Saturday, February 25, 2012

காய் கறி ...??

117 என்ன சொல்றாங்ன்னா ...

    வாழ்க்கையில  எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற  ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே  இது குறைவு . நமக்கு எது தேவையோ  அது மட்டும் போதும் நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. இப்போ எதுக்கு இந்த  புலம்பல்ன்னு கேட்குறீங்களா  கீழே  இருப்பதை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.
ஒன் கப் காஃபி பிளீஸ் 
    ஆரோக்கிய வாழ்வுக்கு  சமைத்த உணவா ..?  சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ  பட்டினி கிடப்பதுதான்னு வரும்..அவ்வ்வ்வ்  
    கேரட்   :  இதுல பீட்டா கரோட்டின்  இதயத்துக்கு நல்லது ..புற்று நோய் வராது ..இப்பிடியே  நிறைய விஷயம் இருக்கு. பச்சையா சாப்பிட்டா பலன் அதிகமுன்னு ஒரு டாக்டர் சொல்றார்
           இதை பச்சையா சாப்பிட்டா இதோட தடித்த தோலில் இருக்கிற பீட்டா கரோட்டினை  நம்ம உடல் கால்வாசி மட்டுமே எடுக்கும் ..இதே சமைச்சு சாப்பிட்டா பாதி பலனும் கிடைக்குமுன்னு இன்னொரு டாக்டர் சொல்றார் ...
டேஞ்சர் என்னன்னு சொன்னா செடி வளர்வதுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து இந்த பகுதிகள்ளதான் தேங்கும்.அதனால கேரட் சாப்பிட்டாதீங்கோ  ((இதை நான் மட்டுமே  சொல்ரேன் ஹி..ஹி.. ))
      காலி ஃபிளவர் :  நிறைய வெளி இடங்கள்ள ( பீச் ) பகோடா , பஜ்ஜி  இப்போ இதுலதான் செய்யுறாங்க . விலை குறைவு , வித்தியாசமான சுவை . இதை பச்சையா சாப்பிட முடியாது ஆனா சரியா கிளீனிங்க் செய்யலேன்னா என்ன ஆகும் ..? பாருங்க... இதோட பூ இடைவெளியில இருக்கிற நுண்ணிய  புழுக்கள்  நாம கழுவுற சுடு தண்ணியில கூட சாகிறதில்லையாம் .நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவுறாங்கப்போலிருக்கு  அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும். ஆனா போகிற இடங்கள்ள இதே மாதிரி யாரும் செய்யுறாங்காளா..???  ஹோட்டலில் சாதாரண தண்ணீரில்தான் அலசுறாங்க .இதுல  10 சதம் கூட புழுக்கள் , அதோட பிசுபிசுப்பான திரவம் வெளியேறாது . இந்த உருண்டை பூச்சிச்சியை சாப்பிட்டா டாக்டர்களுக்கு நல்லது ..நமக்கு சில ஆயிரம் நஷ்டம் ஃபீஸுங்கிர பேரில   ஹா..ஹா..  :-)
 
     முட்டை :  பச்சையா சாப்பிட்டா   நல்லதுன்னு சில  டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ  அதிலுள்ள  ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு  சொல்றாங்க..  இதை படிச்சு  வயிறு எரிஞ்சா பச்சையாவே  சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும்  ஹி...ஹி... 
       ((வாழை பழத்தை கூட அப்படியே ((தோலை உரித்துதாங்க )) சாப்பிடாமல்  ஒரு சுடு தண்ணீரில்  வைத்து (கொதிக்க வைக்க கூடாது ) 2 நிமிடம் கழித்து சாப்பிட்டால் சளிப்பிடிக்காது .சின்ன குழநதைக்கு கூட தரலாம் ))       
       இப்போது உள்ள சூழ்நிலையில  பச்சை காய்கறிகளை கூட சலாட் செய்து சாப்பிடுவது  டேஞ்சர் ....காரணம் எல்லாமே  பூச்சி மருந்து கலவையினால் செஇ ,கிடி பழத்தை  பாதுகாக்கிறோம் என்ற போர்வையினால்  வளரும் போதும் , பேக்கிங்கிலும்  அடித்து வருவதால் என்னதான்  வாஷிங் பவுடர் ( இது மட்டும் கெமிக்கல்  இல்லையா )  போட்டு கழுவினாலும் 10 சதம் டேஞ்சர் ரசாயனம் நம்ம உடலுக்கு போவதை தடுக்க முடியாது .
யாரோ  இங்கே கேட்டங்களே  ஃபிரஷ் ஐட்டமா வருதுன்னு   அவ்வ்வ்  :-))
     நாளொன்னுக்கு  வரும் வித விதமான கேன்சர்  , வயிற்று வலி , தலைவலி , காய்ச்சல் ..எல்லாமே  இந்த கெமிகலால் வருவதுதான் . இதை தடுக்க ஒரே வழி . முடிந்த வரை  வீட்டிலேயே  , மாடியிலேயே  ஏதாவது சின்னதா ஒரு தோட்டம் போட்டு வளர்க்க வேண்டியதுதான் .
        ஒரு  தடவை  இதில்  ஆர்வம் வந்து விட்டால் விடவே மாட்டீங்க .இருக்கிற அண்டா , குண்டானில் எல்லாம் செடி வளார்க்க ஆரம்பிச்சிடுவீங்க .  

ஆ....இனி ஸ்வீட்டிலேயே  காலத்தை தள்ளவேண்டியதுதான்  போல  :-)

       இதை எல்லாம் படிச்சு போட்டு ஒரு வாரத்துல 2 கிலோ  எடை குறைந்ததுதான் மிச்சம் எனக்கு . எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி  யானை சைஸில வருது  ) சந்தேகமாவே  வருது . ஒரு டாக்டர் சாப்பிடலாமுன்னு சொல்றார் .இன்னொரு டாக்டரோ  இப்ப்டி எல்லாம் சாபிட்டா ஆரோக்கியமில்லைங்கிறார் 
பூஸ் ......இன்று போல் என்றும் வாழ்க  :-)

       ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ  எடை ஏத்திட்டான் .ஏண்டா ஏன்ன்ன்..இப்பிடின்னு கேட்டா  இது வஞ்ச்னை இல்லாத உடம்பு  அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான் .   அவ்வ்வ்வ் 
     இனி ஆணியே  பிடுங்க வேனாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க ...????? 

Monday, February 13, 2012

எசப்பாட்டு

51 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :  இடிப்பார் இல்லா......மண்ணன்   கெடுப்பார் இலானும்  கெடும் இலவசமா வாங்கிட்டு ...எதிர் கட்சின்னு  ஒன்னைகூட விட்டு வைக்காத தமிழ் நாட்டு மக்களை நினைச்சா ஹி...ஹி....  ரொம்ப பெருமையா இருக்கு

இது அரசியல் பதிவுன்னு நினைச்சு ஆட்டோ ஷேர் ஆட்டோனு செலவு செய்துகிட்டு வராதீங்க ..நான் அந்தளவுக்கு ஒர்த இல்ல ஹி...ஹி....





கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை
கனவினிலும் பகல் நினைவினிலும்
அழுகிற என் மனம் புரிவதில்லை
(கொசு பேசும்...)

பகலியே எரியும் ஸ்டீட் லைட்டை கண்டுகொள்ள யாருமில்லை
என்னிடம் அனுமதி வாங்கி கரெண்டும்  இங்கே போவதில்லை
தாத்தாவினால் 4 மணிநேரம்  அம்மாவினால் 8 மணிநேரம்
5 வருஷம் உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
கொசுபேட்டினால் அடிக்க பேட்டினில் கூடசார்ஜ் இல்லை
கொசு கடிச்சு போன பின்னே மலேரியா டைஃபாய்டு மட்டும் எனக்கே சொந்தமடா
(கொசு பேசும்...)

உலகத்தில் எத்தனை கொசு உள்ளது
அது  என்னைய  மட்டும் கடிச்சு கொண்டாடுது
இன்னொரு முறை கடிக்க திண்டாடுது
வலி உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
கண்ணீர் துளி வந்து முட்டியதால்
இந்த முக்கும் இங்கே முனங்கியது
சாக்கடையில் உள்ள கொசுக்களெல்லாம்
அட  வீட்டிற்குள்ளே குடி புகுந்தது
கரெண்ட்  வந்தால்தால் ஃபேன் இருக்கும்
அறையில் கொசுக்களும் பறந்து விடும்
அழுகை வரும் அழுகை அழுகையா வரும்
கரெண்ட் போனால் விம்மல் கூட கலந்து வரும்
கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
கண்ணாடி உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
கண்ணாடி உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை
கொசு பேசும் வார்த்தை .......
(கொசு பேசும்..)