இந்த தொடரை எழுத அழைத்த பாலமுருகனுக்கு நன்றி!!
நாம பொதுவா அமைதியாகவோ , அதிக மகிழ்ச்சியாகவோ இருக்கும் போது பாட்டை விரும்புகிறோம் , அதில் மனதையும் பல நேரங்களில் பறிக்கொடுத்து விடுகிறோம். நம்மில் பாத்ரூம் பாடகர்களும் உண்டு. பல படங்கள் வெறும் பாட்டுக்காகவே நூறு நாட்கள் ஓடியதுண்டு.. காரணம் அது நமது நெஞ்சை தொட்டு போவதால். அப்படி போனதில் சில
இந்த ஒரு பாடலே போதும் காதலை வர்ணிக்க! துனைக்கு வேறு பாடலே தேவையில்லை. எனக்கு பிடித்து உங்களுக்கும் பிடிக்கும்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
சரி யாரைப்போல வேனும் அதையும் பார்கலாமே!! மொத்ததில் ஒரு அழகிய பூந்தோட்டம் மாதிரி
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ …
தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூன்தேறு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி …
சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம் …
ஓகே டாப்பிக்க மாத்தலாம். அடுத்ததாக இந்த பாட்டுக்காகவே இந்த படத்தை அப்போது நாலு தடவை பார்த்து விட்டு நல்லா திட்டினேன். ( சன் டீவியே அப்போதுதான் வந்தது மாலை4-இரவு 10 வரை) அருமையாண பாடலை குஷ்பு அழாமல் சிரித்துக்கொண்டே பாடியது. ( ங்கொய்யால )
நீ எங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
விடிகின்ற வரையினில்
கதைகளை படித்ததை
நினைக்குதே நினைக்குதே
முடிகின்ற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்கிதே துடிக்கிதே
கதையில்லை கனவில்லை
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை
அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடிய வேண்டும் வா வா
வீதி என்றும் வெட்டை வெளி
பொட்டலென்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் ஒற்றை சுடு
காடு என்று தென்றால் இங்கு
பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்று ஏழை பணக்காரன்
என்று ஓடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும்
பக்தன் என்று உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள்
என்றென்றும் உண்டு
கதைகள் இன்று முடியாது மீண்டும்
தொடரட்டும் இங்கு
மொக்கை கடுமையாக தெரிந்தால் பிண்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மீண்டும் வருவேன்
44 என்ன சொல்றாங்ன்னா ...:
முதல் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்!!
@@@சைவகொத்துப்பரோட்டா --முதல் வடையே உங்களுக்குதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ //
அதிசயம்.. என் சிஸ்டத்தில் இந்த பாடல் ஓடும் பொழுது தான் இந்த வலை பக்கத்திற்கு வந்தேன்.. Nice songs :)
இன்னொரு அதிசயம்.. முதல் காமென்ட் சைவகொத்துப்பரோட்டா..
(pi.ku: என் வலை தளம் பெயர் கொத்துப்பரோட்டா :))
முதல் ரெண்டு அதிலும் முதல் பாட்டு
காட்ட்சிகள் நான் நன்றாக ரசிப்பேன்
@@@பிரசன்னா --அடடா இதை என்னனு சொல்ல ஆச்சிரியமான விஷயம்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@A.சிவசங்கர் --இன்னும் ரசிக்கும் பாடல் வரிகள் அடுத்ததில் வரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல் இரண்டு பாடல்களிலும் கவித்துவம் அருமையாய் இருக்கு.
Good melodies.
@@@Chitra -//முதல் இரண்டு பாடல்களிலும் கவித்துவம் அருமையாய் இருக்கு.
Good melodies.//
அமைதியாக ஆர்பாட்டமில்லாத பாடல்தான்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல் பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
Good songs....
@@@Mrs.Menagasathia --வாங்க மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@nirmal --சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
GOOD...
@@@NIZAMUDEEN --வாங்க!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
///சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள் ///ஆஹா அருமையான தேர்வு.
என்ன ஒரே பாட்ட இருக்கு
அப்படியே சொந்தமா ஒரு பாட்டை எழுதினா இன்னும் நல்ல இருக்கும்
அருமையான வரிகள் ......
@@@ஸாதிகா --சீரியசாக போய் கொண்டிருந்த வேளையில் நல்ல வரிகளை தேட சொன்ன பாலமுருகனுக்கு முழு பாட்டாகவே போட்டுவிட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@ஹாய் அரும்பாவூர்-சொந்தப்பாட்டாஆஆஆஆஆஆஆஆஅ உங்கள் கேள்வி ’’கவிக்குயில் அன்புடன் மலிக்கா’’வுக்கு ஃபார்வேர்ட் செய்யப்படுகிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@RajaS* Forever *--வாங்க சார் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
செந்தில்குமாரின் வணக்கம்....,
மூன்று பாடல்களும் நான் ரசித்து கேட்டவை
மொக்கை ( தெழிவான விளக்கம் )
@@@செந்தில்குமார் --வாங்க!! உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆகா பாட்டுக்கள் தூள் கிளப்புது சூப்பர் அடுத்தாப்புலவந்து மீண்டும் சொல்கிறேன் இப்பொ இதவந்து பாத்துட்டு மற்றவருக்கும் கொஞ்சம் சொல்லுங்க ஜெய்லானி நான் வெளியப்போவத்தால் இந்த உதவி .. ஓகே
உடனே வந்து வாங்கிகொள்ளவும் உங்களுக்காத்தான்
http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html
இந்த மெசேஜை அங்கே சொல்லப்பட்டிருக்கும் அத்தனைபேருக்கும் நான் சொன்னதாகசொல்லிடுங்க சிரமத்திற்க்கு பொருந்திக்கொல்ளவும்..
அன்புடன் மலிக்கா
தொடர்ந்தமைக்கு ரொம்ப நன்றி
உங்களின் பாடல் தெரிவுகள் மிக அழகு.
'பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
நேற்று வேலை பளு சற்று அதிகமாகி விட்டது. அதனால் உடனடியாக வர முடியவில்லை.
நான் எழுதிய பாட்டு, எங்க எல்லோருக்கும் பிடித்திருப்பதை பார்த்து சந்தோசம்..
வேற என்ன சார் .. நான் சொல்வதற்க்கு இருக்கு..
@@@அன்புடன் மலிக்கா --நேற்று சமையல் ரானி ஆசியாவிடம் , இன்று கவிக்குயில் உங்களிடம் , இந்த லீவு நாள் இரண்டும் ஆனந்த அதிர்ச்சி நாளாக அமைந்துவிட்டது. மிக்க நன்றி.
//இந்த மெசேஜை அங்கே சொல்லப்பட்டிருக்கும் அத்தனைபேருக்கும் நான் சொன்னதாகசொல்லிடுங்க சிரமத்திற்க்கு பொருந்திக்கொல்ளவும்.//
மெயில் offline ல் இருந்ததால் இப்போதுதான் பார்த்தேன் .நாடோடி மட்டும் கிடைக்கவில்லை. மங்கு+ஸ்டார்ஜானுக்கும் அனுப்பிவிட்டேன்.
@@@பாலமுருகன்--சில பாடல்களில் முழுவரிகளுமே அருமையாக இருக்கும் அதன் அடிப்படையில் இங்கு முழு பாட்டையே எழுதிவிட்டேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@பட்டாபட்டி--//வேற என்ன சார் .. நான் சொல்வதற்க்கு இருக்கு..//
என் அடுத்த பதிவை கண்டிப்பாக பார்கவும்!!!!!!!!!!!!
இதுதான் நான் இப்ப சொல்றது.
nalla irukku
அருமையான பாடல்கள்!!
பாடல் வரிகள்..சூப்பர்..
அருமையான தேர்வு!
பழைய பாடல்களின் பவணியும் அவற்றின் கருத்தோட்டமும் நன்று. பாராட்டுக்கள்.
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
அருமையான பாடல் தெரிவு
@@@princerajan C.T //nalla irukku//
சார் இது நான் எழுதியது இல்லை.ஒருசில பாடல்களில் ஒருசில வரிகள் அர்த்தமுடையாதாக இருக்கும். ஆனால் சில பாடல்கலோ முழுவதும் அர்த்தமுடையாதாக இருக்கும், அதை மட்டுமே போட்டிருக்கிறேன். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@Geetha6
///அருமையான பாடல்கள்!!
பாடல் வரிகள்..சூப்பர்..
அருமையான தேர்வு!///
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@கவியின் கவிகள்--///பழைய பாடல்களின் பவணியும் அவற்றின் கருத்தோட்டமும் நன்று.//
உன்மைதாங்க.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@@@jj --// அருமையான பாடல் தெரிவு //
வாங்க!!. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
nice songs this All
Roja
@@@google.com //nice songs this All
Roja //
சீக்கிரம் நீங்களும் ஒரு ப்ளாக் திறங்க. வாங்க!!. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Good choice!
Thanks u so much for the ெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ Songs ... i almost listen this song every day ! i looking for the tamil translation for long time .. i'm lucky to get it from your blog .. I hope you dont mind if take the tamil scripts ..Keep posting such lovely songs (i like viramuthu ) thx one again .. tc bye
உங்கள் ரசிகர்ளுள் நானும் ஒருவன் !
@@@Priya--வாங்க!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Vijay Kumar --சந்தோஷம் !நிறைய இருக்கு போட முடியல .உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))