இந்த வாரம் எந்த சந்தேகமும் யார்கிட்டையும் கேக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியல .பாருங்க மூளை துருபிடிக்க பாக்குது அதனால எப்பவும் கெரசின்ல போட்டு வைக்க வேண்டி இருக்கு. எப்பவும் தமிழ்ல சந்தேகம் கேட்டு அலுத்துப்போச்சி அதனால இந்த தடவை இங்கிலீஷில கேக்கரேன் பதட்டப்படாம , பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க
![]() |
எலேய் ....!!பின்னாடி நா இருக்கேன் வண்டியை நேரே பாத்து ஓட்லே..!! |
ஆட்டோ ஓட்டுபவரை ஆட்டே டிரைவர்ன்னு சொல்றோம் , பஸ் ஓட்டுபவரை பஸ் டிரைவர்ன்னு சொல்றோம் , லாரி ஓட்டுபவரை லாரி டிரைவர்ன்னு சொல்றோம் , ஹி..ஹி.. ஸ்குரு டைட் செய்பவரை ஸ்குரு டிரைவர்ன்னு சொல்ரோம்
சைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? இதுல நீங்க சொல்லலாம் அதையெல்லாம் நாமே ஓட்டறோம் அதனால பேர் இல்லைன்னு .ஆனா அந்த ஆள் ஒரு காரோ , இல்லை டெம்போ , மினி வேனோ , வாங்கினாலும் , இல்லை ஓட்டினாலும் நான் டிரைவர்ன்னு எப்படி சொல்றாங்க .
![]() |
லைசன்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு அலப்பறையை பாரு..?முடியல.. |
சரி , அடுத்த கொஸ்டின் அதே , ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு மூனு வித பேரா..?
இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
![]() |
பாருய்யா இவனையெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.... இஹிக்.ஈஹி..ஹி..ஈ. |
அதனால பொதுமக்களாகிய நீங்க தெரிஞ்சதை சொன்னா எனக்கும் புரியும் நானும் கொஞ்சம் கத்துப்பேன் ,எங்கேயே யாரோ கத்துதரதா படிச்சேன் ஆனா நினைவு இல்லை .இல்லாட்டி கீழே கண்டவாறு அறிவிப்பு விரைவில் வரும்
முக்கிய அறிவிப்பு:
இப்பதான் நான் எல்கேஜி யிலிருந்து ஆரம்பிச்சி இருப்பதால இதுல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் ..குறைந்தது மூனுமாசம் தொடர்ந்து இருந்தால் கேட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் தரப்படும்..
விளக்கம்
(1)தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம் எனக்கு எதுக்கு..ஹி..ஹி..
(2) வயசு அதிகமா இருந்தா நீங்க சொன்னது காதுல சரியா விழலன்னு சொல்லி தப்பிக்கும் அபாயம் இருப்பதால் இள வயதுக்கு முன்னுரிமை
(3) விளக்கம் சொல்லியே தொண்டைதண்ணி வத்தாமா இருக்க உணவும் , இன்னைக்கி பாடம் போதும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு ஊரைவிட்டே ஓடாமல் இருக்க தங்குமிடமும் இலவசம்.