Saturday, March 26, 2011

குரல் வளம்

75 என்ன சொல்றாங்ன்னா ...

          சிலரோட பேச்சை நாள் முழுதும் கேட்டுகிட்டே இருக்கலாம் . அதுக்கு காரணம் அறிவா அழகா பேச்சு சாதூர்யமா நம்மை கட்டிப்போட்டுடும் .உதாரணத்துக்கு அறிஞர் அண்ணா , நெடுஞ்செழியன் , வை கோ ..இப்படியே சொல்லிகிட்டு போகலாம் . இன்னும் சிலர் வாயை திறந்தாலே போதும் குயிலின் குரல் கேட்கும்  அப்படி. ஒரு. குரலில் அழகு இவர்களை  பாட சொல்லி கேட்டால் ஆஹா......
      குரலில் என்ன இருக்கு  கேட்டால் அது இறைவன் கொடுத்த வரமுன்னு சொல்லுவாங்க . காக்கா + கழுதை + யானை இதுக்கெல்லாம் யார் குரல் குடுத்தாங்க ..  ஒவ்வொன்னும் குரல் வளம் வித்தியாசமாதான் இருக்கு. (( ஆஹா..உணர்ச்சி வசப்பட்டாச்சே.. விடுங்க  மனித  இனத்திற்கே வருவோம்)) 
இங்கதானே  சுத்திகிட்டு இருந்தான் , எங்கே போயிருப்பான்..???

        பொதுவா ஒல்லி பிச்சானா இருப்பவர்களை விட கொழு கொழுன்னு  இருப்பவங்களுக்கே  குரல் அழகா இருப்பது ஏன் . திரை இசையில்  ஆரம்பிச்சு மேடை கச்சேரி வரை பார்க்கும் போது இந்த வித்தியாசம் புரியும் . வேகமாக நடந்தாலே இவங்களுக்கு  மூச்சு வாங்கும் .ஆனா இவங்களால மூச்சு பிடிச்சி பாடமுடியும் . நான் ஆச்சிரியப்படக்கூடியது  இதிலதான் .
     நான் ஆரம்பத்தில இருந்த ருமில ( நாலுமே தமிழ்நாடுதான் ) இருந்த ஒருத்தருக்கு  பெண் குரல். யாருமே  முகம் பார்க்காம பேசினா  கண்டு பிடிப்பது  கஷ்டம் . என்னோட கிண்டல் தாங்காம நான் தூங்கிய பிறகே ரூமுக்குளே பயபுள்ள வரும் . இப்படி இருக்கும் போது ஒரு நாள் கூடவே இருக்கும் நண்பர்  குளிக்க போனதும் ஊரிலிருந்து  அவர் மனைவி  போன் செய்ய யாரும் எடுக்காததால் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிந்தது 
      நான் தலையை மட்டும் தூக்கி  பார்த்துட்டு திரும்ப படுத்துட்டேன் . இவர் எடுத்து அவர்  பாத்ரூமில குளிச்சிகிட்டு இருக்கார் கால் மணி நேரம் கழிச்சி  திரும்ப செய்யுங்கன்னு சொல்லிட்டு போனை கட் செய்துட்டு  அவர் டியூட்டிக்கு போய் விட்டார். பின்னாலேயே  நீங்க யாரு என்னனுன்னு கேக்குரதுக்கு முன்னாலேயே போன் கட் .
ஒரு வேளை என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கா..????

          வந்தது வினைப்பாருங்க ஏழறை எட்டரை சனி எல்லாம் அன்னைக்கி அவர் தலை மேலே தான். மனுஷன் லீவு போடுட்டு அழுதுகிட்டு இருந்தார். யாரது புதுசா ஒரு பெண் குரல் கேட்குதே..!!  புதுசா எதுவும் ஸ்டெப்னி வச்சிருக்காரான்னு அவர் மனைவிக்கு ஒரு சந்தேகம் .இவர் எது சொல்லியும் அவர் மனைவி கேட்பதா இல்லை (அவ்ளோ  நம்பிகை  அவர் மேலே  ஹி..ஹி..)) நான் சொல்லியும் எனக்கு ஒரு அர்ச்சனை ஜால்ரா போட வேண்டாமுன்னு ((நீங்களும்தானே  இத்தனை நாளா ஏன் சொல்ல வில்லைன்னு... அவ்வ்வ் )) .அடுத்த கால் மணி நேரத்துல  பஹ்ரைனிலிருந்து  அவர் மாமனார் , போன்.செய்து நலன் விசாரிப்பு. அடுத்து கத்தாரிலிருது மச்சான்  , அவரும் எவ்வளவோ   சொல்லியும்  அவர் மனைவி  நம்பவில்லை

          இந்த பிரச்சனை மூனு நாளா அவருக்கும் டென்ஷன் நமக்கும் ஒரு வித எரிச்சல் ((எதை சொல்லியும் நம்பாவிட்டால் என்ன் செய்வது ))  கடைசியாக அவர் ஃபிரெண்டை அபுதாபியிலிருந்து வந்து நேரில் செக் செய்து  சர்டிஃபிகேட் குடுத்ததும்தான் மனைவிக்கு அவர் மேலே  நம்பிக்கையே  வந்தது.  அதுக்குள்ளே இவருக்கு ஊர் பணம் ரூ பத்தாயிரத்துக்கு  மேலே  டெலிபோனில சமாதானம்  பேசியே போச்சு. அதுக்கு பிறகு அவர் மொபைல் போனை  வெளியே  வைப்பதே  இல்லை .ஒன்னு அவர் கூடவே டாய்லட் போனாலும் இருக்கும் .அப்படி இல்லாட்டி சுவிட்ச்  ஆஃப்  செய்து வச்சிருப்பார்  .
ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்........ யாரை பார்த்து இன்னாங்கிரே
     என்னதான் இருந்தாலும் நம்ம கலாச்சாரமே  கலாச்சாரம்தான் .எதை விட்டுக் குடுத்தாலும் கள்ளானாலும் கணவனை மட்டும் விட்டுக்குடுக்க மாட்டாங்க. அப்போ  இலக்கியத்தில கண்ணகி , மாதவி ..???  கதை படிக்க  இண்டரஸ்டிங்க இருக்கும் .ஆனா அனுபவம் ..?  யப்பா ஆளை விடுங்க  
    
     நான் என்ன செய்திருப்பேன்னு  நீங்க கேட்டா சிம்பிள் பதில் ஒன்னுதான் . என் போன் எப்பவுமே  வைபிரேட் மோடிலேயே  இருக்கும் .ரிங் அடிச்சாதானே போன் இருப்பதே வெளி ஆளுக்கு தெரியும் எதுக்கு தலைவலி 

Thursday, March 17, 2011

உறக்கம்

80 என்ன சொல்றாங்ன்னா ...

            தூக்கம் ஒரு மனுஷனுக்கு சரி இல்லாட்டி அவனால எந்த விஷயத்திலும் சரியா முடிவு எடுக்க முடியாது . அது படிக்கிற  பிள்ளையா இருந்தாலும் சரி . இல்லை வேலைக்கு போகும் ஆட்களாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரம்  கனவில்லாத ஆழ்ந்த உறக்கம் இருக்கனும் .ஒரு நாளைக்கி சரியா தூங்காம இருந்தா அதோட எஃபெக்ட் எப்படியும் மூனு நாளைக்கு முகத்துல தெரியும் .
        சிலர் பார்ப்பதுக்கு நல்ல கலரா இருப்பாங்க .ஆனா கண்ணு பக்கம் மட்டும்  கரு வளையம் தெரியும் . அதுக்காக சாப்பிட்டு தெம்பா இருக்க வேண்டிய ஐட்டத்தை எல்லாம்  குழைச்சி முகத்துல தடவி கிட்டும் பர்ஸுக்கு சூடுவச்சி கிட்டும் இருப்பாங்க . அதே மாதிரி ஓவரா தூங்கு முஞ்சியும் காலையில எட்டு மணி வரை தூங்கி கிட்டும் இருக்கும் சோம்பேறி ஆட்களுக்கும் இதே பிரச்சனைகள் இருக்கும் .
நல்லா பாரூ  பயபுள்ள கீழேயே  நிக்கப்போறான் ..!!
      
     சரியான  நேரத்துக்கு தூக்கமும் , நல்ல தண்ணீரும் நிறைய  குடிச்சா இந்த பிரச்சனை வராது . தூக்கம் வராததுக்கு  முக்கிய காரணம் கவலைகள் , பிரச்சனைகள் பற்றிய நினைவுகளே அதிகமா சொல்லப்படுகிறது.  எப்படி பட்ட பிரச்சனையா இருந்தாலும் அதை பெட்ரூம் வரை கொண்டுப் போகக்குடாது . அப்படி கொண்டு போனா அன்னைக்கி அதோ கதிகதான் . அதுக்காக சிலர் தூக்க மாத்திரையை யூஸ் செய்வாங்க .அது பல சைடு எஃபெக்டுகளை குடுத்துடும்
        மதிய நேரம் கண்டிப்பா தூங்கக்கூடாது. அப்படி தூங்குவதா இருந்தா அரை மணிநேரம் போதும் .அதுவும் மதியம் 3 மனிக்கு மேல தூங்கக்கூடாது .தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வைச்சிக்கனும் .அதாவது இன்னைக்கு 10 மணிக்கு தூங்கப்போனா அடுத்த நாள் 1 மனிக்கு தூங்கப்போவது (( விருந்தாளி வந்தா கடலை போடுவது , வார் கடைசி நாளில் ஊர் சுற்றி விட்டு வருவது , டீவீ பார்ப்பதும் இதில் அடங்கும் )) இதுவும் கூடாது 
நூடுல்ஸுன்னா ரொம்ப பிடிக்குமுன்னு யாரோ சொன்னாங்களே..!!

        இரவு நேரம் ஈஸியா செரிக்கும் இட்லி, ((அப்பாவி இட்லி மாதிரி இல்லை )) , தோசை மாதிரி ஐட்டங்களை சாப்பிடனும் . ஏதோ  போருக்கு போவது மாதிரி மட்டன் சிக்கன் அப்படி பூந்து விளையாடக்கூடாது .அது ஃபிரியா (( free )) கிடைச்சாக்கூட மீறி  சாப்பிட்டா  செறிக்க  முடியாம பாதி தூங்கியும் தூங்காம உருண்டு பிறண்டுகிட்டு இருக்கனும் .
     ஏதோ எக்ஸர்சைஸ் செய்யுரேன்னு சொல்லிட்டு நாய்குட்டி மாதிரி இங்கேயும் அங்கேயும் வேர்க்க விறுவிறுக்க அலைஞ்சா தூக்கமா வரும்..உடல் அசதிதான் வரும் .உடற்பயிற்ச்சி செய்ய உகந்த நேரம் அதிகாலை 4 டூ 6 தான் .ஆனா அப்பதான் வாயை பிளந்துகிட்டு குறட்டை விட்டு நாம தூங்கிகிட்டு இருப்போம் ((  யூ ஏ ஈ ல இது முடியாது ஏன்னு சொன்னா ஸ்கூல் பஸ் 6 மனிக்கெல்லாம் வந்துடும் )). இரவில் சூடாக பால் சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தருமாம் . சாப்பிட்டவங்க எல்லாம் சொல்றாங்க .ஆனா இது உண்மையா..? பொய்யா..? எனக்கு தெரியாது . ஏன்னா நான் பால் குடிக்கும் பிள்ளை இல்லை ஹி..ஹி... J
ஐயோ  பாவம்....யார் வீட்டு பிள்ளயோ ..!!!
      
      துபாய் வந்த புதுசுல இரவில எப்போதும் தூங்கப் போகும் 10 நிமிடம் முன்னே காஃபி சாப்பிடும் பழக்கம் என்னிடம் இருந்துச்சி. ((இப்பவும் இருக்கு )) .கூடவே இருந்த ஒரு சில நண்பர்கள் ஒரு மாதிரியா பார்ப்பாங்க .ஏதோ  புது ஜந்துவை பார்ப்பது மாதிரி. வேனுமான்னு கேட்டா வேனாமுன்னு சொல்லிடுவானுங்க . இரவில குடிச்சா தூக்கம் வராதுன்னு யாரோ சொல்லி இருக்காங்க போலிருக்கு. ஆனா  நான் குடிப்பதை பார்த்துட்டு ஒரு நாள் வேனுமா கேட்டதும் சரின்னு சொன்னதும் டபுள் ஸ்டிராங்கா சூடா ஒரு கிளாஸ் ஸ்பெஷலா போட்டு குடுத்தேன் . காஃபின்னா இதான் காஃபின்னு சொல்லி ரசிச்சி குடிச்சதுதான் எனக்கு தெரியும் .
        மறு நாள் காலையில டியூட்டிக்கு எழுப்பினா ஒரு பயலும் எழுந்திருக்கவே இல்லை . கேட்டா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை.ரூமுக்கு வெளியே உட்கார்ந்து இருந்திருக்காங்க . வேற வழி அன்னைக்கி நான் மட்டுமே போய் இவனுங்க வேலையும் நானே பார்க்க வேண்டியதா போச்சி. நண்பேண்டா..!!.  இதுக்கெல்லாம் மனசுதான் காரணமுன்னு நான் சொன்னா யாருமே கேட்டாதானே.    

Friday, March 11, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!! --2

90 என்ன சொல்றாங்ன்னா ...
 
       ரொம்ப நாளைக்கி (வருஷங்கள் )பிறகு நம்ம தோஸ்த் ஒருத்தரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சு  பேசிக்கிட்டு இருந்ததில் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சார். பொதுவா யார் வீட்டுக்கும் போய் பழக்கம் இல்லாததால நழுவிக்கொண்டே இருந்தேன் . அன்னைக்கி பார்த்து என் கெட்ட நேரம் விடப் பிடியா தள்ளிக்கொண்டு போய்ட்டார் . அவங்க தங்ஸும்  அன்பா நிறைய ஐட்டம் செய்து வச்சிருந்தாங்க. ((ஹை..சொல்ல மாட்டேனே ..! அதையெல்லாம் சொன்னா நீங்க கண்ணு போட்டுடூவீங்க ))
        அடேய்,  நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல. வேற வழி .நாலு நாளைக்கி தாங்குற மாதிரி சாப்பிட்டேன் . (முழுக்க நனைஞ்ச பிறகு பாக்கெட்டில இருக்கிற கைகுட்டை இருந்தா என்ன நனைஞ்சா என்ன ஹி..ஹி..)).  ஆனா தோஸ்த்தான் என் வாயயே ஒரு மாதிரி ஏக்கமா பார்த்துகிட்டு இருந்தான்.டேய் உன் தட்டை பார்டா இல்லாட்டி எனக்கு வயத்த வலிக்குமுன்னு சொன்னேன் . பயபுள்ள  சொல்றான் .இல்லடா இத சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .அதான் நீ சாப்பிடறதை பாக்குரேன் . (நா சாப்பிட்டது  5 முட்டை போட்ட ஆம்லெட் ))
யாரை பாத்து இன்னாங்கிரே.ஐயே...கீசிபுடுவேன் கீசி....
   
     வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ ))  ருசிச்சிகிட்டு இருந்தேன் . அப்பவும் அவன் என் வாயயே  பார்த்துகிட்டு  இருந்தான் ஆனா அவன் சாப்பிடல ..கேட்டா அதே பழைய பாட்டு .இதை சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .இதையெல்லாம் விட்டு தலைமுழுகி பல வருஷமாச்சின்னுட்டான்
       இப்ப இதை எல்லாம் சாப்பிடு ஒன்னும் ஆகாது . செலவு இல்லாத வைத்தியம் நான் தரேன்னு சொன்னதும் பயந்துகிட்டேதான் சாப்பிட்டான் சாப்பிட்டதும்  நான் அதை குடுத்ததும் உடலுக்கு ஒன்னுமே ஆகல..  ஆனா ஆனது ஒன்னுதான் . அடுத்த தடவை  5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்  
      விஷயம் இதுதான் .. வீட்டு சாப்பாடா இருந்தாலும் சிலருக்கு கத்திரிகாய் , உருளை கிழங்கு , முட்டை இதுமாதிரி  பொருட்களை  சாப்பிட்டா அவர்களுக்கு வயிறு உப்பிக்கும் முதுகு , கால் , கை போன்ற இடங்களில் வாயு பிடிச்சிக்கும் , அசைக்க முடியாது . இன்னும் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கும் ஈனாக். மாத்திரை , ஜெலுசில்  இப்படி எதாவது  சாப்பிடுவது . கடைசியில் எதுவும் சரியாகாமல்  அந்த அந்த பொருட்களையே  விட்டு விடுவது ..

அடேய்  யார்ராஅவன் யானை குட்டியை  ஆட்டோவில ஏத்தினது...??  :-))

      சிலருக்கு வயிற்றில ஆசிட் அதிகம் சுரக்கும் . இது தெரிஞ்சி  இருந்தா போதும். அவர்கள் ஏதாவது கடலை மிட்டாயோ  இல்லை சுவீட்டோ சாப்பிடனும் ..அமிலத்தை நேராக்க இனிப்பு அல்லது வாழைப்பழம் ஒன்னுதான் வழி .அந்த நேரம் அது இல்லாம போனா குடல் எரிச்சல் வந்து  அல்சராக போகும் .
     இன்னும் சிலருக்கு ஆசிட்டை நேராக்கும் பித்த நீர்  அதிகமானால் இனிப்பு , வாழைப்பழம் எதுவும் ஒத்து வராது  அவங்களுக்கு கொத்து மல்லி இலை அதிகம் போட்டு எந்த வகையிலாவது  சாப்பிட்டா சரி வரும்  .ஓகே. ஆனா இதெல்லாம் எதுவும் சாப்பிடாதவங்களுக்கு .வயிறு காலிய இருப்பவங்களுக்கு மேலே சொன்னது. சாப்பிட்டதும் வரும் பிரச்சனைக்கு கீழே  படிங்க
       அதிகமில்லை  ஜெண்டில் மேன் மற்றும் வுமன் .ரொம்ப சிம்பிளா கொஞ்சம் ஓமத்தை பவுடராக்கி அதில் நான்கில் ஒன்று உப்பு பவுடரையும் சேர்த்து அப்படியே  வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் . 5 நிமிடத்தில்  பலன் தெரியும் .அப்படி தெரியாவிட்டால் அதே போல இன்னொரு தடவை சாப்பிடுங்கள் போதும் . சுவிட்ஜை  ஆஃப் செய்தால் எப்படி மின்சார பல்ப் எரிவதை நிறுத்துதோ  அதே மாதிரி உங்க நெஞ்சி எரிச்சல், வயிறு உப்புதல், அடிக்கடி ஏப்பம் விடுதல்  எல்லாமே பட்டுன்னு நின்னு போகும்
எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார்  சொன்னது  ?  
     புது ஓமம் நல்ல வாசனையா  கலரா இருக்கும் அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி (அதாவது பாட்டல் அல்லது பிளாஸ்டிக் டப்பா ) வாங்கி அதை பவுடராக்கி  கூடவே  உப்பையும் பவுடராக்கி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும் (பழைய ஓமம் வாசனையும் இருக்காது பலனும் இருக்காது ) தேவைப்டும் போது சின்ன டீஸ்பூன் போதும் . தேவைப்பட்டால் வெளியூர் போகும் போதும்.கூடவே வைத்துக் கொள்ளலாம் . .கடையில் உள்ள ஓமநீர் தேவையில்லை . அதில் அதிக அளவு தண்ணீரோ  இல்லை வேறு எதுவும் கலந்திருக்க சான்ஸ் இருக்கு அதனால்தான் .
  டிஸ்கி :  இனி ஆங்கில மருந்து பக்கம் போகாமல் டாக்டரிடம் போவதுக்கு முன் இதை முயற்சி செய்யுங்கள். இதுவும் பூண்டு வைத்தியம் மாதிரி 100 சதம் டெஸ்ட் செய்தது  J  

Monday, March 7, 2011

மகளிர் தினம்

98 என்ன சொல்றாங்ன்னா ...

           ஒவ்வொரு  வருடமும் உலக மகளிர் தினம் வந்து கிட்டும் போய் கிட்டுந்தான் இருக்கு . ஆனா அதனால பலன் ஏதாவது இருக்கான்னு பார்த்தா ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லனும். அட அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே  நமக்கும் நினைவுக்கு வரும் .(( நம்ம கவலை  நமக்கு )) ஆஹா...லீவான்னுன்னு சொல்லிட்டு  அதுக்காக வீட்டில சமைக்காம  இருந்துடாதீங்க .பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வந்துடும்
            பெண்கள்  இல்லாத துறைன்னு ஒன்னு சொல்லவே முடியாத அளவில இப்போ அவங்க எல்லா வேலைகளிலும் திறமையா செஞ்சிகிட்டு வராங்க .எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில  அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??    
எனக்கு...எனக்கு...எனக்கூஊஊஊஊஊஊ
                             
               அதுவுமில்லாம  நெட்டில பாதிக்கு மேலே பிளாக் வச்சி இருப்பதும் அவங்கதான் .ஒரு பக்கம் பாராட்ட வேண்டிய விஷயம்தான். இனையம்  வந்த பிறகுதான் அதிகமா  பெண்களோட உணர்வுகள் வெளியே  தெரிய வந்திருக்கு . ஒரு வேளை மாட்டிகிட்டான் அடிமைங்கிற  மாதிரி போட்டு தொவச்சி எடுக்கிறாங்களோ ..? இதே  ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ
            அதே நேரத்துல டீவி பார்த்தே விதம் விதமா எதிர் பேச்சுக்களை கற்றுக்கொள்வதும் பல இடங்களில் நடக்குது. காரணம் தமிழ் அழுகை சீரியல் களை அதிகம் சப்போட் செய்வதும் இவங்கதான் .இல்லாட்டி  மெகா சீரியல்னு போட்டு மனுஷனை வருஷக்கணக்குல தாளிப்பானுங்களா..?? இந்த சீரியல்களாலேயே  பல வீடுகளில் உரிமை பிரச்சனைகள்  வந்து விடுகிறது
           மகளிர் தினம்  ஆரம்பிச்ச நோக்கமே  உழைக்கும் பெண்கள் தங்களுக்கு சமமான உரிமையை அடையவேனுங்கிற எண்ணத்திலதான் ஆனா இன்னும் சிலர் எது சமஉரிமைங்கிறது தெரியாமலோ இல்லை புரியாமலோ  பேரில  ஆண்களை மாதிரி உடை அணிவதும் , அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் , காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .
            என்னத்தான்  நல்லா படிச்சிருந்தாலும் , கடுமையா உழைச்சாலும் அவங்களுக்கு தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை. ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைப்ப்து இல்லை. கேட்டால ஆணாதிக்கமுன்னு ஈசியா சொல்லிடுவீங்க .இதே பெண்களே  நடத்தும் எத்தனையோ  நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில்  இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே  இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை.
         ஒரு சராசரி  பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை  குடுத்து இருந்தாலும்  இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான்  தெரிகிறது.
உலக மகளிர்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள் ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே   )) 

Thursday, March 3, 2011

சந்தேகம் -6 சமையல்

60 என்ன சொல்றாங்ன்னா ...

       சமையல்  பொருட்களில் சில சீசனில்  விலை குறையும் போதோ அல்லது அதிகம் கிடைக்கும் போதோ  வாங்கி வைத்து விடுகிறோம் . இல்லை அது மாத சாமான்களாக இருந்தாலும் சரி. அதை தொடர்ந்து உபயோகிக்காத பட்சத்தில  அதில் வித விதமா பூச்சிகள்  வந்து விடுகிறது .
       அப்படி வராமல் பார்த்துக் கொள்வது ஒரு தனி கலை. பருப்போ  இல்லை அரிசியோ  எதுவாக இருந்தாலும் அதில் ஈரம் இல்லாமலும் .அதுப்போலவே  நமது ஈரக்கை படாமலும்  பார்த்துக் கொள்ளனும் . முடிஞ்சால்  வெய்யிலில்  நல்லா காயவைச்சி அதுக்குறிய பாட்டில்  , டப்பாக்களில்  போட்டு வைக்கனும் .
என்னைய  விடுடா...நா..வரல..வரல....அவ்வ்வ்வ்வ்வ்
      சிலவற்றில்  உப்பு , கிராம்பு  , வேப்பிலை இப்படி  அதுக்கு தகுந்த மாதிரி  ரவை , கோதுமை அரிசியில் போட்டும் வைக்கலாம் .தேவைக்கு அதிகம் உள்ளதை  காற்றூப்போகாத  டப்பா , பாட்டில்களில் இட்டு அதை ஃபிரிஜில் வைத்தாலும் பூச்சி பிரச்சனை இருக்காது .      
                இது நிறைய பேருக்கு தெரிந்திருந்தாலும் எனக்கு வரும் சந்தேகம் என்னனு சொன்னா. இதெல்லாம் போடாமல் உதாரணமா கடலை மாவு என்னதான் கண்ணாடி பாட்டிலில்  போட்டு மூடி வைத்தாலும் ஒரு மாதம் அதை திறக்கா விட்டால் அதில் வண்டு  வந்து விடுகிறது  . அதேப்போல காய்ந்த மிளகாய் ..இப்படிப்பலதும் இருக்கு.
       இது எல்லாம் எங்கிருந்து  வருகிறது.  ஏர் டைட்  பாட்டில், டப்பாவாக இருந்தாலும் வருதே .அப்படி யென்றால் .நாம சாமான்கள் வாங்கும் போதே  அதில் அதன் முட்டைகள்  இருக்கா..? அதைதான் நாம இத்தனை நாளா  சாப்பிடுறோமா.?
பார்த்தா  ஆசையாதான் இருக்கு ஆனா டரியலாவும் இருக்கே..!!
     
   காரணம் இல்லாமல் காரியம்  இல்லை ..((ஹை இதை அந்த உலகத்திலிருந்து  சுட்டாச்சி )). கோழி இல்லாமல் முட்டை வருமா  மாதிரி  அதே கேள்வி ..? இதில் பூச்சிக்கள் எப்படி வருது..?  இதை தடுக்கவே  முடியாதா . காற்று இல்லாத இடத்தில பூச்சி மட்டும் உயிருடன் வளருதே எப்படி ?
       யாராவது இதை பத்தி ஆராய்ச்சி செய்திருந்தா அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ..கேட்டுக்க ஆசைதான்.ஒரு வேளை யாரும் செய்யாம இருந்திருந்தா அதை நானே செஞ்சி .சீக்கிரமே இன்னொரு டாக்டர் பட்டம் வாங்கத்தான் .
       ஹோட்டலில்  சின்ராஸுடன் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது. மெதுவா கேட்டான் எலேய் மக்கா  சாம்பார் வெஜிடேரியனா ..? இல்லை  நான் வெஜ்ஜா ..?  நான் சொன்னேன்...இது என்றா.. புது புது குழப்பம் .சந்தேகம் எப்பவும் நாந்தான் கேப்பேன் .இப்ப இது என்னது புதுசா உனக்கு வந்திருக்கு..?
இனி டைரக்டா ஃபுரூட்தான்  நோ சமையல்...நோ டென்ஷன்

       இ...ல்......லை...முதல்ல எனக்கு சின்னதா ஒரு வண்டு இருந்துச்சி ..எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லாத்தால டேபிள் கீழே போட்டுட்டேன் .அடுத்து ஒரு பூச்சி வந்துச்சி .அதையும் கிழே போட்டுட்டேன்.. இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி  கிடக்கே என்ன செய்ய...?  நான் சொன்னேன் அடேய் கொஞ்சம் மெதுவா பேசுடா  ..கடை ஓனர் மலையாளிக்கு தெரிஞ்சா ..இதுக்கும் சேர்த்து பில் போட்டுடுவான் .
      அப்போ நீ மட்டும் சத்தம் போடாம எப்படிடா சாப்பிடுறா..??  .எனக்கு உன்னை மாதிரி  பூச்சி  வரல  டைரக்டா சாம்பாரிலே மீனே வந்துடுச்சி. அது ஒரு வேளை மத்த பூச்சிகளை சாப்பிட்டிருக்கும். இதை கேட்டு ஏதோ  புரிஞ்சதை மாதிரி  தலையாட்டினான் ..
      என்ன உங்களுக்கு எதுவும் புரியுதா...?  ஹா..ஹா....