வழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏகப்பட்ட லைட்ஸ், டெக்ரேசன் ஒரே அமர்க்களமா இருந்துச்சி. எங்கயாவது புதுசா ஏதாவது திறந்தா நமக்குதான் வேடிக்கையா இருக்குமே. உள்ளே போய் பார்ததுல ஒரு பிளேட் கேசரி ஃபிரி ...... கேசரியின் மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).
![]() |
அலோ..அலோவ்வ்வ்வ்வ் |
காலை மதியம் என இரெண்டு வேளை வரும் போதும் போகும் போதும் ஒரு லுக்.....அடுத்த நாள் ஊருக்கு ஒரு டிக்கெட் அங்கேயே போட்டேன் . ஒரு பிளேட் கேசரி கிடைத்தது. கூச்சப்படாமல் இன்னொரு பிளேட் வாங்கினேன் . திரும்பவும் அந்த பக்கம் வரும்போதும் போகும் போதும் ஒரு லுக் , ஒரு ஸ்மைல் ....
நாலாவது நாள் கடை திறக்கல...ஒரு வேளை கேசரி தீர்ந்திருக்குமோ..???... அதுக்கடுத்த நாள்..நோ ஓபன் ...அந்த வாரம் முழுக்க திறக்கல...... வேலை பிசியில் பிறகு நான் கவனிக்கல அதுக்கும் அடுத்த வாரம் பார்த்தால் வேறு ஒரு பார்ட்டி அங்கே வந்து சலூனுக்கு உள்ள டெக்ரேஷன் ஆரம்பிச்சாங்க . கடை காலி ....அவ்வ்வ்வ்வ்வ்வ் .
![]() |
ஹி...ஹி.... எங்கே பிடிங்க பார்க்கலாம் |
நடுவில் ஃபிரியாக ஐஞ்சு நாள் லீவு கிடைக்க ..இங்கே இருந்து வெட்டியா பொழுதை போக்குவதை விட (( உள்ள வேலையிலும் அதைதான் செஞ்சிகிட்டு இருக்கோங்கிறது வேற விஷயம் ஹி..ஹி.... )) ஊருக்கே போகலாம் ஆனால் ஃபிளைட் டைமிங்கை மாற்ற வேற ஒரு டிராவல்ஸுக்கு போகும் போதுதான் தெரிஞ்சுது . யாருமே மாற்றி தரமாட்டாங்கங்கிர விஷயம் ..
நிறைய டிராவல்ஸுல ஃபிளைட் ஸீட் காலி இருக்கான்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க படுபாவி பசங்க ((ஒய் திஸ் கொலவெறியோ )) ..கடைசியில் ஒரு ஆள் கேட்டது நாளை மறு நாள் ஒரு சீட் இருக்கு .ஐ வில் சேஞ்ஜ் ஆனா 600 Dhs அதிகம் வேனுமின்னு . நான் போனாப்போகுது 400 Dhs வரை தர ரெடி .ஆனா பயபுள்ள ஒரு நயா பைசா குறைக்க தயாரில்ல . கடைசியில் ஒரு ஹைதராபாத பெண் DNATA வில் எதுக்கும் டிரை செய்யுங்கன்னு ஒரு அட்வைஸ்....!! . மற்ற ஷாப்கள் இரவு 11, 12 மணி வரை திறந்திருக்க ஆனால் கொடுமை இரவு 8 மணி ஆனாலே டிராவல்ஸை பூட்டிகிட்டு போயிடுறாங்க .
![]() |
ஆ...இ....ஊ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் |
அடுத்த நாள் DNATAவில் போய் பார்க்க நம்ம நாட்டு ஏரியாவில் ஒரு மலையாளி பெண் .ஒன்னும் பேசாமல் டிக்கெட்டை நீட்டினேன். டேட் சேஞ்ச் வேனும் . பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். (( அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). ஸ்டேண்டிங்கில போனாலும் பரவாயில்லை .எப்படியாவது ஒரு சீட் கன்ஃபார்ம் செய்து கேட்டேன் . இன்னைக்கே போரீங்களான்னு ஒரு நக்கல.
![]() |
நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ |
பெட்டி எல்லாம் ரெடி இப்பவே ஏர்போர்ட் போகசொன்னாலும் ஓக்கேன்னேன்..பயபுள்ள அப்பவே ஈவினிங் 8 மணி ஃபிளைட்டு 5 மணிக்கு துபாய் ஏற்போர்டில் இருங்கன்னு கன்ஃபோர்ம் செய்து குடுத்தாங்க. சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .பிலாக் ஒரு பொழுது போக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு ரெஸ்பான்ஸான்னு இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் . அதெல்லாம் வேனாம் உங்க வழியிலேயே போங்க மாறவேனாமுன்னு ஒரு அட்வைஸ் .தொடர்ந்து எழுதும் படி ஒரு வேண்டுதல்
ஏன்னு கேட்டதுக்கு பிலாக் எப்பவுமே ரத்தகளரியாதான் இருக்கு .ஃபிரியா யாரும் எழுதுறதில்ல. அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க .முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து கத்திவிட்டேன் திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ