Tuesday, December 21, 2010

கொக்கு --பைரவி --2

54 என்ன சொல்றாங்ன்னா ...
படம் :  கொக்கு பைரவி
இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ  அவங்களேதான்
இசை ;   இந்த மொக்கைக்கு அதான் குறை
  


நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
தண்ணீர்  எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

தண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ
நான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ
மழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ
நான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு  யாரோ
வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும்  கருப்பா கருத்து போனதப்பாரு
மழையும்  வந்தா  குட்டையும் நிரம்பும்
என் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு  நானே பறந்திருப்பேனே
கால்  எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்

நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
மீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

டிஸ்கி:  1      இந்த பாட்டு.. இது யார் மனதையும்  புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ்  ((வரலாறு முக்கியமில்லையா  அதான் ))

டிஸ்கி :2    பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க  .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))

Thursday, December 9, 2010

உணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்

74 என்ன சொல்றாங்ன்னா ...

       பெண்களின் உணர்வுகளை சொல்லும் பாடல்களை  எழுத அழைத்த நீரோடை அக்கா மலீக்கா அவர்களுக்கு நன்றி.. எப்போதோ  போட வேண்டியது இது ஜொஞ்சம் லேட்டாக்கியதில் மற்ற  சகோஸ் எல்லாரும்  விளையாடி விட்டு போனதும் கொஞ்சம் லேட்டா மைதானத்துக்கு  உள்ளே வந்திருக்கிறேன் . எனக்கு பிடிச்ச பாடல்களை அவர்கள் எல்லாருமே போட்டு விட்டதால்   என்ன செய்ய  அதனால என் மனசுக்குள்ள  எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும் பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் . 
     அது பெண்களின் உணர்வுகளை  சொல்லுதா இல்லையான்னு அவங்க கிட்டதான் கேக்கனும் 


  பாண்டித்துரை  படத்தில வரும்
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே..
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே...
என் ராசாதி ராசனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே...
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே...

உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக் கிளி நான்...
பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்..
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,

பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்.
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்.

  கும்பக்கரை தங்கைய்யா
தென்றல் காற்றே தென்றல் காற்றே  சேதி ஒன்னு கேட்டியா  
கன்னிப்பூவு கன்னில் நூறு கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பார்த்துதான் வந்து வந்து சேர சொல்ல மாட்டியா

இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும் கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ

    அன்னக்கிளி

 அன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம்
 அவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி உன்னை
தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம் அவரம்பூ மேனி வாடுதே


வசந்த மாளிகை
 கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள்
  
  தில்லனா மோகனாம்பாள்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)
பாவை என் பதம் காண நாணமா (2)
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)
மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

      ஆனந்த கும்மி

    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..மைன மைனா  
   குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ  மைனா மைனா 
   தளிர் இது மலருது தானா  இது ஒரு தொடர்கதை தானா 
   ஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா 
 
       உல்லாச பறவைகள்  
 
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு...
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ....

      அவள் ஒரு தொடர்கதை  

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி
இதில் சுற்றம் என்பது மந்தயடி
அடி என்னடி உலகம் இதில் எதனை கலகம்

        உனக்காகவே வாழ்கிரேன்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

  கோபுரங்கள் சாய்வதில்ல   
 இதில் வரிகளை எழுதுவதை விட பாட்டையே கேளுங்கள் ..சொல்ல முடியாத துயரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் அருமையான வரிகள் ((பொல்லாங்கு செய்வோர் எல்லாம் ஆண்கள்தாண்டி இந்த வரியை தவிர )) 




 
       இதுல எல்லா வரிகளுமே  அமர்க்களமா இருக்கும் சிலது மட்டும் தொடர் , பக்கம் அதிகமா ஆகிடும் அதனால சில பாடல்களில்  சின்னதா ஆரம்பம் மட்டும் போட்டிருக்கிரேன் 

Saturday, December 4, 2010

ஜெய்லானி டீவியில்-சமையல்--2

90 என்ன சொல்றாங்ன்னா ...
                        நமது ஜெய்லானி டீ வி நிலையத்துக்கு கிட்டதட்ட 2 ஆயிரம் போன்கால் , நாலாயிரத்து சொச்சம் ஃபேக்ஸ் , ஈ மெயில்ன்னு ஓவர் பிசி ,ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை. உங்களால்தான் சுடுதண்ணி வைப்பது , லெமன் ஜுஸ் போடுவது இப்படி நாங்க தெளிவா கத்துகிட்டு இருக்கோம் அதனால் சீக்கிரம் ஒரு குறிப்பு போடுங்க .அப்படி இல்லாட்டி உங்க சேனல் முன்னால போராட்டம் பண்ணுவோமுன்னு அன்பு மிரட்டல் அதனால நமது சேனலில் மீ ண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்
என்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே

                    அப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி?  , ஆம்லட்  போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...!!

தேவையான பொருள்கள்

முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))
உப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))

ஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .
மஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்

செயல் முறை
முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .

இப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்

ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.

இப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .

வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முடியல  இம்சை  .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .
இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்

படங்கள் உதவி : கும்மி டெர்ரர்