Saturday, July 30, 2011

முத்துக்கள் மூன்று மட்டுமே ..!!

92 என்ன சொல்றாங்ன்னா ...


    நீண்ட நாளைக்கு பிறகு  இங்கே ஒரு தொடரின் தொடர் தொடர்ந்துகிட்டு இருக்கு . ரொம்ப நாளும் ஏமாத்த முடியல . கைவசம் இன்னும்  நிறைய பாக்கி இருக்கு தொடர் தொடர்ந்துகிட்டு இருக்கும் போது தொடர்ந்தால் சுவாரஸ்யம் இருக்காது .இதை அழைத்த சகோஸ் , சகோஸ்  அவர்களுக்கு நன்றி ..


(1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
(1)     புயல்மழை அடிக்கும் போது  கடற்கரையோரம் வேடிக்கை பார்க்க பிடிக்கும்  
(2)     கலகலப்பாக இருக்க
(3)     கலகலப்பாக இருக்கும் எல்லோரையுமே 

1)      நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1)     சிகரெட், பீடி ,சாராயம்
(2)    நீண்ட பயணம்
(3)     தனிமை
2)      பயப்படும் மூன்று விஷயங்கள்
(1)     மரணம் அது குறித்து சிந்தனை
(2)    ஹஸ்பிட்டல் ஸ்மெல்
(3)    எலெக்டிரிக்  ஷாக்  
3)      உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
(1)    இரண்டு மாத குழந்தையின் அழுகை (எதுக்கு அழுவுது ஏன் அழுவுதுன்னே புரியாது )
(2)    ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்குதான் தெரியும்முன்னு சொல்றாங்களே  அது
(3)     காதல்
4)      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
(1)     கம்ப்யூட்டர்
(2)    லட்டர் பேட்
(3)    பேனா
5)      உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
(1)    டாம் அண்ட் ஜெர்ரி
(2)    மிஸ்ட்ர் பீன்
(3)    காமெடி புக், பதிவுகள்
6)      தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
(1)     முந்தின கேள்விகளுக்கு டைப்பிகிட்டு இருக்கேன்
(2)     இந்த கேள்விக்கும் பதில் டைப்பிகிட்டு இருக்கேன்
(3)    அடுத்த கேள்விக்கும் இன்னும் டைப்பனும்
7)      வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
(1)     இருக்கும் வரை அடுத்தவங்களுகு தொல்லைதராமல் இருக்கனும்
(2)    என் பெயரில் ஒரு அறக்கட்டளை .அது யாருக்காவது உதவிகிட்டே இருக்கனும்
(3)    நட்புக்களிடம் தொடர்ந்து நட்புடன் இருக்க முயற்சி
8)      உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
(1)     எந்த வேலை கொடுத்தாலும் அதை திறம்பட செய்யும் மனோ தைரியம் .(எல்லா புகழும் இறைவனுக்கே )
(2)    தூங்க சொன்னால் உடனே போய் தூங்கிடுவேன் (அவ்வளவு சமத்து )
(3)    கை , கால் , நல்லா இருக்கும் வரை எல்லாமே முடியும்
9)      கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
(1)     புறம் பேசுதல்
(2)    ஆம்புலன்ஸ் சத்தம்
(3)    அரசியல்வாதியின் பேச்சு
10)   கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
(1)     ராக்கெட் ஓட்ட
(2)    மிருகங்களின்  பாஷை
(3)    வவ்வால் மாதிரி தலைக்கீழா தொங்க
11)   பிடிச்ச மூன்று உணவு வகை?
  கேள்வியை தயாரிச்ச புண்ணியவான் யாருங்க..?  என்னதான் பிடிச்ச உணவா இருந்தாலும்  3 வேளை அதையே  சாப்பிட முடியாது
12)   அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
நேரத்துக்கு தகுந்த படி  இந்த பாட்டு தானாகவே வாய் அசையும் அது
13)   பிடித்த மூன்று படங்கள்?

(1)     பார்டர்  (ஹிந்தி )
(2)     புதிய பறவை
(3)     கபி குஷி கபி கம் (ஹிந்தி )
14)   இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
(1)     பல்லு விலக்காம இருக்க முடியாது
(2)     டிரஸ் போடாம இருக்க முடியாது
(3)     என்னால தினமும் குளிக்காம இருக்க முடியாது (( எங்கிட்டேயேவா,,ஹி..ஹி.. ))
15)   இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
  இதை மூனுப்பேர்கிட்ட மட்டும் அடக்க என்னால் முடியாது ஸோ..இந்த கேள்வி சாய்ஸில்  விடப்படுகிறது


உஸ்...ஒரு வழியா இந்த தொடரை முடிச்சாச்சு .. கேள்வி அதுப்பாட்டுக்கு  வந்துகிட்டே இருக்கு .நா பரிட்சைக்கு கூட இப்படி எல்லா கேள்விக்கும் பதில் கொடுத்தது  இல்ல ..அவ்வ்வ்

சிந்தனை

19 என்ன சொல்றாங்ன்னா ...

     இதயத்தை பத்தி எத்தனையோ  படங்கள் வந்திருந்தாலும் , அதை பாதுகாக்க எத்தனை எத்தனை வெப் சைட்டுகள் , பிளாக்குகள்   இருந்தாலும் பல தடவை யோசிச்சுப்பார்தாலும்  ஒன்னுமே  புரிய மாட்டேங்குது . இதயம் ஒரு விளங்காத புதிர்  
   ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாளே  ஒரு அதிர்ச்சி சம்பவம் . கூடவே  வேலை செய்யும்  நண்பரின் மகன் வயதும் அதிக மில்லை 23 தான் இருக்கும் . இந்த ஊருக்கு அழைத்து ஒரு வேலையும் வாங்கி தந்து டிரைவிங்க் லைசன்சும் ( இங்கே யானை விலை ஆகும் ) எடுத்து கொடுத்தார் . தனக்கு பிடிச்ச  பெண்ணையே  திருமணமும் செய்து குடுத்தார் . திருமணம் ஆன மூன்றாம் நாளே  மணமகன் காலி. கேட்டால் ஹார்ட் அட்டாக்.
     இரவு 2 மணிக்கு ஊரிலிருந்து டெலிபோன் வரவே  .இவர் தூக்க கலக்கத்தில் எடுக்கவே இல்லை .திரும்ப திரும்ப போன் அடிச்சதில் .எரிச்சல் பட்டு போனையே ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார் . வீட்டிலுள்ளவர்கள் வேறு ஒருவருக்கு தகவல் சொல்லி அவர் காம்பவுண்ட் சுவர் ஏறிகுதித்து உள்ள வந்து இவரை எழுப்பி தகவல் சொல்லும் போது மணி 3 ஆகி விட்டது.  நண்பர் அலறி அடித்துக்கொண்டு  கிடைத்த முதல் ஃபிளைட்டில் ஊர் போய் இருக்கிறார் . அவர் மகன் இனிமையான சுபாவம்  கலகலப்பானவர்.
      நான் ஊர் போவதுக்கு முன் சந்தித்து பேசிய நினைவுகள் சோகத்துடன் நாட்கள் நகர  அடுத்த நான்கு நாட்களில் இன்னுமொரு சோகம் . நேற்று மதியம் வரை ஒன்றாக வேலை செய்தவர். இன்று வேலைக்கு வரவில்லை . ஒரு வேளை லீவா ஏன் வரவில்லைன்னு அவர் நெம்பருக்கு போன் செய்தால் இரவு நெஞ்சு வலி வந்து அதனால் அவரை எமர்ஜென்ஸி வார்டில்  வைத்திருப்பதாக அவர் சகோதரர் சொன்னார் ., சொல்லும் போது மணி காலை10  .
    சரி டியூட்டி முடிஞ்சு போய் பார்க்கலாமுன்னு இருந்தோம் . மதியம் 12.30க்கு  மீண்டும் தகவல் அவர் இறந்து விட்டார் .போய் பார்க்க மனசு ( தைரியம் ) வரவில்லை . உடலில்  எந்த ஒரு வியாதியும் இல்லை. நார்மலாகவே இருந்து வந்தவர் . கடைசியில் என்ன ஆச்சுன்னு சொல்ல அவர் இல்லை .வெளி நாட்டில்  உயிருடன் இருக்கும் வரை ஒரு கஷ்டமும் இல்லை . அதே இறந்து விட்டால் உடலை ஊருக்கு அனுப்ப பல சட்ட பிரச்சனைகள் , நாட்களாகும் அதனாலேயே பலர் இங்கேயே  அடக்கம் செய்து விடுவார்கள்.
     ஊரில் உள்ளவர்கள் இவர் வருவார் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்க அவர் உடல் மட்டுமே போனது .சோகத்தில்  இருக்கும் அவர்கள் குடும்பத்துக்கு இறைவன் மனசாந்தியை  கொடுக்கட்டும் .
  
 உதிர்ந்த இலையையை  பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(

Friday, July 15, 2011

காணவில்லை:(((

39 என்ன சொல்றாங்ன்னா ...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்....

சொன்னது: அப்துல் காதர்





























காவில்லை..:(

1. நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுகிறாய்?

2. ஜெய்ஸ் பேஸ்ட்

1. நீ என்ன பவுடர் யூஸ் பண்ணுகிறாய்?

2.ஜெய்ஸ் பவுடர்

1. என்ன சோப் யூஸ் பண்றாய்?

2. ஜெய்ஸ் சோப்

1. அது என்ன? ஜெய் என்பது புதுஷா வந்திருக்கிற பிராண்ட்டோ?

2. இல்லிங்க ஜெய் என்பது என் ரூம் மேட்டோட பெயர்...

==========================================================

காவில்லை..:(

காணாமல் போனோரைத் தேடும் “....” படைத் தலைவர்

ஒருவர் உங்கமீது கல்லைக் கொண்டு எறிந்தால்

நீங்கள் பூவைக்கொண்டு எறியுங்கள்

மறுபடியும் உங்கமீது கல் எறிந்தால்

நீங்க பூந்தொட்டி கொண்டு எறியுங்க..

அடங் கொய்யாலே... என்ன

நினைச்சிட்டிருக்கிறார்கள்... உங்களைப்பற்றி..

==========================================================

காவில்லை..:(

1. எக்கவுண்டன் வேலைக்குப் போனீங்களே.. என்ன ஆச்சு?

2.செலக்ட் ஆகல:((, வருஷத்துக்கு 86 ஆயிரம் ரூபா சம்பளமாம்..

1.ஏன்? நல்ல சம்பளம்தானே?

2.நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 86 என்றால்,மாதத்துக்கு எவ்வளவு எனக் கேட்டிட்டேன்...

=========================================================

காவில்லை..:(

முக்கிய அறிவித்தல்: காணவில்லை:(

ஒருவர்: என் மனைவி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்.

மற்றவர்: அடப் பாவமே! அப்புறம்?

ஒருவர்: அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது

==========================================================

காவில்லை..:(

எவ்வளவு உயரத்தில ஏறிப் பார்த்தாலும், காணாமல் போனோரைத் தெரியவில்லையே:))

"என்ன சார் இது... உங்க பையன் மண்ணை சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்...கேட்க மாட்டீங்களா?"

"நான் மண்ணைச் சாப்பிடுறதில்லைங்க..."

=========================================================

காவில்லை..:(

Exam ல் பெயில் ஆன மகனிடம்
தந்தை : கையெழுத்து போட மாட்டேன் . இனிமே என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன் : என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே

==========================================================

காவில்லை..:(

ஒரு நாள் தன் காரை எடுக்கவந்தபோது "Parking fine" என எழுதியிருப்பதைக் கண்டு, மிகவும் சந்தோஷமடைந்த சர்தாஜி, ஒரு பேப்பரிலே “பாராட்டுக்கு நன்றி” என எழுதி , அருகிலிருந்த போஸ்ட் இல் ஒட்டிவிட்டு வந்தார்.

==========================================================

காவில்லை..:(

==========================================================

பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம்

இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்

இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.

==========================================================

Saturday, July 9, 2011

ஆஹா ... சமையல் ..!!

56 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :- இது ஜெய்லானி பிளாக் .தேவையில்லாம கோர்ட் கேசுன்னு அலைய வேனாம் அது உங்க உடம்புக்கு ஆகாது .ஹி..ஹி.. 

இதுக்கே இப்பிடி முழிச்சா என்னாகிறது
   
  எளிமையா அழகா வாசனையா சமையல் குறிப்பு கேட்டு நிறைய பேர் மெயில் செஞ்சாங்க.  தனிதனியா பதில் போடுறதை விட ஒரு பதிவா போட்டா நல்லா இருக்குமேன்னு போட்டிருக்கேன் .
      எப்பவுமே  ஹைஜெனிக்கா சாப்பிட விரும்புகிறவங்க அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம் . ( ஆனா வாசனை பிடிக்குமான்னு நீங்கதான் சொல்லனும் )
     பிரியாணி எப்பவுமே  ஒரே கலரில்தானா செய்யனும்  கொஞ்சம் வித்தியாசமா  கருப்பு கலரில் செஞ்சிப்பாருங்க . ( கலர் தேவைப்பட்டா உங்க பையனோ  பொண்ணோ பேனாவுக்கு போடும் கருப்பு இங்கை பயன் படுத்தலாம்  )
      ரசம் நல்ல வாசனையா இருக்க பெருங்காயத்துக்கு பதிலா குண்டு மல்லிகை பூவை போடலாம் அப்புறம் பாருங்க வாசனை ஊரையே தூக்கும்.
     இட்லியை ஆவியில் வேக வச்சி சாப்பிட்டு போரடிச்சி விட்டதா   கவலையே  படாதீங்க . அதை முறுக்கு பிழியும் குழாயில போட்டு அப்படியே  எண்ணெயில் பொரிச்சி வையுங்க . வித்தியாசமான இட்லி தயார் ( சட்டினின்னு தனியா வேர சைடு டிஷ் தேவைப்படாது அப்படியே சாப்பிடலாம் )
     பருப்பு போட்டாதான் சாம்பாரா  அதுக்கு பதிலா(வறுத்த ) பட்டானியை போடுங்க என்ன குழம்புன்னு தெரியாம வந்தவங்க தலையை பிச்சிகிடட்டும்
     அசைவம் சமைக்கும் போது என்ன தான் சுத்தம் செஞ்சாலும் சில நேரம் ஸ்மெல் போகாது . அதுக்கு  கவலை படாதீங்க கொஞ்சமா பினாயில் விட்டு கழுவினா வாடை போயிடும் .
     நீங்க வச்சிருந்த மாவுல பூச்சிகள்  வந்திட்டுதா அதை தூக்கியே  போடவேனாம் . அப்படியே  மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினா பூச்சி காணாம போகிடும் ஹி..ஹி... ( வந்தவங்களுக்கு தெரியவா போகுது )
     லெமன் ஜீஸ் பழசு மாதிரி தெரியுதா ..அதுல ரோஸ் மில்க் எஸன்ஸை கலந்துட்டா . ஏதோ  காக்டெயில்ன்னு நினைச்சி வந்தவங்க ஏமாந்துடுவாங்க  (  பால் செலவு மிச்சம் )
      மதியம் திடீர்ன்னு யாராவது விருந்துக்கு வந்துட்டா சமையல் செய்ய நேரம் இல்லையா நோ டென்ஷன் ஒரு வயத்து வலி மாத்திரையை  டீ , காஃபி  யில கலந்து குடுத்துட்டா அவங்களுக்கு சாப்பிட எதுவுமே கேக்க மாட்டாங்க ( டீ ,காபியே  சாப்பிடாதவங்களுக்கு மோர் , ஜுஸ் இருக்கவே இருக்கு )
      சிலருக்கு கருவாடு , கத்திரிகாய் என்றால் அலர்ஜின்னு சொல்லுவாங்க . அப்படி பட்டவங்களுக்கு  ஹமாம் சோப் , லைஃப் பாய் சோப் , சிந்தால் சோப்  இதுல ஏதாவது ஒன்னால அதை கழுவிட்டு சமைச்சா அலர்ஜி வராது .. (இதை போட்டு குளிச்சா அலர்ஜி வராதுங்கிர போது  கழுவினாலும் அலர்ஜி வராதுதானே   ஹி..ஹி...)
     வைட்டமின்    E  குறைவினால  நிறைய வியாதிகள் வராதா டாக்டர்கள் சொல்றாங்க .அதனால  முடிஞ்சளவு  உங்க வீட்டுக்குள்ள ஈ வந்தா வெளியே விடாமா  பிடிச்சி வச்சி ஏதாவது ஒரு கீரையோட சமைச்சி வையுங்க . ( உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் தானே )   
  டிஸ்கி :-  யார் மெயில் செஞ்சி கேட்டாங்கன்னு  நீங்களும் கேட்க வில்லை அதை நானும் சொல்ல வில்லை