பார்க்கும் வெளிநாட்டு பெண்களுக்கு மத்தியில் மூக்கில் மாட்டி அதற்குறிய இடம் இதுதான் என்ற இந்திய பாரம்பரியத்தை காட்டிய டென்னிஸ் புயல் . வர் எனக்குபிடித்தமானவர்.

( 7 ) ருக்சானா (வீர மங்கை )
தமிழ் இலக்கியங்களில் புலியை முறத்தால் விரட்டிய பெண்ணை மட்டுமே படித்த நாம் , தற்போது கரப்பான் பூச்சிக்கே பயப்படும் காலத்தில், தன் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவரை கொன்றுவிட்டு மற்றவர்களை அலறிஅடித்து ஓடவிட்ட வீர பெண்மனி இவர். வசிப்பது காஷ்மீரில். ஜனாதிபதியே வியந்து விருது கொடுக்கப்பட்டவர். வர்எனக்குபிடித்தமானவர்.

(8 ) ஜலீலா (சமையல் அட்டகாசங்கள் ) ஆல் இன் ஆல்

சமையல் குறிப்போ அல்லது குடும்ப டிப்ஸோ முதலில் இவர் ஏதும் போட்டுள்ளாரா என்று பார்த்து விட்டு பதிவுலகில் கால் (கை ) வைப்பது நலம். இல்லாவிட்டால் நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டிவரும். அத்தனை விதமாக சமையலில் அட்டகாசம் செய்து வருகிறார். குழந்தை வளர்ப்பா , தேடுங்க ஜலீலாவை. இறைவனின் 100 பெயரில் பொருத்தமான பெயர் உள்ளவர்

(9 ) அன்புடன் மலிக்கா ( நீரோடை ) கவிதைகள்

உரை நடையா , செய்யுளா , கவிதையா, கட்டுரையா என்று நம்மையே ஒரு வினாடி குழம்பச் செய்யும் கவிதை வரிக்கு சொந்தக்காரார். அத்தனை எளிதாக படிக்கவும் , புரிந்துக் கொள்ளக்கூடிய அழகு வர்னனைகள். ஒரு ப்ளாக் வைத்துக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் இந்த காலத்தில் மூன்று ப்ளாக்குகள் அதிலும் தொடர்ந்து எழுதிவருவது உண்மையில் பாராட்டபட வேண்டியவர்.

(10 ) சுமஜ்லா ( என் எழுத்து இகழேல் ) கதை , காவியம் , கணிணி

நகைச்சுவையாகவும் , சில சீரியஸாகவும் எழுதக்கூடியவர். டெக்னிகலாகவும் கலக்கிவருகிறார். சரித்திர நாவலைப்போல பல விஷயங்களை உள்ளடக்கி ஆச்சிரியபட வைக்கிறது இவரது ப்ளாக்.


இன்னும் நிறைய பேர் வைட்டிங் லிஸ்டில் இருப்பதால் .பத்து பேர் மட்டுமே விதி என்பதால் இந்த பதிவு போதும் என நினைக்கிறேன்.

41 என்ன சொல்றாங்ன்னா ...:

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. அம்மா படத்தை என் பதிவிற்கு சுட்டுவிட்டேன். மிக்க நன்றி. மடேனா எனக்கும் பிடிக்கும், ஆனா டாப் டென்னில் இல்லை.

Chitra said...

very nice! :-)

Asiya Omar said...

கடைசி மூன்று பேர் நிஜமாகவே பதிவர் உலகில் பாராட்டப்படவேண்டியவர்கள்.நான் நினைத்த ஜெயலலிதா,ஐஸு,சானியா இவர்கள் இடம்பெற்றது மகிழ்ச்சி.மடோனாவை பிடிக்காதுன்னு யாராலும் சொல்ல முடியாது.மொத்தத்தில் அருமையான தேடல்.

ஜெய்லானி said...

@@@பித்தன் வாக்கு-மடோனாவை ஏன் பிடிக்கும்னு தான் மேலேயே சொல்லிட்டேனே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சித்ரா டீச்சர்-வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சசிகுமார் said...

எனக்கும் ஜே வை பிடிக்கும் அவர்களின் துணிச்சல் பிடிக்கும். நல்ல சாய்ஸ். உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@ஆசியா உமர்--மனசில பட்டதை எழுதினேன்.வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சசிகுமார்--வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.

அன்புடன் மலிக்கா said...

ஆகா அசத்திடீங்க ஜெய்லானி.

ருக்சானா (வீர மங்கை]சூப்பர் நாமளும் தைரியத்தோட இருக்கனும் ஓர் எடுத்துக்காட்டு

அதுசரி நானுமா நான் எழுதும் கவிதை இத்தனை குழப்பதை உண்டாக்குதா
தெளிவாயிருக்கிறீகளான்னு செக்பண்ணினேன்னு சொல்லமுடியாதோ
இனிகவனாமாத்தான் எழுதோனும்..

எல்லாரும் நல்லத்தேர்வுகள் வாழ்த்துக்கள்.

டக்கால்டி said...

துறை சார்ந்து சாதித்த பெண்களை விவரித்து தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றாக உள்ளது...

Unknown said...

எனது தெரிவு மேரி கியூரி அம்மை

நல்ல தெரிவுகள்

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா-//நான் எழுதும் கவிதை இத்தனை குழப்பதை உண்டாக்குதா//

அவ்வளவு ஈஸியா இருக்குன்னு எழுதினேனே பார்கலையா ? .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@@டக்கால்டி-நல்ல பேரா இருக்கே! வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@@சிவசங்கர்--//எனது தெரிவு மேரி கியூரி அம்மை//

மீரா ஜாஸ்மீனை போடலைன்னு வருத்தமா ராஸா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அண்ணாமலையான் said...

நடத்துங்க...

காஞ்சி முரளி said...

"எனக்கு பிடித்த பெண்க"ளில்
தங்களுக்கு பிடித்தவர்களில்
எனக்கு பிடித்தவர்கள்...
2, 3, 7, 9 வரிசைகுரியவர்கள்.

2, 3 - மனிதத்துடன், மனிதமோங்க பாடுபட்டவர்கள்...

7 - வீர மங்கை....
9 - வலையில் கவிஞர், ஆன்மீகம், சமையல் இப்படி மூன்று ப்ளாக்கிளும் கலக்கிகொண்டிருப்பவர்.

இந்நான்கு பெண்மணிகளும் சிறந்த தேர்வு... என்னை பொறுத்தவரையில்....

வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி.............

ஹுஸைனம்மா said...

எங்கப் போனாலும் ஜெயலலிதாவும்!! (எனக்கும் பிடிக்கும்).

//சமையல் குறிப்போ அல்லது குடும்ப டிப்ஸோ முதலில் இவர் ஏதும் போட்டுள்ளாரா என்று பார்த்து விட்டு பதிவுலகில் கால் (கை ) வைப்பது நலம்//

/உரை நடையா , செய்யுளா , கவிதையா, கட்டுரையா என்று நம்மையே ஒரு வினாடி குழம்பச் செய்யும் கவிதை வரிக்கு சொந்தக்காரார். //

உண்மைதான் ஜெய்லானி!!

ஸாதிகா said...

பெண்கள் தேர்வு அருமை.ஜெய்லானி காட்டில் மழைதான்.இந்தா இடுகையும் இன்று குட் பிளாக்கில் இடம் பிடித்துள்ளது.வாழ்த்துக்களையும்,ஓட்டையும் வாங்கீகொள்ளுங்கள்.

ஜெய்லானி said...

@@@அண்ணாமலையான் --வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Kanchi Murali --1,4,5,6,8,10 ஒரு வேளை விளக்கம் சரியா போடலியோ ? ஓகே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹுஸைனம்மா --///எங்கப் போனாலும் ஜெயலலிதாவும்!! (எனக்கும் பிடிக்கும்).//

குடும்ப அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஒரு மாபெரும் கட்சிக்குள் ஒற்றை ரானி ,(அரசியலுக்கு அப்பாற்பட்டு) பிடிக்காமலா போகும். வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஸாதிகா --தொடர் வருகைக்கும் + ஓட்டுக்கும்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

G VARADHARAJAN said...

என்னடா லோகத்துலே எதிலேல்லாம் பிடிச்சுருக்குன்னு போட்டுக்கறாங்க. ஏன ஒரு ஜான்சி ரானி, ராணி மங்கம்மா இவஙகள் எல்லாம் உங்கள் கண்ணில் படாதே.
நன்றி நண்பரே

புதுகை ஜி வி ஆர்

Jaleela Kamal said...

நான் ஒரு சாதாரண பெண் என்னையும் பிடித்த பத்தில் போட்டு சந்தோஷ கடலில் முழ்கடித்து விட்டீர்கள்.

மீதி பதிவுகளுக்கு பிறகு பதில் போடுகிறேன். கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை

ஜெய்லானி said...

@@@G VARADHARAJAN--//ஒரு ஜான்சி ரானி, ராணி மங்கம்மா இவஙகள் எல்லாம் உங்கள் கண்ணில் படாதே.//

ஐயா பெரியவரே!! நீங்க சொன்ன ஆட்களையெல்லாம் நமக்கு முன்னமே மற்றவர்கள் போட்டுவிட்டு தான், நம்மை கூப்பிட்டார்கள். முற்றிலும் புதிதாக இருக்கட்டுமே என்றுதான் போட்டேன். வேறு உள் நோக்கம் எதுவும் இல்லை. மற்றபடி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அடிக்கடி வாங்க

@@@Jaleela--//நான் ஒரு சாதாரண பெண்//

இந்த ஸ்பெஷல் தகுதி ஒன்னே போதுமே.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela ///மீதி பதிவுகளுக்கு பிறகு பதில் போடுகிறேன். கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை///

இங்கு இப்போது க்ளைமேட் மாறும் நேரம், உடல் நிலையை கவணமாக பாருங்கள்.

@@@ ஸாதிகா--வாழ்த்துக்கு நன்றி...

இப்னு அப்துல் ரஜாக் said...

nice

தாராபுரத்தான் said...

நல்ல பதிவுதாங்கோ.

வேலன். said...

அனைவரையும் நல்ல தேர்வுசெய்து அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

@@@'ஒருவனின்' அடிமை -- உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@தாராபுரத்தான்--உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@வேலன்.--நான் ஒரு சின்ன ஆள், என்னை போய் சார் என்றெல்லாம் சொல்ல வேண்டாம். மற்றவர்கள் அளவில் நான் ஒரு எறும்பு அவ்வளவே!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Veliyoorkaran said...

யோவ் பட்டாப்பட்டி...என்னய்யா அரஜாகம் இது...நம்ப தானை தலைவி நடிகை சோனா பேர விட்டுட்டான் இந்த ஜெய்லானி பய...அட்லீஸ்ட் ரஞ்சிதா பேராச்சும் போட்ருக்கலாம்...ஐயோகோ..நெஞ்சம் பதறுகிறதே....!!

சாமக்கோடங்கி said...

ப்ளேரன்ஸ் நைட்டிங்கேல் ( சமூக சேவை )...

என் தாய் எப்போதுமே பிளாரன்ஸ் அம்மையாரை நினைவுப் படுத்துவார்.. (அல்லது)பிளாரன்ஸ் அம்மையார் எப்போதும் என் தாயை நினைவுப் படுத்துவார்..

நடு இரவில் அருகில் உள்ள தெருவில் சுற்றும் அனாதைப் பூனைகளுக்கு கூடையில் உணவு எடுத்துச் சென்று அவர்களின் பசியாற்றும் என் தாய் மனித இனத்திற்காக பாடுபட்ட பிளாரன்ஸ் அம்மையாரை விட எனக்கு ஒரு படி மேல்..

உங்கள் தேர்வுகளில் எனக்கு முழு ஒப்புதல்.. நன்றி..

விக்னேஷ்வரி said...

நல்ல லிஸ்ட்.

Priya said...

படங்களுடன் அழகான குறிப்புகளும் தந்து நல்லா எழுதி இருக்கிங்க‌!

SUMAZLA/சுமஜ்லா said...

என்னையும் இதில் இணைத்தமைக்கு மிக்க நன்றி!

எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி, தன் கணவருக்காக, உடல், பொருள் அனைத்தும் தியாகம் செய்து, பெண்ணினத்தின் குலவிளக்காய் விளங்கும் கதீஜா நாச்சியார்.

அடுத்து பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்த ஐஸ்வர்யா ராய்! மற்றதெல்லாம் கொஞ்சம் யோசிக்கனும்...

எப்பா, பெண் பதிவர்களே, வாங்கப்பா, நாமும் பிடித்த(அல்லது பிடிக்காத) 10 ஆண்கள்னு ஒரு தொடர் பதிவு போடலாம்!

ஜெய்லானி said...

@@@Veliyoorkaran --யோவ் வெளி, போட்டிக்கு அழைத்தவர்கள் பிடித்த பத்து பெண்கள்னு சொன்னதும் மனசில நின்னவங்க இவங்கதான் சரியா!!.நீங்க சொன்ன ஆட்களைதான் அந்த அந்த நபர்களே பிடிச்சிட்டாங்களே!!!!(தக்காளி எப்படி தப்பிச்சேன் பாத்தியா? )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பிரகாஷ்--//என் தாய் எப்போதுமே பிளாரன்ஸ் அம்மையாரை நினைவுப் படுத்துவார்.. (அல்லது)பிளாரன்ஸ் அம்மையார் எப்போதும் என் தாயை நினைவுப் படுத்துவார்..//

பிரகாஷ் இது போல நிறைய பேர் இருக்காங்க , பொதுவா தெரிந்தவங்களா இருப்பவங்க பேரா பாத்துதான் போட்டேன். ( இன்னும் வெளிச்சத்துக்கு வராதவங்க உலகத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ விக்னேஷ்வரி--வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ Priya--வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@SUMAZLA/சுமஜ்லா--//எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி, தன் கணவருக்காக, உடல், பொருள் அனைத்தும் தியாகம் செய்து, பெண்ணினத்தின் குலவிளக்காய் விளங்கும் கதீஜா நாச்சியார்.//

அதுக்குள்ள போனால் நூறு பேராவது வரும். தவிர ஹதிஸ் மாற்று மதத்தினருக்கு அத்தனை தெரியாதே! ஆயிஷா (ரளி), பாத்திமா(ரளி), கதீஜா(ரளி)இவர்களை பற்றி நான்கு வரிகளில் என்னால் எழுதமுடியாது, குறைந்தது நான்கு தொடர் பதிவாவது போடனும்.
அதனால் பொதுவாகவே போட்டுள்ளேன். அதிகம் எழுதினால் போரடித்துவிடும் அதனாலேயே படத்திற்கு கீழே கம்மியாகவே கமெண்ட் போட்டுள்ளேன்.

கடைசி மூன்று (உங்களையும் சேர்த்து) பேருக்குமே லிங்க்கும் கொடுத்துள்ளேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Prathap Kumar S. said...

எல்லாமே நல்ல தேர்வு...
ஐஸ்வர்யா பற்றி போட்ட கமெண்ட் அருமை. ஐஸ்வர்யாவின் அழகில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனா இந்தியர்கள் அழகானவர்கள் என்பது உலகறிந்த விசயம்ங்க. அது ஐஸ்வர்யாலாதான் உலகுக்கு தெரிந்ததுன்னு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. :))

ஜெய்லானி said...

@@@நாஞ்சில் பிரதாப் --//ஐஸ்வர்யாலாதான் உலகுக்கு தெரிந்ததுன்னு சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை//

உலக அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றதும் தான், உலகில் அதிகம் பேருக்கு தெரிந்தது. இந்தியரும் அழகுதான் என்று , அந்த காரணத்தால் அப்படி போட்டது.(ஆனால் முதல் உலக அழகி இந்தியரான ப்ரமிளா வருடம் 1947 ஆனால் இப்போதுள்ள இனையம்,டீவி போல் அப்போது எதுவும் இல்லாததால் அதிகம் பாப்புலர் ஆகவில்லை.)
முதல் முறையாக நமது ஏரியாவுக்குள், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

kavisiva said...

நல்ல தேர்வுகள். எனக்குப் பிடித்த(தெரிந்த) பெண்களும் லிஸ்டில் இடம்பிடித்திருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி.

ஜெயலலிதா...பல குறைகள் இருந்தாலும் அவரது ஆளுமைத்திறன் எனக்கும் பிடிக்கும்.

Unknown said...

ஜெயலலிதா.கண்டிப்பாக எனக்கும் பிடிக்கும் அவரது தன்னம்பிக்கை

ஜெய்லானி said...

@@@கவிசிவா-வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@மின்னல் -வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

ஆளுமை திறன்,சமூக சேவகி, அறிவியம், டான்ஸ்,மாடல் விளையாட்டு வீராங்கனை,விர மங்கை, என துறைவாரியாக போட்ட பத்து பெண்களும் எனக்கும்பிடித்தவர்கள்.

அப்படியேபதிவுலகத்தில் இருப்பதால் பதிவுலகில் உள்ள 3 பெண்களையும் தேர்ந்து எடுத்து இருக்கீங்க‌.


நான் நினைத்த‌ முன்று பெண்க‌ளையும் கூட‌ போட்டு இருக்கீங்க‌. (ஜெய‌ல‌லிதா, உல‌க‌ அழ‌கி ஐஸ்வ‌ரியா ராய்,சானியா மிர்சா) ஆனால் பிர‌ப‌ல‌ங்க‌ள் அனைவ‌ருக்கும் தெரிந்த‌து என்ப‌தால் நான் என் இடுகையில் சில‌ கூலி வேலை செய்யும் பெண்க‌ளை தேர்ந்தெடுத்தேன்.


//இந்த‌ ப‌திவு யுத் ஃபுல் விகடன் குட் பிளாக் ப‌குதியில் வ‌ந்த‌மைக்கு வாழ்த்துக்க‌ள்//

நான் இவ்வ‌ள‌வு ப‌திவுக‌ள் போட்டு கூட‌ என் பேச்சு ந‌டையில் ப‌திவுகளை போட்டு வ‌ருகிறேன். என‌க்கு ப‌ல‌ பேருடைய‌ ப‌திவுக‌ளை பார்த்து என் திற‌மை க‌ம்மி என்று தான் நினைப்பேன்.

என்னை ப‌த்து பெண்க‌ளில் ஒருத்தியாக‌ தேர்ந்தெடுத்த‌து மிகவும் ச‌ந்தோஷ‌ம் + ந‌ன்றி.


நிறைய‌ த‌ட‌வை வ‌ந்து ப‌தில் போட‌ முடியாம‌ல் போய் விட்ட‌து. அதான் இன்று போட்டாச்சு.

ஜெய்லானி said...

@@@Jaleela --போட்டி விதி , வெவ்வேறு துறையில் உள்ளவர்கள் என்றதும் , ஒரு துறைக்கு ஒரு ஆளைதான் போடனும்.ஓகே!!.

அடுத்தது யாரும் இது வரை தேர்ந்தெடுக்காத ஆளா பார்த்தேன். ஒருத்தர் மட்டும் ’ஜெ’வை போட்டிருந்தார். இருந்தாலும் அவரை மட்டும் என்னால் விட முடியவில்லை..

//அப்படியேபதிவுலகத்தில் இருப்பதால் பதிவுலகில் உள்ள 3 பெண்களையும் தேர்ந்து எடுத்து இருக்கீங்க‌.//

யாரா இருந்தாலும் ஒரு தவற சுட்டிக்காட்டுகிற நாம , நல்லவர்களை பாராட்ட என்ன தயக்கம் ? அடுத்தவர்கள் சொல்வதை விட முதலில் நாம முந்திகொள்வது தப்பா ?

//ஆனால் பிர‌ப‌ல‌ங்க‌ள் அனைவ‌ருக்கும் தெரிந்த‌து என்ப‌தால் //

பிரபலமாக்கியது யார் ? எது ?

//நான் இவ்வ‌ள‌வு ப‌திவுக‌ள் போட்டு கூட‌ என் பேச்சு ந‌டையில் ப‌திவுகளை போட்டு வ‌ருகிறேன்.//

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை!! பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

//நிறைய‌ த‌ட‌வை வ‌ந்து ப‌தில் போட‌ முடியாம‌ல் போய் விட்ட‌து. அதான் இன்று போட்டாச்சு//

தவறையும் சுட்டிக்காட்டுங்க , விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு யாரும் இல்லை( அல்லாஹ்வை தவிர )

வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

### இங்கு கருத்தும்+ ஓட்டும் மற்றும் வந்த அனைவருக்கும் நன்றி.###

யூத்ஃபுல் விகடனுக்கு ஸ்பெஷல் நன்றி

R.Gopi said...

தோழமை ஜெய்லானி அவர்களே....

இந்த லிஸ்ட் வித்தியாசமான ஒன்று... நானும் இது போன்ற பல பதிவுகளில் பல லிஸ்ட் பார்த்துள்ளேன்... இருப்பினும், இது வித்தியாசமாக இருக்கிறது...

குறிப்பாக மேரி க்யூரி, ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், மற்றும் நம் சக தோழமை பதிவர்கள் (ஜலீலா, சுமஜ்லா மற்றும் அன்புடன் மலிக்கா) இவர்களை இந்த லிஸ்டில் இணைத்தது....

வாழ்த்துக்கள் ஜெய்லானி...

ஜெய்லானி said...

@@@R.Gopi --//குறிப்பாக மேரி க்யூரி, ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், மற்றும் நம் சக தோழமை பதிவர்கள் (ஜலீலா, சுமஜ்லா மற்றும் அன்புடன் மலிக்கா) இவர்களை இந்த லிஸ்டில் இணைத்தது.... //

சிலரை நாம மறந்து வருகிறோம் இல்லையா. அதனை நினைவூட்டவே இங்கு குறிப்பிட்டேன். மொக்கை பதிவுகள்( பதிவர்கள் ) நிறைய வரும் போது அதில் நல்ல பதிவர்களை அடையாளம் காட்டவே மூன்று பேரை போட்டது.( பத்து மட்டுமே போடனும் என்பதால் நிறைய பேர் போட முடியவில்லை)வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

விகடனில் இது வந்ததால் பதிவர்கள் அனைவருக்கும் இது ஒரு அங்கீகாரம் கிடைத்த மாதிரி

Jaleela Kamal said...

சரியா சொன்னீங்க உங்களால் நானும் குட்பிளாக் ஆகிவிட்டேன், நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela said...//சரியா சொன்னீங்க உங்களால் நானும் குட்பிளாக் ஆகிவிட்டேன், நன்றி.//

வாழ்த்துக்கள்!! இத்தனை தடவை நன்றி சொன்னா அப்புறம் எனக்கு குளிர் ஜுரம் வநது விடும்.( இப்பவே கை நடுக்குது )

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))