Saturday, January 16, 2010

எது இலவசம்

தமிழ்நாட்டின் 6 மாவட்டத்திற்கு செலவிடவேண்டிய வளர்ச்சி நிதி, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய ரூ121 கோடியை தன்னுடைய ?? இலவச கலர் டீவீ திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி செலவிட்டிருக்கிறார். தன்னுடைய சொந்த பணமா இருந்தால் பரவாயில்லை. எல்லாம் மககள் ரத்தமும், வேர்வையும் சிந்தி உழைத்த வரிப்பணம். ஏற்கனவே ஆண்களை தமிழ்”குடி” மகன்களாக்கியதுமில்லாமல் தன்னுடைய குடும்ப டீவீ க்கள் சீரியல் மூலம் வீட்டு பெண்களையும் சிந்திக்க விடாமல் செய்தாகிவிட்டார். ஒருபுறம் விண்னை தொடும் விலைவாசி, மறுபுறம் இருக்கும் நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் மழைப் பெய்தும் விவசாயத்திற்கு நீர் இல்லை.

ஒரேஒரு நாள் சட்டசபைக்கு வந்து கேள்வி கேட்ட எதிர்கட்சி தலைவி ஜெ வுக்கு இன்னும் பதில் சொல்லமுடியவில்லை. இதற்கு வந்த பதில் என்னதெரியுமா?.

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல"

அடங்கொக்கா மக்கா.. தணிக்க குழு அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொல்லி இருக்கு என...வார்த்தைகளை மாற்றி அறிக்கை விட்டால்..உண்மை பொய்யாகி விடுமா? தொண்ணுறு ஆயிரம் கோடி கடன் இருக்கையில் இலவச திட்டம் தேவையா? கடன் வாங்கி வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக்க வேண்டுமா என்ன?. தவறினை யார் சுட்டிக்காட்டினாலும் திருந்தப்பாருங்கள். அதைவிட்டு விட்டு பழைய கதைகளை சொல்லி மக்களை திசை திருப்பாதீர்கள். என்னதான் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கினாலும் ஒருநாள் மக்கள் உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை!
எப்படி நீங்கள் பதவிக்கு வர ஜெயலலிதா தவறுகள் செய்தாரோ அதே தவறுகளை நீங்கள் செய்து மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வர வழி காட்டுகிறீர்கள்.

0 என்ன சொல்றாங்ன்னா ...:

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))