Saturday, August 20, 2011

ஒரு ............டைரி....!!!-----2

65 என்ன சொல்றாங்ன்னா ...

டிஸ்கி :ஒரு......யின் டைரி தொடர்ச்சி இரெண்டாம் பாகம் ஆரம்பிக்குது. இது இன்னும்  தொடரும் போலிருக்குது . இனி யாரும் தொடருக்கு என்னை கூப்பிடுவீங்க..??? (யாரோ புலம்புவது கேட்குது )) ஹி...ஹி..  
                                             மார்ச்  2010
      எங்கள் கூட வேலை செய்யும்  பெங்காலி (பங்ளாதேஷி ) ஒரு மாதிரியான டைப் . எது கேட்டாலும் அவனிடம் எப்போதுமே  சரியான பதில் சொல்லமாட்டான் .ராங்கான பதிலே வரும் புதிதாக  கேட்பவருக்கு சில நேரம் கோவமே வந்துடும் . ( நமக்கு  பழகி போயிடுச்சி ) . அன்றிலிருந்து  2 மாதம் லீவு ஊருக்கு  கிளம்பிகிட்டு இருந்தான் . சரி போய் பார்த்து விட்டு வரலாமுன்னு கேம்பிறகு போனால் இரவு 10 மணி ஃபிளைட்டிற்கு  8 மணி வரை ரூமிலேயே இருந்தான் .கேட்டதுக்கு இன்னும் தம்பி  கார் கொண்டு வரலை அதுக்காக வெயிட்டிங்னு சொல்லிட்டான் . துபாய் , ஷார்ஜா டிராஃபிக் சமாளித்து போகவே சில சமயம் 3 மணி நேரம்  பிடிக்கும் .கடைசியில் இவன் தம்பி வந்து ஏர் போர்ட் போனபோது மணி 11 ஆகி ஃபிளைட் மிஸ்ஸிங்  .திரும்ப வந்து விட்டான்
   மறு நாள் என்னையும் ஏர்போட்  போக கூப்பிட்டான். நான் கராராக சொல்லிவிட்டேன் . மாலை 6 மணி ஃபிளைட்டிற்கு இங்கிருந்து மதியம் 2.30க்கு கிளம்பினால் சரியாக இருக்கும் அப்படி என்றால் வருகிறேன் . அவனும் ஓக்கே சொல்லிட்டான் .
    அடுத்த நாள் பாஸ்போர்ட் ரெடியா , டிக்கெட் ரெடியான்னு சொல்லி விட்டு  கூடவே கிளம்பினேன் . மதிய நேரம் அவ்வளவா டிராஃபிக் இல்லை .ஒரு வழியா 4 மணிக்கு துபாய் ஏர்போர்ட்  போய் விட்டோம் . லக்கேஜ் ஸ்கேனிங்  போட்டதும் என்னை போக சொல்லிவிட நான் அங்கேயே இருந்தேன் . பயபுள்ள உள்ளே போன கால் மணி நேரத்திலேயே  திரும்ப வந்தான் என்னடா ஆச்சின்னு கேட்டதுக்கு சொல்றான் பாருங்க .ஜெய்லானி ஏர்போர்ட் மாறிப்போச்சுடா. நானும் ஆமாம் இப்ப ரொம்பவும் டெவலபா இருக்கு . அதுக்கும் நீ திரும்ப வந்த்துக்கும் என்ன  சம்பந்தமுன்னு கேட்டேன் .
   அதுக்கு அவன் சொல்றான் .நாசமா போச்சி  நான் போக வேண்டிய ஃபிளைட் ஷார்ஜா ஏர்போர்ட் , ஆனா நாம வந்தது  துபாய் ஏர்போர்ட்டுக்குன்னு கூலா சொல்றான் . பெங்காலி பயபுள்ள ஃபிரென்ஷிப் வேண்டாமுன்னு சொன்னாலும் நான் கேட்டாதானே..!!

                      ஏப்ரல்  2010
       டியூட்டி நேரங்களில் டைம்பாஸ் செய்ய பக்கத்துல இருக்கிற ஹோட்டல்தான்  வசதி .நொறுக்கு தீனிகளோட நேரம் போவது தெரியாம்ல் கலாய்த்து கொண்டிருப்போம் . ஒரு நாள் கூட வந்த நாலு பேருமே டீ சரியில்லைன்னு  சொல்லிகிட்டு இருந்தானுங்க . நான் லைட் டீ ( பால் இல்லாம )  மட்டுமே குடிப்பது வழக்கம். மத்தவங்க ஸ்டிராங் (  வீட்டில் குடிப்பது போல தேயிலை நன்றாக கொதிக்க வைத்தது )  குடிப்பதால் , ஒரு வேளை தேயிலை தூள் புதியதான்னு  கேட்டுகிட்டும் , இன்னும் சில பேர் ஒரு வேளை பால் புது டைப்பாக இருக்குமோ , இல்லை சர்க்கரை (சீனி ) சரியில்லையோன்னு  ஆளாளுக்கு அப்செடாக இருந்தார்கள்.
    வரப்போகிற எல்லாருமே  லேசாக முகம் சுளிப்பதை பார்த்து விட்டு ஹோட்டல் மலையாளியிடம் கேட்டேன் . ஏண்டா என்ன ஆச்சி எதுவும் ராங் ஐட்டம் போட்டுட்டியா..? இல்லை எதுவும் பழைய சரக்கா..? பழைய டேஸ்ட் இல்லைன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன் .
     அது ஒன்னுமில்ல  ஜெய்லானி .எல்லாமே அதே குவாலிட்டி சாதனம்தான் . இந்த டீ கெட்டிலை உள்ளே சுத்தம் செய்து கிட்டதட்ட  ரெண்டு மாசம் ஆகிரதேன்னு நாந்தான் இன்னைக்கி காலையில  நல்லா கிளீன் செய்தேன் . ஒரு வேளை அதுதான்னு நினைக்கிறேன்னு சொன்னான் பாருங்க .
      எனக்கு தல சுற்றியதுல ஒரு செகண்ட் நான் பூமியிலதான் இருக்கிறேனோன்னு சந்தேகமே வந்துட்டுது.
                  மே 2010


      மாலை நேரம் பக்கத்துல இருக்கும் காஃபிடீரியாவில்ஒரு காக்டெயிலும் (நம்புங்க ஜுஸ்தான் ), பர்கருமாக கூடவே நிறைய ஃபிரெஞ்ச் ஃபிரையை  வைத்துகிட்டு  எதை முதலில்  ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கும் போது .ஒரு பெங்காலி உள்ளே வந்தான் . எனக்கு எதிரில் உள்ள சீட்டில் உட்கார்ந்துகிட்டு  ஷ்வர்மா  ஆர்டர் செய்தான் .
    ஊரிலிருந்து வந்து ரெண்டு நாள்தான் ஆகிறதாம் .இந்த நாட்டிற்கு புதுசாம் . பரஸ்பரம் நலம் விசாரிச்சி கிட்டு இருக்கும் போதே அவன் கேட்ட சிக்கன் ஷ்வர்மா வந்தது. நான் கடை ஆளிடம் பேசிகிட்டு திரும்பி பார்ப்பதுக்குள்  முழுதும் சாப்பிட்டு விட்டான் .நன்றாக இருந்த்து போல இன்னொன்னு கேட்டான்
  ””பாய் சாப் ஷ்வர்மா பஹுத் அச்சா ஹை , அவுர் ஏக் தியோ மகர் பேப்பர் தோடா கம் ரக்கோ”” அப்படின்னு சொன்னான் .((சகோ  ஷவர்மா  ரொம்ப நல்லா இருக்கு ஆனா அதுல கொஞ்சமா பேப்பர் சுத்தி குடுன்னு கேட்டான் ))  பாருங்க .. அடப்பாவி ஷ்வர்மாவுல சுத்தி இருக்கிற பேப்பரை பிரிச்சி போட்டுட்டு சாப்பிடனுமுன்னு கூட  தெரியலப் போலிருக்கு. அவ்வ்வ்வ் .
                    ஜுன் 2010


       ஒரு பொன் மாலைப்பொழுதில்  பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது ஒரு ஆள் என் பக்கம் வந்து நலம் விசாரிச்சார் .((எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறானுங்களோ தெரியலை)) நானும் சின்னதா ஒரு புன்னகை செய்தேன் .
    அவர் ஒரு கைரேகை ஜோசியராம் (( இந்த ஊருல கிளியை வச்சி செஞ்சா நேரே  ஜெயில்தான் )) .ராசியை பத்தி பேசிகிட்டு இருந்தார் .நமக்கு ராசி நல்லா இருந்தா ஏன் வெளிநாட்டுக்கு வரோம் ஹி..ஹி...அவருக்கு கையை பார்த்தாலே  கடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் எல்லாமே தெரியுமாம் .நானும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டி வைத்தேன்  நமக்கும் நேரம் போகனுமில்ல ஹா..ஹா.
   கடந்தகாலம்தான் தெரியுமே அதுக்கு ரீவியூ எதுக்கு . நிகழ்காலம் இங்கே கொஞ்சம் வெயில் ஒன்னும் சொல்றதுக்கில்ல . எதிர்காலம் தெரிஞ்சா டேஞ்சர் . அதில் ஒரு திரில் , சுவாரஸ்யம் இருக்காது .ஆக மொத்தம் எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது .. முழு எதிர்காலமே சொல்கிறேன் . 30 Dhs கொடுங்கன்னு  கேட்டார்.
     நான் சொன்னேன் ஓக்கே நான் 100 Dhs தருகிறேன் .எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கன்னு . அவரும் ஆர்வமாக சொல்லுங்கன்னார் . கேள்வி இதுதான் . நான் உங்களூக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்கி தரும் அடுத்த வேளை என்ன சாப்பிடுவீங்கன்னு சரியா சொன்னா அதோடு இந்த 100 Dhs  உங்களுக்கேன்னு சொன்னேன் .
     அவர் முகத்துல ஈ ஆடவில்லை . அமைதியாக இருந்தவர் .மெதுவாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் . எங்கிட்டேயேவா...?..!!

டிஸ்கி நெ 2 : இது வரை பொருமையாக படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன் . இந்த தொடரை இன்னும் தொடரனுமான்னு நீங்கதான் சொல்லனும் :-)

Friday, August 12, 2011

ஒரு ............டைரி....!!!

59 என்ன சொல்றாங்ன்னா ...

             இந்த தொடர் பதிவை  விஜி கிரியேஷன்ஸ் ஆரம்பிச்சி வச்சி நமக்கு பிட் நோட்டிஸ்அழைப்பிதழ் அனுப்பினாங்க அதுவும் இந்த மாசம் கடைசிக்குள்ள போடுங்கன்னு அன்பு கட்டளையோட அதாவது போன டிஸம்பர்ல... அதுக்கு பிறகு  குட்டி சுவர்கமும்  கூப்பிட்டு  பார்த்தாங்க .அதுக்குள்ள புது வருஷமும் ஆரம்பிச்சி ஜனவரியும் ஓடி இப்போது ஆகஸ்டு பாதி முடியப்போகுது , நேரம் ஆக இரெண்டு காரணம்  ஒன்னு  ஆனி பிடுங்கல்  அடுத்தது  ஒரே நேரத்தில இதே மாதிரி பதிவு எல்லா இடத்திலும் வந்தா கொஞ்சம் போர் அடிச்சுடுற மாதிரி தெரியும் அதான் ஹி..ஹி.. :-)
      எனக்கு டைரி எழுதப் பிடிக்காது.. பிடிக்காதுன்னு கிடையாது ஆனால் , என்னிக்காவது  எதிலாவது மாட்டினால் இதுவே ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி ஆகிடும் . வேற  வினையே  வேனாம் ஹி..ஹி..  ((சோம்பேறின்னு சொல்ல அசிங்கம்)) இதுல ஒரு பக்கத்துல ஒரு வருஷத்தை அடைக்க முடியுமா சந்தேகம்தான் அதனால முடிஞ்சளவு  போட்டுகிட்டு வரேன் .
                 ஜனவரி 2010

          சில்லென்று வீசும் ஒரு பொன்மாலை பொழுதுல பக்கத்தில இருக்கும் பார்க்கில போய் உட்கார்ந்தேன் . மீடியமான கூட்டம் குழந்தைகளின் தத்தி தத்தி  நடக்கும் அழகும் , பாட்டிகளின் ((ஆண்டீஸ்)) வாக்கிங்கும் அழகாய் போய் கொண்டு இருந்துச்சி .  அதுக்கும் பக்கத்தில  ஒரு புல் வெளியில இங்கே பால் விளையாடாதிங்கன்னு போட்ட இடத்தில்  அனுஷ்காக்களும் , நமிதாக்களும் ஷட்டில் காக் விளையாடிகிட்டு இருந்தாங்க . அழகானவங்க விளையாடும் போது  யார் போய் அவங்களை தடுக்க போறாங்க . நானும் அதை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் .
          கரெக்டா பத்தாவது நிமிஷம் அனுஷ்கா விட்ட அடியில பந்து என் பக்கம் எதிர்பாராம திடீர்ன்னு வந்ததுல நான் கொஞ்சமா தடுமாறினதுல கால் வழுக்கியதுதான் தெரியும் எண்ட அம்மேஏஏஏஏஏன்னு ஒரு பயங்கர சத்தம்.,  வந்த சத்தத்தில  பயந்து போய்  நானும் ஐயோன்னு கத்த பிறகுதான் தெரிஞ்சுது ..நான் கட்டில விட்டு கீழே விழுந்தது.  சாரி , விழுந்தது ஒரு ஆள் மேலே., .என்னோட கை அந்த ஆள் தொண்டைகுழியை  அழுத்த, என்னோட மொத்த வெயிட்டும்  அந்த  ஆள் வயித்துல ....

         அப்பவும் பாதி தூக்கத்துல ஒரு சந்தேகம் யாரு இது புதுசா நம்ம ரூமில நமக்கு தெரியாம வந்து என் பெட்டுக்கு கீழே படுத்து கிடக்கிறது  .ஒரு வேளை திருடனோன்னு பயம் .நாம ரெண்டு பேரும் போட்ட சத்தத்துல.ரூம் ஃபிரெண்ட் அவனோட சொந்த காரன் மலையாளி  ஓடி வந்து என் கையை எடுத்து விட்டு  டேய் விட்றா  செத்துடப்போறான்னு சொல்ற வரை கை குரல் வளையை விட்டு எடுக்கல (( யாருக்கு தெரியும் தூக்கக் கலக்கத்துல)) 
        விஷயம் இதுதான் ..ஆள் இருப்பது அபுதாபியில , ஊரிலிருந்து  வந்ததும் நைட்  பிளைட்டா இருப்பதால தங்கிட்டு காலையில போக ரூமிற்கு வந்து இருக்கு . எனக்கு நேர் எதிரே ஏசி இருப்பதால குளிர் காற்றுக்காக பயபுள்ள என் கட்டிலுக்கு கீழே  படுத்திருக்கு. ஒரு வழியா அவரை  சமாதானப்படுத்தி  படுக்க வச்சா இதோ  வரேன்னு வெளியே போனவர்தான் திரும்ப ரூம் பக்கம் வரவே  இல்லை . பக்கத்தில  இருக்கிற பள்ளிவாசல்ல தூங்கிட்டு  அப்படியே ஆள் எஸ்கேப்..
ரூம் மேட்டுகிட்ட கேட்டேன். எங்கேடா அவரையும் கானோம் அவரோட பெட்டியையும்  கானோமேன்னு .பெட்டியை நீயே எடுத்து வந்து அங்க குடுன்னு சொல்லி வாங்கிட்டு அங்கிருந்தே போயிட்டார். இப்பல்லாம் யாருமே ரூம் பக்கமே   வரதில்லை ஏன்னு தெரியல . உங்கள் யாருக்காவது காரணம் தெரியுமா ?  தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்..  

                பிப்ரவரி 2010  

            இதுவும் அதே  சில்லென்று வீசும் ஒரு பொன் மாலை பொழுதில் திரும்பவும் அதே பார்க் அதே  வேடிக்கை .ஆனா இது கனவல்ல நிஜம் .புல் வெளியில்  உட்கார்ந்து  வேடிக்கை பார்க்கும் போது  காலில் எதோ ஒரு உணர்வு சின்னதா பிடிச்சி இழுப்பது மாதிரி . விட்டேன் ஒரு உதை.ஏதோ ஒன்னு பறந்து போய்  தூர விழுந்தது. திரும்பவும் வேடிக்கை  தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில  அதே உணர்வு  என்னடா இது ஜெய்லானிக்கு வந்த சோதனைன்னு பார்த்தா ஒரூ ஆ மை.,  
         ஆஆஆஆஆமையா இது எப்படி வந்துச்சின்னு   ஆராய்ச்சி செய்ய நேரம் இல்லை ரொம்பவும் பொடிசா இருக்கவே  சரி வரட்டுமேன்னு சொல்லி பக்கத்தில கிடந்த சிகரெட் பாக்கெட்டில போட்டு ரூமிற்கு கொண்டு வந்துட்டேன் . வீட்டுக்கு ஆமை வந்தா வீடு உருப்படாதுன்னு எங்கோ  படிச்ச ஞாபகம் . நாமலே உருப்படாத ஆளு, இதுல ஆமை வந்தா ஒரு வேளை உருப்படுட்டுமோன்னு  நினைச்சு தைரியமா கொண்டு வந்துட்டேன் .
        அது என்ன சாப்பிடும் என்று சரியா தெரியாததால. ஒரு பக்கெட் முக்கால் வாசி தண்ணீர் நிறப்பி அதில் ஆமையை விட அழகா நீந்திகிட்டு இருந்தது. கொஞ்சமா அதுல சோறுப்போட அதை லேசா அது சாப்பிட்டதா ஞாபகம் . வழக்கம் போல மறு நாள் காலை பாத்ரூமில் குளிக்கப் போக பக்கெட்டை பார்க்க..!! பக்கெட் காலி ஆமையை கானலே..!!  சரி ஒரு வேளை எங்காவது ஓரமா இருக்கும் அதுவும் குளிக் போயிருக்குமுன்னு நினைச்சி  நானும் மறந்துட்டேன். 

   திரும்பவும் மதியம் வரும் போது ரூம் மேட் கேட்டான் , அடோய் ஜெய்லானி பாருய்யா அதிசயத்தை ராத்திரி ரூமுக்கு வரும் போது பார்க்கிறேன் உன்னோட பக்கெட்டுக்குள் ஒரு ஆமை நீந்திகிட்டு  இருந்துச்சி .பார்த்துமே  அப்படியே  ஷாக்காகிட்டேன் ..!!  நானும் சரி அப்புறம் ..? அப்புறமென்ன அப்படியே  பக்கெட்டோட டாய்லெட்டுக்குள்ள விட்டு ஃபிளாஷ் அடிச்சிட்டேன் ..ஆனாலும் 5 நிமிஷம் கழிச்சி அது திரும்பவும் வெளியே வந்துச்சி , நான் விடல கடைசியா சுடு தண்ணி ஒரு பக்கெட் விட்டேன் . அது திரும்ப வரவே இல்லைன்னு சொன்னான் .அவ்வ்வ்வ்வ்வ்வ்
   அடேய் படுபாவி அதை கொண்டு வந்ததே  நாந்தாண்டா ..!! அநியாயமா அதை கொன்னுட்டியேன்னு சொல்ல , யாருக்கு  தெரியும் நான் வரும் போது இரவு 2 மணி நீ நல்லா தூங்கிட்டு இருந்தேன்னு கூலா  சொல்ல ...  என்ன செய்ய ..!!  என் கிட்ட வந்த ஆமைக்கு நேரம் சரியில்லை .
நீதி  :-   ஆமை புகுந்தா வீடு இல்ல , ஆமை  உருப்படாது ..!!
இந்த ரெண்டு  மாசத்துக்கே  கதை ஓவரா போனதால மீதி மாதங்கள் தொடரும்...............................................................................................!!                   

Saturday, August 6, 2011

எழுத்து வகை ..!!

80 என்ன சொல்றாங்ன்னா ...

    இப்பதான் ஒரு தொடர் முடிஞ்சுது அதுக்குள்ளே இன்னொன்னானு நினைக்க வேண்டாம் .வேற வழியே இல்லை . அழைத்து இங்கே பார்க்கவும் . அழைத்தமைக்கு நன்றி . இந்த தொடரில் எதிர் பாலினம் ஒருவர் எழுதினால் எப்படி இருக்கும் என்று டெஸ்ட் செய்யவே இது. :-) கொஞ்சம் சிரியஸா யோசிக்கலாம் :-)
   நாம் ஒரு கதையோ , கவிதையோ ,அல்லது கட்டுரையோ  படிக்க ஆரம்பிக்கும் போது அது யார் எழுதி இருப்பது ? எழுதியவர் ஆணா இல்லை பெண்ணா என்று பார்த்து விட்டோ  படிக்கிறோம் .அதில் தெரிந்தவர்  என்றால் படிக்கும் ஆசை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் .அந்த வகையில்தான்  நாவல் , சினிமா பாட்டாக , இலக்கியமாக ஒருவரை குறித்து நமது அனுகுமுறை இருக்கிறது. 
இப்போ இங்கே இருக்கிர சூடுக்கு இது வேரயா..?  அவ்வ்வ்

    ஒரு கவிதையை கண்ணதாசனோ , வைரமுத்தோ ,வாலி இவர்கள் எழுதி அதை நாம் வாசிப்பதுக்கும்  ஒரு சாதாரன குப்பனோ ,சுப்பனோ எழுதி இருந்தால் அதை வாசிப்பதுக்கும் ஏக வித்தியாசம் இருக்கிறது புதியதாக யாராவது எழுதி இருந்தால் மேலோட்டமாக வாசித்து விட்டு விடுவோம் .இங்கே கவிதை  வரிகளுக்கு நாம் மரியாதை  குடுப்பதில்லை .எழுதியவர் யார் என்றே. முதல் கேள்வி
   பொது வெளியை விட்டுவிட்டு பார்க்கும் போது இங்கே பதியுலகில் பலர்  விதவிதமாக எழுதி வருகிறார்கள். இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு வித டேலண்ட் இருக்கிறது. அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஒருவருக்கு கவிதை நன்றாக வருகிறது. இன்னொருவருக்கோ  சமையல் நன்றாக வருகிறது இப்படி பலவகை இருக்கு. எது எவருக்கு பிடித்து இருக்கோ அதில் எழுதுகின்றார்கள்.
    பதிவுலகில் இருக்கும் பலரும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை இல்லை .நல்ல மெச்சூரிட்டியான ஆட்களே இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலும் ஒரு பெண்ணோ ,இல்லை ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னோ ஒரு ஆண் கட்டாயம் தூண்டுக்கோலாகவே  இருக்காங்க . அந்த வகையில் அவர்கள் எழுதும் எழுத்தும்(வழிமுறை)  தனித்தனியே  பிரித்து பார்க்கவே  முடியாது. 
(இனிப்பான ) சோதனை மேல் சோதனை  போதுமடா சாமி...

   அசிங்கமாக ,அடுத்தவர் முகம் சுழிக்கம்படியாக யார் எழுதினாலும் அது நீண்ட நாள் நிற்காது. அப்படிப்பட்டவர் பெரும்பாலும் யாருக்குமே தெரியாத புனைப்பெயரிலோ  அல்லது தன்னுடைய அடையாளம் வெளியே தெரியாமல்தான் எழுதுவார். இங்கேதான் வருகிறது அது ஆண் எழுதும் எழுத்தா இல்லை இது பெண் எழுதும் எழுத்தா..? என்ற கேள்வியே. (உஸ்...யப்பா ஒரு வழியா மேட்டருக்கு  வந்துட்டேன் )
   ஊரில் எங்கோ நடக்கும் ஒரு குண்டூசி செய்தியை ஊதி ஊதி  பெரிசாக்கி புல்டோசர் அளவு பரப்பரப்பாக கூடிய பெண்களும் இங்கே இருக்கிறார்கள். (தேவை ) இல்லாத வார்த்தையை விட்டு விட்டுஅதுக்காக்க  குடுமிப்பிடி போடும் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். இதில் இவர் இப்படித்தான் எழுதனும் என்கிற வறைமுறை எதுவும் கிடையாது.
   ஒருவனோ அல்லது ஒருத்தியோ இப்படித்தான் எழுதனும் என்று வந்தால் அதில் அவரோட தனித்தன்மை என்று எதுவும் இல்லை ,இருக்காது என்றே அர்த்தம் . இங்கேதான் அடக்குமுறை என்ற பேச்சு வருகிறது. இந்த தொடரில் எழுதிய பெரும்பாலோனேர் அவர்களுக்குள்ளேயே  ஒரு பெண் இப்படித்தான் எழுதனும் என்ற வரைமுறையை ஒத்துக்கொள்கிறார்கள்.  கடைசியில்  எங்களுக்கு எழுத்துலகில் எழுத்து சுதந்திரம் கிடையாது என்று சொன்னால்  யாரை குற்றம் சொல்வது ?
   உதாரணத்திற்கு  ஒரு கவிதையோ  அல்லது கட்டுரையோ  கீழே பெயர் போடாமல் போட்டால் அது ஆண் எழுதியதா இல்லை பெண் எழுதியதா என்று கண்டிபாக ஊகிக்கவே  முடியாது .இதில் முன்பே சொன்ன மாதிரி அடுத்தவர் முகம் சுழிக்காத வரை அது யார் எழுதினாலும் அது நல்ல எழுத்துதான் . எழுத்திலே  ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பது   வேண்டாத வேலை என்றே  தோன்றுகிறது.
     பதிவு கொஞ்சம் சீரியஸா ஆன மாதிரி தெரியுது அதுக்காக ஒரு ஜோக்
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரியுதே..?
மனைவி: அதிக மில்லை ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.....
யோவ் இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம் மட்டும்தான் தான்  வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
    அப்படியே  ஒரு சந்தேகம் J  குளத்துல எந்த வகையான (நீளம்  அகலம் )பொருட்களை போட்டாலும்  அலை மட்டும் வட்டவட்டமா  வருதே அது ஏன் ???  ((ஒன்னுமில்ல சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சு அதான் ஹி..ஹி... ))