இன்று ஒரு பிரபலம் நிகழ்ச்சியில யாருமே கிடைக்காததால இன்னும் சொல்ல போனா பக்கத்தில பார்தாலே நிறைய பேர் ஓடிடறதால நம்ம எம் டி ஜெய்லானியிடம் மினி பேட்டி
நிகழ்ச்சி தொகுப்பாளர் : வாங்க டாக்டர் ஜெய்லானி
ஜெய்லானி : என்னது டாக்டரா ..? இது எப்போ ? எனக்கு தெரியாம
நி தொ :- எல்லா சந்தேகமும் நினைவுக்கு இருக்கு இது மட்டும் இல்லையா..?
ஜெ : ம்..ஆமா .. இவர் குடுத்தாரே ஹி..ஹி.. (காலரை உயர்த்தி )ம்..ஓக்கே ..ஓக்கே...
நி தொ : உங்க ஸ்கூல் வாழ்க்கையை பத்தி சொல்லுங்க . எப்படி சந்தேகம் உங்களுக்கு வருதுன்னு
ஜெ : சரி இன்னைக்கு ஆள் யாரும் கிடைக்காத்தால ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ரேன் ..அடுத்த நிகழ்ச்சிக்கு ரெண்டு நாள் முன்னாடியே ஆளை பிடிச்சி அடைச்சி வச்சிடுங்க
என்னா நக்கலு..!! ஹி..ஹி.. |
ஒரு தடவை ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருந்தார்..ரொம்பவும் சுவாரஸியமா ,ரசனையோட சயன்ஸ் பாடம் அது . நியூட்டனின் விதிகளுன்னு பல உதாரணத்தோட சொன்னார் .. அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன் .. ஏன்னா கேக்குறீங்க ..
அது எனக்கு கொஞ்சமாவது புரிஞ்சாதானே..!!
என்னையே பார்த்துகிட்டு நடத்திகிட்டு இருந்தவர் கடைசியா ஒரு கேள்வி கேட்டார்.. மூனாவது விதிக்கு ஒரு உதாரணம் சொல்லுன்னு .. நான் சொன்னேன் சார் இதுல முதல் விதியே இன்னும் புரியல ..அதுக்குள்ள மூனாவது
விதிக்கு உதாரணம் கேக்குறீங்களேன்னு சொன்னேன் . சரி அந்த விதியாவது சொல்லுன்னார் .
’’ ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ‘’ அதாவது ‘’ ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு’ அப்படின்னு சொன்னேன் ..
ங்கொய்யால என்னை விட்டுட்டு ஒரு பதிவா ...!!! |
பரவாயில்லை தெளிவாதான் இருக்கிறே.. அதுக்குதான் ஏகப்பட்ட விளக்கம் குடுத்தேனே இன்னும் என்னன்னு கேட்டார் .. சார் ஒரு பூனை நின்ன இடத்திலிருந்து ஒரே ஜம்பில ஒரு சுவத்து மேலே ஏறுதே அது எப்படி ...? ஒரு பல்லி அம்மாம் பெரிய சுவத்திலிருந்து கீழே விழுந்தும் ஆடாம அசையாம அப்படியே நிக்குதே அது எப்படி ? அங்கே நியூட்டனின் மூனுமே நிக்கலையே ஏன் அப்படின்னு அவர்கிட்ட ஒரு பிட்டை போட்டேன் .
நி தொ ..பாஸ் இப்பவே எனக்கு தலையை சுத்துது ...
ஜெ : இதுக்கே அசந்தா எப்படி இன்னும் கேளுங்க
ஒரு வேளை நியூட்டன் இது ரெண்டையும் பார்கலையா..? இல்லை அவர் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டேன் மெதுவா என்னை கூர்ந்து பார்த்தவர் அப்புறம் வந்துச்சே கடுமையா கோவம் அவருக்கு அப்படியே கிளாசை விட்டு போனவர்தான் . திரும்ப அன்னைக்கு பூரா கிளாஸ் பக்கமே வரல். அப்புரம் நானா போய் பார்த்து சார் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் . அதுக்காக கிளாஸ் பக்கம் வராம இருந்துடாதீங்கன்னு சொன்னேன் .
வராட்டி விட்டுடுவோமா ஹா..ஹா.. |
சரி இனிமே என் கிட்ட எதுவுமே கேக்காதே. நானும் உன் கிட்ட எதுவுமே கேக்க மாட்டேன் .நானும் கோட்டை தாண்டி வரல நீயும் வராதேன்னு சொல்லிட்டார் அந்த பாவி மனுஷன்
அடப்பாவி மக்கா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நீ(ரே)யே இப்படி சொன்னா நம்ம பதிவுலகமா என் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் .. சயன்ஸுல டிப்ளமா , டாக்டர் , விஞ்ஞானி பட்டம் வாங்கினவங்க கொஞ்சம் முன்னே வந்து விளக்கினா நல்லா இருக்கும் . சரியா பதில் சொன்னா இதுல இன்னும் 200 சந்தேகம் கேப்பேன் . சரியா சொல்லாட்டி இன்னும் நாலாயிரம் சந்தேகம் சேர்த்து கேப்பேன் எப்பூடி வசதி ஹி...ஹி...
நி தொ : பாஸ் . இப்பவே நிறைய பேர் இந்த சேனல் வேனாம் காதுல ரத்தம் வருதுன்னு சொல்றாங்க .நீங்க சந்தேகமாவே கேட்டா அப்புரம் . நாட்டில ஜனத்தொகை குறைஞ்சிடும் . இல்லாட்டி நம்மளை நாடு கடத்திடப்போறாங்க
ஜெ : விடுய்யா எங்கே போனாலும் யாவது நம்ம கிட்ட மாட்டாமலா போய்ட போறாங்க . ஹி..ஹி...
நிகழ்ச்சி தொகுப்பாளர் மயங்கி விழுகிறார் .கேமரா ஓடிக்கொண்டு இருக்கிறது
உலக தமிழ் நெஞ்சங்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்